| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: பழநி
104 அகல்வினை 105 அணிபட்டு அணுகி 106 அதல விதல 107 அபகார நிந்தை 108 அரிசன வாடை 109 அருத்தி வாழ்வொடு 110 அவனிதனிலே 111 அறமிலா நிலை 112 ஆதாளிகள் புரி 113 ஆலகாலம் என 114 ஆறுமுகம் ஆறுமுகம் 115 இத் தாரணிக்குள் 116 இரவி என 117 இருகனக மாமேரு 118 இரு செப்பென 119 இலகிய களப 120 இலகுகனி மிஞ்சு 121 உயிர்க் கூடு 122 உலகபசு பாச 123 ஒருபொழுதும் இருசரண 124 ஒருவரை ஒருவர் 125 ஓடி ஓடி 126 கடலைச் சிறை 127 கடலை பொரியவரை 128 கதியை விலக்கு 129 கரிய பெரிய 130 கரிய மேகமதோ 131 கரியிணை கோடென 132 கருகி அகன்று 133 கருப்புவிலில் 134 கருவின் உருவாகி 135 கலக வாள்விழி 136 கலகக் கயல்விழி 137 கலவியி லிச்சி 138 கலை கொடு 139 களப முலையை 140 கறுத்த குழலணி 141 கனக கும்பம் 142 கனத்திறுகி 143 கனமாய் எழுந்து 144 கார் அணிந்த 145 குரம்பை மலசலம் 146 குருதி மலசலம் 147 குழல் அடவி 148 குழல்கள் சரிய 149 குறித்தமணி 150 குன்றுங் குன்றும் 151 கொந்துத் தரு 152 கோல குங்கும 153 கோல மதிவதனம் 154 சகடத்திற் குழை 155 சிந்துர கூரம 156 சிவனார் மனங்குளிர 157 சிறு பறையும் 158 சீ உதிரம் எங்கும் 159 சீறல் அசடன் 160 சுருதி முடி மோனம் 161 சுருளளக பார 162 ஞானங்கொள் 163 தகர நறுமலர் 164 தகைமைத் தனியில் 165 தமரும் அமரும் 166 தலைவலி மருத்தீடு 167 திடமிலி சற்குணமிலி 168 திமிர உததி 169 தோகைமயிலே கமல 170 நாத விந்து 171 நிகமம் எனில் 172 நெற்றி வெயர்த்துளி 173 பகர்தற்கு அரிதான 174 பஞ்ச பாதகன் 175 பாரியான கொடை 176 புடவிக்கு அணி 177 புடைசெப் பென 178 பெரியதோர் கரி 179 போதகம் தரு 180 மந்தரமதெனவே 181 மருமலரினன் 182 மனக்கவலை ஏதும் 183 மலரணி கொண்டை 184 முகிலளகத்தில் 185 முகை முளரி 186 முதிரவுழையை 187 முத்துக்கு 188 மூலம் கிளர் ஓர் 189 மூல மந்திரம் 190 முருகுசெறி குழலவிழ 191 முருகு செறிகுழல் முகில் 192 வசனமிக ஏற்றி 193 வஞ்சனை மிஞ்சி 194 வரதா மணி நீ 195 வனிதை உடல் 196 வாதம் பித்தம் 197 வாரணந் தனை 198 விதம் இசைந்து 199 விரை மருவு 200 வேய் இசைந்து 1338 சிவணிதா வியமனது
104
பழநி அகல்வினை தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன
தனதன தத்தா தத்தன ...... தனதான
அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு
மறிவிலி வித்தா ரத்தன ...... மவிகார
அகில்கமழ் கத்தூ ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள
வருள்பவர் நட்பே கொட்புறு ...... மொருபோதன்
பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய
பரமம யச்சோ திச்சிவ ...... மயமாநின்
பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு
ரவுபயில் நற்றாள் பற்றுவ ...... தொருநாளே
புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ்
பொடிகொடு புற்பாய் சுற்றிகள் ...... கழுவேறப்
பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடை
புலவரில் நக்கீ ரர்க்குத ...... வியவேளே
இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள்
எழுபுவி துய்த்தார் மைத்துனர் ...... மதலாய்வென்
றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை
யெழுதிவ னத்தே யெற்றிய ...... பெருமாளே.
அகல்வினை உள்சார் சட் சமயிகளொடு வெட்கா தட்கிடும்
அறிவு இலி வித்தாரத் தனம் அவிகார
அகில் கமழ் கத்தூரித் தனி அணை மிசை கைக் காசுக்கு அளவு
அருள்பவர் நட்பே கொட்பு உறும் ஒரு போதன்
பகல் இரவில் போதில் பணி ப(ண்)ணி அற விட்டார் எட்டிய
பரம மயச் சோதிச் சிவ மயமா(ய்) நின்
பழநி தனில் போய் உற்பவ வினை வி(ள்)ள கள் சேர் வெட்சி
குரவு பயில் நல்தாள் பற்றுவது ஒரு நாளே
புகலி வனப்பு ஏறப் புகல் மதுரை மன் வெப்பு ஆறத் திகழ்
பொடி கொ(ண்)டு புல் பாய் சுற்றிகள் கழு ஏற
பொருத சமர்த்தா குத்திர துரக முகக் கோதைக்கு இடை
புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே
இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே
சுட்டு அருள் எழு புவி துய்த்தார் மைத்துனர் மதலாய் வென்று
இடர் அற முப்பால் செப்பிய கவிதையின் மிக்க ஆரத்தினை
எழுதி வனத்தே எற்றிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link
105
பழநி அணிபட்டு அணுகி தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
அணிபட் டணுகித் திணிபட் டமனத்
தவர்விட் டவிழிக் ...... கணையாலும்
அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்
தவன்விட் டமலர்க் ...... கணையாலும்
பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்
பெறுமக் குணமுற் ...... றுயிர்மாளும்
பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்
பெறுதற் கருளைத் ...... தரவேணும்
கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்
கனியைக் கணியுற் ...... றிடுவோனே
கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்
கருதிச் சிறைவைத் ...... திடுவோனே
பணியப் பணியப் பரமர்ப் பரவப்
பரிவுற் றொருசொற் ...... பகர்வோனே
பவளத் தவளக் கனகப் புரிசைப்
பழநிக் குமரப் ...... பெருமாளே.
அணிபட்டு அணுகித் திணிபட்ட மனத்
தவர் விட்ட விழிக் கணையாலும்
அரிசுற் று கழைத் தவர்பெற்ற வளத்
தவன் விட்டமலர்க் கணையாலும்
பிணிபட்டு உணர்வற்று அவமுற்று இயமற்
பெறும் அக் குணமுற்று உயிர்மாளும்
பிறவிக் கடல்விட்டு உயர்நற் கதியைப்
பெறுதற்கு அருளைத் தரவேணும்
கணிநற் சொருபத்தை யெடுத்து மலைக்
கனியைக் கணியுற்றிடுவோனே
கமலத்து அயனைப் ப்ரணவத்து உரையைக்
கருதி சிறைவைத்திடுவோனே
பணி அப்பு அணி அப் பரமர்ப் பரவ
பரிவுற்று ஒருசொற் பகர்வோனே
பவளத் தவளக் கனகப் புரிசை
பழநிக் குமரப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
106
பழநி அதல விதல தனன தனதனன தந்தத்த தந்ததன
தனன தனதனன தந்தத்த தந்ததன
தனன தனதனன தந்தத்த தந்ததன ...... தந்ததான
அதல விதலமுத லந்தத்த லங்களென
அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநு
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம்
உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி
ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி
லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன்
உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென
மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்
உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ...... நம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததத
திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி
சகக சககெணக தந்தத்த குங்கெணக
டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக
அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு
பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ...... துங்ககாளி
பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு
கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்
பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ...... தம்பிரானே.
அதலம் விதலம் முதல் அந்தத் தலங்கள் என
அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என
அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என அங்கி பாநு
அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என
அறையும் மறை என அரும் தத்துவங்கள் என
அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம்
உதயம் எழ இருள் விடிந்து அக்கணம் தனில்
இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து உணர்வில்
உணரும் அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன்
உதவ இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என
மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ்
உரிய அடிமை உனை அன்றிப் ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததத
திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி
சகக சககெணக தந்தத்த குங்கெணக
டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
தகக தகதகக தந்தத்த தந்தகக என்றுதாளம்
பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக
அகில நிசிசரர் நடுங்கக் கொடும் கழுகு
பரிய குடர் பழு எலும்பைப் பிடுங்க ரண துங்க காளி
பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு
கவரி இட இகலை வென்று சிகண்டி தனில்
பழநி மலையின் மிசை வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=iH9jbQ9nmXM
Add (additional) Audio/Video Link
107
பழநி அபகார நிந்தை தனதான தந்தனத் ...... தனதான
தனதான தந்தனத் ...... தனதான
அபகார நிந்தைபட் ...... டுழலாதே
அறியாத வஞ்சரைக் ...... குறியாதே
உபதேச மந்திரப் ...... பொருளாலே
உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ
இபமாமு கன்தனக் ...... கிளையோனே
இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா
ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.
அபகார நிந்தைபட்டு உழலாதே
அறியாத வஞ்சரை குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ?
இபமா முகன் தனக் கிளையோனே
இமவான் மடந்தை உத்தமிபாலா
ஜெபமாலை தந்த சற் குருநாதா
திருவாவினன் குடி பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=3RU-nN850o0
https://www.youtube.com/watch?v=XavwwIVUH1E
https://www.youtube.com/watch?v=xUVR0pP3WAU
Add (additional) Audio/Video Link
108
பழநி அரிசன வாடை தனதன தானத் தான தனத்தத்
தனதன தானத் தான தனத்தத்
தனதன தானத் தான தனத்தத் ...... தனதான
அரிசன வாடைச் சேர்வை குளித்துப்
பலவித கோலச் சேலை யுடுத்திட்
டலர்குழ லோதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே
அமர்பொரு காதுக் கோலை திருத்தித்
திருநுதல் நீவிப் பாளி தபொட்டிட்
டகில்புழு காரச் சேறு தனத்திட் ...... டலர்வேளின்
சுரதவி நோதப் பார்வை மையிட்டுத்
தருணக லாரத் தோடை தரித்துத்
தொழிலிடு தோளுக் கேற வரித்திட் ...... டிளைஞோர்மார்
துறவினர் சோரச் சோர நகைத்துப்
பொருள்கவர் மாதர்க் காசை யளித்தற்
றுயரற வேபொற் பாத மெனக்குத் ...... தருவாயே
கிரியலை வாரிச் சூர ரிரத்தப்
புணரியின் மூழ்கிக் கூளி களிக்கக்
கிரணவை வேல்புத் தேளிர் பிழைக்கத் ...... தொடுவோனே
கெருவித கோலப் பார தனத்துக்
குறமகள் பாதச் சேக ரசொர்க்கக்
கிளிதெய்வ யானைக் கேபு யவெற்பைத் ...... தருவோனே
பரிமள நீபத் தாரொ டுவெட்சித்
தொடைபுனை சேவற் கேத னதுத்திப்
பணியகல் பீடத் தோகை மயிற்பொற் ...... பரியோனே
பனிமல ரோடைச் சேலு களித்துக்
ககனம ளாவிப் போய்வ ருவெற்றிப்
பழநியில் வாழ்பொற் கோம ளசத்திப் ...... பெருமாளே.
அரிசன வாடைச் சேர்வை குளித்துப்
பலவித கோலச் சேலை உடுத்திட்டு
அலர் குழல் ஓதிக் கோதி முடித்துச் சுருளோடே
அமர் பொரு காதுக்கு ஓலை திருத்தித்
திரு நுதல் நீவிப் பாளித பொட்டு இட்டு
அகில் புழுகு ஆரச் சேறு தனத்து இட்டு அலர் வேளின்
சுரத விநோதப் பார்வை மை இட்டுத்
தருண கலாரத் தோடை தரித்து
தொழிலிடு தோளுக்கு ஏற வரித்திட்டு இளைஞோர்மார்
துறவினர் சோரச் சோர நகைத்து
பொருள் கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
துயர் அறவே பொன் பாதம் எனக்குத் தருவாயே
கிரி அலை வாரிச் சூரர் இரத்தப்
புணரியின் மூழ்கிக் கூளி களிக்கக்
கிரண வை வேல் புத்தேளிர் பிழைக்கத் தொடுவோனே
கெருவித கோலப் பார தனத்தக்
குறமகள் பாதச் சேகர சொர்க்கக்
கிளி தெய்வ யானைக்கே புய வெற்பைத் தருவோனே
பரிமள நீபத் தாரொடு வெட்சித்
தொடை புனை சேவல் கேதன துத்திப்
பணி அகல் பீடத் தோகை மயில் பொன் பரியோனே
பனி மலர் ஓடைச் சேல் உகளித்துக்
ககனம் அளாவிப் போய் வரு(ம்) வெற்றிப்
பழநியில் வாழ் பொன் கோமள சத்திப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
109
பழநி அருத்தி வாழ்வொடு தனத்த தானன தனதன தனதன ...... தனதான
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு ...... முறவோரும்
அடுத்த பேர்களு மிதமுறு மகவோடு ...... வளநாடும்
தரித்த வூருமெ யெனமன நினைவது ...... நினையாதுன்
தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது ...... தருவாயே
எருத்தி லேறிய இறையவர் செவிபுக ...... வுபதேசம்
இசைத்த நாவின இதணுறு குறமக ...... ளிருபாதம்
பரித்த சேகர மகபதி தரவரு ...... தெய்வயானை
பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை ...... பெருமாளே.
அருத்தி வாழ்வொடுதனகிய மனைவியும்உறவோரும்
அடுத்த பேர்களும்இதமுறு மகவோடுவளநாடும்
தரித்த வூரும்மெய் எனமன நினைவதுநினையாது உன்
த(ன்)னைப் பராவியும்வழிபடு தொழிலது தருவாயே
எருத்தி லேறிய இறையவர் செவிபுக வுபதேசம்
இசைத்த நாவின இதணுறு குறமகள் இருபாதம்
பரித்த சேகர மகபதி தரவரு தெய்வயானை
பதிக்கொள் ஆறிரு புய பழநியிலுறை பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=pFYn33tOlUE
Add (additional) Audio/Video Link
110
பழநி அவனிதனிலே தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த ...... கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து இளைஞோனாய்
அருமழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று
அதிவிதம் அதாய் வளர்ந்து பதினாறாய்
சிவகலைகள் ஆகமங்கள் மிகவுமறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகுகவலை யாய்உழன்று
திரியும் அடியேனை உன்றன் அடிசேராய்
மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீதணிந்த மகதேவர்
மனமகிழவே அணைந்து ஒருபுறமதாகவந்த
மலைமகள் குமார துங்க வடிவேலா
பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து
படி அதிரவே நடந்த கழல்வீரா
பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து
பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=28BL3hg9Y4w
https://www.youtube.com/watch?v=ddBjVBf8YsU
Add (additional) Audio/Video Link
111
பழநி அறமிலா நிலை தனதனா தனதத்த தனதனா தனதத்த
தனதனா தனதத்த ...... தனதான
அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு
ளறிவுதா னறவைத்து ...... விலைபேசி
அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை
யதிகமா வுதவிக்கை ...... வளையாலே
உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ
ளுலையிலே மெழுகொத்த ...... மடவாரோ
டுருகியே வருபெற்றி மதனநா டகபித்து
ஒழியுமா றொருமுத்தி ...... தரவேணும்
மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்தி
மயிலனாள் புணர்செச்சை ...... மணிமார்பா
மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க
மயிலிலே றியவுக்ர ...... வடிவேலா
பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி
பரமர்பா லுறைசத்தி ...... யெமதாயி
பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற
பழநிமா மலையுற்ற ...... பெருமாளே.
அறம் இலா நிலை கற்று கொடிய வேல் விழி விட்டு
உள் அறிவு தான் அற வைத்து விலை பேசி
அமளி மீதினில் வைத்து பவள வாய் அமுதத்தை
அதிகமா(க) உதவி கை வளையாலே
உறவினால் உடலத்தை இறுகவே தழுவிக் கொள்
உலையிலே மெழுகு ஒத்த மடவாரோடு
உருகியே வரு பெற்றி மதன நாடக பித்து
ஒழியுமாறு ஒரு முத்தி தர வேணும்
மறவர் மாது ஒரு ரத்ந விமல கோ கநகத்தி
மயில் அ(ன்)னாள் புணர் செச்சை மணி மார்பா
மருள் நிசாசரன் வெற்பில் உருகி வீழ்வு உற மிக்க
மயிலில் ஏறிய உக்ர வடிவேலா
பறைகள் பேணிய ருத்ரி கரிய கார் அளகத்தி
பரமர் பால் உறை சத்தி எமது ஆயி
பழைய பார்வதி கொற்றி பெரிய நாயகி பெற்ற
பழநி மா மலை உற்ற பெருமாளே.
Add (additional) Audio/Video Link
112
பழநி ஆதாளிகள் புரி தானா தனதன தானா தனதன
தானா தனதன ...... தனதான
ஆதா ளிகள்புரி கோலா கலவிழி
யாலே யமுதெனு ...... மொழியாலே
ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை
யாலே மணமலி ...... குழலாலே
சூதா ரிளமுலை யாலே யழகிய
தோடா ரிருகுழை ...... யதனாலே
சோரா மயல்தரு மானா ருறவிடர்
சூழா வகையருள் ...... புரிவாயே
போதா ரிருகழல் சூழா ததுதொழில்
பூணா தெதிருற ...... மதியாதே
போரா டியஅதி சூரா பொறுபொறு
போகா தெனஅடு ...... திறலோனே
வேதா வுடனெடு மாலா னவனறி
யாதா ரருளிய ...... குமரேசா
வீரா புரிவரு கோவே பழநியுள்
வேலா இமையவர் ...... பெருமாளே.
ஆதாளிகள் புரி கோலாகல விழி
யாலே அமுது எனு(ம்) மொழியாலே
ஆழ் சீர் இள நகையாலே துடி இடை
யாலே மண மலி குழலாலே
சூது ஆர் இள முலையாலே அழகிய
தோடு ஆர் இரு குழை அதனாலே
சோரா மயல் தரு மானார் உறவு இடர்
சூழா வகை அருள் புரிவாயே
போது ஆர் இரு கழல் சூழாது அது தொழில்
பூணாது எதிர் உற மதியாதே
போர் ஆடிய அதி சூரா பொறு பொறு
போகாதே என அடு திறலோனே
வேதா உடன் நெடு மால் ஆனவன் அறி
யாதார் அருளிய குமரேசா
வீரா புரி கோவே பழநியுள்
வேலா இமையவர் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
113
பழநி ஆலகாலம் என தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன ...... தனதான
ஆல காலமெ னக்கொலை முற்றிய
வேல தாமென மிக்கவி ழிக்கடை
யாலு மோகம்வி ளைத்துவி தத்துட ...... னிளைஞோரை
ஆர வாணைமெ யிட்டும றித்துவி
கார மோகமெ ழுப்பிய தற்குற
வான பேரைய கப்படு வித்ததி ...... விதமாகச்
சால மாலைய ளித்தவர் கைப்பொருள்
மாள வேசிலு கிட்டும ருட்டியெ
சாதி பேதம றத்தழு வித்திரி ...... மடமாதர்
தாக போகமொ ழித்துஉ னக்கடி
யானென் வேள்விமு கத்தவ முற்றிரு
தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட ...... அருள்வாயே
வால மாமதி மத்தமெ ருக்கறு
காறு பூளைத ரித்தச டைத்திரு
வால வாயன ளித்தரு ளற்புத ...... முருகோனே
மாய மானொட ரக்கரை வெற்றிகொள்
வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு
வாளி யேவிய மற்புய னச்சுதன் ...... மருகோனே
நாலு வேதந விற்றுமு றைப்பயில்
வீணை நாதனு ரைத்தவ னத்திடை
நாடி யோடிகு றத்தித னைக்கொடு ...... வருவோனே
நாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர்
சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு
ஞான பூரண சத்தித ரித்தருள் ...... பெருமாளே.
ஆலகாலம் எனக் கொலை முற்றிய
வேல் அதாம் என மிக்க விழிக் கடை
யாலும் மோகம் விளைத்து விதத்துடன் இளைஞோரை
ஆர ஆணை மெ(ய்)யிட்டு மறித்து
விகார மோகம் எழுப்பி அதற்கு உற
வான பேரை அகப்படுவித்து அதி விதமாக
சால மாலை அளித்து அவர் கைப்பொருள்
மாளவே சிலுகிட்டு மருட்டியெ
சாதி பேதம் அறத் தழுவித் திரி மடமாதர்
தாக போகம் ஒழித்து உனக்கு அடி
யான் என் வேள்வி முகத் தவம் உற்று இரு
தாளை நாளும் வழுத்தி நினைத்திட அருள்வாயே
வால மா மதி மத்தம் எருக்கு அறுகு
ஆறு பூளை தரித்த சடைத் திரு
ஆல வாயன் அளித்தருள் அற்புத முருகோனே
மாய மான் ஒடு அரக்கரை வெற்றி கொள்
வாலி மார்பு தொளைத்திட வில் கொடு
வாளி ஏவிய மல் புயன் அச்சுதன் மருகோனே
நாலு வேத(ம்) நவிற்று முறைப் பயில்
வீணை நாதன் உரைத்த வனத்திடை
நாடி ஓடி குறத்தி தனைக் கொடு வருவோனே
நாளிகேரம் வருக்கை பழுத்து உதிர்
சோலை சூழ் பழநி பதியில் திரு
ஞான பூரண சத்தி தரித்து அருள் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
114
பழநி ஆறுமுகம் ஆறுமுகம் தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தந்ததான
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்,
ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி
யார்கள் பதமே துணைய தென்று நாளும்
ஏறுமயில் வாகன குகா சரவணா எனது
ஈச எனமானம் உனதென்றும் ஓதும்
ஏழைகள் வியாகுலம் இதேதென வினாவில்உனை
யேவர் புகழ்வார் மறையும் என்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேல, அணி
நீலமயில் வாக உமை தந்தவேளே
நீசர்கள் த(ம்)மோடு (எ)னது தீவினையெலா மடிய
நீடு தனி வேல் விடு மடங்கல்வேலா
சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
தேவர் துணைவா சிகரி அண்டகூடஞ்
சேரும் அழகார் பழனி வாழ் குமரனே பிரம
தேவர் வரதா முருக தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=xl2oDn-VV8k
https://www.youtube.com/watch?v=PM4s-fUJ3UI
Add (additional) Audio/Video Link
115
பழநி இத் தாரணிக்குள் தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
தானத் தனந்ததன தானத் தனந்ததன
தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
தானத் தனந்ததன தானத் தனந்ததன
தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
தானத் தனந்ததன தானத் தனந்ததன ...... தனதனதான
இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது
கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
யிச்சீர் பயிற்றவய தெட்டொ டுமெட்டுவர
வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க ...... ளுடனுறவாகி
இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு
வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
திக்கோ டுதிக்குவரை மட்டோ டிமிக்கபொருள்
தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக
மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை
மூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில ...... பிணியதுமூடிச்
சத்தா னபுத்தியது கெட்டே கிடக்கநம
னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது
பெற்றோர் கள்சுற்றியழ வுற்றார் கள்மெத்தஅழ
ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்
தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி
னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென ...... எடுமெனவோடிச்
சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய
இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது
சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர ...... இனிவரவேணும்
தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
தாதத் தனந்ததன தானத் தனந்ததன
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென ...... ஒருமயிலேறித்
திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது
வேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு
சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை
மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி
சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு
நாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர் ...... அணிதிருமார்பா
மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக
னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு
முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக
ளேதொட் டகொண்டலுரு வாகிச் சுமந்ததிக
மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை
மார்பிற் புணர்ந்தரகு ராமற் குமன்புடைய ...... மருமகனாகி
வற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைக
ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி
யத்தா பரத்தையறி வித்தா விசுற்றுமொளி
யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட் டமைந்தபுய
வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி
வாழ்வுக் குகந்தடிய ராவிக் குள்நின்றுலவி ...... வருபெருமாளே.
இத்தாரணிக்குள் மனு வித்தாய் முளைத்து அழுது
கேவிக் கிடந்து மடி மீதில் தவழ்ந்து அடிகள்
தத்தா தனத்ததன இட்டே தெருத் தலையில்
ஓடித் திரிந்து நவ கோடிப் ப்ரபந்த கலை
இச் சீர் பயிற்ற வயது எட்டோடும் எட்டு வர
வாலக் குணங்கள் பயில் கோலப் பெதும்பையர்கள் உடன் உறவாகி
இக்கு ஆர் சரத்து மதனுக்கே இளைத்து வெகு
வாகக் கலம்ப வகை பாடிப் புகழ்ந்து பல
திக்கோடு திக்கு வரை மட்டு(ம்) ஓடி மிக்க பொருள்
தேடி சுகந்த அணை மீதில் துயின்று சுகம்
இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை
மூழ்கிக் கிடந்து மயலாகித் துளைந்து சில பிணி அது மூடிச்
சத்தான புத்தி அது கெட்டே கிடக்க நமன்
ஓடித் தொடர்ந்து கயிறு ஆடிக் கொளும் பொழுது
பெற்றோர்கள் சுற்றி அழ உற்றார்கள் மெத்த அழ
ஊருக்கு அடங்கல் இலர் காலற்கு அடங்க உயிர்
தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியின்
ஓலைப் பழம் படியினால் இற்று இறந்தது என எடும் என ஓடிச்
சட்டா நவப் பறைகள் கொட்டா வரிச்சுடலை
ஏகிச் சடம் பெரிது வேகப் புடம் சமைய
இட்டே அனற்குள் எரி பட்டார் எனத் தழுவி
நீரில் படிந்து விடு பாசத்து அகன்று உனது
சத் போதகப் பதுமம் உற்றே தமிழ்க் கவிதை
பேசிப் பணிந்து உருகு நேசத்தை இன்று தர இனி வரவேணும்
தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
தாதத் தனந்ததன தானத் தனந்ததன
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென ஒரு மயில் ஏறி
திண் தேர் ரதத்து அசுரர் பட்டே விழப் பொருது
வேலைத் தொளைந்து வரை ஏழைப் பிளந்து வரு
சித்தா பரத்து அமரர் கத்தா குறத்தி முலை
மீதில் புணர்ந்து சுக லீலைக் கதம்பம் அணி
சுத்தா உமைக்கும் ஒரு முத்தாய் முளைத்த குரு
நாதக் குழந்தை என ஓடிக் கடம்ப மலர் அணி திரு மார்பா
மத்தா மதக் களிறு பின் தான் உதித்த குகனே
ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டது ஒரு
முட்டாள் அரக்கர் தலை இற்றே விழக் கணைகளே
தொட்ட கொண்டல் உருவு ஆகி சுமந்து அதிகம்
மட்டு ஆர் மலர்க் கமலம் உற்றா சனத் திருவை
மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய மருமகன் ஆகி
வற்றா மதுக் கருணை உற்றே மறைக் கலைகள்
ஓதித் தெரிந்து தமிழ் சோதித்து அலங்கல் அணி
அத்தா பரத்தை அறிவித்து ஆவி சுற்றும் ஒளி
ஆகிப் ப்ரபந்தம் அணி வேல் தொட்டு அமைந்த புய
வர்க்கா மருப் புழுகு முட்டா திருப் பழநி
வாழ்வுக்கு உகந்து அடியர் ஆவிக்குள் நின்று உலவி வரு பெருமாளே.
Add (additional) Audio/Video Link
116
பழநி இரவி என தனதனன தனதனன தானான தனதனன
தனதனன தனதனன தானான தனதனன
தனதனன தனதனன தானான தனதனன ...... தனதான
இரவியென வடவையென ஆலால விடமதென
உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர
இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி ...... லதுகூவ
எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி
யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென
இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு ...... வசைபேச
அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது
அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள்
அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக ...... மெலிவானாள்
அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது
அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை
யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை ...... வருவாயே
நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு
பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல்
நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் ...... மருகோனே
நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி
கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி
நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை ...... யருள்பாலா
பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி
படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத
பதுமகர தலமுருக நால்வேத கரரணிக ...... மயில்வீரா
பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை
வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர
பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் ...... பெருமாளே.
