![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: திருத்தணிகை
239 அமைவுற்று அடைய 240 அரகர சிவன் அரி 241 அருக்கி மெத்தென 242 இருப்பவல் திருப்புகழ் 243 இருமலு ரோக 244 உடலி னூடு 245 உடையவர்கள் ஏவர் 246 உய்யஞானத்து நெறி 247 எத்தனை கலாதி 248 எலுப்பு நாடிகள் 249 எனக்கென யாவும் 250 எனை அடைந்த 251 ஏது புத்தி 252 ஓலை இட்ட 253 கச்சணி இளமுலை 254 கடற்செகத் தடக்கி 255 கரிக்குழல் விரித்தும் 256 கலை மடவார்தம் 257 கவடுற்ற சித்தர் 258 கனத்த அற 259 கனைத்து அதிர்க்கும் 260 கிரி உலாவிய 261 கிறி மொழி 262 குயில் ஒன்று 263 குருவி என 264 குலைத்து மயிர் 265 குவளைக் கணை 266 கூந்தல் அவிழ்த்து 267 கூர்வேல் பழித்த 268 கொந்துவார் குரவடி 269 சினத்தவர் முடிக்கும் 270 சினத் திலத் தினை 271 சொரியும் முகிலை 272 தாக்கு அமருக்கு 273 திருட்டு நாரிகள் 274 துப் பார் அப்பு 275 தொக்கறாக் குடில் 276 தொடத்துளக்கிகள் 277 நிலையாத சமுத்திர 278 நினைத்தது எத்தனை 279 பகல் இராவினும் 280 பருத்தபற் சிரத்தினை 281 பழமை செப்பிய 282 புருவ நெறித்து 283 பூசலிட்டு 284 பெருக்க உபாயம் 285 பொரியப் பொரிய 286 பொருவிக் கந்தொடு 287 பொற்குடம் ஒத்த 288 பொற் பதத்தினை 289 மருக்குல மேவும் 290 மலை முலைச்சியர் 291 முகத்தை மினுக்கி 292 முகிலும் இரவியும் 293 முடித்த குழலினர் 294 முத்துத் தெறிக்க 295 முலைபுளகம் எழ 296 மொகுமொகு என 297 வங்கம் பெறு 298 வட்ட வாள் தன 299 வரிக் கலையின் 300 வார் உற்று எழும் 301 வினைக்கு இனமாகும் 302 வெற்றி செயவுற்ற
239
திருத்தணிகை அமைவுற்று அடைய தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
அமைவுற் றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற் ...... கிசையாதே
அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத் ...... தயராதே
தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக் ...... கொடுபோகுஞ்
சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக் ...... கடவேனோ
இமயத் துமயிற் கொருபக் கமளித்
தவருக் கிசையப் ...... புகல்வோனே
இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
கிரையிட் டிடுவிக் ...... ரமவேலா
சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
தவமுற் றவருட் ...... புகநாடும்
சடுபத் மமுகக் குகபுக் ககனத்
தணியிற் குமரப் ...... பெருமாளே.
அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று
அமுதைப் பகிர்தற்கு.....இசையாதே
அடையப் பொருள் இளமைக்கென கைவைத்து
அருள்தப்பி மதத்து.....அயராதே
தமர் சுற்றியழப் பறைகொட்டியிட
சமன் நெட்டுயிரைக்.....கொடுபோகும்
சரிரத்தினை நிற்குமெனக் கருதி
தளர்வுற்று ஒழியக்.....கடவேனோ
இமயத்து மயிற்கு ஒரு பக்கமளித்த
அவருக்கு இசையப்.....புகல்வோனே
இரணத்தினில் எற்றுவரைக் கழுகுக்கு
இரையிட்டிடு விக்ரம.....வேலா
சமயச் சிலுகிட்டவரைத் தவறி
தவம் முற்ற அருள்.....புக நாடும்
சடுபத்ம முகக் குக புக்க கனத்
தணியிற் குமரப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=9POIOiU7DZA
Add (additional) Audio/Video Link
240
திருத்தணிகை அரகர சிவன் அரி தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண ...... பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அநலென எழவிடு ...... மதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
உளமதி லுறவருள் ...... முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி ...... களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர ...... வுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர ...... முநிவோரும்
பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி ...... லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு ...... பெருமாளே.
அரகர சிவன் அரிஅயனிவர் பரவ பரவி முன்
அறுமுக சரவண.....பவனே என்று
அநுதின மொழிதர அசுரர்கள் கெட அயில்
அநலென எழ அயில்விடும்.....அதிவீரா
பரிபுர கமலமது அடியிணை யடியவர்
உளமதில் உற அருள்.....முருகேசா
பகவதி வரைமகள் உமை தர வருகுக
பரமன திருசெவி.....களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர.....உயர்வாய
உலக மன் அலகில வுயிர்களும் இமையவர்
அவர்களும் உறுவர.....முநிவோரும்
பரவிமுன் அநுதின மனமகிழ் வுற அணி
பணிதிகழ் தணிகையில்.....உறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையும்
இருபுடை யுறவரு.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=GoZXpb2c2pg
https://www.youtube.com/watch?v=R95O1fQkJaE
Add (additional) Audio/Video Link
241
திருத்தணிகை அருக்கி மெத்தென தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத்
தழித்தறக் கறுத்தகட் ...... பயிலாலே
அழைத்தகப் படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க்
கடுத்தபத் தமுற்றுவித் ...... தகர்போலத்
தரிக்கும்வித் தரிக்குமிக் கதத்துவப் ப்ரசித்தியெத்
தலத்துமற் றிலைப்பிறர்க் ...... கெனஞானம்
சமைத்துரைத் திமைப்பினிற் சடக்கெனப் படுத்தெழச்
சறுக்குமிப் பிறப்புபெற் ...... றிடலாமோ
பொருக்கெழக் கடற்பரப் பரக்கர்கொத் திறப்புறப்
பொருப்பினிற் பெருக்கவுற் ...... றிடுமாயம்
புடைத்திடித் தடற்கரத் துறப்பிடித் தகற்பகப்
புரிக்கிரக் கம்வைத்தபொற் ...... கதிர்வேலா
திருத்தமுத் தமிழ்க்கவிக் கொருத்தமைக் குறத்தியைத்
தினைப்புனக் கிரித்தலத் ...... திடைதோயுஞ்
சிவத்தகுக் குடக்கொடிச் செருக்கவுற் பலச்சுனைச்
சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே.
