சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: திருவருணை
6   முத்தைத்தரு     367   குமர குருபர குணதர     368   அருவ மிடையென     369   கருணை சிறிதும்     370   துகிலு ம்ருகமத     371   மகர மெறிகடல்     372   முகிலை யிகல்     373   முருகு செறிகுழல் சொரு     374   விடமும் அமுதமும்     375   கமரி மலர்குழல்     376   கயல் விழித்தேன்     377   கறுவு மிக்கு ஆவி     378   பரியகைப் பாசம்     379   தருண மணி     380   முழுகிவட     381   வடவை அனல் ஊடு     382   ஆலவிழி நீல     383   பேதக விரோத     384   அமுதம் ஊறு சொல்     385   உருகும் மாமெழுகாக     386   கரி உரி அரவம்     387   கனை கடல் வயிறு     388   இரவியும் மதியும்     389   விரகொடு வளை     390   இடம் அடு சுறவை     391   கெஜ நடை மடவார்     392   அருக்கார் நலத்தை     393   அருமா மதனை     394   அழுதும் ஆவா     395   ஆனை வரிக் கோடு     396   இடருக்கு இடர்     397   இமராஜன் நிலாவது     398   இரத சுரதமுலை     399   இரவுபகற் பலகாலும்     400   இருவர் மயலோ     401   இருவினை அஞ்ச     402   இருவினை ஊண்     403   இருளளகம் அவிழ     404   இறுகு மணி முலை     405   உலையிலனல்     406   கடல்பரவு தரங்க     407   கமலமுகப் பிறை     408   கமல மொட்டை     409   கரிமுகக் கடகளிறு     410   கரு நிறம் சிறந்து     411   காணாத தூர நீள்     412   காராடக் குழல்     413   காரும் மருவும்     414   கீத விநோத மெச்சு     415   குரவ நறும் அளக     416   குழவியுமாய் மோகம்     417   கேதகையபூ முடித்த     418   கோடு ஆன மடவார்கள்     419   கோடு செறி     420   சிலைநுதல் வைத்து     421   சிவமாதுடனே     422   சினமுடுவல் நரிகழுகு     423   சுக்கிலச் சுரொணித     424   செஞ்சொற் பண்     425   செயசெய அருணா     426   தமரம் குரங்களும்     427   தமிழோதிய குயிலோ     428   தலையை மழித்து     429   திருட்டு வாணிப     430   தேதென வாச முற்ற     431   தோதகப் பெரும்     432   பாண மலரது     433   பாலாய் நூலாய்     434   புணர்முலை மடந்தை     435   புலையனான     436   போக கற்ப     437   மானை விடத்தை     438   முகத் துலக்கிகள்     439   மேக மொத்தகுழலார்     440   மொழிய நிறம்     441   வலிவாத பித்தமொடு     442   விடு மதவேள்     443   விதி அதாகவே     444   விந்துப் புளகித     445   வீறு புழுகான பனி     1328   ஏறுமயிலேறி    
6   திருவருணை   முத்தைத்தரு  
தத்தத்தன தத்தத் தனதன
     தத்தத்தன தத்தத் தனதன
          தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.


முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கு இறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
     முக்கட்பரமற்கு சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
     முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண
பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருது
ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக
     பத்தற்கு இரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
     பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்க கழுகொடு கழுதாட
     திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
     சித்ரப்பவுரிக்கு த்ரிகடக எனவோத
கொத்துப்பறை கொட்ட களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
     கொட்புற்றெழ நட்பற்ற அவுணரை
வெட்டிப்பலியிட்டுக் குலகிரி
     குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=ow4A4iyw0kI
https://www.youtube.com/watch?v=_rTQE3H_MN4
https://www.youtube.com/watch?v=ePQwbz6FRdA
Add (additional) Audio/Video Link

Back to Top

367   திருவருணை   குமர குருபர குணதர  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

குமர குருபர குணதர நிசிசர
     திமிர தினகர சரவண பவகிரி
          குமரி சுதபகி ரதிசுத சுரபதி ...... குலமானுங்
குறவர் சிறுமியு மருவிய திரள்புய
     முருக சரணென வுருகுதல் சிறிதுமில்
          கொடிய வினையனை யவலனை யசடனை ...... யதிமோகக்
கமரில் விழவிடு மழகுடை யரிவையர்
     களவி னொடுபொரு ளளவள வருளிய
          கலவி யளறிடை துவளுறும் வெளிறனை ...... யினிதாளக்
கருணை யடியரொ டருணையி லொருவிசை
     சுருதி புடைதர வருமிரு பரிபுர
          கமல மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே
தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்
     மறுகி யலைபட விடநதி யுமிழ்வன
          சமுக முககண பணபணி பதிநெடு ...... வடமாகச்
சகல வுலகமு நிலைபெற நிறுவிய
     கனக கிரிதிரி தரவெகு கரமலர்
          தளர வினியதொ ரமுதினை யொருதனி ...... கடையாநின்
றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்
     அகில புவனமு மளவிடு குறியவன்
          அளவு நெடியவ னளவிட அரியவன் ...... மருகோனே
அரவு புனைதரு புநிதரும் வழிபட
     மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
          அறிவை யறிவது பொருளென அருளிய ...... பெருமாளே.


குமர குருபர குணதர நிசிசர
     திமிர தினகர சரவணபவ கிரி
     குமரி சுத பகிரதி சுத சுர பதி குல மானும்
குறவர் சிறுமியும் மருவிய திரள் புய
     முருக சரண் என உருகுதல் சிறிதும் இல்
     கொடிய வினையனை அவலனை அசடனை அதி மோகக்
கமரில் விழவிடு அழகு உடை அரிவையர்
     களவினொடு பொருள் அளவளவு அருளிய
     கலவி அளறிடை துவளுறும் வெளிறனை இனிது ஆள
கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை
     சுருதி புடை தர வரும் இரு பரிபுர
     கமல மலர் அடி கனவிலும் நனவிலும் மறவேனே
தமர மிகு திரை எறி வளை கடல் குடல்
     மறுகி அலைபட விட நதி உமிழ்வன
     சமுக முக கண பண பணி பதி நெடு வடமாக
சகல உலகமு(ம்) நிலைபெற நிறுவிய
     கனக கிரி திரிதர வெகு கர மலர்
     தளர இனியதொர் அமுதினை ஒரு தனி கடையா நின்று
அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில்
     அகில புவனமும் அளவிடு குறியவன்
     அளவு நெடியவன் அளவிட அரியவன் மருகோனே
அரவு புனைதரு புநிதரும் வழிபட
     மழலை மொழிகொடு தெளி தர ஒளி திகழ்
     அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

368   திருவருணை   அருவ மிடையென  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

அருவ மிடையென வருபவர் துவரிதழ்
     அமுது பருகியு முருகியு ம்ருகமத
          அளக மலையவு மணிதுகி லகலவு ...... மதிபார
அசல முலைபுள கிதமெழ அமளியில்
     அமளி படஅந வரதமு மவசமொ
          டணையு மழகிய கலவியு மலமல ...... முலகோரைத்
தருவை நிகரிடு புலமையு மலமல
     முருவு மிளமையு மலமலம் விபரித
          சமய கலைகளு மலமல மலமரும் ...... வினைவாழ்வுஞ்
சலில லிபியன சனனமு மலமல
     மினியு னடியரொ டொருவழி படஇரு
          தமர பரிபுர சரணமு மவுனமு ...... மருள்வாயே
உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
     யிருகு தையுமுடி தமனிய தநுவுட
          னுருளை யிருசுடர் வலவனு மயனென ...... மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை யடியிட
     நெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம்
          உடைய வொருவரு மிருவரு மருள்பெற ...... வொருகோடி
தெருவு நகரியு நிசிசரர் முடியொடு
     சடச டெனவெடி படுவன புகைவன
          திகுதி கெனஎரி வனஅனல் நகைகொடு ......முனிவார்தஞ்
சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய
     பெரும அருணையி லெழுநிலை திகழ்வன
          சிகரி மிசையொரு கலபியி லுலவிய ...... பெருமாளே.


அருவம் இடை என வருபவர் துவர் இதழ்
   அமுது பருகியும் உருகியும் ம்ருகமத
      அளகம் அலையவும் அணி துகில் அகலவும் அதிபார
அசகம் முலை புளகிதம் எழ அமளியில்
   அமளி பட அநவரதமும் அவசமொடு
      அணையும் அழகிய கலவியும் அலம் அலம் உலகோரைத்
தருவை நிகரிடு புலமையும் அலம் அலம்
   உருவும் இளமையும் அலம் அலம் விபரித
      சமய கலைகளும் அலம் அலம் அலமரும் வினை வாழ்வும்
சலிய லிபி அ(ன்)ன சனனம் அலம் அலம்
   இனி உன் அடியரொடு ஒரு வழிபட இரு
      தமர பரிபுர சரணமு(ம்) மவுனமும் அருள்வாயே
உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி
   இருகு உதையும் முடி தமனிய தநு உடன்
      உருளை இரு சுடர் வலவனும் அயன் என மறை பூணும்
உறுதிபடு சுர ரதமிசை அடி இட
   நெறு நெறு என முறிதலு(ம்) நிலை பெறு தவம்
     உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற ஒரு கோடி
தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு
   சடசட என வெடி படுவன புகைவன
     திகு திகு என எரிவன அனல் நகையொடு முனிவார் தம்
சிறுவ வனசரர் சிறுமியொடு உருகிய
   பெரும அருணையில் எழு நிலை திகழ்வன
      சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய பெருமாளே
Add (additional) Audio/Video Link

Back to Top

369   திருவருணை   கருணை சிறிதும்  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர்
     பிசித அசனம றவரிவர் முதலிய
          கலக விபரித வெகுபர சமயிகள் ...... பலர்கூடிக்
கலக லெனநெறி கெடமுறை முறைமுறை
     கதறி வதறிய குதறிய கலைகொடு
          கருத அரியதை விழிபுனல் வரமொழி ...... குழறாவன்
புருகி யுனதருள் பரவுகை வரில்விர
     கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய
          லுணர்வு கெடிலுயிர் புணரிரு வினையள ...... றதுபோக
உதறி லெனதெனு மலமறி லறிவினி
     லெளிது பெறலென மறைபறை யறைவதொ
          ருதய மரணமில் பொருளினை யருளுவ ...... தொருநாளே
தருண சததள பரிமள பரிபுர
     சரணி தமனிய தநுதரி திரிபுர
          தகனி கவுரிப வதிபக வதிபயி ...... ரவிசூலி
சடில தரியநு பவையுமை திரிபுரை
     சகல புவனமு முதவிய பதிவ்ருதை
          சமய முதல்வித னயபகி ரதிசுத ...... சதகோடி
அருண ரவியினு மழகிய ப்ரபைவிடு
     கருணை வருணித தனுபர குருபர
          அருணை நகருறை சரவண குரவணி ...... புயவேளே
அடவி சரர்குல மரகத வனிதையு
     மமரர் குமரியு மனவர தமுமரு
          கழகு பெறநிலை பெறவர மருளிய ...... பெருமாளே.


கருணை சிறிதும் இல் பறி தலை நிசிசரர்
    பிசித அசன மறவர் இவர் முதலிய
      கலக விபரித வெகு பர சமயிகள் பலர் கூடி
கல கல என நெறி கெட முறை முறை முறை
    கதறி வதறிய குதறிய கலை கொடு
      கருத அரியதை விழி புனல் வர மொழி குழறாவன்
அன்பு உருகி உனது அருள் பரவு வகை வரில் விரகு
    ஒழியில் உலக இயல் பிணை விடில் உரை செயல்
      உணர்வு கெடில் உயிர் புணர் இருவினை அளறு அது போக
உதறில் எனது எனும் மலம் அறில் அறிவினில்
    எளிது பெறல் என மறை பறை அறைவது ஒரு
      உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது ஒரு நாளே
தருண சத தள பரிமள பரிபுர
    சரணி தமனிய தநு தரி திரி புர
      தகனி கவுரி பவதி பகவதி பயி ரவி சூலி
சடில தரி அநுபவை உமை திரி புரை
    சகல புவனமும் உதவிய பதிவ்ருதை
      சமய முதல்வி தனய பகிரதி சுத சத கோடி
அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு
    கருணை வருணித தனுபர குருபர
      அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே
அடவி சரர் குல மரகத வனிதையும்
    அமரர் குமரியும் அனவரதமும் அருகு
      அழகு பெறநிலை பெறவரம் அருளிய பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=5ErOPBE2UMc
Add (additional) Audio/Video Link

Back to Top

370   திருவருணை   துகிலு ம்ருகமத  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

துகிலு ம்ருகமத பரிமள அளகமு
     நெகிழ இருதன கிரியசை தரஇடை
          துவள மனிதரு மமரரு முநிவரு ...... முடனோடித்
தொடர வனமணி மகரமி லகுகுழை
     யடரு வனவிட மிளிர்வன ரதிபதி
          சுருதி மொழிவன கயல்விழி புரள்தர ...... நடுவாக
வகிரு மதிபுரை தநுநுதல் பனிவர
     வனச பதயுக பரிபுர மொலிபட
          மறுகு தொறுமுல வியினிய கலவியை ...... விலைகூறும்
வரைவி லரிவையர் தருசுக சலதியி
     லலையு மெனதுயி ரநுதின நெறிதரு
          மவுன சிவசுக சலதியில் முழுகுவ ...... தொருநாளே
முகிலு மதியமும் ரவியெழு புரவியு
     நெடிய குலைமிட றிடறமு துககன
          முகடு கிழிபட வளர்வன கமுகின ...... மிசைவாளை
முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ்
     தடமு முளரிய அகழியு மதிள்களு
          முழுது முடையதொ ரருணையி லுறைதரு ...... மிளையோனே
அகிலு மருதமு முகுளித வகுளமு
     மமுத கதலியும் அருணமும் வருடையு
          மபரி மிதமத கரிகளு மரிகளு ...... முடனேகொண்
டருவி யிழிதரு மருவரை தனிலொரு
     சவர வனிதையை முநிதரு புனிதையை
          அவச முடன்மல ரடிதொழு துருகிய ...... பெருமாளே.


துகிலு(ம்) ம்ருகமத பரிமள அளகமு(ம்)
    நெகிழ இரு தன கிரி அசை தர இடை
      துவள மனிதரும் அமரரும் முநிவரும் உடன் ஓடித்
தொடர வன மணி மகரம் இலகு குழை
    அடருவன விட மிளிர்வன ரதி பதி
      சுருதி மொழிவன கயல் விழி புரள் தர நடுவாக
வகிரு(ம்) மதி புரை தநு நுதல் பனிவர
    வனச பத யுக பரிபுரம் ஒலி பட
      மறுகு தொறும் உலவி இனிய கலவியை விலை கூறும்
வரைவு இல் அரிவையர் தரு சுக சலதியில்
    அலையும் எனது உயிர் அநுதின(ம்) நெறி தரு
      மவுன சிவசுக சலதியில் முழுகுவது ஒரு நாளே
முகிலு(ம்) மதியமும் ரவி எழு புரவியு(ம்)
    நெடிய குலை மிடறு இடற முது ககன
      முகடு கிழிபட வளர்வன கமுகு இன(ம்) மிசை வாளை
முடுகு கயலுகள் வயல்களும் முருகு அவிழ்
    தடமு(ம்) முளரியும் அகழியும் மதில்களும்
      முழுதும் உடையது ஒர் அருணையில் உறை தரும் இளையோனே
அகிலும் மருதமும் முகளித வகுளமும்
    அமுத கதலியும் அருணமும் வருடையும்
      அபரிமித மத கரிகளும் அரிகளும் உடனே கொண்ட
அருவி இழி தரும் அரு வரை தனில் ஒரு
    சவர வனிதையை முநி தரு புனிதையை
      அவசமுடன் மலர் அடி தொழுது உருகிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

371   திருவருணை   மகர மெறிகடல்  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

மகர மெறிகடல் விழியினு மொழியினு
     மதுப முரல்குழல் வகையினு நகையினும்
          வளமை யினுமுக நிலவினு மிலவினு ...... நிறமூசும்
மதுர இதழினு மிடையினு நடையினு
     மகளிர் முகுளித முலையினு நிலையினும்
          வனச பரிபுர மலரினு முலரினு ...... மவர்நாமம்
பகரு கினுமவர் பணிவிடை திரிகினு
     முருகி நெறிமுறை தவறினு மவரொடு
          பகடி யிடுகினு மமளியி லவர்தரு ...... மநுராகப்
பரவை படியினும் வசமழி யினுமுத
     லருணை நகர்மிசை கருணையொ டருளிய
          பரம வொருவச னமுமிரு சரணமு ...... மறவேனே
ககன சுரபதி வழிபட எழுகிரி
     கடக கிரியொடு மிதிபட வடகுல
          கனக கனகுவ டடியொடு முறிபட ...... முதுசூதங்
கதறு சுழிகட லிடைகிழி படமிகு
     கலக நிசிசரர் பொடிபட நடவிய
          கலப மதகத துரகத ந்ருபகிரி ...... மயில்வாழ்வே
தகன கரதல சிவசுத கணபதி
     சகச சரவண பரிமள சததள
          சயன வனசரர் கதிபெற முனிபெறு ...... புனமானின்
தரள முகபட நெறிபட நிமிர்வன
     தருண புளகித ம்ருகமத தனகிரி
          தழுவ மயல்கொடு தனிமட லெழுதிய ...... பெருமாளே.


மகரம் எறி கடல் விழியினு(ம்) மொழியினு(ம்)
    மதுப(ம்) முரல் குழல் வகையினு(ம்) நகையினும்
      வளமையினு(ம்) முக நிலவினும் இலவினு(ம்) நிறம் மூசும்
மதுர இதழினும் இடையினு(ம்) நடையினு(ம்)
    மகளிர் முகுளித முலையினு(ம்) நிலையினும்
      வனச பரிபுர மலரினும் உலரினும் அவர் நாமம்
பகருகினும் அவர் பணிவிடை திரிகினும்
    உருகி நெறி முறை தவறினும் அவரோடு
      பகடி இடுகினும் அமளியில் அவர் தரும் அநுராகப்
பரவை படியினும் வசம் அழியினும் முதல்
    அருணை நகர் மிசை கருணையொடு அருளிய
      பரம ஒரு வசனமும் இரு சரணமும் மறவேனே
ககன சுரபதி வழிபட எழு கிரி
    கடக கிரியோடு மிதி பட வட குல
      கனக கன குவடு அடியொடு முறிபட முது சூதம்
கதறு சுழி கடல் இடை கிழி பட மிகு
    கலக நிசிசரர் பொடிபட நடவிய
      கலப மரகத துரகத ந்ருப கிரி மயில் வாழ்வே
தகன கரதல சிவ சுத கணபதி
    சகச சரவண பரிமள சத தள
      சயன வனசரர் கதி பெற முனி பெறு புன மானின்
தரள முகபட(ம்) நெறி பட நிமிர்வன
    தருண புளகித ம்ருகமத தன கிரி
      தழுவ மயல் கொடு தனி மடல் எழுதிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

372   திருவருணை   முகிலை யிகல்  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென
     முதிய மதியது முகமென நுதலிணை
          முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி ...... யெனமூவா
முளரி தனின்முகு ளிதமலர் முலையென
     முறுவல் தனையிரு குழைதனை மொழிதனை
          மொழிய வரியதொர் தெரிவையர் வினையென ...... மொழிகூறிப்
பகலு மிரவினு மிகமன மருள்கொடு
     பதியி லவர்வடி வுளதழ கெனவொரு
          பழுது மறஅவர் பரிவுற இதமது ...... பகராதே
பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட
     விகட முடனடை பயில்மயில் மிசைவரு
          பவனி தனையநு தினநினை யெனஅருள் ...... பகர்வாயே
புகல வரியது பொருளிது எனவொரு
     புதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு
          பொதுவை யிதுவென தவமுடை முநிவர்கள் ...... புடைசூழப்
புரமு மெரியெழ நகையது புரிபவர்
     புனலும் வளர்மதி புனைசடை யினரவர்
          புடவி வழிபட புதை பொருள் விரகொடு ...... புகல்வோனே
அகில கலைகளு மறநெறி முறைமையு
     மகில மொழிதரு புலவரு முலகினி
          லறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை ...... யதனாலே
அறுவர் முலையுணு மறுமுக னிவனென
     அரிய நடமிடு மடியவ ரடிதொழ
          அருணை நகர்தனி லழகுடன் மருவிய ...... பெருமாளே.


முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என
    முதிய மதி அது முகம் என நுதல் இணை
       முரணர் வரி சிலை முடுகிடு கணை விழி என மூவா
முளரி தனின் முகுளித மலர் முலை என
    முறுவல் தனை இரு குழைதனை மொழி தனை
       மொழிய அரியது ஒர் தெரிவையர் வினை என மொழி கூறி
பகலும் இரவினும் மிக மனம் மருள் கொடு
    பதி இலர் அவர் வடிவுளது அழகு என ஒரு
       பழுதும் அற அவர் பரிவு உற இதம் அது பகராதே
பகை கொடு எதிர் பொரும் அசுரர்கள் துகை பட
    விகடம் உடன் அடை பயில் மயில் மிசை வரு
       பவனி தனை அநுதின(ம்) நினை என அருள் பகர்வாயே
புகல அரியது பொருள் இது என ஒரு
    புதுமை இட அரியது முதல் எனும் ஒரு
       பொதுவை இது என தவம் உடை முநிவர்கள் புடைசூழப்
புரமும் எரி எழு நகை அது புரிபவர்
    புனலும் வளர் மதி புனை சடையினர் அவர்
       புடவி வழிபட புதை பொருள் விரகோடு புகல்வோனே
அகில கலைகளும் அற நெறி முறைமையும்
    அகில மொழி தரு புலவரும் உலகு இனி
       அறிஞர் தவ(ம்) முயல்பவர்களும் இயல் இசை அதனாலே
அறுவர் முலை உ(ண்)ணும் அறுமுகன் இவன் என
    அரிய நடம் இடும் அடியவர் அடி தொழ
       அருணை நகர் தனில் அழகுடன் மருவிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

373   திருவருணை   முருகு செறிகுழல் சொரு  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

முருகு செறிகுழல் சொருகிய விரகிகள்
     முலைக ளளவிடு முகபட பகடிகள்
          முதலு முயிர்களு மளவிடு களவியர் ...... முழுநீல
முழுகு புழுககில் குழைவடி வழகியர்
     முதிர வளர்கனி யதுகவ ரிதழியர்
          முனைகொ ளயிலென விழியெறி கடைசிய ...... ரநுராகம்
மருவி யமளியி னலமிடு கலவியர்
     மனது திரவிய மளவள வளவியர்
          வசன மொருநொடி நிலைமையில் கபடியர் ...... வழியேநான்
மருளு மறிவின னடிமுடி யறிகிலன்
     அருணை நகர்மிசை கருணையொ டருளிய
          மவுன வசனமு மிருபெரு சரணமு ...... மறவேனே
கருதி யிருபது கரமுடி யொருபது
     கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது
          கடிய வியனகர் புகவரு கனபதி ...... கனல்மூழ்கக்
கவச அநுமனொ டெழுபது கவிவிழ
     அணையி லலையெறி யெதிரமர் பொருதிடு
          களரி தனிலொரு கணைவிடு மடலரி ...... மருகோனே
சருவு மவுணர்கள் தளமொடு பெருவலி
     யகல நிலைபெறு சயிலமு மிடிசெய்து
          தரும னவர்பதி குடிவிடு பதனிசை ...... மயில்வீரா
தருண மணியவை பலபல செருகிய
     தலையள் துகிலிடை யழகிய குறமகள்
          தனது தனமது பரிவொடு தழுவிய ...... பெருமாளே.


முருகு செறி குழல் சொருகிய விரகிகள்
     முலைகள் அளவிடு முக பட பகடிகள்
        முதலும் உயிர்களும் அளவிடு களவியர் முழு நீல
முழுகு புழுகு அகில் குழை வடிவு அழகியர்
     முதிர வளர் கனி அது கவர் இதழியர்
        முனை கொள் அயில் என விழி எறி கடைசியர் அநுராகம்
மருவி அமளியில் நலம் இடு கலவியர்
     மனது திரவியம் அளவு அளவு அளவியர்
        வசனம் ஒரு நொடி நிலைமையில் கபடியர் வழியே நான்
மருளும் அறிவினன் அடிமுடி அறிகிலன்
     அருணை நகர் மிசை கருணையொடு அருளிய
        மவுன வசனமும் இரு பெரு சரணமும் மறவேனே
கருதி இருபது கர முடி ஒரு பது
     கனக மவுலி கொள் புரிசை செய் பழையது
        கடியவிய நகர் புக வரு கன பதி கனல் மூழ்க
கவசம் அநுமனொடு எழுபது கவி விழ
     அணையில் அலை எறி எதிர் அமர் பொருதிடு
        களரி தனில் ஒரு கணை விடும் அடல் அரி மருகோனே
சருவும் அவுணர்கள் தளமொடு பெரு வலி
     அகல நிலை பெறு சயிலமும் இடி செய்து
        தருமன் அவர் பதி குடி விடு பதன் இசை மயில் வீரா
தருண மணி அவை பல பல செருகிய
     தலையள் துகில் இடை அழகிய குறமகள்
        தனது தனம் அது பரிவொடு தழுவிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

374   திருவருணை   விடமும் அமுதமும்  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

விடமு மமுதமு மிளிர்வன இணைவிழி
     வனச மலதழல் முழுகிய சரமென
          விரைசெய் ம்ருகமத அளகமு முகிலல ...... வொருஞான
விழியின் வழிகெட இருள்வதொ ரிருளென
     மொழியு மமுதல வுயிர்கவர் வலையென
          விழையு மிளநகை தளவல களவென ...... வியனாபித்
தடமு மடுவல படுகுழி யெனஇடை
     துடியு மலமத னுருவென வனமுலை
          சயில மலகொலை யமனென முலைமிசை ...... புரள்கோவை
தரள மணியல யமன்விடு கயிறென
     மகளிர் மகளிரு மலபல வினைகொடு
          சமையு முருவென வுணர்வொடு புணர்வது ...... மொருநாளே
அடவி வனிதையர் தனதிரு பரிபுர
     சரண மலரடி மலர்கொடு வழிபட
          அசல மிசைவிளை புனமதி லினிதுறை ...... தனிமானும்
அமர ரரிவையு மிருபுடை யினும்வர
     முகர முகபட கவளத வளகர
          அசல மிசைவரு மபிநவ கலவியும் ...... விளையாடுங்
கடக புளகித புயகிரி சமுகவி
     கடக கசரத துரகத நிசிசரர்
          கடக பயிரவ கயிரவ மலர்களும் ...... எரிதீயுங்
கருக வொளிவிடு தனுபர கவுதம
     புநித முநிதொழ அருணையி லறம்வளர்
          கருணை யுமைதரு சரவண சுரபதி ...... பெருமாளே.


விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி
     வனசம் அ(ல்)ல தழல் முழுகிய சரம் என
        விரை செய் ம்ருகமத அளகமும் முகில் அ(ல்)ல ஒரு ஞான
விழியின் வழி கெட இருள்வது இருள் என
     மொழியும் அமுது அ(ல்)ல உயிர் கவர் வலை என
        விழையும் இள நகை தளவு அ(ல்)ல களவு என வியன் நாபித்
தடமும் மடு அ(ல்)ல படு குழி என இடை
     துடியும் அ(ல்)ல மதன் உரு என வன முலை
        சயிலம் அ(ல்)ல கொலை யமன் என முலை மிசை புரள் கோவை
தரளம் மணி அ(ல்)ல யமன் விடு கயிறு என
     மகளிர் மகளிரும் அ(ல்)ல வினை கொ(ண்)டு
        சமையும் உரு என உணர்வொடு புணர்வதும் ஒரு நாளே
அடவி வனிதையர் தனது இரு பரிபுர
     சரண மலர் அடி மலர் கொ(ண்)டு வழி பட
        அசல(ம்) மிசை விளை புனம் அதில் இனிது உறை தனி மானும்
அமரர் அரிவையும் இரு புடையினும் வர
     முகர(ம்) முக படம் கவள(ம்) தவள கர
        அசல(ம்) மிசை வரும் அபிநவ கலவியும் விளையாடும்
கடக(ம்) புளகித புய கிரி சமுகவி
     கட அக கச ரத துரகத நிசிசரர்
        கடக பயிரவ கயிரவ மலர்களும் எரி தீயும்
கருக ஒளி விடு தனுபர கவுதம
     புநித முநி தொழ அருணையில் அறம் வளர்
        கருணை உமை தரு சரவண சுரபதி பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

375   திருவருணை   கமரி மலர்குழல்  
தனன தனதன தனன தனதன
     தனன தனதன தனன தனதன
          தனன தனதன தனன தனதன ...... தனதான

கமரி மலர்குழல் சரிய புளகித
     கனக தனகிரி யசைய பொருவிழி
          கணைக ளெனநுதல் புரள துகிலதை ...... நெகிழ்மாதர்
கரிய மணிபுர ளரிய கதிரொளி
     பரவ இணைகுழை யசைய நகைகதிர்
          கனக வளைகல நடைகள் பழகிகள் ...... மயில்போலத்
திமிரு மதபுழு கொழுக தெருவினி
     லலைய விலைமுலை தெரிய மயல்கொடு
          திலத மணிமுக அழகு சுழலிக ...... ளிதழூறல்
திரையி லமுதென கழைகள் பலசுளை
     யெனவு மவர்மயல் தழுவு மசடனை
          திருகு புலைகொலை கலிகள் சிதறிட ...... அருள்தாராய்
குமர குருபர குமர குருபர
     குமர குருபர குமர குருபர
          குமர குருபர குமர குருபர ...... எனதாளங்
குரைசெய் முரசமொ டரிய விருதொலி
     டமட டமடம டமட டமவென
          குமுற திமிலைச லரிகி னரிமுத ...... லிவைபாட
அமரர் முநிவரு மயனு மனைவரு
     மதுகை மலர்கொடு தொழுது பதமுற
          அசுரர் பரிகரி யிரத முடைபட ...... விடும்வேலா
அகில புவனமொ டடைய வொளிபெற
     அழகு சரண்மயில் புறம தருளியொ
          ரருண கிரிகுற மகளை மருவிய ...... பெருமாளே.


கம அரி மலர் குழல் சரிய புளகித
     கனக தன கிரி அசைய பொரு விழி
        கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ் மாதர்
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி
     பரவ இணை குழை அசைய நகை கதிர்
        கனக வளை கல நடைகள் பழகிகள் மயில்போல
திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில்
     அலைய விலை முலை தெரிய மயல் கொடு
        திலத மணிமுக அழகு சுழலிகள் இதழ் ஊறல்
திரையில் அமுதென கழைகள் பல சுளை
     எனவும் அவர் மயல் தழுவும் அசடனை
        திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய்
குமர குருபர குமர குருபர
     குமர குருபர குமர குருபர
        குமர குருபர குமர குருபர என தாளம்
குரை செய் முரசமொடு அரிய விருது ஒலி
     டமட டமடம டமட டம என
        குமுற திமிலை சலரி கி(ன்)னரி முதல் இவை பாட
அமரர் முநிவரும் அயனும் அனைவரும்
     மதுகை மலர் கொடு தொழுது பதம் உற
        அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா
அகில புவனமொடு அடைய ஒளி பெற
     அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர்
        அருண கிரி குற மகளை மருவிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

376   திருவருணை   கயல் விழித்தேன்  
தனதனத் தானனத் தனதனத் தானனத்
     தனதனத் தானனத் ...... தனதான

கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்
     கணவகெட் டேனெனப் ...... பெறுமாது
கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்
     கதறிடப் பாடையிற் ...... றலைமீதே
பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்
     பறைகள்கொட் டாவரச் ...... சமனாரும்
பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்
     பரிகரித் தாவியைத் ...... தரவேணும்
அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்
     றருணையிற் கோபுரத் ...... துறைவோனே
அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்
     தரியசொற் பாவலர்க் ...... கெளியோனே
புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்
     புனமறப் பாவையைப் ...... புணர்வோனே
பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்
     பொருமுழுச் சேவகப் ...... பெருமாளே.


கயல்விழித்தேன் எனைச் செயலழித் தாயென
      கணவகெட் டேனெனப் பெறுமாது
கருதுபுத் ராஎனப் புதல்வர் அப்பா எனக்
      கதறிடப் பாடையிற் றலைமீதே
பயில்குலத் தாரழப் பழையநட் பாரழ
      பறைகள்கொட் டாவர சமனாரும்
பரியகைப் பாசம்விட் டெறியுமப்போது எனைப்
      பரிகரித்து ஆவியைத் தரவேணும்
அயில் அறச் சேவல்கைக்கு இனிதர தோகையுற்று
      அருணையிற் கோபுரத் துறைவோனே
அமரர் அத்தா சிறுக் குமரிமுத்தா சிவத்
      தரியசொற் பாவலர்க்கு எளியோனே
புயல் இளைப்பாறு பொற் சயில மொய்ச் சாரலில்
      புனமறப் பாவையைப் புணர்வோனே
பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனை
      பொருமுழுச் சேவகப் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=YJDrpwFL75k
Add (additional) Audio/Video Link

Back to Top

377   திருவருணை   கறுவு மிக்கு ஆவி  
தனதனத் தானனத் தனதனத் தானனத்
     தனதனத் தானனத் ...... தனதான

கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத்
     திலகுகட் சேல்களிப் ...... புடனாடக்
கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட்
     களவினிற் காசினுக் ...... குறவாலுற்
றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற்
     றுயர்பொருட் கோதியுட் ...... படுமாதர்
ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப்
     புணையிணைத் தாள்தனைத் ...... தொழுவேனோ
மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச்
     செறிதிருக் கோலமுற் ...... றணைவானும்
மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற்
     றிடஅடற் சூரனைப் ...... பொரும்வேலா
அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்
     றருணையிற் கோபுரத் ...... துறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
     றயருமச் சேவகப் ...... பெருமாளே.


கறுவு மிக்கு ஆவியைக் கல(க்)கும் அக் காலன் ஒத்து
     இலகு கண் சேல் களிப் புடன் நாடக்
கருதி முற்பாடு கட்டளை உடல் பேசி உள்
     களவினில் காசினுக்கு உறவால் உற்று
உறு மலர்ப் பாயலில் துயர் விளைத்து ஊடல் உற்று
     உயர் பொருட்கு ஓதி உட்படு மாதர்
ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன் உயிர்ப்
     புணை இணைத் தாள்தனைத் தொழுவேனோ
மறை எடுத்து ஓதி வச்சிரம் எடுத்தானும் மைச்
     செறி திருக் கோலம் உற்று அணைவானும்
மறைகள் புக்கார் எனக் குவடு நெட்டாழி வற்றிட
     அடல் சூரனைப் பொரும் வேலா
அறிவுடைத்தாரும் மற்றுடன் உனைப் பாடல் உற்று
     அருணையில் கோபுரத்து உறைவோனே
அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசை உற்று
     அயரும் அச் சேவகப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

378   திருவருணை   பரியகைப் பாசம்  
தனதனத் தானனத் தனதனத் தானனத்
     தனதனத் தானனத் ...... தனதான

பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்
     பயனுயிர்ப் போயகப் ...... படமோகப்
படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற்
     படரெரிக் கூடுவிட் ...... டலைநீரிற்
பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப்
     பிணிகளுக் கேயிளைத் ...... துழல்நாயேன்
பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப்
     பிரியமுற் றோதிடப் ...... பெறுவேனோ
கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக்
     கமைவபற் றாசையக் ...... கழலோர்முன்
கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற்
     கடவுள்செச் சேவல்கைக் ...... கொடியோனென்
றரியநற் பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக்
     கருணையிற் கோபுரத் ...... துறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
     றயருமச் சேவகப் ...... பெருமாளே.


பரியகைப் பாசம்விட்டெறியுமக் காலனுள்
     பயனுயிர்ப் போய் அகப்பட மோக
படியில் உற்றாரெனப் பலர்கள் பற்றாஅடற்
     படர் எரிக் கூடுவிட்டு அலைநீரிற்
பிரியும் இப் பாதகப் பிறவியுற்றே மிகப்
     பிணிகளுக்கே யிளைத்து உழல்நாயேன்
பிழைபொறுத் தாயெனப் பழுதறுத்து ஆளென
     பிரியமுற்று ஓதிடப் பெறுவேனோ
கரியமெய்க் கோலமுற்ற அரியின் நற்றாமரைக்கு
     அமைவ பற்றாசை அக் கழலோர்முன்
கலைவகுத்து ஓதி வெற் பதுதொளைத்தோன் இயற்
     கடவுள்செச் சேவல்கைக் கொடியோனென்று
அரியநற் பாடலைத் தெரியும் உற்றோற்கிளைக்கு
     அருணையிற் கோபுரத்து உறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக்கு ஆசையுற்று
     அயரும் அச் சேவகப் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=T9fNvg9MV6c
Add (additional) Audio/Video Link

Back to Top

379   திருவருணை   தருண மணி  
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான

தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட
     தழலமளி மீதெ றிக்கு ...... நிலவாலே
தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த
     தறுகண்மத வேள்தொ டுத்த ...... கணையாலே
வருணமட மாதர் கற்ற வசையின்மிகை பேச முற்று
     மருவுமென தாவி சற்று ...... மழியாதே
மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர
     மயிலின்மிசை யேறி நித்தம் ...... வரவேணும்
கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சி
     கலவிதொலை யாம றத்தி ...... மணவாளா
கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த
     கடியமல ராத ரித்த ...... கழல்வீரா
அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி
     அருணைநகர் கோபு ரத்தி ...... லுறைவோனே
அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி
     அமரர்சிறை மீள விட்ட ...... பெருமாளே.


தருண மணி வான் நிலத்தில் அருண மணி ஆல விட்ட
     தழல் அமளி மீது எறிக்கு(ம்) நிலவாலே
தலைமை தவிரா மனத்தின் நிலை அறியாது எதிர்த்த
     தறு கண் மத வேள் தொடுத்த கணையாலே
வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்றும்
     மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு(ம்) சித்ர
     மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும்
கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி
     கலவி தொலையா மறத்தி மணவாளா
கடு உடைய அரா நிரைத்த சடில முடி மீது வைத்த
     கடி அமலர் ஆதரித்த கழல் வீரா
அருண மணியால் அமைத்த கிரண மணி சூழும் வெற்றி
     அருணை நகர் கோபுரத்தில் உறைவோனே
அசுரர் குலம் வேர் அறுத்து வட அனலை மீது எழுப்பி
     அமரர் சிறை மீள விட்ட பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

380   திருவருணை   முழுகிவட  
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான

முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு
     முழுமதிநி லாவி னுக்கும் ...... வசையாலும்
மொழியுமட மாத ருக்கு மினியதனி வேயி சைக்கு
     முதியமத ராஜ னுக்கு ...... மழியாதே
புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ராநி ரைத்த
     புதுமையினி லாறி ரட்டி ...... புயமீதே
புணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ர
     பொருமயிலி லேறி நித்தம் ...... வரவேணும்
எழுமகர வாவி சுற்று பொழிலருணை மாந கர்க்கு
     ளெழுதரிய கோபு ரத்தி ...... லுறைவோனே
இடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்த
     இளமுலைவி டாத சித்ர ...... மணிமார்பா
செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த
     சிவனைமுத லோது வித்த ...... குருநாதா
திசைமுகன்மு ராரி மற்று மரியபல தேவ ருற்ற
     சிறையடைய மீள விட்ட ...... பெருமாளே.


முழுகி வடவா முகத்தின் எழு கனலிலே பிறக்கு(ம்)
     முழு மதி நிலாவினுக்கும் வசையாலும்
மொழியு(ம்) மட மாதருக்கும் இனிய தனி வேய் இசைக்கும்
     முதிய மத ராஜனுக்கும் அழியாதே
புழுகு திகழ் நீபம் அ(த்)தில் அழகிய குரா நிரைத்த
     புதுமையினில் ஆறு இரட்டி புய(ம்) மீதே
புணரும் வகை தான் நினைத்தது உணரும் வகை நீல சித்ர
     பொரு(ம்) மயிலில் ஏறி நித்தம் வரவேணும்
எழு(ம்) மகர வாவி சுற்று(ம்) பொழில் அருணை மா நகர்க்குள்
     எழுத அரிய கோபுரத்தில் உறைவோனே
இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த
     இளமுலை விடாத சித்ர மணிமார்பா
செழு மகுட நாக(ம்) மொய்த்த ஒழுகு புனல் வேணி வைத்த
     சிவனை முதல் ஓதுவித்த குரு நாதா
திசை முகன் முராரி மற்றும் அரிய பல தேவர் உற்ற
     சிறை அடைய மீள விட்ட பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

381   திருவருணை   வடவை அனல் ஊடு  
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான

வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்கு
     மதுரமொழி யாழி சைக்கு ...... மிருநாலு
வரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்கு
     மடியருவ வேள்க ணைக்கு ...... மறவாடி
நெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத ருக்கு
     நிறையுமிகு காத லுற்ற ...... மயல்தீர
நினைவினொடு பீலி வெற்றி மரகதக லாப சித்ர
     நிலவுமயி லேறி யுற்று ...... வரவேணும்
மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்து
     மவுலியற வாளி தொட்ட ...... அரிராமன்
மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ப டிக்க
     மவுனமறை யோது வித்த ...... குருநாதா
இடையரியு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்கு
     ளினியகுண கோபு ரத்தி ...... லுறைவோனே
எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டு
     மிடையுருவ வேலை விட்ட ...... பெருமாளே.


வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மா மதிக்கும்
     மதுர மொழி யாழ் இசைக்கும் இரு நாலு
வரை திசை விடாது சுற்றி அலறு திரை வாரிதிக்கும்
     மடி அருவ வேள் கணைக்கும் அற வாடி
நெடு கனக மேரு ஒத்த புளக முலை மாது அருக்கு
     நிறையும் மிகு காதல் உற்ற மயல் தீர
நினைவினோடு பீலி வெற்றி மரகத கலாப சித்ர
     நிலவு மயில் ஏறி உற்று வரவேணும்
மடல் அவிழ மாலை சுற்று புயம் இருபதோடு பத்து
     மவுலி அற வாளி தொட்ட அரி ராமன்
மருக பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்க
     மவுன மறை ஓதுவித்த குருநாதா
இடை அரி உலாவும் உக்ர அருண கிரி மா நகர்க்குள்
     இனிய குண கோபுரத்தில் உறைவோனே
எழு புவி அளாவு வெற்பும் முடலி நெடு நாகம் எட்டும்
     இடை உருவ வேலை விட்ட பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

382   திருவருணை   ஆலவிழி நீல  
தானதன தானத் தானதன தானத்
     தானதன தானத் ...... தந்ததான

ஆலவிழி நீலத் தாலதர பானத்
     தாலளக பாரக் ...... கொண்டலாலே
ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித்
     தாரநடை யால்நற் ...... கொங்கையாலே
சாலமய லாகிக் காலதிரி சூலத்
     தாலிறுகு பாசத் ...... துன்பமூழ்கித்
தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற்
     சாவதன்மு னேவற் ...... கொண்டிடாயோ
சோலைதரு கானிற் கோலமற மானைத்
     தோளிலுற வாகக் ...... கொண்டவாழ்வே
சோதிமுரு காநித் தாபழய ஞானச்
     சோணகிரி வீதிக் ...... கந்தவேளே
பாலகக லாபக் கோமளம யூரப்
     பாகவுமை பாகத் ...... தன்குமாரா
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
     பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.


ஆல விழி நீலத்தால் அதர பானத்
     தால் அளக பாரக் கொண்டலாலே
ஆர நகையால் வில் போர் நுதலினால் வித்
     தார நடையால் நற் கொங்கையாலே
சால மயலாகி கால(ன்) திரி சூலத்
     தால் இறுகு பாசத் துன்ப(ம்) மூழ்கித்
தாழ்வில் உயிர் வீழ் பட்டு ஊழ் வினை விடாமல்
     சாவதன் முன் ஏவல் கொண்டிடாயோ
சோலை தரு கானில் கோல மற மானைத்
     தோளில் உறவாகக் கொண்ட வாழ்வே
சோதி முருகா நித்தா பழய ஞானச்
     சோணகிரி வீதிக் கந்தவேளே
பாலக கலாபக் கோமள மயூரப்
     பாக உமை பாகத் தன்குமாரா
பாத மலர் மீதில் போத மலர் தூவிப்
     பாடுமவர் தோழத் தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

383   திருவருணை   பேதக விரோத  
தானதன தானத் தானதன தானத்
     தானதன தானத் ...... தந்ததான

பேதகவி ரோதத் தோதகவி நோதப்
     பேதையர்கு லாவைக் ...... கண்டுமாலின்
பேதைமையு றாமற் றேதமக லாமற்
     பேதவுடல் பேணித் ...... தென்படாதே
சாதகவி காரச் சாதலவை போகத்
     தாழ்விலுயி ராகச் ...... சிந்தையாலுன்
தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்
     சாரல்மற மானைச் ...... சிந்தியேனோ
போதகம யூரப் போதகக டாமற்
     போதருணை வீதிக் ...... கந்தவேளே
போதகக லாபக் கோதைமுது வானிற்
     போனசிறை மீளச் ...... சென்றவேலா
பாதகப தாதிச் சூரன்முதல் வீழப்
     பாருலகு வாழக் ...... கண்டகோவே
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
     பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.


பேதகவி ரோதத் தோதக விநோதப்
     பேதையர் குலாவைக் கண்டு மாலின்
பேதைமை உறா மற்று ஏதம் அகலாமல்
     பேதவுடல் பேணித் தென்படாதே
சாதக விகாரச் சாதல் அவை போக
     தாழ்வில் உயி ராகச் சிந்தையால் உன்
தாரை வடிவேலைச் சேவல்தனை ஏனல்
     சாரல் மறமானைச் சிந்தியேனோ
போதக மயூரப் போது அக அகடாமன்
     போது அருணை வீதிக் கந்தவேளே
போதக கலாபக் கோதை முது வானில்
     போனசிறை மீளச் சென்றவேலா
பாதக பதாதிச் சூரன்முதல் வீழ
     பாருலகு வாழக் கண்டகோவே
பாதமலர் மீதிற் போதமலர் தூவி
     பாடுமவர் தோழத் தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

384   திருவருணை   அமுதம் ஊறு சொல்  
தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான

அமுத மூறுசொ லாகிய தோகையர்
     பொருளு ளாரையெ னாணையு னாணையெ
          னருகு வீடிது தானதில் வாருமெ ...... னுரைகூறும்
அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்
     தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
          அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி ...... னருள்தாராய்
குமரி காளிவ ராகிம கேசுரி
     கவுரி மோடிசு ராரிநி ராபரி
          கொடிய சூலிசு டாரணி யாமளி ...... மகமாயி
குறளு ரூபமு ராரிச கோதரி
     யுலக தாரிஉதாரிப ராபரி
          குருப ராரிவி காரிந மோகரி ...... அபிராமி
சமர நீலிபு ராரித னாயகி
     மலைகு மாரிக பாலிந னாரணி
          சலில மாரிசி வாயம னோகரி ...... பரையோகி
சவுரி வீரிமு நீர்விட போஜனி
     திகிரி மேவுகை யாளிசெ யாளொரு
          சகல வேதமு மாயின தாயுமை ...... யருள்பாலா
திமித மாடுசு ராரிநி சாசரர்
     முடிக டோறுக டாவியி டேயொரு
          சிலப சாசுகு ணாலிநி ணாமுண ...... விடும்வேலா
திருவு லாவுசொ ணேசர ணாமலை
     முகிலு லாவுவி மானந வோநிலை
          சிகர மீதுகு லாவியு லாவிய ...... பெருமாளே.


அமுதம் ஊறு சொல் ஆகிய தோகையர்
     பொருள் உளாரை என் ஆணை உன் ஆணை
       என் அருகு வீடு இது தான் அதில் வாரும் என உரை கூறும்
அசடு மாதர் குவாது சொல் கேடிகள்
     தெருவின் மீது குலாவி உலாவிகள்
       அவர்கள் மாயை படாமல் கெடாமல் நினது அருள் தாராய்
குமரி காளி வராகி மகேசுரி
     கவுரி மோடி சுராரி நிராபரி
       கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி
குறளு ரூப முராரி சகோதரி
     உலக தாரி உதாரி பராபரி
       குருபராரி விகாரி நமோகரி அபிராமி
சமர நீலி புராரி தன் நாயகி
     மலை குமாரி கபாலி நல் நாரணி
       சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி
சவுரி வீரி முநீர் விட போஜனி
     திகிரி மேவு கையாளி செயாள் ஒரு
       சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா
திமிதம் ஆடு சுராரி நிசாசரர்
     முடிகள் தோறும் கடாவி இ(ட்)டு ஏய் ஒரு
       சில பசாசு குணாலி நிணாம் உண விடும் வேலா
திரு உலாவு சொணேசர அ(ண்)ணாமலை
     முகில் உலாவு விமான நவோ நிலை
       சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=1B0OBzcJ1SE
Add (additional) Audio/Video Link

Back to Top

385   திருவருணை   உருகும் மாமெழுகாக  
தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான

உருகு மாமெழு காகவு மேமயல்
     பெருகு மாசையு ளாகிய பேர்வரி
          லுரிய மேடையில் வார்குழல் நீவிய ...... வொளிமானார்
உடைகொள் மேகலை யால்முலை மூடியும்
     நெகிழ நாடிய தோதக மாடியு
          முவமை மாமயில் போல்நிற மேனிய ...... ருரையாடுங்
கரவ தாமன மாதர்கள் நீள்வலை
     கலக வாரியில் வீழடி யேநெறி
          கருதொ ணாவதி பாதக னேசம ...... தறியாத
கசட மூடனை யாளவு மேயருள்
     கருணை வாரிதி யேயிரு நாயகி
          கணவ னேயுன தாளிணை மாமலர் ...... தருவாயே
சுருதி மாமொழி வேதியன் வானவர்
     பரவு கேசனை யாயுத பாணிநல்
          துளப மாலையை மார்பணி மாயவன் ...... மருகோனே
தொலைவி லாவசு ரேசர்க ளானவர்
     துகள தாகவு மேயெதி ராடிடு
          சுடரின் வேலவ னேயுல கேழ்வலம் ...... வருவோனே
அருணர் கோடியி னாரொளி வீசிய
     தருண வாண்முக மேனிய னேயர
          னணையு நாயகி பாலக னேநிறை ...... கலையோனே
அணிபொன் மேருயர் கோபுர மாமதி
     லதிரு மாரண வாரண வீதியு
          ளருணை மாநகர் மேவியு லாவிய ...... பெருமாளே.