இரவி என வடவை என ஆலால விடம் அது என
உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர
இரதி பதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ
எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி
இசை குறுகி இரு செவியில் நாராசம் உறுவது என
இகல் புரிய மதன குரு ஓராத அ(ன்)னையர் கொடு வசை பேச
அரஹர என வநிதை படு பாடு ஓத அரிது அரிது
அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள்
அவசம் உற அவசம் உற ஆர் ஓமல் தரவும் மிக மெலிவு ஆனாள்
அகுதி இவள் தலையில் விதி ஆனாலும் விலக அரிது
அடிமை கொள உனது பரம் ஆறாத ஒரு தனிமை
அவளை அணை தர இனிதின் ஓகார பரியின் மிசை வருவாயே
நிரை பரவி வர வரையுள் ஓர் சீத மருதினொடு
பொரு சகடு உதை அது செய்து ஆ மாய மழை சொரிதல்
நிலை குலைய மலை குடையதாவே கொள் கரகமலன் மருகோனே
நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி
கவுரி பயிரவி அரவ பூணாரி திரி புவனி
நிபுட மலை அரசன் அருள் வாழ்வான புரண உமை அருள்பாலா
பரவை கிரி அசுரர் திரள் மா சேனை தவிடு பொடி
பட அமரர் துயர் அகல வேல் ஏவி அமர் பொருத
பதும கரதல முருக நால் வேதகரர் அணிக மயில்வீரா
பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை
வநிதை குற மகள் மகிழும் லீலா விதுர மதுர
பநுவல் தரு பழனி வரு கோலாகல அமரர் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
117
பழநி இருகனக மாமேரு தனதனன தானான தானதன தந்த
தனதனன தானான தானதன தந்த
தனதனன தானான தானதன தந்த ...... தனதான
இருகனக மாமேரு வோகளப துங்க
கடகடின பாடீர வாரமுத கும்ப
மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு ...... குவடேயோ
இலகுமல ரேவாளி யாகியஅ நங்க
னணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்த
இளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து ...... தணியாமல்
பெருகியொரு காசேகொ டாதவரை யைந்து
தருவைநிக ரேயாக வேயெதிர்பு கழ்ந்து
பெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து ...... நிலைகாணாப்
பிணியினக மேயான பாழுடலை நம்பி
உயிரையவ மாய்நாடி யேபவநி ரம்பு
பிறவிதனி லேபோக மீளவுமு ழன்று ...... திரிவேனோ
கருணையுமை மாதேவி காரணிய நந்த
சயனகளி கூராரி சோதரிபு ரந்த
கடவுளுடன் வாதாடு காளிமலை மங்கை ...... யருள்பாலா
கருடனுடன் வீறான கேதனம்வி ளங்கு
மதிலினொடு மாமாட மேடைகள்து லங்கு
கலிசைவரு காவேரி சேவகனொ டன்பு ...... புரிவோனே
பரவையிடை யேபாத காசுரர்வி ழுந்து
கதறியிட வேபாக சாதனனு நெஞ்சு
பலிதமென வேயேக வேமயிலில் வந்த ...... குமரேசா
பலமலர்க ளேதூவி யாரணந வின்று
பரவியிமை யோர்சூழ நாடொறுமி சைந்து
பழநிமலை மீதோர்ப ராபரனி றைஞ்சு ...... பெருமாளே.
இரு கனக மா மேருவோ களப துங்க
கடி கடின பாடீர வார் அமுத கும்பம்
இணை சொல் இளநீரோ கர அசல இரண்டு குவடேயோ
இலகு மலரே வாளியாகிய அநங்கன்
அணி மகுடமோ தான் எனா மிக வளர்ந்த
இள முலை மி(ன்)னார் மோக மாயையில் விழுந்து தணியாமல்
பெருகி ஒரு காசே கொடாதவரை ஐந்து
தருவை நிகரே ஆகவே எதிர் புகழ்ந்து
பெரிய தமிழே பாடி நாள் தொறும் இரந்து நிலை காணாப்
பிணியின் அகமே ஆன பாழ் உடலை நம்பி
உயிரை அவமாய் நாடியே பவ(ம்) நிரம்பு
பிறவி தனிலே போக மீளவும் உழன்று திரிவேனோ
கருணை உமை மாதேவி காரணி அநந்த
சயன களி கூர் அரி சோதரி புர அந்த(க்)
கடவுளுடன் வாதாடு காளி மலை மங்கை அருள்பாலா
கருடனுடன் வீறு ஆன கேதனம் விளங்கு
மதிலினொடு மா மாட மேடைகள் துலங்கு
கலிசை வரு காவேரி சேவகனொடு அன்பு புரிவோனே
பரவை இடையே பாதக அசுரர் விழுந்து
கதறி இடவே பாதசாதனன் உ(ள்) நெஞ்சு
பலிதம் எனவே ஏகவே மயிலில் வந்த குமரேசா
பல மலர்களே தூவி ஆரண(ம்) நவின்று
பரவி இமையோர் சூழ நாள் தோறும் இசைந்து
பழநி மலை மீது ஓர் பராபரன் இறைஞ்சு பெருமாளே.
Add (additional) Audio/Video Link
118
பழநி இரு செப்பென தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்
திளகிப் புளகித் ...... திடுமாதர்
இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்
றிறுகக் குறுகிக் ...... குழல்சோரத்
தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்
தழுவிக் கடிசுற் ...... றணைமீதே
சருவிச் சருவிக் குனகித் தனகித்
தவமற் றுழலக் ...... கடவேனோ
அரிபுத் திரசித் தஜனுக் கருமைக்
குரியத் திருமைத் ...... துனவேளே
அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற்
றசுரக் கிளையைப் ...... பொருவோனே
பரிவுற் றரனுக் கருணற் பொருளைப்
பயனுற் றறியப் ...... பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் ...... பெருமாளே.
இரு செப்பு என வெற்பு என வட்டமும் ஒத்து
இளகிப் புளகித்திடு(ம்) மாதர்
இடையைச் சுமையைப் பெறுதற்கு உறவு உற்று
இறுகக் குறுகிக் குழல் சோரத்
தரு மெய்ச் சுவை உற்று இதழைப் பருகித்
தழுவிக் கடி சுற்று அணை மீதே
சருவிச் சருவிக் குனகித் தனகித்
தவம் அற்று உழலக் கடவேனோ
அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு
உரியத் திரு மைத்துன வேளே
அடல் குக்குட நல் கொடி பெற்று எதிர் உற்ற
அசுரக் கிளையைப் பொருவோனே
பரிவு உற்று அரனுக்கு அருள் நல் பொருளைப்
பயன் உற்று அறியப் பகர்வோனே
பவனப் புவனச் செறிவு உற்று உயர் மெய்ப்
பழநிக் குமரப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
119
பழநி இலகிய களப தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன ...... தனதான
இலகிய களபசு கந்த வாடையின்
ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ
இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை ...... யிதமாகக்
கலவியி லவரவர் தங்கள் வாய்தனி
லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள்
கசனையை விடுவது மெந்த நாளது ...... பகர்வாயே
சிலைதரு குறவர்ம டந்தை நாயகி
தினைவன மதனிலு கந்த நாயகி
திரள்தன மதனில ணைந்த நாயக ...... சிவலோகா
கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெ
அயிலயி லதனையு கந்த நாயக
குருபர பழநியி லென்று மேவிய ...... பெருமாளே.
இலகிய களப சுகந்த வாடையின்
ம்ருகமதம் அதனை மகிழ்ந்து பூசியெ
இலை சுருள் பிளவை அருந்தியே அதை இதமாகக்
கலவியில் அவர் அவர் தங்கள் வாய் தனில்
இடுபவர் பல பல சிந்தை மாதர்கள்
கசனையை விடுவதும் எந்த நாள் அது பகர்வாயே
சிலை தரு குறவர் மடந்தை நாயகி
தினை வனம் அதனில் உகந்த நாயகி
திரள் தனம் அதில் அணைந்த நாயக சிவலோகா
கொலைபுரி அசுரர் குலங்கள் மாளவே
அயில் அயில் அதனை உகந்த நாயக
குருபர பழநியில் என்றும் மேவிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link
120
பழநி இலகுகனி மிஞ்சு தனதனன தந்த தனதனன தந்த
தனதனன தந்த ...... தனதான
இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு
மிருவிழியெ னஞ்சு ...... முகமீதே
இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு
மிலகியக ரும்பு ...... மயலாலே
நிலவிலுடல் வெந்து கரியஅல மந்து
நெகிழுமுயிர் நொந்து ...... மதவேளால்
நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்த
நினைவொடுமி றந்து ...... படலாமோ
புலவினைய ளைந்து படுமணிக லந்து
புதுமலர ணிந்த ...... கதிர்வேலா
புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பை
பொரமுகையு டைந்த ...... தொடைமார்பா
பலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்த
பருமயில டைந்த ...... குகவீரா
பணைபணிசி றந்த தரளமணி சிந்து
பழநிமலை வந்த ...... பெருமாளே.
இலகு கனி மிஞ்சு(ம்) மொழி இரவு துஞ்சும்
இரு விழி என் நஞ்சு(ம்) முகம் மீதே
இசை முரல் சுரும்பு(ம்) இளமுலை அரும்பு(ம்)
இலகிய கரும்பும் மயலாலே
நிலவில் உடல் வெந்து கரிய அலமந்து
நெகிழும் உயிர் நொந்து மத வேளால்
நிலை அழியு(ம்) நெஞ்சில் அவர் குடி புகுந்த
நினைவொடும் இறந்து படலாமோ
புலவினை அளைந்து படு மணி கலந்து
புது மலர் அணிந்த கதிர் வேலா
புழுகு எழ மணந்த குற மகள் குரும்பை
பொர முகை உடைந்த தொடை மார்பா
பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த
பரு மயில் அடைந்த குக வீரா
பணை பணி சிறந்த தரள மணி சிந்து
பழநி மலை வந்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link
121
பழநி உயிர்க் கூடு தனத்தான தனதனன தனத்தான தனதனன
தனத்தான தனதனன ...... தனதான
உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்
ஒருக்காலு நெகிழ்வதிலை ...... யெனவேசூள்
உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியம
துடைத்தாய்பின் வருகுமவ ...... ரெதிரேபோய்ப்
பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபல
படப்பேசி யுறுபொருள்கொள் ...... விலைமாதர்
படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவு
பதத்தாள மயிலின்மிசை ...... வரவேணும்
தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்
தரத்தாடல் புரியுமரி ...... மருகோனே
தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல்
தநுக்கோடி வருகுழகர் ...... தருவாழ்வே
செயிற்சேல்வி ணுடுவினொடு பொரப்போய்வி மமர்பொருது
செயித்தோடி வருபழநி ...... யமர்வோனே
தினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவு
திருத்தோள அமரர்பணி ...... பெருமாளே.
உயிர்க் கூடு விடும் அளவும் உ(ம்)மைக் கூடி மருவு தொழில்
ஒருக்காலும் நெகிழ்வது இல்லை எனவே சூள்
உரைத்தே முன் மருவினரை வெறுத்து ஏம திரவியம்
அது உடைத்தாய் பின் வருகும் அவர் எதிரே போய்
பயில் பேசி இரவு பகல் அவர்க்கான பதமை பல
படப் பேசி உறு பொருள் கொள் விலைமாதர்
படப் பார வலை படுதல் தவிர்த்து ஆள மணி பொருவு
பதத்து ஆன மயிலின் மிசை வரவேணும்
தயிரச் சோரன் எனும் அவ் உரை வசைக் கோவ வனிதையர்கள்
தரத்து ஆடல் புரியும் அரி மருகோனே
தமிழ்க் காழி மருத வன மறைக்காடு திரு மருகல்
தனுக்கோடி வரு குழகர் தரு வாழ்வே
செயில் சேல் விண் உடுவினொடு பொரப் போய் வி(ம்)மு அமர் பொருது
செயித்து ஓடி வரு பழநி அமர்வோனே
தினைக் காவல் புரியவல குறப் பாவை முலை தழுவ
திரு தோள அமரர் பணி பெருமாளே.
Add (additional) Audio/Video Link
122
பழநி உலகபசு பாச தனதனன தான தந்த ...... தனதான
தனதனன தான தந்த ...... தனதான
உலகபசு பாச தொந்த ...... மதுவான
உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர்
மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே
சரவணப வாமு குந்தன் ...... மருகோனே
பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே
பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.
உலகபசு பாச தொந்தம் அதுவான
உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர்
மலசல சுவாச சஞ்சலம் அதால் என்
மதிநிலை கெடாமல் உன்றன் அருள்தாராய்
சலம் அறுகு பூளை தும்பை அணிசேயே
சரவணபவா முகுந்தன் மருகோனே
பலகலை சிவாகமங்கள் பயில்வோனே
பழநிமலை வாழ வந்த பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=UbFJuOOhwcc
Add (additional) Audio/Video Link
123
பழநி ஒருபொழுதும் இருசரண தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான
தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே
பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் ...... தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் ...... பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் ...... பெருமாளே
விருதுகவி விதரணவி நோதக் காரப் ...... பெருமாளே
விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே.
ஒருபொழுதும் இருசரண நேசத் தேவைத்து உணரேனே
உனது பழநி மலையெனும் ஊரை சேவித் தறியேனே
பெருபுவியில் உயர்வரிய வாழ்வைத் தீரக் குறியேனே
பிறவியற நினைகுவன் என்ஆசைப் பாடைத் தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் பெருமாளே
விருதுகவி விதரண விநோதக் காரப் பெருமாளே
விறன் மறவர் சிறுமி திருவேளைக் காரப் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=dN9hn8ezMA0
Add (additional) Audio/Video Link
124
பழநி ஒருவரை ஒருவர் தனதன தனன தான தனதன தனன தான
தனதன தனன தான ...... தனதான
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
ஒருகுண வழியு றாத ...... பொறியாளர்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
உறநம னரகில் வீழ்வ ...... ரதுபோய்பின்
வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
மறைவரி னனைய கோல ...... மதுவாக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத ...... மருள்வாயே
திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல்
திருவிழி யருள்மெய்ஞ் ஞான ...... குருநாதன்
திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத
திருநட மருளு நாத ...... னருள்பாலா
சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி
துகளெழ விடுமெய்ஞ் ஞான ...... அயிலோனே
சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி
தொழமுது பழநி மேவு ...... பெருமாளே.
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மத விசாரர்
ஒருகுண வழியு றாத பொறியாளர்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
உற நமன் நரகில் வீழ்வர் அதுபோய்பின்
வருமொரு வடிவ மேவி இருவினை கடலுள் ஆடி
மறைவர் இனனைய கோலம் அதுவாக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாதம் அருள்வாயே
திரிபுர மெரிய வேழ சிலைமதனெரிய மூரல்
திருவிழி யருள்மெய்ஞ் ஞானகுருநாதன்
திருசரஸ்வதி மயேசுவரியிவர் தலைவர் ஓத
திருநடம் அருளு நாத நாதன் அருள் பாலா
சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி
துகளெழ விடு மெய்ஞ் ஞான அயிலோனே
சுககுற மகள் மணாளனென மறை பலவு மோதி
தொழ முது பழநி மேவு பெருமாளே
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=WrIZAzj2aQs
Add (additional) Audio/Video Link
125
பழநி ஓடி ஓடி தான தான தனத்தன தத்தன
தான தான தனத்தன தத்தன
தான தான தனத்தன தத்தன ...... தனதான
ஓடி யோடி யழைத்துவ ரச்சில
சேடி மார்கள் பசப்பஅ தற்குமு
னோதி கோதி முடித்தவி லைச்சுரு ...... ளதுகோதி
நீடு வாச நிறைத்தஅ கிற்புழு
கோட மீது திமிர்த்தத னத்தினில்
நேச மாகி யணைத்தசி றுக்கிக ...... ளுறவாமோ
நாடி வாயும் வயற்றலை யிற்புன
லோடை மீதி னிலத்ததி வட்கையி
னாத கீத மலர்த்துளி பெற்றளி ...... யிசைபாடுங்
கோடு லாவி யமுத்துநி ரைத்தவை
காவுர் நாட தனிற்பழ நிப்பதி
கோதி லாத குறத்திய ணைத்தருள் ...... பெருமாளே.
ஓடி ஓடி அழைத்து வரச் சில
சேடிமார்கள் பசப்ப அதற்குமுன்
ஓதி கோதி முடித்த இலைச்சுருள் அது கோதி
நீடு வாச நிறைத்த அகிற்புழுகு
ஓட மீது திமிர்த்த தனத்தினில்
நேசமாகி அணைத்த சிறுக்கிகள் உறவாமோ
நாடி வாயும் வயல் தலையில் புனல்
ஓடை மீதி(ல்) நிலத்த திவட்கையி(ல்)
நாத கீத மலர்த்துளி பெற்று அளி இசைபாடும்
கோடு உலாவிய முத்து நிரைத்தவை
காவுர் நாடு அதனில் பழநிப்பதி
கோதிலாத குறத்தி அணைத்து அருள் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
126
பழநி கடலைச் சிறை தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற்
ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக்
கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் ...... பவனூணாக்
கருதிச் சருவிக் கயலைக் கயமுட்
படுவித் துழையைக் கவனத் தடைசிக்
கணையைக் கடைவித் துவடுத் தனையுப் ...... பினின்மேவி
அடலைச் செயல்சத் தியையக் கினியிற்
புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித்
தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித் ...... தசகோரம்
அலறப் பணிரத் நமணிக் குழையைச்
சிலுகிட் டுமையிட் டொளிவிட் டுமருட்
டுதலுற் றபொறிச் சியர்கட் கடையிற் ...... படுவேனோ
சடிலத் தவனிட் டவிசிட் டகுலத்
தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித்
தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் ...... பரிவாலே
சநகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யசநற்
குமரர்க் குமநுக் க்ரகமெய்ப் பலகைச்
சதுபத் துநவப் புலவர்க் கும்விபத் ...... தியில்ஞான
படலத் துறுலக் கணலக் யதமிழ்த்
த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப்
பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் ...... குருநாதா
பவளக் கொடிசுற் றியபொற் கமுகிற்
றலையிற் குலையிற் பலமுத் துதிர்செய்ப்
பழநிப் பதிவெற் பினில்நிற் குமரப் ...... பெருமாளே.
கடலைச் சிறை வைத்து மலர்ப் பொழிலில்
ப்ரமரத்தை உடல் பொறி இட்டு மடுக்
கமலத்தை மலர்த்தி விடத்தை இரப்பவன் ஊணாக்
கருதிச் சருவிக் கயலைக் கயம் உள்
படுவித்து உழையைக் கவனத்து அடைசிக்
கணையைக் கடைவித்து வடுத்தனை உப்பினின் மேவி
அடலைச் செயல் சத்தியை அக்கினியில்
புகுவித்து யம ப்ரபுவைத் துகைவித்து
அரி கட்கம் விதிர்த்து முறித்து மதித்த சகோரம்
அலறப் ப(ண்)ணி ரத்ந மணிக் குழையைச்
சிலுகிட்டு மை இட்டு ஒளி விட்டு மருட்டுதல்
உற்ற பொறிச்சியர்கள் கடையில் படுவேனோ
சடிலத்தவன் இட்ட சிட்ட குலத்து
ஒரு செட்டியிடத்தின் உதித்து அருள் வித்தக
ருத்ர ஜன்மப் பெயர் செப்பி இட பரிவாலே
சநகர்க்கும் அகஸ்த்ய புலஸ்த்ய சனக்
குமரர்க்கும் அநுக்ரக மெய்ப் பலகைச்
சது பத்து நவப் புலவர்க்கும் விபத்து இல் ஞான
படலத்து உறு லக்கண லக்ய தமிழ்த்
த்ரயம் அத்தில் அகப் பொருள் வ்ருத்தியினைப்
பழுது அற்று உணர்வித்து அருள்வித்த வித்தக சற்குருநாதா
பவளக் கொடி சுற்றிய பொன் கமுகின்
தலையில் குலையில் பல முத்து உதிர் செய்ப்
பழநிப்பதி வெற்பினில் நில் குமரப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
127
பழநி கடலை பொரியவரை தனன தனதனன தனன தனதனன
தனன தனதனன ...... தனதான
கடலை பொரியவரை பலக னிகழைநுகர்
கடின குடவுதர ...... விபரீத
கரட தடமுமத நளின சிறுநயன
கரிணி முகவரது ...... துணைவோனே
வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்
வலம்வ ருமரகத ...... மயில்வீரா
மகப திதருசுதை குறமி னொடிருவரு
மருவு சரசவித ...... மணவாளா
அடல சுரர்கள்குல முழுது மடியவுய
ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும்
அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு
மரக ரசரவண ...... பவலோலா
படல வுடுபதியை யிதழி யணிசடில
பசுப திவரநதி ...... அழகான
பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை
பழநி மலையில்வரு ...... பெருமாளே.
கடலை பொரியவரை பலகனி கழை நுகர்
கடின குட உதர விபரீத
கரட தட மு(ம்)மத நளின சிறுநயன
கரிணி முகவரது துணைவோனே
வடவரையின் முகடு அதிர ஒருநொடியில்
வலம்வரு மரகத மயில்வீரா
மகபதி தருசுதை குறமினொடு இருவரு
மருவு சரசவித மணவாளா
அடல் அசுரர்கள்குல முழுது மடிய
உயர்அமரர் சிறையைவிட எழில்மீறும்
அருண கிரணவொளி யொளிரும் அயிலை விடும்
அரகர சரவண பவலோலா
படல வுடுபதியை இதழி யணிசடில
பசுபதி வரநதி அழகான
பழ நிமலை அருள்செய மழலை மொழிமதலை
பழநி மலையில்வரு பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=pHc_AqtsMK8
Add (additional) Audio/Video Link
128
பழநி கதியை விலக்கு தனன தனத்த தாதத தனன தனத்த தானன
தனன தனத்த தானன ...... தனதான
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
கனத னவெற்பு மேல்மிகு ...... மயலான
கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய
கனதன மொத்த மேனியு ...... முகமாறும்
அதிப லவஜ்ர வாகுவும் அயில்நு னைவெற்றி வேலதும்
அரவு பிடித்த தோகையு ...... முலகேழும்
அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
அபிந வபத்ம பாதமு ...... மறவேனே
இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு
ரணமு கசுத்த வீரிய ...... குணமான
இளைய வனுக்கு நீண்முடி அரச துபெற்று வாழ்வுற
இதமொ டளித்த ராகவன் ...... மருகோனே
பதினொ ருருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை
பரிவொ டுநிற்கு மீசுர ...... சுரலோக
பரிம ளகற்ப காடவி அரிய ளிசுற்று பூவுதிர்
பழநி மலைக்குள் மேவிய ...... பெருமாளே.
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
கனதன வெற்பு மேல்மிகு மயலான
கவலை மனத்தனாகிலும் உனது ப்ரசித்த மாகிய
கனதன மொத்த மேனியும் முகமாறும்
அதிபல வஜ்ர வாகுவும் அயில்நுனை வெற்றி வேலதும்
அரவு பிடித்த தோகையும் உலகேழும்
அதிர அரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
அபிநவ பத்ம பாதமும் மறவேனே
இரவி குலத்தி ராசத மருவி எதிர்த்து வீழ்கடு
ரணமுக சுத்த வீரிய குணமான
இளையவ னுக்கு நீண்முடி அரசது பெற்று வாழ்வுற
இதமொடளித்த ராகவன் மருகோனே
பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை
பரிவொடு நிற்கும் ஈசுர சுரலோக
பரிமள கற்ப காடவி அரியளி சுற்று பூவுதிர்
பழநி மலைக்குள் மேவிய பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=sfchreS7B08
Add (additional) Audio/Video Link
129
பழநி கரிய பெரிய தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய ...... திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி ...... யெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவி ...... யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் ...... தரவேணும்
பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு ...... முருகோனே
பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழநி ...... யமர்வோனே
அரியு மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை ...... யெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய ...... பெருமாளே.
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொடு உயிர்கள்
கழிய முடுகி யெழுகாலம்
திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவி யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் தரவேணும்
பரிய வரையி னரிவை மருவ
பரம ரருளு முருகோனே
பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழநி யமர்வோனே
அரியு மயனும் வெருவ உருவ
அரிய கிரியை எறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=xuxOVW2SchM
Add (additional) Audio/Video Link
130
பழநி கரிய மேகமதோ தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன ...... தனதான
கரிய மேகம தோஇரு ளோகுழல்
அரிய பூரண மாமதி யோமுகம்
கணைகொ லோஅயில் வேலது வோவிழி ...... யிதழ்பாகோ
கமுகு தானிக ரோவளை யோகளம்
அரிய மாமல ரோதுளி ரோகரம்
கனக மேரது வோகுட மோமுலை ...... மொழிதேனோ
கருணை மால்துயி லாலிலை யோவயி
றிடைய தீரொரு நூலது வோவென
கனக மாமயில் போல்மட வாருடன் ...... மிகநாடி
கசட னாய்வய தாயொரு நூறுசெல்
வதனின் மேலென தாவியை நீயிரு
கமல மீதினி லேவர வேயருள் ...... புரிவாயே
திரிபு ராதிகள் நீறெழ வேமிக
மதனை யேவிழி யால்விழ வேசெயும்
சிவசொ ரூபம கேசுர னீடிய ...... தனயோனே
சினம தாய்வரு சூரர்கள் வேரற
அமரர் வானவர் வாடிடு தேவர்கள்
சிறைகள் மீளவு மேவடி வேல்விடு ...... முருகோனே
பரிவு சேர்கம லாலய சீதன
மருவு வார்திரு மாலரி நாரணர்
பழைய மாயவர் மாதவ னார்திரு ...... மருகோனே
பனக மாமணி தேவிக்ரு பாகரி
குமர னேபதி னாலுல கோர்புகழ்
பழநி மாமலை மீதினி லேயுறை ...... பெருமாளே.
கரிய மேகமதோ இருளோ குழல்
அரிய பூரண மாமதியோ முகம்
கணை கொலோ அயில் வேல் அதுவோ விழி இதழ் பாகோ
கமுகு தான் நிகரோ வளையோ களம்
அரிய மாமலரோ துளிரோ கரம்
கனக மேரு அதுவோ குடமோ முலை மொழி தேனோ
கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு
இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என
கனக மாமயில் போல் மடவாருடன் மிக நாடி
கசடனாய் வயதாய் ஒரு நூறு செல்
வதனின் மேல் எனது ஆவியை நீ இரு
கமல மீதினிலே வரவே அருள் புரிவாயே
திரி புராதிகள் நீறு எழவே மிக
மதனையே விழியால் விழவே செ(ய்)யும்
சிவ சொரூப மகேசுரன் நீடிய தனயோனே
சினமதாய் வரு சூரர்கள் வேர் அற
அமரர் வானவர் வாடிடு தேவர்கள்
சிறைகள் மீளவுமே வடிவேல் விடு(ம்) முருகோனே
பரிவு சேர் கமல ஆலய சீ தனம்
மருவுவார் திரு மால் அரி நாரணர்
பழைய மாயவர் மாதவனார் திரு மருகோனே
பனகமாம் அணி தேவி க்ருபை ஆகரி
குமரனே பதி நாலு உலகோர் புகழ்
பழநி மா மலை மீதினிலே உறை பெருமாளே.
Add (additional) Audio/Video Link
131
பழநி கரியிணை கோடென தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் ...... தனதான
கரியிணைக் கோடெனத் தனமசைத் தாடிநற்
கயல்விழிப் பார்வையிற் ...... பொருள்பேசிக்
கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற்
கலதியிட் டேயழைத் ...... தணையூடே
செருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற்
றிறமளித் தேபொருட் ...... பறிமாதர்
செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்
சிவபதத் தேபதித் ...... தருள்வாயே
திரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர்நகைச்
சிறிதருட் டேவருட் ...... புதல்வோனே
திரைகடற் கோவெனக் குவடுகட் டூள்படத்
திருடர்கெட் டோடவிட் ...... டிடும்வேலா
பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற்
படியினிட் டேகுரக் ...... கினமாடும்
பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப்
பரிவுறச் சேர்மணப் ...... பெருமாளே.