அருக்கி மெத்தெனச் சிரித்து உருக்கி இட்டு உ(ள்)ளக் கருத்து
அழித்து அறக் கறுத்த கண்.....பயிலாலே
அழைத்து அகப் படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு
அடுத்து அபத்தம் உற்று வித்தகர்.....போலத்
தரிக்கும் வித்தரிக்கும் மிக்க தத்துவ ப்ரசித்தி
எத்தலத்து மற்று இலை பிறர்க்கு.....என ஞானம்
சமைத்து உரைத்து இமைப்பினில் சடக்கெனப் படுத்து எழச்
சறுக்கும் இப் பிறப்பு.....பெற்றிடலாமோ
பொருக்கு எழக் கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்பு உற
பொருப்பினில் பெருக்க.....உற்றிடு மாயம்
புடைத்து இடித்து அடல் கரத்து உறப் பிடித்த கற்பகப்
புரிக்கு இரக்கம் வைத்த பொன்.....கதிர் வேலா
திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த மைக் குறத்தியைத்
தினைப் புனக் கிரித் தலத்து.....இடை தோயும்
சிவத்த குக்குடக் கொடிச் செருக்க உற்பலச் சுனைச்
சிறப்புடைத் திருத்தணிப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
242
திருத்தணிகை இருப்பவல் திருப்புகழ் தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன ...... தனதான
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும்
இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத ...... லறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக்
கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
கனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப்
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
புறத்தினை யளித்தவர் ...... தருசேயே
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடும்.....எனவோதும்
இசைத்தமிழ் நடத்தமிழென துறை விருப்புடன்
இலக்கண இலக்கிய.....கவிநாலும்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுதல்.....அறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில்.....விழலாமோ
கருப்புவில் வளைத்து அணி மலர்க்கணை தொடுத்து இயல்
களிப்புடன் ஒளித்தெய்த.....மதவேளை
கருத்தினில் நினைத்து அவன் நெருப்பெழ நுதற்படு
கனற்கணி லெரித்தவர்.....கயிலாயப்
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
புறத்தினை யளித்தவர்.....தருசேயே
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு.....பெருமாளே.
Audio/Video Link(s)
http://kaumaram.com/thiru/nnt0242_u.html#audio
https://www.youtube.com/watch?v=CR8q1q-GMHc
https://www.youtube.com/watch?v=aoSRriluT28
Add (additional) Audio/Video Link
243
திருத்தணிகை இருமலு ரோக தனதன தான தனதன தான
தனதன தான ...... தனதான
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி ...... விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை ...... யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு ...... முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் ...... அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக ...... இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை ...... விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் ...... மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு ...... பெருமாளே.
இருமலு ரோக முயலகன் வாதம்
எரிகுண.....நாசி விடமே
நீரிழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை.....யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு.....முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாதபடி
உன தாள்கள்.....அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்பதாதி
மடியஅ நேக.....இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை.....விடுவோனே
தருநிழல் மீதிலுறைமுகிலூர்தி
தருதிரு மாதின்.....மணவாளா
சலமிடை பூவின்நடுவினில் வீறு
தணிமலை மேவு.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=xahVyoHSGXU
https://www.youtube.com/watch?v=eI56_xouhkY
https://www.youtube.com/watch?v=6k0rwVdRqRk
Add (additional) Audio/Video Link
244
திருத்தணிகை உடலி னூடு தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத
உணர்வி னூடு வானூடு ...... முதுதீயூ
டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு
மொருவ ரோடு மேவாத ...... தனிஞானச்
சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு
துரிய வாகு லாதீத ...... சிவரூபம்
தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை
தொடுமு பாய மேதோசொ ...... லருள்வாயே
மடல றாத வாரீச அடவி சாடி மாறான
வரிவ ரால்கு வால்சாய ...... அமராடி
மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடி
மடையை மோதி யாறூடு ...... தடமாகக்
கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு
கமல வாவி மேல்வீழு ...... மலர்வாவிக்
கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
உடலி னூடு போய்மீளும் உயிரி னூடு மாயாத
உணர்வினூடு வானூடு.....முதுதீயூடு
உலவையூடு நீரூடு புவியினூடு வாதாடும்
ஒருவரோடு மேவாத.....தனிஞானச்
சுடரினூடு நால்வேத முடியினூடும் ஊடாடு
துரிய ஆகுல அதீத.....சிவரூபம்
தொலைவிலாத பேராசை துரிசு அறாத வோர்பேதை
தொடுமுபாயம் ஏதோசொல்.....அருள்வாயே
மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான
வரி வரால் குவால் சாய.....அமராடி
மதகு தாவி மீதோடி உழவரால் அடாது ஓடி
மடையை மோதி யாறூடு.....தடமாக
கடல்புகா மகாமீனை முடுகி வாளை தான்மேவு
கமல வாவி மேல்வீழு.....மலர்வாவி
கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர
கருணை மேருவே தேவர்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=NS9f43xewlc
Add (additional) Audio/Video Link
245
திருத்தணிகை உடையவர்கள் ஏவர் தனனதன தான தனனதன தான
தனனதன தான ...... தனதான
உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
யுளமகிழ ஆசு ...... கவிபாடி
உமதுபுகழ் மேரு கிரியளவு மான
தெனவுரமு மான ...... மொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
நடவுமென வாடி ...... முகம்வேறாய்
நலியுமுன மேயு னருணவொளி வீசு
நளினஇரு பாத ...... மருள்வாயே
விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்
விகிர் தர்பர யோகர் ...... நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொ டாறு
விடவரவு சூடு ...... மதிபாரச்
சடையிறைவர் காண உமைமகிழ ஞான
தளர் நடையி டாமுன் ...... வருவோனே
தவமலரு நீல மலர்சுனைய நாதி
தணிமலையு லாவு ...... பெருமாளே.