உருகும் மா மெழுகாகவுமே மயல்
     பெருகும் ஆசை உ(ள்)ளாகிய பேர் வரில்
        உரிய மேடையில் வார் குழல் நீவிய ஒளி மானார்
உடை கொள் மேகலையால் முலை மூடியும்
     நெகிழ நாடிய தோதகம் ஆடியும்
        உவமை மாமயில் போல் நிற மேனியர் உரை ஆடும்
கரவு அது ஆம் மன மாதர்கள் நீள் வலை
     கலக வாரியில் வீழ் அடியேன் நெறி
        கருத ஒணா அதி பாதகன் நேசமது அறியாத
கசட மூடனை ஆளவுமே அருள்
     கருணை வாரிதியே இரு நாயகி
        கணவனே உனது தாளிணை மாமலர் தருவாயே
சுருதி மா மொழி வேதியன் வானவர்
     பரவு கேசன் ஐ ஆயுதபாணி நல்
        துளப மாலையை மார்பு அணி மாயவன் மருகோனே
தொலைவு இலா அசுரேசர்கள் ஆனவர
     துகளதாகவுமே எதிர் ஆடிடு
        சுடரின் வேலவனே உலகு ஏழ் வலம் வருவோனே
அருணர் கோடியினார் ஒளி வீசிய
     தருண வாள் முக மேனியனே அரன்
        அணையு நாயகி பாலகனே நிறை கலையோனே
அணி பொன் மேரு உயர் கோபுரம் மாமதில்
     அதிரும் ஆரணம் வாரண வீதியுள
        அருணை மாநகர் மேவி உலாவிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

386   திருவருணை   கரி உரி அரவம்  
தனதன தனன தனந்த தானன
     தனதன தனன தனந்த தானன
          தனதன தனன தனந்த தானன ...... தனதான

கரியுரி அரவ மணிந்த மேனியர்
     கலைமதி சலமு நிறைந்த வேணியர்
          கனல்மழு வுழையு மமர்ந்த பாணியர் ...... கஞ்சமாதின்
கனமுலை பருகி வளர்ந்த காமனை
     முனிபவர் கயிலை யமர்ந்த காரணர்
          கதிர்விரி மணிபொ னிறைந்த தோளினர் ...... கண்டகாள
விரிவென வுனது ளுகந்த வேலென
     மிகவிரு குழையு டர்ந்து வேளினை
          யனையவ ருயிரை விழுங்கி மேலும்வெ ...... குண்டுநாடும்
வினைவிழி மகளிர் தனங்கள் மார்புற
     விதமிகு கலவி பொருந்தி மேனியு
          மெழில்கெட நினைவு மழிந்து மாய்வதொ ...... ழிந்திடாதோ
எரிசொரி விழியு மிரண்டு வாளெயி
     றிருபிறை சயில மிரண்டு தோள்முகி
          லெனவரு மசுரர் சிரங்கள் மேருஇ ...... டிந்துவீழ்வ
தெனவிழ முதுகு பிளந்து காளிக
     ளிடுபலி யெனவு நடந்து தாள்தொழ
          எதிர்பொரு துதிர முகந்த வேகமு ...... கைந்தவேலா
அரிகரி யுழுவை யடர்ந்த வாண்மலை
     அருணையி லறவு முயர்ந்த கோபுர
          மதினுறை குமர அநந்த வேதமொ ...... ழிந்துவாழும்
அறுமுக வடிவை யொழிந்து வேடர்கள்
     அடவியி லரிவை குயங்கள் தோய்புய
          அரியர பிரம புரந்த ராதியர் ...... தம்பிரானே.


கரி உரி அரவம் அணிந்த மேனியர்
     கலை மதி சலமு(ம்) நிறைந்த வேணியர்
        கனல் மழு உழையும் அமர்ந்த பாணியர் கஞ்ச மாதின்
கன முலை பருகி வளர்ந்த காமனை
     முனிபவர் கயிலை அமர்ந்த காரணர்
        கதிர் விரி மணி பொன் நிறைந்த தோளினர் கண்ட காள
விரிவு என உனது உள் உகந்த வேல் என
     மிக இரு குழையும் அடர்ந்து வேளினை
        அனையவர் உயிரை விழுங்கி மேலும் வெகுண்டு நாடும்
வினை விழி மகளிர் தனங்கள் மார்பு உற
     வித மிகு கலவி பொருந்தி மேனியும்
        எழில் கெட நினைவும் அழிந்து மாய்வது ஒழிந்திடாதோ
எரி சொரி விழியும் இரண்டு வாள் எயிறு
     இரு பிறை சயிலம் இரண்டு தோள் முகில்
        என வரும் அசுரர் சிரங்கள் மேரு இடிந்து வீழ்வது
என விழ முதுகு பிளந்து காளிகள்
     இடு பலி எனவு(ம்) நடந்து தாள் தொழ
        எதிர் பொருது உதிரம் உகந்த வேகம் உகைந்த வேலா
அரி கரி உழுவை அடர்ந்த வாண் மலை
     அருணையில் அறவும் உயர்ந்த கோபுரம்
        அதின் உறை குமர அநந்த வேத(ம்) மொழிந்து வாழும்
அறுமுக வடிவை ஒழிந்து வேடர்கள்
     அடவியில் அரிவை குயங்கள் தோய் புய
        அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

387   திருவருணை   கனை கடல் வயிறு  
தனதன தனதன தந்த தானன
     தனதன தனதன தந்த தானன
          தனதன தனதன தந்த தானன ...... தநததான

கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விட
     வடதம னியகிரி கம்ப மாய்நட
          கணபண விபரித கந்த காளபு ...... யங்கராஜன்
கயிறென அமரர நந்த கோடியு
     முறைமுறை யமுதுக டைந்த நாளொரு
          கதியற வுலகைவி ழுங்கு மேகவொ ...... ழுங்குபோல
வினைமத கரிகளு மெண்டி சாமுக
     கிரிகளு முறுகிட அண்ட கோளகை
          வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு ...... நஞ்சுபோல
விடுகுழை யளவும ளந்து காமுக
     ருயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதக
          விழிவலை மகளிரொ டன்பு கூர்வதொ ...... ழிந்திடாதோ
முனைபெற வளையஅ ணைந்த மோகர
     நிசிசரர் கடகமு றிந்து தூளெழ
          முகிலென வுருவமி ருண்ட தாருக ...... னஞ்சமீன
முழுகிய திமிரத ரங்க சாகர
     முறையிட இமையவர் தங்க ளூர்புக
          முதுகிரி யுருவமு னிந்த சேவக ...... செம்பொன்மேரு
அனையன கனவித சண்ட கோபுர
     அருணையி லுறையும ருந்து ணாமுலை
          அபிநவ வனிதைத ருங்கு மாரநெ ...... ருங்குமால்கொண்
டடவியில் வடிவுக ரந்து போயொரு
     குறமகள் பிறகுதி ரிந்த காமுக
          அரியர பிரமபு ரந்த ராதியர் ...... தம்பிரானே.


கனை கடல் வயிறு குழம்பி வாய்விட
     வட தமனிய கிரி கம்பமாய் நட
         கண பண விபரித கந்தகாள புயங்க ராஜன்
கயிறு என அமரர் அநந்த கோடியு(ம்)
     முறை முறை அமுது கடைந்த நாள் ஒரு
         கதி அற உலகை விழுங்கும் மேக ஒழுங்கு போல
வினை மத கரிகளும் எண் திசாமுக
     கிரிகளும் முறுகிட அண்ட கோளகை
         வெடிபட எவரையும் விஞ்சி வேல் இடு நஞ்சு போல
விடு குழை அளவும் அளந்து காமுகர்
     உயிர் பலி கவர் உறு பஞ்ச பாதக
         விழி வலை மகளிரொடு அன்பு கூர்வது ஒழிந்திடாதோ
முனை பெற வளைய அணைந்த மோகர
     நிசிசரர் கடகம் முறிந்து தூள் எழ
         முகில் என உருவம் இருண்ட தாருகன் அஞ்ச மீன(ம்)
முழுகிய திமிர தரங்க சாகர(ம்)
     முறை இட இமையவர் தங்கள் ஊர் புக
         முது கிரி உருவ முனிந்த சேவக செம்பொன் மேரு
அனையன கனவித சண்ட கோபுர
     அருணையில் உறையும் அருந்து உணா முலை
         அபிநவ வனிதை தரும் குமார நெருங்கு மால் கொண்டு
அடவியில் வடிவு கரந்து போய் ஒரு
     குற மகள் பிறகு திரிந்த காமுக
         அரி அரன் பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

388   திருவருணை   இரவியும் மதியும்  
தனதன தனனம் தனதன தனனம்
     தனதன தனனம் ...... தனதான

இரவியு மதியுந் தெரிவுற எழுமம்
     புவிதனி லினமொன் ...... றிடுமாதும்
எழில்புதல் வருநின் றழுதுள முருகும்
     மிடர்கொடு நடலம் ...... பலகூறக்
கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்
     டுயிரினை நமனுங் ...... கருதாமுன்
கலைகொடு பலதுன் பமுமக லிடநின்
     கழலிணை கருதும் ...... படிபாராய்
திருமரு வியதிண் புயனயன் விரியெண்
     டிசைகிடு கிடவந் ...... திடுசூரன்
திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்
     சிடவலி யொடுகன் ...... றிடும்வேலா
அருமறை யவரந் தரமுறை பவரன்
     புடையவ ருயஅன் ...... றறமேவும்
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
     கருணையி லுறையும் ...... பெருமாளே.


இரவியு மதியுந் தெரிவுற எழும் அம்
     புவிதனில் இனம் ஒன்றிடுமாதும்
எழில்புதல் வரும் நின்றழுது உள முருகும்
     இடர்கொடு நடலம் பலகூற
கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்டு
     உயிரினை நமனுங் கருதாமுன்
கலைகொடு பல துன்பமும் அகலிட நின்
     கழலிணை கருதும் படிபாராய்
திருமரு வியதிண் புயன் அயன் விரியெண்
     டிசை கிடுகிட வந்திடு சூரன்
திணிபுயமது சிந்திட அலை கடலஞ்
     சிட வலியொடு கன்றிடும்வேலா
அருமறையவர் அந்தரம் உறைபவர்
     அன்புடையவர் உ(ய்)ய அன்று அறமேவும்
அரிவையும் ஒருபங்கு இடமுடை யவர்தங்கு
     அருணையி லுறையும் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=R8zB8VjSPrA
Add (additional) Audio/Video Link

Back to Top

389   திருவருணை   விரகொடு வளை  
தனதன தனனம் தனதன தனனம்
     தனதன தனனம் ...... தனதான

விரகொடு வளைசங் கடமது தருவெம்
     பிணிகொடு விழிவெங் ...... கனல்போல
வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்
     றெனவிதி வழிவந் ...... திடுபோதிற்
கரவட மதுபொங் கிடுமன மொடுமங்
     கையருற வினர்கண் ...... புனல்பாயுங்
கலகமும் வருமுன் குலவினை களையுங்
     கழல்தொழு மியல்தந் ...... தருள்வாயே
பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்
     படவர வணைகண் ...... டுயில்மாலம்
பழமறை மொழிபங் கயனிமை யவர்தம்
     பயமற விடமுண் ...... டெருதேறி
அரவொடு மதியம் பொதிசடை மிசைகங்
     கையுமுற அனலங் ...... கையில்மேவ
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
     கருணையில் மருவும் ...... பெருமாளே.


விரகொடு வளை சங்கடம் அது தரு வெம்
     பிணி கொடு விழி வெம் கனல் போல
வெறி கொடு சமன் நின்று உயிர் கொள்ளும் நெறியின்
     இன்று என விதி வழி வந்திடு போதில்
கரவடம் அது பொங்கிடு மனமொடு மங்
     கையர் உறவினர் கண் புனல் பாயும்
கலகமும் வரு முன் குலவினை களையும்
     கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே
பரவிடும் அவர் சிந்தையர் விடம் உமிழும்
     பட அரவு அணை கண் துயில் மால்
அம் பழ மறை மொழி பங்கயன் இமையவர் தம்
     பயம் அற விடம் உண்டு எருது ஏறி
அரவொடு மதியம் பொதி சடை மிசை கங்கையும்
     உற அனல் அம் கையில் மேவ
அரிவையும் ஒரு பங்கு இடம் உடையார் தங்கு
     அருணையில் மருவும் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Y_juhQMyXBQ
Add (additional) Audio/Video Link

Back to Top

390   திருவருணை   இடம் அடு சுறவை  
தனதன தனன தனதன தனன
     தனதன தனதன ...... தந்ததான

இடமடு சுறவை முடுகிய மகர
     மெறிகட லிடையெழு ...... திங்களாலே
இருவினை மகளிர் மருவிய தெருவி
     லெரியென வருசிறு ...... தென்றலாலே
தடநடு வுடைய கடிபடு கொடிய
     சரம்விடு தறுகண ...... நங்கனாலே
சரிவளை கழல மயல்கொளு மரிவை
     தனிமல ரணையின ...... லங்கலாமோ
வடகுல சயில நெடுவுட லசுரர்
     மணிமுடி சிதறஎ ...... றிந்தவேலா
மறமக ளமுத புளகித களப
     வளரிள முலையைம ...... ணந்தமார்பா
அடலணி விகட மரகத மயிலி
     லழகுட னருணையி ...... னின்றகோவே
அருமறை விததி முறைமுறை பகரு
     மரியர பிரமர்கள் ...... தம்பிரானே.


இடம் அடு சுறவை முடுகிய மகரம்
     எறி கடல் இடை எழு திங்களாலே
இரு வினை மகளிர் மருவிய தெருவில்
     எரி என வரு சிறு தென்றலாலே
தட நடு உடைய கடி படு கொடிய
     சரம் விடு தறு கண் அநங்கனாலே
சரி வளை கழல மயல் கொளும் அரிவை
     தனி மலர் அணையில் நலங்கலாமோ
வட குல சயில நெடு உடல் அசுரர்
     மணி முடி சிதற எறிந்த வேலா
மற மகள் அமுத புளகித களப
     வளர் இள முலையை மணந்த மார்பா
அடல் அணி விகடம் மரகத மயிலில்
     அழகுடன் அருணையில் நின்ற கோவே
அரு மறை விததி முறை முறை பகரும்
     அரி அர பிரமர்கள் தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

391   திருவருணை   கெஜ நடை மடவார்  
தனதன தனனா தனதன தனனா
     தனதன தனனா ...... தனதான

கெஜநடை மடவார் வசமதி லுருகா
     கிலெசம துறுபாழ் ...... வினையாலே
கெதிபெற நினையா துதிதனை யறியா
     கெடுசுக மதிலாழ் ...... மதியாலே
தசையது மருவீ வசையுட லுடனே
     தரணியில் மிகவே ...... யுலைவேனோ
சததள மலர்வார் புணைநின கழலார்
     தருநிழல் புகவே ...... தருவாயே
திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய்
     திருநெடு கருமால் ...... மருகோனே
திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார்
     திரிபுரை யருள்சீர் ...... முருகோனே
நிசிசர ருறைமா கிரியிரு பிளவா
     நிறையயில் முடுகா ...... விடுவோனே
நிலமிசை புகழார் தலமெனு மருணா
     நெடுமதில் வடசார் ...... பெருமாளே.


கெஜ நடை மடவார் வசம் அதில்
     உருகா கிலெசம் அது உறு பாழ் வினையாலே
கெதி பெற நினையா துதி தனை அறியா
     கெடு சுகம் அதில் ஆழ் மதியாலே
தசை அது மருவீ வசை உடல் உடனே
     தரணியில் மிகவே உலைவேனோ
சத தள மலர் வார் புணை நின கழலார்
     தரு நிழல் புகவே தருவாயே
திசை முகவனை நீள் சிறை உற விடுவாய்
     திரு நெடு கரு மால் மருகோனே
திரி புர தகனார் இடம் அதில் மகிழ்வார்
     திரி புரை அருள் சீர் முருகோனே
நிசிசரர் உறை மா கிரி இரு பிளவா
     நிறை அயில் முடுகா விடுவோனே
நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா
     நெடு மதில் வட சார் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

392   திருவருணை   அருக்கார் நலத்தை  
தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்
     தனத்தா தனத்தத் ...... தனதான

அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்
     கடுத்தாசை பற்றித் ...... தளராதே
அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்
     டறப்பே தகப்பட் ...... டழியாதே
கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்
     கலிச்சா கரத்திற் ...... பிறவாதே
கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்
     கலைப்போ தகத்தைப் ...... புகல்வாயே
ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட்
     டுரைப்பார்கள் சித்தத் ...... துறைவோனே
உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்
     டொளித்தோடும் வெற்றிக் ...... குமரேசா
செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்
     செருச்சூர் மரிக்கப் ...... பொரும்வேலா
திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற்
     றிருக்கோ புரத்திற் ...... பெருமாளே.


அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு
     அடுத்த ஆசை பற்றித் தளராதே
அடல் காலனுக்கு கடைக் கால் மிதித்திட்டு
     அறப் பேதகப் பட்டு அழியாதே
கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து
     கலிச் சாகரத்தில் பிறவாதே
கருத்தால் எனக்குத் திருத் தாள் அளித்து
     கலைப் போதகத்தைப் புகல்வாயே
ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு
     உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே
உரத் தோள் இடத்தில் குறத் தேனை வைத்திட்டு
     ஒளித்து ஓடும் வெற்றிக் குமரேசா
செருக்கால் தருக்கி சுரச் சூர் நெருக்கு
     அச் செருச் சூர் மரிக்கப் பொரும் வேலா
திறப் பூதலத்தில் திரள் சோண வெற்பில்
     திருக் கோபுரத்தில் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=mDuhsxmGCPo
Add (additional) Audio/Video Link

Back to Top

393   திருவருணை   அருமா மதனை  
தனனா தனனத் தனனா தனனத்
     தனனதா தனனத் ...... தனதான

அருமா மதனைப் பிரியா தசரக்
     கயலார் நயனக் ...... கொடியார்தம்
அழகார் புளகப் புழுகார் சயிலத்
     தணையா வலிகெட் ...... டுடல்தாழ
இருமா நடைபுக் குரைபோ யுணர்வற்
     றிளையா வுளமுக் ...... குயிர்சோர
எரிவாய் நரகிற் புகுதா தபடிக்
     கிருபா தமெனக் ...... கருள்வாயே
ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்
     டுரமோ டெறிபொற் ...... கதிர்வேலா
உறைமா னடவிக் குறமா மகளுக்
     குருகா றிருபொற் ...... புயவீரா
திருமால் கமலப் பிரமா விழியிற்
     றெரியா வரனுக் ...... கரியோனே
செழுநீர் வயல்சுற் றருணா புரியிற்
     றிருவீ தியினிற் ...... பெருமாளே.


அருமா மதனைப் பிரியாத சரம்
     கயல் ஆர் நயனக் கொடியார் தம்
அழகு ஆர் புளக புழுகு ஆர் சயிலத்து
     அணையா வலி கெட்டு உடல் தாழ
இருமா நடை புக்கு உரை போய் உணர்வு
     அற்று இளையா உளம் உக்கு உயிர் சோர
எரி வாய் நரகில் புகுதா தபடிக்கு
     இரு பாதம் எனக்கு அருள்வாயே
ஒரு மால் வரையைச் சிறு தூள் படவிட்டு
     உரமோடு எறி பொன் கதிர் வேலா
உறை மான் அடவிக் குற மா மகளுக்கு
     உருகா ஆறிரு பொன் புய வீரா
திருமால் கமலப் பிரமா விழியில்
     தெரியா அரனுக்கு அரியோனே
செழு நீர் வயல் சுற்று அருணா புரியில்
     திரு வீதியினில் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

394   திருவருணை   அழுதும் ஆவா  
தனதனா தானனத் தனதனா தானனத்
     தனதனா தானனத் ...... தனதான

அழுதுமா வாவெனத் தொழுதமூ டூடுநெக்
     கவசமா யாதரக் ...... கடலூடுற்
றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்
     கறியொணா மோனமுத் ...... திரைநாடிப்
பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்
     பெரியஆ தேசபுற் ...... புதமாய
பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்
     பெறுவதோ நானினிப் ...... புகல்வாயே
பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப்
     படியுமா றாயினத் ...... தனசாரம்
பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்
     பரமமா யூரவித் ...... தகவேளே
பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்
     பொடிபடா வோடமுத் ...... தெறிமீனப்
புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்
     பொருதவே லாயுதப் ...... பெருமாளே.


அழுதும் ஆவா எனத் தொழுதும் ஊடூடு நெக்கு
     அவசமாய் ஆதரக் கடல் ஊடுற்று
அமைவில் கோலாகலச் சமய மா பாதகர்க்கு
     அறி ஒணா மோன முத்திரை நாடி
பிழை படா ஞான மெய்ப் பொருள் பெறாதே வினைப்
     பெரிய ஆதேச புற்பதம் ஆய
பிறவி வாராகரம் சுழியிலே போய் விழப்
     பெறுவதோ நான் இனிப் புகல்வாயே
பழைய பாகீரதிப் படுகை மேல் வாழ்வு எனப்
     படியும் ஆறு ஆயினத் தன சாரம்
பருகுமாறு ஆனனச் சிறுவ சோணாசலப்
     பரம மாயூர வித்தக வேளே
பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல்
     பொடி படா ஓட முத்து எறி மீனப்
புணரி கோ கோ என சுருதி கோ கோ என
     பொருத வேலாயுதப் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=PyrGBhVv7oQ
Add (additional) Audio/Video Link

Back to Top

395   திருவருணை   ஆனை வரிக் கோடு  
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
     தானதனத் தானதனத் ...... தனதானா

ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்
     டாடைமறைத் தாடுமலர்க் ...... குழலார்கள்
ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட்
     டாரையுமெத் தாகமயக் ...... கிடுமோகர்
சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத்
     தூதுவிடுத் தேபொருளைப் ...... பறிமாதர்
தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்
     சோதியொளிப் பாதமளித் ...... தருள்வாயே
தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச்
     சாயகடற் சூரைவதைத் ...... திடுவோனே
தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத்
     தாபரம்வைத் தாடுபவர்க் ...... கொருசேயே
தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத்
     தேயுருகிச் சேருமணிக் ...... கதிர்வேலா
சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த்
     தேவமகட் கோர்கருணைப் ...... பெருமாளே.


ஆனை வரிக் கோடு இள நீரப் பார முலைச் சார் அசை பட்டு
     ஆடை மறைத்து ஆடும் மலர்க் குழலார்கள்
ஆர வடத் தோடு அலையப் பேசி நகைத்து ஆசை பொருட்டு
     யாரையும் மெத்தாக மயக்கிடும் மோகர்
சோனை மழைப் பார விழித் தோகை மயில் சாதியர் கைத்
     தூது விடுத்தே பொருளைப் பறி மாதர்
தோதகம் உற்று ஏழ் நரகில் சேரும் அழற் காயனை உட்
     சோதி ஒளிப் பாதம் அளித்து அருள்வாயே
தானதனத்தீ திமிலை பேரிகை கொட்ட சம் மலைச்
     சாய கடல் சூரை வதைத் திடுவோனே
தாள இயல் சோதி நிறக் காலின் எழக் கோலி எடுத்(து)
     தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ஒரு சேயே
தேனின் இரசக் கோவை இதழ்ப் பூவை குறப் பாவை தனத்தே
     உருகிச் சேரும் அணிக் கதிர் வேலா
சீர் அருணைக் கோபுரம் உற்று ஆன புனத் தோகையும் மெய்
     தேவ மகட்கு ஓர் கருணைப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

396   திருவருணை   இடருக்கு இடர்  
தனனத் தனதானன தனனத் தனதானன
     தனனத் தனதானன ...... தனதான

இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு
     மிறுதிச் சிறுகால்வரு ...... மதனாலே
இயலைத் தருகானக முயலைத் தருமேனியி
     லெரியைத் தருமாமதி ...... நிலவாலே
தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை
     தொலையத் தனிவீசிய ...... கடலாலே
துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்
     துவளத் தகுமோதுயர் ...... தொலையாதோ
வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
     மடியச் சுடஏவிய ...... வடிவேலா
மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்
     மகிழப் புனமேவிய ...... மயில்வீரா
அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய
     லருணைத் திருவீதியி ...... லுறைவோனே
அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி
     அமரர்க் கரசாகிய ...... பெருமாளே.


இடருக்கு இடர் ஆகிய கொடுமைக் கணை மேல் வரும்
     இறுதிச் சிறு கால் வரும் அதனாலே
இயலைத் தரு கானகம் முயலைத் தரு மேனியில்
     எரியைத் தரு மா மதி நிலவாலே
தொடரக் கொடு வாதையில் அடையக் கரை மேல் அலை
     தொலையத் தனி வீசிய கடலாலே
துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர்
     துவளத் தகுமோ துயர் தொலையாதோ
வட பொற் குல மேருவின் முடுகின் பொரு சூரனை
     மடியச் சுட ஏவிய வடிவேலா
மறவக் குலமாம் ஒரு குற மெய்த் திரு மா மகள்
     மகிழப் புன மேவிய மயில் வீரா
அடரப் படர் கேதகம் மடலின் தழை சேர் வயல்
     அருணைத் திரு வீதியில் உறைவோனே
அவனித் திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி
     அமரர்க்கு அரசாகிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

397   திருவருணை   இமராஜன் நிலாவது  
தனதாதன தானன தத்தம் ...... தனதான
     தனதாதன தானன தத்தம் ...... தனதான

இமராஜனி லாவதெ றிக்குங் ...... கனலாலே
     இளவாடையு மூருமொ றுக்கும் ...... படியாலே
சமராகிய மாரனெ டுக்குங் ...... கணையாலே
     தனிமானுயிர் சோரும தற்கொன் ...... றருள்வாயே
குமராமுரு காசடி லத்தன் ...... குருநாதா
     குறமாமக ளாசைத ணிக்குந் ...... திருமார்பா
அமராவதி வாழ்வம ரர்க்கன் ...... றருள்வோனே
     அருணாபுரி வீதியி னிற்கும் ...... பெருமாளே.


