| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: திருவானைக்கா
353 அஞ்சன வேல்விழி இட்டு 354 அம்புலி நீரை 355 அனித்தமான ஊன் 356 ஆரமணி வாரை 357 ஆலம் வைத்த 358 உரைக் காரிகை 359 ஓல மறைகள் 360 கரு முகில் 361 காவிப் பூவை 362 குருதி புலால் என்பு 363 நாடித் தேடி 364 நிறைந்த துப்பிதழ் 365 பரிமளம் மிக உள 366 வேலைப்போல் விழி
353
திருவானைக்கா அஞ்சன வேல்விழி இட்டு தந்தன தானன தத்ததத்தன
தந்தன தானன தத்ததத்தன
தந்தன தானன தத்ததத்தன ...... தனதான
அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவு
மிங்கித மாகந கைத்துருக்கவு
மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் ...... நகரேகை
அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு
மந்தர மாமுலை சற்றசைக்கவு
மம்பரம் வீணில விழ்த்துடுக்கவு ...... மிளைஞோர்கள்
நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும்
வம்புரை கூறிவ ளைத்திணக்கவு
மன்றிடை யாடிம ருட்கொடுக்கவு ...... மெவரேனும்
நிந்தைசெ யாதுபொ ருட்பறிக்கவு
மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற
நின்பத சேவைய நுக்ரகிப்பது ...... மொருநாளே
குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
அங்குச பாசக ரப்ரசித்தனொர்
கொம்பன்ம கோதரன் முக்கண்விக்ரம ...... கணராஜன்
கும்பிடு வார்வினை பற்றறுப்பவன்
எங்கள்வி நாயக னக்கர்பெற்றருள்
குன்றைய ரூபக கற்பகப்பிளை ...... யிளையோனே
துஞ்சலி லாதச டக்ஷரப்பிர
பந்தச டானன துஷ்டநிக்ரக
தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய ...... பரிபாலா
துங்கக ஜாரணி யத்திலுத்தம
சம்புத டாகம டுத்ததக்ஷிண
சுந்தர மாறன்ம திட்புறத்துறை ...... பெருமாளே.
அஞ்சன வேல் விழி இட்டு அழைக்கவும்
இங்கிதமாக நகைத்து உருக்கவும்
அம்புயல் நேர் குழலைக் குலைக்கவும்
நகரேகை அங்கையின் மூலம் வெளிப்படுத்தவும்
மந்தர மாமுலை சற்று அசைக்கவும்
அம்பரம் வீணில் அவிழ்த்து உடுக்கவும்
இளைஞோர்கள் நெஞ்சினில் ஆசை நெருப்பு எழுப்பவும்
வம்பு உரை கூறி வளைத்து இணக்கவும்
மன்று இடை ஆடி மருள் கொடுக்கவும்
எவரேனும் நிந்தை செ(ய்)யாது பொருள் பறிக்கவும்
இங்கு வ(ல்)லார்கள் கையில் பிணிப்பு அற
நின் பத சேவை அநுக்ரகிப்பதும் ஒரு நாளே
குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர்
கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன்
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன்
நக்கர் பெற்று அருள் குன்றைய ரூபக கற்பக பி(ள்)ளை
இளையோனே
துஞ்சல் இலாத சட அக்ஷரப் பிரபந்த சடானன துஷ்ட
நிக்ரக
தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா
துங்க கஜாரணியத்தில் உத்தம
சம்பு தாடகம் அடுத்த தக்ஷிண சுந்தர மாறன் மதில் புறத்து
உறை பெருமாளே. Add (additional) Audio/Video Link
354
திருவானைக்கா அம்புலி நீரை தந்தன தானத் தானன தந்தன தானத் தானன
தந்தன தானத் தானன ...... தனதான
அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய
ஐந்தலை நாகப் பூஷண ...... ரருள்பாலா
அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு
மங்கையி னானிற் பூசையு ...... மணியாமல்
வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில்
வண்டுழ லோதித் தாழலி ...... லிருகாதில்
மண்டிய நீலப் பார்வையில் வெண்துகி லாடைச் சேர்வையில்
மங்கியெ யேழைப் பாவியெ ...... னழிவேனோ
கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி
குண்டலி யாலப் போசனி ...... யபிராமி
கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி
குன்றது வார்பொற் காரிகை ...... யருள்பாலா
செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை
திண்புய மாரப் பூரண ...... மருள்வோனே
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென்திரு வானைக் காவுறை ...... பெருமாளே.