உடையவர்கள் ஏவர் எவர்களென நாடி
உளமகிழ ஆசு.....கவிபாடி
உமதுபுகழ் மேரு கிரியளவும் ஆனது
என உரமுமான.....மொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
நடவுமென வாடி.....முகம்வேறாய்
நலியுமுனமே உன் அருணவொளி வீசு
நளினஇரு பாதம்.....அருள்வாயே
விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்
விகிர்தர் பர யோகர்.....நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு
விட அரவு சூடும்.....அதிபாரச்
சடையிறைவர் காண உமைமகிழ ஞான
தளர் நடையி டாமுன்......வருவோனே
தவமலரு நீல மலர் சுனை அநாதி
தணிமலையு லாவு.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=FaWMp1sme90
Add (additional) Audio/Video Link
246
திருத்தணிகை உய்யஞானத்து நெறி தய்யனா தத்ததன தய்யனா தத்ததன
தய்யனா தத்ததன ...... தனதான
உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது
முள்ளவே தத்துறைகொ ...... டுணர்வோதி
உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை
யுள்ளமோ கத்தருளி ...... யுறவாகி
வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய
வல்லமீ துற்பலச ...... யிலமேவும்
வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி
கிள்ளிவீ சுற்றுமலர் ...... பணிவேனோ
பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி
துய்யவே ணிப்பகிர ...... திகுமாரா
பையமால் பற்றிவளர் சையமேல் வைக்குமுது
நெய்யனே சுற்றியகு ...... றவர்கோவே
செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு
கையமால் வைத்ததிரு ...... மருகோனே
தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
தெய்வயா னைக்கினிய ...... பெருமாளே.
உய்யஞானத்து நெறி கைவிடாது எப்பொழுதும்
உள்ள வேதத்துறை கொடு.....உணர்வோதி
உள்ள மோகத்து இருளை விள்ள மோகப்பொருளை
உள்ள மோகத்து அருளி.....யுறவாகி
வையம் ஏழுக்குநிலை செய்யுநீதி பழைய
வல்ல மீது உற்பலசயில.....மேவும்
வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி
கிள்ளிவீசுற்று மலர்.....பணிவேனோ
பை யராவைப் புனையும் ஐயர் பாகத்தலைவி
துய்ய வேணிப்பகிரதி.....குமாரா
பைய மால் பற்றிவளர் சையமேல் வைக்கு முது
நெய்யனே சுற்றிய.....குறவர்கோவே
செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு
கைய மால் வைத்ததிரு......மருகோனே
தெய்வயானைக்கிளைய வெள்ளை யானைத்தலைவ
தெய்வயா னைக்கினிய....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=r15335joTYM
Add (additional) Audio/Video Link
247
திருத்தணிகை எத்தனை கலாதி தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம்
தத்ததன தான தத்தம் ...... தனதான
எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங்
கெத்தனைச ராச ரத்தின் ...... செடமான
எத்தனைவி டாவெ ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங்
கெத்தனைகொ லூனை நித்தம் ...... பசியாறல்
பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம்
பெற்றிடநி னாச னத்தின் ...... செயலான
பெற்றியுமொ ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும்
பெத்தமுமொ ராது நிற்குங் ...... கழல்தாராய்
தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
தத்தனத னாத னத்தந் ...... தகுதீதோ
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்
தத்தனத னான னுர்த்துஞ் ...... சதபேரி
சித்தர்கள்நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர்
திக்குகளொர் நாலி ரட்டின் ...... கிரிசூழச்
செக்கணரி மாக னைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின்
செக்கர்நிற மாயி ருக்கும் ...... பெருமாளே.
எத்தனைக லாதி சித்து அங்கு எத்தனை வியாதி பித்து
அங்கெத்தனை சர அசரத்தின.....செடமான
எத்தனை விடாவெருட்டு அங்கெத்தனைவல் ஆண்மை பற்றங்கு
எத்தனைகொல் ஊனை நித்தம்.....பசியாறல்
பித்தனையன் நான் அகட்டு உண்டு இப்படி கெடாமல் முத்தம்
பெற்றிட நினா சனத்தின்.....செயலான
பெற்றியும் ஒராது நிற்கும் தத்த குரு தார நிற்கும்
பெத்தமும் ஒராது நிற்கும்.....கழல்தாராய்
தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
தத்தனத னாத னத்தந் ...... தகுதீதோ
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்
தத்தனத னான னுர்த்துஞ்.....சதபேரி
சித்தர்கள் நிடாதர் வெற்பின் கொற்றவர் சுவாமி பத்தர்
திக்குகளொர் நாலிரட்டின்.....கிரிசூழ
செக்கண் அரிமா கனைக்குஞ் சித்தணிகை வாழ் சிவப்பின்
செக்கர் நிறமாயிருக்கும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=NO5rU9LNC50
Add (additional) Audio/Video Link
248
திருத்தணிகை எலுப்பு நாடிகள் தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான
எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொ
டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு
விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ ...... சதிகாரர்
இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி
யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட
னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு ...... சமுசாரம்
கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள்
அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர்
கெடுப்பர் யாரையு மித்திர குத்தரர் ...... கொலைகாரர்
கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள
வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி
கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ ...... ணுழல்வேனோ
ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள
மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி
யுடைத்து வானவர் சித்தர்து தித்திட ...... விடும்வேலா
உலுத்த ராவண னைச்சிர மிற்றிட
வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன்
உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் ...... மருகோனே
வலிக்க வேதனை குட்டிந டித்தொரு
செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை
மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் ...... குருநாதா
வனத்தில் வாழும யிற்குல மொத்திடு
குறத்தி யாரைம யக்கிய ணைத்துள
மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய ...... பெருமாளே.
