சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: வடதிருமுல்லைவாயில்
682   அணி செவ்வியார்     683   சோதி மாமதி     684   மின் இடை கலாப    
682   வடதிருமுல்லைவாயில்   அணி செவ்வியார்  
தனதய்ய தானன தானன
     தனதய்ய தானன தானன
          தனதய்ய தானன தானன ...... தனதான

அணிசெவ்வி யார்திரை சூழ்புவி
     தனநிவ்வி யேகரை யேறிட
          அறிவில்லி யாமடி யேனிட ...... ரதுதீர
அருள்வல்லை யோநெடு நாளின
     மிருளில்லி லேயிடு மோவுன
          தருளில்லை யோஇன மானவை ...... யறியேனே
குணவில்ல தாமக மேரினை
     யணிசெல்வி யாயரு ணாசல
          குருவல்ல மாதவ மேபெறு ...... குணசாத
குடிலில்ல மேதரு நாளெது
     மொழிநல்ல யோகவ ரேபணி
          குணவல்ல வாசிவ னேசிவ ...... குருநாதா
பணிகொள்ளி மாகண பூதமொ
     டமர்கள்ளி கானக நாடக
          பரமெல்லி யார்பர மேசுரி ...... தருகோவே
படரல்லி மாமலர் பாணம
     துடைவில்லி மாமத னாரனை
          பரிசெல்வி யார்மரு காசுர ...... முருகேசா
மணமொல்லை யாகி நகாகன
     தனவல்லி மோகன மோடமர்
          மகிழ்தில்லை மாநட மாடின ...... ரருள்பாலா
மருமல்லி மாவன நீடிய
     பொழில் மெல்லி காவன மாடமை
          வடமுல்லை வாயிலின் மேவிய ...... பெருமாளே.


அணிசெவ்வியார் திரை சூழ்புவி
     தன நிவ்வியே கரை யேறிட
        அறிவில்லியாம் அடியேன்.....இடரதுதீர
அருள்வல்லையோ நெடு நாளினம்
     இருளில்லிலேயிடுமோ உன
        தருளில்லையோ இனமானவை.....யறியேனே
குணவில்லதா மக மேரினை
     அணிசெல்வியாய் அருணாசல
        குரு வல்ல மாதவ மேபெறு.....குணசாத
குடிலில்லமே தரு நாளெது
     மொழி நல்ல யோகவ ரேபணி
        குணவல்லவா சிவனேசிவ.....குருநாதா
பணிகொள்ளி மாகண பூதமொ
     டமர்கள்ளி கானக நாடக
        பரமெல்லியார் பர மேசுரி.....தருகோவே
படரல்லி மாமலர் பாணம
     துடைவில்லி மாமதனாரனை
        பரிசெல்வியார் மருகா சுர.....முருகேசா
மணமொல்லையாகி நகாகன
     தனவல்லி மோகன மோடமர்
        மகிழ்தில்லை மாநட மாடினர்.....அருள்பாலா
மருமல்லி மாவன நீடிய
     பொழில் மெல்லி காவன மாடமை
        வடமுல்லை வாயிலின் மேவிய.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=GHmsg_2eFw0
Add (additional) Audio/Video Link

Back to Top

683   வடதிருமுல்லைவாயில்   சோதி மாமதி  
தான தானன தானன தந்தன
     தான தானன தானன தந்தன
          தான தானன தானன தந்தன ...... தனதான

சோதி மாமதி போல்முக முங்கிளர்
     மேரு லாவிய மாமுலை யுங்கொடு
          தூர வேவரு மாடவர் தங்கள்மு ...... னெதிராயே
சோலி பேசிமு னாளிலி ணங்கிய
     மாதர் போலிரு தோளில்வி ழுந்தொரு
          சூதி னால்வர வேமனை கொண்டவ ...... ருடன்மேவி
மோதி யேகனி வாயத ரந்தரு
     நாளி லேபொருள் சூறைகள் கொண்டுபின்
          மோன மாயவ மேசில சண்டைக ...... ளுடனேசி
மோச மேதரு தோதக வம்பியர்
     மீதி லேமய லாகிம னந்தளர்
          மோட னாகிய பாதக னுங்கதி ...... பெறுவேனோ
ஆதி யேயெனும் வானவர் தம்பகை
     யான சூரனை மோதிய ரும்பொடி
          யாக வேமயி லேறிமு னிந்திடு ...... நெடுவேலா
ஆயர் வாழ்பதி தோறுமு கந்துர
     லேறி யேயுறி மீதளை யுங்கள
          வாக வேகொடு போதநு கர்ந்தவன் ...... மருகோனே
வாதி னால்வரு காளியை வென்றிடு
     மாதி நாயகர் வீறுத யங்குகை
          வாரி ராசனு மேபணி யுந்திரு ...... நடபாதர்
வாச மாமல ரோனொடு செந்திரு
     மார்பில் வீறிய மாயவ னும்பணி
          மாசி லாமணி யீசர்ம கிழ்ந்தருள் ...... பெருமாளே.