அம்புலி நீரைச் சூடிய செம் சடை மீதில் தாவிய ஐந்தலை
நாகப் பூஷணர் அருள்பாலா
அன்புடன் நாவில் பாவது பாதமும் சந்ததம் ஓதி அங்கயினால்
நின் பூசையும் அணியாமல்
வம்பு அணி பாரம் பூண் முலை வஞ்சியர் மாயச் சாயலில்
வண்டு உழல் ஓதித் தாழலில் இரு காதில்
மண்டிய நீலப் பார்வையில் வெண் துகில் ஆடைச்
சேர்வையில்
மங்கி எய் ஏழைப் பாவியேன் அழிவேனோ
கொம்பு அனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி
குண்டலி ஆலப் போசனி அபிராமி
கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி
குன்று அது வார் பொன் காரிகை அருள்பாலா
செம் பவளம் ஆயக் கூர் இதழ் மின் குற மானை
பூண் முலை திண் புயம் ஆரப் பூரணம் அருள்வோனே
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென் திரு வானைக்கா உறை பெருமாளே. Add (additional) Audio/Video Link
355
திருவானைக்கா அனித்தமான ஊன் தனத்த தான தானான தனத்த தான தானான
தனத்த தான தானான ...... தனதான
அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
யடைத்து வாயு வோடாத ...... வகைசாதித்
தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
அசட்டு யோகி யாகாமல் ...... மலமாயை
செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
சிரத்தை யாகி யான்வேறெ ...... னுடல்வேறு
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
சிவச்சொ ரூபமாயோகி ...... யெனஆள்வாய்
தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச மாறாத ...... மருகோனே
சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
தொடுத்த நீப வேல்வீர ...... வயலுரா
மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
மகப்ர வாக பானீய ...... மலைமோதும்
மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
மதித்த சாமி யேதேவர் ...... பெருமாளே.
அனித்தமான ஊன் நாளுமிருப்பதாகவே நாசி
யடைத்து வாயு ஓடாத வகைசாதித்(து)
அவத்திலே குவால் மூலி புசித்து வாடும் ஆயாச
அசட்டு யோகி யாகாமல் மலமாயை
செனித்த காரிய உபாதி யொழித்து ஞான ஆசார
சிரத்தை யாகி யான்வேறு எனுடல்வேறு
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சியா மநோதீத
சிவச்சொரூப மாயோகி யெனஆள்வாய்
தொனித்த நாத வேய் ஊது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச மாறாத மருகோனே
சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
தொடுத்த நீப வேல்வீர வயலுரா
மனித்தர் ஆதி சோணாடு தழைக்க மேவு காவேரி
மகப்ரவாக பானீயம் அலைமோதும்
மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
மதித்த சாமியே தேவர் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=TansCtAkCyE
Add (additional) Audio/Video Link
356
திருவானைக்கா ஆரமணி வாரை தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் ...... தனதான
ஆரமணி வாரைப் பீறியற மேலிட்
டாடவர்கள் வாடத் ...... துறவோரை
ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப்
பாளித படீரத் ...... தனமானார்
காரளக நீழற் காதளவு மோடிக்
காதுமபி ராமக் ...... கயல்போலக்
காலனுடல் போடத் தேடிவரு நாளிற்
காலைமற வாமற் ...... புகல்வேனோ
பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்
சாமளக லாபப் ...... பரியேறிப்
பாய்மதக போலத் தானொடிக லாமுற்
பாடிவரு மேழைச் ...... சிறியோனே
சூரர்புர சூறைக் காரசுரர் காவற்
காரஇள வேனற் ...... புனமேவுந்
தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்
சோதிவளர் காவைப் ...... பெருமாளே.