எலுப்பு நாடிகள் அப்பொடு இரத்தமொடு
அழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு
இருக்கும் வீடு அதிலெத்தனை தத்துவ.....சதிகாரர்
இறப்பர் சூதகவர்ச் சுதரப்பதி
யுழப்பர் பூமிதரிப்பர் பிறப்புடனிருப்பர்
வீடுகள் கட்டி அலட்டுறு.....சமுசாரம்
கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள்
அழிப்பர் மாதவ முற்று நினைக்கிலர்
கெடுப்பர் யாரையு மித்திர குத்தரர்.....கொலைகாரர்
கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்களவரிப்பர்
சூடக ரெத்தனை வெப்பிணி
கெலிக்கும் வீடதை நத்தியெடுத்து.....இவணுழல்வேனோ
ஒலிப்பல் பேரிகை யுக்ர அமர்க்களம்
எதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி
யுடைத்து வானவர் சித்தர்துதித்திட.....விடும்வேலா
உலுத்த ராவணனைச்சிரம் இற்றிட
வதைத்து மாபலியைச் சிறை வைத்தவன்
உலக்கை ராவி நடுக்கடல் விட்டவன்.....மருகோனே
வலிக்க வேதனை குட்டி நடித்து ஒரு
செகத்தை யீனவள் பச்சை நிறத்தியை
மணத்த தாதைப ரப்ரம ருக்கருள்.....குருநாதா
வனத்தில் வாழுமயிற்குலம் ஒத்திடு
குறத்தியாரை மயக்கிய ணைத்து உள
மகிழ்ச்சி யோடுதிருத்தணி பற்றிய.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=XshRNUlYyGk
Add (additional) Audio/Video Link
249
திருத்தணிகை எனக்கென யாவும் தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான
எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் ...... தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென் ...... பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங் ...... குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே
விளப்பென மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் ...... புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் ...... முருகோனே
தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.
எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந்.....தனிலோயா
எடுத்திடு காயத் தனைக்கொடு மாயும்
இலச்சை இலாதென்.....பவமாற
உனைப்பல நாளுந் திருப்புகழாலும்
உரைத்திடுவார் தங்.....குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரியாது ஒண்
பொலச் சரண் நானுந்.....தொழுவேனோ?
வினைத்திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள் கொன்றவன்.....நீயே
விளப்பென மேலென்றிட அயனாரும்
விருப்புற வேதம்.....புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும்.....முருகோனே
தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=aIzn8CmIwx0
https://www.youtube.com/watch?v=nTIsZSjXqek
http://kaumaram.com/thiru/nnt0249_u.html#audio
Add (additional) Audio/Video Link
250
திருத்தணிகை எனை அடைந்த தனன தந்த தத்த தனன தந்த தத்த
தனன தந்த தத்த ...... தனதான
எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த
மெரிவ ழங்கு வெப்பு ...... வலிபேசா
இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
டிரும லென்று ரைக்கு ...... மிவையோடே
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
மதிம யங்கி விட்டு ...... மடியாதே
மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
மயிலில் வந்து முத்தி ...... தரவேணும்
நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
நெறியில் நின்ற வெற்றி ...... முனைவேலா
நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்கு ...... முருகோனே
தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
செயல றிந்த ணைக்கு ...... மணிமார்பா
திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
சிறைதி றந்து விட்ட ...... பெருமாளே.
எனையடைந்த குட்டம் வினைமிகுந்த பித்தம்
எரிவழங்கு வெப்பு.....வலிபேசா
இகலி நின்றலைக்கு முயலகன் குலைப்பொடு
இருமலென்று உரைக்கும்.....இவையோடே
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநினைந்து சுத்த
மதிம யங்கி விட்டு.....மடியாதே
மருவியின்றெ னக்கு மரகதம் சிறக்கு
மயிலில் வந்து முத்தி.....தரவேணும்
நினை வணங்கு பத்தரனை வருந்தழைக்க
நெறியில் நின்ற வெற்றி.....முனைவேலா
நிலைபெறுந் திருத்தணியில் விளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்கு.....முருகோனே
தினை விளங்கலுற்ற புனஇளங் குறத்தி
செயலறிந்து அணைக்கு.....மணிமார்பா
திசைமுகன் திகைக்க அசுரர் அன்றடைத்த
சிறை திறந்து விட்ட.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=NNgjmIkuNQk
Add (additional) Audio/Video Link
251
திருத்தணிகை ஏது புத்தி தான தத்தன தான தத்தன
தான தத்தன தான தத்தன
தான தத்தன தான தத்தன ...... தந்ததான
ஏது புத்திஐ யாஎ னக்கினி
யாரை நத்திடு வேன வத்தினி
லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்
றேயி ருக்கவு நானு மிப்படி
யேத வித்திட வோச கத்தவ
ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்
பாதம் வைத்திடை யாதே ரித்தெனை
தாளில் வைக்கநி யேம றுத்திடில்
பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்
பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ
ஓத முற்றெழு பால்கொ தித்தது
போல எட்டிகை நீசமுட்டரை
யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே
ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
மான்ம ழுக்கர மாட பொற்கழ
லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே
மாதி னைப்புன மீதி ருக்குமை
வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே
மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.
ஏது புத்திஐ யாஎனக்கு இனி
யாரை நத்திடுவேன் அவத்தினிலே
யிறத்தல் கொலோ எனக்குனி.....தந்தைதாயென்
றேயி ருக்கவு நானு மிப்படியே
தவித் திடவோ சகத்தவ
ரேசலிற் படவோ நகைத்தவர்.....கண்கள்காணப்
பாதம் வைத்திடு ஐயா தெரித்தெனை
தாளில் வைக்கநியேம றுத்திடில்
பார் நகைக்குமையா தகப்பன்முன்.....மைந்தனோடி
பால் மொழிக் குரல் ஓல மிட்டிடில்
யாரெ டுப்பதெனாவெ றுத்தழ
பார்வி டுப்பர்களோ எனக்கிது.....சிந்தியாதோ
ஓத முற்றெழு பால்கொதித்தது
போல எட்டிகை நீசமுட்டரை
ஓட வெட்டிய பாநு சத்திகை.....யெங்கள்கோவே
ஓத மொய்ச்சடையாட உற்றமர்
மான்மழுக்கர மாட பொற்கழ
லோசை பெற்றிடவே நடித்தவர்.....தந்தவாழ்வே
மாதினைப்புன மீதிருக்குமை
வாள்விழிக்குற மாதினை திரு
மார்ப ணைத்த மயூர அற்புத.....கந்தவேளே
மாரன் வெற்றிகொள் பூமுடிக்குழ
லார்வியப்புற நீடு மெய்த்தவர்
வாழ் திருத்தணி மாமலைப்பதி.....தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=WFy7ei23JI0
Add (additional) Audio/Video Link
252
திருத்தணிகை ஓலை இட்ட தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன ...... தனதான
ஓலை யிட்டகு ழைச்சிகள் சித்திர
ரூப மொத்தநி றத்திகள் விற்கணை
யோடி ணைத்தவி ழிச்சிகள் சர்க்கரை ...... யமுதோடே
ஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குர
லோடு வைத்துமி ழற்றுமி டற்றிகள்
ஓசை பெற்றது டிக்கொளி டைச்சிகள் ...... மணம்வீசும்
மாலை யிட்டக ழுத்திகள் முத்தணி
வார ழுத்துத னத்திகள் குத்திர
மால்வி ளைத்தும னத்தைய ழித்திடு ...... மடமாதர்
மார்ப சைத்தும ருட்டியி ருட்டறை
வாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடு
மாத ருக்குவ ருத்தமி ருப்பது ...... தணியாதோ
வேலை வற்றிட நற்கணை தொட்டலை
மீத டைத்துத னிப்படை விட்டுற
வீற ரக்கன்மு டித்தலை பத்தையு ...... மலைபோலே
மீத றுத்திநி லத்தில டித்துமெய்
வேத லக்ஷுமி யைச்சிறை விட்டருள்
வீர அச்சுத னுக்குந லற்புத ...... மருகோனே
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில
வாரி முத்துந கைக்கொடி சித்திர
நீல ரத்தின மிக்கஅ றக்கிளி ...... புதல்வோனே
நீற திட்டுநி னைப்பவர் புத்தியில்
நேச மெத்தஅ ளித்தருள் சற்குரு
நீல முற்றதி ருத்தணி வெற்புறை ...... பெருமாளே.