இமராஜன் நிலாவது எறிக்குங் கனலாலே
     இளவாடையும் ஊரும் ஒறுக்கும்படியாலே
சமராகிய மாரன் எடுக்குங் கணையாலே
     தனிமானுயிர் சோரும் அதற்கு ஒன்றருள்வாயே
குமரா முருகா சடிலத்தன் குருநாதா
     குறமாமகள் ஆசை தணிக்குந் திருமார்பா
அமராவதி வாழ்வு அமரர்க்கன்று அருள்வோனே
     அருணாபுரி வீதியி னிற்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=NdeKdrjwZkY
Add (additional) Audio/Video Link

Back to Top

398   திருவருணை   இரத சுரதமுலை  
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
     தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
          தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த ...... தனதனத் தனதான

இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்ப
     அமுத நிலையில்விர லுகிரேகை தைக்க மணிபோல் விளங்க
          இசலி யிசலியுப ரிதலீலை யுற்று இடைநூல் நுடங்க ...... வுளமகிழ்ச் சியினோடே
இருவ ருடலுமொரு வுருவாய்ந யக்க முகமே லழுந்த
     அளக மவிழவளை களுமேக லிக்க நயனா ரவிந்த
          லகரி பெருகஅத ரமுமேய ருத்தி முறையே யருந்த ...... உரையெழப் பரிவாலே
புருவ நிமிரஇரு கணவாள்நி மைக்க வுபசா ரமிஞ்ச
     அவச கவசமள வியலேத ரிக்க அதிலே யநந்த
          புதுமை விளையஅது பரமாப ரிக்க இணைதோ ளுமொன்றி ...... அதிசுகக் கலையாலே
புளக முதிரவிர கமென்வாரி தத்த வரைநாண் மழுங்க
     மனமு மனமுமுரு கியெயாத ரிக்க வுயிர்போ லுகந்து
          பொருள தளவுமரு வுறுமாய வித்தை விலைமா தர்சிங்கி ...... விடஅருட் புரிவாயே
பரவு மகரமுக ரமுமேவ லுற்ற சகரால் விளைந்த
     தமர திமிரபிர பலமோக ரத்ந சலரா சிகொண்ட
          படியை முழுதுமொரு நொடியேம தித்து வலமா கவந்து ...... சிவனிடத் தமர்சேயே
பழநி மிசையிலிசை யிசையேர கத்தில் திருவா வினன்கு
     டியினில் பிரமபுர மதில்வாழ்தி ருத்த ணிகையூ டுமண்டர்
          பதிய முதியகதி யதுநாயெ னுக்கு முறவா கிநின்று ...... கவிதையைப் புனைவோனே
அரியு மயனுமம ரருமாய சிட்ட பரிபா லனன்ப
     ரடையு மிடரைமுடு கியெநூற துட்ட கொலைகா ரரென்ற
          அசுரர் படையையடை யவும்வேர றுத்த அபிரா மசெந்தி ...... லுரகவெற் புடையோனே
அருண கிரணகரு ணையபூர ணச்ச ரணமே லெழுந்த
     இரண கரணமுர ணுறுஞ்ர னுட்க மயிலே றுகந்த
          அருணை யிறையவர்பெ ரியகோபு ரத்தில் வடபா லமர்ந்த ...... அறுமுகப் பெருமாளே.


இரத சுரத முலைகளு(ம்) மார்பு குத்த நுதல் வேர்வு அரும்ப
     அமுத நிலையில் விரல் உகி ரேகை தைக்க மணி போல் விளங்க
         இசலி இசலி உபரித லீலை உற்று இடை நூல் நுடங்க உ(ள்)ள மகிழ்ச்சியினோடே
இருவர் உடலும் ஒரு உருவாய் நயக்க முக(ம்) மேல் அழுந்த
     அளகம் அவிழ வளைகளுமே கலிக்க நயன அரவிந்த
         லகரி பெருக அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழப் பரிவாலே
புருவம் நிமிர இரு கண் அ(வ்)வாள் நிமைக்க உபசார(ம்)மிஞ்ச
     அவசம் கவசம் அளவு இயலே தரிக்க அதிலே அநந்த
         புதுமை விளைய அது பரமாபரிக்க இணை தோளும் ஒன்றி அதி சுகக் கலையாலே
புளக(ம்) முதிர இத கம் என் வாரி தத்த வரை நாண் மழுங்க
     மனமும் மனமும் உருகியெ ஆதரிக்க உயிர் போல் உகந்து
         பொருளது அளவு மருவு உறு மாய வித்தை விலை மாதர் சிங்கி விட அருள் புரிவாயே
பரவு மகர முகரமு(ம்) மேவல் உற்ற சக(ர)ரால் விளைந்த
     தமர(ம்) திமிர(ம்) பிரபல மோக ரத்ந சல ராசி கொண்ட
         படியை முழுதும் ஒரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத்து அமர் சேயே
பழநி மிசையில் இசை இசை ஏரகத்தில் திருவாவினன்
     குடியினில் பிரமபுரம் அதில் வாழ் திருத்தணிகை ஊடும் அண்டர்
         பதிய முதிய கதியது நாயேனுக்கும் உறவாகி நின்று கவிதையைப் புனைவோனே
அரியும் அயனும் அமரரும் ஆய சிட்ட பரிபாலன் அன்பர்
     அடையும் இடரை முடுகியெ நூற துட்ட கொலைகாரர் என்ற
         அசுரர் படையை அடையவும் வேர் அறுத்த அபிராம செந்தில் உரக வெற்பு உடையோனே
அருண கிரண கருணைய பூரணச் சரணம் மேல் எழுந்த
     இரண கரணம்முரண் உறு சூரன் உட்க மயில் ஏறு கந்த
         அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் வடபால் அமர்ந்த அறுமுகப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

399   திருவருணை   இரவுபகற் பலகாலும்  
தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான
     தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான

இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித்
     திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா
     அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே.


இரவுபகற் பலகாலும் இயலிசைமுத்தமிழ்கூறி
     திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத்துவஞானா
     அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=mZW0BkWMYdI
Add (additional) Audio/Video Link

Back to Top

400   திருவருணை   இருவர் மயலோ  
தனன தனனா தனன தனனா
     தனன தனனா ...... தனதான

இருவர் மயலோ அமளி விதமோ
     எனென செயலோ ...... அணுகாத
இருடி அயன்மா லமர ரடியா
     ரிசையு மொலிதா ...... னிவைகேளா
தொருவ னடியே னலறு மொழிதா
     னொருவர் பரிவாய் ...... மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதா
     னுனது கிருபா ...... கரமேதோ
பரம குருவா யணுவி லசைவாய்
     பவன முதலா ...... கியபூதப்
படையு முடையாய் சகல வடிவாய்
     பழைய வடிவா ...... கியவேலா
அரியு மயனோ டபய மெனவே
     அயிலை யிருள்மேல் ...... விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
     அருண கிரிவாழ் ...... பெருமாளே.


இருவர் மயலோ அமளி விதமோ
     எனென செயலோ அணுகாத
இருடி அயன்மால் அமரர் அடியார்
     இசையும் ஒலிதான் இவைகேளாது
ஒருவன் அடியேன் அலறு மொழிதான்
     ஒருவர் பரிவாய் மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதான்
     உனது கிருபாகரம் ஏதோ
பரம குருவாய் அணுவில் அசைவாய்
     பவன முதலாகிய பூதப்
படையும் உடையாய் சகல வடிவாய்
     பழைய வடிவாகியவேலா
அரியும் அயனோடு அபயம் எனவே
     அயிலை யிருள்மேல் விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
     அருண கிரிவாழ் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=h1_mNz3prFg
Add (additional) Audio/Video Link

Back to Top

401   திருவருணை   இருவினை அஞ்ச  
தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான

இருவினை யஞ்ச மலவகை மங்க
     இருள்பிணி மங்க ...... மயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்பு
     வினதக முங்கொ ...... டளிபாடக்
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
     களிமலர் சிந்த ...... அடியேன்முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
     கடுகிந டங்கொ ...... டருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
     திகழ்நகை கொண்ட ...... விடையேறிச்
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
     திகழந டஞ்செய் ...... தெமையீண
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
     அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
     அமளிந லங்கொள் ...... பெருமாளே.


இருவினை யஞ்ச மலவகை மங்க
     இருள்பிணி மங்க மயிலேறி
இனவருள் அன்பு மொழிய க டம்பு
     வின் அதகமும் கொடு அளிபாட
கரிமுகன் எம்பி முருகனென அண்டர்
     களிமலர் சிந்த அடியேன்முன்
கருணைபொழிந்து முகமும் மலர்ந்து
     கடுகி நடங்கொடு அருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
     திகழ்நகை கொண்ட விடையேறிச்
சிவம் வெளி யங்கண்அருள் குடிகொண்டு
     திகழந டஞ்செய்து எமையீண்
அரசியிடங்கொள மழுவுடை யெந்தை
     அமலன் மகிழ்ந்த குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
     அமளிந லங்கொள் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Sxk2Bh-j9Dw
https://www.youtube.com/watch?v=QLC-HaSY1qc
Add (additional) Audio/Video Link

Back to Top

402   திருவருணை   இருவினை ஊண்  
தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த
     தனதன தாந்த தந்த ...... தனதான

இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை
     யிடரடை பாழ்ம்பொ தும்ப ...... கிதவாரி
இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப
     மிரவிடை தூங்கு கின்ற ...... பிணநோவுக்
குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ
     டுயிர்குடி போங்கு ரம்பை ...... யழியாதென்
றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து
     னுபயப தாம்பு யங்க ...... ளடைவேனோ
அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க
     ளமரர் குழாங்கு விந்து ...... தொழவாழும்
அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட
     அபிநவ சார்ங்க கண்டன் ...... மருகோனே
கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட
     கடவுள்ந டேந்த்ரர் மைந்த ...... வரைசாடுங்
கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த
     கரகுலி சேந்த்ரர் தங்கள் ...... பெருமாளே.


இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை
     இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி
இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம்
     இரவு இடை தூங்குகின்ற பிண நோவுக்கு
உருவு இயல் பாண்டம் அஞ்சும் மருவிய கூண்டு நெஞ்சொடு
     உயிர் குடி போம் குரம்பை அழியாது என்று
உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து
     உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ
அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள்
     அமரர் குழாம் குவிந்து தொழ வாழும்
அடியவர் பாங்க பண்டு புகல் அகிலாண்டம் உண்ட
     அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே
கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட
     கடவுள் நடேந்த்ரர் மைந்த வரை சாடும்
கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த
     கரகுலிச இந்த்ரர் தங்கள் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=5aWykzmYm4g
Add (additional) Audio/Video Link

Back to Top

403   திருவருணை   இருளளகம் அவிழ  
தனதனன தனதனன தான தத்த தந்த
     தனதனன தனதனன தான தத்த தந்த
          தனதனன தனதனன தான தத்த தந்த ...... தனதான

இருளளக மவிழமதி போத முத்த ரும்ப
     இலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள்
          இளகஇடை துவளவளை பூச லிட்டி ரங்க ...... எவராலும்
எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தி
     யினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்த
          இதழமுது பருகியுயிர் தேக மொத்தி ருந்து ...... முனிவாறி
முருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்து
     முகவனச மலர்குவிய மோக முற்ற ழிந்து
          மொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்து ...... விடுபோதும்
முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்த
     பழுதில்மறை பயிலுவஎ னாத ரித்து நின்று
          முநிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று ...... மறவேனே
ஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்து
     கிழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்து
          உலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து ...... சபையூடே
ஒருபழைய சருகுமடி ஆவ ணத்தை யன்று
     உரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்று
          உதறிமுறை யிடுபழைய வேத வித்தர் தந்த ...... சிறியோனே
அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ
     டழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்த
          அமரரொடு பலர்முடுகி ஆழி யைக்க டைந்து ...... அமுதாக
அருளுமரி திருமருக வார ணத்தை யன்று
     அறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்த
          அருணகிரி நகரிலெழு கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.


இருள் அளகம் அவிழ மதி போத முத்து அரும்ப
     இலகு கயல் புரள இரு பார பொன் தனங்கள்
        இளக இடை துவள வளை பூசல் இட்டு இரங்க எவராலும்
எழுத அரிய கலை நெகிழ ஆசை மெத்த உந்தி
     இனிய சுழி மடுவினிடை மூழ்கி நட்பொடு அந்த
        இதழ் அமுது பருகி உயிர் தேகம் ஒத்திருந்து முனிவு ஆறி
முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து
     முக வனச மலர் குவிய மோகம் உற்று அழிந்து
        மொழி பதற வசம் அழிய ஆசையில் கவிழ்ந்து விடு போதும்
முழுது(ம்) உணர உடைய முது மா தவத்து உயர்ந்த
     பழுது இல் மறை பயிலுவ எனா தரித்து நின்று
        முநிவர் சுரர் தொழுது உருகு பாத பத்மம் என்றும் மறவேனே
ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து
     கிழ வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து
        உலகு அறிய இவன் அடிமை யாம் என கொணர்ந்து சபை ஊடே
ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று
     உரமொடு அவன் அது வலியவே கிழிக்க நின்று
        உதறி முறை இடு பழைய வேத வித்தர் தந்த சிறியோனே
அரிய உடு பதி கடவி ஆடகச் சிலம்பொடு
     அழகு வட(ம்) மணி முடி வியாளம் இட்டு அழுந்த
        அமரர் ஒடு பலர் முடுகி ஆழியைக் கடைந்து அமுதாக
அருளும் அரி திரு மருக வாரணத்தை அன்று
     அறிவினுடன் ஒரு கொடியிலே தரித்து உகந்த
        அருண கிரி நகரில் எழு கோபுரத்து அமர்ந்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

404   திருவருணை   இறுகு மணி முலை  
தனன தனதன தனன தனதன
     தனன தனதன ...... தனதான

இறுகு மணிமுலை மருவு தரளமு
     மெரியு முமிழ்மதி ...... நிலவாலே
இரவி யெனதுயிர் கவர வருகுழ
     லிசையி லுறுகட ...... லலையாலே
தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு
     சரமி லெளியெனு ...... மழியாதே
தருண மணிபொழி லருணை நகருறை
     சயில மிசையினில் ...... வரவேணும்
முறுகு திரிபுர மறுகு கனலெழ
     முறுவ லுடையவர் ...... குருநாதா
முடிய கொடுமுடி யசுரர் பொடிபட
     முடுகு மரகத ...... மயில்வீரா
குறவர் மடமக ளமுத கனதன
     குவடு படுமொரு ...... திருமார்பா
கொடிய சுடரிலை தனையு மெழுகடல்
     குறுக விடவல ...... பெருமாளே.


இறுகு மணி முலை மருவு தரளமும்
     எரியும் உமிழ் மதி நிலவாலே
இர(ரா)வி எனது உயிர் கவர வரு குழல்
     இசையில் உறு கடல் அலையாலே
தறுகண் ரதி பதி மதனன் விடு கொடு
     சரமில் எளியெனும் அழியாதே
தருணம் மணி பொழில் அருணை நகர் உறை
     சயிலம் மிசையினில் வரவேணும்
முறுகு திரி புரம் முறுகு கனல் எழ
     முறுவல் உடையவர் குரு நாதா
முடிய கொடு முடி அசுரர் பொடிபட
     முடுகு மரகத மயில் வீரா
குறவர் மட மகள் அமுத கனதன
     குவடு படும் ஒரு திரு மார்பா
கொடிய சுடர் இலை தனையும் எழு கடல்
     குறுக விடவல பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

405   திருவருணை   உலையிலனல்  
தனதனன தத்த தனதனன தத்த
     தனதனன தத்த ...... தனதான

உலையிலன லொத்த வுடலினனல் பற்றி
     யுடுபதியை முட்டி ...... யமுதூற
லுருகிவர விட்ட பரமசுக முற்று
     வுனதடியை நத்தி ...... நினையாமற்
சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டு
     திகழ்முகவர் முத்து ...... நகையாலே
சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டுத்
     திருடனென வெட்கி ...... யலைவேனோ
கலைகனக வட்ட திமிலைபறை கொட்ட
     கனகமயில் விட்ட ...... கதிர்வேலா
கருதலரின் முட்டிக் கருகிவரு துட்ட
     கதவமண ருற்ற ...... குலகாலா
அலைகடலு டுத்த தலமதனில் வெற்றி
     அருணைவளர் வெற்பி ...... லுறைவோனே
அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டு
     அரசுநிலை யிட்ட ...... பெருமாளே.


உலையில் அனல் ஒத்த உடலின் அனல் பற்றி
     உடு பதியை முட்டி அமுது ஊறல்
உருகி வர விட்ட பரம சுகம் உற்று
     உனது அடியை நத்தி நினையாமல்
சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு
     திகழ் முகவர் முத்து நகையாலே
சிலுகு வலை இட்ட மயல் கவலை பட்டுத்
     திருடன் என வெட்கி அலைவேனோ
கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட
     கனக மயில் விட்ட கதிர் வேலா
கருதலரின் முட்டிக் கருகி வரு துட்ட
     கத(ம்) அமணர் உற்ற குலகாலா
அலை கடல் உடுத்த தலம் அதனில் வெற்றி
     அருணை வளர் வெற்பில் உறைவோனே
அசுரர்களை வெட்டி அமரர் சிறை விட்டு
     அரசு நிலை இட்ட பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

406   திருவருணை   கடல்பரவு தரங்க  
தனதனன தனந்த தானன ...... தந்ததான
     தனதனன தனந்த தானன ...... தந்ததான

கடல்பரவு தரங்க மீதெழு ...... திங்களாலே
     கருதிமிக மடந்தை மார்சொல்வ ...... தந்தியாலே
வடவனலை முனிந்து வீசிய ...... தென்றலாலே
     வயலருணையில் வஞ்சி போதந ...... லங்கலாமோ
இடமுமையை மணந்த நாதரி ...... றைஞ்சும்வீரா
     எழுகிரிகள் பிளந்து வீழஎ ...... றிந்தவேலா
அடலசுரர் கலங்கி யோடமு ...... னிந்தகோவே
     அரிபிரம புரந்த ராதியர் ...... தம்பிரானே.


கடல்பரவு தரங்க மீதெழு திங்களாலே
     கருதிமிக மடந்தை மார்சொல் வதந்தியாலே
வடவனலை முனிந்து வீசிய தென்றலாலே
     வயலருணையில் வஞ்சி போதநலங்கலாமோ
இடமுமையை மணந்த நாதர் இறைஞ்சும்வீரா
     எழுகிரிகள் பிளந்து வீழ எறிந்தவேலா
அடலசுரர் கலங்கி யோடமுனிந்தகோவே
     அரிபிரம புரந்த ராதியர் தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=O8KspW6xe7Y
Add (additional) Audio/Video Link

Back to Top

407   திருவருணை   கமலமுகப் பிறை  
தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
     தனதனனத் தனதனனத் ...... தனதான

கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற்
     கயலெனபொற் சுழலும்விழிக் ...... குழல்கார்போல்
கதிர்தரளொப் பியதசனக் கமுகுகளப் புயகழைபொற்
     கரகமலத் துகிர்விரலிற் ...... கிளிசேருங்
குமரிதனத் திதலைமலைக் கிசலியிணைக் கலசமெனக்
     குவிமுலைசற் றசையமணிக் ...... கலனாடக்
கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற் கெமனமெனக்
     குனகிபொருட் பறிபவருக் ...... குறவாமோ
திமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமிதித் திமிதிமெனட்
     டிமிடிமிடிட் டிகுர்திமிதித் ...... தொலிதாளம்
செககணசெக் கணகதறத் திடுதிடெனக் கொடுமுடியெட்
     டிகைசிலைபட் டுவரிபடச் ...... சிலைகோடித்
துமிலவுடற் றசுரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத்
     தொகுதசைதொட் டலகையுணத் ...... தொடும்வேலா
துவனிதினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயற்
     சுகமொடணைத் தருணகிரிப் ...... பெருமாளே.


கமல முகப் பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல்
     கயல் என பொன் சுழலும் விழிக் குழல் கார் போல்
கதிர் தரள் ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன்
     கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும்
குமரி தனத் திதலை மலைக்கு இசலி இணைக் கலசம் எனக்
     குவி முலை சற்று அசைய மணிக் கலன் ஆட
கொடி இடை பட்டு உடை நடை பொன் சரண மயில் கமனம் எனக்
     குனகி பொருள் பறி (ப்) பவருக்கு உறவாமோ
திமிலை உடுக்கு உடன் முரசு பறை திமிதித் திமிதிம் எனட்
     டிமி டிமி டிட் டிகுர் திமிதித் ஒலி தாளம்
செககண செக் கண கதறத் திடுதிடு எனக் கொடு முடி எண்
     திகை சிலை பட்டு உவரி பட சிலை கோடித்
துமிலம் உடற்று அசுரர் முடி பொடி பட ரத்தம் உள் பெருக
     தொகு தசை தொட்டு அலகை உ(ண்)ணத் தொடும் வேலா
துவனி தினைப் புனம் மருவி குற மகளைக் களவு மயல்
     சுகமொடு அணைத்த அருண கிரிப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

408   திருவருணை   கமல மொட்டை  
தனன தத்தத் தத்த தத்தத் தனதன
     தனன தத்தத் தத்த தத்தத் தனதன
          தனன தத்தத் தத்த தத்தத் தனதன ...... தனதான

கமல மொட்டைக் கட்ட ழித்துக் குமிழியை
     நிலைகு லைத்துப் பொற்கு டத்தைத் தமனிய
          கலச வர்க்கத் தைத்த கர்த்துக் குலையற ...... இளநீரைக்
கறுவி வட்டைப் பிற்று ரத்திப் பொருதப
     சயம்வி ளைத்துச் செப்ப டித்துக் குலவிய
          கரிம ருப்பைப் புக்கொ டித்துத் திறல்மத ...... னபிஷேகம்
அமலர் நெற்றிக் கட்ட ழற்குட் பொடிசெய்து
     அதிக சக்ரப் புட்ப றக்கக் கொடுமையி
          னடல்ப டைத்தச் சப்ப டுத்திச் சபதமொ ...... டிருதாளம்
அறைதல் கற்பித் துப்பொ ருப்பைப் பரவிய
     சிறக றுப்பித் துக்க திர்த்துப் புடைபடு
          மபிந வச்சித் ரத்த னத்துத் திருடிக ...... ளுறவாமோ
தமர மிக்குத் திக்க திர்க்கப் பலபறை
     தொகுதொ குக்குத் தொத்தொ குக்குத் தொகுதொகு
          தரிகி டத்தத் தத்த ரிக்கத் தரிகிட ...... எனவோதிச்
சவடு றப்பக் கப்ப ழொத்திப் புகையெழ
     விழிக ளுட்செக் கச்சி வத்துக் குறளிகள்
          தசைகள் பட்சித் துக்க ளித்துக் கழுதொடு ...... கழுகாட
அமலை யுற்றுக் கொக்க ரித்துப் படுகள
     அசுர ரத்தத் திற்கு ளித்துத் திமியென
          அடிந டித்திட் டிட்டி டித்துப் பொருதிடு ...... மயிலோனே
அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியி
     னுலவு மெய்ப்ரத் யக்ஷ நற்சற் குருபர
          அருணை யிற்சித் தித்தெ னக்குத் தெளிவருள் ...... பெருமாளே.


கமல மொட்டைக் கட்டு அழித்துக் குமிழியை
     நிலை குலைத்துப் பொன் குடத்தைத் தமனிய
        கலச வர்க்கத்தைத் தகர்த்து குலை அற இளநீரைக்
கறுவி வட்டைப் பின் துரத்திப் பொருது அப
     சயம் விளைத்துச் செப்பு அடித்துக் குலவிய
        கரி மருப்பைப் புக்கு ஒடித்து திறல் மதன் அபிஷேகம்
அமலர் நெற்றிக் கண் தழற்குள் பொடி செய்து
     அதிக சக்ரப் புள் பறக்கக் கொடுமையில்
        அடல் படைத்து அச்சப்படுத்தி சபதமொடு இரு தாளம்
அறைதல் கற்பித்துப் பொருப்பைப் பரவிய
     சிறகு அறுப்பித்துக் கதிர்த்துப் புடைபடும்
        அபிநவ சித்ரத் தனத்துத் திருடிகள் உறவு ஆமோ
தமரம் மிக்குத் திக்கு அதிர்க்கப் பல பறை
     தொகுதொகுக் குத்தொத் தொகுக்குத் தொகுதொகு
        தரிகிடத் தத்தத் தரிக்கத் தரிகிட என ஓதி
சவடு உறப் பக்கப் பழு ஒத்திப் புகை எழ
     விழிகள் உள் செக்கச் சிவத்துக் குறளிகள்
        தசைகள் பட்சித்துக் களித்துக் கழுதொடு கழுகு ஆட
அமலை உற்றுக் கொக்கரித்துப் படுகள
     அசுர ரத்தத்தில் குளித்துத் திமி என
        அடி நடித்திட்டு இட்டு இடித்துப் பொருதிடு மயிலோனே
அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியில்
     உலவு மெய் ப்ரத்யக்ஷ நல் சற் குருபர
        அருணையில் சித்தித்து எனக்குத் தெளிவு அருள் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

409   திருவருணை   கரிமுகக் கடகளிறு  
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
     தனதனத் தனதனத் ...... தனதான

கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக்
     கஜமுகத் தவுணனைக் ...... கடியானை
கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக்
     கனிவயிற் றினிலடக் ...... கியவேழம்
அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத்
     தமர்புரிக் கணபதிக் ...... கிளையோனே
அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற்
     றியைமிகுத் தறுமுகக் ...... குமரேசா
நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக்
     கையில்பிடித் தெதிர்நடத் ...... திடுமீசன்
நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற்
     கரியுரித் தணிபவற் ...... கொருசேயே
துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத்
     துரியமெய்த் தரளமொய்த் ...... திடவீறிச்
சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்
     சுடரயிற் சரவணப் ...... பெருமாளே.


