சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: பொதியமலை
630   மைக்கணிக்கன்     631   வெடித்த வார்குழல்    
630   பொதியமலை   மைக்கணிக்கன்  
தத்த தத்த தான தான தத்த தத்த தான தான
     தத்த தத்த தான தான ...... தனதான

மைக்க ணிக்கன் வாளி போல வுட்க ளத்தை மாறி நாடி
     மட்டு முற்ற கோதை போத ...... முடிசூடி
மத்த கத்தி னீடு கோடு வைத்த தொத்தின் மார்பி னூடு
     வட்ட மிட்ட வாரு லாவு ...... முலைமீதே
இக்கு வைக்கு மாடை வீழ வெட்கி யக்க மான பேரை
     யெத்தி முத்த மாடும் வாயி ...... னிசைபேசி
எட்டு துட்ட மாதர் பாய லிச்சை யுற்றெ னாக மாவி
     யெய்த்து நித்த மான வீன ...... முறலாமோ
துர்க்கை பக்க சூல காளி செக்கை புக்க தாள வோசை
     தொக்க திக்க தோத தீத ...... வெனவோதச்
சுற்றி வெற்றி யோடு தாள்கள் சுத்த நிர்த்த மாடு மாதி
     சொற்கு நிற்கு மாறு தார ...... மொழிவோனே
திக்கு மிக்க வானி னூடு புக்க விக்க மூடு சூரர்
     திக்க முட்டி யாடு தீர ...... வடிவேலா
செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதி னோடு
     செப்பு வெற்பில் சேய தான ...... பெருமாளே.


மைக் கண் இக்கன் வாளி போல உள் க(ள்)ளத்தை மாறி நாடி
     மட்டி முற்ற கோதை போத.....முடி சூடி
மத்தகத்தில் நீடு கோடு வைத்தது ஒத்து இன் மார்பின் ஊடு
     வட்டம் இட்ட வார் உலாவு.....முலை மீதே
இக்கு வைக்கும் ஆடை வீழ வெட்கி இயக்கமான பேரை
     எத்தி முத்தம் ஆடும் வாயின்.....இசை பேசி
எட்டு துட்ட மாதர் பாயல் இச்சை உற்று என் ஆகம் ஆவி
     எய்த்து நித்த(ம்) மான ஈனம்.....உறலாமோ
துர்க்கை பக்க சூலி காளி செக்கை புக்க தாள ஓசை
     தொக்க திக்க தோத தீத.....என ஓதச்
சுற்றி வெற்றியோடு தாள்கள் சுத்த நிர்த்தம் ஆடும் ஆதி
     சொற்கு நிற்கும் மாறு உ(த்)தார(ம்).....மொழிவோனே
திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர்
     திக்க முட்டி ஆடு தீர.....வடிவேலா
செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதினோடு
     செப்பு வெற்பில் சேய் அதான.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

631   பொதியமலை   வெடித்த வார்குழல்  
தனத்த தானன தனத்த தானன
     தனத்த தானன தனத்த தானன
          தனத்த தானன தனத்த தானன ...... தந்ததான

வெடித்த வார்குழல் விரித்து மேல்விழி
     விழித்து மேகலை பதித்து வார்தொடு
          மிகுத்த மாமுலை யசைத்து நூலின்ம ...... ருங்கினாடை
மினுக்கி யோலைகள் பிலுக்கி யேவளை
     துலக்கி யேவிள நகைத்து கீழ்விழி
          மிரட்டி யாரையு மழைத்து மால்கொடு ...... தந்தவாய்நீர்
குடித்து நாயென முடக்கு மேல்பிணி
     யடுத்து பாதிகள் படுத்த தாய்தமர்
          குலத்தர் யாவரு நகைக்க வேயுடல் ...... மங்குவேனைக்
குறித்து நீயரு கழைத்து மாதவர்
     கணத்தின் மேவென அளித்து வேல்மயில்
          கொடுத்து வேதமு மொருத்த னாமென ...... சிந்தைகூராய்
உடுட்டு டூடுடு டுடுட்டொ டோவென
     திகுத்த தீதிகு திகுர்த்த தாவென
          உடுக்கை பேரிகை தவிற்கு ழாமுமி ...... ரங்குபோரில்
உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரி
     துடிப்ப நீள்கட லெரித்து சூர்மலை
          யுடைத்து நீதிகள் பரப்பி யேயவ ...... ரும்பராரை
அடைத்த மாசிறை விடுத்து வானுல
     களிக்கு மாயிர திருக்க ணானர
          சளித்து நாளுமெ னுளத்தி லேமகி ...... ழுங்குமாரா
அளித்த தாதையு மிகுத்த மாமனும்
     அனைத்து ளோர்களு மதிக்க வேமகிழ்
          அகத்ய மாமுநி பொருப்பின் மேவிய ...... தம்பிரானே.


வெடித்த வார் குழல் விரித்து வேல் விழி
     விழித்து மேகலை பதித்து வார் தொடு
        மிகுத்த மா முலை அசைத்து நூலின்.....மருங்கின் ஆடை
மினுக்கி ஓலைகள் பிலுக்கியே வளை
     துலக்கியே வி(ள்)ள நகைத்து கீழ் விழி
        மிரட்டி யாரையும் அழைத்து மால் கொடு.....தந்த வாய் நீர்
குடித்து நாய் என முடக்கும் ஏல் பிணி
     அடுத்த உபாதிகள் படுத்த தாய் தமர்
        குலத்தவர் யாவரும் நகைக்கவே உடல்.....மங்குவேனை
குறித்து நீ அருகு அழைத்து மாதவர்
     கணத்தின் மேவு என அளித்து வேல் மயில்
        கொடுத்து வேதமும் ஒருத்தனாம் என.....சிந்தை கூராய்
உடுட்டு டூடுடு டுடுட்டொ டோ என
     திகுத்த தீதிகு திகுர்த்த தா என
        உடுக்கை பேரிகை தவில் குழாமும்.....இரங்கு போரில்
உலுத்த நீசர்கள் பதைப்ப மா கரி
     துடிப்ப நீள் கடல் எரித்து சூர் மலை
        உடைத்து நீதிகள் பரப்பியே அவர்.....உம்பராரை
அடைத்த மா சிறை விடுத்த வான் உலகு
     அளிக்கும் ஆயிரம் திரு க(ண்)ணான் அரசு
        அளித்து நாளும் என் உள்ளத்திலே.....மகிழும் குமாரா
அளித்த தாதையு(ம்) மிகுத்த மாமனும்
     அனைத்து உ(ள்)ளோர்களும் மதிக்கவே மகிழ்
        அகத்ய மாமுநி பொருப்பின் மேவிய.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top


This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group