கரி இணைக் கோடு எனத் தனம் அசைத்து ஆடி நல்
கயல் விழிப் பார்வையில் பொருள் பேசி
கலை இழுத்தே குலுக்கென நகைத்தே மயல்
கலதி இட்டே அழைத்து அணை ஊடே
செருமி வித்தார சிற்றிடை துடித்து ஆட மல்
திறம் அளித்தே பொருள் பறி மாதர்
செயல் இழுக்காமல் இக் கலி யுகத்தே புகழ்ச்
சிவ பதத்தே பதித்து அருள்வாயே
திரி புரக் கோல வெற்பு அழல் கொளச் சீர் நகை
சிறிது அருள் தே(வு) அருள் புதல்வோனே
திரை கடல் கோ எனக் குவடுகள் தூள்படத்
திருடர் கெட்டு ஓட விட்டிடும் வேலா
பரிமளப் பாகலின் கனிகளைப் பீறி நல்
படியினில் இட்டே குரக்கினம் ஆடும்
பழநியில் சீர் உறப் புகழ் குறப் பாவையை
பரிவு உறச் சேர் மணப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
132
பழநி கருகி அகன்று தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தனதான
கருகிய கன்று வரிசெறி கண்கள்
கயல்நிக ரென்று ...... துதிபேசிக்
கலைசுரு ளொன்று மிடைபடு கின்ற
கடிவிட முண்டு ...... பலநாளும்
விரகுறு சண்ட வினையுடல் கொண்டு
விதிவழி நின்று ...... தளராதே
விரைகமழ் தொங்கல் மருவிய துங்க
விதபத மென்று ...... பெறுவேனோ
முருகக டம்ப குறமகள் பங்க
முறையென அண்டர் ...... முறைபேச
முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்ச
முரணசுர் வென்ற ...... வடிவேலா
பரிமள இன்ப மரகத துங்க
பகடித வென்றி ...... மயில்வீரா
பறிதலை குண்டர் கழுநிரை கண்டு
பழநிய மர்ந்த ...... பெருமாளே.
கருகி அகன்று வரி செறி கண்கள்
கயல் நிகர் என்று துதி பேசி
கலை சுருள் ஒன்று(ம்) மிடைபடுகின்ற
கடி விடம் உண்டு பல நாளும்
விரகு உறு சண்ட வினை உடல் கொண்டு
விதி வழி நின்று தளராதே
விரை கமழ் தொங்கல் மருவிய துங்க
இத பதம் என்று பெறுவேனோ
முருக கடம்ப குறமகள் பங்க
முறை என அண்டர் முறை பேச
முது திரை ஒன்ற வரு திறல் வஞ்ச
முரண் அசுர் வென்ற வடிவேலா
பரிமள இன்ப மரகத துங்க
பகடு இதம் வென்றி மயில் வீரா
பறி தலை குண்டர் கழு நிரை கண்டு
பழநி அமர்ந்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link
133
பழநி கருப்புவிலில் தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தனத்ததன
தனத்தனா தனதன ...... தனதான
கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய
கடைக்கணொடு சிரித்தணுகு
கருத்தினால் விரகுசெய் ...... மடமாதர்
கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை
கனத்தவிரு தனத்தின்மிசை
கலக்குமோ கனமதில் ...... மருளாமே
ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி
யுனைப்புகழு மெனைப்புவியில்
ஒருத்தனாம் வகைதிரு ...... அருளாலே
உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகி
யுரைக்கமறை யடுத்துபொருள்
உணர்த்துநா ளடிமையு ...... முடையேனோ
பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு
படிக்கடலு மலைக்கவல
பருத்ததோ கையில்வரு ...... முருகோனே
பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல
பணிப்பனிரு புயச்சயில
பரக்கவே இயல்தெரி ...... வயலூரா
திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை
செயித்தருளு மிசைப்பிரிய
திருத்தமா தவர்புகழ் ...... குருநாதா
சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்
திருப்பழநி மலைக்குளுறை
திருக்கைவே லழகிய ...... பெருமாளே.
கருப்பு வி(ல்)லில் மருப் பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய
கடைக் க(ண்)ணொடு சிரித்து அணுகு
கருத்தினால் விரகு செய் மடமாதர்
கதக் களிறு திடுக்கம் உற மதர்த்து மிக எதிர்த்து மலை
கனத்த இரு தனத்தின் மிசை
கலக்கும் மோகனம் அதில் மருளாதே
ஒருப் படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து அருளி
உனைப் புகழும் எனைப் புவியில்
ஒருத்தனாம் வகை திரு அருளாலே
உருத்திரனும் விருத்தி பெற அனுக்கிரகி எனக் குறுகி
உரைக்க அ(ம்) மறை அடுத்து பொருள்
உணர்த்தும் நாள் அடிமையும் உடையேனோ
பருப்பதமும் உருப் பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு
படிக் கடலும் அலைக்க வ(ல்)ல
பருத்த தோகையில் வரு முருகோனே
பதித்த மரகதத்தினுடன் இரத்னமணி நிரைத்த பல
பணிப் ப(ன்)னிரு புயச் சயில
பரக்கவே இயல் தெரி வயலூரா
திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப் பகைமை
செயித்தருளும் இசைப் பிரிய
திருத்த மாதவர் புகழ் குருநாதா
சிலைக் குறவர் இலைக் குடிலில் புகைக் களக முகில் புடை செல்
திருப் பழநி மலைக்குள் உறை
திருக்கை வேல் அழகிய பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=agV-V-899as
Add (additional) Audio/Video Link
134
பழநி கருவின் உருவாகி தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று ...... மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.
கருவினுரு வாகி வந்து வயதளவிலே வளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து மதனாலே
கரியகுழல் மாதர் தங்கள் அடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து மிகவாடி
அரஹரசி வாய வென்று தினமும்நினை யாமல் நின்று
அறுசமய நீதி ஒன்றும் அறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாணம் இன்றி அழிவேனோ
உரகபட மேல் வளர்ந்த பெரியபெரு மாள் அரங்கர்
உலகளவு மால் மகிழ்ந்த மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரில் அன்று வருவோனே
பரவை மனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனருளால் வளர்ந்த குமரேசா
பகை அசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழனிமலை மீதில் நின்ற பெருமாளே.
Audio/Video Link(s)
http://kaumaram.com/thiru/nnt0134_u.html#audio
https://www.youtube.com/watch?v=oWDPqe7Dqno
https://www.youtube.com/watch?v=w-nAex31Hp0
Add (additional) Audio/Video Link
135
பழநி கலக வாள்விழி தனன தானன தானா தானா
தனன தானன தானா தானா
தனன தானன தானா தானா ...... தனதான
கலக வாள்விழி வேலோ சேலோ
மதுர வாய்மொழி தேனோ பாலோ
கரிய வார்குழல் காரோ கானோ ...... துவரோவாய்
களமு நீள்கமு கோதோள் வேயோ
உதர மானது மாலேர் பாயோ
களப வார்முலை மேரோ கோடோ ...... இடைதானும்
இழைய தோமலர் வேதா வானோ
னெழுதி னானிலை யோவாய் பேசீ
ரிதென மோனமி னாரே பாரீ ...... ரெனமாதர்
இருகண் மாயையி லேமூழ் காதே
யுனது காவிய நூலா ராய்வே
னிடர்ப டாதருள் வாழ்வே நீயே ...... தரவேணும்
அலைவி லாதுயர் வானோ ரானோர்
நிலைமை யேகுறி வேலா சீலா
அடியர் பாலரு ளீவாய் நீபார் ...... மணிமார்பா
அழகு லாவுவி சாகா வாகா
ரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வா
ரயலு லாவிய சீலா கோலா ...... கலவீரா
வலபை கேள்வர்பி னானாய் கானார்
குறவர் மாதும ணாளா நாளார்
வனச மேல்வரு தேவா மூவா ...... மயில்வாழ்வே
மதுர ஞானவி நோதா நாதா
பழநி மேவுகு மாரா தீரா
மயுர வாகன தேவா வானோர் ...... பெருமாளே.
கலக வாள் விழி வேலோ சேலோ
மதுர வாய் மொழி தேனோ பாலோ
கரிய வார் குழல் காரோ கானோ துவரோ வாய்
களமும் நீள் கமுகோ தோள் வேயோ
உதரமானது மால் ஏர் பாயோ
களப வார் முலை மேரோ கோடோ இடை தானும்
இழையதோ மலர் வேதாவானோன்
எழுதினான் இலையோ வாய் பேசீர்
இது என மோனம் மினாரே பாரீர் என மாதர்
இரு கண் மாயையிலே மூழ்காதே
உனது காவிய நூல் ஆராய்வேன்
இடர் படாது அருள் வாழ்வே நீயே தர வேணும்
அலைவு இலாது உயர் வானோர் ஆனோர்
நிலைமையே குறி வேலா சீலா
அடியவர் பால் அருள் ஈவாய் நீப ஆர் மணி மார்பா
அழகு உலாவு விசாகா வாகு
ஆர் இப மினாள் மகிழ் கேள்வா தாழ்வார்
அயல் உலாவிய சீலா கோலாகல வீரா
வலபை கேள்வர் பின் ஆனாய் கான் ஆர்
குறவர் மாது மணாளா< நாள் ஆர்
வனச மேல் வரு தேவா மூவா மயில் வாழ்வே
மதுர ஞான வினோதா நாதா
பழநி மேவு குமாரா தீரா
மயுர வாகன தேவா வானோர் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
136
பழநி கலகக் கயல்விழி தனனத் தனதன தானன தானன
தனனத் தனதன தானன தானன
தனனத் தனதன தானன தானன ...... தனதான
கலகக் கயல்விழி போர்செய வேள்படை
நடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள்
கனியக் கனியவு மேமொழி பேசிய ...... விலைமாதர்
கலவித் தொழினல மேயினி தாமென
மனமிப் படிதின மேயுழ லாவகை
கருணைப் படியெனை யாளவு மேயருள் ...... தரவேணும்
இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகி
குழையத் தழுவிய மேன்மையி னாலுயர்
இசைபெற் றருளிய காமுக னாகிய ...... வடிவோனே
இதமிக் கருமறை வேதிய ரானவர்
புகலத் தயவுட னேயருள் மேன்மைகள்
இசையத் தருமநு கூலவ சீகர ...... முதல்வோனே
நிலவைச் சடைமிசை யேபுனை காரணர்
செவியிற் பிரணவ மோதிய தேசிக
நிருதர்க் கொருபகை யாளியு மாகிய ...... சுடர்வேலா
நிமலக் குருபர ஆறிரு பார்வையும்
அருளைத் தரஅடி யார்தமை நாடொறும்
நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு ...... முரியோனே
பலவிற் கனிபணை மீறிய மாமர
முருகிற் கனியுட னேநெடு வாளைகள்
பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய ...... வகையாலே
பழனத் துழவர்க ளேரிட வேவிளை
கழனிப் புரவுகள் போதவு மீறிய
பழநிச் சிவகிரி மீதினி லேவளர் ...... பெருமாளே.
கலகக் கயல் விழி போர் செய வேள் படை
நடுவில் புடை வரு பாபிகள் கோபிகள்
கனியக் கனியவுமே மொழி பேசிய விலைமாதர்
கலவித் தொழில் நலமே இனிது ஆம் என
மனம் இப்படியே தினமே உழலா வகை
கருணைப் படி எனை ஆளவுமே அருள் தர வேணும்
இலவுக் கிளை எனும் வாய் வ(ள்)ளி நாயகி
குழையத் தழுவிய மேன்மையினால் உயர்
இசை பெற்று அருளிய காமுகனாகிய வடிவோனே
இதம் மிக்க அரு மறை வேதியர் ஆனவர்
புகலத் தயவுடனே அருள் மேன்மைகள்
இசையத் தரும் அநுகூல வசீகர முதல்வோனே
நிலவைச் சடை மிசையே புனை காரணர்
செவியில் பிரணவம் ஓதிய தேசிக
நிருதர்க்கு ஒரு பகையாளியும் ஆகிய சுடர்வேலா
நிமலக் குருபர ஆறு இரு பார்வையும்
அருளைத் தர அடியார் தமை நாள் தொறும்
நிகர் அற்றவர் எனவே மகிழ் கூர் தரும் உரியோனே
பலவின் கனி பணை மீறிய மா மர
முருகின் கனியுடனே நெடு வாளைகள்
பரவித் தனி உதிர் சோலைகள் மேவிய வகையாலே
பழனத்து உழவர்கள் ஏரிடவே விளை
கழனிப் புரவிகள் போதவும் மீறிய
பழனிச் சிவகிரி மீதினிலே வளர் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
137
பழநி கலவியி லிச்சி தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
கலவியி லிச்சித் திரங்கி நின்றிரு
கனதனம் விற்கச் சமைந்த மங்கையர்
கயல்கள்சி வப்பப் பரிந்து நண்பொடு ...... மின்பமூறிக்
கனியித ழுற்றுற் றருந்தி யங்குறு
மவசமி குத்துப் பொருந்தி யின்புறு
கலகம்வி ளைத்துக் கலந்து மண்டணை ...... யங்கமீதே
குலவிய நற்கைத் தலங்கொ டங்கணை
கொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல்
குழலள கக்கட் டவிழ்ந்து பண்டையி ...... லங்கம்வேறாய்க்
குறிதரு வட்டத் தடர்ந்த சிந்துர
முகதல முத்துப் பொலிந்தி லங்கிட
கொடியம யற்செய்ப் பெருந்த டந்தனில் ...... மங்கலாமோ
இலகிய சித்ரப் புனந்த னிந்துறை
குறமகள் கச்சுக் கிடந்த கொங்கைமி
னினிதுறு பத்மப் பதம்ப ணிந்தருள் ...... கந்தவேளே
எழுகடல் வற்றப் பெருங்கொ டுங்கிரி
யிடிபட மிக்கப் ப்ரசண்டம் விண்டுறு
மிகலர்ப தைக்கத் தடிந்தி லங்கிய ...... செங்கைவேலா
பலவித நற்கற் படர்ந்த சுந்தரி
பயில்தரு வெற்புத் தருஞ்செ ழுங்கொடி
பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறு ...... கின்றபாலைப்
பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்
பகரென இச்சித் துகந்து கொண்டருள்
பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே.
கலவியில் இச்சித்து இரங்கி நின்று இரு
கன தனம் விற்கச் சமைந்த மங்கையர்
கயல்கள் சிவப்பப் பரிந்து நண்பொடும் இன்பம் ஊறி
கனி இதழ் உற்று உற்று அருந்தி அங்கு உறும்
அவசம் மிகுத்துப் பொருந்தி இன்புறும்
கலகம் விளைத்துக் கலந்து மண்டு அணை அங்கம் மீதே
குலவிய நல் கைத்தலம் கொ(ண்)டு அங்கு அணை
கொடி இடை மெத்தத் துவண்டு தண் புயல்
குழல் அளகக் கட்டு அவிழ்ந்து பண்டையில் அங்கம் வேறாய்
குறி தரு வட்டத்து அடர்ந்த சிந்துர
முக தல முத்துப் பொலிந்து இலங்கிட
கொடிய மயல் செய்ப் பெரும் தடம் தனில் மங்கலாமோ
இலகிய சித்ரப் புனம் தனிந்து உறை
குறமகள் கச்சுக் கிடந்த கொங்கை மின்
இனிது உறு பத்மப் பதம் பணிந்து அருள் கந்தவேளே
எழு கடல் வற்றப் பெரும் கொடும் கிரி
இடி பட மிக்கப் ப்ரசண்டம் விண்டு உறும்
இகலர் பதைக்கத் தடிந்து இலங்கிய செம் கை வேலா
பலவித நல் கற்பு அடர்ந்த சுந்தரி
பயில் தரு வெற்புத் தரும் செழும் கொடி
பணை முலை மெத்தப் பொதிந்து பண்பு உறுகின்ற பாலை
பல திசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்
பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள்
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
138
பழநி கலை கொடு தனதனன தத்த தான தனதனன தத்த தான
தனதனன தத்த தான ...... தனதான
கலைகொடுப வுத்தர் காம கருமிகள்து ருக்கர் மாய
கபிலர்பக ரக்க ணாதர் ...... உலகாயர்
கலகமிடு தர்க்கர் வாம பயிரவர்வி ருத்த ரோடு
கலகலென மிக்க நூல்க ...... ளதனாலே
சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி
தெரிவரிய சித்தி யான ...... வுபதேசந்
தெரிதரவி ளக்கி ஞான தரிசநம ளித்து வீறு
திருவடியெ னக்கு நேர்வ ...... தொருநாளே
கொலையுறஎ திர்த்த கோர இபமுகஅ ரக்க னோடு
குரகதமு கத்தர் சீய ...... முகவீரர்
குறையுடலெ டுத்து வீசி யலகையொடு பத்ர காளி
குலவியிட வெற்றி வேலை ...... விடுவோனே
பலமிகுபு னத்து லாவு குறவநிதை சித்ர பார
பரிமளத னத்தில் மேவு ...... மணிமார்பா
படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு
பழநிமலை யுற்ற தேவர் ...... பெருமாளே.
கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய
கபிலர் பகர் அக்கணாதர் உலகாயர்
கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு
கலகல என மிக்க நூல்கள் அதனாலே
சிலுகி எதிர் குத்தி வாது செயவும் ஒருவர்க்கு(ம்) நீதி
தெரிவரிய சித்தியான உபதேசம்
தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு
திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே
கொலை உற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு
குரகத முகத்தர் சீய முக வீரர்
குறை உடல் எடுத்து வீசி அலகையொடு பத்ர காளி
குலவியிட வெற்றி வேலை விடுவோனே
பலம் மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார
பரிமள தனத்தில் மேவு மணிமார்பா
படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு
பழநி மலை உற்ற தேவர் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
139
பழநி களப முலையை தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்த
தனதனன தத்த தந்த ...... தனதான
களபமுலை யைத்தி றந்து தளவநகை யைக்கொ ணர்ந்து
கயலொடுப கைத்த கண்கள் ...... குழைதாவக்
கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழ்ந்து
கடியிருளு டுக்கு லங்க ...... ளெனவீழ
முழுமதியெ னச்சி றந்த நகைமுகமி னுக்கி யின்ப
முருகிதழ்சி வப்ப நின்று ...... விலைகூறி
முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்து
முடுகுமவ ருக்கி ரங்கி ...... மெலிவேனோ
இளமதிக டுக்கை தும்பை அரவணிப வர்க்கி சைந்து
இனியபொரு ளைப்ப கர்ந்த ...... குருநாதா
இபமுகவ னுக்கு கந்த இளையவம ருக்க டம்ப
எனதுதலை யிற்ப தங்க ...... ளருள்வோனே
குழகெனஎ டுத்து கந்த உமைமுலைபி டித்த ருந்து
குமரசிவ வெற்ப மர்ந்த ...... குகவேலா
குடிலொடுமி கச்செ றிந்த இதணுளபு னத்தி ருந்த
குறவர்மக ளைப்பு ணர்ந்த ...... பெருமாளே.
களப முலையைத் திறந்து தளவ நகையைக் கொணர்ந்து
கயலொடு பகைத்த கண்கள் குழை தாவ
கரிய குழலைப் பகிர்ந்து மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து
கடி இருள் உடுக் குலங்கள் என வீழ
முழு மதி எனச் சிறந்த நகை முக(ம்) மினுக்கி இன்ப
முருகு இதழ் சிவப்ப நின்று விலை கூறி
முதல் உளது கைப் புகுந்து அழகு துகிலைத் திறந்து
முடுகும் அவருக்கு இரங்கி மெலிவேனோ
இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து
இனிய பொருளைப் பகர்ந்த குரு நாதா
இப முகவனுக்கு உகந்த இளையவ மருக் கடம்ப
எனது தலையில் பதங்கள் அருள்வோனே
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து
குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா
குடிலொடு மிகச் செறிந்த இதண் உ(ள்)ள புனத்து இருந்த
குறவர் மகளைப் புணர்ந்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link
140
பழநி கறுத்த குழலணி தனத்த தனதன தனதன தந்தத்
தனத்த தனதன தனதன தந்தத்
தனத்த தனதன தனதன தந்தத் ...... தனதான
கறுத்த குழலணி மலரணி பொங்கப்
பதித்த சிலைநுத லணிதில தம்பொற்
கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச் ...... சிரமான
கழுத்தி லுறுமணி வளைகுழை மின்னக்
குவட்டு முலையசை படஇடை யண்மைக்
கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக் ...... கொடிபோலச்
சிறுத்த களமிகு மதமொழு கின்சொற்
குயிற்க ளெனமட மயிலெகி னங்கட்
டிருக்கு நடைபழ கிகள்கள பங்கச் ...... சுடைமாதர்
திகைத்த தனமொடு பொருள்பறி யொண்கட்
குவட்டி யவர்வலை யழலுறு பங்கத்
திடக்கு தலைபுலை யவர்வழி யின்பைத் ...... தவிர்வேனோ
பறித்த விழிதலை மழுவுழை செங்கைச்
செழித்த சிவபர னிதழிநல் தும்பைப்
படித்த மதியற லரவணி சம்புக் ...... குருநாதா
பருத்த அசுரர்க ளுடன்மலை துஞ்சக்
கொதித்த அலைகட லெரிபட செம்பொற்
படைக்கை மணியயில் விடுநட னங்கொட் ...... கதிர்வேலா
தெறித்து விழியர வுடல்நிமி ரம்பொற்
குவட்டொ டிகைகிரி பொடிபட சண்டச்
சிறப்பு மயில்மிசை பவுரிகொ ளும்பொற் ...... றிருபாதா
சிறக்கு மழகிய திருமகள் வஞ்சிக்
குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச்
சிலைக்கு ளணைகுக சிவமலை கந்தப் ...... பெருமாளே.
கறுத்த குழல் அணி மலர் அணி பொங்கப்
பதித்த சிலை நுதல் அணி திலதம் பொன்
கணைக்கு நிகர் விழி சுழல் எழு கஞ்சம் சிரம் ஆன
கழுத்தில் உறு மணி வளை குழை மின்னக்
குவட்டு முலை அசை பட இடை அண்மைக்கு
அமைத்த கலை இறுகுறு துவள் வஞ்சிக் கொடி போல
சிறுத்த களம் மிகு மதம் ஒழுகு இன் சொல்
குயில்கள் என மட மயில் எகினங்கள்
திருக்கு நடை பழகிகள் களபம் கச்சுடை மாதர்
திகைத்த தனமொடு பொருள் பறி ஒண் கண்
குவட்டி அவர் வலை அழல் உறு பங்கத்
திடக்குதலை புலையவர் வழி இன்பைத் தவிர்வேனோ
பறித்த விழி தலை மழு உழை செம் கைச்
செழித்த சிவ பரன் இதழி நல் தும்பைப்
படித்த மதி அறல் அரவு அணி சம்புக் குரு நாதா
பருத்த அசுரர்கள் உடன் மலை துஞ்சக்
கொதித்த அலை கடல் எரி பட செம் பொன்
படைக் கை மணி அயில் விடு நடனம் கொள் கதிர் வேலா
தெறித்து விழி அர(வு) உடல் நிமிர அம் பொன்
குவட்டு ஒள் திகை கிரி பொடி பட சண்டச்
சிறப்பு மயில் மிசை பவுரி கொளும் பொன் திரு பாதா
சிறக்கும் அழகிய திரு மகள் வஞ்சிக்
குறத்தி மகள் உமை மருமகள் கொங்கைச்
சிலைக்குள் அணை குக சிவ மலை கந்தப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
141
பழநி கனக கும்பம் தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன ...... தந்ததான
கனக கும்பமி ரண்டு நேர்மலை
யெனநெ ருங்குகு ரும்பை மாமணி
கதிர்சி றந்தவ டங்கு லாவிய ...... முந்துசூதம்
கடையில் நின்றுப ரந்து நாடொறு
மிளகி விஞ்சியெ ழுந்த கோமள
களப குங்கும கொங்கை யானையை ...... யின்பமாக
அனைவ ருங்கொளு மென்று மேவிலை
யிடும டந்தையர் தங்கள் தோதக
மதின்ம ருண்டுது வண்ட வாசையில் ...... நைந்துபாயல்
அவச மன்கொளு மின்ப சாகர
முழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழி
தருப தங்கதி யெம்பி ரானருள் ...... தந்திடாயோ
தனத னந்தன தந்த னாவென
டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை
தகுதி திந்திகு திந்த தோவென ...... வுந்துதாளந்
தமர சஞ்சலி சஞ்ச லாவென
முழவு டுண்டுடு டுண்டு டூவென
தருண கிண்கிணி கிண்கி ணாரமு ...... முந்தவோதும்
பணிப தங்கய மெண்டி சாமுக
கரிய டங்கலு மண்ட கோளகை
பதறி நின்றிட நின்று தோதக ...... என்றுதோகை
பவுரி கொண்டிட மண்டி யேவரு
நிசிச ரன்கிளை கொன்ற வேலவ
பழநி யங்கிரி யின்கண் மேவிய ...... தம்பிரானே.
கனக கும்பம் இரண்டும் நேர் மலை
என நெருங்கு குரும்பை மா மணி
கதிர் சிறந்த வடம் குலாவிய முந்து சூதம்
கடையில் நின்று பரந்து நாள் தொறும்
இளகி விஞ்சி எழுந்த கோமள
களப குங்கும கொங்கை யானையை இன்பமாக
அனைவரும் கொளும் என்றுமே விலை
இடும் மடந்தையர் தங்கள் தோதகம்
அதின் மருண்டு துவண்டு அ(வ்)வாசையில் நைந்து பாயல்
அவசம் மன் கொளும் இன்ப சாகர(ம்)
முழுகும் வஞ்சக நெஞ்சையே ஒழி
தரு(ம்) பதம் கதி எம்பிரான் அருள் தந்திடாயோ
தனதனந்தன தந்தனாவென
டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை
தகுதி திந்திகு திந்த தோவென உந்து தாளம்
தமர சஞ்சலி சஞ்சலா என
முழவு டுண்டுடு டுண்டு டூவென
தருண கிண்கிணி கிண்கிண் ஆரமு(ம்) முந்த ஓதும்
பணி பதம் கயம் எண் திசாமுக
கரி அடங்கலும் அண்ட கோளகை
பதறி நின்றிட நின்று தோ தக என்று தோகை
பவுரி கொண்டிட மண்டியே வரும்
நிசிசரன் கிளை கொன்ற வேலவ
பழநி அம் கிரியின் கண் மேவிய தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
142
பழநி கனத்திறுகி தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
கனத்திறுகிப் பெருத்திளகிப்
பணைத்துமணத் திதத்துமுகக்
கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் ...... தலமேராய்
கவட்டையுமெத் தடக்கிமதர்த்
தறக்கெருவித் திதத்திடுநற்
கலைச்சவுளித் தலைக்குலவிக் ...... களிகூருந்
தனத்தியர்கட் கிதத்துமிகுத்
தனற்குண்மெழுக் கெனப்புவியிற்
றவித்திழிசொற் பவக்கடலுற் ...... றயர்வாலே
சலித்தவெறித் துடக்குமனத்
திடக்கனெனச் சிரிக்கமயற்
சலத்தின்வசைக் கிணக்கமுறக் ...... கடவேனோ
புனத்தின்மலைக் குறத்தியுயர்த்
திருக்குதனக் குடத்தினறைப்
புயத்தவநற் கருத்தையுடைக் ...... குகவீரா
பொருப்பரசற் கிரக்கமொடுற்
றறற்சடிலத் தவச்சிவனிற்
புலச்சிதனக் கிதத்தைமிகுத் ...... திடுநாதா
சினத்தெதிர்துட் டரக்கர்தமைத்
திகைத்துவிழக் கணப்பொழுதிற்
சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத் ...... துடையோனே
செருக்கொடுநற் றவக்கமலத்
தயற்குமரிக் கருட்புரிசைத்
திருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே.