ஓலை இட்ட குழைச்சிகள் சித்திர
ரூபம் ஒத்த நிறத்திகள் வில் கணை
யோடு இணைத்த விழிச்சிகள் சர்க்கரை.....அமுதோடே
ஊறி ஒத்த மொழிச்சிகள் புட்
குரலோடு வைத்து மிழற்றும் இடற்றிகள்
ஓசை பெற்ற துடிக்கொள் இடைச்சிகள்.....மணம் வீசும்
மாலை இட்ட கழுத்திகள் முத்து அணி
வார் அழுத்து தனத்திகள் குத்திர
மால் விளைத்து மனத்தை அழித்திடு(ம்).....மட மாதர்
மார்பு அசைத்து மருட்டி இருட்டு அறை
வா எனப் பொருள் பற்றி முயக்கிடு(ம்)
மாதருக்கு வருத்தம் இருப்பது.....தணியாதோ
வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை
மீது அடைத்து தனிப் படை விட்டுற
வீறு அரக்கன் முடித்தலை பத்தையும்.....மலை போலே
மீது அறுத்து நிலத்தில் அடித்து மெய்
வேத லக்ஷுமியைச் சிறை விட்டு அருள்
வீர அச்சுதனுக்கு நல் அற்புத.....மருகோனே
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில
வாரி முத்து நகைக் கொடி சித்திர
நீல ரத்தின மிக்க அறக் கிளி.....புதல்வோனே
நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில்
நேச மெத்த அளித்து அருள் சற்குரு
நீலம் உற்ற திருத்தணி வெற்பு உறை.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
253
திருத்தணிகை கச்சணி இளமுலை தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான
கச்சணி யிளமுலை முத்தணி பலவகை
கைச்சரி சொலிவர ...... மயல்கூறிக்
கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர்
கட்செவி நிகரல்குல் ...... மடமாதர்
இச்சையி னுருகிய கச்சைய னறிவிலி
யெச்சமி லொருபொரு ...... ளறியேனுக்
கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரிணை
யிப்பொழு தணுகவு ...... னருள்தாராய்
கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனை
நச்சியெ திருடிய ...... குறையால்வீழ்
குற்கிர வினியொடு நற்றிற வகையறி
கொற்றவு வணமிசை ...... வருகேசன்
அச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயில்
அச்சுதன் மகிழ்தரு ...... மருகோனே
அப்பணி சடையரன் மெச்சிய தணிமலை
யப்பனெ யழகிய ...... பெருமாளே.
கச்சு அணி இள முலை முத்து அணி பல வகை
கைச் சரி சொலி வர.....மயல் கூறி
கைப் பொருள் கவர் தரு மைப் பயில் விழியினர்
கண் செவி நிகர் அல்குல்.....மடமாதர்
இச்சையில் உருகிய கச்சையன் அறிவிலி
எச்சம் இல் ஒரு பொருள்.....அறியேனுக்கு
இப்புவி மிசை கமழ் பொன் பத மலர் இணை
இப்பொழுது அணுக உன்.....அருள் தாராய்
கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர் தனை
நச்சியெ திருடிய.....குறையால் வீழ்
குற்கிரவினி யொடு நல் திற வகை அறி
கொற்றவ உவண(ம்) மிசை.....வரு கேச(வ)ன்
அச் சுதை நிறை கடல் நச்சு அரவணை துயில்
அச்சுதன் மகிழ் திரு.....மருகோனே
அப்பு அணி சடை அரன் மெச்சிய தணி மலை
அப்பனெ அழகிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
254
திருத்தணிகை கடற்செகத் தடக்கி தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
கடற்செகத் தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கணைக்
கடைக்கணிற் கொடுத்தழைத் ...... தியல்காமக்
கலைக்கதற் றுரைத்துபுட் குரற்கள்விட் டுளத்தினைக்
கரைத்துடுத் தபட்டவிழ்த் ...... தணைமீதே
சடக்கெனப் புகத்தனத் தணைத்திதழ்க் கொடுத்துமுத்
தமிட்டிருட் குழற்பிணித் ...... துகிரேகை
சளப்படப் புதைத்தடித் திலைக்குணக் கடித்தடத்
தலத்தில்வைப் பவர்க்கிதப் ...... படுவேனோ
இடக்கடக் குமெய்ப்பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித்
தெழிற்றினைக் கிரிப்புறத் ...... துறைவேலா
இகற்செருக் கரக்கரைத் தகர்த்தொலித் துரத்தபச்
சிறைச்சியைப் பசித்திரைக் ...... கிசைகூவும்
பெடைத்திரட் களித்தகுக் குடக்கொடிக் கரத்தபொய்ப்
பிதற்றறப் படுத்துசற் ...... குருவாய்முன்
பிறப்பிலிக் குணர்த்துசித் தவுற்றநெற் பெருக்குவைப்
பெருக்குமெய்த் திருத்தணிப் ...... பெருமாளே.