ஆரம் அணி வாரைப் பீறி அற மேலிட்டு ஆடவர்கள் வாட
துறவோரை ஆசை மடல் ஊர்வித்து ஆளும் அதி பாரப்
பாளித படீரத் தன மானார்
கார் அளக(ம்) நீழல் காது அளவும் ஓடிக் காதும் அபிராமக்
கயல் போலக்
காலன் உடல் போடத் தேடி வரு நாளில் காலை மறவாமல்
புகல்வேனோ
பார் அடைய வாழ்வித்த ஆரபதி பாசச் சாமள கலாபப் பரி
ஏறி
பாய் மத கபோலத்தானொடு இகலா(ம்) முன் பாடி வரும்
ஏழைச் சிறியோனே
சூரர் புர சூறைக்கார சுரர் காவற்கார
இள ஏனல் புன(ம்) மேவும் தோகை திரு வேளைக்கார
தமிழ் வேதச் சோதி வளர் காவைப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
357
திருவானைக்கா ஆலம் வைத்த தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன ...... தனதான
ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச
னாக மக்கலை கற்றச மர்த்திக
ளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர் ...... தெருவூடே
ஆர வட்டமு லைக்குவி லைப்பண
மாயி ரக்கல மொட்டிய ளப்பினு
மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ ...... ருடன்மாலாய்
மேலி ளைப்புமு சிப்பும வத்தையு
மாயெ டுத்தகு லைப்பொடு பித்தமு
மேல்கொ ளத்தலை யிட்டவி திப்படி ...... யதனாலே
மேதி னிக்குள பத்தனெ னப்பல
பாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகை
வீடு கட்டியி ருக்குமெ னக்குநி ...... னருள்தாராய்
பீலி மிக்கம யிற்றுர கத்தினி
லேறி முட்டவ ளைத்துவ குத்துடல்
பீற லுற்றவு யுத்தக ளத்திடை ...... மடியாத
பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை
பேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர்
பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு ...... குடனாட
ஏலம் வைத்தபு யத்தில ணைத்தருள்
வேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர்
ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை ...... யருள்வோனே
ஏழி சைத்தமி ழிற்பய னுற்றவெ
ணாவ லுற்றடி யிற்பயி லுத்தம
ஈசன் முக்கணி ருத்தன ளித்தருள் ...... பெருமாளே.
ஆலம் வைத்த விழிச்சிகள் சித்தசன் ஆகமக் கலை கற்ற
சமர்த்திகள்
ஆர் மனத்தையும் எத்தி வளைப்பவர்
தெருவூடே ஆர வட்ட முலைக்கு விலைப் பணம் ஆயிரக்கலம்
ஒட்டி அளப்பினும் ஆசை அப்பொருள் ஒக்க நடிப்பவர்
உடன் மாலாய் மேல் இளைப்பும் முசிப்பும் அவத்தையுமாய்
எடுத்த குலைப்பொடு பித்தமும் மேல் கொளத் தலை இட்ட
விதிப்படி அதனாலே
மேதினிக்குள் அபத்தன் எனப் பல பாடு பட்டு புழு கொள்
மலக் குகை வீடு கட்டி இருக்கும் எனக்கு நின் அருள்
தாராய்
பீலி மிக்க மயில் துரகத்தினில் ஏறி முட்ட வளைத்து வகுத்து
உடல் பீறல் உற்றவு யுத்த களத்திடை
மடியாத பேர் அரக்கர் எதிர்த்தவர் அத்தனை பேரை உக்ர
களப் பலி இட்டு
உயர் பேய் கை கொட்டி நடிப்ப மணிக் கழுகுடன் ஆட
ஏலம் வைத்த புயத்தில் அணைத்து அருள் வேலெடுத்த
சமர்த்தை உரைப்பவர்
ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை அருள்வோனே
ஏழிசைத் தமிழில் பயனுற்ற வெண் நாவல் உற்று அடியில்
பயில் உத்தம ஈசன்
முக் கண் நிருத்தன் அளித்து அருள் பெருமாளே. Add (additional) Audio/Video Link
358
திருவானைக்கா உரைக் காரிகை தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தான ...... தந்ததான
உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே
ருனக்கோ மடற்கோவை ...... யொன்றுபாட
உழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தே
டுனைப்பா ரிலொப்பார்கள் ...... கண்டிலேன்யான்
குரைக்கா னவித்யா கவிப்பூ பருக்கே
குடிக்காண் முடிப்போடு ...... கொண்டுவாபொன்
குலப்பூ ணிரத்நா திபொற்றூ செடுப்பா
யெனக்கூ றிடர்ப்பாடின் ...... மங்குவேனோ
அரைக்கா டைசுற்றார் தமிழ்க்கூ டலிற்போய்
அனற்கே புனற்கேவ ...... ரைந்தஏடிட்
டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே
லறப்பாய் வயற்கீழ ...... மர்ந்தவேளே
திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே
சிவத்யா னமுற்றோர்சி ...... லந்திநூல்செய்
திருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர்
திருச்சால கச்சோதி ...... தம்பிரானே.