கரிமுகக் கடகளிற் றதிககற்பக மதக்
     கஜமுகத்து அவுணனைக் கடியானை
கடலை எள் பயறு நற் கதலியிற் கனிபலக்
     கனி வயிற் றினிலடக்கிய வேழம்
அரிமுகத்தினன் எதிர்த்திடு களத்தினின் மிகுத்து
     அமர்புரிக் கணபதிக்கு இளையோனே
அயிலெடுத்து அசுரர்வெற்பு அலைவுறப் பொருது
     வெற்றியைமிகுத்த அறுமுகக் குமரேசா
நரிமிகுக் கிளைகளைப் பரியென கடிவளக்
     கையில்பிடித்து எதிர்நடத்திடும் ஈசன்
நடனம் இப் படியிடத் தினும் இசைத் தரையினில்
     கரியுரித்து அணிபவற்கு ஒருசேயே
துரிபெறச் சரிபொழிற் கனவயற்கு அழகுள
     துரியமெய்த் தரளமொய்த்திட வீறிச்
சுரர்துதித்திட மிகுத் தியல்தழைத்த அருணையிற்
     சுடர் அயிற் சரவணப் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=dyxrOQ_XuDY
Add (additional) Audio/Video Link

Back to Top

410   திருவருணை   கரு நிறம் சிறந்து  
தனன தந்தனம் தனதன தனதன
     தனன தந்தனம் தனதன தனதன
          தனன தந்தனம் தனதன தனதன ...... தனதான

கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வன
     மதன தந்திரங் கடியன கொடியன
          கனக குண்டலம் பொருவன வருவன ...... பரிதாவும்
கடலு டன்படர்ந் தடர்வன தொடர்வன
     விளையு நஞ்சளைந் தொளிர்வன பிளிர்வன
          கணையை நின்றுநின் றெதிர்வன முதிர்வன ...... இளையோர்முன்
செருவை முண்டகஞ் சிறுவன வுறுவன
     களவு வஞ்சகஞ் சுழல்வன வுழல்வன
          தெனன தெந்தனந் தெனதென தெனதென ...... எனநாதம்
தெரிசு ரும்பைவென் றிடுவன அடுவன
     மருள்செய் கண்கள்கொண் டணைவர்த முயிரது
          திருகு கின்றமங் கையர்வச மழிதலை ...... யொழிவேனோ
மருவு தண்டைகிண் கிணிபரி புரமிவை
     கலக லன்கலின் கலினென இருசரண்
          மலர்கள் நொந்துநொந் தடியிட வடிவமு ...... மிகவேறாய்
வலிய சிங்கமுங் கரடியு முழுவையு
     முறைசெ ழும்புனந் தினைவிளை யிதண்மிசை
          மறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிரு ...... வுளநாடி
அருகு சென்றடைந் தவள்சிறு பதயுக
     சதத ளம்பணிந் ததிவித கலவியு
          ளறம ருண்டுநெஞ் சவளுடன் மகிழ்வுட ...... னணைவோனே
அமரர் சங்கமுங் குடிபுக நொடியினில்
     நிருதர் சங்கமும் பொடிபட அமர்செய்து
          அருணை வந்துதென் திசைதனி லுறைதரு ...... பெருமாளே.


கரு நிறம் சிறந்து அகல்வன புகல்வன
     மதன தந்திரம் கடியன கொடியன
        கனக குண்டலம் பொருவன வருவன பரி தாவும்
கடலுடன் படர்ந்து அடர்வன தொடர்வன
     விளையும் நஞ்சு அளைந்து ஒளிர்வன பிளிர்வன
        கணையை நின்று நின்று எதிர்வன முதிர்வன இளையோர் முன்
செருவை மூண்டு அகம் சிறுவன உறுவன
     களவு வஞ்சகம் சுழல்வன உழல்வன
        தெனன தெந்தனந் தெனதென தெனதென என நாதம்
தெரி சுரும்பை வென்றிடுவன அடுவன
     மருள் செய் கண்கள் கொண்டு அணைவர் தம் உயிர் அது
        திருகுகின்ற மங்கையர் வசம் அழிதலை ஒழிவேனோ
மருவு தண்டை கிண் கிணி பரிபுரம் இவை
     கல கலன் கலின் கலின் என இரு சரண்
        மலர்கள் நொந்து நொந்து அடி இட வடிவமும் மிக வேறாய்
வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்
     உறை செழும் புனம் தினை விளை இதண் மிசை
        மறவர் தங்கள் பெண் கொடி தனை ஒரு திரு உளம் நாடி
அருகு சென்று அடைந்து அவள் சிறு பதயுக
     சத தளம் பணிந்து அதி வித கலவியுள்
        அற மருண்டு நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் அணைவோனே
அமரர் சங்கமும் குடி புக நொடியினில்
     நிருதர் சங்கமும் பொடிபட அமர் செய்து
        அருணை வந்து தென் திசை தனில் உறை தரு பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

411   திருவருணை   காணாத தூர நீள்  
தானான தான தானான தான
     தானான தான ...... தந்ததான

காணாத தூர நீணாத வாரி
     காதார வாரம ...... தன்பினாலே
காலாளும் வேளும் ஆலால நாதர்
     காலால் நிலாவுமு ...... னிந்துபூமேல்
நாணான தோகை நூலாடை சோர
     நாடோர்க ளேசஅ ...... ழிந்துதானே
நானாப வாத மேலாக ஆக
     நாடோறும் வாடிம ...... யங்கலாமோ
சோணாச லேச பூணார நீடு
     தோளாறு மாறும்வி ...... ளங்குநாதா
தோலாத வீர வேலால டாத
     சூராளன் மாளவெ ...... குண்டகோவே
சேணாடர் லோகம் வாழ்மாதி யானை
     தீராத காதல்சி ...... றந்தமார்பா
தேவாதி கூடு மூவாதி மூவர்
     தேவாதி தேவர்கள் ...... தம்பிரானே.


காணாத தூர நீள் நாத வாரி
     காதாரவாரம் அதன்பினாலே
கால் ஆளும் வேளும் ஆலால நாதர்
     காலால் நிலாவும் முனிந்து பூமேல்
நாணான தோகை நூலாடை சோர
     நாடோர்கள் ஏச அழிந்து தானே
நானாபவாத மேலாக ஆக
     நாடோறும் வாடி மயங்கலாமோ
சோணாசல ஈச பூணார நீடு
     தோள் ஆறும் ஆறும் விளங்குநாதா
தோலாத வீர வேலால் அடாத
     சூராளன் மாள வெகுண்ட கோவே
சேணாடர் லோகம் வாழ்மாதி யானை
     தீராத காதல் சிறந்த மார்பா
தேவாதி கூடு மூவாதி மூவர்
     தேவாதி தேவர்கள் தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=lHIGu2e8RXQ
Add (additional) Audio/Video Link

Back to Top

412   திருவருணை   காராடக் குழல்  
தானா தத்தன தானா தத்தன
  தந்தன தந்தன தான தந்தன
    தானா தத்தன தானா தத்தன
      தந்தன தந்தன தான தந்தன
        தானா தத்தன தானா தத்தன
          தந்தன தந்தன தான தந்தன ...... தந்ததான

காரா டக்குழ லாலா லக்கணை
  கண்கள்சு ழன்றிட வேமு கங்களி
    னாலா பச்சிலை யாலே மெற்புசி
      மஞ்சள்க லந்தணி வாளி கொந்தள
        காதா டக்கலன் மேலா டக்குடி
          யின்பர சங்குட மார்ப ளிங்கொளி ...... கொங்கைமாதர்
காசா சைச்செய லாலே சொக்கிடு
  விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்
    போலே நற்றெரு வூடா டித்துயல்
      தொங்கல்நெ கிழ்ந்திடை யேது வண்டிட
        கால்தா விச்சதி யோடே சித்திர
          மென்பந டம்புரி வாரு டன்செயல் ...... மிஞ்சலாகிச்
சீரா டிச்சில நாள்போய் மெய்த்திரை
  வந்துக லந்துயி ரோட வங்கமொ
    டூடா டிப்பல நோயோ டுத்தடி
      கொண்டுகு ரங்கென வேந டந்துசொல்
        சீயோ டிக்கிடை பாயோ டுக்கிய
          டங்கிய ழிந்துயி ரோடு ளைஞ்சொளி ...... யுங்கண்மாறிச்
சேரா மற்பொறி கேளா மற்செவி
  துன்பமொ டின்பமு மேம றந்துபின்
    ஊரார் சுற்றமு மாதோர் மக்களு
      மண்டியு மண்டையு டேகு விந்திது
        சீசீ சிச்சிசி போகா நற்சனி
          யன்கட வென்றிட வேகி டந்துடல் ...... மங்குவேனோ
மாரோன் முப்புர நீறா யுற்றிட
  அங்கியு மிழ்ந்திடு வோரி பம்புலி
    தோல்சீ யத்தொடெ யேகா சர்ச்சடை
      கங்கையி ளம்பிறை யார ணிந்தவர்
        மாடே றிக்கட லாலா லத்தையு
          முண்டவ ரெந்தைசி வாநு பங்குறை ...... யென்றன்மாதா
மாலோ னுக்கிளை யாள்மா பத்தினி
  யம்பிகை சங்கரி மோக சுந்தரி
    வேதா மக்கலை ரூபாள் முக்கணி
      ரம்பிய கொங்கையி னாள்ப யந்தருள்
        மாஞா னக்கும ராதோ கைப்பரி
          யின்பத வண்குரு வேயெ னஞ்சுரர் ...... தொண்டுபாடச்
சூரார் மக்கிட மாமே ருக்கிட
  அங்கட லெண்கிரி யோடி பங்கொடு
    தீபே ழற்றிட பாதா ளத்துறை
      நஞ்சர வின்பண மாயி ரங்கெட
        சூழ்வா ளக்கிரி தூளா கிப்பொடி
          விண்கணி றைந்திட வேந டம்புரி ...... கின்றவேலா
சோர்வே தத்தலை மேலா டிச்சுக
  பங்கய செங்கர மோட கம்பெற
    வாகா னக்குற மாதோ டற்புத
      மங்குல ணங்குட னேம கிழ்ந்துநல்
        தூணோ டிச்சுட ராகா சத்தைய
          ணைந்துவி ளங்கரு ணாச லந்திகழ் ...... தம்பிரானே.


கார் ஆடு அக் குழல் ஆல் ஆலக்கணை
    கண்கள் சுழன்றிடவே முகங்களில்
     நாலா பச்சிலையாலே மெல் பூசி
      மஞ்சள் கலந்து அணி வாளி கொந்தள(ம்)
       காது ஆடக் கலன் மேல் ஆடக் குடி
        இன்ப ரசம் குடம் ஆர் பளிங்கு ஒளி கொங்கைமாதர்
காசு ஆசைச் செயலாலே சொக்கிடு(ம்)
    விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில்
     போலே நல் தெரு ஊடாடித் துயல்
      தொங்கல் நெகிழ்ந்து இடையே துவண்டிட
       கால் தாவிச் சதியோடே சித்திரம்
        என்ப நடம் புரிவாருடன் செயல் மிஞ்சலாகி
சீர் ஆடிச் சில நாள் போய் மெய் திரை
    வந்து கலந்து உயிர் ஓட அங்கமோடு
     ஊடாடிப் பல நோயோடுத் தடி
      கொண்டு குரங்கு எனவே நடந்து சொல்
       சீ ஓடிக் கிடை பாயோடு உக்கி
        அடங்கி அழிந்து உயிரோடு உளைஞ்சு ஒளியும் கண் மாறிச்
சேராமல் பொறி கேளாமல் செவி
    துன்பமொடு இன்பமுமே மறந்து பின்
     ஊரார் சுற்றமும் மாது ஓர் மக்களும்
      மண்டியும் அண்டையுடே குவிந்து இது
       சீ சீ சிச்சி சி போகா நல் சனி
        யன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ?
மாரோன் முப்புர(ம்) நீறு ஆய் உற்றிட
    அங்கி உமிழ்ந்திடுவோர் இபம் புலி
     தோல் சீயத்தொடே ஏகாசர்ச் சடை
      கங்கை இளம் பிறை ஆர் அணிந்தவர்
       மாடு ஏறிக் கடல் ஆலாலத்தையும்
        உண்டவர் எந்தை சிவன் அநுபங்கு உறை என்றன் மாதா
மாலோனுக்கு இளையாள் மா பத்தினி
    அம்பிகை சங்கரி மோக சுந்தரி
     வேதா(க)ம கலை ரூபாள் முக்க(ண்)ணி
      நிரம்பிய கொங்கையினாள் பயந்தருள்
       மா ஞானக் குமரா தோகைப் பரி
        யின்பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட
சூரார் மக்கிட மா மேரு உக்கிட
    அம் கடல் எண் கிரியோடு இபம் கொடு
     தீபு ஏழ் அற்றிட பாதாளத்து உறை
      நஞ்சு அரவின் பணம் ஆயிரம் கெட
       சூழ் வாளக் கிரி தூளாகிப் பொடி
        விண் கண் நிறைந்திடவே நடம் புரிகின்ற வேலா
சோர்(வு) வேதத் தலை மேல் ஆடிச் சுக
    பங்கய செம் கரமோடு அகம் பெற
     வாகு ஆனக் குற மாதோடு அற்புத
      மங்குல் அணங்குடனே மகிழ்ந்து நல்
       தூண் ஓடிச் சுடர் ஆகாசத்தை
        அணைந்து விளங்கு அருணாசலம் திகழ் தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

413   திருவருணை   காரும் மருவும்  
தானதன தந்ததன தானதன தந்ததன
     தானதன தந்ததன ...... தந்த தனதான

காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய
     காகளம டங்கவுமு ...... ழங்கு மதனாலே
காலடர வம்பமளி மேலடர வந்துபொரு
     காமன்விடு விஞ்சுகணை ...... அஞ்சு மலராலே
ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததென
     ஓரிரவு வந்தெனது ...... சிந்தை யழியாதே
ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு
     லாவியக டம்பமலர் ...... தந்த ருளுவாயே
ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடைய
     ராதிபர வும்படிநி ...... னைந்த குருநாதா
ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவி
     யாளுமுர முந்திருவும் ...... அன்பு முடையோனே
மேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரிய
     வேலையலை யும்பகையும் ...... அஞ்ச விடும்வேலா
மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு
     வீதியிலெ ழுந்தருளி ...... நின்ற பெருமாளே.


காரும் மருவும் பெருகு சோலை மருவும் கொடிய
     காகளம் அடங்கவும் முழங்கும் அதனாலே
கால் அடர வம்பு அமளி மேல் அடர வந்து பொரு
     காமன் விடு விஞ்சு கணை அஞ்சு மலராலே
ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என
     ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே
ஊடி இரு கொங்கை மிசை கூடி வரி வண்டு இனம்
     உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே
ஆரும் அரவும் பிறையும் நீரும் அணியும் சடையர்
     ஆதி பரவும்படி நினைந்த குரு நாதா
ஆறு முகமும் குரவும் ஏறு மயிலும் குறவி
     ஆளும் உரமும் திருவும் அன்பும் உடையோனே
மேரு மலையும் பெரிய சூரும் மலையும் கரிய
     வேலை அலையும் பகையும் அஞ்ச விடும் வேலா
மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்கும் திரு
     வீதியில் எழுந்தருளி நின்ற பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

414   திருவருணை   கீத விநோத மெச்சு  
தான தனான தத்த ...... தனதான
     தான தனான தத்த ...... தனதான

கீத விநோத மெச்சு ...... குரலாலே
     கீறு மையார் முடித்த ...... குழலாலே
நீதி யிலாத ழித்து ...... முழலாதே
     நீமயி லேறி யுற்று ...... வரவேணும்
சூதமர் சூர ருட்க ...... பொருசூரா
     சோண கிரீயி லுற்ற ...... குமரேசா
ஆதியர் காதொ ருச்சொ ...... லருள்வோனே
     ஆனை முகார்க னிட்ட ...... பெருமாளே.


கீத விநோத மெச்சு குரலாலே
     கீறு மையார் முடித்த குழலாலே
நீதி யிலாதழித்தும் உழலாதே
     நீமயி லேறி யுற்று வரவேணும்
சூதமர் சூரர் உட்க பொருசூரா
     சோண கிரீயி லுற்ற குமரேசா
ஆதியர்காது ஒருச்சொல் அருள்வோனே
     ஆனைமுகார் கனிட்ட பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=-8zteYn8AJA
Add (additional) Audio/Video Link

Back to Top

415   திருவருணை   குரவ நறும் அளக  
தனதனன தனதனன தானத் தாத்தன
     தனதனன தனதனன தானத் தாத்தன
          தனதனன தனதனன தானத் தாத்தன ...... தனதான

குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெ
     குலவுமிரு கயல்கள்விழி மோதித் தாக்கியெ
          குமுதமல ரொளிபவள வாயைக் காட்டியெ ...... குழையாத
குணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெ
     குலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெ
          குடவியிடு மரிவையர்க ளாசைப் பாட்டிலெ ...... கொடியேன்யான்
பொருளிளமை கலைமனமு மேகப் போக்கிய
     புலையனிவ னெனவுலக மேசப் போக்கென
          பொறிவழியி லறிவழிய பூதச் சேட்டைகள் ...... பெருகாதே
புதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெ
     பொதுவகையி லருணைநிலை நீள்கர்த் தாவென
          புகழடிமை தனையுனது பார்வைக் காத்திட ...... நினையாதோ
அரவமுட னறுகுமதி யார்மத் தாக்கமு
     மணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெ
          அறிவரிய வொருபொருளை போதத் தேற்றிய ...... அறிவோனே
அழகுசெறி குழலியர்கள் வானத் தாட்டியர்
     தருமமது சரவணையில் வாவித் தேக்கியெ
          அறுசிறுவ ரொருவுடல மாகித் தோற்றிய ...... இளையோனே
சுரருலவ அசுரர்கள் மாளத் தூட்பட
     துயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரம
          சுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிட ...... முனிவோனே
துடிமுழவு மறவரிட சேவற் காட்டினில்
     துணைமலரி னணுகிதினை காவற் காத்தனை
          சுரியகுழல் குறமகளை வேளைக் காத்தணை ...... பெருமாளே.


குரவ நறும் அளக குழல் கோதிக் காட்டியெ
     குலவும் இரு கயல்கள் விழி மோதித் தாக்கியெ
        குமுத மலர் ஒளி பவள வாயைக் காட்டியெ குழையாத
குணம் உறுக இனிது பயில் கூறிக் காட்டியெ
     குலைய இரு கலை நெகிழ வீசிக் காட்டியெ
        குடவியிடும் அரிவையர்கள் ஆசைப் பாட்டிலெ கொடியேன்யான்
பொருள் இளமை கலை மனமும் ஏகப் போக்கிய
     புலையன் இவன் என உலகம் ஏச போக்கு என
        பொறி வழியில் அறிவு அழிய பூதச் சேட்டைகள் பெருகாதே
புது மலர்கள் மருவும் இரு பாதத்து ஆற்றியெ
     பொது வகையில் அருணை நிலை நீள் கர்த்தா என
        புகழ் அடிமை தனை உனது பார்வைக் காத்திட நினையாதோ
அரவம் உடன் அறுகு மதி ஆர் மத்த அக்கமும்
     மணியும் ஒரு சடை மவுலி நாதர்க்கு ஏற்கவெ
        அறிவரிய ஒரு பொருளை போதத்து ஏற்றிய அறிவோனே
அழகு செறி குழலியர்கள் வானத் தாட்டியர்
     தரும் அமுது சரவணையில் வாவித் தேக்கியெ
        அறு சிறுவர் ஒரு உடலமாகித் தோற்றிய இளையோனே
சுரர் உலவ அசுரர்கள் மாள தூள் பட
     துயவும் உடல் அயிலை விடும் மா உக்ராக்ரம
        சுவறி எழு கடலும் முறையாகக் கூப்பிட முனிவோனே
துடி முழவு மறவர் இட சேவல் காட்டினில்
     துணை மலரின் அணுகி தினை காவல் காத்த (அன்)னை
        சுரிய குழல் குற மகளை வேளைக் காத்து அணை பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

416   திருவருணை   குழவியுமாய் மோகம்  
தனதன தானான தானன தனதன தானான தானன
     தனதன தானான தானன ...... தனதான

குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி
     குலவனு மாய்நாடு காடொடு ...... தடுமாறிக்
குனிகொடு கூனீடு மாகிடு கிழவனு மாயாவி போய்விட
     விறகுட னேதூளி யாவது ...... மறியாதாய்ப்
பழயச டாதார மெனிகழ் கழியுடல் காணாநி ராதர
     பரிவிலி வானாலை நாடொறு ...... மடைமாறிப்
பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாத போதக
     பதியழி யாவீடு போயினி ...... யடைவேனோ
எழுகடல் தீமூள மேருவு மிடிபட வேதாவும் வேதமு
     மிரவியும் வாய்பாறி யோடிட ...... முதுசேடன்
இருளறு பாதாள லோகமு மிமையமு நீறாக வாள்கிரி
     யிருபிள வாய்வீழ மாதிர ...... மலைசாய
அழகிய மாபாக சாதன னமரரு மூர்பூத மாறுசெய்
     அவுணர்த மாசேனை தூளெழ ...... விளையாடி
அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயு தாவுயர்
     அருணையில் வாழ்வாக மேவிய ...... பெருமாளே.


குழவியுமாய் மோகம் மோகித குமரனுமாய் வீடு காதலி
     குலவனுமாய் நாடு காடொடு தடுமாறி
குனி கொடு கூன் நீடு மாகிடு கிழவனுமாய் ஆவி போய்விட
     விறகுடனே தூளியாவதும் அறியா தாய்
பழய சட் ஆதார மேல் நிகழ் கழி உடல் காணா நிராதர
     பரிவிலி வான் நாலை நாடொறும் மடை மாறி
பல பலவாம் யோக சாதக உடல் கொடு மாயாத போதக
     பதி அழியா வீடு போய் இனி அடைவேனோ
எழு கடல் தீமூள மேருவும் இடிபட வேதாவும் வேதமும்
     இரவியும் வாய் பாறி ஓடிட முது சேடன்
இருள் அறு பாதாள லோகமும் இமையமும் நீறாக வாள் கிரி
     இரு பிளவாய் வீழ மாதிர மலை சாய
அழகிய மா பாகசாதனன் அமரரும் ஊர் பூத மாறு செய்
     அவுணர் தம் மா சேனை தூள் எழ விளையாடி
அமரினை மேவாத சூரரை அமர் செயும் வேலாயுதா உயர்
     அருணையில் வாழ்வாக மேவிய பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=7OcXHZLma9g
Add (additional) Audio/Video Link

Back to Top

417   திருவருணை   கேதகையபூ முடித்த  
தானதன தானதத்த தானதன தானதத்த
     தானதன தானதத்த ...... தனதான

கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று
     கேவலம தானஅற்ப ...... நினைவாலே
கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த
     கேடுறுக வேநினைக்கும் ...... வினையாலே
வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில்
     மேதினியெ லாமுழற்று ...... மடியேனை
வீடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து
     வீறுமயில் மீதிலுற்று ...... வருவாயே
நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து
     நீடுபுகழ் தேவரிற்கள் ...... குடியேற
நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த
     நீலநிற மால்தனக்கு ...... மருகோனே
சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள்
     சோபைவட கோபுரத்தி ...... லுறைவோனே
சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி
     தோளின்மிசை வாளெடுத்த ...... பெருமாளே.


கேதகைய பூ முடித்த மாதர் தம் மய(யா)லில் உற்று
     கேவலம் அதான அற்ப நினைவாலே
கேள்வி அது இலாதிருக்கு(ம்) ஊழ் வினையினால் மிகுத்த
     கேடு உறுகவே நினைக்கும் வினையாலே
வேதனையிலே மிகுத்த பாதகனுமாய் அவத்தில்
     மேதினி எ(ல்)லாம் உழற்றும் அடியேனை
வீடு உதவி ஆள வெற்றி வேல் கரம் அதே எடுத்து
     வீறு மயில் மீதில் உற்று வருவாயே
நீதி நெறியே அழித்த தாருகனை வேர் அறுத்து
     நீடு புகழ் தேவர் இல்கள் குடி ஏற
நீடு அருளினால் விடுத்த பால குமரா செழித்த
     நீல நிற மால் தனக்கு மருகோனே
சோதி அனலா(ய்) உதித்த சோணகிரி மா மலைக்குள்
     சோபை வட கோபுரத்தில் உறைவோனே
சோனை மழை போல் எதிர்த்த தானவர்கள் மாள வெற்றி
     தோளின் மிசை வாள் எடுத்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

418   திருவருணை   கோடு ஆன மடவார்கள்  
தானான தனதான ...... தனதான
கோடான மடவார்கள் ...... முலைமீதே
கூர்வேலை யிணையான ...... விழியூடே
ஊடாடி யவரோடு ...... முழலாதே
ஊராகத் திகழ்பாத ...... மருள்வாயே
நீடாழி சுழல்தேசம் ...... வலமாக
நீடோடி மயில்மீது ...... வருவோனே
சூடான தொருசோதி ...... மலைமேவு
சோணாடு புகழ்தேவர் ...... பெருமாளே.


கோடு ஆன மடவார்கள் முலை மீதே
     கூர் வேலை இணையான விழி ஊடே
ஊடாடி அவரோடும் உழலாதே
     ஊராகத் திகழ் பாதம் அருள்வாயே
நீடு ஆழி சுழல் தேசம் வலமாக
     நீடு ஓடி மயில் மீது வருவோனே
சூடானது ஒரு சோதி மலை மேவு
     சோணாடு புகழ் தேவர் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

419   திருவருணை   கோடு செறி  
தானதன தத்த தத்த தானதன தத்த தத்த
     தானதன தத்த தத்த ...... தனதான

கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி
     கூறுசெய்த ழித்து ரித்து ...... நடைமாணார்
கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ளுத்தி விட்ட
     கோபநுத லத்த ரத்தர் ...... குருநாதா
நீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்பு
     நீறெழமி தித்த நித்த ...... மனதாலே
நீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்த
     நீலமயில் தத்த விட்டு ...... வரவேணும்
ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்தி
     ஆரமது மெத்து சித்ர ...... முலைமீதே
ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றி
     ஆறிருதி ருப்பு யத்தில் ...... அணைவீரா
தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்தி
     சீருறவு ளத்தெ ரித்த ...... சிவவேளே
தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்த
     தேவர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே.


