![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: திருவாரூர்
816 கூசாதே பார் 817 கூர்வாய் நாராய் 818 பாலோ தேனோ பாகோ 819 நீதானெத்தனை 820 மகரம துகெட 821 கரமு முளரியின் 822 பாலோ தேனோ பலவுறு
816
திருவாரூர் கூசாதே பார் தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
கூசா தேபா ரேசா தேமால்
கூறா நூல்கற் ...... றுளம்வேறு
கோடா தேவேல் பாடா தேமால்
கூர்கூ தாளத் ...... தொடைதோளில்
வீசா தேபேர் பேசா தேசீர்
வேதா தீதக் ...... கழல்மீதே
வீழா தேபோய் நாயேன் வாணாள்
வீணே போகத் ...... தகுமோதான்
நேசா வானோ ரீசா வாமா
நீபா கானப் ...... புனமானை
நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய்
நீள்கார் சூழ்கற் ...... பகசாலத்
தேசா தீனா தீனா ரீசா
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
கூசாதே பார் ஏசாதே மால்
கூறா நூல்கற்று.....உளம்வேறு
கோடாதே வேல் பாடாதே மால்
கூர் கூதாளத்.....தொடைதோளில்
வீசாதே பேர் பேசாதே சீர்
வேத அதீதக்.....கழல்மீதே
வீழாதே போய் நாயேன் வாணாள்
வீணே போகத்.....தகுமோதான்
நேசா வானோர் ஈசா வாமா
நீபா கானப்.....புனமானை
நேர்வாய் ஆர்வாய் சூர்வாய் சார்வாய்
நீள்கார் சூழ்கற்.....பகசாலத்
தேச ஆதீனா தீனார் ஈசா
சீர் ஆரூரிற்.....பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
817
திருவாரூர் கூர்வாய் நாராய் தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
கூர்வாய் நாராய் வாராய் போனார்
கூடா ரேசற் ...... றலஆவி
கோதா னேன்மா தாமா றானாள்
கோளே கேள்மற் ...... றிளவாடை
ஈர்வாள் போலே மேலே வீசா
ஏறா வேறிட் ...... டதுதீயின்
ஈயா வாழ்வோர் பேரே பாடா
ஈடே றாரிற் ...... கெடலாமோ
சூர்வா ழாதே மாறா தேவாழ்
சூழ்வா னோர்கட் ...... கருள்கூருந்
தோலா வேலா வீறா ரூர்வாழ்
சோதீ பாகத் ...... துமையூடே
சேர்வாய் நீதீ வானோர் வீரா
சேரா ரூரைச் ...... சுடுவார்தஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
கூர்வாய் நாராய் வாராய் போனார்
கூடாரே(ரோ) சற்று.....அல ஆவி
கோது ஆனேன் மாதா மாறு ஆனாள்
கோளே கேள் மற்று.....இள வாடை
ஈர் வாள் போலே மேலே வீசா
ஏறா வேறிட்டு.....அது தீயின்
ஈயா வாழ்வோர் பேரே பாடா
ஈடு ஏறாரில்.....கெடலாமோ
சூர் வாழாதே மாறாதே வாழ்
சூழ் வானோர்கட்கு.....அருள் கூரும்
தோலா வேலா வீறு ஆரூர் வாழ்
சோதீ பாகத்து.....உமை ஊடே
சேர்வாய் நீதி வானோர் வீரா
சேரார் ஊரை.....சுடுவார் தம்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவ.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
818
திருவாரூர் பாலோ தேனோ பாகோ தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
பாலோ தேனோ பாகோ வானோர்
பாரா வாரத் ...... தமுதேயோ
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
பானோ வான்முத் ...... தெனநீளத்
தாலோ தாலே லோபா டாதே
தாய்மார் நேசத் ...... துனுசாரந்
தாரா தேபே ரீயா தேபே
சாதே யேசத் ...... தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாண்மா
லானா தேனற் ...... புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
ஆளா வேளைப் ...... புகுவோனே
சேலோ டேசே ராரால் சாலார்
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாலோ தேனோ பாகோ வானோர்
பாராவாரத்து.....அமுதேயோ
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ
பானோ வான்முத்.....தென நீளத்
தாலோ தாலேலோ பாடாதே
தாய்மார் நேசத்து.....உனு சாரந்
தாராதே பேர் ஈயாதே
பேசாதே ஏசத்.....தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாள்
மால் ஆனாது ஏனற்.....புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
ஆளா வேளைப்.....புகுவோனே
சேலோடே சேர் ஆரால் சாலார்
சீர் ஆரூரிற்.....பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
http://www.kaumaram.com/thiru/nnt0818_u.html#audio
https://www.youtube.com/watch?v=0Cbj0iRANIM
Add (additional) Audio/Video Link
819
திருவாரூர் நீதானெத்தனை தானானத் தனதான தானானத் ...... தனதான
நீதானெத் தனையாலும் நீடூழிக் ...... க்ருபையாகி
மாதானத் தனமாக மாஞானக் ...... கழல்தாராய்
வேதாமைத் துனவேளே வீராசற் ...... குணசீலா
ஆதாரத் தொளியானே ஆரூரிற் ...... பெருமாளே.