கடல் செகத்து அடக்கி மற்று அடுத்தவர்க்கு இடுக்கணைக்
கடைக் க(ண்)ணில் கொடுத்து அழைத்து.....இயல் காமக்
கலைக் கதற உரைத்து புட் குரல்கள் விட்டு உ(ள்)ளத்தினைக்
கரைத்து உடுத்த பட்டு அவிழ்த்து.....அணைமீதே
சடக்கெனப் புகத் தனத்து அணைத்து இதழ்க் கொடுத்து முத்தம்
இட்டு இருள் குழல் பிணித்து.....உகிர் ரேகை
சளப்படப் புதைத்து அடித்து இலைக் குணக் கடித்தடத்
தலத்தில் வைப்பவர்க்கு இதப்.....படுவேனோ
இடக்கு அடக்கு மெய்ப்பொருள் திருப்புகழ்க்கு உயிர்ப்பு
அளித்து எழில் தினைக் கிரிப் புறத்து.....உறைவேலா
இகல் செருக்கு அரக்கரைத் தகர்த்து ஒலித்து உரத்த
பச்ச இறைச்சியைப் பசித்த இரைக்கு.....இசை கூவும்
பெடைத் திரட்கு அளித்த குக்குடக் கொடி கரத்த பொய்ப்
பிதற்றல் அறப் படுத்து சற்.....குருவாய் முன்
பிறப்பிலிக்கு உணர்த்து சித்த உற்ற நெல் பெருக் குவைப்
பெருக்கு மெய்த் திருத்தணிப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
255
திருத்தணிகை கரிக்குழல் விரித்தும் தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் ...... தனதான
கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்
கரிக்குவ டிணைக்குந் ...... தனபாரக்
கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்
கலைத்துகில் மினுக்யும் ...... பணிவாரைத்
தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்
தவிர்த்துன துசித்தங் ...... களிகூரத்
தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன்
தலத்தினி லிருக்கும் ...... படிபாராய்
புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்
பொடிப்பணி யெனப்பன் ...... குருநாதா
புயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின்
புகழ்ச்சிய முதத்திண் ...... புலவோனே
திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந்
தெறிப்புற விடுக்குங் ...... கதிர்வேலா
சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென்
திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
கரிக் குழல் விரித்தும் புறக் கயல் விழித்தும்
கரிக் குவடு இணைக்கும்.....தன பாரக்
கரத்து இடு வளைச் சங்கிலிச் சரம் ஒலித்தும்
கலைத் துகில் மினுக்(கி)யும்.....பணிவாரைத்
தரித்து உளம் அழிக்கும் கவட்டர்கள் இணக்கம்
தவிர்த்து உனது சித்தம்.....களி கூரத்
தவக் கடல் குளித்து இங்கு உனக்கு அடிமை உற்று உன்
தலத்தினில் இருக்கும்படி.....பாராய்
புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண்
பொடிப் பணி என் அப்பன்.....குருநாதா
புயப் பணி கடப்பம் தொடைச் சிகரம் உற்று இன்
புகழ்ச்சி அமுதத் திண்.....புலவோனே
திரள் பரி கரிக்கும் பொடிப்பட அவுணர்க்கும்
தெறிப்பு உற விடுக்கும்.....கதிர் வேலா
சிறப்பொடு குறப் பெண் களிக்கும் விசயத் தென்
திருத்தணி இருக்கும்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
256
திருத்தணிகை கலை மடவார்தம் தனதன தானம் தனதன தானம்
தனதன தானம் ...... தனதான
கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
கனவளை யாலுங் ...... கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்
கருதலை யாலுஞ் ...... சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணை யாலுங்
கொடியிடை யாள்நின் ...... றழியாதே
குரவணி நீடும் புயமணி நீபங்
குளிர்தொடை நீதந் ...... தருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் ...... தொழும்வேலா
தினைவன மானுங் கநவன மானுஞ்
செறிவுடன் மேவுந் ...... திருமார்பா
தலமகள் மீதெண் புலவரு லாவுந்
தணிகையில் வாழ்செங் ...... கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
தனிமயி லேறும் ...... பெருமாளே.
கலைமடவார்தம் சிலையதனாலும்
கனவளையாலும்.....கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயம்
கருது அலையாலும்.....சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணையாலும்
கொடியிடையாள்.....நின்றழியாதே
குரவணி நீடும் புயம் அணி நீபங்
குளிர்தொடை நீதந்து.....அருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன்.....தொழும்வேலா
தினைவன மானுங் கநவன மானுஞ்
செறிவுடன் மேவுந்.....திருமார்பா
தலமகள் மீதெண் புலவரு லாவுந்
தணிகையில் வாழ்செங்.....கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
தனிமயி லேறும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=_Wp9faHiry4
Add (additional) Audio/Video Link
257
திருத்தணிகை கவடுற்ற சித்தர் தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத்
தனனத்த தத்தனத் ...... தனதான
கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்
கடவுட்ப்ர திஷ்டைபற் ...... பலவாகக்
கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க்
கருவிற்பு கப்பகுத் ...... துழல்வானேன்
சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்
கசரப்ப ளிக்கெனப் ...... பொருள்தேடி
சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநின்
சரணப்ர சித்திசற் ...... றுணராரோ
குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்
குமுறக்க லக்கிவிக் ...... ரமசூரன்
குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்
துதிரத்தி னிற்குளித் ...... தெழும்வேலா
சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்
றுவலைச்சி மிழ்த்துநிற் ...... பவள்நாணத்
தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச்
சுருதித்த மிழ்க்கவிப் ...... பெருமாளே.