கனத்து இறுகிப் பெருத்து இளகிப் பணைத்து மணத்து
இதத்து முகக் கறுப்பு மிகுத்து அடர்த்து நிகர் தல(ம்) மேரு
ஆய்
கவட்டையும் மெத்து அடக்கி மதர்த்து அறக் கெருவித்து
இதத்திடு நல் கலைச் சவுளித் தலைக் குலவிக் களி
கூரும்தனத்தியர் கட்கு இதத்து மிகுத்து
அனற்கு உள் மெழுக்கு எனப் புவியில் தவித்து இழி சொல்
பவக் கடல் உற்ற அயர்வாலே சலித்த வெறித் துடக்கு மனத்து
இடக்கன் எனச் சிரிக்க மயல் சலத்தின் வசைக்கு இணக்கம்
உறக் கடவேனோ
புனத்தின் மலைக் குறத்தி உயர்த் திருக்கு தனக் குடத்தின்
நறைப் புயத்தவ நல் கருத்தை உடைக் குக வீரா
பொருப்பு அரசற்கு இரக்கமொடு உற்ற அறல் சடிலத்த அச்
சிவனில் புலச்சி தனக்கு இதத்தை மிகுத்திடு நாதா
சினத்து எதிர் துட்ட அரக்கர் தமைத் திகைத்து விழக் கணப்
பொழுதில் சிதைத்திடு நல் கதிர்க் கை படைத்து
உடையோனே
செருக்கொடு நல் தவக் கமலத்து அயற்கும் அரிக்கு(ம்) அருள்
புரிசைத் திருப் பழநிக் கிரிக் குமரப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
143
பழநி கனமாய் எழுந்து தனனா தனந்தனத் தனனா தனந்தனத்
தனனா தனந்தனத் ...... தனதான
கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்
புரமா ரணந்துளுத் ...... திடுமானார்
கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப்
பொருளே யிழந்துவிட் ...... டயர்வாயே
மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட்
டறவே யுலந்துசுக் ...... கதுபோலே
வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப்
பெனவே நினைந்துனைப் ...... புகழ்வேனோ
புனவே டர்தந்தபொற் குறமா துஇன்புறப்
புணர்கா தல்கொண்டஅக் ...... கிழவோனே
புனலே ழுமங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட்
டெழவே லெறிந்தவுக் ...... கிரவீரா
தினமே வுகுங்குமப் புயவா சகிண்கிணிச்
சிறுகீ தசெம்பதத் ...... தருளாளா
சிவலோ கசங்கரிக் கிறைபால பைங்கயத்
திருவா வினன்குடிப் ...... பெருமாளே.
கனமாய் எழுந்து வெற்பு எனவே உயர்ந்து கற்புர மாரணம்
துளுத்திடு மானார்
கனி வாய் உகந்து சிக்கெனவே அணைந்து
கைப்பொருளே இழந்து விட்டு அயர்வாயே மனமே
தளர்ந்து
விக்கலுமே எழுந்து மட்டு அறவே உலந்து சுக்கு அது
போலே வசமே அழிந்து உக்கிடு நோய் துறந்து
வைப்பு எனவே நினைந்து உனைப் புகழ்வேனோ
புன வேடர் தந்த பொன் குற மாது இன்புறப் புணர் காதல்
கொண்ட அக் கிழவோனே
புனல் ஏழும் மங்க வெற்பொடு சூர் சிரங்கள் பொட்டு
எழ வேல் எறிந்த உக்கிர வீரா
தின மேவு குங்குமப் புய வாச கிண்கிணிச் சிறு கீத
செம் பதத்து அருளாளா
சிவ லோக சங்கரிக்கு இறை பால பைங்கயத்
திருவாவினன்குடிப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
144
பழநி கார் அணிந்த தான தந்ததனத் தான தந்ததனத்
தான தந்ததனத் ...... தனதான
கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக்
காதல் நெஞ்சயரத் ...... தடுமாறிக்
கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க்
காய மொன்றுபொறுத் ...... தடியேனும்
தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச்
சாப மொன்றுநுதற் ...... கொடியார்தம்
தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத்
தாழ்வ டைந்துலையத் ...... தகுமோதான்
சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத்
தோய முஞ்சுவறப் ...... பொரும்வேலா
தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச்
சூழ்பெ ருங்கிரியிற் ...... றிரிவோனே
ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற்
றால முண்டவருக் ...... குரியோனே
ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற்
றாவி னன்குடியிற் ...... பெருமாளே.
கார் அணிந்த வரைப் பார் அடர்ந்து
வினைக் காதல் நெஞ்சு அயரத் தடுமாறி
கால் நரம்பு உதிரத் தோல் வழும்பு உறு பொய்க் காயம் ஒன்று
பொறுத்து அடியேனும்
தார் இணங்கு குழல் கூர் அணிந்த விழிச் சாபம் ஒன்று நுதல்
கொடியார் தம்
தாள் பணிந்து அவர் பொன் தோள் விரும்பி மிகத் தாழ்வு
அடைந்து உலையத் தகுமோ தான்
சூரன் அங்கம் விழத் தேவர் நின்று தொழத் தோயமும்
சுவறப் பொரும் வேலா
தூய்மை கொண்ட குறத் தோகை நின்ற புனம் சூழ் பெரும்
கிரியில் திரிவோனே
ஆரணன் கருடக் கேதனன் தொழ முற்று ஆலம்
உண்டவருக்கு உரியோனே
ஆலையும் பழனச் சோலையும் புடை சுற்று ஆவினன்குடியிற்
பெருமாளே. Add (additional) Audio/Video Link
145
பழநி குரம்பை மலசலம் தனந்த தனதன தனதன தனதன
தனந்த தனதன தனதன தனதன
தனந்த தனதன தனதன தனதன ...... தனதான
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல ...... கசுமாலக்
குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர்
இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள்
குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை ...... விறலான
சரம்ப ருறவனை நரகனை துரகனை
இரங்கு கலியனை பரிவுறு சடலனை
சவுந்த ரிகமுக சரவண பதமொடு ...... மயிலேறித்
தழைந்த சிவசுடர் தனையென மனதினில்
அழுந்த வுரைசெய வருமுக நகையொளி
தழைந்த நயனமு மிருமலர் சரணமு ...... மறவேனே
இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி
லுறைந்த குயிலளி யொலிபர விடமயி
லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் ...... வளநாடா
இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக
டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக
இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் ...... விடும்வேளே
சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள்
அரம்பை மகளிரொ டரகர சிவசிவ
செயம்பு வெனநட மிடுபத மழகியர் ...... குருநாதா
செழும்ப வளவொளி நகைமுக மதிநகு
சிறந்த குறமக ளிணைமுலை புதைபட
செயங்கொ டணைகுக சிவமலை மருவிய ...... பெருமாளே.
குரம்பை மல(ம்) சலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணி சரி தசை இரல் குடல் நெதி
குலைந்த செயிர் மயிர் குருதியொடு இவை பல கசுமாலம்
குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர்
இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள்
குரங்கர் அறிவிலர் நெறி இலர் மிருகணை விறல் ஆன
சரம்பர் உறவனை நரகனை துரகனை
இரங்கு கலியனை பரிவு உறு சடலனை
சவுந்தரிக முக சரவண பதமொடு மயிலேறி
தழைந்த சிவ சுடர் தனை என் மனதினில்
அழுந்த உரை செய வரு முக நகை ஒளி
தழைந்த நயனமும் இரு மலர் சரணமும் மறவேனே
இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில்
உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில்
இசைந்து நடமிடும் இணையிலி புலி நகர் வள நாடா
இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு
எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக
இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே
சிரம் பொன் அயனொடு முநிவர்கள் அமரர்கள்
அரம்பை மகளிர் ஒடு அரகர சிவ சிவ
செயம்பு என நடம் இடு பதம் அழகியர் குரு நாதா
செழும் பவள ஒளி நகை முக மதி நகு
சிறந்த குற மகள் இணை முலை புதை பட
செயம் கொடு அணை குக சிவ மலை மருவிய பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=YT9Sz5j0Fe4
Add (additional) Audio/Video Link
146
பழநி குருதி மலசலம் தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன ...... தனதான
குருதி மலசல மொழுகு நரகுட
லரிய புழுவது நெளியு முடல்மத
குருபி நிணசதை விளையு முளைசளி ...... யுடலூடே
குடிக ளெனபல குடிகை வலிகொடு
குமர வலிதலை வயிறு வலியென
கொடுமை யெனபிணி கலக மிடுமிதை ...... யடல்பேணி
மருவி மதனனுள் கரிய புளகித
மணிய சலபல கவடி மலர்புனை
மதன கலைகொடு குவடு மலைதனில் ...... மயலாகா
மனது துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற வெனது தலைபத ...... மருள்வாயே
நிருதர் பொடிபட அமரர் பதிபெற
நிசித அரவளை முடிகள் சிதறிட
நெறிய கிரிகட லெரிய வுருவிய ...... கதிர்வேலா
நிறைய மலர்பொழி யமரர் முநிவரும்
நிருப குருபர குமர சரணென
நெடிய முகிலுடல் கிழிய வருபரி ...... மயிலோனே
பருதி மதிகனல் விழிய சிவனிட
மருவு மொருமலை யரையர் திருமகள்
படிவ முகிலென அரியி னிளையவ ...... ளருள்பாலா
பரம கணபதி யயலின் மதகரி
வடிவு கொடுவர விரவு குறமக
ளபய மெனவணை பழநி மருவிய ...... பெருமாளே.
குருதி மலசல மொழுகு நரகுடல்
அரிய புழுவது நெளியு முடல்
மத குருபி
நிணசதை விளையும் உளைசளி யுடலூடே
குடிகளெனபல குடிகை
வலி கொடுகுமர வலிதலை வயிறு வலியென
கொடுமை யெனபிணி கலக மிடுமிதை
அடல்பேணி மருவி மதனனுள் கரிய
புளகித மணி அசல பல கவடி மலர்புனை
மதன கலைகொடு குவடு மலைதனில் மயலாகா
மனது துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற வெனது தலைபதம் அருள்வாயே
நிருதர் பொடிபட அமரர் பதிபெற
நிசித அரவளை முடிகள் சிதறிட
நெறிய கிரிகட லெரிய
உருவிய கதிர்வேலா
நிறைய மலர்பொழி யமரர் முநிவரும்
நிருப குருபர குமர சரணென
நெடிய முகிலுடல் கிழிய வருபரி மயிலோனே
பருதி மதிகனல் விழிய சிவனிடம் மருவும்
ஒருமலை யரையர் திருமகள்
படிவ முகிலென அரியினிளையவள் அருள்பாலா
பரம கணபதி யயலின் மதகரி வடிவு கொடுவர
விரவு குறமகள் அபய மெனஅணை
பழநி மருவிய பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=0e_0N9Uk5tA
Add (additional) Audio/Video Link
147
பழநி குழல் அடவி தனன தனதன தனன தனதன
தனன தனதன ...... தனதான
குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல்
குமுத வதரமு ...... றுவலாரம்
குழைம கரம்வளை மொழிகு யிலமுது
குயமு ளரிமுகை ...... கிரிசூது
விழிக யலயில்ப கழிவ ருணிகரு
விளைகு வளைவிட ...... மெனநாயேன்
மிகவ ரிவையரை அவநெ றிகள்சொலி
வெறிது ளம்விதன ...... முறலாமோ
கழல்ப ணியவினை கழல்ப ணியையணி
கழல்ப ணியவருள் ...... மயில்வீரா
கமலை திருமரு கமலை நிருதரு
கமலை தொளைசெய்த ...... கதிர்வேலா
பழனி மலைவரு பழநி மலைதரு
பழநி மலைமுரு ...... கவிசாகா
பரவு பரவைகொல் பரவை வணஅரி
பரவு மிமையவர் ...... பெருமாளே.
குழல் அடவி முகில் பொழில் விர வில் நுதல் குமுத அதரம்
முறுவல் ஆரம்
குழை மகரம் வளை மொழி குயில் அமுது
குய(ம்) முளரி முகை கிரி சூது
விழி கயல் அயில் பகழி வருணி கரு விளை குவளை விடம்
என நாயேன்
மிக அரிவையரை அவ நெறிகள் சொ(ல்)லி வெறிது உளம்
விதனம் உறலாமோ
கழல் ப(ண்)ணிய வினை கழல் பணியை அணி கழல்
பணிய அருள் மயில் வீரா
கமலை திரு மருக மலை நிருதர் உக மலை தொளை செய்த
கதிர் வேலா
பழநி மலை வரு பழ நிமலை தரு பழநிமலை முருக விசாகா
பரவு பரவை கொல் பரவை வண அரி பரவும் இமையவர்
பெருமாளே. Add (additional) Audio/Video Link
148
பழநி குழல்கள் சரிய தனன தனன தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிக ளுலவ
கொலைகள் செயவெ ...... களவோடே
குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள்
குமுற வளையி ...... னொலிமீற
இளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும்
இடையு மசைய ...... மயில்போலே
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர்
இடரில் மயலில் ...... உளர்வேனோ
மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல்
விஜய கிரிசொல் ...... அணிவோனே
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி
விபின கெமனி ...... யருள்பாலா
பழைய மறையின் முடிவி லகர மகர உகர
படிவ வடிவ ...... முடையோனே
பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ
பழநி மருவு ...... பெருமாளே.
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகள் உலவ கொலைகள்
செயவெ களவோடே குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில்
ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற
இள நிர் எனவும் முலைகள் அசைய உபய தொடையும்
இடையும் அசைய மயில் போலே இனிய அமுத ரசமும் வடிய
உபரி புரிவர் இடரில் மயலில் உளர்வேனோ
மிளிரும் மதுர கவிதை ஒளிரும் அருணகிரி சொல் விஜயகிரி
சொல் அணிவோனே
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி
அருள்பாலா
பழைய மறையின் முடிவில் அகர மகர உகர படிவ வடிவும்
உடையோனே
பழன வயல்கள் கமுகு கதலி பனசை உலவ பழநி மருவு
பெருமாளே. Add (additional) Audio/Video Link
149
பழநி குறித்தமணி தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
குறித்தமணிப் பணித்துகிலைத்
திருத்தியுடுத் திருட்குழலைக்
குலைத்துமுடித் திலைச்சுருளைப் ...... பிளவோடே
குதட்டியதுப் புதட்டைமடித்
தயிற்பயிலிட் டழைத்துமருட்
கொடுத்துணர்வைக் கெடுத்துநகக் ...... குறியாலே
பொறித்ததனத் தணைத்துமனச்
செருக்கினர்கைப் பொருட்கவரப்
புணர்ச்சிதனிற் பிணிப்படுவித் ...... திடுமாதர்
புலத்தலையிற் செலுத்துமனப்
ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப்
புரித்தருளித் திருக்கழலைத் ...... தருவாயே
பறித்ததலைத் திருட்டமணக்
குருக்களசட் டுருக்களிடைப்
பழுக்களுகக் கழுக்கள்புகத் ...... திருநீறு
பரப்பியதத் திருப்பதிபுக்
கனற்புனலிற் கனத்தசொலைப்
பதித்தெழுதிப் புகட்டதிறற் ...... கவிராசா
செறித்தசடைச் சசித்தரியத்
தகப்பன்மதித் துகப்பனெனச்
சிறக்கவெழுத் தருட்கருணைப் ...... பெருவாழ்வே
திகழ்ப்படுசெய்ப் பதிக்குளெனைத்
தடுத்தடிமைப் படுத்தஅருட்
டிருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே.
குறித்த மணிப் பணித் துகிலைத் திருத்தி உடுத்து இருள்
குழலைக் குலைத்து முடித்து
இலைச் சுருளைப் பிளவோடே குதட்டிய துப்பு உதட்டை
மடித்து அயில் பயிலிட்டு அழைத்து மருள் கொடுத்து
உணர்வைக் கெடுத்து
நகக் குறியாலே பொறித்து அத்தனத்து அணைத்து மனச்
செருக்கினர் கைப்பொருள் கவரப் புணர்ச்சி தனில்
பிணிப்படுவித்திடு மாதர்
புலம் தலையில் செலுத்தும் மனப் ப்ரமத்தை அறப்
ப்ரசித்தம் உறப் புரித்து அருளித் திருக் கழலைத்
தருவாயே
பறித்த தலைத் திருட்டு அமணக் குருக்கள் அசட்டு
உருக்கள் இடைப் பழுக்கள் உகக் கழுக்கள் புகத் திரு நீறு
பரப்பிய தத் திருப்பதி புக்கு
அனல் புனலில் கனத்த சொ(ல்)லைப் பதித்து எழுதிப்
புக(வி)ட்ட திறல் கவி ராசா
செறித்த சடைச் சசித் தரி அத் தகப்பன் மதித்து உகப்பன்
எனச் சிறக்க எழுத்து அருள் கருணைப் பெருவாழ்வே
திகழ்ப் படு செய்ப்பதிக்குள் எனைத் தடுத்து அடிமைப்
படுத்த அருள் திரு பழநிக் கிரிக் குமரப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
150
பழநி குன்றுங் குன்றும் தந்தம் தந்தம் தந்தம் தந்தம்
தனதன தனதன தனதன தனதன
தந்தம் தந்தம் தந்தம் தந்தம்
தனதன தனதன தனதன தனதன
தந்தம் தந்தம் தந்தம் தந்தம்
தனதன தனதன தனதன தனதன ...... தனதான
குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும்
படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர்
இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங்
கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர்
கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ்
சமரச முறவொரு தொழில்வினை புரிபவர் ...... விரகாலும்
கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங்
குடியென வளர்தரு கொடியவர் கடியவர்
எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந்
தனதுரி மையதென நலமுட னணைபவர்
கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தன்
பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர் ...... மயலாலும்
என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண்
டுனதிரு மலரடி பரவிட மனதினில்
நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்
தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற
இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்
தமுமிக வருள்பெற விடைதரு விதமுன ...... மருள்வாயே
எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்
அவன்விடு மதிசய வினையுறு மலகையை
வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ்
செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர்
நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண்
துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் ...... மருகோனே
ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந்
தொளைபட மதகரி முகனுடல் நெரிபட
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்
டிடியென விழுமெழு படிகளு மதிர்பட
ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென்
றொலிசெய மகபதி துதிசெய அசுரரை ...... யடுவோனே
உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ்
சிவனருள் குருபர வெனமுநி வரர்பணி
யுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென்
றொலிபட நடமிடு பரனரு ளறுமுக
உண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும்
விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை ...... புயவீரா
அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங்
கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில்
அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும்
படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்பட
அன்பின் பண்பெங் குங்கண் டென்பின்
அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு ...... திறலோனே
அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங்
கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன்
தருமகன் முநிதழல் வருதக ரிவர்வல
அங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங்
கயநிறை வளமுறு சிவகிரி மருவிய ...... பெருமாளே.
குன்றும் குன்றும் செண்டும் கன்றும் படி வளர் முலையினில்
ம்ருகமதம் மெழுகியர்
இந்தும் சந்த(ம்) தங்கும் தண் செம் கமலமும் என ஒளிர் தரு
முக வநிதையர்
கொஞ்சும் கெஞ்சும் செஞ்சும் வஞ்சம் சமரசம் உற ஒரு
தொழில் வினை புரிபவர்
விரகாலும் கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர்
தரு கொடியவர் கடியவர்
எங்கு எங்கு எம் பங்கு என்று என்று என்றும் தனது உரிமை
அது என நலமுடன் அணைபவர்
கொஞ்சம் தங்கு இன்பம் தந்து எந்தன் பொருள் உளது
எவைகளும் நயமொடு கவர்பவர்
மயலாலும் என்றென்றும் கன்றும் துன்பம் கொண்டு உனது
இருமலர் அடி பரவிட மனதினில் நன்று என்றும் கொண்டு
என்றும் சென்றும் தொழு(ம்) மகிமையின் நிலை உணர்வில்
நின் அருள் பெற
இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்தமும் மிக அருள் பெற விடை
தரு விதம் மு(ன்)னம் அருள்வாயே
எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடும் அதிசய
வினை உறும் அலகையை வென்றும் கொன்றும் துண்டம்
துண்டம் செயும் அரி
ஒரு முறை இரணிய வலன் உயிர் நுங்கும் சிங்கம் வங்கம்
தன் கண் துயில்பவன் எகினனை உதவிய கரு முகில்
மருகோனே
ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத
கரி முகன் உடல் நெரி பட
டுண் டுண் டுண் டுண் டிண் டிண் டிண் டிண் டிடி யென
விழும் எழு படிகளும் அதிர்பட ஒண் சங்கம் சஞ் சஞ் சஞ் சஞ்
சென்று ஒலி செய மகபதி துதி செய அசுரரை அடுவோனே
உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என
முநிவரர் பணியும் தொம்தம் தொம்தம் தொம்தம் என்று ஒலி
பட நடம் இடு பரன் அருள் அறுமுக
உண் கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு
அலர் அலர் தரும் எழில் புனை புய வீரா
அன்று என்று ஒன்றும் கொண்டு அன்பு இன்று அங்கு
அடியவர் தமை இகழ் சமணர்கள் கழுவினில் அங்கம் சிந்தும்
பங்கம் துஞ்சும் படி
ஒரு தொகுதியின் நுரை நதி எதிர்பட அன்பின் பண்பு எங்கும்
கண்டு என்பின் அரிவையை எதிர் வர விடு கவி புகல் தரு
திறலோனே
அண்டம் கண்டும் பண்டு உண்டும் பொங்கு அமர் தனில்
விஜயவன் இரதமை நடவிய துங்கன் வஞ்சன் சங்கன்
மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல
அங்கம் கஞ்சம் சங்கம் பொங்கும் கய(ம்) நிறை வளம் உறு
சிவகிரி மருவிய பெருமாளே. Add (additional) Audio/Video Link
151
பழநி கொந்துத் தரு தந்தத் தனதன தனனா தனனா
தந்தத் தனதன தனனா தனனா
தந்தத் தனதன தனனா தனனா ...... தனதான
கொந்துத் தருகுழ லிருளோ புயலோ
விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ
கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ ...... விழிவேலோ
கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ
வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ
கொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ ...... எனுமாதர்
திந்தித் திமிதிமி திமிதா திமிதோ
தந்தித் திரிகட கிடதா எனவே
சிந்திப் படிபயில் நடமா டியபா ...... விகள்பாலே
சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே
வந்தித் தருள்தரு மிருசே வடியே
சிந்தித் திடமிகு மறையா கியசீ ...... ரருள்வாயே
வெந்திப் புடன்வரு மவுணே சனையே
துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய்
வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே ...... தவவாழ்வே
விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய்
கஞ்சத் தயனுட னமரே சனுமே
விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே ...... லருள்கூர்வாய்
தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே
செங்கட் கருமுகில் மருகா குகனே
சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் ...... கதிர்காமா
சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ்
இஞ்சித் திருமதிள் புடைசூ ழருள்சேர்
துங்கப் பழநியில் முருகா இமையோர் ...... பெருமாளே.
கொந்துத் தரு குழல் இருளோ புயலோ
விந்தைத் தரு நுதல் சிலையோ பிறையோ
கொஞ்சிப் பயில் மொழி அமுதோ கனியோ விழி வேலோ
கொங்கைக் குடம் இரு கரியோ கிரியோ
வஞ்சிக் கொடி இடை துடியோ பிடியோ
கொங்கு உற்று உயர் அல்குல் அரவோ ரதமோ எனு மாதர்
திந்தித் திமிதிமி திமிதா திமிதோ தந்தித் திரிகிட கிடதா
எனவே சிந்து இப்படி பயில் நடமாடிய பாவிகள் பால்
சிந்தைத் தயவுகள் புரிவேன் உனையே வந்தித்து அருள்
தரும் இரு சேவடியே சிந்தித்திட மிகு மறையாகிய சீர்
அருள்வாய்
வெந்திப்புடன் வரும் அவுண ஈசனையே துண்டித்திடும்
ஒரு கதிர் வேல் உடையாய் வென்றிக்கு ஒரு மலை என
வாழ் மலையே தவ வாழ்வே
விஞ்சைக்கு உடையவர் தொழவே வருவாய் கஞ்சத்து
அயனுடன் அமர ஈசனுமே விந்தைப் பணிவிடை புரி
போது அவர்மேல்அருள் கூர்வாய்
தொந்திக் கணபதி மகிழ் சோதரனே செம் கண் கரு
முகில் மருகா குகனே சொந்தக் குற மகள் கணவா திறல்
சேர் கதிர் காமா
சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சித்
திரு மதிள் புடை சூழ் அருள் சேர் துங்கப் பழநியில்
முருகா இமையோர் பெருமாளே. Add (additional) Audio/Video Link
152
பழநி கோல குங்கும தான தந்தன தத்தன தத்தம்
தான தந்தன தத்தன தத்தம்
தான தந்தன தத்தன தத்தம் ...... தனதான
கோல குங்கும கற்புர மெட்டொன்
றான சந்தன வித்துரு மத்தின்
கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் ...... கழுநீரின்
கோதை சங்கிலி யுற்றக ழுத்தும்
பூஷ ணம்பல வொப்பனை மெச்சுங்
கூறு கொண்டப ணைத்தனம் விற்கும் ...... பொதுமாதர்
பாலு டன்கனி சர்க்கரை சுத்தந்
தேனெ னும்படி மெத்தரு சிக்கும்
பாத கம்பகர் சொற்களி லிட்டம் ...... பயிலாமே
பாத பங்கய முற்றிட வுட்கொண்
டோது கின்றதி ருப்புகழ் நித்தம்
பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் ...... தவனீயே
தால முன்புப டைத்தப்ர புச்சந்
தேக மின்றிம திக்கவ திர்க்குஞ்
சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந் ...... தலைசாயச்
சாடு குன்றது பொட்டெழ மற்றுஞ்
சூர னும்பொடி பட்டிட யுத்தஞ்
சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந் ...... தனிவேலா
ஆல முண்டக ழுத்தினி லக்குந்
தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென்
றாடு கின்றத கப்பனு கக்குங் ...... குருநாதா
ஆட கம்புனை பொற்குடம் வைக்குங்
கோபு ரங்களி னுச்சியு டுத்தங்
காவி னன்குடி வெற்பினி னிற்கும் ...... பெருமாளே.
கோல குங்கும கற்புரம் எட்டு ஒன்று ஆன சந்தனம்
வித்துருமத்தின் கோவை செண்பக தட்ப மகிழ் செங்கழு
நீரின் கோதை சங்கிலி உற்ற கழுத்தும்
பூஷணம் பல ஒப்பனை மெச்சும் கூறு கொண்ட பணைத்
தனம் விற்கும் பொதுமாதர்
பாலுடன் கனி சர்க்கரை சுத்தந் தேன் எனும்படி மெத்த
ருசிக்கும் பாதகம் பகர் சொற்களில் இட்டம் பயிலாமே
பாத பங்கயம் உற்றிட உள் கொண்டு ஓதுகின்ற திருப்புகழ்
நித்தம் பாடும் அன்பு அது செய்ப்பதியில் தந்தவன் நீயே
தாலம் முன்பு படைத்த ப்ரபுச் சந்தேகம் இன்றி மதிக்க
அதிர்க்கும் சாகரம் சுவறக் கிரி எட்டும் தலை சாய
சாடு குன்று அது பொட்டு எழ மற்றும் சூரனும் பொடி
பட்டிட யுத்தம் சாதகம் செய் திருக்கை விதிர்க்கும் தனி
வேலா
ஆலம் உண்ட கழுத்தினில் அக்கும் தேவர் என்பு நிரைத்து
எரியில் சென்று ஆடுகின்ற தகப்பன் உகக்கும் குருநாதா
ஆடகம் புனை பொன் குடம் வைக்கும் கோபுரங்களின்
உச்சி உடுத் தங்கும் ஆவினன்குடி வெற்பினில் நிற்கும்
பெருமாளே. Add (additional) Audio/Video Link
153
பழநி கோல மதிவதனம் தான தனதனன தான தனதனன
தான தனதனன தான தனதனன
தான தனதனன தான தனதனன ...... தனதான
கோல மதிவதனம் வேர்வு தரஅளக
பாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல்
கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள ...... முகையான
கோக னகவுபய மேரு முலையசைய
நூலி னிடைதுவள வீறு பறவைவகை
கூற யினியகள மோல மிடவளைகள் ...... கரமீதே
காலி னணிகனக நூபு ரமுமொலிக
ளோல மிடஅதிக போக மதுமருவு
காலை வெகுசரச லீலை யளவுசெயு ...... மடமானார்
காதல் புரியுமநு போக நதியினிடை
வீழு கினுமடிமை மோச மறவுனது
காமர் கழலிணைக ளான தொருசிறிது ...... மறவேனே
ஞால முழுதுமம ரோர்கள் புரியுமிக
லாக வருமவுணர் சேர வுததியிடை
நாச முறஅமர்செய் வீர தரகுமர ...... முருகோனே
நாடி யொருகுறமின் மேவு தினைசெய்புன
மீதி லியலகல்கல் நீழ லிடைநிலவி
நாணம் வரவிரக மோது மொருசதுர ...... புரிவேலா
மேலை யமரர்தொழு மானை முகரரனை
யோடி வலம்வருமுன் மோது திரைமகர
வேலை யுலகைவல மாக வருதுரக ...... மயில்வீரா
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு முதல்வவயல் வாவி புடைமருவு
வீரை வருபழநி ஞான மலையில்வளர் ...... பெருமாளே.
