| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: திருவாலங்காடு
673 கனவாலங் கூர்விழி 674 பொன்றா மன்று 675 புவிபுனல் காலும் 676 வடிவது நீலம்
673
திருவாலங்காடு கனவாலங் கூர்விழி தனதானந் தானன தானன
தனதானந் தானன தானன
தனதானந் தானன தானன ...... தனதான
கனவாலங் கூர்விழி மாதர்கள்
மனசாலஞ் சால்பழி காரிகள்
கனபோகம் போருக மாமிணை ...... முலைமீதே
கசிவாருங் கீறுகி ளாலுறு
வசைகாணுங் காளிம வீணிகள்
களிகூரும் பேயமு தூணிடு ...... கசுமாலர்
மனவேலங் கீலக லாவிகள்
மயமாயங் கீதவி நோதிகள்
மருளாருங் காதலர் மேல்விழு ...... மகளீர்வில்
மதிமாடம் வானிகழ் வார்மிசை
மகிழ்கூரும் பாழ்மன மாமுன
மலர்பேணுந் தாளுன வேயரு ...... ளருளாயோ
தனதானந் தானன தானன
எனவேதங் கூறுசொல் மீறளி
ததைசேர்தண் பூமண மாலிகை ...... யணிமார்பா
தகரேறங் காரச மேவிய
குகவீரம் பாகும ராமிகு
தகைசாலன் பாரடி யார்மகிழ் ...... பெருவாழ்வே
தினமாமன் பாபுன மேவிய
தனிமானின் தோளுட னாடிய
தினைமாவின் பாவுயர் தேவர்கள் ...... தலைவாமா
திகழ்வேடங் காளியொ டாடிய
ஜெகதீசங் கேசந டேசுரர்
திருவாலங் காடினில் வீறிய ...... பெருமாளே.
கன ஆலம் கூர் விழி மாதர்கள்
மன சாலம் சால் பழிகாரிகள்
கன போக அம்போருகம் ஆம் இணை.....முலை மீதே
கசிவு ஆரும் கீறுகி(ள்)ளால் உறு
வசை காணும் காளிம வீணிகள்
களி கூறும் பேய் அமுது ஊண் இடு.....கசுமாலர்
மனம் ஏல் அம் கீல(க) கலாவிகள்
மயமாயம் கீத விநோதிகள்
மருள் ஆரும் காதலர் மேல் விழு(ம்).....மகளீர் வில்
மதி மாடம் வான் நிகழ்வார் மிசை
மகிழ் கூரும் பாழ் மனமாம் உன
மலர் பேணும் தாள் உ(ன்)னவே அருள்.....அருளாயோ
தனதானந் தானன தானன
என வேதம் கூறு சொல் மீறு அளி
ததை சேர் தண் பூ மண மாலிகை.....அணி மார்பா
தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய
குக வீர அம்பா குமரா மிகு
தகை சால் அன்பார் அடியார் மகிழ்.....பெரு வாழ்வே
தினம் ஆம் அன்பா(ய்) புன(ம்) மேவிய
தனி மானின் தோள் உடன் ஆடிய
தினை மா இன்பா உயர் தேவர்கள்.....தலைவாமா
திகழ் வேடம் காளியொடு ஆடிய
ஜெகதீச சங்க(மே)ச நடேசுரர் திருவாலங்காடினில் வீறிய.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
674
திருவாலங்காடு பொன்றா மன்று தந்தானந் தாத்தம் தனதன
தந்தானந் தாத்தம் தனதன
தந்தானந் தாத்தம் தனதன ...... தனதான
பொன்றாமன் றாக்கும் புதல்வரும்
நன்றாமன் றார்க்கின் றுறுதுணை
பொன்றானென் றாட்டம் பெருகிய ...... புவியூடே
பொங்காவெங் கூற்றம் பொதிதரு
சிங்காரஞ் சேர்த்திங் குயரிய
புன்கூடொன் றாய்க்கொண் டுறைதரு ...... முயிர்கோல
நின்றானின் றேத்தும் படிநினை
வுந்தானும் போச்சென் றுயர்வற
நிந்தாகும் பேச்சென் பதுபட ...... நிகழாமுன்
நெஞ்சாலஞ் சாற்பொங் கியவினை
விஞ்சாதென் பாற்சென் றகலிட
நின்தாள்தந் தாட்கொண் டருள்தர ...... நினைவாயே
குன்றால்விண் டாழ்க்குங் குடைகொடு
கன்றாமுன் காத்துங் குவலய
முண்டார்கொண் டாட்டம் பெருகிய ...... மருகோனே
கொந்தார்பைந் தார்த்திண் குயகுற
மின்தாள்சிந் தாச்சிந் தையில்மயல்
கொண்டேசென் றாட்கொண் டருளென ...... மொழிவோனே
அன்றாலங் காட்டண் டருமுய
நின்றாடுங் கூத்தன் திருவருள்
அங்காகும் பாட்டின் பயனினை ...... யருள்வாழ்வே
அன்பால்நின் தாட்கும் பிடுபவர்
தம்பாவந் தீர்த்தம் புவியிடை
அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே.
