சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: திருப்படிக்கரை
787   அருக்கி மெத்தென சிரித்துமை    
787   திருப்படிக்கரை   அருக்கி மெத்தென சிரித்துமை  
தனத்த தத்தனத் தனத்த தத்தனத்
     தனத்த தத்தனத் ...... தனதான

அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட்
     டழைத்தி தப்தடச் ...... சிலகூறி
அரைப்ப ணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த்
     தணைத்தி தழ்க்கொடுத் ...... தநுராகத்
துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க்
     குளக்க ருத்தினிற் ...... ப்ரமைகூரா
துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித்
     துனைத்தி ருப்புகழ்ப் ...... பகர்வேனோ
தருக்கு மற்கடப் படைப்ப லத்தினிற்
     றடப்பொ ருப்பெடுத் ...... தணையாகச்
சமுத்தி ரத்தினைக் குறுக்க டைத்ததிற்
     றரித்த ரக்கர்பொட் ...... டெழவேபோர்
செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச்
     செயித்த வுத்தமத் ...... திருமாமன்
திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த்
     திருப்ப டிக்கரைப் ...... பெருமாளே.


அருக்கி மெத்தெனச் சிரித்து மைக் க(ண்)ணிட்டு
     அழைத்து இதப்படச்.....சில கூறி
அரைப் பணம் அத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து
     அணைத்து இதழ் கொடுத்து.....அநுராகத்து
உருக்கி மட்டு அறப் பொருள் பறிப்பவர்க்கு
     உளக் கருத்தினில்.....ப்ரமை கூராது
உரைத்து செய்ப் பதித் தலத்தினைத் துதித்து
     உனைத் திருப்புகழ்.....பகர்வேனோ
தருக்க மற்கடப் படைப் பலத்தினில் தடப்
     பொருப்பு எடுத்து.....அணையாகச்
சமுத்திரத்தினைக் குறுக்க அடைத்து
     அதில் தரித்த அரக்கர் பொட்டு.....எழவே போர்
செருக்கு விக்ரமச் சரத்தை விட்டு உறச்
     செயித்த உத்தமத்.....திரு மாமன்
திருத் தகப்பன் மெச்சு ஒருத்த முத்தமிழ்
     திருப் படிக்கரைப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Wed, 24 Jun 2026 06:31:58 +0000