சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: பேறைநகர்
545   நீல மயில் சேரும்    
545   பேறைநகர்   நீல மயில் சேரும்  
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

நீலமயில் சேரு மந்தி மாலை நிக ராகி யந்த
     காரமிக வேநி றைந்த ...... குழலாலும்
நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர
     னேர்தருமு கார விந்த ...... மதனாலும்
ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள்
     ஆசைவலை வீசு கெண்டை ...... விழியாலும்
ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்த
     னாகிமயல் நானு ழன்று ...... திரிவேனோ
கோலவுரு வாயெ ழுந்து பாரதனை யேயி டந்து
     கூவிடு முராரி விண்டு ...... திருமார்பன்
கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெ ழுந்த
     கோபவரி நார சிங்கன் ...... மருகோனே
பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள்
     பேர்பெரிய வேல்கொள் செங்கை ...... முருகோனே
பேடைமட ஓதி மங்கள் கூடிவிளை யாடு கின்ற
     பேறைநகர் வாழ வந்த ...... பெருமாளே.


நீல மயில் சேரும் அந்தி மாலை நிகராகி அந்த
     கார மிகவே நிறைந்த.....குழலாலும்
நீடும் அதிரேக(ம்) இன்பமாகிய ச(ல்)லாப சந்த்ரன்
     நேர் தரு(ம்) முக அரவிந்தம்.....அதனாலும்
ஆலின் நிகரான உந்தியாலும் மடவார்கள் தங்கள்
     ஆசை வலை வீசு கெண்டை.....விழியாலும்
ஆடிய கடாம் இசைந்த வார் முலைகளாலும் அந்தனாகி
     மயல் நானும் உழன்று.....திரிவேனோ
கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடந்து
     கூவிடும் முராரி விண்டு.....திரு மார்பன்
கூடம் உறை நீடு செம்பொன் மா மதலை ஊடு எழுந்த
     கோப அரி நார சிங்கன்.....மருகோனே
பீலி மயில் மீது உறைந்து சூரர் தமையே செயம் கொள்
     பேர் பெரிய வேல் கொள் செம் கை.....முருகோனே
பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற
     பேறை நகர் வாழ வந்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top


This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group