கோல மதி வதனம் வேர்வு தர அளக பாரம் நெகிழ விழி
வேல்கள் சுழல நுவல் கோவை இதழ் வெளிற வாய்மை பதறி
இள முகையான கோகனக உபய மேரு முலை அசைய
நூலின் இடை துவள வீறு பறவை வகை கூற இனிய களம்
ஓலம் இட வளைகள் கரம் மீதே காலின் அணி கனக நூபுரம்
ஒலிகள் ஓலமிட
அதிக போகம் அது மருவு காலை வெகு சரச லீலை அளவு
செயும் மடமானார் காதல் புரியும் அனுபோக நதியின் இடை
வீழுகினும்
அடிமை மோசம் அற உனது காமர் கழல் இணைகள் ஆனது
ஒரு சிறிதும் மறவேனே
ஞால முழுதும் அமரோர்கள் புரியும் இகலாக வரும் அவுணர்
சேர உததி இடை நாசம் உற அமர் செய் வீரதர குமர
முருகோனே
நாடி ஒரு குறமின் மேவு தினை செய் புன மீதில் இயல் அகல்
கல் நீழல் இடை நிலவி நாணம் வர விரகம் ஓதும் ஒரு சதுர
புரி வேலா
மேலை அமரர் தொழும் ஆனை முகர் அரனை ஓடி வலம் வரு
முன் மோது திரை மகர வேலை உலகை வலமாக வரு துரக
மயில் வீரா
வீறு கலிசை வரு சேவகனது இதயம் மேவும் முதல்வ
வயல் வாவி புடை மருவு வீரை வரு பழநி ஞான மலையில்
வளர் பெருமாளே. Add (additional) Audio/Video Link
154
பழநி சகடத்திற் குழை தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத் ...... தனதான
சகடத்திற் குழையிட் டெற்றிக்
குழலுக்குச் சரம்வைத் தெற்றிப்
புளகித்துக் குவளைக் கட்பொற்
கணையொத்திட் டுழலச் சுத்தித்
தரளப்பற் பவளத் தொட்டக்
களபப்பொட் டுதலிட் டத்திக் ...... குவடான
தனதுத்திப் படிகப் பொற்பிட்
டசையப்பெட் பசளைத் துப்புக்
கொடியொத்திட் டிடையிற் பட்டைத்
தகையிற்றொட் டுகளப் பச்சைச்
சரணத்துக் கியலச் சுற்றிச்
சுழலிட்டுக் கடனைப் பற்றிக் ...... கொளுமாதர்
சுகமுற்றுக் கவலைப் பட்டுப்
பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற்
குளறிட்டுத் தடிதொட் டெற்றிப்
பிணியுற்றுக் கசதிப் பட்டுச்
சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத்
தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக் ...... கிடைநாளிற்
சுழலர்ச்சக் கிரியைச் சுற்றிட்
டிறுகக்கட் டுயிரைப் பற்றிக்
கொளுகப்பற் பலரைக் கட்டிக்
கரம்வைத்துத் தலையிற் குத்திச்
சுடுகட்டைச் சுடலைக் கட்டைக்
கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச் ...... சடமாமோ
திகுடத்திக் குகுடட் டுட்டுட்
டமடட்டட் டமடட் டிக்குட்
டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத்
தொகுதொக்குத் தொகுதத் தொக்குச்
செகணக்கச் செகணச் செக்குத்
தகுடத்தத் தகுடத் தட்டுட் ...... டிடிபேரி
திமிலைக்கைத் துடிதட் டெக்கைப்
பகடிட்டுப் பறையொத் தக்கட்
டிகையெட்டுக் கடல்வற் றித்தித்
தரவுக்கக் கிரியெட் டுத்தைத்
தியருக்குச் சிரமிற் றுட்கச்
சுரர்பொற்புச் சொரியக் கைத்தொட் ...... டிடும்வேலா
பகலைப்பற் சொரியத் தக்கற்
பதிபுக்கட் டழலிட் டுத்திட்
புரமட்கிக் கழைவிற் புட்பச்
சரனைச்சுட் டயனைக் கொத்திப்
பவுரிக்கொட் பரமர்க் குச்சற்
குருவொத்துப் பொருளைக் கற்பித் ...... தருள்வோனே
பவளப்பொற் கிரிதுத் திப்பொற்
றனகொச்சைக் கிளிசொற் பற்றிப்
பரிவுற்றுக் கமலப் புட்பத்
திதழ்பற்றிப் புணர்ச்சித் ரப்பொற்
படிகத்துப் பவளப் பச்சைப்
பதமுத்துப் பழநிச் சொக்கப் ...... பெருமாளே.
சகடத்தில் குழை இட்டு எற்றிக் குழலுக்குச் சரம் வைத்து
எற்றி
புளகித்துக் குவளைக் கண் பொன் கணை ஒத்திட்டு உழலச்
சுத்தித் தரளப் பல் பவளத்து ஒட்ட
களப அப்(பி) ஒட்டுதல் இட்ட அத்திக் குவடு ஆன தன
துத்திப் படிகம் பொற்பு இட்டு அசைய
பெள் பசளைத் துப்புக் கொடி ஒத்திட்டு இடையில் பட்டைத்
தகையில் தொட்டு உகளப் பச்சைச் சரணத்துக்கு இயலச்
சுற்றிச் சுழல் இட்டு
கடனைப் பற்றிக் கொளு மாதர் சுகம் உற்றுக் கவலைப் பட்டுப்
பொருள் கெட்டுக் கடை கெட்டுச் சொல் குளறிட்டுத் தடி
தொட்டு எற்றி
பிணி உற்றுக் கசதிப் பட்டுச் சுக துக்கத்து இடர் கெட்டு
உற்றுத் தளர் பட்டுக் கிடை பட்டு உப்பிக் கிடை நாளில்
சுழலர்ச் சக்கிரியைச் சுற்றிட்டு இறுகக் கட்டி உயிரைப் பற்றிக்
கொள் உகப் பற்பலரைக் கட்டிக் கரம் வைத்துத் தலையில்
குத்திச் சுடு கட்டைச் சுடலைக் கட்டைக்கு இரை இட்டுப்
பொடி பட்டு உட்கிச் சடம் ஆமோ
திகுடத்திக் குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட்
டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத் தொகுதொக்குத் தொகுதத்
தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத்
தட்டுட்டு இடிபேரி
திமிலைக் கைத்துடி தட்டு எக்கைப் பகடு இட்டுப் பறை
ஒத்த கண் திகை எட்டுக் கடல் வற்றித் தித்தர உக்கக் கிரி
எட்டுத் தைத்தியருக்குச் சிரம் இற்று உட்கச் சுரர் பொன் பூச்
சொரியக் கைத் தொட்டிடும் வேலா
பகலைப் பல் சொரியத் தக்கன் பதி புக்கு அட்டு அழல்
இட்டுத் திண் புரம் மட்கிக் கழை வில் புட்பச் சரனைச் சுட்டு
அயனைக் கொத்திப் பவுரிக் கொள் பரமர்க்குச் சற்குரு
ஒத்துப் பொருளைக் கற்பித்து அருள்வோனே
பவளப் பொன் கிரி துத்திப் பொன் தன கொச்சைக் கிளி
சொல் பற்றிப் பரிவு உற்றுக் கமலப் புட்பத்து இதழ் பற்றிப்
புணர்ச் சித்ரப் பொன் படிகத்துப் பவளப் பச்சைப் பத முத்துப்
பழநிச் சொக்கப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
155
பழநி சிந்துர கூரம தந்தன தானன தத்தத் தந்தன
தந்தன தானன தத்தத் தந்தன
தந்தன தானன தத்தத் தந்தன ...... தனதான
சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி
செங்கைகு லாவந டித்துத் தென்புற
செண்பக மாலைமு டித்துப் பண்புள ...... தெருவூடே
சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கய
லம்புகள் போலவி ழித்துச் சிங்கியில்
செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி ...... விலைமாதர்
வந்தவ ராரென ழைத்துக் கொங்கையை
யன்புற மூடிநெ கிழ்த்திக் கண்பட
மஞ்சணி ராடிமி னுக்கிப் பஞ்சணை ...... தனிலேறி
மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிட
முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள்
மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத ...... மருள்வாயே
இந்திர நீலவ னத்திற் செம்புவி
யண்டக டாகம ளித்திட் டண்டர்க
ளெண்படு சூரைய ழித்துக் கொண்டரு ...... ளொருபேடி
இன்கன தேரைந டத்திச் செங்குரு
மண்டல நாடும ளித்துப் பஞ்சவ
ரின்புறு தோழ்மையு டைக்கத் தன்திரு ...... மருகோனே
சந்திர சூரியர் திக்கெட் டும்புக
ழந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கிய
சங்கர னார்செவி புக்கப் பண்பருள் ...... குருநாதா
சம்ப்ரம மானகு றத்திக் கின்புறு
கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர
தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய ...... பெருமாளே.
சிந்துர கூர மருப்புச் செம் சரி செம் கை குலாவ நடித்துத்
தென்புற செண்பக மாலை முடித்துப் பண்புள தெருவூடே
சிந்துகள் பாடி முழக்கி
செம் கயல் அம்புகள் போல விழித்துச் சிங்கியில் செம்
பவள ஆடை துலக்கிப் பொன் பறி விலை மாதர்
வந்தவர் ஆர் என அழைத்துக் கொங்கையை அன்புற மூடி
நெகிழ்த்திக் கண் பட மஞ்சள் நிர் ஆடி மினுக்கிப் பஞ்சு
அணை தனில் ஏறி மந்திர மோகம் எழுப்பிக் கெஞ்சிட
முன் தலை வாயில் அடைத்துச் சிங்கி கொள் மங்கையர்
ஆசை விலக்கிப் பொன் பதம் அருள்வாயே
இந்திர நீல வனத்தில் செம் புவி அண்ட கடாகம்
அளித்திட்டு அண்டர்கள் எண்படு சூரை அழித்துக்
கொண்டு அருள் ஒரு பேடி இன்கன தேரை நடத்தி
செம் குரு மண்டல நாடும் அளித்துப் பஞ்சவர் இன்புறு
தோழ்மை உடைக் கத்தன் திரு மருகோனே
சந்திர சூரியர் திக்கு எட்டும் புகழ் அந்தம் இல் வாழ்வு அது
பெற்றுத் தங்கிய சங்கரனார் செவி புக்கப் பண்பு அருள் குரு
நாதா
சம்ப்ரமம் ஆன குறத்திக்கு இன்பு உறு கொங்கையின்
மேவு சமர்த்தச் சுந்தர தண் தமிழ் சேர் பழநிக்குள் தங்கிய
பெருமாளே. Add (additional) Audio/Video Link
156
பழநி சிவனார் மனங்குளிர தனனா தனந்ததன தனனா தனந்ததன
தனனா தனந்ததன ...... தனதான
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென ...... வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது ...... புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு ...... விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரம் இரு
செவிமீதி லும்பகர்செய் குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்த நின
செயலேவி ரும்பி உளம் நினையாமல்
அவமாயை கொண்டு உலகில் விருதாவ லைந்துழலும்
அடியேனை அஞ்சலென வரவேணும் அறிவாக மும்பெருக
இடரான துந்தொலைய அருள்ஞான இன்பமது புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீரமிஞ்சுகதிர் வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள் சவுந்தரிக
செகமேல்மெய் கண்ட விறல் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=dnMmTa9h6N4
https://www.youtube.com/watch?v=9BNPzM1tIe4
https://www.youtube.com/watch?v=fQOgyVL8SYo
https://www.youtube.com/watch?v=g_P4HfOoxdo
Add (additional) Audio/Video Link
157
பழநி சிறு பறையும் தனதனன தனனதன தத்தத் தனத்ததன
தனதனன தனனதன தத்தத் தனத்ததன
தனதனன தனனதன தத்தத் தனத்ததன ...... தனதான
சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையு
மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி
சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி ...... யணுகாதே
சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடு
சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல்
திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை ...... யொழியாதே
மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி
உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்
வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது ...... மொருநாளே
வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட
ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய
மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத ...... மருள்வாயே
நறையிதழி யறுகுபல புட்பத் திரட்களொடு
சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையி
னளினமுற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவு ...... மயிலேறி
நவநதிகள் குமுகுமென வெற்புத் திரட்சுழல
அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும்
நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு ...... முருகோனே
குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில்
மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிரு
குவிமுலையு மணியிடையு மெச்சிப் புணர்ச்சிசெயு ...... மணவாளா
குறுமுநிவ னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற
அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய
குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு ...... பெருமாளே.
சிறு பறையும் முரசு துடி சத்தக் கணப் பறையும்
மொகு மொகு என அதிர உடன் எட்டிப் பிடித்து முடி
சிறு கயிறு நெடிது கொடு கட்டிட்டு இழுக்க இனி அணுகாதே
சில தமர்கள் உறவு கிளை கத்திப் பிதற்றி எடு
சுடலை தனில் இடு கனலை இட்டுக் கொளுத்து புனல்
திரை கடலில் முழுகு என உரைக்கப்படி குடிலை ஒழியாதே
மறை முறையின் இறுதி நிலை முத்திக்கு இசைத்தபடி
உடல் உயிர்கள் கரண வெளி பட்டுக் குணத் திரயம்
வழிபடவும் நினது அடிமை இச்சைப் படுத்துவதும் ஒரு நாளே
வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட
ஒரு பதுடன் இரு புயமும் மட்டுத் தொடைக்கு இசைய
மனம் மகிழ இனிய மொழி செப்பிச் சிவத்த பதம் அருள்வாயே
நறை இதழி அறுகு பல புட்பத் திரட்களொடு
சிறு பிறையும் அரவும் எழில் அப்புத் திரு தலையில்
நளினம் உற அணி சடையர் மெச்சிப் ப்ரியப்படவும் மயில் ஏறி
நவ நதிகள் குமு குமு என வெற்புத் திரள் சுழல
அகில முதல் எழு புவனம் மெத்தத் திடுக்கிடவும்
நவ மணிகள் உரகன் உடல் கக்கத் துரத்தி வரும் முருகோனே
குறவர் முனை கெட மனது வெட்கப் பட குடிலில்
மலையில் எழு தினை இதணில் வைத்து சிறுக்கி இரு
குவி முலையும் அணி இடையும் மெச்சிப் புணர்ச்சி செயு மணவாளா
குறு முனிவன் இரு பொழுதும் அர்ச்சித்து முத்தி பெற
அறிவு நெறி தவ நிலைகள் செப்பு தமிழ்க்கு இனிய
குரு குமர பழநி வளர் வெற்புத் தனில் திகழும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
158
பழநி சீ உதிரம் எங்கும் தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த தானதன தந்த தனதான
சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
தீநரிகள் கங்கு காகமிவை தின்ப ...... தொழியாதே
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து ...... நிலைகாணா
ஆயதுந மன்கை போகவுயி ரந்த
நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
யாகியவு டம்பு பேணிநிலை யென்று ...... மடவார்பால்
ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
தானுமிக வந்து மேவிடம யங்கு
மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு ...... புரிவாயே
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
பார்முழுது மண்ட கோளமுந டுங்க
வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை ...... யதனாலே
வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
வாரண இரண்டு கோடொடிய வென்ற ...... நெடியோனாம்
வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து ...... பொடியாக
வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க
வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் ...... பெருமாளே.
சீ(ழ்) உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும்
மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை
தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே
தீது உள குணங்களே பெருகு தொந்த
மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு
சேரிடு நரம்பு தான் இவை பொதிந்து நிலை காணா
ஆயது நமன் கை போக உயிர் அந்த
நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை
ஆகிய உடம்பு பேணி நிலை என்று மடவார் பால்
ஆசையை விரும்பியே விரக சிங்கி
தானும் மிக வந்து மேவிட மயங்கும்
ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்பு புரிவாயே
மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு
பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க
வாய் பிளறி நின்று மேக நிகர் தன் கை அதனாலே
வாரி உற அண்டி வீறொடு முழங்கு
நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த
வாரண இரண்டு கோடு ஓடிய வென்ற நெடியோனாம்
வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து
மேயல் புரி செம் கண் மால் மருக துங்க
வேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக
வேலை விடு கந்த காவிரி விளங்கு
கார் கலிசை வந்த சேவகன் வணங்க
வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=_NPWyUYDlCw
https://www.youtube.com/watch?v=TBXRt221AHE
Add (additional) Audio/Video Link
159
பழநி சீறல் அசடன் தான தனதனன தான தனதனன
தான தனதனன ...... தனதான
சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி ...... பவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி ...... எவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு ...... னடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் ...... புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி ...... புனைவோனே
மாக முகடதிர வீ சு சிறைமயிலை
வாசி யெனவுடைய ...... முருகோனே
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை ...... யுடையோனே
வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் ...... பெருமாளே.
சீற லசடன்
வினைகாரன் முறைமையிலி
தீமை புரிகபடி
பவநோயே தேடு பரிசி
கன நீதி நெறி முறைமை சீர்மை சிறிதுமிலி
எவரோடுங் கூறு மொழியது பொய்யான
கொடுமையுள கோளன்
அறிவிலி உன்அடிபேணாக் கூளன்
எனினுமெனை நீயுன் அடியரொடு
கூடும் வகைமையருள் புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி புனைவோனே
மாக முகடதிர
வீசு சிறைமயிலை
வாசி யெனவுடைய முருகோனே
வீறு கலிசைவரு சேவகனது இதயம்
மேவு மொருபெருமை யுடையோனே
வீரை யுறைகுமர
தீரதர பழநி வேல
இமையவர்கள் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=8KUCErelNBI
Add (additional) Audio/Video Link
160
பழநி சுருதி முடி மோனம் தனதனன தானந்த தத்ததன தானதன
தனதனன தானந்த தத்ததன தானதன
தனதனன தானந்த தத்ததன தானதன ...... தனதான
சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ
சமயவடி வாய்வந்த அத்துவித மானபர
சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத ...... லொருவாழ்வே
துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல
மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக
சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய ...... உணராதே
கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி
பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை
கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் ...... வினைதானே
கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ
மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி
கருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉன ...... தருள்தாராய்
ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடி
முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி
ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅம ...... ருளவோனே
உததரிச மாமின்ப புத்தமிர்த போகசுக
முதவுமம லாநந்த சத்திகர மேவுணர
வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு ...... குருநாதா
பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம
தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன
பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு ...... திறலோனே
பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில்
சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர்
பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் ...... பெருமாளே.
சுருதி முடி மோனம் சொல் சித் பரம
ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர
சுடர் ஒளியதாய் நின்ற நிட்கள சொரூப
முதல் ஒரு வாழ்வே
துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம் அதனில்
விளையா நின்ற அற்புத சுபோத சுக
சுய படிகமாய் இன்ப பத்ம பதமே அடைய உணராதே
கருவில் உருவே தங்கு சுக்கில நிதான வளி
பொரும அதிலே கொண்ட முக்குண விபாக நிலை
கருத அரியா வஞ்சகக் கபடம் மூடி
உடல் வினை தானே கலகம் இடவே
பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் என உழலும்
மாயம் செனித்த குகையே உறுதி கருது அசுழம் ஆம்
இந்த மட்டை தனை ஆள உனது அருள் தாராய்
ஒரு நியமமே விண்ட சட் சமய வேத
அடி முடி நடுவுமாய் அண்ட முட்டை வெளி ஆகி
உயிர் உடல் உணர்வு அது ஆய்
எங்கும் உற்பனமது ஆக அமர் உளவோனே
உத தரிசமாம் இன்பப் புது அமிர்த போக சுகம் உதவும்
அமல ஆனந்த சத்தி கர
மேவு உணர் அ உரு பிரணவா மந்த்ர கர்த்தவியம் ஆக வரு
குரு நாதா
பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய
நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும்
கன பத கெருவிதா துங்க வெற்றி மயில் ஏறும் ஒரு
திறலோனே
பணியும் அடியார் சிந்தை மெய் பொருள் அது ஆக நவில்
சரவணபவா ஒன்றும் வல் கரமும் ஆகி வளர்
பழநி மலை மேல் நின்ற சுப்ரமணியா அமரர் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=ZqTug8fug5Y
Add (additional) Audio/Video Link
161
பழநி சுருளளக பார தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து
சுரதக்ரியை யால்வி ளங்கு ...... மதனூலே
சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு
தொழிலுடைய யானு மிங்கு ...... னடியார்போல்
அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்து
அறிவையறி வால றிந்து ...... நிறைவாகி
அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப
அமுதையொழி யாத ருந்த ...... அருள்வாயே
பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து
பரிதகழை யாமுன் வந்து ...... பரிவாலே
பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற
படைஞரொடி ராவ ணன்ற ...... னுறவோடே
எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட
ரகுபதியி ராம சந்த்ரன் ...... மருகோனே
இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த
இமையவள்த னால்ம கிழ்ந்த ...... பெருமாளே.
சுருள் அளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து
சுரத க்ரியையால் விளங்கும் மதன் நூலே
சுருதி எனவே நினைந்து அறிவிலிகளோடு இணங்கு
தொழிலுடைய யானும்
இங்கு உன் அடியார் போல் அரு மறைகள் ஓதி நினைந்து
மநு நெறியிலே நடந்து
அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி
அகில புவன(ம்) ஆதி எங்கும் வெளி உற
மெய் ஞான இன்ப அமுதை ஒழியாது அருந்த அருள்வாயே
பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து
பரி(வு) தக அழையா முன் வந்து பரிவாலே பரவிய
விபீஷணன்
பொன் மகுட முடி சூட நின்று
படைஞரொடு இராவணன் தன் உறவோடே எரி புகுத
மாறு இல் அண்டர் குடி புகுத
மாறு கொண்ட ரகுபதி இராம சந்த்ரன் மருகோனே
இளைய குற மாது பங்க பழநி மலை நாத கந்த
இமையவள் த(ன்)னால் மகிழ்ந்த பெருமாளே. Add (additional) Audio/Video Link
162
பழநி ஞானங்கொள் தானந்த தனன தான தானந்த தனன தான
தானந்த தனன தான ...... தனதான
ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
நாடண்டி நமசி வாய ...... வரையேறி
நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய
நாதங்க ளொடுகு லாவி ...... விளையாடி
ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம
லோமங்கி யுருவ மாகி ...... யிருவோரும்
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி
லோகங்கள் வலம தாட ...... அருள்தாராய்
தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி
சீரங்க னெனது தாதை ...... ஒருமாது
சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி
சேர்பங்கி னமல நாத ...... னருள்பாலா
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல
காடந்த மயிலி லேறு ...... முருகோனே
காமன்கை மலர்கள் நாண வேடம்பெ ணமளி சேர்வை
காணெங்கள் பழநி மேவு ...... பெருமாளே.
ஞானங்கொள் பொறிகள் கூடி
வானிந்து கதிரிலாத நாடு அண்டி
நமசி வாய வரையேறி
நாவின்ப ரசமதான ஆநந்த அருவி பாய
நாதங்களொடு குலாவி விளையாடி
ஊனங்க ளுயிர்கள் மோக
நானென்பது அறிவி லாமல் ஓம் அங்கி யுருவ மாகி
இருவோரும் ஓரந்த மருவி
ஞான மா விஞ்சை முதுகினேறி
லோகங்கள் வலம தாட அருள்தாராய்
தேனங்கொள் இதழி
தாகி தார் இந்து சலில வேணி
சீர் அங்கன் எனது தாதை
ஒருமாது சேர்பஞ்ச வடிவி
மோகி யோகங்கொள் மவுன ஜோதி
சேர்பங்கின் அமல நாதன் அருள்பாலா
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய
நீல காடு அந்த மயிலிலேறு முருகோனே
காமன்கை மலர்கள் நாண
வேடம்பெண் அமளி சேர்வைகாண்
எங்கள் பழநி மேவு பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=FMpi4wzCZmA
Add (additional) Audio/Video Link
163
பழநி தகர நறுமலர் தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
தகர நறுமலர் பொதுளிய குழலியர்
கலக கெருவித விழிவலை படவிதி
தலையி லெழுதியு மனைவயி னுறவிடு ...... வதனாலே
தனயர் அனைமதர் மனைவியர் சினெகிதர்
சுரபி விரவிய வகையென நினைவுறு
தவன சலதியின் முழுகியெ யிடர்படு ...... துயர்தீர
அகர முதலுள பொருளினை யருளிட
இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ
அரக ரெனவல னிடமுற எழிலுன ...... திருபாதம்
அருள அருளுடன் மருளற இருளற
கிரண அயில்கொடு குருகணி கொடியொடு
அழகு பெறமர கதமயில் மிசைவர ...... இசைவாயே
சிகர குடையினி னிரைவர இசைதெரி
சதுரன் விதுரனில் வருபவ னளையது
திருடி யடிபடு சிறியவ னெடியவன் ...... மதுசூதன்
திகிரி வளைகதை வசிதநு வுடையவ
னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை
திமித திமிதிமி யெனநட மிடுமரி ...... மருகோனே
பகர புகர்முக மதகரி யுழைதரு
வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக
பரம குருபர இமகிரி தருமயில் ...... புதல்வோனே
பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய
நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ்
பழநி மலைவரு புரவல அமரர்கள் ...... பெருமாளே.
தகர நறு மலர் பொதுளிய குழலியர்
கலக கெருவித விழி வலை பட விதி தலையில் எழுதியும்
மனைவி இல் உறவிடு அதனாலே
தனயர் அ(ன்)னை தமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய
வகை என நினைவு உறு
தவனம் சலதியில் முழுகியே இடர் படு துயர் தீர
அகர முதல் உள பொருளினை அருளிட
இரு கை குவி செய்து உள் உருகிட உருகியெ
அரகர என வலன் இடம் உற எழில் உனது இரு பாதம்
அருள அருளுடன் மருள் அற இருள் அற
கிரண அயில் கொடு குருகு அணி கொடியொடு
அழகு பெற மரகத மயில் மிசை வர இசைவாயே
சிகர குடையினில் நிரை வர இசை தெரி சதுரன்
விதுரன் இல் வருபவன்
அளை அது திருடி அடி படு சிறியவன் நெடியவன் மது
சூதன்
திகிரி வளை கதை வசி தநு உடையவன்
எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை
திமித திமி திமி என நடம் இடும் அரி மருகோனே
பகர புகர் முக மத கரி
உழை தரு வனிதை வெருவ முன் வர அருள் புரி குக
பரம குரு பர இமகிரி தரு மயில் புதல்வோனே
பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை
வயல்
கமுகு அடர் பொழில் திகழ் பழநி மலை வரும் புரவல
அமரர்கள் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=dcesAYfat2s
Add (additional) Audio/Video Link
164
பழநி தகைமைத் தனியில் தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத்
தநுமுட் டவளைப் ...... பவனாலே
தரளத் திரளிற் புரளக் கரளத்
தமரத் திமிரக் ...... கடலாலே
உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக்
கொளிமட் குமிகைப் ...... பொழுதாலே
உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக்
குனநற் பிணையற் ...... றரவேணும்
திகைபத் துமுகக் கமலத் தனைமுற்
சிறையிட் டபகைத் ...... திறல்வீரா
திகழ்கற் பகமிட் டவனக் கனகத்
திருவுக் குருகிக் ...... குழைமார்பா
பகலக் கிரணப் பரணச் சடிலப்
பரமற் கொருசொற் ...... பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் ...... பெருமாளே.