நீதானெத் தனையாலும் நீடூழிக்.....க்ருபையாகி
மாதானத் தனமாக மாஞானக்.....கழல்தாராய்
வேதாமைத்துனவேளே வீரா சற்.....குணசீலா
ஆதாரத்து ஒளியானே ஆரூரிற்....பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=9FgrBJnr_uk
https://www.youtube.com/watch?v=YyXa6fS7ovE
Add (additional) Audio/Video Link
820
திருவாரூர் மகரம துகெட தனதன தனன தனதன தனன
தானான தந்த ...... தனதான
மகரம துகெட இருகுமி ழடைசி
வாரார்ச ரங்க ...... ளெனநீளும்
மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர்
வாணாள டங்க ...... வருவார்தம்
பகர்தரு மொழியில் ம்ருகமத களப
பாடீர கும்ப ...... மிசைவாவிப்
படிமன துனது பரிபுர சரண
பாதார விந்த ...... நினையாதோ
நகமுக சமுக நிருதரு மடிய
நானாவி லங்கல் ...... பொடியாக
நதிபதி கதற வொருகணை தெரியு
நாராய ணன்றன் ...... மருகோனே
அகனக கனக சிவதல முழுது
மாராம பந்தி ...... யவைதோறும்
அரியளி விததி முறைமுறை கருது
மாரூர மர்ந்த ...... பெருமாளே.
மகரம் அது கெட குமிழ் அடைசி
வார் ஆர் சரங்கள்.....என நீளும்
மதர் விழி வலை கொ(ண்)டு உலகினில் மனிதர்
வாழ் நாள் அடங்க....வருவார் தம்
பகர் தரு மொழியில் ம்ருக்மத களப
பாடீர கும்பம் மிசை வாவிப்
படி மனது உனது பரிபுர சரண
பாதார விந்த(ம்).....நினையாதோ
நகமுக சமுக நிருதரும் மடிய
நானா விலங்கல்.....பொடியாக
நதி பதி கதற ஒரு கணை தெரியு(ம்)
நாராயணன் தன்....மருகோனே
அகல் நக கனக சிவ தலம் முழுதும்
ஆராம பந்தி.....அவை தோறும்
அரி அளி விததி முறை முறை கருதும்
ஆரூர் அமர்ந்த.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
821
திருவாரூர் கரமு முளரியின் தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை
கலக மிடுவிழி கடலென விடமென ...... மனதூடே
கருதி யனநடை கொடியிடை யியல்மயில்
கமழு மகிலுட னிளகிய ம்ருகமத
களப புளகித கிரியினு மயல்கொடு ...... திரிவேனும்
இரவு பகலற இகலற மலமற
இயலு மயலற விழியினி ரிழிவர
இதய முருகியெ யொருகுள பதமுற ...... மடலூடே
யெழுத அரியவள் குறமக ளிருதன
கிரியில் முழுகின இளையவ னெனுமுரை
யினிமை பெறுவது மிருபத மடைவது ...... மொருநாளே
சுரபி மகவினை யெழுபொருள் வினவிட
மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு
துயரில் செவியினி லடிபட வினவுமி ...... னதிதீது
துணிவி லிதுபிழை பெரிதென வருமநு
உருகி யரகர சிவசிவ பெறுமதொர்
சுரபி யலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப்
பரவி யதனது துயர்கொடு நடவிய
பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு
படிய ரதமதை நடவிட மொழிபவ ...... னருளாரூர்ப்
படியு லறுமுக சிவசுத கணபதி
யிளைய குமரநி ருபபதி சரவண
பரவை முறையிட அயில்கொடு நடவிய ...... பெருமாளே.