கவடுற்ற சித்தர் சட் சமயப்ர மத்தர் நற்
கடவுட்ப்ர திஷ்டைபற்.....பலவாகக்
கருதி பெயர்க்குறித்து உருவர்க்கம் இட்டு இடர்க்
கருவிற்புகப் பகுத்து.....உழல்வானேன்
சவடிக்கு இலச்சினைக்கு இருகைச் சரிக்கும் மிக்க
சரப்பளிக்கு எனப்.....பொருள்தேடி
சகலத்தும் ஒற்றைபட்டு அயல்பட்டு நிற்குநின்
சரணப்ரசித்தி.....சற்றுணராரோ
குவடு எட்டும் அட்டு நெட்டு உவரிக்கணத்தினைக்
குமுறக் கலக்கி.....விக்ரமசூரன்
குடலைப் புயத்திலிட்டு உடலைத்தறித்து உருத்து
உதிரத்தினிற் குளித்து.....எழும்வேலா
சுவடுற்ற அற்புதக் கவலைப் புனத்தினில்
துவலைச்சிமிழ்த்து நிற்பவள்.....நாணத்
தொழுதெத்து முத்த பொற் புரிசைச் செருத்தணி
சுருதித் தமிழ்க்கவிப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=pTaM7ooXY8U
Add (additional) Audio/Video Link
258
திருத்தணிகை கனத்த அற தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக்
கனத்தையொத் துமொய்த்தமைக் ...... குழலார்தங்
கறுத்தமைக் கயற்கணிற் கருத்துவைத் தொருத்தநிற்
கழற்பதத் தடுத்திடற் ...... கறியாதே
இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத்
திசைத்தசைத் தசுக்கிலத் ...... தசைதோலால்
எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத்
தெனக்குநித் தமுத்தியைத் ...... தரவேணும்
பனைக்கரச் சினத்திபத் தனைத்துரத் தரக்கனைப்
பயத்தினிற் பயப்படப் ...... பொரும்வேலா
பருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப்
படைத்தகுக் குடக்கொடிக் ...... குமரேசா
தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச்
செருக்குறத் திருப்புயத் ...... தணைவோனே
திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத்
திருத்திசைத் திருத்தணிப் பெருமாளே.
கனத்த அறப் பணைத்த பொன் கழைப் புயத் தனக் கிரி
கனத்தை ஒத்து மொய்த்த மைக்.....குழலார் தம்
கறுத்த மைக் க(ண்)ணில் கருத்து வைத்து ஒருத்த நின்
கழல் பதத்து அடுத்திடற்கு.....அறியாதே
இனப் பிணிக் கணத்தினுக்கு இருப்பு எனத் துருத்தி ஒத்து
இசைத்து அசைத்து அ(ச்) சுக்கிலம்.....தசை தோலால்
எடுத்த பொய்க் கடத்தினைப் பொறுக்கும் இப் பிறப்பு
அறுத்து எனக்கு நித்த முத்தியைத்.....தரவேணும்
பனைக் கரச் சினத்து இபத்தனைத் துரத்து அரக்கனைப்
பயத்தினில் பயப்படப்.....பொரும் வேலா
பருப்பதச் செருக்கு அறத் துகைக்கும் முள் பதத்தினைப்
படைத்த குக்குடக் கொடிக்.....குமரேசா
தினைப் புனப் பருப்பதத்தினில் குடிக் குறத்தியைச்
செருக்கு உறத் திருப் புயத்து.....அணைவோனே
திருப் புரப் புறத்து இயல் திருத் தகுத்து நித்தல
திருத் திசைத் திருத்தணிப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
259
திருத்தணிகை கனைத்து அதிர்க்கும் தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான
தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான
கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட ...... லொன்றினாலே
கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு ...... திங்களாலே
தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ...... ரங்களாலே
தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச ...... ழங்கலாமோ
தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம ...... டந்தைகேள்வா
திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் ...... கந்தவேளே
பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய ...... மங்கைபாகா
படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் ...... தம்பிரானே.
கனைத்து அதிர்க்கும் இப் பொங்கு கார்க்கடல் ஒன்றினாலே
கறுத்து அறச்சிவத்து அங்கி வாய்த்தெழு.....திங்களாலே
தனிக்கருப்பு விற் கொண்டு வீழ்த்த சரங்களாலே
தகைத்து ஒருத்தி எய்த்து இங்கு யாக்கை.....சழங்கலாமோ
தினைப்புனத்தினைப் பண்டு காத்த மடந்தைகேள்வா
திருத்த ணிப்பதிக் குன்றின் மேல் திகழ்.....கந்தவேளே
பனைக்க ரக்கயத்து அண்டர் போற்றிய மங்கைபாகா
படைத்து அளித்து அழிக் கும்த்ரி மூர்த்திகள்.....தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=VZOEHXw7og8
Add (additional) Audio/Video Link
260
திருத்தணிகை கிரி உலாவிய தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன ...... தனதான
கிரியு லாவிய முலைமிசை துகிலிடு
கபட நாடக விரகிக ளசடிகள்
கெடுவி யாதிக ளடைவுடை யுடலினர் ...... விரகாலே
க்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள்
முழுது நாறிக ளிதமொழி வசனிகள்
கிடையின் மேல்மன முருகிட தழுவிகள் ...... பொருளாலே
பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர்
அதிக மாவொரு பொருள்தரு பவரொடு
பழைய பேரென இதமுற அணைபவர் ...... விழியாலே
பகழி போல்விடு வினைகவர் திருடிகள்
தமையெ ணாவகை யுறுகதி பெரும்வகை
பகர மாமயில் மிசைவர நினைவது ...... மொருநாளே
அரிய ராதிபர் மலரய னிமையவர்
நிலைபெ றாதிடர் படவுடன் முடுகியெ
அசுரர் தூள்பட அயில்தொடு மறுமுக ...... இளையோனே
அரிய கானக முறைகுற மகளிட
கணவ னாகிய அறிவுள விதரண
அமரர் நாயக சரவண பவதிற ...... லுடையோனே
தரும நீதியர் மறையுளர் பொறையுளர்
சரிவு றாநிலை பெறுதவ முடையவர்
தளர்வி லாமன முடையவ ரறிவினர் ...... பரராஜர்
சகல லோகமு முடையவர் நினைபவர்
பரவு தாமரை மலரடி யினிதுற
தணிகை மாமலை மணிமுடி யழகியல் ...... பெருமாளே.