உரைக் காரிகைப் பால் எனக்கே முதல் பேர்
உனக்கோ மடல் கோவை ஒன்று பாட
உழப்பாது இபக் கோடு எழுத்தாணியைத் தேடி
உனைப் பாரில் ஒப்பார்கள் கண்டிலன் யான்
குரைக்கு ஆன வித்யா கவிப் பூபருக்கே குடிக்காண்
முடிப்போடு கொண்டு வா பொன் குலப் பூண் இரத்நாதி
பொன் தூசு எடுப்பாய்
எனக் கூறி இடர்ப்பாடின் மங்குவேனோ
அரைக்கு ஆடை சுற்றார் தமிழ்க் கூடலில் போய்
அனற்கே புனற்கே வரைந்த ஏடிட்டு அறத்தாய் எனப் பேர்
படைத்தாய்
புனல் சேல் அறப் பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே
திரைக் காவிரிக்கே கரைக் கானகத்தே சிவ த்யானம்
உற்றோர் சிலந்தி நூல் செய்
திருக் காவணத்தே இருப்பார் அருள் கூர்
திருச் சாலகச் சோதி தம்பிரானே. Add (additional) Audio/Video Link
359
திருவானைக்கா ஓல மறைகள் தான தனன தனதந்த தந்தன
தான தனன தனதந்த தந்தன
தான தனன தனதந்த தந்தன ...... தனதான
ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது
போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம்
சால வுடைய தவர்கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது
சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ்
சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ
வால குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே
வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி
நாத வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர முளபைங் கரும்புவெ
ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே.
ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது
போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனுமுயிரு முழுதுங்கலந்தது சிவஞானம்
சாலவுடைய தவர்கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது
சாதி குலமு மிலதன்றி அன்பர்சொனவியோமம்
சாரும் அநுபவர் அமைந்து அமைந்த மெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபலம் அறவந்து நின்கழல் பெறுவேனோ
வால குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் களைவோனே
வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புய சிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க புங்கவ வயலூரா
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகை த்ரிபுராயி
நாத வடிவி யகிலம் பரந்தவள்
ஆலின் உதர முள பைங் கரும்புவெண்
நாவ லரசு மனை வஞ்சி தந்தருள் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=62v2Yw8Q6Kk
Add (additional) Audio/Video Link
360
திருவானைக்கா கரு முகில் தனதனதன தானத் தானன
தனதனதன தானத் தானன
தனதனதன தானத் தானன ...... தனதான
கருமுகில்திர ளாகக் கூடிய
இருளெனமரு ளேறித் தேறிய
கடிகமழள காயக் காரிகள் ...... புவிமீதே
கனவியவிலை யோலைக் காதிகள்
முழுமதிவத னேரப் பாவைகள்
களவியமுழு மோசக் காரிகள் ...... மயலாலே
பரநெறியுண ராவக் காமுகர்
உயிர்பலிகொளு மோகக் காரிகள்
பகழியைவிழி யாகத் தேடிகள் ...... முகமாயப்
பகடிகள்பொரு ளாசைப் பாடிக
ளுருவியதன பாரக் கோடுகள்
படவுளமழி வேனுக் கோரருள் ...... புரிவாயே
மரகதவித நேர்முத் தார்நகை
குறமகளதி பாரப் பூண்முலை
மருவியமண வாளக் கோலமு ...... முடையோனே
வளைதருபெரு ஞாலத் தாழ்கடல்
முறையிடநடு வாகப் போயிரு
வரைதொளைபட வேல்விட் டேவிய ...... அதிதீரா
அரவணைதனி லேறிச் சீருடன்
விழிதுயில்திரு மால்சக் ராயுதன்
அடியிணைமுடி தேடிக் காணவும் ...... அரிதாய
அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும்
உடையதொர்மயில் வாசிச் சேவக
அழகியதிரு வானைக் காவுறை ...... பெருமாளே.
