![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: திருவதிகை
737 பரவுவரிக் கயல் 738 விடமும் வேலன
737
திருவதிகை பரவுவரிக் கயல் தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
தனதனனத் தனதனனத் ...... தனதான
பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்
பவளநிறத் ததரம்விளைத் ...... தமுதூறல்
பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப்
படைமதனக் கலையடவிப் ...... பொதுமாதர்
சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்
துகிலகலக் க்ருபைவிளைவித் ...... துருகாமுன்
சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்
சுழலுமனக் கவலையொழித் ...... தருள்வாயே
கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்
கணைதொடுமச் சுதன்மருகக் ...... குமரேசா
கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்
கவிநிறையப் பெறும்வரிசைப் ...... புலவோனே
திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
செறியும்வயற் கதிரலையத் ...... திரைமோதித்
திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்
திருவதிகைப் பதிமுருகப் ...... பெருமாளே.
பரவு வரிக் கயல் குவியக் குயில் கிளி ஒத்து உரை பதற
பவள நிறத்து அதரம் விளைத்த.....அமுது ஊறல்
பருகி நிறத் தரளம் அணிக் களப முலைக் குவடு அசைய
படை மதனக் கலை அடவிப்.....பொதுமாதர்
சொருகு மலர்க்குழல் சரியத் தளர்வுறு சிற்றிடை துவள
துகில் அகல க்ருபை விளைவித்து.....உருகா முன்
சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு இத மதுரக் கலவி தனில்
சுழலும் மனக் கவலை ஒழித்து.....அருள்வாயே
கருகு நிறத்து அசுரன் முடித் தலை ஒரு பத்து அற முடுகிக்
கணை தொடும் அச்சுதன் மருகக்.....குமரேசா
கயிலை மலைக் கிழவன் இடக் குமரி விருப்பொடு கருதக்
கவி நிறையப் பெறும் வரிசைப்.....புலவோனே
திரள் கமுகின் தலை இடறிப் பல கதலிக் குலை சிதறிச்
செறியும் வயல் கதிர் அலையத்.....திரை மோதி
திமிதிமி எனப் பறை அறையப் பெருகு புனல் கெடில நதித்
திருவதிகைப் பதி முருகப்.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
738
திருவதிகை விடமும் வேலன தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன ...... தனதான
விடமும் வேலன மலரன விழிகளு
மிரத மேதரு மமுதெனு மொழிகளும்
விரகி னாலெழு மிருதன வகைகளு ...... மிதமாடி
மிகவு மாண்மையு மெழினல முடையவர்
வினையு மாவியு முடனிரு வலையிடை
வெளியி லேபட விசிறிய விஷமிக ...... ளுடன்மேவா
இடரு றாதுனை நினைபவர் துணைகொள
இனிமை போலெழு பிறவியெ னுவரியி
னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி ...... லிழியாதே
இசையி னாடொறு மிமையவர் முநிவர்கள்
ககன பூபதி யிடர்கெட அருளிய
இறைநி னாறிரு புயமென வுரைசெய ...... அருள்வாயே
படரு மார்பினி லிருபது புயமதொ
டரிய மாமணி முடியொளி ரொருபது
படியி லேவிழ வொருகணை தொடுபவ ...... ரிடமாராய்
பரவை யூடெரி பகழியை விடுபவர்
பரவு வார்வினை கெடஅரு ளுதவியெ
பரவு பால்கட லரவணை துயில்பவர் ...... மருகோனே
அடர வேவரு மசுரர்கள் குருதியை
அரக ராவென அலகைகள் பலியுண
அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு ...... மயில்வீரா
அமர ராதிய ரிடர்பட அடர்தரு
கொடிய தானவர் திரிபுர மெரிசெய்த
அதிகை மாநகர் மருவிய சசிமகள் ...... பெருமாளே.
விடமும் வேல் அ(ன்)ன மலர் அ(ன்)ன விழிகளும்
இரதமே தரும் அமுது எனும் மொழிகளும்
விரகினால் எழும் இரு தன வகைகளும்.....இதம் ஆடி
மிகவும் ஆண்மையும் எழில் நலம் உடையவர்
வினையும் ஆவியும் உடன் இரு வலை இடை
வெளியிலே பட விசிறிய விஷமிகளுடன்.....மேவா
இடர் உறாது உனை நினைபவர் துணை கொள்ள
இனிமை போல் எழு பிறவி எனும் உவரியின்
இடை கெடாது இனி இரு வினை இழிவினில்.....அழியாதே
இசையில் நாள் தொறும் இமையவர் முநிவர்கள்
ககன பூபதி இடர் கெட அருளிய
இறை நின் ஆறிரு புயம் என உரை செய.....அருள்வாயே
படரும் மார்பினில் இருபது புயம் அதொடு
அரிய மாமணி முடி ஒளிர் ஒரு பது
படியிலே விழ ஒரு கணை தொடுபவர்.....இடம் ஆராய்
பரவை ஊடு எரி பகழியை விடுபவர்
பரவுவார் வினை கெட அருள் உதவியே
பரவு பால் கடல் அரவு அணை துயில்பவர்.....மருகோனே
அடரவே வரும் அசுரர்கள் குருதியை
அரகரா என அலகைகள் பலி உண்ண
அலையும் வேலையும் அலறிட எதிர் பொரு.....மயில் வீரா
அமரர் ஆதியர் இடர் பட அடர் தரு
கொடிய தானவர் திரிபுரம் எரி செய்த
அதிகை மா நகர் மருவிய சசி மகள்.....பெருமாளே. Add (additional) Audio/Video Link