| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: புதிய பாடல்கள்
1323 கருவெனு மாயை 1324 தங்க மிகுந்த
1323
புதிய பாடல்கள் கருவெனு மாயை தனதன தான தனதன தான
தனதன தான ...... தனதான
கருவெனு மாயை உருவினில் மூழ்கி
வயதள வாக ...... நிலமீதில்
கலைதெரி வாணர் கலைபல நூல்கள்
வெகுவித மாக ...... கவிபாடித்
தெருவழி போகி பொருளெனு மாசை
திரவியம் நாடி ...... நெடிதோடிச்
சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி
சிறுவித மாக ...... திரிவேனோ
அருளநு போக குருபர னேஉன்
அடியவர் வாழ ...... அருள்வோனே
அரனிரு காதில் அருள்பர ஞாந
அடைவினை ஓதி ...... அருள்பாலா
வெருவிடு சூரர் குலஅடி வேரை
விழவிடு சாசு ...... வதிபாலா
மிடலுட லாளர் அடரசுர் மாள
விடுமயில் வேல ...... பெருமாளே.
கருவெனு மாயை உருவினில் மூழ்கி
வய தளவாக.....நிலமீதில்
கலைதெரி வாணர் கலைபல நூல்கள்
வெகு விதமாக.....கவிபாடித்
தெருவழி போகி பொருளெனும் ஆசை
திரவியம் நாடி.....நெடிது ஓடி
சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி
சிறு விதமாக.....திரிவேனோ
அருள் அநுபோக குருபரனே உன்
அடியவர் வாழ.....அருள்வோனே
அரன் இரு காதில் அருள்பர ஞாந
அடைவினை ஓதி.....அருள்பாலா
வெருவிடு சூரர் குல அடி வேரை
விழவிடு சாசுவதி.....பாலா
மிடல் உடலாளர் அடர் அசுர் மாள
விடும் அயில் வேல.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
1324
புதிய பாடல்கள் தங்க மிகுந்த தந்த தனந்த தனத்த தானன
தந்த தனந்த தனத்த தானன
தந்த தனந்த தனத்த தானன ...... தனதானா
தங்க மிகுந்த முலைக்க டாமலை
பொங்க விரும்பி யமுத்து மாலைகள்
தங்க அணிந்து முறுக்கும் வேசியர் ...... மொழியாலே
சஞ்ச லமிஞ்சி மயக்கி யேஒரு
மஞ்ச மிருந்து சுகிக்க வேவளர்
சந்து சுகந்த முடித்து நூலிடை ...... கிடையாடக்
கொங்கை குலுங்க வளைத்து வாயத
ரங்க ளருந்தி ருசிக்க வேமத
குங்கு மமிஞ்சு கழுத்தி லேகுயி ...... லெனஓசை
கொண்ட வரிந்த விதத்தி னாடர
சங்கி லிகொண்டு பிணித்து மாமயில்
கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர் ...... உறவாமோ
திங்கள் அரும்பு சலத்தி லேவிடம்
வந்த துகண்டு பயப்ப டாதவர்
சிந்தை நடுங்கி இருக்க வேமயில் ...... மிசையேறிச்
சிங்க முகன்த லைவெட்டி மாமுகன்
அங்க மறுந்து கிடக்க வேவரு
சிம்பு ளெனும்ப டிவிட்ட வேலுள ...... குருநாதா
மங்கை மடந்தை கதிக்கு நாயகி
சங்க ரிசுந்த ரிஅத்தி யானனை
மைந்த னெனும்ப டிபெற்ற ஈசுரி ...... தருபாலா
மந்தி ரதந்தி ரமுத்த யோகியர்
அஞ்ச லிசெங்கை முடிக்க வேஅருள்
வந்து தரும்ப டிநித்த மாடிய ...... பெருமாளே.
தங்க(ம்) மிகுந்த முலைக் கடாமலை
பொங்க விரும்பிய முத்து மாலைகள்
தங்க அணிந்து முறுக்கும் வேசியர்.....மொழியாலே
சஞ்சல(ம்) மிஞ்சி மயக்கியே ஒரு
மஞ்சம் இருந்து சுகிக்கவே வளர்
சந்து சுகந்த முடித்து நூலிடை.....கிடையாட
கொங்கை குலுங்க வளைத்து வாய்
அதரங்கள் அருந்தி ருசிக்கவே மத
குங்குமம் மிஞ்சு கழுத்திலே குயிலென.....ஓசை
கொண்டவர் இந்த விதத்தின் ஆடர
சங்கிலி கொண்டு பிணித்து மாமயில்
கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர்.....உறவாமோ
திங்கள் அரும்பு சலத்திலே விடம்
வந்தது கண்டு பயப்படாதவர்
சிந்தை நடுங்கி இருக்கவே மயில்.....மிசையேறிச்
சிங்க முகன் தலைவெட்டி மாமுகன்
அங்கம் அறுந்து கிடக்கவே வரு
சிம்புள் எனும்படிவிட்ட வேலுள.....குருநாதா
மங்கை மடந்தை கதிக்கு நாயகி
சங்கரி சுந்தரி அத்தி யானனை
மைந்தன் எனும்படி பெற்ற ஈசுரி.....தருபாலா
மந்திர தந்திர முத்த யோகியர்
அஞ்சலி செங்கை முடிக்கவே அருள்
வந்து தரும்படி நித்தமாடிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link