கரமு(ம்) முளரியின் மலர் முக மதி குழல்
கனமது எ(ண்)ணு(ம்) மொழி கனி கதிர் மு(ல்)லை நகை
கலகம் இடு விழி கடல் என விடம் என.....மனது ஊடே
கருதி அ(ன்)ன நடை கொடி இடை இயல் மயில்
கமழும் அகில் உடன் இளகிய ம்ருகமத
களப புளகித கிரியினு(ம்) மயல் கொடு.....திரிவேனும்
இரவு பகல் அற இகல் அற மலம் அற
இயலும் மயல் அற விழியில் நி(நீ)ர் இழிவர
இதயம் உருகியெ ஒரு குள பதம் உற.....மடல் ஊடே
எழுத அரியவள் குற மகள் இரு தன
கிரியில் முழுகின இளையவன் எனும் உரையின்
இனிமை பெறுவதும் இரு பதம் அடைவதும்.....ஒரு நாளே
சுரபி மகவினை எழு பொருள் வினவிட
மனுவின் நெறி மணி அசைவு உற அவ் இசை மிகு
துயரில் செவியினில் அடி பட வினவுமின்.....அதி தீது
துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு
உருகி அரகர சிவ சிவ பெறுமது ஒர்
சுரபி அலமர விழி புனல் பெருகிட.....நடுவாகப்
பரவி அதனது துயர் கொடு நடவிய
பழுதின் மதலையை உடல் இரு பிளவொடு
படிய ரதம் அதை நடவிய மொழிபவன்.....அருள் ஆரூர்ப்
படியில் அறுமுக சிவசுத கணபதி
இளைய குமர நிருப பதி சரவண
பரவை முறையிட அயில் கொடு நடவிய.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Oq5rKbySeQw
Add (additional) Audio/Video Link
822
திருவாரூர் பாலோ தேனோ பலவுறு தானா தானா தனதன தனதன
தானா தானா தனதன தனதன
தானா தானா தனதன தனதன ...... தனதான
பாலோ தேனோ பலவுறு சுளையது
தானோ வானோர் அமுதுகொல் கழைரச
பாகோ வூனோ டுருகிய மகனுண ...... வருண்ஞானப்
பாலோ வேறோ மொழியென அடுகொடு
வேலோ கோலோ விழியென முகமது
பானோ வானூர் நிலவுகொ லெனமகண் ...... மகிழ்வேனை
நாலாம் ரூபா கமலஷண் முகவொளி
யேதோ மாதோம் எனதகம் வளரொளி
நானோ நீயோ படிகமொ டொளிரிட ...... மதுசோதி
நாடோ வீடோ நடுமொழி யெனநடு
தூணேர் தோளா சுரமுக கனசபை
நாதா தாதா எனவுரு கிடஅருள் ...... புரிவாயே
மாலாய் வானோர் மலர்மழை பொழியவ
தாரா சூரா எனமுநி வர்கள்புகழ்
மாயா ரூபா அரகர சிவசிவ ...... எனவோதா
வாதா டூரோ டவுணரொ டலைகடல்
கோகோ கோகோ எனமலை வெடிபட
வாளால் வேலால் மடிவுசெய் தருளிய ...... முருகோனே
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள்
ஓதார் சீராள் கதிர்மதி குலவிய
தோடாள் கோடா ரிணைமுலை குமரிமுன் ...... அருள்பாலா
தூயா ராயார் இதுசுக சிவபத
வாழ்வா மீனே வதிவமெ னுணர்வொடு
சூழ்சீ ராரூர் மருவிய இமையவர் ...... பெருமாளே.
பாலோ தேனோ பல உறு சுளை அது
தானோ வானோர் அமுது கொல் கழை ரச
பாகோ ஊனோடு உருகிய மகன் உண.....அருள் ஞானப்
பாலோ வேறோ மொழி என அடு கொடு
வேலோ கோலோ விழி என முகம் அது
பானோ வான் ஊர் நிலவு கொல் என மகள்.....மகிழ்வேனை
நாலாம் ரூபா கமல ஷண்முக ஒளி
ஏதோ மா தோம் எனது அகம் வளர் ஒளி
நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம்.....அது சோதி
நாடோ வீடோ நடு மொழி என நடு
தூண் நேர் தோளா சுர முக கன சபை
நாதா தாதா என உருகிட அருள்.....புரிவாயே
மாலாய் வானோர் மலர் மழை பொழி அவ
தாரா சூரா என முநிவர்கள் புகழ்
மாயாரூபா அரகர சிவசிவ.....என ஓதா
வாதாடு ஊரோடு அவுணரொடு அலை கடல்
கோ கோ கோ கோ என மலை வெடி பட
வாளால் வேலால் மடிவு செய்து அருளிய.....முருகோனே
சூலாள் மாலாள் மலர் மகள் கலைமகள்
ஓது ஆர் சீராள் கதிர் மதி குலவிய
தோடாள் கோடு ஆர் இணை முலை குமரி முன்.....அருள் பாலா
தூயார் ஆயார் இதுசுக சிவபத
வாழ்வாம் ஈனே வதிவம் எனு(ம்) உணர்வொடு
சூழ் சீர் ஆரூர் மருவிய இமையவர்.....பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=EumE7jSKlm8
Add (additional) Audio/Video Link
This page was last modified on Thu, 13 Aug 2026 23:55:08 +0000