சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: திருவம்பர்
805   சோதி மந்திரம்    
805   திருவம்பர்   சோதி மந்திரம்  
தான தந்தனந் தான தந்ததன
     தான தந்தனந் தான தந்ததன
          தான தந்தனந் தான தந்ததன ...... தந்ததான

சோதி மந்திரம் போத கம்பரவு
     ஞான கம்பரந் தேயி ருந்தவெளி
          தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட ...... முங்கொளாமல்
சூது பந்தயம் பேசி யஞ்சுவகை
     சாதி விண்பறிந் தோடு கண்டர்மிகு
          தோத கம்பரிந் தாடு சிந்துபரி ...... கந்துபாயும்
வீதி மண்டலம் பூண மர்ந்துகழி
     கோல மண்டிநின் றாடி யின்பவகை
          வேணு மென்றுகண் சோர ஐம்புலனொ ...... டுங்குபோதில்
வேதி யன்புரிந் தேடு கண்டளவி
     லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட
          வீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇட ...... ரென்றுபோமோ
ஆதி மண்டலஞ் சேர வும்பரம
     சோம மண்டலங் கூட வும்பதும
          வாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிப ...... டர்ந்ததோகை
ஆழி மண்டலந் தாவி யண்டமுத
     லான மண்டலந் தேடி யொன்றதொழு
          கான மண்டலஞ் சேட னங்கணயில் ...... கொண்டுலாவிச்
சூதர் மண்டலந் தூளெ ழுந்துபொடி
     யாகி விண்பறந் தோட மண்டியொரு
          சூரி யன்திரண் டோட கண்டுநகை ...... கொண்டவேலா
சோடை கொண்டுளங் கான மங்கைமய
     லாடி இந்திரன் தேவர் வந்துதொழ
          சோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர் ...... தம்பிரானே.


சோதி மந்திரம் போதகம் பரவு
     ஞான அகம் பரந்தே இருந்த வெளி
        தோடு அலர்ந்த பொன் பூ இருந்த இடமும்.....கொ(ள்)ளாமல்
சூது பந்தயம் பேசி அஞ்சு வகை
     சாதி விண் பறிந்து ஓடு கண்டர் மிகு
        தோதகம் பரிந்து ஆடு சிந்து பரி.....கந்து பாயும்
வீதி மண்டலம் பூண் அமர்ந்து கழி
     கோல(ம்) மண்டி நின்று ஆடி இன்ப வகை
        வேணும் என்று கண் சோர ஐம்புலன்.....ஒடுங்கு போதில்
வேதியன் புரிந்து ஏடு கண்ட அளவில்
     ஓடி வெம் சுடும் காடு அணைந்து சுட
        வீழ்கி வெந்து உகுந்தீடும் இந்த இடர்.....என்று போமோ
ஆதி(த்த) மண்டலம் சேரவும் பரம
     சோம மண்டலம் கூடவும் பதும
        வாளன் மண்டலம் சாரவும் சுழி.....படர்ந்த தோகை
ஆழி மண்டலம் தாவி அண்ட முதலான
     மண்டலம் தேடி ஒன்ற அதொ முக(மா)ன
        மண்டலம் சேடன் அங்கு அ(ண்)ண அயில்.....கொண்டு உலாவி
சூதர் மண்டலம் தூள் எழுந்து பொடி
     யாகி விண் பறந்து ஓட மண்டி ஒரு
        சூரியன் திரண்டு ஓட கண்டு நகை.....கொண்ட வேலா
சோடை கொண்டு உளம் கான மங்கை மயல்
     ஆடி இந்திரன் தேவர் வந்து தொழ
        சோழ மண்டலம் சாரும் அம்பர் வளர்.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Wed, 24 Jun 2026 06:31:58 +0000