கரு முகில் திரளாகக் கூடிய இருள் என மருள் ஏறித் தேறிய
கடி கமழ் அளக ஆயக்காரிகள்
புவி மீதே கனவிய விலை ஓலைக் காதிகள்
முழு மதி வதன(ம்) நேர் அப்பாவைகள்
களவிய முழு மோசக்காரிகள்
மயலாலே பர நெறி உணரா அக்காமுகர் உயிர் பலி
கொ(ள்)ளு மோகக்காரிகள்
பகழியை விழியாகத் தேடிகள் முகம் மாயப் பகடிகள் பொருள்
ஆசைப் பாடிகள்
உருவிய தன பாரக் கோடுகள் பட உளம் அழிவேனுக்கு
ஓர் அருள் புரிவாயே
மரகத வித நேர் முத்து ஆர் நகை குற மகள்
அதி பாரப் பூண் முலை மருவிய மணவாளக் கோலமும்
உடையோனே
வளை தரு பெரு ஞாலத்து ஆழ் கடல் முறை இட நடுவாகப்
போய்
இரு வரை தொளை பட வேல் விட்டு ஏவிய அதி தீரா
அரவு அணை தனில் ஏறிச் சீருடன் விழி துயில் திருமால்
சக்ராயுதன்
அடி இணை முடி தேடிக் காணவும் அரிதாய அலை புனல்
சடையார் மெச்சு
ஆண்மையும் உடையது ஒர் மயில் வாசிச் சேவக
அழகிய திருவானைக்கா உறை பெருமாளே. Add (additional) Audio/Video Link
361
திருவானைக்கா காவிப் பூவை தானத் தான தான தனதன
தானத் தான தான தனதன
தானத் தான தான தனதன ...... தனதான
காவிப் பூவை யேவை யிகல்கவன
நீலத் தால கால நிகர்வன
காதிப் போக மோக மருள்வன ...... இருதோடார்
காதிற் காதி மோதி யுழல்கண
மாயத் தார்கள் தேக பரிசன
காமக் ரோத லோப மதமிவை ...... சிதையாத
பாவிக் காயு வாயு வலம்வர
லாலிப் பார்கள் போத கருமவு
பாயத் தான ஞான நெறிதனை ...... யினிமேலன்
பாலெக் காக யோக ஜெபதப
நேசித் தார வார பரிபுர
பாதத் தாளு மாறு திருவுள ...... நினையாதோ
கூவிக் கோழி வாழி யெனமயி
லாலித் தால கால மெனவுயர்
கூளிச் சேனை வான மிசைதனில் ...... விளையாடக்
கோரத் தீர சூர னுடைவினை
பாறச் சீற லேன பதிதனை
கோலக் கால மாக அமர்செய்த ...... வடிவேலா
ஆவிச் சேல்கள் பூக மடலிள
பாளைத் தாறு கூறு படவுய
ராலைச் சோலை மேலை வயலியி ...... லுறைவோனே
ஆசைத் தோகை மார்க ளிசையுட
னாடிப் பாடி நாடி வருதிரு
ஆனைக் காவில் மேவி யருளிய ...... பெருமாளே.