தகைமைத் தனியில் பகை கற்று உறு கைத்
தநு முட்ட வளைப்பவனாலே
தரளத் திரளில் புரளக் கரளத்
தமரத் திமிரக் கடலாலே
உ(ற்)கை முத்தம் மிகுத்தது எனப் பகல் புக்கு
ஒளி மட்கு மிகைப் பொழுதாலே
உரை அற்று உணர்வு அற்று உயிர் எய்த்த கொடிக்கு
உன நல் பிணையல் தர வேணும்
திகை பத்தும் உகக் கமலத்தனை முன்
சிறை இட்ட பகைத் திறல் வீரா
திகழ் கற்பகம் மிட்ட வனக் கனகத்
திருவுக்கு உருகிக் குழை மார்பா
பகலக் கிரணப் பரணச் சடிலப்
பரமற்கு ஒரு சொல் பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற்று உயர் மெய்ப்
பழநிக் குமரப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
165
பழநி தமரும் அமரும் தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் ...... அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய ...... எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவு ...... மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு ...... தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி ...... மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி ...... மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் ...... தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய ...... பெருமாளே.
தமரும் அமரு மனையும்
இனிய தனமும் அரசும்
அயலாக
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய எறியாதே
கமல விமல மரகதமணி
கனக மருவும் இருபாதம்
கருத அருளி
எனது தனிமை கழிய
அறிவு தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி மலையோனே
கொடிய பகடு
முடிய முடுகு
குறவர் சிறுமி மணவாளா
அமரர் இடரும் அவுணர் உடலும்
அழிய அமர் செய்தருள்வோனே
அறமும் நிறமும் அயிலும் மயிலும்
அழகும் உடைய பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=yKHrElDvGxo
Add (additional) Audio/Video Link
166
பழநி தலைவலி மருத்தீடு தனதன தந்தான தானான தானதன
தனதன தந்தான தானான தானதன
தனதன தந்தான தானான தானதன ...... தனதான
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் ...... விதியாதே
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம்
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும்
அலைகட லடைத்தேம காகோர ராவணனை
மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனே
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்
பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா
பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே.
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம் வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணியணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறி யிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும் வயதுக்கேது தாரீர்சொலீரெனவும் விதியாதே
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தே தொடா மாலிகாபரணம்
உனதடியி னிற்சூடவேநாடு மாதவர்கள் இருபாதம்
உளமது தரித்தே வினாவோடு பாடியருள்
வழிபட எனக்கே தயாவோடு தாளுதவ
உரகமது எடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும்
அலைகடல் அடைத்தே மகாகோர ராவணனை
மணிமுடி துணித்து ஆவியேயான ஜானகியை
அடலுடன் அழைத்தேகொள் மாயோனை மாமனெனு மருகோனே
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
இருசரண வித்தார வேலாயுதா உயர்செய்
பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு மணவாளா
பதுமவயலிற் பூகமீதே வரால்கள் துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
பழநிவரு கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=C23vqFlWpGQ
https://www.youtube.com/watch?v=koMDP9QU8hQ
Add (additional) Audio/Video Link
167
பழநி திடமிலி சற்குணமிலி தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான
தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான
திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் ...... புதமான
செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் ...... கமுமீதே
இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் ...... றமிழ்பாட
இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் ...... பெறவேணும்
கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் ...... பொரும்வேலா
கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் ...... கிறகோடே
படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் ...... கொருபாலா
பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் ...... பெருமாளே.
திடமிலி
சற் குணமிலி
நற் றிறமிலி
அற்புதமான செயலிலி
மெய்த் தவமிலி
நற் செபமிலி
சொர்க்கமுமீதே இடமிலி
கைக் கொடையிலி
சொற்கு இயல்பிலி நற்றமிழ் பாட
இருபதமுற்று
இருவினையற்று
இயல்கதியைப் பெறவேணும்
கெடுமதியுற்றிடும் அசுர
கிளைமடியப் பொரும்வேலா
கிரணகுறைப் பிறை
அறுகு அக்கு இதழ் மலர் கொக்கிறகோடே
படர்சடையிற் புனை
நடனப் பரமர்தமக்கொருபாலா
பலவயலிற் றரளநிறை
பழநிமலைப் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=cqIDd--ehbY
Add (additional) Audio/Video Link
168
பழநி திமிர உததி தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
திமிர வுததி யனைய நரக
செனன மதனில் ...... விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு ...... மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் ...... வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் ...... வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள ...... மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை ...... விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் ...... மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் ...... பெருமாளே.
திமிர வுததி யனைய நரக
செனன மதனில் விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியும் அணுகாதே
அமரர் வடிவும் அ திக குலமும்
அறிவு நிறையும் வரவே நின்
அருள தருளி எனையு மனதோடு
அடிமை கொளவும் வரவேணும்
சமர முகவெல் அசுரா தமது
தலைக ளுருள மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் பெருமாளே.
Audio/Video Link(s)
http://www.kaumaram.com/audio_k/csaudio.html
https://www.youtube.com/watch?v=0-iolJioUq8
Add (additional) Audio/Video Link
169
பழநி தோகைமயிலே கமல தானதன தானதன தானான தானதன
தானதன தானதன தானான தானதன
தானதன தானதன தானான தானதன ...... தனதான
தோகைமயி லேகமல மானேயு லாசமிகு
காமதுரை யானமத வேள்பூவை யேயினிமை
தோயுமநு போகசுக லீலாவி நோதமுழு ...... துணர்தேனே
சூதனைய சீதஇள நீரான பாரமுலை
மீதணைய வாருமிதழ் தாரீரெ னாணைமொழி
சோர்வதிலை யானடிமை யாவேனு மாணைமிக ...... மயலானேன்
ஆகமுற வேநகம தாலேவி டாதஅடை
யாளமிட வாருமென வேமாத ரார்களுட
னாசைசொலி யேயுழலு மாபாத னீதியிலி ...... யுனையோதேன்
ஆமுனது நேயஅடி யாரோடு கூடுகில
னீறுநுதல் மீதிடலி லாமூட னேதுமிலி
யாயினுமி யானடிமை யீடேற வேகழல்கள் ...... தருவாயே
மாகமுக டோடகில பாதாள மேருவுட
னேசுழல வாரியது வேதாழி யாவமரர்
வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுது ...... கடைநாளில்
வாருமென வேயொருவர் நோகாம லாலவிட
மீசர்பெறு மாறுதவி யேதேவர் யாவர்களும்
வாழஅமு தேபகிரு மாமாய னாரினிய ...... மருகோனே
மேகநிக ரானகொடை மானாய காதிபதி
வாரிகலி மாருதக ரோபாரி மாமதன
வேள்கலிசை வாழவரு காவேரி சேவகன ...... துளமேவும்
வீரஅதி சூரர்கிளை வேர்மாள வேபொருத
தீரகும ராகுவளை சேரோடை சூழ்கழனி
வீரைநகர் வாழ்பழநி வேலாயு தாவமரர் ...... பெருமாளே.
தோகை மயிலே கமல மானே உ(ல்)லாசம் மிகு காம
துரையான மத வேள் பூவையே
இனிமை தோயும் அநுபோக சுக லீலா விநோதம் முழுது
உணர் தேனே
சூது அனைய சீதள இள நீர் ஆன பார முலை மீது அணைய
வாரும் இதழ் தாரீர் என் ஆணை மொழி
சோர்வது இ(ல்)லை யான் அடிமை ஆவேன் உம் ஆணை
மிக மயலானேன்
ஆகம் உறவே நகம் அதாலே விடாத அடையாளம் இட
வாரும் எனவே
மாதர்களுடன் ஆசை சொ(ல்)லியே உழலும் மா பாதன்
நீதியிலி உனை ஓதேன்
ஆம் உனது நேய அடியாரோடு கூடுகிலன் நீறு நுதல் மீது
இடல் இலா மூடன் ஏதுமிலி
ஆயினும் யான் அடிமை ஈடேறவே கழல்கள் தருவாயே
மாகம் முகடோடு அகில பாதாள மேருவுடனே சுழல வாரி
அதுவே தாழியா(க)
அமரர் வாலி முதலானவர்கள் ஏனோர்களால் அமுது கடை
நாளில்
வாரும் எனவே ஒருவர் நோகாமல் ஆல விடம் ஈசர்
பெறுமாறு உதவியே தேவர் யாவர்களும் வாழ அமுதே பகிரும்
மா மாயனார் இனிய மருகோனே
மேக நிகரான கொடைமான் நாயக அதிபதி வாரி கலி மாருத
கரோ பாரி மா மதன வேள் கலிசை வாழ வரு காவேரி
சேவகனது உளம் மேவும் வீர
அதி சூரர் கிளை வேர் மாளவே பொருத தீர குமரா
குவளை சேர் ஓடை சூழ் கழனி வீரை நகர் வாழ் பழநி
வேலாயுதா அமரர் பெருமாளே. Add (additional) Audio/Video Link
170
பழநி நாத விந்து தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன ...... தனதான
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=zOfUpn65nMs
https://www.youtube.com/watch?v=99QyFQ5Czt0
Add (additional) Audio/Video Link
171
பழநி நிகமம் எனில் தனதனன தந்த தத்த தானன
தனதனன தந்த தத்த தானன
தனதனன தந்த தத்த தானன ...... தனதான
நிகமமெனி லொன்று மற்று நாடொறு
நெருடுகவி கொண்டு வித்தை பேசிய
நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள ...... பெயர்கூறா
நெளியமுது தண்டு சத்ர சாமர
நிபிடமிட வந்து கைக்கு மோதிர
நெடுகியதி குண்ட லப்ர தாபமு ...... முடையோராய்
முகமுமொரு சம்பு மிக்க நூல்களு
முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில்
முடிவிலவை யொன்று மற்று வேறொரு ...... நிறமாகி
முறியுமவர் தங்கள் வித்தை தானிது
முடியவுனை நின்று பத்தி யால்மிக
மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர ...... அருள்வாயே
திகுதிகென மண்ட விட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி யாருகர்
திகையினமண் வந்து விட்ட போதினு ...... மமையாது
சிறியகர பங்க யத்து நீறொரு
தினையளவு சென்று பட்ட போதினில்
தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் ...... கழுவேற
மகிதலம ணைந்த அத்த யோனியை
வரைவறம ணந்து நித்த நீடருள்
வகைதனைய கன்றி ருக்கு மூடனை ...... மலரூபம்
வரவரம னந்தி கைத்த பாவியை
வழியடிமை கொண்டு மிக்க மாதவர்
வளர்பழநி வந்த கொற்ற வேலவ ...... பெருமாளே.
நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு(ம்) நெருடு கவி
கொண்டு வித்தை பேசிய
நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா
நெளிய முது தண்டு சத்ர(ம்) சாமர(ம்) நிபிடம் இட வந்து
கைக்கு மோதிர நெடுகி அதி குண்டல ப்ரதாபமும்
உடையோராய்
முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து
இருக்குமோ எனில்
முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி முறியும்
அவர் தங்கள் வித்தை தான் இது
முடியவு(ம்) உனை நின்று பத்தியால் மிக மொழியும் வளர்
செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே
திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு செழியன் உடல் சென்று
பற்றி
ஆருகர் திகையின் அமண் வந்து விட்ட போதினும்
அமையாது
சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினை அளவு சென்று பட்ட
போதினில் தெளிய
இனி வென்றி விட்ட மோழைகள் கழு ஏற மகிதலம்
அணைந்த அத்த
யோனியை வரைவு அற மணந்து நித்த நீடு அருள் வகை
தனை அகன்றி இருக்கும் மூடனை
மல ரூபம் வர வர மனம் திகைத்த பாவியை வழி அடிமை
கொண்டு
மிக்க மாதவர் வளர் பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே. Add (additional) Audio/Video Link
172
பழநி நெற்றி வெயர்த்துளி தத்தன தத்தன தனத்த தானன
தத்தன தத்தன தனத்த தானன
தத்தன தத்தன தனத்த தானன ...... தனதான
நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு
குத்துமு லைக்குட மசைத்து வீதியி
னிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர் ...... மொழியாலே
நித்தம யக்கிகள் மணத்த பூமலர்
மெத்தையில் வைத்ததி விதத்தி லேயுட
னெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு ...... முறவாடி
உற்றவ கைப்படி பொருட்கள் யாவையு
மெத்தவு நட்பொடு பறித்து நாடொறு
முற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்க ...... ளுறவாமோ
உச்சித மெய்ப்புற அனைத்த யாவுடன்
மெய்ப்படு பத்தியி னிணக்க மேபெற
வுட்குளிர் புத்தியை யெனக்கு நீதர ...... வருவாயே
கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்
வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு
கற்பனை நெற்பல அளித்த காரண ...... னருள்பாலா
கற்பந கர்க்களி றளித்த மாதணை
பொற்புய மைப்புயல் நிறத்த வானவர்
கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகர ...... எனநாளும்
நற்றவ ரர்ச்சனை யிடத்த யாபர
வஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர்
நத்தணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு ...... மருகோனே
நட்டுவர் மத்தள முழக்க மாமென
மைக்குல மெத்தவு முழக்க மேதரு
நற்பழ நிப்பதி செழிக்க மேவிய ...... பெருமாளே.
நெற்றி வெயர்த் துளி துளிக்கவே இரு குத்து முலைக் குடம்
அசைத்து வீதியில் நிற்பவர் மைப் படர் விழிக் கலாபியர்
மொழியாலே நித்த(ம்) மயக்கிகள்
மணத்த பூ மலர் மெத்தையில் வைத்து அதி விதத்திலே
உடல் நெட்டு வரத் தொழில் கொடுத்து மேவியும் உறவாடி
உற்ற வகைப்படி பொருட்கள் யாவையும் மெத்தவு(ம்)
நட்பொடு பறித்து நாள் தொறும் உற்பன வித்தைகள்
தொடுக்கு மாதர்கள் உறவாமோ
உச்சித மெய்ப்பு உற அ(ன்)னை தயாவுடன் மெய்ப்படு
பத்தியின் இணக்கமே பெற உள் குளிர் புத்தியை எனக்கு
நீ தர வருவாயே
கற்ற தமிழ்ப் புலவனுக்குமே மகிழ்வுற்று ஒரு பொற் கொடி
களிக்கவே பொரு கற்பனை நெல் பல அளித்த காரணன்
அருள்பாலா
கற்ப நகர்க் களிறு அளித்த மாது அணை பொன் புய
மைப் புயல் நிறத்த வானவர்கட்கு இறை உட்கிட அருள்
க்ருபாகர என நாளும் நல் தவர் அர்ச்சனை இட
தயாபர வஸ்து எனப் புவியிடத்திலே வளர் நத்து அணி
செக்கரன் மகிழ்ச்சி கூர் தரு மருகோனே
நட்டுவர் மத்தள முழக்கமாம் என மைக் குலம் மெத்தவும்
முழக்கமே தரு நல் பழநிப் பதி செழிக்க மேவிய
பெருமாளே. Add (additional) Audio/Video Link
173
பழநி பகர்தற்கு அரிதான தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தன
தனனத்தன தான தந்தன ...... தனதான
பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு
பயிலப்பல காவி யங்களை ......யுணராதே
பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர்
பசலைத்தன மேபெ றும்படி ...... விரகாலே
சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல்
சருகொத்துள மேய யர்ந்துடல் ...... மெலியாமுன்
தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி
தனிலற்புத மாக வந்தருள் ...... புரிவாயே
நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலை யுண்டிடு
நுவல்மெய்ப்புள பால னென்றிடு ...... மிளையோனே
நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட
நொடியிற்பரி வாக வந்தவன் ...... மருகோனே
அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள்
அரனுக்கினி தாமொ ழிந்திடு ...... குருநாதா
அமரர்க்கிறை யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடி
அதனிற்குடி யாயி ருந்தருள் ...... பெருமாளே.
பகர்தற்கு அரிதான செந்தமிழ் இசையில்
சில பாடல் அன்பொடு பயில
பல காவியங்களை உணராதே
பவளத்தினை வீழியின்கனி யதனைப்பொரு
வாய் மடந்தையர் பசலைத்தனமே பெறும் விரகாலே
சகரக்கடல் சூழும் அம்புவி மிசை
இப்படியே திரிந்து
உழல் சருகொத்து உளமே அயர்ந்து
உடல் மெலியாமுன்
தகதித்திமி தாகி ணங்கிண என
உற்றெழு தோகை யம்பரிதனில்
அற்புத மாக வந்தருள் புரிவாயே
நுகர்வித்தகமாகும் என்று
உமை மொழியிற் பொழி பாலை யுண்டிடு
நுவல்மெய்ப்புள பாலன்
என்றிடும் இளையோனே
நுதிவைத்த கரா மலைந்திடு
களிறுக்கு அருளே புரிந்திட
நொடியிற் பரிவாக வந்தவன் மருகோனே
அகரப்பொருள் ஆதி யொன்றிடு
முதல் அக்கரமானதின் பொருள்
அரனுக்கு இனிதா மொழிந்திடு குருநாதா
அமரர்க்கு இறையே வணங்கிய
பழநித் திருவாவினன்குடி அதனில்
குடியாய் இருந்தருள் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=MJ0raRhNPyw
Add (additional) Audio/Video Link
174
பழநி பஞ்ச பாதகன் தந்த தானனந் தானதன தானதன
தந்த தானனந் தானதன தானதன
தந்த தானனந் தானதன தானதன ...... தனதான
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு
வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி
பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை ...... பவுஷாசை
பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழ
பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை
பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு ...... சதிகாரர்
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர்
தங்கள் வாணிபங் காரியம லாமலரு
ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக ...... ழடியேனை
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி
சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி
கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் ...... புரிவாயே
வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ
டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு
வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி ...... முருகோனே
மங்கை மோகசிங் காரரகு ராமரிட
தங்கை சூலியங் காளியெமை யீணபுகழ்
மங்க ளாயிசந் தானசிவ காமியுமை ...... யருள்பாலா
கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை
பெண்கள் நாயகந் தோகைமயில் போலிரச
கொங்கை மால்குறம் பாவையவல் தீரவர ...... அணைவோனே
கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல்
கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர்
கந்தி யோடகஞ் சேர்பழநி வாழ்குமர ...... பெருமாளே.
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்
வெகு வஞ்ச லோபியன்
சூதுகொலை காரன்
மதி பண்கொளாதவன்
பாவகட லூடுநுழை பவுஷாசை பங்கன்
மோதியம் பாழ்நரகில் வீணின்விழ
பெண்டிர் வீடுபொன் தேடி
நொடி மீதில்மறை பஞ்ச மாமலம் பாசமொடு கூடி
வெகு சதிகாரர் அஞ்சு பூதமுண்டா கடிய காரர்
இவர் தங்கள் வாணிபங் காரியம லாமல்
அருளன்பர் பாலுடன் கூடியறி யாதபுகழ் அடியேனை
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி
சந்த்ர சேகரன் பாவைவிளையாடு
படிக அந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் புரிவாயே
வஞ்ச மாசுரன் சேனைகடலோடு குவடுங்கவே
இனன் போலவொளிர் வேலைவிடு
வண்கையா கடம் பேடுதொடை யாடுமுடி முருகோனே
மங்கை மோகசிங்கார ரகு ராமரிட தங்கை
சூலியங் காளியெமை யீணபுகழ் மங்களாயி
சந தானசிவ காமியுமை யருள்பாலா
கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை
பெண்கள் நாயகந் தோகைமயில் போல்
இரச கொங்கை மால்குறம் பாவை
அவல் தீரவர அணைவோனே
கொண்டல் சூழுமஞ்சோலை மலர் வாவி
கயல் கந்து பாய நின்றாடு துவர் பாகை யுதிர்
கந்தி யோடகஞ் சேர்
பழநி வாழ்குமர பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=H_AaFi5UmJc
Add (additional) Audio/Video Link
175
பழநி பாரியான கொடை தான தானதனத் தந்த தானன
தான தானதனத் தந்த தானன
தான தானதனத் தந்த தானன ...... தனதான
பாரி யானகொடைக் கொண்ட லேதிரு
வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு
பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக ...... அபிராம
பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்
சீல ஞாலவிளக் கின்ப சீவக
பாக சாதனவுத் துங்க மானத ...... எனவோதிச்
சீர தாகஎடுத் தொன்று மாகவி
பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை
சீறு வார்கடையிற் சென்று தாமயர் ...... வுறவீணே
சேய பாவகையைக் கொண்டு போயறி
யாம லேகமரிற் சிந்து வார்சிலர்
சேய னார்மனதிற் சிந்தி யாரரு ...... குறலாமோ
ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு
வாயி னேர்படவுற் றன்று மூலமெ
னார வாரமதத் தந்தி தானுய ...... அருள்மாயன்
ஆதி நாராணனற் சங்க பாணிய
னோது வார்களுளத் தன்பன் மாதவ
னான நான்முகனற் றந்தை சீதரன் ...... மருகோனே
வீர சேவகவுத் தண்ட தேவகு
மார ஆறிருபொற் செங்கை நாயக
வீசு தோகைமயிற் றுங்க வாகன ...... முடையோனே
வீறு காவிரியுட் கொண்ட சேகர
னான சேவகனற் சிந்தை மேவிய
வீரை வாழ்பழநித் துங்க வானவர் ...... பெருமாளே.
பாரியானகொடைக் கொண்டலே
திரு வாழ் விசாலதொடைத் திண்புயா
எழு பாரும் ஏறுபுகழ்க் கொண்ட நாயக அபிராம
பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்
சீல ஞாலவிளக் கின்ப சீவக
பாக சாதன உத்துங்க மானத எனவோதி
சீரதாக எடுத்தொன்று மாகவி பாடி னாலும்
இரக்கஞ்செயாதுரை சீறுவார்
கடையிற் சென்று தாமயர்வுற வீணே
சேய பாவகையைக் கொண்டு போய்
அறியாம லேகமரிற் சிந்து வார்சிலர்
சேய னார்மனதிற் சிந்தியார் அருகுறலாமோ
ஆரு நீர்மைமடுக் கண்கரா நெடுவாயில்
நேர்படவுற் றன்று மூலமென
ஆர வாரமதத் தந்திதான் உ(ய்)ய அருள்மாயன்
ஆதி நாராணனற் சங்க பாணியன்
ஓது வார்களுளத் தன்பன்
மாதவனான நான்முகன் நற் றந்தை சீதரன் மருகோனே
வீர சேவகவுத் தண்ட தேவகுமார
ஆறிருபொற் செங்கை நாயக
வீசு தோகைமயிற் றுங்க வாகனமுடையோனே
வீறு காவிரியுட் கொண்ட சேகரனான சேவகன்
நற் சிந்தை மேவிய வீரை வாழ்பழநி
துங்க வானவர் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=hCc13imQRkw
Add (additional) Audio/Video Link
176
பழநி புடவிக்கு அணி தனனத் தனதன தனதன தந்தத்
தனனத் தனதன தனதன தந்தத்
தனனத் தனதன தனதன தந்தத் ...... தனதான
புடவிக் கணிதுகி லெனவள ரந்தக்
கடலெட் டையுமற குடிமுநி யெண்கட்
புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் ...... சதுர்வேதன்
புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்
கடினத் தொடுசில சிறுநகை கொண்டற்
புதகர்த் தரகர பரசிவ னிந்தத் ...... தனிமூவ
ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற்
செவியுட் பிரணவ ரகசிய மன்புற்
றிடவுற் பனமொழி யுரைசெய்கு ழந்தைக் ...... குருநாதா
எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக்
கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட்
டிடவுக் கிரமொடு வெகுளிகள் பொங்கக் ...... கிரியாவும்
பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச்
சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப்
புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் ...... தமுமாகப்
பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக்
குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப்
புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் ...... குமரேசா
படியிற் பெருமித தகவுயர் செம்பொற்
கிரியைத் தனிவலம் வரஅர னந்தப்
பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற் ...... பதனாலே
பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக்
கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற்
பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் ...... பெருமாளே.
புடவிக்கு அணி துகில் என வளர்
அந்தக் கடல் எட்டையும் அற குடி முநி
எண் கண் புநிதச் சத தள நிலை கொள் சயம்புச் சதுர்
வேதன்
புரம் அட்டு எரி எழ விழி கனல் சிந்தி
கடினத்தொடு சில சிறுநகை கொண்ட அற்புத கர்த்தர் அரகர
பரசிவன்
இந்தத் தனி மூவர்இட(ம்) சித்தமும் நிறை தெளிவு உறவும்
பொன் செவியுள் பிரணவ ரகசியம் அன்பு உற்றிட
உற்பன மொழி உரை செய் குழந்தைக் குருநாதா
எதிர் உற்ற அசுரர்கள் படை கொடு சண்டைக்கு இடம்
வைத்திட
அவர் குலம் முழுதும் பட்டிட
உக்கிரமொடு வெகுளிகள் பொங்கக் கிரி யாவும் பொடி
பட்டு உதிரவும்
விரிவுறும் அண்டச் சுவர் விட்டு அதிரவும்
முகடு கிழிந்து அப்புறம் அப் பர வெளி கிடு கிடு எனும்
சத்தமும் ஆக
பொருதுக் கையில் உள அயில் நிணம் உண்க
குருதிப் புனல் எழு கடலினும் மிஞ்ச
புரவிக் கன மயில் நட விடும் விந்தைக் குமரேசா
படியில் பெருமித தக உயர் செம் பொன் கிரியைத் தனி வலம்
வர
அரன் அந்தப் பலனைக் கரி முகன் வசம் அருளும் பொற்பு
அதனாலே
பரன் வெட்கிட உளம் மிகவும் வெகுண்டு
அக் கனியைத் தர விலை என அருள் செந்தில்
பழநிச் சிவகிரி தனில் உறை கந்தப் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=DLW6FjkJLKU
Add (additional) Audio/Video Link
177
பழநி புடைசெப் பென தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்
பொருமிக் கலசத் ...... திணையாய
புளகக் களபக் கெருவத் தனமெய்ப்
புணரத் தலையிட் ...... டமரேசெய்
அடைவிற் றினமுற் றவசப் படுமெற்
கறிவிற் பதடிக் ...... கவமான
அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்
றடிமைக் கொருசொற் ...... புகல்வாயே
குடமொத் தகடக் கரடக் கலுழிக்
குணமெய்க் களிறுக் ...... கிளையோனே
குடிபுக் கிடமிட் டசுரப் படையைக்
குறுகித் தகரப் ...... பொரும்வேலா
படலைச் செறிநற் கதலிக் குலையிற்
பழமுற் றொழுகப் ...... புனல்சேர்நீள்
பழனக் கரையிற் கழைமுத் துகுநற்
பழநிக் குமரப் ...... பெருமாளே.
புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள் பொருமிக்
கலசத்து இணையாய புளகக் களபக் கெருவத் தன மெய்ப்
புணரத் தலை இட்டு அமரே செய்
அடைவில் தினம் உற்று அவசப்படும் எற்கு அறிவில்
பதடிக்கு அவமான அசடற்கு உயர் ஒப்பது இல் நல் க்ருபை
உற்று அடிமைக்கு ஒரு சொல் புகல்வாயே
குடம் ஒத்த கடக் கரடக் கலுழிக் குணம் மெய்க் களிறுக்கு
இளையோனே
குடி புக்கிட மி(மீ)ட்டு அசுரப் படையைக் குறுகித் தகரப்
பொரும் வேலா
படலைச் செறி நல் கதலிக் குலையில் பழம் முற்(றி) ஒழுகப்
புனல் சேர் நீள் பழனக் கரையில் கழை முத்து உகு நல் பழநிக்
குமரப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
178
பழநி பெரியதோர் கரி தனதனா தனதன தந்த தானன
தனதனா தனதன தந்த தானன
தனதனா தனதன தந்த தானன ...... தனதான
பெரியதோர் கரியிரு கொம்பு போலவெ
வடிவமார் புளகித கும்ப மாமுலை
பெருகியே யொளிசெறி தங்க வாரமு ...... மணியான
பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவை
அயிலதோ வெனுமிரு கண்க ளாரவெ
பிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெ ...... வருமானார்
உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களை
மனையிலே வினவியெ கொண்டு போகிய
யுளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் ...... மயலாலே
உருகியே யுடலற வெம்பி வாடியெ
வினையிலே மறுகியெ நொந்த பாதக
னுனதுதாள் தொழுதிட இன்ப ஞானம ...... தருள்வாயே
அரியதோ ரமரர்க ளண்ட மேறவெ
கொடியதோ ரசுரர்க ளங்க மாளவெ
அடலதோ டமர்புரி கின்ற கூரிய ...... வடிவேலா
அரகரா வெனமிக அன்பர் சூழவெ
கடியதோர் மயில்மிசை யன்றை யேறியெ
அவனியோர் நொடிவரு கின்ற காரண ...... முருகோனே
பரியதோர் கயிறனை கொண்டு வீசவெ
உறியதோய் தயிர்தனை யுண்டு நாடியெ
பசியதோ கெடவருள் கொண்ட மாயவன் ...... மருகோனே
பரமமா நதிபுடை கொண்ட ணாவவெ
வனசமா மலரினில் வண்டு லாவவெ
பழநிமா மலைதனி லென்று மேவிய ...... பெருமாளே.