சோதி மா மதி போல் முகமும் கிளர்
     மேரு உலாவிய மா முலையும் கொ(ண்)டு
        தூரவே வரும் ஆடவர் தங்கள்.....முன் எதிர் ஆயே
சோலி பேசி முன் நாளில் இணங்கிய
     மாதர் போல் இரு தோளில் விழுந்து ஒரு
        சூதினால் வரவே மனை கொண்டு.....அவருடன் மேவி
மோதியே கனி வாய் அதரம் தரு
     நாளிலே பொருள் சூறைகள் கொண்டு பின்
        மோனமாய் அவமே சில சண்டைகளுடன்.....ஏசி
மோசமே தரு தோதக வம்பியர்
     மீதிலே மயலாகி மனம் தளர்
        மோடனாகிய பாதகனும் கதி.....பெறுவேனோ
ஆதியே எனும் வானவர் தம் பகை
     ஆன சூரனை மோதி அரும் பொடி
        ஆகவே மயில் ஏறி முனிந்திடு.....நெடு வேலா
ஆயர் வாழ் பதி தோறும் உகந்து உரல்
     ஏறியே உறி மீது அளையும் களவாகவே
        கொடு போத(ம்) நுகர்ந்தவன்.....மருகோனே
வாதினால் வரு காளியை வென்றிடும்
     ஆதி நாயகர் வீறு தயங்கு(ம்) கை
        வாரி ராசனுமே பணியும் திரு.....நட பாதர்
வாச மா மலரோனோடு செம் திரு
     மார்பில் வீறிய மாயவனும் பணி
        மாசிலா மணி ஈசர் மகிழ்ந்து அருள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

684   வடதிருமுல்லைவாயில்   மின் இடை கலாப  
தய்யதன தான தந்தன
     தய்யதன தான தந்தன
          தய்யதன தான தந்தன ...... தனதான

மின்னிடைக லாப தொங்கலொ
     டன்னமயில் நாண விஞ்சிய
          மெல்லியர்கு ழாமி சைந்தொரு ...... தெருமீதே
மெள்ளவுமு லாவி யிங்கித
     சொல்குயில்கு லாவி நண்பொடு
          வில்லியல்பு ரூர கண்கணை ...... தொடுமோக
கன்னியர்கள் போலி தம்பெறு
     மின்னணிக லார கொங்கையர்
          கண்ணியில்வி ழாம லன்பொடு ...... பதஞான
கண்ணியிலு ளாக சுந்தர
     பொன்னியல்ப தார முங்கொடு
          கண்ணுறுவ ராம லின்பமொ ...... டெனையாள்வாய்
சென்னியிலு டாடி ளம்பிறை
     வன்னியும ராவு கொன்றையர்
          செம்மணிகு லாவு மெந்தையர் ...... குருநாதா
செம்முகஇ ராவ ணன்தலை
     விண்ணுறவில் வாளி யுந்தொடு
          தெய்விகபொ னாழி வண்கையன் ...... மருகோனே
துன்னியெதிர் சூரர் மங்கிட
     சண்முகம தாகி வன்கிரி
          துள்ளிடவெ லாயு தந்தனை ...... விடுவோனே
சொல்லுமுனி வோர்த வம்புரி
     முல்லைவட வாயில் வந்தருள்
          துல்யபர ஞான வும்பர்கள் ...... பெருமாளே.


மின் இடை கலாப(ம்) தொங்கல் ஒடு
     அன்ன மயில் நாண விஞ்சிய
        மெல்லியர் குழாம் இசைந்து ஒரு.....தெரு மீதே
மெள்ளவும் உலாவி இங்கித
     சொல் குயில் குலாவி நண்பொடு
        வில் இயல் புரூர கண் கணை.....தொடு மோக
கன்னியர்கள் போல் இதம் பெறு
     மின் அணி க(ல்)லார(ம்) கொங்கையர்
        கண்ணியில் விழாமல் அன்பொடு.....பத ஞான
கண்ணியில் உ(ள்)ளாக சுந்தர
     பொன் இயல் பதாரமும் கொ(ண்)டு
        கண்ணுறு வராமல் இன்பமொடு.....எனை ஆள்வாய்
சென்னியில் உடாடு இளம் பிறை
     வன்னியும் அராவு(ம்) கொன்றையர்
        செம் மணி குலாவும் எந்தையர்.....குரு நாதா
செம் முக இராவணன் தலை
     விண்ணுறவில் வாளியும் தொடு
        தெய்விக பொன் ஆழி வண் கையன்.....மருகோனே
துன்னி எதிர் சூரர் மங்கிட
     சண்முகம் அதாகி வன் கிரி
           துள்ளிட வெலாயுதம் தனை.....விடுவோனே
சொல்லு(ம்) முனிவோர் தவம் புரி
     முல்லை வட வாயில் வந்து அருள்
           துல்ய பர ஞான உம்பர்கள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Wed, 24 Jun 2026 06:31:58 +0000