காவிப் பூவை ஏவை இகல்வன
நீலத்து ஆலகால நிகர்வன
காதிப் போக மோகம் அருள்வன
இரு தோடார் காதில் காதி மோதி உழல் க(ண்)ண
மாயத்தார்கள் தேக பரிசன காம க்ரோத லோப மதம் இவை
சிதையாத பாவிக்கு
ஆயு வாயு வலம் வர லாலிப்பார்கள் போத கரும உபாயத்தான
ஞான நெறி தனை
இனி மேல் அன்பா (இ)லக்கு ஆ(க்)க யோக ஜெப தப
நேசித்து
ஆரவார பரிபுரம் பாதத்து ஆளுமாறு திரு உள(ம்)
நினையாதோ
கூவிக் கோழி வாழி என மயில் ஆலித்து ஆலகாலம் என
உயர்
கூளிச் சேனை வான மிசை தனில் விளையாட
கோரத் தீர சூரனுடை வினை பாற
சீறல் ஏனபதி தனை கோலக்காலமாக அமர் செய்த
வடிவேலா
ஆவிச் சேல்கள் பூகம் மடல் இள பாளைத் தாறு கூறுபட
உயர் ஆலைச் சோலை மேலை வயலியில் உறைவோனே
ஆசைத் தோகைமார்கள் இசை உடன் ஆடிப் பாடி நாடி வரு
திரு ஆனைக் காவில் மேவி அருளிய பெருமாளே. Add (additional) Audio/Video Link
362
திருவானைக்கா குருதி புலால் என்பு தனதன தானந்த தான தந்தன
தனதன தானந்த தான தந்தன
தனதன தானந்த தான தந்தன ...... தனதான
குருதிபு லாலென்பு தோன ரம்புகள்
கிருமிகள் மாலம்பி சீத மண்டிய
குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன ...... பொதிகாயக்
குடிலிடை யோரைந்து வேட ரைம்புல
அடவியி லோடுந்து ராசை வஞ்சகர்
கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய ...... அதனாலே
சுருதிபு ராணங்க ளாக மம்பகர்
சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை
துதியொடு நாடுந்தி யான மொன்றையு ...... முயலாதே
சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய
திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய
துரிசற ஆநந்த வீடு கண்டிட ...... அருள்வாயே
ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்
நிருதரு மாவுங்க லோல சிந்துவும்
உடைபட மோதுங்கு மார பங்கய ...... கரவீரா
உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள்
அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள்
உளமதில் நாளுங்க லாவி யின்புற ...... வுறைவோனே
கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்
அரிகரி கோவிந்த கேச வென்றிரு
கழல்தொழு சீரங்க ராச னண்புறு ...... மருகோனே
கமலனு மாகண்ட லாதி யண்டரு
மெமது பிரானென்று தாள்வ ணங்கிய
கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் ...... பெருமாளே.
குருதி புலால் என்பு தோல் னரம்புகள்
கிருமிகள் மால் அம் பிசீத மண்டிய குடர்
நிணம் ரோமங்கள் மூளை யென்பன பொதி
காயக்குடிலிடை யோரைந்து வேடர்
ஐம்புல அடவியி லோடுந்துராசை வஞ்சகர்
கொடியவர் மாபஞ்ச பாதகஞ்செய
அதனாலே சுருதி புராணங்கள் ஆகமம் பகர்
சரியைக்ரியா அண்டர் பூசை வந்தனை
துதியொடு நாடுந்தி யான மொன்றையு முயலாதே
சுமடமதாய் வம்பு மால்கொளுந்திய
திமிரரொடே பந்தமாய்வருந்திய
துரிசற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே
ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்
நிருதரு மாவுங்க லோல சிந்துவும்
உடைபட மோதுங்கு மார பங்கய கரவீரா
உயர்தவர் மா உம்ப ரான அண்டர்கள்
அடிதொழுதே மன்பராவு தொண்டர்கள்
உளமதில் நாளுங்குலாவி யின்புற வுறைவோனே
கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்
அரிகரி கோவிந்த கேச வென்று
இருகழல்தொழு சீரங்க ராசன் நண்புறு மருகோனே
கமலனும் ஆகண்டல ஆதி யண்டரும்
எமது பிரானென்று தாள்வணங்கிய
கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=gUU_zF-tfVI
Add (additional) Audio/Video Link
363
திருவானைக்கா நாடித் தேடி தானத் தானத் ...... தனதான
தானத் தானத் ...... தனதான
நாடித் தேடித் ...... தொழுவார்பால்
நானத் தாகத் ...... திரிவேனோ
மாடக் கூடற் ...... பதிஞான
வாழ்வைச் சேரத் ...... தருவாயே
பாடற் காதற் ...... புரிவோனே
பாலைத் தேனொத் ...... தருள்வோனே
ஆடற் றோகைக் ...... கினியோனே
ஆனைக் காவிற் ...... பெருமாளே.
