சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: பாகை
789   ஆடல் மாமத ராஜன்     790   ஈளை சுரங்குளிர்     791   குவளை பொருதிரு    
789   பாகை   ஆடல் மாமத ராஜன்  
தான தானன தானம், தான தானன தானம்
     தான தானன தானம் ...... தனதான

ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியி லேநொந்
     தாகம் வேர்வுற மால்கொண் ...... டயராதே
ஆர வாணகை யார்செஞ் சேலி னேவலி லேசென்
     றாயு வேதனை யேயென் ...... றுலையாதே
சேடன் மாமுடி மேவும் பாரு ளோர்களுள் நீடுந்
     த்யாக மீபவர் யாரென் ...... றலையாதே
தேடி நான்மறை நாடுங் காடு மோடிய தாளுந்
     தேவ நாயக நானின் ...... றடைவேனோ
பாடு நான்மறை யோனுந் தாதை யாகிய மாலும்
     பாவை பாகனு நாளும் ...... தவறாதே
பாக நாண்மலர் சூடுஞ் சேக ராமதில் சூழ்தென்
     பாகை மாநக ராளுங் ...... குமரேசா
கூட லான்முது கூனன் றோட வாதுயர் வேதங்
     கூறு நாவல மேவுந் ...... தமிழ்வீரா
கோடி தானவர் தோளுந் தாளும் வீழவு லாவுங்
     கோல மாமயி லேறும் ...... பெருமாளே.


ஆடல் மா மத ராஜன் பூசல் வாளியிலே நொந்து
ஆகம் வேர்வுற மால் கொண்டு அயராதே
ஆரம் வாள் நகையார் செம் சேலின் ஏவலிலே சென்று
ஆயு(ள்) வேதனையே என்று உலையாதே
சேடன் மா முடி மேவும் பார் உ(ள்)ளோர்களுள் நீடும்
த்யாகம் ஈபவர் யார் என்று அலையாதே
தேடி நான் மறை நாடும் காடும் ஓடிய தாளும் தேவ நாயக
நான் இன்று அடைவேனோ
பாடு நான் மறையோனும் தாதை ஆகிய மாலும் பாவை
பாகனும் நாளும் தவறாதே
பாக நாள் மலர் சூடும் சேகரா
மதில் சூழ் தென் பாகை மா நகர் ஆளும் குமரேசா
கூடலான் முது கூன் அன்று ஓட வாது உயர் வேதம் கூறு(ம்)
நாவல மேவும் தமிழ் வீரா
கோடி தானவர் தோளும் தாளும் வீழ உலாவும் கோல மா
மயில் ஏறும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

790   பாகை   ஈளை சுரங்குளிர்  
தான தனந்தன தான தனந்தன
     தான தனந்தன ...... தனதான

ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல
     நோய்கள் வளைந்தற ...... இளையாதே
ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு
     காடு பயின்றுயி ...... ரிழவாதே
மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்
     வேறு படுந்தழல் ...... முழுகாதே
மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில்
     வாழ்வு பெறும்படி ...... மொழிவாயே
வாளை நெருங்கிய வாவியி லுங்கயல்
     சேல்கள் மறிந்திட ...... வலைபீறா
வாகை துதைந்தணி கேதகை மங்கிட
     மோதி வெகுண்டிள ...... மதிதோயும்
பாளை நறுங்கமழ் பூக வனந்தலை
     சாடி நெடுங்கடல் ...... கழிபாயும்
பாகை வளம்பதி மேவி வளஞ்செறி
     தோகை விரும்பிய ...... பெருமாளே.


ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல நோய்கள்
வளைந்தற இளையாதே
ஈடுபடுஞ் சிறு கூடு புகுந்து
இடுகாடு பயின்று உயிர் இழவாதே
மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்
வேறு படுந்தழல் முழுகாதே
மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில்
வாழ்வு பெறும்படி மொழிவாயே
வாளை நெருங்கிய வாவியிலும்
கயல் சேல்கள் மறிந்திட வலைபீறா
வாகை துதைந்து அணி கேதகை மங்கிட மோதி வெகுண்டு
இள மதிதோயும் பாளை நறுங்கமழ் பூக வனம்
தலைசாடி நெடுங்கடல் கழிபாயும்
பாகை வளம்பதி மேவி
வளஞ்செறி தோகை விரும்பிய பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=ovyDPg7hbE0
Add (additional) Audio/Video Link

Back to Top

791   பாகை   குவளை பொருதிரு  
தனன தனதன தனன தனதன
     தான தானன ...... தனதான

குவளை பொருதிரு குழையை முடுகிய
     கோல வேல்விழி ...... மடவார்தங்
கொடிய ம்ருகமத புளக தனகிரி
     கூடி நாடொறு ...... மயலாகித்
துவள வுருகிய சரச விதமது
     சோர வாரிதி ...... யலையூடே
சுழலு மெனதுயிர் மவுன பரமசு
     கோம கோததி ...... படியாதோ
கவள கரதல கரட விகடக
     போல பூதர ...... முகமான
கடவுள் கணபதி பிறகு வருமொரு
     கார ணாகதிர் ...... வடிவேலா
பவள மரகத கநக வயிரக
     பாட கோபுர ...... அரிதேரின்
பரியு மிடறிய புரிசை தழுவிய
     பாகை மேவிய ...... பெருமாளே.


குவளை பொருது இரு குழையை முடுகிய
கோல வேல் விழி மடவார் தம்
கொடிய ம்ருகமத புளக தன கிரி கூடி நாடொறு(ம்) மயல்
ஆகி
துவள உருகிய சரச விதம் அது சோர வாரிதி அலையூடே
சுழலும் எனது உயிர் மவுன பரம சுகம் மகா உததி படியாதோ
கவள கர தல கரட விகட கபோல பூதர முகமான
கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு காரணா கதிர் வடிவேலா
பவள மரகத கநக வயிர கபாட கோபுர அரி தேரின் பரியும்
இடறிய புரிசை தழுவிய பாகை மேவிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000