பெரியது ஓர் கரி இரு கொம்பு போலவெ வடிவம் ஆர் புளகித
கும்ப மா முலை பெருகியே ஒளி செறி தங்க ஆரமும்
அணியான பிறையதோ எ(ன்)னு(ம்) நுதல் துங்க மீறு வை
அயில் அதோ எ(ன்)னும் இரு கண்கள் ஆரவெ பிறகு எலாம்
விழு குழல் கங்குல் ஆரவெ வரும் மானார்
உரியது ஓர் பொருள் கொடு வந்த பேர்களை மனையிலே
வினவியெ கொண்டு போகிய உளவிலே மருவிய வஞ்ச
மாதர்கள் மயலாலே
உருகியே உடல் அற வெம்பி வாடியெ வினையிலே மறுகியெ
நொந்த பாதகன் உனது தாள் தொழுதிட இன்ப ஞானம்
அது அருள்வாயே
அரியது ஓர் அமரர்கள் அண்டம் ஏறவெ கொடியதோர்
அசுரர்கள் அங்கம் மாளவெ அடல் அதோடு அமர் புரிகின்ற
கூரிய வடி வேலா
அரகரா என மிக அன்பர் சூழவெ கடியது ஓர் மயில் மிசை
அன்றை ஏறியெ அவனி ஓர் நொடி வருகின்ற காரண
முருகோனே
பரியது ஓர் கயிறு அ(ன்)னை கொண்டு வீசவெ உறி அது
தோய் தயிர் தனை உண்டு நாடியெ பசியதோ கெட அருள்
கொண்ட மாயவன் மருகோனே
பரம மா நதி புடை கொண்டு அணாவவெ வனச மா
மலரினில் வண்டு உலாவவெ பழநி மா மலை தனில்
என்று(ம்) மேவிய பெருமாளே. Add (additional) Audio/Video Link
179
பழநி போதகம் தரு தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன ...... தனதான
போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் சாமீ நமோநம ...... அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்
பாத கஞ்செறி சூரா திமாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே
பாதி சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர்
ஆதி சங்கர னார்பா கமாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் சாமீ நமோநம ...... அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்
பாத கஞ்செறி சூரா திமாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே
பாதி சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர்
ஆதி சங்கர னார்பா கமாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=yiIY9Dry_-I
Add (additional) Audio/Video Link
180
பழநி மந்தரமதெனவே தந்ததன தனனா தனந்த
தந்ததன தனனா தனந்த
தந்ததன தனனா தனந்த ...... தனதான
மந்தரம தெனவே சிறந்த
கும்பமுலை தனிலே புனைந்த
மஞ்சள்மண மதுவே துலங்க ...... வகைபேசி
மன்றுகமழ் தெருவீ திவந்து
நின்றவரை விழியால் வளைந்து
வந்தவரை யருகே யணைந்து ...... தொழில்கூறி
எந்தளவு மினிதா கநம்பு
தந்துபொருள் தனையே பிடுங்கி
யின்பமருள் விலைமா தர்தங்கள் ...... மனைதேடி
எஞ்சிமன முழலா மலுன்றன்
அன்புடைமை மிகவே வழங்கி
என்றனையு மினிதா ளஇன்று ...... வரவேணும்
விந்தையெனு முமைமா துதந்த
கந்தகுரு பரதே வவங்க
மென்றவரை தனில்மே வுமெந்தை ...... புதல்வோனே
மிஞ்சுமழ கினிலே சிறந்த
மங்கைகுற மடமா துகொங்கை
மென்கிரியி லிதமா யணைந்த ...... முருகோனே
சிந்தைமகிழ் புலவோர் கள்வந்து
வந்தனைசெய் சரணா ரவிந்த
செந்தமிழி லுனையே வணங்கு ...... குருநாதர்
தென்றல்வரை முநிநா தரன்று
கும்பிடந லருளே பொழிந்த
தென்பழநி மலைமே லுகந்த ...... பெருமாளே.
மந்தரம் அது எனவே சிறந்த கும்ப முலை தனிலே புனைந்த
மஞ்சள் மணம் அதுவே துலங்க வகை பேசி
மன்று கமழ் தெரு வீதி வந்து நின்றவரை விழியால் வளைந்து
வந்தவரை அருகே அணைந்து தொழில் கூறி
எந்த அளவும் இனிதாக நம்பு தந்து பொருள் தனையே
பிடுங்கி இன்பம் அருள் விலைமாதர் தங்கள் மனை தேடி
எஞ்சி மனம் உழலாமல் உன்றன் அன்பு உடைமை மிகவே
வழங்கி என் தனையும் இனிது ஆள இன்று வர வேணும்
விந்தை எனும் உமை மாது தந்த கந்த குரு பர தேவ
வங்கம் என்ற வரை தனில் மேவும் எந்தை புதல்வோனே
மிஞ்சும் அழகினிலே சிறந்த மங்கை குற மட மாது
கொங்கை மென் கிரியில் இதமாய் அணைந்த முருகோனே
சிந்தை மகிழ் புலவோர்கள் வந்து வந்தனை செய் சரண
அரவிந்த
செம் தமிழில் உனையே வணங்கு குரு நாதர் தென்றல்
வரை முநி நாதர் அன்று கும்பிட நல் அருளே பொழிந்த
தென் பழநி மலை மேல் உகந்த பெருமாளே. Add (additional) Audio/Video Link
181
பழநி மருமலரினன் தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த
தனதனன தந்த தந்த ...... தனதான
மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி
மதியொடுபி றந்து முன்பெய் ...... வதையாலே
வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த
மதலையென வந்து குன்றின் ...... வடிவாகி
இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து
இரவுபகல் கொண்டொ டுங்கி ...... யசடாகும்
இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து
னிணையடிவ ணங்க என்று ...... பெறுவேனோ
திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை
திகழெரியி டுங்கு ரங்கை ...... நெகிழாத
திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள்
செறிவுடன றிந்து வென்ற ...... பொறியாளர்
பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற
பரமபத நண்ப ரன்பின் ...... மருகோனே
பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க
பழநிமலை வந்த மர்ந்த ...... பெருமாளே.
மரு மலரினன் துரந்து விட வினை அருந்த அந்தி மதியொடு
பிறந்து
முன்பு எய் வதையாலே வகை தனை மறந்து எழுந்து முலை
தனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி
இரு மயல் கொடுந் துவண்டு பொதுவையர் அகம் புகுந்து
இரவு பகல் கொண்டு ஒடுங்கி அசடாகும்
இரு வினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து இணை
அடி வணங்க என்று பெறுவேனோ
திருவொடு பெயர்ந்து இருண்ட வனமிசை நடந்து இலங்கை
திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத திடம் உள முகுந்தர்
கஞ்சன் வர விடும் எல் வஞ்சகங்கள் செறிவுடன் அறிந்து
வென்ற பொறியாளர்
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற
பரம பத நண்பர் அன்பின் மருகோனே
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க
பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே. Add (additional) Audio/Video Link
182
பழநி மனக்கவலை ஏதும் தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த
தனத்ததன தான தந்த ...... தனதான
மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே
வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி
மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி
வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
மிகுத்தபொரு ளாக மங்கள் ...... முறையாலே
வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும்
மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து
மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள்
வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி
மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா
தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே
செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த
திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.
மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
வகைக்கு மநு நூல் விதங்கள் தவறாதே
வகைப்படி மனோரதங்கள் தொகைப்படியினால் இலங்கி
மயக்கமற வேதமுங்கொள் பொருள்நாடி
வினைக்குரிய பாதகங்கள் துகைத்(து) உவகை யால் நினைந்து
மிகுத்தபொருள் ஆகமங்கள் முறையாலே
வெகுட்சிதனையே துரந்து களிப்பினுடனே நடந்து
மிகுக்கும் உனையே வணங்க வரவேணும்
மனத்தில்வருவோனெ என்(று) உன் அடைக்கலம் அதாக வந்து
மலர்ப்பதமதே பணிந்த முநிவோர்கள்
வரர்க்கும் இமையோர்க ளென்பர் தமக்கும் மனமேயிரங்கி
மருட்டிவரு சூரை வென்ற முனைவேலா
தினைப்புனமுனே நடந்து குறக்கொடியையே மணந்து
செகத்தை முழுதாள வந்த பெரியோனே
செழித்தவளமே சிறந்த மலர்ப்பொழில்களே நிறைந்த
திருப்பழநி வாழவந்த பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?time_continue=7&v=h7rL3hDvpKw
https://www.youtube.com/watch?v=CiX9EuQpXG0
https://www.youtube.com/watch?v=u5cMgHad-IA
Add (additional) Audio/Video Link
183
பழநி மலரணி கொண்டை தனதன தந்தத் தனத்த தானன
தனதன தந்தத் தனத்த தானன
தனதன தந்தத் தனத்த தானன ...... தனதான
மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள்
சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடு
மையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுக ...... மதியாலே
மருவுநி தம்பத் தடத்தி லேநிறை
பரிமள கொங்கைக் குடத்தி லேமிக
வலியவும் வந்தொத் திடத்தி லேவிழி ...... வலையாலே
நிலவெறி யங்கக் குலுக்கி லேயெழில்
வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகன
நிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயு ...... மொயிலாலே
நிதமிய லுந்துர்க் குணத்தி லேபர
வசமுட னன்புற் றிணக்கி லேயொரு
நிமிஷமி ணங்கிக் கணத்தி லேவெகு ...... மதிகேடாய்
அலையநி னைந்துற் பநத்தி லேயநு
தினமிகு மென்சொப் பனத்தி லேவர
அறிவும ழிந்தற் பனத்தி லேநிதம் ...... உலைவேனோ
அசடனை வஞ்சச் சமர்த்த னாகிய
கசடனை யுன்சிற் கடைக்க ணாடிய
மலர்கொடு நின்பொற் பதத்தை யேதொழ ...... அருள்தாராய்
பலபல பைம்பொற் பதக்க மாரமு
மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப்ப னீரொடு
பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு ...... மணிவோனே
பதியினில் மங்கைக் கதித்த மாமலை
யொடுசில குன்றிற் றரித்து வாழ்வுயர்
பழநியி லன்புற் றிருக்கும் வானவர் ...... பெருமாளே.
மலர் அணி கொண்டைச் சொருக்கிலே அவள் சொ(ல்)லும்
மொழி இன்பச் செருக்கிலே கொடுமையும் அடர் நெஞ்சத்
திருக்கிலே முக மதியாலே
மருவு நிதம்பத் தடத்திலே நிறை பரிமள கொங்கைக்
குடத்திலே மிக வலியவும் வந்து ஒத்து இடத்திலே விழி
வலையாலே
நிலவு எறி அங்கக் குலுக்கிலே எழில் வளை புனை செம்
கைக் கிலுக்கிலே கன நிதி பறி அந்தப் பிலுக்கிலே செயும்
ஒயிலாலே
நிதம் இயலும் துர்க் குணத்திலே பர வசமுடன் அன்புற்று
இணக்கிலே ஒரு நிமிஷம் இணங்கிக் கணத்திலே வெகு
மதி கேடாய்
அலைய நினைந்து உற்பநத்திலே அநு தினம் மிகு என்
சொப்பனத்திலே வர அறிவும் அழிந்து அற்பன் அ(த்)திலே
நி(த்)தம் உலைவேனோ
அசடனை வஞ்சச் சமர்த்தனாகிய கசடனை உன் சில்
கடைக்கண் நாடிய மலர் கொடு நின் பொன் பதத்தையே
தொழ அருள் தாராய்
பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும் அடிமை சொலும் சொல்
தமிழ் பன்னீரொடு பரிமள மிஞ்சக் கடப்ப மாலையும்
அணிவோனே
பதியினில் மங்கைக் கதித்த மா மலை ஒடு சில குன்றில்
தரித்து வாழ் உயர் பழநியில் அன்புற்று இருக்கும் வானவர்
பெருமாளே. Add (additional) Audio/Video Link
184
பழநி முகிலளகத்தில் தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
முகிலள கத்திற் கமழ்ந்த வண்பரி
மளஅலர் துற்றக் கலந்தி டந்தரு
முகிழ்நுதி தைத்துத் துயர்ந்த மங்கைய ...... ரங்கமீதே
முகம்வெயர் வுற்றுப் பரந்து செங்கயல்
விழியிணை செக்கச் சிவந்து குங்கும
ம்ருகமத மத்தத் தனங்க ளின்மிசை ...... யெங்குமேவி
உகவுயி ரொத்துப் புயங்க ளின்புற
வுறவினை யுற்றுத் திரண்டு கொங்கள
வுறுமணை யுற்றுத் திரங்கு மஞ்சமி ...... லொன்றிமேவி
ஒளிதிகழ் பத்மக் கரங்க ளின்புற
முறுவளை யொக்கக் கலின்க லென்கவு
முயர்மய லுற்றுற் றிரங்கு மன்பதொ ...... ழிந்திடாதோ
செகமுழு தொக்கப் பயந்த சங்கரி
அடியவர் சித்தத் துறைந்த சம்ப்ரம
சிவனொரு பக்கத் துறைந்த மங்கைசு ...... மங்கைநீடு
திகழ்வன பச்சைப் பசங்கி யம்பண
கரதலி கச்சுற் றிலங்கு கொங்கையள்
திருவரு ணற்பொற் பரந்தி டும்பரை ...... யண்டமீதே
பகலிர வற்றிட் டுயர்ந்த அம்பிகை
திரிபுரை முற்றிட் டிரண்டொ டொன்றலர்
பரிவுற வொக்கச் செயும்ப ரம்ப்ரமி ...... யன்புகூரும்
பதிவ்ரதை மிக்கச் சிரந்தெ ரிந்தருள்
பகிரதி வெற்பிற் பிறந்த பெண்தரு
பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே.
முகில் அளகத்தில் கமழ்ந்த வண் பரிமள அலர் துற்றக்
கலந்து இடம் தரு முகிழ் நுதி தைத்துத் துயர்ந்த
மங்கையர் அங்கம் மீதே
முகம் வியர்வு உற்றுப் பரந்து செம் கயல் விழி இணை
செக்கச் சிவந்து குங்கும ம்ருக்மத மத்தத் தனங்களின்
மிசை எங்கும் மேவி
உக உயிர் ஒத்துப் புயங்கள் இன்புற உறவினை உற்றுத்
திரண்டு கொங்கு அளவுறும் அணை உற்றுத் திரங்கும்
மஞ்சமில் ஒன்றி மேவி
ஒளி திகழ் பத்மக் கரங்களின் புறம் உறு வளை ஒக்கக்
கலின் கல் என்கவும் உயர் மயல் உற்று இரங்கும் அன்பு
அது ஒழிந்திடாதோ
செக முழுது ஒக்கப் பயந்த சங்கரி அடியவர் சித்தத்து
உறைந்த சம்ப்ரம சிவன் ஒரு பக்கத்து உறைந்த மங்கை
சு மங்கை
நீடு திகழ்வன பச்சைப் பசங்கி அம்பண(ம்) கரதலி கச்சு
உற்று இலங்கு கொங்கையள் திரு அருள் நல் பொன்
பரந்திடும் பரை அண்டம் மீதே பகல் இரவு அற்றிட்டு
உயர்ந்த அம்பிகை
திரி புரை முற்றிட்டு இரண்டொடு ஒன்று அ(ல்)லர்
பரிவுற ஒக்கச் செய்யும் பரம்ப்ரமி அன்பு கூரும் பதிவ்ரதை
மிக்கச் சிரம் தெரிந்து அருள் பகிரதி வெற்பில் பிறந்த
பெண் தரு
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் தம்பிரானே. Add (additional) Audio/Video Link
185
பழநி முகை முளரி தனதனன தனதான தனதனன தனதான
தனதனன தனதான ...... தனதான
முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு
முதிர்விலிள தனபார ...... மடவார்தோள்
முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள்
மொழியுமது மதியாமல் ...... தலைகீழ்வீழ்ந்
தகமகிழ விதமான நகையமுத மெனவூற
லசடரக மெழவாகி ...... மிகவேயுண்
டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளி
னமுதுபரு கிடஞான ...... மருளாயோ
மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி
மறுகுபுனல் கெடவேலை ...... விடுவோனே
வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறி
வருபனிரு கரதீர ...... முருகோனே
பகர்வரிய ரெனலாகு முமைகொழுந ருளமேவு
பரமகுரு வெனநாடு ...... மிளையோனே
பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடு
பழநிமலை தனில்மேவு ...... பெருமாளே.
முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும்
முதிர்வு இல் இள தன பார மடவார் தோள்முழுகி அமிழ்
அநுபோக விழலன் என
உலகோர்கள் மொழியும் அது மதியாமல் தலை கீழ் வீழ்ந்து
அகம் மகிழ விதமான நகை அமுதம் என ஊறல் அசடர்
அகம் எழ ஆகி மிகவே உண்டு அழியும் ஒரு தமியேனும்
மொழியும் உனது இரு தாளின் அமுது பருகிட ஞானம்
அருளாயோ
மகரம் எறி திரை மோது பகர கடல் தட வாரி மறுகு புனல்
கெட வேலை விடுவோனே
வரிசை அவுண் மக சேனை உக முடிய மயில் ஏறி வரு
ப(ன்)னிரு கர தீர முருகோனே
பகர் அரியர் எனலாகும் உமை கொழுநர் உளம் மேவும் பரம
குரு என நாடும் இளையோனே
பணில(ம்) மணி வெயில் வீசும் அணி சிகர மதி சூடு பழநி
மலை தனில் மேவு(ம்) பெருமாளே. Add (additional) Audio/Video Link
186
பழநி முதிரவுழையை தனன தனன தனத்த தனன தனன தனத்த
தனன தனன தனத்த ...... தனதான
முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து
முதிய கயல்கள் கயத்தி ...... னிடையோடி
முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி
முறைமை கெடவு மயக்கி ...... வருமாதர்
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு
வலிய அடிமை புகுத்தி ...... விடுமாய
மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
மகிழ வுனது பதத்தை ...... யருள்வாயே
சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து
சகடு மருத முதைத்த ...... தகவோடே
தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்த
தநுவை யுடைய சமர்த்தன் ...... மருகோனே
அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து
அமரர் சிறையை விடுத்து ...... வருவோனே
அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு
ளழகு மயிலை நடத்து ...... பெருமாளே.
முதிர உழையை வனத்தில் முடுகி வடுவை அழித்து முதிய
கயல்கள் கயத்தின் இடை ஓடி முரண வளரும் விழிக்குள்
மதன விரகு பயிற்றி
முறைமை கெடவு(ம்) மயக்கி வரு(ம்) மாதர் மதுர அமுத
மொழிக்கு(ம்) மகுட களப முலைக்கு(ம்) வலிய அடிமை
புகுத்தி விடு
மாய மனதை உடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
மகிழ உனது பதத்தை அருள்வாயே
சதுரன் வரையை எடுத்த நிருதன் உடலை வளைத்து
சகடு மருதம் உதைத்த தகவோடே தழையு(ம்) மரமு(ம்)
நிலத்தில் மடிய அமரை விளைத்த தநுவை உடைய
சமர்த்தன் மருகோனே
அதிர முடுகி எதிர்த்த அசுரர் உடலை வதைத்து அமரர்
சிறையை விடுத்து வருவோனே
அரிய புகழை அமைத்த பெரிய பழநி மலைக்குள் அழகு
மயிலை நடத்தும் பெருமாளே. Add (additional) Audio/Video Link
187
பழநி முத்துக்கு தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான
முத்துக்குச் சிட்டுக் குப்பிமு
டித்துச்சுக் கைப்பிற் சுற்றியு
முற்பக்கத் திற்பொற் புற்றிட ...... நுதல்மீதே
முக்யப்பச் சைப்பொட் டிட்டணி
ரத்நச்சுட் டிப்பொற் பட்டிவை
முச்சட்டைச் சித்ரக் கட்டழ ...... கெழிலாடத்
தித்திக்கச் சொற்சொற் றுப்பிதழ்
நச்சுக்கட் கற்புச் சொக்கியர்
செப்புக்கொக் கக்கச் சுப்பெறு ...... தனமேருத்
திட்டத்தைப் பற்றிப் பற்பல
லச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர்
சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி ...... யுழல்வேனோ
மெத்தத்துக் கத்தைத் தித்தியி
னிச்சித்தத் திற்பத் தத்தொடு
மெச்சிச்சொர்க் கத்திற் சிற்பர ...... மருள்வாயே
வித்தைக்குக் கர்த்ருத் தற்பர
முக்கட்சித் தர்க்குப் புத்திர
விச்சித்ரச் செச்சைக் கத்திகை ...... புனைவோனே
நித்யக்கற் பத்திற் சித்தர்க
ளெட்டுத்திக் குக்குட் பட்டவர்
நிஷ்டைக்கற் புற்றப் பத்தர்கள் ...... அமரோரும்
நெட்டுக்குப் புட்பத் தைக்கொடு
முற்றத்துற் றர்ச்சிக் கப்பழ
நிக்குட்பட் டத்துக் குற்றுறை ...... பெருமாளே.
முத்துக் குச்சு இட்டுக் குப்பி முடித்துச் சுக்கைப் பின்
சுற்றியும்
முன் பக்கத்தில் பொற்பு உற்றிட நுதல் மீதே முக்யப் பச்சைப்
பொட்டு இட்டு
அணி ரத்நச் சுட்டிப் பொன் பட்டு இவை முச்சட்டைச் சித்ரக்
கட்டழகு எழில் ஆட
தித்திக்கச் சொற் சொல் துப்பு இதழ் நச்சுக் கண் கற்புச்
சொக்கியர்
செப்புக்கு ஒக்கக் கச்சுப் பெறு தன மேருத் திட்டத்தைப்
பற்றிய பற்பல லச்சைக்கு உட்பட்டுத் தொட்டு
உயிர் சிக்கிச் சொக்கிக் கெட்டு இப்படி உழல்வேனோ
மெத்தத் துக்கத்தைத் தித்தி இனிச் சித்தத்தில்
பத்தத்தொடு மெச்சிச் சொர்க்கத்தில் சிற்பரம் அருள்வாயே
வித்தைக்குக் கர்த்ருத் தற்பர முக்கண் சித்தர்க்குப் புத்திர
வி(ச்)சித்ரச் செச்சைக் கத்திகை புனைவோனே
நித்யக் கற்பத்தில் சித்தர்கள் எட்டுத் திக்குக்குள் பட்டவர்
நிஷ்டைக்கு அ(ற்)ன்பு உற்றப் பத்தர்கள் அமரோரும்
நெட்டுக்குப் புட்பத்தைக் கொ(ண்)டு முற்றத்து உற்று
அர்ச்சிக்க
பழநிக்குள் பட்டத்துக்கு உற்று உறை பெருமாளே. Add (additional) Audio/Video Link
188
பழநி மூலம் கிளர் ஓர் தானந்தன தானன தானன
தானந்தன தானன தானன
தானந்தன தானன தானன ...... தனதான
மூலங்கிள ரோருரு வாய்நடு
நாலங்குல மேனடு வேரிடை
மூள்பிங்கலை நாடியொ டாடிய ...... முதல்வேர்கள்
மூணும்பிர காசம தாயொரு
சூலம்பெற வோடிய வாயுவை
மூலந்திகழ் தூண்வழி யேயள ...... விடவோடிப்
பாலங்கிள ராறுசி காரமொ
டாருஞ்சுட ராடுப ராபர
பாதம்பெற ஞானச தாசிவ ...... மதின்மேவிப்
பாடுந்தொனி நாதமு நூபுர
மாடுங்கழ லோசையி லேபரி
வாகும்படி யேயடி யேனையும் ...... அருள்வாயே
சூலங்கலை மான்மழு வோர்துடி
வேதன்தலை யோடும ராவிரி
தோடுங்குழை சேர்பர னார்தரு ...... முருகோனே
சூரன்கர மார்சிலை வாளணி
தோளுந்தலை தூள்பட வேஅவர்
சூளுங்கெட வேல்விடு சேவக ...... மயில்வீரா
காலின்கழ லோசையு நூபுர
வார்வெண்டைய வோசையு மேயுக
காலங்களி னோசைய தாநட ...... மிடுவோனே
கானங்கலை மான்மக ளார்தமை
நாணங்கெட வேயணை வேள்பிர
காசம்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.
மூலம் கிளர் ஓர் உருவாய் நடு
நாலு அங்குலம் மேல் நடு வேர் இடை மூள் பிங்கலை
நாடி ஒடு ஆடிய முதல் வேர்கள் மூணும்
பிரகாசம் அதாய் ஒரு சூலம் பெற ஓடிய வாயுவை
மூலம் திகழ் தூண் வழியே அளவிட ஓடி
பாலம் கிளர் ஆறு சிகாரம் ஒடு ஆரும்
சுடர் ஆடு பராபர பாதம் பெற ஞான சதாசிவம் அதின்
மேவி
பாடும் தொனி நாதமும் நூபுரம் ஆடும் கழல் ஓசையிலே
பரிவாகும்படியே அடியனையும் அருள்வாயே
சூலம் கலை மான் மழு ஓர் துடி
வேதன் தலையோடும் அரா
விரிதோடு குழைசேர் பரனார் தரும் முருகோனே
சூரன் கரம் மார் சிலை வாள் அணி தோளும் தலை தூள்
படவே
அவர் சூளும் கெட வேல் விடு சேவக மயில் வீரா
காலின் கழல் ஓசையும் நூபுரம் வார் வெண்டைய ஓசையும்
உக காலங்களின் ஓசை அதாக நடம் இடுவோனே
கானம் கலை மான் மகளார் தமை
நாணம் கெடவே அணை வேள்
பிரகாசம் பழனா புரி மேவிய பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=ldqg1L_RBTg
Add (additional) Audio/Video Link
189
பழநி மூல மந்திரம் தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன ...... தனதான
மூல மந்திர மோத லிங்கிலை
யீவ திங்கிலை நேய மிங்கிலை
மோன மிங்கிலை ஞான மிங்கிலை ...... மடவார்கள்
மோக முண்டதி தாக முண்டப
சார முண்டப ராத முண்டிடு
மூக னென்றொரு பேரு முண்டருள் ...... பயிலாத
கோல முங்குண வீன துன்பர்கள்
வார்மை யும்பல வாகி வெந்தெழு
கோர கும்பியி லேவி ழுந்திட ...... நினைவாகிக்
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
கூர்மை தந்தினி யாள வந்தருள் ...... புரிவாயே
பீலி வெந்துய ராலி வெந்தவ
சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டரு ...... ளெழுதேடு
பேணி யங்கெதி ராறு சென்றிட
மாற னும்பிணி தீர வஞ்சகர்
பீறு வெங்கழு வேற வென்றிடு ...... முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்
பாக மொன்றிய வாலை யந்தரி
ஆதி யந்தமு மான சங்கரி ...... குமரேசா
ஆர ணம்பயில் ஞான புங்கவ
சேவ லங்கொடி யான பைங்கர
ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் ...... பெருமாளே.