நாடித் தேடித் தொழுவார்பால்
நான் நத்தாகத் திரிவேனோ
மாடக் கூடற் பதி ஞான
வாழ்வைச் சேர தருவாயே
பாடற் காதற் புரிவோனே
பாலைத் தேனொத்து அருள்வோனே
ஆடற் றோகைக்கு இனியோனே
ஆனைக் காவிற் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=SJRH502Khv4
https://www.youtube.com/watch?v=iOMwd02FY2s
Add (additional) Audio/Video Link
364
திருவானைக்கா நிறைந்த துப்பிதழ் தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன தானான தானன ...... தந்ததான
நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென
மறந்த ரித்தக ணாலால நேரென
நெடுஞ்சு ருட்குழல் ஜீமூத நேரென ...... நெஞ்சின்மேலே
நெருங்கு பொற்றன மாமேரு நேரென
மருங்கு நிட்கள ஆகாச நேரென
நிதம்ப முக்கணர் பூணார நேரென ...... நைந்துசீவன்
குறைந்தி தப்பட வாய்பாடி யாதர
வழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு
குமண்டை யிட்டுடை சோராவி டாயில ...... மைந்துநாபி
குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள்
மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய
குரங்கை யொத்துழல் வேனோம னோலய ...... மென்றுசேர்வேன்
மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி
லிருந்து லுத்தநி யோராத தேதுசொல்
மனங்க ளித்திட லாமோது ரோகித ...... முன்புவாலி
வதஞ்செய் விக்ரம சீராம னானில
மறிந்த திச்சர மோகோகெ டாதினி
வரும்ப டிக்குரை யாய்பார்ப லாகவ ...... மென்றுபேசி
அறந்த ழைத்தநு மானோடு மாகடல்
வரம்ப டைத்ததின் மேலேறி ராவண
னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் ...... மைந்தனான
அநங்கன் மைத்துன வேளேக லாபியின்
விளங்கு செய்ப்பதி வேலாயு தாவிய
னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.
நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என மறம் தரித்த
கண் ஆலால(ம்) நேர் என
நெடும் சுருட்டு குழல் ஜீமூத(ம்) நேர் என நெஞ்சின் மேலே
நெருங்கு பொன் தனம் மா மேரு நேர் என
மருங்கு நிட்கள ஆகாசம் நேர் என நிதம்பம் முக்கணர்
பூண் ஆரம் நேர் என நைந்து சீவன் குறைந்து இதம்பட
வாய் பாடி
ஆதரம் அழிந்து அழைத்து அணை மேல் வீழு(ம்) மால்
கொடு குமண்டை இட்டு உடை சோரா விடாயில் அமைந்து
நாபி குடைந்து
இளைப்புறும் மா மாயா வாழ்வு அருள் மடந்தையர்க்கு ஒரு
கோமாளம் ஆகிய குரங்கை ஒத்து உழல்வேனோ மனோலயம்
என்று சேர்வேன்
மறந்த சுக்ரிப மா நீசன் வாசலில் இருந்து உலுத்த நீ ஓராதது
ஏது சொல் மனம் களித்திடல் ஆமோ துரோகித(ம்)
முன்பு வாலி வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த
அதிச் சரம் ஓகோ கெடாது இனி வரும்படிக்கு உரையாய் பார்
பல ஆகவம் என்று பேசி
அறம் தழைத்த அநுமானோடு மா கடல் வரம்பு அடைத்து
அதின் மேல் ஏறி ராவணன் அரண் குலைத்து எதிர் போராடு
நாரணன் மைந்தனான அநங்கன் மைத்துன வேளே
கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன் நலம்
கயப்பதி வாழ்வான தேவர்கள் பெருமாளே. Add (additional) Audio/Video Link
365
திருவானைக்கா பரிமளம் மிக உள தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன ...... தனதான
பரிமள மிகவுள சாந்து மாமத
முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய
பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு ...... முகில்போலே
பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்
பரிபுர மலரடி வேண்டி யேவிய
பணிவிடை களிலிறு மாந்த கூளனை ...... நெறிபேணா
விரகனை யசடனை வீம்பு பேசிய
விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு
வெகுளியை யறிவது போங்க பாடனை ...... மலமாறா
வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை
விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது ...... மொருநாளே
கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள் காஞ்சி மாநக ...... ருறைபேதை
களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடலுடை யுலகினை யீன்ற தாயுமை
கரிவன முறையகி லாண்ட நாயகி ...... யருள்பாலா
முரணிய சமரினில் மூண்ட ராவண
னிடியென அலறிமு னேங்கி வாய்விட
முடிபல திருகிய நீண்ட மாயவன் ...... மருகோனே
முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை
யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக
முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.
