சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: பாக்கம்
678   கார்க்கு ஒத்த மேனி     679   பாற்றுக் கணங்கள்     701   தோடு உறும் குழை     702   விலையறுக்கவும்    
678   பாக்கம்   கார்க்கு ஒத்த மேனி  
தாத்தத்த தானதன தாத்தத்த தானதன
     தாத்தத்த தானதன ...... தனதான

கார்க்கொத்த மேனிகடல் போற்சுற்ற மானவழி
     காய்த்தொட்டொ ணாதவுரு ...... ஒருகோடி
காக்கைக்கு நாய்கழுகு பேய்க்கக்க மானவுடல்
     காட்டத்தி னீளெரியி ...... லுறவானிற்
கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு
     போத்துக்க மானகுறை ...... யுடையேனைக்
கூப்பிட்டு சாவருளி வாக்கிட்டு நாமமொழி
     கோக்கைக்கு நூலறிவு ...... தருவாயே
போர்க்கெய்த்தி டாமறலி போற்குத்தி மேவசுரர்
     போய்த்திக்கெ லாமடிய ...... வடிவேலாற்
பூச்சித்தர் தேவர்மழை போற்றுர்க்க வேபொருது
     போற்றிச்செய் வார்சிறையை ...... விடுவோனே
பார்க்கொற்ற நீறுபுனை வார்க்கொக்க ஞானபர
     னாய்ப்பத்தி கூர்மொழிகள் ...... பகர்வாழ்வே
பாக்கொத்தி னாலியலர் நோக்கைக்கு வேல்கொடுயர்
     பாக்கத்தில் மேவவல ...... பெருமாளே.


கார்க்கு ஒத்த மேனி கடல் போல் சுற்றமான வழி காய்த்து
ஒட்டொணாத உரு
ஒரு கோடி காக்கைக்கு நாய் கழுகு பேய்க்கு அக்கமான
உடல்
காட்டத்தில் நீள் எரியில் உற வானில் கூர்ப்பித்த சூல(ன்)
அதனால் குத்தி ஆவி கொடு போத் துக்கமான குறை
உடையேனை
கூப்பிட்டு உசா அருளி வாக்கிட்டு நாமம் மொழி
கோக்கைக்கு நூல் அறிவு தருவாயே
போர்க்கு எய்த்திடா மறலி போல் குத்தி மேவு அசுரர் போயத்
திக்கெலாம் மடிய
வடி வேலால் பூச் சித்தர் தேவர் மழை போல் துர்க்கவே
பொருது
போற்றிச் செய்வார் சிறையை விடுவோனே
பாரக் கொற்ற நீறு புனைவார்க்கு ஒக்க ஞான பரனாய்ப்
பத்தி கூர் மொழிகள் பகர் வாழ்வே
பாக் கொத்தினால் இயலர் நோக்கைக்கு
வேல் கொடு உயர் பாக்கத்தில் மேவ வல பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

679   பாக்கம்   பாற்றுக் கணங்கள்  
தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த
     தாத்தத் தனந்த தந்த ...... தனதான

பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பை
     நோக்கிச் சுமந்து கொண்டு ...... பதிதோறும்
பார்த்துத் திரிந்து ழன்று ஆக்கத் தையுந்தெ ரிந்து
     ஏக்கற் றுநின்று நின்று ...... தளராதே
வேற்றுப் புலன்க ளைந்து மோட்டிப் புகழ்ந்து கொண்டு
     கீர்த்தித் துநின்ப தங்க ...... ளடியேனும்
வேட்டுக் கலந்தி ருந்து ஈட்டைக் கடந்து நின்ற
     வீட்டிற் புகுந்தி ருந்து ...... மகிழ்வேனோ
மாற்றற் றபொன்து லங்கு வாட்சக் கிரந்தெ ரிந்து
     வாய்ப்புற் றமைந்த சங்கு ...... தடிசாப
மாற்பொற் கலந்து லங்க நாட்டச் சுதன்ப ணிந்து
     வார்க்கைத் தலங்க ளென்று ...... திரைமோதும்
பாற்சொற் றடம்பு குந்து வேற்கட் சினம்பொ ருந்து
     பாய்க்குட் டுயின்ற வன்றன் ...... மருகோனே
பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம்ப டிந்த
     பாக்கத் தமர்ந்தி ருந்த ...... பெருமாளே.


பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட்டிடும் குரம்பை நோக்கிச்
சுமந்து கொண்டு
பதி தோறும் பார்த்துத் திரிந்து உழன்று ஆக்கத்தையும்
தெரிந்து ஏக்கற்று நின்று நின்று தளராதே
வேற்றுப் புலன்கள் ஐந்தும் ஓட்டிப் புகழ்ந்து கொண்டு
கீர்த்தித்து நின் பதங்கள் அடியேனும் வேட்டு
கலந்து இருந்து ஈட்டைக் கடந்து நின்ற வீட்டில் புகுந்து
இருந்து மகிழ்வேனோ
மாற்று அற்ற பொன் துலங்கு வாள் சக்கிரம் தெரிந்து
வாய்ப்பு உற்று அமைந்த சங்கு தடி சாப(ம்) மால் பொன்
கலம் துலங்க நாட்டு அச்சுதன்
பணிந்து வார்க் கைத்தலங்கள் என்று திரை மோதும் பால்
சொல் தடம் புகுந்து வேல் கண் சினம் பொருந்து பாய்க்குள்
துயின்றவன் தன் மருகோனே
பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம் படிந்த பாக்கத்து
அமர்ந்திருந்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000