கோடு செறி மத்தகத்தை வீசு ப(ல்)லை தத்த ஒத்தி
     கூறு செய்து அழித்து உரித்து நடை மாணார்
கோள் உலவும் முப்புரத்தை வாள் எரி கொளுத்தி விட்ட
     கோப நுதல் அத் தரத்தர் குரு நாதா
நீடு கனகத் தலத்தை ஊடுருவி மற்ற வெற்பு
     நீறு எழ மிதித்த நித்த மனதாலே
நீப மலர் பத்தி மெத்த ஓதும் அவர் சித்த மெத்த
     நீல மயில் தத்த விட்டு வர வேணும்
ஆடல் அணி பொன் சிலைக் கை வேடுவர் புனக் குறத்தி
     ஆரம் அது மெத்து சித்ர முலை மீதே
ஆதரவு பற்றி மெத்த மா மணி நிறைத்த வெற்றி
     ஆறிரு திருப் புயத்தில் அணை வீரா
தேடி இமையொர் புத்தி மெத்தி நீடு உற நினைத்த பத்தி
     சீர் உற உளத்(து) தெரித்த சிவ வேளே
தேறருணையில் தரித்த சேண் முகடு இடத்து அடர்த்த
     தேவர் சிறை வெட்டி விட்ட பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

420   திருவருணை   சிலைநுதல் வைத்து  
தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான

சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும
     தலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கய
          திருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ் ...... தனிலேறிச்
செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழை
     தனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணி
          செயலினை யொத்துத் தயங்கு வஞ்சக ...... விழிசீறிப்
புலவிமி குத்திட் டிருந்த வஞ்சியர்
     பதமல ருக்குட் பணிந்த ணிந்தணி
          புரிவளை கைக்குட் கலின்க லென்றிட ...... அநுராகம்
புகழ்நல மெத்தப் புரிந்து கொங்கையி
     லுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடு
          புணரினும் நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள் ...... மறவேனே
கலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடை
     மலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திட
          கணகண கட்கட் கணின்க ணென்றிட ...... நடமாடுங்
கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தரு
     முருகபு னத்திற் றிரிந்த மென்கொடி
          கனதன வெற்பிற் கலந்த ணைந்தருள் ...... புயவீரா
அலைகடல் புக்குப் பொரும்பெ ரும்படை
     யவுணரை வெட்டிக் களைந்து வென்றுயர்
          அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிட ...... வருவோனே
அடியவ ரச்சத் தழுங்கி டுந்துயர்
     தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும்
          அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள் ...... பெருமாளே.


சிலை நுதல் வைத்துச் சிறந்த குங்கும
     திலதமும் இட்டுக் குளிர்ந்த பங்கய
        திருமுக வட்டத்து அமர்ந்த மென் குமிழ் தனில் ஏறி
செழு மணி ரத்நத்து இலங்கு பைங்குழை
     தனை முனிவுற்றுச் சிவந்து நஞ்சு அணி
        செயலினை ஒத்துத் தயங்கு வஞ்சக விழி சீறி
புலவி மிகுத்திட்டு இருந்த வஞ்சியர்
     பத மலருக்குள் பணிந்து அணிந்த அணி
        புரி வளை கைக்குள் கலின் கல் என்றிட அநுராகம்
புகழ் நல(ம்) மெத்தப் புரிந்து கொங்கையில்
     உருகி அணைத்துப் பெரும் ப்ரியம் கொ(ண்)டு
        புணரினும் நின் பொன் பதங்கள் நெஞ்சினுள் மறவேனே
கலை மதி வைத்துப் புனைந்து செம் சடை
     மலை மகள் பக்கத்து அமர்ந்து இருந்திட
        கணகண கட்கட் கணின்கண் என்றிட நடம் ஆடும்
கருணையன் உற்றத் த்ரியம்பகன் தரு
     முருக புனத்தில் திரிந்த மென் கொடி
        கன தன வெற்பில் கலந்து அணைந்து அருள் புய வீரா
அலை கடல் புக்குப் பொரும் பெரும் படை
     அவுணரை வெட்டிக் களைந்து வென்று உயர்
        அமரர் தொழப் பொன் சதங்கை கொஞ்சிட வருவோனே
அடியவர் அச்சத்து அழுங்கிடும் துயர்
     தனை ஒழிவித்துப் ப்ரியங்கள் தந்திடும்
        அருண கிரிக்குள் சிறந்து அமர்ந்து அருள் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

421   திருவருணை   சிவமாதுடனே  
தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான

சிவமா துடனே அநுபோ கமதாய்
     சிவஞா னமுதே ...... பசியாறித்
திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்
     திசைலோ கமெலா ...... மநுபோகி
இவனே யெனமா லயனோ டமரோ
     ரிளையோ னெனவே ...... மறையோத
இறையோ னிடமாய் விளையா டுகவே
     யியல்வே லுடன்மா ...... அருள்வாயே
தவலோ கமெலா முறையோ வெனவே
     தழல்வேல் கொடுபோ ...... யசுராரைத்
தலைதூள் படஏழ் கடல்தூள் படமா
     தவம்வாழ் வுறவே ...... விடுவோனே
கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்
     கடனா மெனவே ...... அணைமார்பா
கடையேன் மிடிதூள் படநோய் விடவே
     கனல்மால் வரைசேர் ...... பெருமாளே.


சிவமா துடனே அநுபோ கமதாய்
     சிவஞா னமுதே பசியாறி
திகழ்வோ டிருவோர் ஒருரூபமதாய்
     திசைலோ கமெலாம் அநுபோகி
இவனே யெனமா லயனோ டமரோர்
     இளையோ னெனவே மறையோத
இறையோ னிடமாய் விளையா டுகவே
     இயல்வே லுடன்மா அருள்வாயே
தவலோ கமெலாம் முறையோ வெனவே
     தழல்வேல் கொடுபோய் அசுராரைத்
தலைதூள் பட ஏழ் கடல்தூள் பட
     மாதவம்வாழ் வுறவே விடுவோனே
கவர்பூ வடிவாள் குறமா துடன் மால்
     கடனா மெனவே அணைமார்பா
கடையேன் மிடிதூள் பட நோய் விடவே
     கனல்மால் வரைசேர் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=VZnLHYbOoGU
https://www.youtube.com/watch?v=nVMW0AOx-2Q
Add (additional) Audio/Video Link

Back to Top

422   திருவருணை   சினமுடுவல் நரிகழுகு  
தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
     தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
          தனதனன தனதனன தந்தனந் தந்தனம் ...... தந்ததான

சினமுடுவல் நரிகழுகு டன்பருந் தின்கணங்
     கொடிகெருடன் அலகைபுழு வுண்டுகண் டின்புறுஞ்
          செடமளறு மலசலமொ டென்புதுன் றுங்கலந் ...... துன்பமேவு
செனனவலை மரணவலை ரண்டுமுன் பின்தொடர்ந்
     தணுகுமுட லநெகவடி விங்கடைந் தம்பரஞ்
          சிறுமணலை யளவிடினு மங்குயர்ந் திங்குலந் ...... தொன்றுநாயேன்
கனகபுவி நிழல்மருவி யன்புறுந் தொண்டர்பங்
     குறுகஇனி யருள்கிருபை வந்துதந் தென்றுமுன்
          கடனெனது உடலுயிரு முன்பரந் தொண்டுகொண் ...... டன்பரோடே
கலவிநல மருவிவடி வஞ்சிறந் துன்பதம்
     புணர்கரண மயில்புறமொ டின்புகொண் டண்டருங்
          கனகமலர் பொழியஉன தன்புகந் தின்றுமுன் ...... சிந்தியாதோ
தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
     தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந்
          தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங் குந்தடர்ந் ...... தண்டர்பேரி
தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண்
     டிமிடிமிட டகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண்
          கடையுகமொ டொலியகட லஞ்சவஞ் சன்குலஞ் ...... சிந்திமாளச்
சினமுடுகி அயிலருளி யும்பரந் தம்பரந்
     திகையுரகர் புவியுளது மந்தரம் பங்கயன்
          செகமுழுது மகிழஅரி அம்புயன் தொண்டுகொண் ...... டஞ்சல்பாடத்
திருமுறுவ லருளியென தெந்தையின் பங்குறுங்
     கவுரிமன முருகவொரு கங்கைகண் டன்புறுந்
          திருவருண கிரிமருவு சங்கரன் கும்பிடுந் ...... தம்பிரானே.


சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம்
     கொடிகெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும்
        செடம் அளறு மல சலமொடு என்பு துன்றும் கலம் துன்பம் மேவும்
செனன வலை மரண வலை இரண்டு(ம்) முன் பின் தொடர்ந்து
     அணுகும் உடல் அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம்
        சிறு மணலை அளவிடினும் அங்கு உயர்ந்து இங்கு உலந்து ஒன்று(ம்) நாயேன்
கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்(கு)
     குறுக இனி அருள் கிருபை வந்து தந்து என்றும் உன்
        கடன் எனது உடல் உயிரும் உன் பரம் தொண்டு கொண்டு அன்பரோடே
கலவி நலம் மருவி வடிவம் சிறந்து உன் பதம்
     புணர் கரணம் மயில் புறமொடு இன்பு கொண்டு அண்டரும்
        கனக மலர் பொழிய உனது அன்பு உகந்து இன்று முன் சிந்தியாதோ
தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
     தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந் தடம்
        தவில்முரசு பறைதிமிலை டிங்கு டிங்குந்து அடர்ந்த அண்டர் பேரி
தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண்
     டிமிடிமிட டகுர திகுகு சங்கு வெண் கொம்பு திண்
        கடையுகம் ஒடு ஒலிய கடல் அஞ்ச வஞ்சன் குலம் சிந்தி மாளச்
சினம் முடுகி அயில் அருளி உம்பர் அந்த அம்பரம்
     திசை உரகர் புவி உளது மந்தரம் பங்கயன்
        செகம் முழுது மகிழ அரி அம்புயன் தொண்டு கொண்டு அஞ்சல் பாட
திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்கு உறும்
     கவுரி மனம் உருக ஒரு கங்கை கண்டு அன்புறும்
        திரு அருணை கிரி மருவு சங்கரன் கும்பிடும் தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

423   திருவருணை   சுக்கிலச் சுரொணித  
தத்த தத்ததன தத்த தத்ததன
     தத்த தத்ததன தத்த தத்ததன
          தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான

சுக்கி லச்சுரொணி தத்தி லுற்றநளி
     னத்தி லப்புவென ரத்த முற்றிசுக
          சுக்கி லக்குளிகை யொத்து கெர்ப்பகுகை ...... வந்துகோலத்
தொப்பை யிட்டவயி றிற்பெ ருத்துமிக
     வட்ட மிட்டுடல வெப்ப முற்றுமதி
          சொற்ற பத்தின்மறி யக்ஷ ரத்தினுடை ...... விஞ்சையாலே
கக்க நற்புவியி லுற்ற ரற்றிமுலை
     யைக்கொ டுக்கவமுர் தைப்பு சித்துவளர்
          கைக்க சத்தியொடு ழைத்து தத்துநடை ...... அந்தமேவிக்
கற்று வெற்றறிவு பெற்று தொக்கைமயி
     லொத்த மக்கள்மய லிற்கு ளித்துநெறி
          கட்டி யிப்படிபி றப்பி லுற்றுடல ...... மங்குவேனோ
தெற்க ரக்கர்பவி ஷைக்கு லைத்துவிட
     ணற்கு நத்தரச ளித்து முத்திகொடு
          சித்தி ரத்திருவு ரத்த சக்கிரிதன் ...... மருகோனே
செக்க ரத்தின்மலை முப்பு ரத்திலெரி
     யிட்ட சத்திசிவ னுற்று நத்தமிகு
          சித்த னைத்தையும்வி ழித்த சத்தியுமை ...... தந்தபாலா
தர்க்க மிட்டசுர ரைக்கெ லித்துமலை
     யுக்கெ ழுக்கடல்கொ ளுத்தி அட்டதிசை
          தட்ட முட்டையடை யக்கொ டிப்புகையின் ...... மண்டும்வேலா
தத்தை வித்ருமநி றத்தி முத்தணிகு
     றத்தி கற்பகவ னத்தி சித்தமவை
          தக்கு நத்தஅரு ணைக்கி ரிக்குள்மகிழ் ...... தம்பிரானே.


சுக்கிலச் சுரொணிதத்தில் உற்ற நளினத்தில்
     அப்பு என ரத்த(ம்) முற்றி சுக
        சுக்கிலக் குளிகை ஒத்து கெர்ப்ப குகை வந்து கோலத்
தொப்பை இட்ட வயிறில் பெருத்து மிக
     வட்டம் இட்டு உடல் வெப்பம் உற்று மதி
        சொற்ற பத்தின் மறி அக்ஷரத்தினுடை விஞ்சையாலே
கக்க நல் புவியில் உற்று அரற்றி முலையைக்
     கொடுக்க அமுர்தைப்பு சித்து வளர்கைக்கு
        அசத்தியொடு உழைத்து தத்து நடை அந்தம் மேவி
கற்று வெற்று அறிவு பெற்று தொக்கை மயில்
     ஒத்த மக்கள் மயலில் குளித்து நெறி
        கட்டி இப்படிப் பிறப்பில் உற்று உடல(ம்) மங்குவேனோ
தெற்கு அரக்கர் பவிஷைக் குலைத்து வி(வீ)ட
     ணற்கு நத்து அரசு அளித்து முத்தி கொடு
        சித்திரத் திரு உரத்த சக்கிரி தன் மருகோனே
செக் கரத்தின் மலை முப்புரத்தில் எரி
     இட்ட சத்தி சிவன் உற்று நத்த மிகு
        சித்து அனைத்தையும் விழித்த சத்தி உமை தந்த பாலா
தர்க்கம் இட்ட அசுரரைக் கெலித்து மலை
     உக்க எழுக் கடல் கொளுத்தி அட்ட திசை
        தட்ட முட்டை அடையக் கொடிப் புகையின் மண்டும் வேலா
தத்தை வித்ரும நிறத்தி முத்து அணி
     குறத்தி கற்பக வனத்தி சித்தம் அவை
        தக்கு நத்த அருணைக் கிரிக்குள் மகிழ் தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

424   திருவருணை   செஞ்சொற் பண்  
தந்தத் தந்தத் தனதன தானன
     தந்தத் தந்தத் தனதன தானன
          தந்தத் தந்தத் தனதன தானன ...... தனதான

செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலை
     கும்பத் தந்திக் குவடென வாலிய
          தெந்தப் பந்தித் தரளம தாமென ...... விடராவி
சிந்திக் கந்தித் திடுகளை யாமுன
     தங்கத் தம்பொற் பெதுவென வோதுவ
          திண்டுப் புந்தித் திடுகனி தானுமு ...... னிதழாமோ
மஞ்சொக் குங்கொத் தளகமெ னாமிடை
     கஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிள
          வஞ்சிக் கொம்பொப் பெனுமயி லேயென ...... முறையேய
வந்தித் திந்தப் படிமட வாரொடு
     கொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழு
          மந்தப் புந்திக் கசடனெ நாளுன ...... தடிசேர்வேன்
நஞ்சைக் கண்டத் திடுபவ ராரொடு
     திங்கட் பிஞ்சக் கரவணி வேணியர்
          நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை ...... யுகிராலே
நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர
     நந்திக் கம்பத் தெழுநர கேசரி
          நஞ்சக் குண்டைக் கொருவழி யேதென ...... மிகநாடி
வெஞ்சச் சிம்புட் சொருபம தானவர்
     பங்கிற் பெண்கற் புடையபெ ணாயகி
          விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர் ...... புனமீதே
வெண்டித் தங்கித் திரிகிழ வாவதி
     துங்கத் துங்கக் கிரியரு ணாபுரி
          வெங்கட் சிங்கத் தடிமயி லேறிய ...... பெருமாளே.


செம் சொல் பண்(பு) பெற்றிடு குட மா முலை
     கும்பத் தந்திக் குவடு என வாலிய
        தெந்தப் பந்தித் தரளம் அதாம் என இடர் ஆவி
சிந்திக் கந்தித்து இடு களையாம் உனது
     அங்கத்து அம் பொற்பு எது என ஓதுவ(து)
        திண் துப்பும் தித்திடு கனி தானும் உன் இதழாமோ
மஞ்சு ஒக்கும் கொத்து அளகம் எனா மிடை
     கஞ்சத்து இன்புற்று இரு திருவே இள
        வஞ்சிக் கொம்பு ஒப்பு எனு(ம்) மயிலே என முறை ஏய
வந்தித்து இந்தப் படி மடவாரொடு
     கொஞ்சிக் கெஞ்சித் தினம் அவர் தாள் தொழு
        மந்தப் புந்திக் கசடன் எ(ந்)நாள் உனது அடி சேர்வேன்
நஞ்சைக் கண்டத்து இடுபவர் ஆரொடு
     திங்கள் பிஞ்சு அக்கு அரவு அணி வேணியர்
        நம்பர் செம் பொன் பெயர் அசுரேசனை உகிராலே
நந்தக் கொந்திச் சொரி குடல் சோர் வர
     நந்தி கம்பத்து எழு நர கேசரி
        நஞ்சக் குண்டைக்கு ஒரு வழி ஏது என மிக நாடி
வெஞ்சச் சிம்புள் சொருபம் அது ஆனவர்
     பங்கில் பெண்
கற்புடைய பெண் நாயகி
        விந்தைச் செம் கைப் பொலி சுத வேடுவர் புன(ம்) மீதே
வெண்டித் தங்கித் திரி கிழவா அதி
     துங்கத் துங்கக் கிரி அருணாபுரி
        வெங்கட் சிங்கத்து அடி மயில் ஏறிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

425   திருவருணை   செயசெய அருணா  
தனதன தனனாத் தனதன தனனத்
     தனதன தனனாத் தனதன தனனத்
          தனதன தனனாத் தனதன தனனத் ...... தனதான

செயசெய அருணாத் திரிசிவ யநமச்
     செயசெய அருணாத் திரிமசி வயநச்
          செயசெய அருணாத் திரிநம சிவயத் ...... திருமூலா
செயசெய அருணாத் திரியந மசிவச்
     செயசெய அருணாத் திரிவய நமசிச்
          செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ...... தெனமாறி
செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்
     தரகர சரணாத் திரியென உருகிச்
          செயசெய குருபாக் கியமென மருவிச் ...... சுடர்தாளைச்
சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்
     சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்
          திருவடி சிவவாக் கியகட லமுதைக் ...... குடியேனோ
செயசெய சரணாத் திரியென முநிவர்க்
     கணமிது வினைகாத் திடுமென மருவச்
          செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ...... சுடும்வேலா
திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
     கடிதலை தெரியாப் படிநிண அருணச்
          சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ...... புகல்வோனே
செயசெய சரணாத் திரியெனு மடியெற்
     கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
          றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா
திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்
     குறமகள் முலைமேற் புதுமண மருவிச்
          சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் ...... பெருமாளே.


செயசெய அருணாத்திரி சிவய நம
     செயசெய அருணாத்திரி மசிவயந
         செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா
செயசெய அருணாத்திரி யநமசிவ
     செயசெய அருணாத்திரி வயநமசி
         செயசெய அருணாத் திரி சிவய நமஸ்த்து என மாறி
செயசெய அருணாத் திரி தனின் விழி வைத்து
     அர கர சரணாத்திரி என உருகி
         செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை
சிவசிவ சரணாத் திரிசெய செயென
     சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக
         திருவடி சிவ வாக்கிய கடல் அமுதைக் குடியேனோ
செயசெய சரணாத் திரி என முநிவர்
     கணம் இது வினை காத்திடும் என மருவ
         செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும் வேலா
திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு
     அடி தலை தெரியாப்படி நிண அருண
         சிவ சுடர் சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே
செயசெய சரணாத் திரி எனும் அடியெற்கு
     இரு வினை பொடியாக்கிய சுடர் வெளியில்
         திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குரு நாதா
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத
     குற மகள் முலை மேல் புது மணம் மருவி
         சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=lelt4adBABs
https://www.youtube.com/watch?v=vnm23uRbTZ0
Add (additional) Audio/Video Link

Back to Top

426   திருவருணை   தமரம் குரங்களும்  
தனன தனந்தனந் தான தத்த தந்த
     தனன தனந்தனந் தான தத்த தந்த
          தனன தனந்தனந் தான தத்த தந்த
          ...... தனதனத் தனதான

தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு
     மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து
          தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு
          ...... முளகதக் கடமாமேல்
தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து
     அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து
          தமரழ மைந்தருஞ் சோக முற்றி ரங்க
          ...... மரணபக் குவமாநாள்
கமல முகங்களுங் கோம ளத்தி லங்கு
     நகையு நெடுங்கணுங் காதி னிற்று லங்கு
          கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க
          ...... தமுமடற் சுடர்வேலுங்
கடிதுல கெங்கணுந் தாடி யிட்டு வந்த
     மயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கை
          கழலொலி தண்டையங் காலு மொக்க வந்து
          ...... வரமெனக் கருள்கூர்வாய்
இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சி
     அகில தலம்பெறும் பூவை சத்தி யம்பை
          யிளமுலை யின்செழும் பால்கு டுத்தி லங்கு
          ...... மியல்நிமிர்த் திடுவோனே
இறைவ ரிறைஞ்சநின் றாக மப்ர சங்க
     முரைசெய் திடும்ப்ரசண் டாவி சித்து நின்ற
          ரணமுக துங்கவெஞ் சூரு டற்பி ளந்த
          ...... அயிலுடைக் கதிர்வேலா
அமண ரடங்கலுங் கூட லிற்றி ரண்டு
     கழுவி லுதைந்துதைந் தேற விட்டு நின்ற
          அபிநவ துங்ககங் காந திக்கு மைந்த
          ...... அடியவர்க் கெளியோனே
அமரர் வணங்குகந் தாகு றத்தி கொங்கை
     தனில்முழு குங்கடம் பாமி குத்த செஞ்சொ
          லருணை நெடுந்தடங் கோபு ரத்த மர்ந்த
          ...... அறுமுகப் பெருமாளே.


தமரம் குரங்களும் கார் இருள் பிழம்பு
     மெழுகிய அங்கமும் பார்வையில் கொளுந்து
        தழல் உமிழ் கண்களும் காளம் ஒத்த கொம்பும் உ(ள்)ள கதம் கடமா மேல்
தனி வரும் அந்தகன் பாசம் விட்டு எறிந்து
     அட வரும் என்று சிந்தாகுலத்து இருந்து
        தமர் அழ மைந்தரும் சோகம் உற்று இரங்க மரண பக்குவம் ஆ நாள்
கமல முகங்களும் கோமளத்து இலங்கு
     நகையு(ம்) நெடும் க(ண்)ணும் காதினில் துலங்கு
        கனககுதம்பையும் தோடும் வஜ்ர அங்கதமும் அடர் சுடர் வேலும்
கடிது உலகு எங்கணும் தாடி இட்டுவந்த
     மயிலும் இலங்கு அலங்கார பொன் சதங்கை
        கழல் ஒலி தண்டையம் காலும் ஒக்க வந்து வரம் எனக்கு அருள் கூர்வாய்
இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி
     அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை
        இள முலையின் செழும் பால் குடித்து இலங்கும் இயல் நிமிர்த் திடுவோனே
இறைவர் இறைஞ்ச நின்று ஆகம ப்ரசங்கம்
     உரை செய்திடும் ப்ரசண்டா விசித்து நின்ற
        ரண முக துங்க வெம் சூர் உடல் பிளந்த அயில் உடை கதிர்வேலா
அமணர் அடங்கலும் கூடலில் திரண்டு
     கழுவில் உதைந்து உதைந்து ஏற விட்டு நின்ற
        அபிநவ துங்க கங்கா நதிக்கு மைந்த அடியவர்க்கு எளியோனே
அமரர் வணங்கு(ம்) கந்தா குறத்தி கொங்கை
     தனில் முழுகும் கடம்பா மிகுத்த செம் சொல்
        அருணை நெடும் தடம் கோபுரத்து அமர்ந்த அறுமுகப் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=W4O8GIj4itM
Add (additional) Audio/Video Link

Back to Top

427   திருவருணை   தமிழோதிய குயிலோ  
தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்
     தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்
          தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் ...... தனதான

தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங்
     கிளிகாடையி னணிலேரளி யாங்குரல் வாய்ந்ததிசெந்
          தகுமாமிட றொலியாரித ழாஞ்சுளை தேன்கனியின் ...... சுவைசேருந்
தனபாரமு மலையாமென வோங்கிட மாம்பொறிசிந்
     திடவேல்விழி நுதலோசிலை வான்பிறை மாந்துளிரின்
          சரிரார்குழ லிருளாநகை யோங்கிய வான்கதிரின் ...... சுடர்பாயக்
குமிழ்நாசியின் முகமோமதி யாங்குளிர் சேங்கமலஞ்
     சரிதோடிணை செவியாடுச லாங்கள பூங்கமுகங்
          கொடிநூலிடை யுடையாரன மாம்ப்ரியர் மாண்புரிமின் ...... கொடிமாதர்
குணமோடம ளியினாடினு மோங்கிய பூங்கமலஞ்
     சரணூபுர குரலோசையு மேந்திடு மாண்டலையின்
          கொடியோடெழு தரிதாம்வடி வோங்கிய பாங்கையுமன் ...... தகையேனே
திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந்
     தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந்
          திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகமென் ...... றியல்பேரி
திசைமூடுக கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங்
     கரிதேர்பரி யசுரார்கள மாண்டிட நீண்டரவின்
          சிரமீள்பட குவடோதுகள் வான்பெற வாங்கியவண் ...... கதிர்வேலா
கமழ்மாவிதழ் சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண்
     தழல்மாபொடி யருள்வோரடல் மான்துடி தாங்கியவண்
          கரர்மாடரு ளுமையாளெமை யீன்றவ ளீன்றருள்மென் ...... குரவோனே
கடையேனிரு வினைநோய்மல மாண்டிட தீண்டியவொண்
     சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின்
          கலைநூலுடை முருகாவழ லோங்கிய வோங்கலின்வண் ...... பெருமாளே.