பரிமளம் மிக உள சாந்து மா(ன்) மத(ம்)
முருகு அவிழ் வகை மலர் சேர்ந்து கூடிய
பல வரி அளி துயில் கூர்ந்து வானுறு முகில்போல
பரவிய இருள் செறி கூந்தல் மாதர்கள்
பரிபுர மலர் அடி வேண்டி
ஏவிய பணி விடைகளில் இறுமாந்த கூளனை
நெறி பேணா விரகனை அசடனை
வீம்பு பேசிய விழலனை
உறு கலை ஆய்ந்திடா முழு வெகுளியை
அறிவது போம் கபாடனை
மலம் மாறா வினையனை உரை மொழி சோர்ந்த பாவியை
விளிவு உறு நரகு இடை வீழ்ந்த மோடனை
வினவி முன் அருள் செய்து பாங்கின் ஆள்வதும் ஒரு நாளே
கருதலர் திரி புரம் மாண்டு நீறு எழ
மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி
கழல் அணி மலை மகள் காஞ்சி மா நகர் உறை பேதை
களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடல் உடை உலகினை ஈன்ற தாய் உமை
கரி வனம் உறை அகிலாண்ட நாயகி அருள் பாலா
முரணிய சமரினில் மூண்ட ராவணன்
இடி என அலறி முன் ஏங்கி வாய்விட
முடி பல திருகிய நீண்ட மாயவன் மருகோனே
முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல்இடை
இரு தன கிரி மிசை தோய்ந்த காமுக
முது பழ மறை மொழி ஆய்ந்த தேவர்கள் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=1BKpTceWv4A
Add (additional) Audio/Video Link
366
திருவானைக்கா வேலைப்போல் விழி தானத் தானன தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன ...... தனதான
வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்
காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்
வீதிக் கேதிரி பப்பர மட்டைகள் ...... முலையானை
மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள்
மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்
வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள் ...... களிகூருஞ்
சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்
காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள்
தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் ...... எவரேனும்
தோயப் பாயல ழைக்கும வத்திகள்
மோகப் போகமு யக்கிம யக்கிகள்
சூறைக் காரிகள் துக்கவ லைப்பட ...... லொழிவேனோ
காலைக் கேமுழு கிக்குண திக்கினில்
ஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பண
காயத் ரீசெப மர்ச்சனை யைச்செயு ...... முநிவோர்கள்
கானத் தாசிர மத்தினி லுத்தம
வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் ...... மருகோனே
ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை
பாயச் சாலித ழைத்திர தித்தமு
தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி ...... யுறைவேலா
ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு
நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு
ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு ...... பெருமாளே.
வேலைப் போல் விழி இட்டு மருட்டிகள்
காமக் (கு)ரோதம் விளைத்திடு துட்டிகள்
வீதிக்கே திரி பப்பர மட்டைகள் முலை யானை
மேல் இட்டே பொரவிட்ட பொறிச்சிகள்
மார்பைத் தோளை அசைத்து நடப்பிகள்
வேளுக்கு ஆண்மை செலுத்து சமர்த்திகள் களி கூரும்
சோலைக் கோகிலம் ஒத்த மொழிச்சிகள்
காசு அற்றாரை இதத்தில் ஒழிச்சிகள்
தோலைப் பூசி மினுக்கி உருக்கிகள் எவரேனும்
தோயப் பாயல் அழைக்கும் அவத்திகள்
மோகப் போகம் முயக்கி மயக்கிகள்
சூறைக் காரிகள் துக்க வலைப்படல் ஒழிவேனோ
காலைக்கே முழுகிக் குண திக்கினில்
ஆதித்யாய எனப் பகர் தர்ப்பணம்
காயத்ரீ செபம் அர்ச்சனையைச் செய்யும் முநிவோர்கள்
கானத்து ஆசிரமத்தினில் உத்தம
வேள்விச் சாலை அளித்தல் பொருட்டு எதிர்
காதத் தாடகையைக் கொல் க்ருபைக் கடல் மருகோனே
ஆலைச் சாறு கொதித்து வயல் தலை
பாயச் சாலி தழைத்து இரதித்து அமுதாக
தேவர்கள் மெச்சிய செய்ப்பதி உறை வேலா
ஆழித் தேர் மறுகில் பயில் மெய்த் திரு
நீறு இட்டான் மதிள் சுற்றிய பொன் திரு
ஆனைக்காவினில் அப்பர் ப்ரியப்படு பெருமாளே.
Add (additional) Audio/Video Link