மூல மந்திரம் ஓதல் இங்கிலை
ஈவது இங்கிலை நேயம் இங்கிலை
மோனம் இங்கிலை ஞானம் இங்கிலை மடவார்கள்
மோகம் உண்டு அதி தாகம் உண்டு
அபசாரம் உண்டு அப ராதம் உண்டு இடு
மூகன் என்றொரு பேரும் உண்டு அருள் பயிலாத
கோலமும் குண வீன துன்பர்கள்
வார்மையும் பல வாகி வெந்தெழு
கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி
கூடு கொண்(டு) உழல்வேனை அன்பொடு
ஞான நெஞ்சினர்பால் இணங்கிடு
கூர்மை தந்தினி யாள வந்தருள் புரிவாயே
பீலி வெந்(து) உயர் ஆலி வெந்து அவ்
அசோகு வெந்து அமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டு அருள் எழுது ஏடு
பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட
மாறனும்பிணி தீர வஞ்சகர்
பீறு வெங்கழு வேற வென்றிடு முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்
பாக மொன்றிய வாலை அந்தரி
ஆதி யந்தமுமான சங்கரி குமரேசா
ஆரணம்பயில் ஞான புங்கவ
சேவலங்கொடியான பைங்கர
ஆவினன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=dtiQcl6cupc
Add (additional) Audio/Video Link
190
பழநி முருகுசெறி குழலவிழ தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ...... தனதான
முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவு
முறுவல்தர விரகமெழ ...... அநுராகம்
முதிரவச மறவிதரி யெழுகைவளை கலகலென
முகநிலவு குறுவெயர்வு ...... துளிவீச
அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக
அகமகிழ இருகயல்கள் ...... குழையேற
அமளிபடு மமளிமல ரணையின்மிசை துயிலுகினும்
அலர்கமல மலரடியை ...... மறவேனே
நிருதனொடு வருபரியு மடுகரியும் ரதநிரையும்
நெறுநெறன முறியவிடும் ...... வடிவேலா
நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமர
நெடியநெடு ககனமுக ...... டுறைவோனே
வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதற
மதுவினிரை பெருகுவளி ...... மலைமீதே
வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமு
மருவிமகிழ் பழநிவரு ...... பெருமாளே.
முருகு செறி குழல் அவிழ முலை புளகம் எழ நிலவு முறுவல்
தர விரகம் எழ அநுராகம் முதிர வசம் அற இதரி எழு கை
வளை கல கல் என
முக நிலவு குறு வெயர்வு துளி வீச அரு மதுர மொழி பதற
இதழ் அமுது பருகி மிக அகம் மகிழ இரு கயல்கல் குழை
ஏற
அமளி படும் அமளி மலர் அணையின் மிசை துயில் உகினும்
அலர் கமல மலர் அடியை மறவேனே
நிருதனோடு வரு பரியும் அடு கரியும் ரத நிரையும் நெறு
நெறு என முறிய விடும் வடிவேலா
நிகழ் அகள சகள குரு நிருப குரு பர குமர நெடிய நெடு
ககன முகடு உறைவோனே
வரும் அருவி நவ மணிகள் மலர் கமுகின் மிசை சிதற
மதுவின் நிரை பெருகு வ(ள்)ளி மலை மீதே வளர் குறவர்
சிறுமி இரு வளர் தனமும் இரு புயமும் மருவி மகிழ் பழநி
வரு பெருமாளே. Add (additional) Audio/Video Link
191
பழநி முருகு செறிகுழல் முகில் தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
முருகு செறிகுழல் முகிலென நகில்நறு
முளரி முகையென இயலென மயிலென
முறுவல் தளவென நடைமட வனமென ...... இருபார்வை
முளரி மடலென இடைதுடி யதுவென
அதர மிலவென அடியிணை மலரென
மொழியு மமுதென முகமெழில் மதியென ...... மடமாதர்
உருவ மினையன எனவரு முருவக
வுரைசெய் தவர்தரு கலவியி னிலவிய
வுலையின் மெழுகென வுருகிய கசடனை ...... யொழியாமல்
உவகை தருகலை பலவுணர் பிறவியி
னுவரி தனிலுறு மவலனை யசடனை
உனது பரிபுர கழலிணை பெறஅருள் ...... புரிவாயே
அரவ மலிகடல் விடமமு துடனெழ
அரிய யனுநரை யிபன்முத லனைவரும்
அபய மிகவென அதையயி லிமையவ ...... னருள்பாலா
அமர்செய் நிசிசர ருடலவை துணிபட
அவனி யிடிபட அலைகடல் பொடிபட
அமரர் சிறைவிட அடலயில் நொடியினில் ...... விடுவோனே
பரவு புனமிசை யுறைதரு குறமகள்
பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய
பணில சரவணை தனில்முள ரியின்வரு ...... முருகோனே
பரம குருபர எனுமுரை பரசொடு
பரவி யடியவர் துதிசெய மதிதவழ்
பழநி மலைதனி லினிதுறை யமரர்கள் ...... பெருமாளே.
முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என
இயல் என மயில் என முறுவல் தளவு என நடை மட
அ(ன்)னம் என
இரு பார்வை முளரி மடல் என இடை துடி அது என அதரம்
இலவு என அடி இணை மலர் என மொழியும் அமுது என
முகம் எழில் மதி என மட மாதர்
உருவம் இனையன என வரும் உருவக உரை செய்து அவர்
தரு கலவியினில் அவிய உலையின் மெழுகு என உருகிய
கசடனை
ஒழியாமல் உவகை தரு கலை பல உணர் பிறவியில் உவரி
தனில் உறும் அவலனை அசடனை உனது பரிபுர கழல்
இணை பெற அருள் புரிவாயே
அரவம் மலி கடல் விடம் அமுதுடன் எழ அரி அயனு(ம்)
நரை இபன் முதல் அனைவரும் அபயம் மிக என அதை
அயில் இமையவன் அருள்பாலா
அமர் செய் நிசிசரர் உடல் அவை துணி பட அவனி இடி
பட அலை கடல் பொடி பட அமரர் சிறைவிட அடல்
அயில் நொடியினில் விடுவோனே
பரவும் புனம் மிசை உறை தரு குற மகள் பணை கொள்
அணி முலை முழுகு பன்னிரு புய பணில சரவணை
தனில் முளரியில் வரு முருகோனே
பரம குருபர எனும் உரை பரசொடு பரவி அடியவர்
துதி செய மதி தவழ் பழநி மலை தனில் இனிது உறை
அமரர்கள் பெருமாளே. Add (additional) Audio/Video Link
192
பழநி வசனமிக ஏற்றி தனதனன தாத்த ...... தனதான
தனதனன தாத்த ...... தனதான
வசனமிக வேற்றி ...... மறவாதே
மனதுதுய ராற்றி ...... லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே
இகபரசெள பாக்ய ...... மருள்வாயே
பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே
பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
வசனமிக ஏற்றி மறவாதே
மனது துயர் ஆற்றில் உழலாதே
இசைபயில் ஷடாட்சரம் அதாலே
இகபரசெள பாக்யம் அருள்வாயே
பசுபதிசி வாக்யம் உணர்வோனே
பழனிமலை வீற்(று) அருளும் வேலா
அசுரர்கிளை வாட்டி மிகவாழ
அமரர் சிறை மீட்ட பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=aVPOspJZxJE
Add (additional) Audio/Video Link
193
பழநி வஞ்சனை மிஞ்சி தந்தன தந்தன தான தந்தன
தந்தன தந்தன தான தந்தன
தந்தன தந்தன தான தந்தன ...... தனதான
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்
வந்தவர் தங்களை வாதை கண்டவர்
வங்கண முந்தெரி யாம லன்புகள் ...... பலபேசி
மஞ்சமி ருந்தநு ராக விந்தைகள்
தந்தக டம்பிக ளூற லுண்டிடு
மண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு ...... முரையாலே
சஞ்சல முந்தரு மோக லண்டிகள்
இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள்
சங்கம மென்பதை யேபு ரிந்தவ ...... னயராதே
தங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர்
கொஞ்சிந டம்பயில் வேசை முண்டைகள்
தந்தசு கந்தனை யேயு கந்துடல் ...... மெலிவேனோ
கஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்பட
வென்றுகு ருந்தினி லேறி மங்கையர்
கண்கள்சி வந்திட வேக லந்தரு ...... முறையாலே
கண்டும கிழ்ந்தழ காயி ருந்திசை
கொண்டுவி ளங்கிய நாளி லன்பொடு
கண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள் ...... மருகோனே
குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையு
மின்பமி குந்திட வேய ணைந்தருள்
குன்றென வந்தருள் நீப முந்திய ...... மணிமார்பா
கொந்தவி ழுந்தட மேநி ரம்பிய
பண்புத ருந்திரு வாவி னன்குடி
குன்றுக ளெங்கினு மேவ ளர்ந்தருள் ...... பெருமாளே.
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள் வந்தவர் தங்களை வாதை
கண்டவர் வங்கணமும் தெரியாமல் அன்புகள் பல பேசி
மஞ்சம் இருந்து அநுராக விந்தைகள் தந்த கடம்பிகள்
ஊறல் உண்டிடு மண்டைகள் கண்டிதமாய் மொழிந்திடும்
உரையாலே சஞ்சலமும் தரு மோக லண்டிகள் இன் சொல்
புரிந்து உருகாத தொண்டிகள்
சங்கமம் என்பதையே புரிந்தவன் அயராதே தங்களில்
நெஞ்சகமே மகிழ்ந்தவர் கொஞ்சி நடம் பயில் வேசை
முண்டைகள் தந்த சுகம் தனையே உகந்து உடல்
மெலிவேனோ
கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி
மங்கையர் கண்கள் சிவந்திடவே கலந்த அரு முறையாலே
கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு
விளங்கிய நாளில் அன்பொடு கண் குளிரும் திருமால்
மகிழ்ந்து அருள் மருகோனே
குஞ்சர வஞ்சியும் மான் மடந்தையும் இன்பம் மிகுந்திடவே
அணைந்து அருள் குன்று என வந்து அருள் நீப(ம்) முந்திய
மணி மார்பா
கொந்து அவிழும் தடமே நிரம்பிய பண்பு தரும்
திருவாவினன்குடி குன்றுகள் எங்கினுமே வளர்ந்து அருள்
பெருமாளே. Add (additional) Audio/Video Link
194
பழநி வரதா மணி நீ தனனா தனனா ...... தனதான
தனனா தனனா ...... தனதான
வரதா மணிநீ ...... யெனவோரில்
வருகா தெதுதா ...... னதில்வாரா
திரதா திகளால் ...... நவலோக
மிடவே கரியா ...... மிதிலேது
சரதா மறையோ ...... தயன்மாலும்
சகலா கமநூ ...... லறியாத
பரதே வதையாள் ...... தருசேயே
பழனா புரிவாழ் ...... பெருமாளே.
வரதா மணிநீயென ஓரில்
வருகா தெது எதுதான் அதில் வாரா(து)
இரதாதிகளால் நவலோகம்
இடவே கரியாம் இதில் ஏது
சரதா மறையோது அயன்மாலும்
சகலாகமநூல் அறியாத
பரதே வதையாள் தருசேயே
பழனா புரிவாழ் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=0c-avHa9Dpk
https://www.youtube.com/watch?v=LCuZnIqMXck
Add (additional) Audio/Video Link
195
பழநி வனிதை உடல் தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு
வயிறில்நெடு நாள லைந்து ...... புவிமீதே
மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து
வயதுபதி னாறு சென்று ...... வடிவாகிக்
கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று
கனிவதுட னேய ணைந்து ...... பொருள்தேடிக்
கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த
கசடனெனை யாள வுன்ற ...... னருள்தாராய்
புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த
புதல்வியித ழூற லுண்ட ...... புலவோனே
பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த
புதியமயி லேறு கந்த ...... வடிவேலா
பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி
பரமகலி யாணி தந்த ...... பெருவாழ்வே
பகையசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று
பழநிமலை மீதி னின்ற ...... பெருமாளே.
வனிதை உடல் காய நின்று உதிரமதிலே உருண்டு
வயிறில் நெடு நாள் அலைந்து புவிமீதே
மனிதர் உருவாகி வந்து அநுதினமுமே வளர்ந்து
வயது பதினாறு சென்று வடிவாகி
கனகமுலை மாதர் தங்கள் வலையில் மிகவே உழன்று
கனிவதுடனே அணைந்து பொருள்தேடி
கனபொருளெலாம் இழந்து மயலில்மிகவே அலைந்த
கசடன் எனை ஆள உன்றன் அருள்தாராய்
புனம் அதனில் வாழுகின்ற வநிதை ரகுநாதர் தந்த புதல்வி
இதழ் ஊறல் உண்ட புலவோனே
பொரு மதனை நீறு கண்ட அரிய சிவனார் உகந்த புதிய
மயில் ஏறு கந்த வடிவேலா
பனக மணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி
பரம கலியாணி தந்த பெருவாழ்வே
பகை அசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே. Add (additional) Audio/Video Link
196
பழநி வாதம் பித்தம் தானந் தத்தன தானன தானன
தானந் தத்தன தானன தானன
தானந் தத்தன தானன தானன ...... தனதான
வாதம் பித்தமி டாவயி றீளைகள்
சீதம் பற்சனி சூலைம கோதர
மாசங் கட்பெரு மூலவி யாதிகள் ...... குளிர்காசம்
மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு
வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் ...... வெகுமோகர்
சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ
டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்
சோரம் பொய்க்குடி லேசுக மாமென ...... இதின்மேவித்
தூசின் பொற்சர மோடுகு லாயுல
கேழும் பிற்பட வோடிடு மூடனை
தூவஞ் சுத்தடி யாரடி சேரநி ...... னருள்தாராய்
தீதந் தித்திமி தீதக தோதிமி
டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெஞ் செக்கெண தோதக தீகுட ...... வெனபேரி
சேடன் சொக்கிட வேலைக டாகமெ
லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி
தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு ...... மயில்வீரா
வேதன் பொற்சிர மீதுக டாவிந
லீசன் சற்குரு வாயவர் காதினில்
மேவும் பற்றிலர் பேறரு ளோதிய ...... முருகோனே
வேஷங் கட்டிபி னேகிம காவளி
மாலின் பித்துற வாகிவி ணோர்பணி
வீரங் கொட்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.
வாதம் பித்த மிடாவயிறு ஈளைகள்
சீதம் பற்சனி சூலை மகோதரம்
ஆசங் கட்பெரு மூலவி யாதிகள் குளிர்காசம்
மாறுங் கக்கலொ டேசில நோய்பிணியோடும்
தத்துவ காரர்தொணூறறு வாருஞ் சுற்றினில் வாழ்
சதி காரர்கள் வெகுமோகர் சூழ்
துன் சித்ர கபாயை முவாசைகொடு
ஏதுஞ் சற்றுணராமலெ மாயைசெய்
சோரம் பொய்க்குடிலே சுகமாமென இதின்மேவி
தூசின் பொற்சரமோடு குலாய்
உலகேழும் பிற்படவோடிடு மூடனை
தூவஞ் சுத்தடி யாரடி சேரநினருள்தாராய்
தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெஞ் செக்கெண தோதக தீகுட வெனபேரி
சேடன் சொக்கிட வேலைக டாகமெலாமஞ் சுற்றிடவே
அசு ரார்கிரி தீவும் பொட்டெழவே
அனல் வேல்விடு மயில்வீரா
வேதன் பொற்சிர மீதுகடாவி
நல் ஈசன் சற்குருவாய் அவர் காதினில்
மேவும் பற்றிலர் பேறரு ளோதிய முருகோனே
வேஷங் கட்டிபின் ஏகி மகாவ(ள்)ளி
மாலின் பித்துறவாகி
விணோர்பணி வீரங் கொட்பழ னாபுரி மேவிய பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=TgSp98T_eWI
Add (additional) Audio/Video Link
197
பழநி வாரணந் தனை தான தந்தன தானான தாதன
தான தந்தன தானான தாதன
தான தந்தன தானான தாதன ...... தனதான
வார ணந்தனை நேரான மாமுலை
மீத ணிந்திடு பூணார மாரொளி
வால சந்திர னேராக மாமுக ...... மெழில்கூர
வார ணங்கிடு சேலான நீள்விழி
யோலை தங்கிய வார்காது வாவிட
வான இன்சுதை மேலான வாயித ...... ழமுதூறத்
தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை
மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ
தோகை யென்றிட வாகாக வூரன ...... நடைமானார்
தோத கந்தனை மாமாயை யேவடி
வாக நின்றதெ னாஆய வோர்வது
தோணி டும்படி நாயேனுள் நீயருள் ...... தருவாயே
கார ணந்தனை யோராநி சாசரர்
தாம டங்கலு மீறாக வானவர்
காவ லிந்திர னாடாள வேயயில் ...... விடும்வீரா
கார்வி டந்தனை யூணாக வானவர்
வாழ்த ரும்படி மேனாளி லேமிசை
காள கண்டம காதேவ னார்தரு ...... முருகோனே
ஆர ணன்றனை வாதாடி யோருரை
ஓது கின்றென வாராதெ னாவவ
னாண வங்கெட வேகாவ லாமதி ...... லிடும்வேலா
ஆத வன்கதி ரோவாது லாவிய
கோபு ரங்கிளர் மாமாது மேவிய
ஆவி னன்குடி யோனேசு ராதிபர் ...... பெருமாளே.
வாரணம் தனை நேரான மா முலை மீது அணிந்திடு பூண்
ஆரம் ஆர் ஒளி வால சந்திர(ன்) நேர் ஆக மா முகம் எழில்
கூர
வார் அணங்கிடு சேல் ஆன நீள் விழி ஓலை தங்கிய வார்
காது வாவிட வான இன் சுதை மேலான வாய் இதழ் அமுது
ஊற
தோரணம் செறி தார் வாழை ஏய் தொடை மீதில் நின்று
இடை நூல் போல் உலாவியே
தோகை என்றிட வாகாக ஊர் அ(ன்)ன நடை மானார்
தோதகம் தனை மா மாயையே வடிவாக நின்றது எனா ஆய
ஓர்வது தோணிடும்படி நாயேன் உள் நீ அருள் தருவாயே
காரணம் தனை ஓரா நிசாசரர் தாம் அடங்கலும் ஈறாக
வானவர் காவல் இந்திர நாடு ஆளவே அயில் விடும் வீரா
கார் விடம் தனை ஊணாக வானவர் வாழ் தரும்படி மேல்
நாளிலே மிசை காள கண்ட மகா தேவனார் தரு
முருகோனே
ஆரணன் தனை வாதாடி ஓர் உரை ஓதுக என்று என
வாராது எனா அவன் ஆணவம் கெடவே காவலாம் அதில்
இடும் வேலா
ஆதவன் கதிர் ஓவா(து) உலாவிய கோபுரம் கிளர் மா மாது
மேவிய ஆவினன்குடியோனே சுர அதிபர் பெருமாளே. Add (additional) Audio/Video Link
198
பழநி விதம் இசைந்து தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன ...... தனதான
விதமி சைந்தினி தாமலர் மாலைகள்
குழல ணிந்தநு ராகமு மேசொலி
விதர ணஞ்சொலி வீறுக ளேசொலி ...... யழகாக
விரிகு ரும்பைக ளாமென வீறிய
கனக சம்ப்ரம மேருவ தாமதி
விரக மொங்கிய மாமுலை யாலெதி ...... ரமர்நாடி
இதமி சைந்தன மாமென வேயின
நடைந டந்தனர் வீதியி லேவர
எவர்க ளுஞ்சித மால்கொளு மாதர்கண் ...... வலையாலே
எனது சிந்தையும் வாடிவி டாவகை
அருள்பு ரிந்தழ காகிய தாமரை
இருப தங்களி னாலெனை யாள்வது ...... மொருநாளே
மதமி சைந்தெதி ரேபொரு சூரனை
யுடலி ரண்டுகு றாய்விழ வேசின
வடிவு தங்கிய வேலினை யேவிய ...... அதிதீரா
மதுர இன்சொலி மாதுமை நாரணி
கவுரி யம்பிகை யாமளை பார்வதி
மவுந சுந்தரி காரணி யோகினி ...... சிறுவோனே
பதமி சைந்தெழு லோகமு மேவலம்
நொடியில் வந்திடு மாமயில் மீதொரு
பவனி வந்தக்ரு பாகர சேவக ...... விறல்வீரா
பருதி யின்ப்ரபை கோடிய தாமெனும்
வடிவு கொண்டருள் காசியின் மீறிய
பழநி யங்கிரி மீதினில் மேவிய ...... பெருமாளே.
விதம் இசைந்து இனிதா மலர் மாலைகள் குழல் அணிந்து
அனுராகமுமே சொ(ல்)லி விதரணம் சொ(ல்)லி வீறுகளே
சொ(ல்)லி
அழகாக விரி குரும்பைகளாம் என வீறிய கனக சம்ப்ரம
மேரு அது ஆம்
அதி விரகம் ஒங்கிய மா முலையால் எதிர் அமர் நாடி
இதம் இசைந்து அ(ன்)னமாம் எனவே இன நடை
நடந்தனர் வீதியிலே வர
எவர்களும் சி(த்)தம் மால் கொ(ள்)ளும் மாதர் கண்
வலையாலே எனது சிந்தையும் வாடி விடா வகை
அருள் புரிந்து அழகாகிய தாமரை இரு பதங்களினால்
எ(ன்)னை ஆள்வதும் ஒரு நாளே
மதம் இசைந்து எதிரே பொரு சூரனை உடல் இரண்டு
கு(கூ)றாய் விழவே சின வடிவு தங்கிய வேலினை ஏவிய
அதி தீரா
மதுர இன் சொலி மாது உமை நாரணி கவுரி அம்பிகை
யாமளை பார்வதி மவுன சுந்தரி காரணி யோகினி
சிறுவோனே
பதம் இசைந்து எழு லோகமுமே வலம் நொடியில்
வந்திடு மா மயில் மீது ஒரு பவனி வந்த க்ருபாகர
சேவக விறல் வீரா
பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு
அருள்
காசியின் மீறிய பழனி அம் கிரி மீதினில் மேவிய
பெருமாளே. Add (additional) Audio/Video Link
199
பழநி விரை மருவு தனதனன தனன தந்த தனதனன தனன தந்த
தனதனன தனன தந்த ...... தனதான
விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்து
விழவதன மதிவி ளங்க ...... அதிமோக
விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்து
விரகமயல் புரியு மின்ப ...... மடவார்பால்
இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்த
இருளகல வுனது தண்டை ...... யணிபாதம்
எனதுதலை மிசைய ணிந்து அழுதழுது னருள்வி ரும்பி
யினியபுகழ் தனைவி ளம்ப ...... அருள்தாராய்
அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தை
அழகினொடு தழுவு கொண்டல் ...... மருகோனே
அடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்ட
அமரர்சிறை விடுப்ர சண்ட ...... வடிவேலா
பரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கை
படர்சடையர் விடைய ரன்ப ...... ருளமேவும்
பரமரரு ளியக டம்ப முருகஅறு முகவ கந்த
பழநிமலை தனில மர்ந்த ...... பெருமாளே.
விரை மருவு மலர் அணிந்த கரிய புரி குழல் சரிந்து விழ
வதன மதி விளங்க
அதிமோக விழி புரள முலை குலுங்க மொழி குழற அணை
புகுந்து
விரக மயல் புரியும் இன்ப மடவார் பால் இரவு பகல் அணுகி
நெஞ்சம் அறிவு அழிய உருகும் அந்த இருள் அகல
உனது தண்டை அணி பாதம் எனது தலை மிசை அணிந்து
அழுது அழுது அருள் விரும்பி
இனிய புகழ் தனை விளம்ப அருள் தாராய்
அரவில் விழி துயில் முகுந்தன் அலர் கமல மலர் மடந்தை
அழகினொடு தழுவு கொண்டல் மருகோனே
அடல் அசுரர் உடல் பிளந்து நிணம் அதனில் முழுகி அண்ட
அமரர் சிறை விடு ப்ரசண்ட வடிவேலா
பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை
படர் சடையர் விடையர்
அன்பர் உ(ள்)ள மேவும் பரமர் அருளிய கடம்ப முருக
அறுமுகவ கந்த
பழநி மலை தனில் அமர்ந்த பெருமாளே. Add (additional) Audio/Video Link
200
பழநி வேய் இசைந்து தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன ...... தனதான
வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
மாதர் கொங்கையி லேமு யங்கிட
வீணி லுஞ்சில பாத கஞ்செய ...... அவமேதான்
வீறு கொண்டுட னேவ ருந்தியு
மேயு லைந்தவ மேதி ரிந்துள
மேக வன்றறி வேக லங்கிட ...... வெகுதூரம்
போய லைந்துழ லாகி நொந்துபின்
வாடி நைந்தென தாவி வெம்பியெ
பூத லந்தனி லேம யங்கிய ...... மதிபோகப்
போது கங்கையி னீர்சொ ரிந்திரு
பாத பங்கய மேவ ணங்கியெ
பூசை யுஞ்சில வேபு ரிந்திட ...... அருள்வாயே
தீயி சைந்தெழ வேயி லங்கையில்
ராவ ணன்சிர மேய ரிந்தவர்
சேனை யுஞ்செல மாள வென்றவன் ...... மருகோனே
தேச மெங்கணு மேபு ரந்திடு
சூர்ம டிந்திட வேலின் வென்றவ
தேவர் தம்பதி யாள அன்புசெய் ...... திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
போக அந்தரி சூலி குண்டலி
ஆதி யம்பிகை வேத தந்திரி ...... யிடமாகும்
ஆல முண்டர னாரி றைஞ்சவொர்
போத கந்தனை யேயு கந்தருள்
ஆவி னன்குடி மீதி லங்கிய ...... பெருமாளே.
வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய
மாதர் கொங்கையிலே முயங்கிட
வீணிலும் சில பாதகம் செய அவமே தான்
வீறு கொண்டு உடனே வருந்தியுமே
உலைந்து அவமே திரிந்து உள்ளமே
கவன்று அறிவே கலங்கிட வெகு தூரம்
போய் அலைந்து உழலாகி நொந்து
பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே
பூதலம் தனிலே மயங்கிய மதி போக
போது கங்கையின் நீர் சொரிந்து
இருபாத பங்கயமே வணங்கியே
பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே
தீ இசைந்து எழவே இலங்கையில்
ராவணன் சிரமே அரிந்து அவர்
சேனையும் செல மாள வென்றவன் மருகோனே
தேசம் எங்கணுமே புரந்திடு
சூர் மடிந்திட வேலின் வென்றவ
தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
போக அந்தரி சூலி குண்டலி
ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும்
ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச
ஓர் போதகம் தனையே உகந்து அருள்
ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=HXngdHb3Mnw
Add (additional) Audio/Video Link
1338
பழநி சிவணிதா வியமனது தனனதா தனதனன தனனதா தனதனன
தனனதா தனதனன ...... தனதான
சிவணிதா வியமனதும் அழகுமா ணடைமதன
சிலைஉலா வியபுருவம் ...... விழிசேல்கள்
திகழுமா மதிமுகமும் இருளுலா வியகுழல்கள்
திருவினோ வியகனக ...... தனபாரம்
தவளவா ணகையுமினின் இடையுலா வியநடையர்
சரசமா மயில்கள்என ...... இளையோர்கள்
தமிழின்மோ கினிஎனவே சொலியுமே பணியுமொரு
சரசமோ இனியுதற ...... அருள்வாயே
புவனிகா டடையதுயில் பரமர்நா டடையசடை
புகழெலா மடையநகை ...... ஒளிமீதே
பொடிகளால் மருவஇள வெயிலுலா வியகழல்கள்
பொலியவே மழுவுழையும் ...... உடனாட
பவுரிநா டகமருளும் எனதுதா யிடமருவு
பரமரா சியனருளு ...... முருகோனே
பழநிமா மலைமருவும் எனதுமோ கினியமளி
பழகிநா யெனைமருவு ...... பெருமாளே.
சிவணிதா வியமனதும் அழகுமா ணடைமதன
சிலைஉலா வியபுருவம் ...... விழிசேல்கள்
திகழுமா மதிமுகமும் இருளுலா வியகுழல்கள்
திருவினோ வியகனக ...... தனபாரம்
தவளவா ணகையுமினின் இடையுலா வியநடையர்
சரசமா மயில்கள்என ...... இளையோர்கள்
தமிழின்மோ கினிஎனவே சொலியுமே பணியுமொரு
சரசமோ இனியுதற ...... அருள்வாயே
புவனிகா டடையதுயில் பரமர்நா டடையசடை
புகழெலா மடையநகை ...... ஒளிமீதே
பொடிகளால் மருவஇள வெயிலுலா வியகழல்கள்
பொலியவே மழுவுழையும் ...... உடனாட
பவுரிநா டகமருளும் எனதுதா யிடமருவு
பரமரா சியனருளு ...... முருகோனே
பழநிமா மலைமருவும் எனதுமோ கினியமளி
பழகிநா யெனைமருவு ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=qPH2j8A_2tg
Add (additional) Audio/Video Link