தமிழ் ஓதிய குயிலோ மதில் ஆண்டலை ஆம் புறவம்
     கிளி காடை இன் அணில் ஏர் அளி ஆம் குரல் வாய்ந்த அதி செம்
        தகு மா மிடறு ஒலியார் இதழ் ஆம் சுளை தேன் கனியின் சுவை சேரும்
தன பாரமும் மலையாம் என ஓங்கிட மாம் பொறி சிந்திட
     வேல் விழி நுதலோ சிலை வாள் பிறை மாந்துளிரின்
        சரீ(ர) ஆர் குழல் இருளோ நகை ஓங்கிய வான் கதிரின் சுடர் பாய
குமிழ் நாசியின் முகமோ மதியாம் குளிர் சேம் கமலம்
     சரி தோடு இணை செவி ஆடு உ(ஊ)சலாம் கள(ம்) பூ கமுகம்
        கொடி நூல் இடை உடையார் அ(ன்)ன மாம் ப்ரியர் மாண் புரி மின் கொடி மாதர்
குணமோடு அமளியில் ஆடினும் ஓங்கிய பூங்கமலம்
     சரண் நூபுர குரல் ஓசையும் ஏந்திடு மா அண்டலையின்
        கொடியோடு எழுத அரிதாம் வடிவு ஓங்கிய பாங்கையும் மன் தகையேனே
திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந்
     தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந்
        திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தக என்று இயல் பேரி
திசை மூடுக கடல் ஏழ் பொடியாம்படி ஓங்கிய வெம்
     கரி தேர் பரி அசுரார்கள் மாண்டிட நீண்ட அரவின்
        சிர(ம்) மீள் படக் குவடு ஓதுகள் வான் பெற வாங்கிய வண் கதிர் வேலா
கமழ் மா இதழ் சடையார் அடியேன் துயர் தீர்ந்திட வெண்
     தழல் மா பொடி அருள்வோர் அடல் மான் துடி தாங்கிய வண்
        கரர் மாடு அருள் உமையாள் எமை ஈன்றவள் அருள் ஈன்ற மென் குரவோனே
கடையேன் இரு வினை நோய் மல(ம்) மாண்டிட தீண்டிய ஒண்
     சுக மோகினி வ(ள்)ளி நாயகி பாங்கன் எனாம் பகர்மின்
        கலை நூல் உடை முருகா அழல் ஓங்கிய ஓங்கலின் வண் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

428   திருவருணை   தலையை மழித்து  
தனன தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்த
     தனன தனத்தத் தனந்த ...... தனதான

தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து
     சடையை வளர்த்துப் புரிந்து ...... புலியாடை
சதிரொடு வப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து
     தவமொரு சத்தத் தறிந்து ...... திருநீறு
கலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்து
     கதறு நிலைக்கைக் கமர்ந்த ...... எழிலோடே
கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து
     கவலை யொழித்தற் கிரங்கி ...... யருள்வாயே
அலைகட லிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்து
     மமரு லகத்திற் புகுந்து ...... முயரானை
அருளொடு கைப்பற்றி வந்து மருண கிரிப்புக் கிருந்து
     மறிவு ளபத்தர்க் கிரங்கு ...... மிளையோனே
மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து
     வறிது நகைத்திட் டிருந்த ...... சிவனார்தம்
மதலை புனத்திற் புகுந்து நரவடி வுற்றுத் திரிந்து
     மறம யிலைச்சுற் றிவந்த ...... பெருமாளே.


தலையை மழித்துச் சிவந்த துணியை அரைக்குப் புனைந்து
     சடையை வளர்த்துப் புரிந்து புலி ஆடை
சதிரொடு உவப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து
     தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு
கலையை மிகுத்திட்டு அணிந்து கரண வலைக்குள் புகுந்து
     கதறு(ம்) நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே
கனக(ம்) இயற்றித் திரிந்து துவளும் எனைச் சற்று அறிந்து
     கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே
அலை கடலில் கொக்கு அரிந்தும் அரு வரையைப் பொட்டு எறிந்தும்
     அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை
அருளொடு கைப்பற்றி வந்தும் அருண கிரி புக்கிருந்தும்
     அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே
மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து
     வறிது நகைத்திட்டு இருந்த சிவனார் தம்
மதலை புனத்தில் புகுந்து நர வடிவு உற்றுத் திரிந்து
     மறமயிலைச் சுற்றிவந்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

429   திருவருணை   திருட்டு வாணிப  
தனத்த தானன தத்தன தத்தன
     தனத்த தானன தத்தன தத்தன
          தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான

திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்
     மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்
          செகத்து நீலிகள் கெட்டப ரத்தைகள் ...... மிகநாணார்
சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிக
     ளெடுப்பு மார்பிக ளெச்சிலு தட்டிகள்
          சிரித்து மாநுடர் சித்தமு ருக்கிகள் ...... விழியாலே
வெருட்டி மேல்விழு பப்பர மட்டைகள்
     மிகுத்த பாவிகள் வட்டமு கத்தினை
          மினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணி ...... மிகநீறால்
விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள்
     தமக்கு மால்கொடு நிற்கும ருட்டனை
          விடுத்து நானொரு மித்திரு பொற்கழல் ...... பணிவேனோ
தரித்த தோகண தக்கண செக்கண
     குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
          தகுத்த தீதிகு தக்குகு திக்குகு ...... எனதாளந்
தடக்கை தாளமு மிட்டியல் மத்தள
     மிடக்கை தாளமு மொக்கந டித்தொளி
          தரித்த கூளிகள் தத்திமி தித்தென ...... கணபூதம்
அருக்க னாரொளி யிற்ப்ரபை யுற்றிடு
     மிரத்ந மாமுடி யைக்கொடு கக்கழ
          லடக்கை யாடிநி ணத்தையெ டுத்துண ...... அறவேதான்
அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறி
     திருக்கை வேல்தனை விட்டரு ளிப்பொரும்
          அருட்கு காவரு ணைப்பதி யுற்றருள் ...... பெருமாளே.


திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்
     மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்
        செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் மிக நாணார்
சிலைக்கு நேர் புருவப் பெரு நெற்றிகள்
     எடுப்பு மார்பிகள் எச்சில் உதட்டிகள்
        சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள் விழியாலே
வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள்
     மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை
        மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால்
விளக்கியே குழை இட்ட புரட்டிகள்
     தமக்கு மால் கொடு நிற்கும் மருள் தனை
        விடுத்து தான் ஒருமித்து இரு பொன் கழல் பணிவேனோ
தரித்த தோகண தக்கண செக்கண
     குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
        தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என தாளம்
தடக் கை தாளமும் இட்டு இயல் மத்தளம்
     இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி
        தரித்த கூளிகள் தத்திமி தித்தென கண பூதம்
அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும்
     இரத்ந மா முடியைக்
கொ(ண்)டு உகக் கழல்
        அடக் கையாடி நிணத்தை எடுத்து உ(ண்)ண அறவே தான்
அரக்கர் சேனைகள் பட்டு விழச் செறி
     திருக்கை வேல் தனை விட்டு அருளிப் பொரும்
        அருள் குகா அருணைப் பதி உற்று அருள் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

430   திருவருணை   தேதென வாச முற்ற  
தானன தான தத்த தானன தான தத்த
     தானன தான தத்த ...... தனதான

தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு
     தேனளி சூழ மொய்த்த ...... மலராலே
சீறும ராவெ யிற்றி லூறிய காளம் விட்ட
     சீதநி லாவெ றிக்கு ...... மனலாலே
போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட
     போர்மத ராஜ னுக்கு ...... மழியாதே
போகமெ லாநி றைத்து மோகவி டாய்மி குத்த
     பூவையை நீய ணைக்க ...... வரவேணும்
மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சை
     மாயனு மாத ரிக்கு ...... மயில்வீரா
வானவர் சேனை முற்றும் வாழம ராப திக்குள்
     வாரண மான தத்தை ...... மணவாளா
மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்து
     வீதியின் மேவி நிற்கு ...... முருகோனே
மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில்
     வேலடை யாள மிட்ட ...... பெருமாளே.


தேது என வாசம் உற்ற கீத விநோத(ம்) மெச்சு
     தேன் அளி சூழ மொய்த்த மலராலே
சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட
     சீத நிலா எறிக்கும் அனலாலே
போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட
     போர் மத ராஜனுக்கும் அழியாதே
போகம் எ(ல்)லா நிறைத்து மோக விடாய் மிகுத்த
     பூவையை நீ அணைக்க வர வேணும்
மாதினை வேணி வைத்த நாதனும் ஓது பச்சை
     மாயனும் ஆதரிக்கும் அயில் வீரா
வானவர் சேனை முற்றும் வாழ் அமராபதிக்குள்
     வாரண மான தத்தை மணவாளா
மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து
     வீதியின் மேவி நிற்கு(ம்) முருகோனே
மேருவை நீறு எழுப்பி நான் முகனார் பதத்தில்
     வேல் அடையாளம் இட்ட பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

431   திருவருணை   தோதகப் பெரும்  
தான தத்த தந்த தான தத்த தந்த
     தான தத்த தந்த ...... தனதான

தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு
     தோகை யர்க்கு நெஞ்ச ...... மழியாதே
சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று
     சூழ்பி ணிக்க ணங்க ...... ளணுகாதே
பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து
     பாசம் விட்டெ றிந்து ...... பிடியாதே
பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த
     பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும்
வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப
     வீர பத்ர கந்த ...... முருகோனே
மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து
     வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா
கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த
     கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே
கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த
     கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.


தோதகப் பெரும் பயோதரத்து இயங்கும்
     தோகையர்க்கு நெஞ்சம் அழியாதே
சூலை வெப்பு அடர்ந்த வாதம் பித்தம் என்று
     சூழ் பிணி கணங்கள் அணுகாதே
பாதகச் சமன் தன் மேதியில் புகுந்து
     பாசம் விட்டு எறிந்து பிடியாதே
பாவலற்கு இரங்கி நாவலர்க்கு இசைந்த
     பாடல் மிக்க செம் சொல் தர வேணும்
வேதம் மிக்க விந்து நாதம் மெய்க் கடம்ப
     வீரபத்ர கந்த முருகோனே
மேருவைப் பிளந்து சூரனைக் கடிந்து
     வேலையில் தொளைந்த கதிர் வேலா
கோதை பொன் குறிஞ்சி மாது கச்சு அணிந்த
     கோமளக் குரும்பை புணர்வோனே
கோலம் உற்று இலங்கு சோண வெற்பு உயர்ந்த
     கோபுரத்து அமர்ந்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

432   திருவருணை   பாண மலரது  
தான தனதன தத்தம் ...... தனதான
பாண மலரது தைக்கும் ...... படியாலே
பாவி யிளமதி கக்குங் ...... கனலாலே
நாண மழிய வுரைக்குங் ...... குயிலாலே
நானு மயலி லிளைக்குந் ...... தரமோதான்
சேணி லரிவை யணைக்குந் ...... திருமார்பா
தேவர் மகுட மணக்குங் ...... கழல்வீரா
காண அருணையில் நிற்குங் ...... கதிர்வேலா
காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.


பாண மலர் அது தைக்கும் படியாலே
     பாவி இள மதி கக்கும் கனலாலே
நாணம் அழிய உரைக்கும் குயிலாலே
     நானும் மயலில் இளைக்கும் தரமோ தான்
சேணில் அரிவை அணைக்கும் திரு மார்பா
     தேவர் மகுடம் மணக்கும் கழல் வீரா
காண அருணையில் நிற்கும் கதிர்வேலா
     காலன் முதுகை விரிக்கும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

433   திருவருணை   பாலாய் நூலாய்  
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான

பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
     பாகாய் வாய்சொற் ...... கொடியார்தாம்
பாடா வாடா வேடா வாலே
     பாடா யீடற் ...... றிடைபீறுந்
தோலா லேகா லாலே யூனா
     லேசூழ் பாசக் ...... குடில்மாசு
தோயா மாயா வோயா நோயால்
     சோர்வாய் மாளக் ...... கடவேனோ
ஞாலா மேலா வேதா போதா
     நாதா சோதிக் ...... கிரியோனே
ஞானா சாரா வானாள் கோனே
     நானா வேதப் ...... பொருளோனே
வேலா பாலா சீலா காரா
     வேளே வேடக் ...... கொடிகோவே
வீரா தாரா ஆறா தாரா
     வீரா வீரப் ...... பெருமாளே.


பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
     பாகாய் வாய்ச் சொல் கொடியார் தாம்
பாடா வாடா வேள் தாவாலே
     பாடாய் ஈடு அற்று இடை பீறும்
தோலாலே காலாலே ஊனாலே
     சூழ் பாசக் குடில் மாசு
தோயா மாயா ஓயா நோயால்
     சோர்வாய் மாளக் கடவேனோ
ஞாலா மேலா வேதா போதா
     நாதா சோதிக் கிரியோனே
ஞான ஆசார வான் ஆள் கோனே
     நானா வேதப் பொருளோனே
வேலா பாலா சீல ஆகாரா
     வேளே வேடக் கொடி கோவே
வீர ஆதாரா ஆறு ஆதாரா
     வீரா வீரப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

434   திருவருணை   புணர்முலை மடந்தை  
தனதன தனந்த தான தனதன தனந்த தான
     தனதன தனந்த தான ...... தனதான

புணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேக
     பொறியுட லிறந்து போன ...... தளவேதுன்
புகழ்மறை யறிந்து கூறு மினியென தகம்பொ னாவி
     பொருளென நினைந்து நாயெ ...... னிடர்தீர
மணமுணர் மடந்தை மாரொ டொளிர்திரு முகங்க ளாறு
     மணிகிரி யிடங்கொள் பாநு ...... வெயிலாசை
வரிபர வநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத
     மயில்மிசை மகிழ்ந்து நாடி ...... வரவேணும்
பணைமுலை யரம்பை மார்கள் குயில்கிளி யினங்கள் போல
     பரிவுகொ டுகந்து வேத ...... மதுகூறப்
பறைமுர சநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர்
     படைகட லிறந்து போக ...... விடும்வேலா
அணிசுக நரம்பு வீணை குயில்புற வினங்கள் போல
     அமளியில் களங்க ளோசை ...... வளர்மாது
அரிமகள் மணங்கொ டேகி யெனதிட ரெரிந்து போக
     அருணையின் விலங்கல் மேவு ...... பெருமாளே.


புணர் முலை மடந்தை மாதர் வலையினில் உழன்று அநேக
     பொறி உடல் இறந்து போனது அளவேது உன்
புகழ் மறை அறிந்து கூறும் இனி எனது அகம் பொன் ஆவி
     பொருள் என நினைந்து நாயென் இடர் தீர
மணம் உணர் மடந்தைமாரொடு திரு முகங்கள் ஆறு
     மணி கிரியிடம் கொள் பாநு வெயில் ஆசை
வரி பரவ அனந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத
     மயில் மிசை மகிழ்ந்து நாடி வர வேணும்
பணை முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல
     பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற
பறை முரசு அநந்த பேரி முறை முறை ததும்ப நீசர்
     படை கடல் இறந்து போக விடும் வேலா
அணி சுக நரம்பு வீணை குயில் புற இனங்கள் போல
     அமளியில் களங்கள் ஓசை வளர் மாது
அரி மகள் மணம் கொ(ண்)டு ஏகி எனது இடர் எரிந்து போக
     அருணையில் விலங்கல் மேவு பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

435   திருவருணை   புலையனான  
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்
     பொறையி லாத கோபீகன் ...... முழுமூடன்
புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி
     பொறிக ளோடி போய்வீழு ...... மதிசூதன்
நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி
     நெறியி லாத வேமாளி ...... குலபாதன்
நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
     நினையு மாறு நீமேவி ...... யருள்வாயே
சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்
     சிதையு மாறு போராடி ...... யொருசீதை
சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு
     திறமி யான மாமாயன் ...... மருகோனே
அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி
     அமர தாடி யேதோகை ...... மயிலேறி
அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்
     அருணை மீதி லேமேவு ...... பெருமாளே.


புலையனான மாவீனன் வினையிலேகு மாபாதன்
     பொறையிலாத கோபீகன் முழுமூடன்
புகழி லாத தாமீகன் அறிவிலாத காபோதி
     பொறிகளோடி போய்வீழும் மதிசூதன்
நிலையிலாத கோமாளி கொடையி லாத ஊதாரி
     நெறியிலாத ஏமாளி குலபாதன்
நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல்
     நினையுமாறு நீமேவி யருள்வாயே
சிலையில் வாளி தானேவி எதிரி ராவணார்தோள்கள்
     சிதையு மாறு போராடி ஒருசீதை
சிறையிலாமலேகூடி புவனி மீதிலேவீறு
     திறமியான மாமாயன் மருகோனே
அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி
     அமரது ஆடியே தோகை மயிலேறி
அதிக தேவரேசூழ உலக மீதிலே கூறும்
     அருணை மீதிலே மேவு பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=7D3no0ZVzrQ
Add (additional) Audio/Video Link

Back to Top

436   திருவருணை   போக கற்ப  
தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத்
     தானனத் தத்ததனத் ...... தத்த தனதான

போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப்
     பாரியைப் பொற்குவையுச் ...... சிப்பொ ழுதிலீயும்
போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத்
     தோரைமெச் சிப்பிரியப் ...... பட்டு மிடிபோகத்
த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித்
     தாரமுட் பட்டதிருட் ...... டுக்க விகள்பாடித்
தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட்
     சேல்வலைப் பட்டடிமைப் ...... பட்டு விடலாமோ
ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற்
     றாதரிக் கைக்கருணைத் ...... துப்பு மதில்சூழும்
ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக்
     காகவெற் றிக்கலபக் ...... கற்கி யமர்வோனே
தோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித்
     தூணிமுட் டச்சுவறத் ...... திக்கி லெழுபாரச்
சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச்
     சூரனைப் பட்டுருவத் ...... தொட்ட பெருமாளே.


போக கற்பக் கடவுள் பூருகத்தைப் புயலைப்
     பாரியைப் பொன் குவை உச்சிப் பொழுதில் ஈயும்
போது உடைப் புத்திரரைப் போல ஒப்பிட்டு
     உலகத்தோரை மெச்சிப் பிரியப் பட்டு மிடி போகத்
த்யாக மெத்தத் தருதற்கு ஆசு நல் சித்திர
     வித்தாரம் உள்பட்ட திருட்டுக் கவிகள் பாடித்
தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு அவர்கண்
     சேல் வலைப் பட்டு அடிமைப்பட்டு விடலாமோ
ஆகமப் பத்தரும் மற்று ஆரணச் சுத்தரும் உற்று
     ஆதரிக்கைக்கு அருணைத் துப்பு மதில் சூழும்
ஆடகச் சித்ர மணிக் கோபுரத்து உத்தர திக்காக
     வெற்றிக் கலபக் கற்கி அமர்வோனே
தோகையைப் பெற்ற இடப் பாகர் ஒற்றைப் பகழித்
     தூணி முட்டச்சுவற திக்கில் எழு பாரச்
சோதி வெற்பு எட்டும் உதிர்த்(து) தூளிதப் பட்டு அமிழச்
     சூரனைப் பட்டு உருவத் தொட்ட பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

437   திருவருணை   மானை விடத்தை  
தான தனத்தத் தனத்த தத்தன
     தான தனத்தத் தனத்த தத்தன
          தான தனத்தத் தனத்த தத்தன ...... தனதான

மானை விடத்தைத் தடத்தி னிற்கயல்
     மீனை நிரப்பிக் குனித்து விட்டணை
          வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை ...... வடிவேலை
வாளை வனத்துற் பலத்தி னைச்செல
     மீனை விழிக்கொப் பெனப்பி டித்தவர்
          மாய வலைப்பட் டிலைத்து டக்குழல் ...... மணநாறும்
ஊன விடத்தைச் சடக்கெ னக்கொழு
     வூறு முபத்தக் கருத்த டத்தினை
          யூது பிணத்தைக் குணத்ர யத்தொடு ...... தடுமாறும்
ஊச லைநித்தத் த்வமற்ற செத்தையு
     பாதி யையொப்பித் துனிப்ப வத்தற
          வோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை ...... தெளியாதோ
சான கிகற்புத் தனைச்சு டத்தன
     சோக வனத்திற் சிறைப்ப டுத்திய
          தானை யரக்கற் குலத்த ரத்தனை ...... வருமாளச்
சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல்
     வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு
          தாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன் ...... மருகோனே
சோனை மிகுத்துத் திரட்பு னத்தினி
     லானை மதத்துக் கிடக்கு மற்புத
          சோண கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ ...... மணிநீபத்
தோள்கொ டுசக்ரப் பொருப்பி னைப்பொடி
     யாக நெருக்கிச் செருக்க ளத்தெதிர்
          சூர னைவெட்டித் துணித்த டக்கிய ...... பெருமாளே.


மானை விடத்தைத் தடத்தினில் கயல்
        மீனை நிரப்பிக் குனித்து விட்டு அணை
        வாளியை வட்டச் சமுத்திரத்தினை வடி வேலை
வாளை வனத்து உற்பலத்தினைச் செல
        மீனை விழிக்கு ஒப்பெனப் பிடித்து அவர்
        மாய வலைப் பட்டு இலைத் துடக்கு உழல் மண(ம்) நாறும்
ஊன இடத்தைச் சடக்கு எனக் கொழு
        ஊறும் உபத்தக் கருத் தடத்தினை ஊது பிணத்தை
        ஊது பிணத்தை குண த்ரயத்தொடு தடுமாறும்
ஊசலை நித்தத்வம் அற்ற செத்தை
        உபாதியை ஒப்பித்து உ(ன்)னி பவத்து அற
        ஓகை செலுத்தி ப்ரமிக்கும் இப் ப்ரமை தெளியாதோ
சானகி கற்பத் தனைச் சுட தன்
        அசோக வனத்தில் சிறைப் படுத்திய
        தானை அரக்கர் குலத்தர் அத்தனைவரும் மாள
சாலை மரத்துப் புறத்து ஒளித்து அடல்
        வாலி உரத்தில் சரத்தை விட்டு ஒரு
        தாரை தனை சுக்ரிவற்கு அளித்தவன் மருகோனே
சோனை மிகுத்துத் திரள் புனத்தினில்
        ஆனை மதத்துக் கிடக்கும் அற்புத
        சோண கிரிச் சுத்தர் பெற்ற கொற்றவ மணி நீபத்
தோள் கொ(ண்)டு சக்ரப் பொருப்பினைப் பொடி
        யாக நெருக்கிச் செருக் களத்து எதிர்
        சூரனை வெட்டித் துணித்து அடக்கிய பெருமாளே
Add (additional) Audio/Video Link

Back to Top

438   திருவருணை   முகத் துலக்கிகள்  
தனத்த தத்தன தானா தனதன
     தனத்த தத்தன தானா தனதன
          தனத்த தத்தன தானா தனதன ...... தந்ததான

முகத்து லக்கிக ளாசா ரவினிகள்
     விலைச்சி றுக்கிகள் நேரா வசடிகள்
          முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள் ...... முந்துசூது
மொழிப்ப ரத்தைகள் காசா சையில்முலை
     பலர்க்கும் விற்பவர் நானா வநுபவ
          முயற்று பொட்டிகள் மோகா வலமுறு ...... கின்றமூடர்
செகத்தி லெத்திகள் சார்வாய் மயகிகள்
     திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள்
          சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகை ...... சிந்தைமாயத்
திரட்பொ றிச்சிகள் மாபா விகளப
     கடத்த சட்டைகள் மூதே விகளொடு
          திளைத்த லற்றிரு சீர்பா தமுமினி ...... யென்றுசேர்வேன்
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு
     செகுச்செ குச்செகு சேசே செககண
          தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு ...... தொந்ததீதோ
துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு
     திகுத்தி குத்திகு தீதோ எனவொரு
          துவக்க நிர்த்தன மாடா வுறைபவர் ...... தொணடர்பேணும்
அகத்தி யப்பனு மால்வே தனும்அறம்
     வளர்த்த கற்பக மாஞா லியுமகி
          ழவுற்ற நித்தபி ரானே அருணையில் ...... நின்றகோவே
அமர்க்க ளத்தொரு சூரே சனைவிழ
     முறித்து ழக்கிய வானோர் குடிபுக
          அமர்த்தி விட்டசு வாமீ அடியவர் ...... தம்பிரானே.


முக(ம்) துலக்கிகள் ஆசார இ(ஈ)னிகள்
     விலைச் சிறுக்கிகள் நேரா அசடிகள்
         முழுச் சமர்த்திகள் காமா விரகிகள் முந்து சூது
மொழிப் பரத்தைகள் காசு ஆசையில் முலை
     பலர்க்கும் விற்பவர் நானா அநுபவ(ம்)
         முயற்று பொட்டிகள் மோக அவலம் உறுகின்ற மூடர்
செகத்தில் எத்திகள் சார்வாய் மயக்கிகள்
     திருட்டு மட்டைகள் மாயா சொரூபிகள்
         சிரித்து உருக்கிகள் ஆகா என நகை சிந்தை மாயத்
திரள் பொறிச்சிகள் மா பாவிகள் அப
     கடத்த சட்டைகள் மூதேவிகளோடு
         திளைத்தல் அற்று இரு சீர் பாதமும் இனி என்று சேர்வேன்
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு
     செகுச்செ குச்செகு சேசே செககண
         தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோ
துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு
     திகுத்து குத்திகு தீதோ எனவொரு
         துவக்க நிர்த்தனம் ஆடா உறைபவர் தொண்டர் பேணும்
அகத்தியப்பனும் மால் வேதனும் அறம்
     வளர்த்த கற்பக மா ஞாலியும் மகிழ்
         உற்ற நித்த பிரானே அருணையில் நின்ற கோவே
அமர்க் களத்து ஒரு சூர ஈசனை விழ
     முறித்து உழக்கி அ(வ்) வானேர் குடி புக
         அமர்த்தி விட்ட சுவாமீ அடியவர் தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

439   திருவருணை   மேக மொத்தகுழலார்  
தான தத்ததன தான தத்ததன
     தான தத்ததன தான தத்ததன
          தான தத்ததன தான தத்ததன ...... தனதான

மேக மொத்தகுழ லார்சி லைப்புருவ
     வாளி யொத்தவிழி யார்மு கக்கமல
          மீது பொட்டிடழ கார்க ளத்திலணி ...... வடமாட
மேரு வொத்தமுலை யார்ப ளப்பளென
     மார்பு துத்திபுய வார்வ ளைக்கடகம்
          வீறி டத்துவளு நூலொ டொத்தஇடை ...... யுடைமாதர்
தோகை பக்ஷிநடை யார்ப தத்திலிடு
     நூபு ரக்குரல்கள் பாட கத்துகில்கள்
          சோர நற்றெருவு டேந டித்துமுலை ...... விலைகூறிச்
சூத கச்சரச மோடெ யெத்திவரு
     வோரை நத்திவிழி யால்ம ருட்டிமயல்
          தூள்ம ருத்திடுயி ரேப றிப்பவர்க ...... ளுறவாமோ
சேக ணச்செகண தோதி மித்திகுட
     டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி
          தீத கத்திமித தோவு டுக்கைமணி ...... முரசோதை
தேச முட்கவர ஆயி ரச்சிரமு
     மூளி பட்டுமக மேரு வுக்கவுணர்
          தீவு கெட்டுமுறை யோவெ னக்கதற ...... விடும்வேலா
ஆக மத்திபல கார ணத்தியெனை
     யீண சத்திஅரி ஆச னத்திசிவ
          னாக முற்றசிவ காமி பத்தினியின் ...... முருகோனே
ஆர ணற்குமறை தேடி யிட்டதிரு
     மால்ம கட்சிறுமி மோக சித்ரவளி
          ஆசை பற்றிஅரு ணாச லத்தின்மகிழ் ...... பெருமாளே.