பொன்றா மன்று ஆக்கும் புதல்வரும்
நன்று ஆம் அன்று ஆர்க்கு இன்று உறுதுணை
பொன் தான் என்று ஆட்டம் பெருகிய.....புவியூடே
பொங்கா வெம் கூற்றம் பொதிதரு
சிங்காரம் சேர்த்து இங்கு உயரிய
புன்கூடு ஒன்றாய்க் கொண்டு உறைதரும்.....உயிர்கோல
நின்றான் இன்று ஏத்தும் படி நினைவும்
தானும் போச்சு என்று உயர்வு அற
நிந்தாகும் பேச்சு என்பது பட நிகழாமுன்
நெஞ்சால் அஞ்சால் பொங்கிய வினை
விஞ்சாது என்பால் சென்று அகலிட
நின்தாள் தந்து ஆட்கொண்டு அருள்தர.....நினைவாயே
குன்றால் விண் தாழ்க்குங் குடைகொடு
கன்று ஆமுன் காத்தும் குவலயம்
உண்டார் கொண் டாட்டம் பெருகிய.....மருகோனே
கொந்தார் பைந் தார்த் திண் குய குற
மின் தாள் சிந்தாச் சிந்தையில் மயல்
கொண்டே சென்று ஆட்கொண்டு அருளென.....மொழிவோனே
அன்று ஆலங் காட்டு அண்டரும் உ(ய்)ய
நின்றாடுங் கூத்தன் திருவருள்
அங்காகும் பாட்டின் பயனினை.....அருள்வாழ்வே
அன்பால் நின் தாள் கும்பிடுபவர்
தம் பாவந் தீர்த்து அம் புவியிடை
அஞ்சா நெஞ்சு ஆக்கந் தரவல.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
675
திருவாலங்காடு புவிபுனல் காலும் தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
தனதன தானந் தாத்த ...... தனதான
புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி
புதுமன மானும் பூட்டி ...... யிடையூடே
பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி
புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம்
பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி
பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப்
படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி
பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே
சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க
திருநட மாடுங் கூத்தர் ...... முருகோனே
திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற
ஜெகமொடு வானங் காக்க ...... மயிலேறிக்
குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி
குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா
குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில்
குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே.
புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி
புதுமன மானும் பூட்டி இடையூடே
பொறிபுலன் ஈரைந்தாக்கி கருவிகள் நாலுங் காட்டி
புகல்வழி நாலைந் தாக்கி வருகாயம்
பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி
பசுபதி பாசங் காட்டி புலமாயப்
படிமிசை போவென்று ஓட்டி அடிமையை நீவந்து ஏத்தி
பரகதி தானுங் காட்டி யருள்வாயே
சிவமய ஞானங் கேட்க தவமுநிவோரும் பார்க்க
திருநட மாடுங் கூத்தர் முருகோனே
திருவளர் மார்பன் போற்ற திசைமுகன் நாளும் போற்ற
ஜெகமொடு வானங் காக்க மயிலேறி
குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி
குதர்வடி வேல் அங்கு ஓட்டு குமரேசா
குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங் காட்டில்
குறமகள் பாதம் போற்று பெருமாளே.
Add (additional) Audio/Video Link
676
திருவாலங்காடு வடிவது நீலம் தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
தனதன தானந் தாத்த ...... தனதான
வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி
வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம்
மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு
மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன்
படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற
பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப்
பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த
பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே
முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில்
முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே
முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி
முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய்
இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி
யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி
இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி
யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே.
வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர
விடு தூதன் கோட்டி.....விடு பாசம்
மகனொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு
மதி கெட மாயம் தீட்டி.....உயிர் போ முன்
படி மிசை தாளும் காட்டி உடல் உறு நோய் பண்டு ஏற்ற
பழ வினை பாவம் தீர்த்து உன்.....அடியேனை
பரிவோடு நாளும் காத்து விரி தமிழால் அம் கூர்த்த
பர புகழ் பாடு என்று ஆட் கொண்டு.....அருள்வாயே
முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில்
முதிர் நடமாடும் கூத்தர்.....புதல்வோனே
முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி
முதல் மற மானின் சேர்க்கை.....மயல் கூர்வாய்
இடி என வேகம் காட்டி நெடிதரு சூலம் தீட்டி
எதிர் பொரு சூரன் தாக்க.....வர ஏகி
இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி
இமையவர் ஏதம் தீர்த்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link