மேகம் ஒத்த குழலார் சிலைப் புருவ
     வாளி ஒத்த விழியார் முகக் கமல
        மீது பொட்டு இடு அழகார் களத்தில் அணி வடம் ஆட
மேரு ஒத்த முலையார் பளப்பள என
     மார்பு துத்தி புயவார் வளைக் கடகம்
        வீறிடத் துவளு(ம்) நூலொடு ஒத்த இடை உடை மாதர்
தோகை பக்ஷி நடையார் பதத்தில் இடு
     நூபுரக் குரல்கள் பாட ஆ(அ)கத் துகில்கள்
        சோர நல் தெரு உடே நடித்து முலை விலை கூறிச்
சூதகச் சரசம் ஓடே எத்தி வரு
     வோரை நத்தி விழியால் மருட்டி மயல்
        தூள் மருத்து இ(ட்)டு உயிரே பறிப்பவர்கள் உறவாமோ
சேகணச் செகண தோதிமித் திகுட
     டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி
        தீத கத்திமித தோவு டுக்கை மணி முரசு ஓதை
தேசம் உட்க அர ஆயிரச் சிரமும்
     மூளி பட்டு மக(கா) மேரு உக்க அவுணர்
        தீவு கெட்டு முறையோ எனக் கதற விடும் வேலா
ஆகமத்தி பல காரணத்தி எனை
     ஈண சத்தி அரி ஆசனத்தி சிவன்
        ஆகம் உற்ற சிவகாமி பத்தினியின் முருகோனே
ஆரணற்கு மறை தேடி இட்ட திரு
     மால் மகள் சிறுமி மோக சித்ர வ(ள்)ளி
        ஆசை பற்றி அருணாசலத்தின் மகிழ் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

440   திருவருணை   மொழிய நிறம்  
தனதன தந்ததத்த தனதன தந்ததத்த
     தனதன தந்ததத்த ...... தனதான

மொழியநி றங்கறுத்து மகரவி னங்கலக்கி
     முடியவ ளைந்தரற்று ...... கடலாலும்
முதிரவி டம்பரப்பி வடவைமு கந்தழற்குள்
     முழுகியெ ழுந்திருக்கு ...... நிலவாலும்
மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்ற
     மயல்தணி யும்படிக்கு ...... நினைவாயே
மரகத துங்கவெற்றி விகடந டங்கொள்சித்ர
     மயிலினில் வந்துமுத்தி ...... தரவேணும்
அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தி
     னமுதத னம்படைத்த ...... திருமார்பா
அமரர்பு ரந்தனக்கு மழகிய செந்திலுக்கு
     மருணைவ ளம்பதிக்கு ...... மிறையோனே
எழுபுவ னம்பிழைக்க அசுரர்சி ரந்தெறிக்க
     எழுசயி லந்தொளைத்த ...... சுடர்வேலா
இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்த
     ரிவர்கள்ப யந்தவிர்த்த ...... பெருமாளே.


மொழிய நிறங்கறுத்து மகர இனங்கலக்கி
     முடிய வளைந்து அரற்று கடலாலும்
முதிர விடம் பரப்பி வடவை முகந்து அழற்குள்
     முழுகி எழுந்திருக்கு நிலவாலும்
மழை அளகம் தரித்த கொடியிடை வஞ்சியுற்ற
     மயல் தணி ும்படிக்கு நினைவாயே
மரகத துங்கவெற்றி விகட நடங்கொள் சித்ர
     மயிலினில் வந்து முத்தி தரவேணும்
அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தின்
     அமுத தனம்படைத்த திருமார்பா
அமரர் புரந்தனக்கும் அழகிய செந்திலுக்கும்
     அருணை வளம்பதிக்கும் இறையோனே
எழு புவனம் பிழைக்க அசுரர் சிரந்தெறிக்க
     எழு சயிலம் தொளைத்த சுடர்வேலா
இரவிகள் அந்தரத்தர் அரியர பங்கயத்தர்
     இவர்கள் பயந்தவிர்த்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

441   திருவருணை   வலிவாத பித்தமொடு  
தனதான தத்ததன தனதான தத்ததன
     தனதான தத்ததன ...... தனதான

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
     வறல்சூலை குட்டமொடு ...... குளிர்தாகம்
மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை
     வருநீர டைப்பினுடன் ...... வெகுகோடி
சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை
     தெளியாவெ னக்குமினி ...... முடியாதே
சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ
     சிவஞான சித்திதனை ...... யருள்வாயே
தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொரு
     சுடர்வீசு சக்ரமதை ...... யருள்ஞான
துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
     சுகவாரி சித்தனருள் ...... முருகோனே
அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ
     டசுராரி றக்கவிடு ...... மழல்வேலா
அமுதாச னத்திகுற மடவாள்க ரிப்பெணொடும்
     அருணா சலத்திலுறை ...... பெருமாளே.


வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
     வறல்சூலை குட்டமொடு குளிர்தாகம்
மலிநீரிழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு
     களைவருநீர டைப்பினுடன் வெகுகோடி
சிலைநோயடைத்தவுடல் புவிமீதெடுத்துழல்கை
     தெளியாவெ னக்குமினி முடியாதே
சிவமார்திருப்புகழை எனுநாவினிற்புகழை
     சிவஞான சித்திதனை யருள்வாயே
தொலையாத பத்தியுள திருமால்களிக்கவொரு
     சுடர்வீசு சக்ரமதை யருள்ஞான
துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
     சுகவாரி சித்தனருள் முருகோனே
அலைசூரன் வெற்பும் அரி முகன் ஆனைவத்திரனொடு
     அசுரார் இறக்கவிடும் அழல்வேலா
அமுதாசனத்தி குற மடவாள் கரிப்பெணொடும்
     அருணா சலத்திலுறை பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=XmfdeA3TlyY
Add (additional) Audio/Video Link

Back to Top

442   திருவருணை   விடு மதவேள்  
தனதன தானாதன தனதன தானாதன
     தனதன தானாதன ...... தனதான

விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல
     விழிகொடு வாபோவென ...... வுரையாடும்
விரகுட னூறாயிர மனமுடை மாபாவிகள்
     ம்ருகமத கோலாகல ...... முலைதோய
அடையவு மாசாபர வசமுறு கோமாளியை
     அவனியு மாகாசமும் ...... வசைபேசும்
அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை
     அடியவ ரோடாள்வது ...... மொருநாளே
வடகுல கோபாலர்த மொருபதி னாறாயிரம்
     வனிதையர் தோள்தோய்தரு ...... மபிராம
மரகத நாராயணன் மருமக சோணாசல
     மகிபச தாகாலமு ...... மிளையோனே
உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற
     உலகுய வாரார்கலி ...... வறிதாக
உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழ
     ஒருதனி வேலேவிய ...... பெருமாளே.


விடு மதவேள் வாளியின் விசை பெறும் ஆலாகல
     விழி கொ(ண்)டு வா போ என உரை ஆடும்
விரகுடன் நூறாயிரம் மனம் உடை மா பாவிகள்
     ம்ருகமத கோலாகல முலை தோய
அடையவும் ஆசா பரவசம் உறு கோமாளியை
     அவனியும் ஆகாசமும் வசை பேசும்
அசட அநாசாரனை அவலனை ஆபாசனை
     அடியவரோடு ஆள்வதும் ஒரு நாளே
வட குல கோபாலர் தம் ஒரு பதி நூறாயிரம்
     வனிதையர் தோள் தோய் தரும் அபிராம
மரகத நாராயணன் மருமக சோணாசல
     மகிப சதா காலமும் இளையோனே
உடுபதி சாயாபதி சுரபதி மாயாது உற
     உலகு உய்ய வார் ஆர்கலி வறிது ஆக
உயரிய மா நாகமும் நிருதரும் நீறாய் விழ
     ஒரு தனி வேல் ஏவிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

443   திருவருணை   விதி அதாகவே  
தனன தானன தனன தானனா
     தனன தானனம் ...... தனதான

விதிய தாகவெ பருவ மாதரார்
     விரகி லேமனந் ...... தடுமாறி
விவர மானதொ ரறிவு மாறியே
     வினையி லேஅலைந் ...... திடுமூடன்
முதிய மாதமி ழிசைய தாகவே
     மொழிசெய் தேநினைந் ...... திடுமாறு
முறைமை யாகநி னடிகள் மேவவே
     முனிவு தீரவந் ...... தருள்வாயே
சதிய தாகிய அசுரர் மாமுடீ
     தரணி மீதுகுஞ் ...... சமராடிச்
சகல லோகமும் வலம தாகியே
     தழைய வேவருங் ...... குமரேசா
அதிக வானவர் கவரி வீசவே
     அரிய கோபுரந் ...... தனில்மேவி
அருணை மீதிலெ மயிலி லேறியே
     அழக தாய்வரும் ...... பெருமாளே.


விதி அதாகவே பருவ மாதரார்
     விரகிலே மனம் தடுமாறி
விவரமானது ஓர் அறிவு மாறியே
     வினையிலே அலைந்திடு மூடன்
முதிய மா தமிழ் இசை அதாகவே
     மொழி செய்தே நினைந்திடுமாறு
முறைமையாக நின் அடிகள் மேவவே
     முனிவு தீர வந்து அருள்வாயே
சதி அதாகிய அசுரர் மா முடி
     தரணி மீது உகும் சமர் ஆடி
சகல லோகமும் வலம் அதாகியே
     தழையவே வரும் குமரேசா
அதிக வானவர் கவரி வீசவே
     அரிய கோபுரம் தனில் மேவி
அருணை மீதிலெ மயிலில் ஏறியே
     அழகு அதாய் வரும் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=MW2HuzSNqAo
Add (additional) Audio/Video Link

Back to Top

444   திருவருணை   விந்துப் புளகித  
தந்தத் தனதன தந்தத் தனதன
  தந்தத் தனதன தந்தத் தனதன
    தனத்த தனதன தனத்த தனதன
      தனத்த தனதன தனத்த தனதன
தந்தத் தனதன தந்தத் தனதன
  தந்தத் தனதன தந்தத் தனதன
    தனத்த தனதன தனத்த தனதன
      தனத்த தனதன தனத்த தனதன
தந்தத் தனதன தந்தத் தனதன
  தந்தத் தனதன தந்தத் தனதன
    தனத்த தனதன தனத்த தனதன
      தனத்த தனதன தனத்த தனதன ...... தனதான

விந்துப் புளகித இன்புற் றுருகிட
  சிந்திக் கருவினி லுண்பச் சிறுதுளி
    விரித்த கமலமெல் தரித்து ளொருசுழி
      யிரத்த குளிகையொ டுதித்து வளர்மதி
விண்டுற் றருள்பதி கண்டுற் றருள்கொடு
  மிண்டிச் செயலினி ரம்பித் துருவொடு
    மெழுக்கி லுருவென வலித்து எழுமதி
      கழித்து வயிர்குட முகுப்ப வொருபதில்
விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழி
  வந்துப் புவிமிசை பண்டைச் செயல்கொடு
    விழுப்பொ டுடல்தலை அழுக்கு மலமொடு
      கவிழ்த்து விழுதழு துகுப்ப அனைவரு ...... மருள்கூர
மென்பற் றுருகிமு கந்திட் டனைமுலை
  யுண்டித் தரகொடு வுண்கிச் சொலிவளர்
    வளத்தொ டளைமல சலத்தொ டுழைகிடை
      துடித்து தவழ்நடை வளர்த்தி யெனதகு
வெண்டைப் பரிபுர தண்டைச் சரவட
  முங்கட் டியல்முடி பண்பித் தியல்கொடு
    விதித்த முறைபடி படித்து மயல்கொள
      தெருக்க ளினில்வரு வியப்ப இளமுலை
விந்தைக் கயல்விழி கொண்டற் குழல்மதி
  துண்டக் கரவளை கொஞ்சக் குயில்மொழி
    விடுப்ப துதைகலை நெகிழ்த்தி மயிலென
      நடித்த வர்கள்மயல் பிடித்தி டவர்வரு ...... வழியேபோய்ச்
சந்தித் துறவொடு பஞ்சிட் டணைமிசை
  கொஞ்சிப் பலபல விஞ்சைச் சரசமொ
    டணைத்து மலரிதழ் கடித்து இருகர
      மடர்த்த குவிமுலை யழுத்தி யுரமிடர்
சங்குத் தொனியொடு பொங்கக் குழல்மலர்
  சிந்தக் கொடியிடை தங்கிச் சுழலிட
    சரத்தொ டிகள்வெயி லெறிப்ப மதிநுதல்
      வியர்ப்ப பரிபுர மொலிப்ப எழுமத
சம்பத் திதுசெய லின்பத் திருள்கொடு
  வம்பிற் பொருள்கள்வ ழங்கிற் றிதுபினை
    சலித்து வெகுதுய ரிளைப்பொ டுடல்பிணி
      பிடித்தி டனைவரும் நகைப்ப கருமயிர் ...... நரைமேவித்
தன்கைத் தடிகொடு குந்திக் கவியென
  உந்திக் கசனம றந்திட் டுளமிக
    சலித்து வுடல்சல மிகுத்து மதிசெவி
      விழிப்பு மறைபட கிடத்தி மனையவள்
சம்பத் துறைமுறை யண்டைக் கொளுகையில்
  சண்டக் கருநம னண்டிக் கொளுகயி
    றெடுத்து விசைகொடு பிடித்து வுயிர்தனை
      பதைப்ப தனிவழி யடித்து கொடுசெல
சந்தித் தவரவர் பங்குக் கழுதுஇ
  ரங்கப் பிணமெடு மென்றிட் டறைபறை
    தடிப்ப சுடலையி லிறக்கி விறகொடு
      கொளுத்தி யொருபிடி பொடிக்கு மிலையெனு ...... முடலாமோ
திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
  திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
    திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
      திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
என்பத் துடிகள்த வுண்டைக் கிடுபிடி
  பம்பைச் சலிகைகள் சங்கப் பறைவளை
    திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு
      டிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு
செம்பொற் குடமுழ வுந்தப் புடன்மணி
  பொங்கச் சுரர்மலர் சிந்தப் பதமிசை
    செழித்த மறைசிலர் துதிப்ப முநிவர்கள்
      களித்து வகைமனி முழக்க அசுரர்கள் ...... களமீதே
சிந்திக் குருதிக ளண்டச் சுவரகம்
  ரம்பக் கிரியொடு பொங்கிப் பெருகியெ
    சிவப்ப அதில்கரி மதர்த்த புரவிகள்
      சிரத்தொ டிரதமு மிதப்ப நிணமொடு
செம்புட் கழுகுக ளுண்பத் தலைகள்த
  தும்பக் கருடன டங்கொட் டிடகொடி
    மறைப்ப நரிகண மிகுப்ப குறளிகள்
      நடிக்க இருள்மலை கொளுத்தி யலைகடல்
செம்பொற் பவளமு டங்கிக் கமர்விட
  வெந்திட் டிகமலை விண்டுத் துகள்பட
    சிமக்கு முரகனு முழக்கி விடபட
      மடைத்த சதமுடி நடுக்கி யலைபட ...... விடும்வேலா
தொந்தத் தொகுகுட என்பக் கழலொலி
  பொங்கப் பரிபுர செம்பொற் பதமணி
    சுழற்றி நடமிடு நிருத்த ரயன்முடி
      கரத்த ரரிகரி யுரித்த கடவுள்மெய்
தொண்டர்க் கருள்பவர் வெந்தத் துகளணி
  கங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர்
    தொடுத்த மதனுரு பொடித்த விழியினர்
      மிகுத்த புரமதை யெரித்த நகையினர்
தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர்
  தொந்திக் கடவுளை தந்திட் டவரிட
    சுகத்தி மழுவுழை கரத்தி மரகத
      நிறத்தி முயலக பதத்தி அருளிய ...... முருகோனே
துண்டச் சசிநுதல் சம்பைக் கொடியிடை
  ரம்பைக் கரசியெ னும்பற் றருமகள்
    சுகிப்ப மணவறை களிக்க அணையறு
      முகத்தொ டுறமயல் செழித்த திருபுய
செம்பொற் கரகம லம்பத் திருதல
  மம்பொற் சசியெழ சந்தப் பலபடை
    செறித்த கதிர்முடி கடப்ப மலர்தொடை
      சிறப்பொ டொருகுடில் மருத்து வனமகள்
தொந்தப் புணர்செயல் கண்டுற் றடியெனி
  டைஞ்சற் பொடிபட முன்புற் றருளயில்
    தொடுத்து மிளநகை பரப்பி மயில்மிசை
      நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய ...... பெருமாளே.


விந்துப் புளகித இன்புற்று உருகிட
     சிந்திக் கருவினில் உண்ப அச் சிறு துளி
       விரித்த கமல மேல் தரித்து உள் ஒரு சுழி
           இரத்த குளிகையோடு உதித்து வளர் மதி
விள் துற்று அருள் பதி அருள் கொடு
     மிண்டிச் செயலில் நிரம்பித் துருவொடு
       மெழுக்கில் உரு என வலித்து எழு மதி
           கழித்து வயி(று) குடம் உகுப்ப ஒரு ப(த்)தில்
விஞ்சைச் செயல் கொடு கஞ்சச் சல வழி
     வந்துப் புவி மிசை பண்டைச் செயல் கொடு
       விழுப்பொடு உடல் தலை அழுக்கு மலமொடு
           கவிழ்த்து விழுது அழுது உகுப்ப அனைவரும் அருள் கூர
மென பற்று உருகி முகந்திட்டு அ(ன்)னை முலை
     உண்டித் தர கொ(ண்)டு உண்கிச் சொ(ல்)லி வளர்
       வளத்தோடு அளை மல சலத்தோடு உழைகிடை
           துடித்து தவழ் நடை வளர்த்தி என தகு
வெண்டைப் பரிபுரம் தண்டைச் சர வட
     மும் கட்டி இயல் முடி படி பண்பித்து இயல் கொடு
       விதித்த முறை படி படித்து மயல் கொ(ள்)ள
           தெருக்களினில் வரு(ம்) வியப்ப இள முலை
விந்தைக் கயல் விழி கொண்டல் குழல் மதி
     துண்டக் கரவளை கொஞ்சக் குயில் மொழி
       விடுப்ப துதை கலை நெகிழ்த்தி மயில் என
           நடித்தவர்கள் மயல் பிடித்து அவர் வரு வழியே போய்
சந்தித்து உறவோடு பஞ்சிட்டு அணை மிசை
     கொஞ்சிப் பல பல விஞ்சைச் சரசமோடு
       அணைத்து மலர் இதழ் கடித்து இரு கரம்
           அடர்த்த குவி முலை அழுத்தி உரம் மிட(று)
சங்குத் தொனியோடு பொங்கக் குழல் மலர்
     சிந்திக் கொடி இடை தங்கிச் சுழலிட
       சர தொடிகள் வயில் எறிப்ப மதி நுதல்
           வியர்ப்ப பரிபுரம் ஒலிப்ப எழு மத
சம்பத்து இது செயல் இன்பத்து இருள் கொ(ண்)டு
     வம்பில் பொருள்கள் வழங்கி இற்று இது பி(ன்)னை
       சலித்து வெகு துயர் இளைப்போடு உடல் பிணி
           பிடித்திடும் அனைவரும் நகைப்ப கரு மயிர் நரை மேவி
தன் கைத் தடி கொடு குந்திக் கவி என
     உந்திக்கு அசனம் மறந்திட்டு உ(ள்)ளம் மிக
       சலித்து உடல் சலம் மிகுத்து மதி செவி
           விழிப்பும் மறை பட கிடத்தி மனையவள்
சம்பத்து உறை முறை அண்டைக் கொ(ள்)ளுகையில்
     சண்டக் கரு நமன் அண்டிக் கொ(ள்)ளு கயிறு
       எடுத்து விசை கொடு பிடித்து உயிர் தனை
           பதைப்ப தனி வழி அடித்து கொண்டு செ(ல்)ல
சந்தித்து அவர் அவர் பங்குக்கு அழுது
     இரங்கப் பிணம் எடும் என்று இட்ட அறை பறை
       தடிப்ப சுடலையில் இறக்க விறகொடு
           கொளுத்தி ஒரு பிடி பொடிக்கும் இலை எனும் உடல் ஆமோ
திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
     திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
       திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
           திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
என்ப துடிகள் தவுண்டை கிடுபிடி
     பம்பை ச(ல்)லிகைகள் சங்க பறை வளை
       திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு
           டிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு
செம் பொன் குட முழவும் தப்புடன் மணி
     பொங்க சுரர் மலர் சிந்தப் பதம் மிசை
       செழித்த மறை சிலர் துதிப்ப முநிவர்கள்
           களித்து வகை ம(ன்)னி முழக்க அசுரர்கள் களம் மீதே
சிந்தக் குருதிகள் அண்டச் சுவர் அகம்
     ரம்பக் கிரியோடு பொங்கிப் பெருகியே
       சிவப்ப அதில் கரி மதர்த்த புரவிகள்
           சிரத்தொடு இரதமும் மிதப்ப நிணமொடு
செம் புள் கழுகுகள் உண்பத் தலைகள்
     ததும்பக் கருடன் நடம் கொட்டிட கொடி
       மறைப்ப நரிகணம் மிகுப்ப குறளிகள்
           நடிக்க இருள் மலை கொளுத்தி அலை கடல்
செம் பொன் பவளமும் அடங்கிக் கமர் விட
     வெந்திட்டு இக மலை விண்டுத் துகள் பட
       சிமக்கும் உரகனும் முழக்கி விட படம்
           அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா
தொந்தத் தொகுகுட என்பக் கழல் ஒலி
     பொங்கப் பரிபுரம் செம் பொன் பதம் அணி
       சுழற்றி நடம் இடு நிருத்தர் அயன் முடி
           கரத்தர் அரி கரி உரித்த கடவுள் மெய்
தொண்டர்க்கு அருள்பவர் வெந்தத் துகள் அணி
     கங்கைப் பணி மதி கொன்றைச் சடையினர்
       தொடுத்த மதன் உரு பொடித்த விழியினர்
           மிகுத்த புரம் அதை எரித்த நகையினர்
தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர்
     தொந்திக் கடவுளை தந்திட்டவர் இட
       சுகத்தி மழு உழை கரத்தி மரகத
           நிறத்தி முயலக பதத்தி அருளிய முருகோனே
துண்டச் சசி நுதல் சம்பைக் கொடி இடை
     ரம்பைக்கு அரசி எனும் உம்பல் தரு மகள்
       சுகிப்ப மண அறை களிக்க அணை அறு
           முகத்தொடு உற மயல் செழித்த திரு புய
செம்பொன் கர கமலம் பத்திரு தலம்
     பொன் சசி எழ சந்தப் பல படை
       செறித்த கதிர் முடி கடப்ப மலர் தொடை
           சிறப்போடு ஒரு குடில் மருத்து வன மகள்
தொந்தப் புணர் செயல் கண்டுற்று அடியென்
     இடைஞ்சல் பொடி பட முன்புற்று அருள் அயில்
       தொடுத்தும் இள நகை பரப்பி மயில் மிசை
           நடித்து அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

445   திருவருணை   வீறு புழுகான பனி  
தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன ...... தனதான

வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு
     மேருகிரி யானகொடு ...... தனபார
மீதுபுர ளாபரண சோதிவித மானநகை
     மேகமனு காடுகட ...... லிருள்மேவி
நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேதுவள
     நாணமழி வார்களுட ...... னுறவாடி
நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்
     ஞானசிவ மானபத ...... மருள்வாயே
கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய
     கோலமயி லானபத ...... மருள்வோனே
கூடஅர னோடுநட மாடரிய காளியருள்
     கூருசிவ காமியுமை ...... யருள்பாலா
ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன
     மாரவிளை யாடிமண ...... மருள்வோனே
ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய
     ஆதியரு ணாபுரியில் ...... பெருமாளே.


வீறு புழுகான பனிநீர்கள் மல(ம்) தோயல் விடு
     மேரு கிரியான கொடு தன பார
மீது புரள ஆபரண சோதி விதமான நகை
     மேகம் அனு காடு கடல் இருள் மேவி
நாறு மலர் வாச மயிர் நூல் இடையதே துவள
     நாணம் அழிவார்கள் உடன் உறவாடி
நாடி அதுவே கதி எனா சுழலு(ம்) மோடனை நின்
     ஞான சிவமான பதம் அருள்வாயே
கூறும் அடியார்கள் வினை நீறுபடவே அரிய
     கோல மயிலான பதம் அருள்வாயே
கூட அரனோடே நடமாடு அரிய காளி அருள்
     கூரும் சிவகாமி உமை அருள் பாலா
ஆறு முகமான நதி பால குற மாது தனம்
     ஆர விளையாடி மணம் அருள்வோனே
ஆதி ரகுராம ஜய மாலின் மருகா பெரிய
     ஆதி அருணா புரியில் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

1328   திருவருணை   ஏறுமயிலேறி  

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
          ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
     கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்று
          குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
     மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
          வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
     ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
          ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.


ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே
      ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
      குன்று உருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே
      வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருளல் வேண்டும்
      ஆதி அரு ணாசலம் அமர்ந்த பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=hGbw7LlwDP0
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000