கிரி உலாவிய முலை மிசை துகில் இடு
கபட நாடக விரகிகள் அசடிகள்
கெடு வியாதிகள் அடைவுடை உடலினர்.....விரகாலே
க்ருபையினார் ஒடு மணம் மிசை நழுவிகள்
முழுது நாறிகள் இத மொழி வசனிகள்
கிடையின் மேல் மனம் உருகிட தழுவிகள்.....பொருளாலே
பரிவு இ(ல்)லா மயல் கொடு சமர் புரிபவர்
அதிகமா(க) ஒரு பொருள் தருபவரொடு
பழைய பேர் என இதம் உற அணைபவர்.....விழியாலே
பகழி போல் விடு வினை கவர் திருடிகள்
தமை எ(ண்)ணா வகை அறு கதி பெறும் வகை
பகர மா மயில் மிசை வர நினைவதும்.....ஒரு நாளே
அரி அர(ன்) அதிபர் மலர் அயன் இமையவர்
நிலை பெறாது இடர் பட உடன் முடுகியே
அசுரர் தூள்பட அயில் தொடும் அறு முக.....இளையோனே
அரிய கானகம் உறை குற மகளிட
கணவனாகிய அறிவு உள விதரண
அமரர் நாயக சரவணபவ திறல்.....உடையோனே
தரும நீதியர் மறை உளர் பொறை உளர்
சரிவு உறா நிலை பெறு தவம் உடையவர்
தளர்வு இலா மனம் உடையவர் அறிவினர்.....பர ராஜர்
சகல லோகமும் உடையவர் நினைபவர
பரவு தாமரை மலர் அடி இனிது உற
தணிகை மாமலை மணிமுடி அழகியல்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
261
திருத்தணிகை கிறி மொழி தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் ...... தனதான
கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்
கெடுபிறப் பறவிழிக் ...... கிறபார்வைக்
கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்
கிகள்தமைச் செறிதலுற் ...... றறிவேதும்
அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்
றறவுநெக் கழிகருக் ...... கடலூடே
அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்
றடியிணைக் கணுகிடப் ...... பெறுவேனோ
பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
பொறியிலச் சமணரத் ...... தனைபேரும்
பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்
புகலியிற் கவுணியப் ...... புலவோனே
தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்
தவர்திருப் புதல்வநற் ...... சுனைமேவுந்
தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்
தணியினிற் சரவணப் ...... பெருமாளே.
கிறி மொழிக் கிருதரைப் பொறி வழிச் செறிஞரை
கெடு பிறப்பு அற விழிக்கிற.....பார்வைக்
கெடு மடக் குருடரைத் திருடரை சமய
தர்க்கிகள் தமைச் செறிதல் உற்று.....அறிவு ஏதும்
அறிதல் அற்று அயர்தல் உற்று அவிழ்தல் அற்று அருகல் உற்று
அறவு(ம்) நெக்கு அழி கருக்.....கடல் ஊடே
அமிழ்தல் அற்று எழுதல் உற்று உணர் நலத்து உயர்தல் உற்று
அடியிணைக்கு அணுகிடப்.....பெறுவேனோ
பொறி உடைச் செழியன் வெப்பு ஒழிதரப் பறி தலைப்
பொறி இலச் சமணர்.....அத்தனை பேரும்
பொடி பட சிவ மணப் பொடி பரப்பிய திருப்
புகலியில் கவுணியப்.....புலவோனே
தறி வளைத்து உற நகைப் பொறி எழப் புரம் எரித்தவர்
திருப் புதல்வ நல்.....சுனை மேவும்
தனி மணக் குவளை நித்தமும் மலர் தரு செருத்
தணியினில் சரவணப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=1Xa8q5Sdi50
Add (additional) Audio/Video Link
262
திருத்தணிகை குயில் ஒன்று தனனந் தனனத் தனனந் தனனத்
தனனந் தனனத் ...... தனதான
குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்
கொலையின் பமலர்க் ...... கணையாலே
குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக்
கொடிகொங் கையின்முத் ...... தனலாலே
புயல்வந் தெறியக் கடனின் றலறப்
பொருமங் கையருக் ...... கலராலே
புயமொன் றமிகத் தளர்கின் றதனிப்
புயம்வந் தணையக் ...... கிடையாதோ
சயிலங் குலையத் தடமுந் தகரச்
சமனின் றலையப் ...... பொரும்வீரா
தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த்
தனமொன் றுமணித் ...... திருமார்பா
பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற்
பணியுந் தணிகைப் ...... பதிவாழ்வே
பரமன் பணியப் பொருளன் றருளிற்
பகர்செங் கழநிப் ...... பெருமாளே.
குயில் ஒன்று மொழிக் குயில் நின்று அலையக்
கொலை இன்ப மலர்க்.....கணையாலே
குளிரும் தவளக் குல சந்த்ர ஒளிக்
கொடி கொங்கையின் முத்து.....அனலாலே
புயல் வந்து எறி அக்கடல் நின்று அலற
பொரும் மங்கையர் உக்க.....அலராலே
புயம் ஒன்ற மிகத் தளர்கின்ற தனிப்
புயம் வந்து அணையக்.....கிடையாதோ
சயிலம் குலையத் தடமும் தகரச்
சமன் நின்று அலைய.....பொரும் வீரா
தரு மங்கை வனக் குற மங்கையர் மெய்த்
தனம் ஒன்றும் அணித்.....திரு மார்பா
பயிலும் ககனப் பிறை தண் பொழிலில்
பணியும் தணிகைப்.....பதி வாழ்வே
பரமன் பணியப் பொருள் அன்று அருளி
பகர் செம் கழநிப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
263
திருத்தணிகை குருவி என தனன தனத்தன தனன தனத்தன
தனன தனத்தன தனன தனத்தன
தனன தனத்தன தனன தனத்தன ...... தனதான
குருவி யெனப்பல கழுகு நரித்திரள்
அரிய வனத்திடை மிருக மெனப்புழு
குறவை யெனக்கரி மரமு மெனத்திரி ...... யுறவாகா
குமரி கலித்துறை முழுகி மனத்துயர்
கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி
குலைய னெனப்புலை கலிய னெனப்பலர் ...... நகையாமல்
மருவு புயத்திடை பணிக ளணப்பல
கரிப ரிசுற்றிட கலைகள் தரித்தொரு
மதன சரக்கென கனக பலக்குட ...... னதுதேடேன்
வரிய பதத்தினி னருவி யிருப்பிடம்
அமையு மெனக்கிட முனது பதச்சரண்
மருவு திருப்புக ழருள எனக்கினி ...... யருள்வாயே
விருது தனத்தன தனன தனத்தன
விதமி திமித்திமி திமித திமித்திமி
விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு ...... வெகுதாளம்
வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை
நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட
மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட ...... விடும்வேலா
அரிய திரிப்புர மெரிய விழித்தவன்
அயனை முடித்தலை யரியு மழுக்கையன்
அகில மனைத்தையு முயிரு மளித்தவ ...... னருள்சேயே
அமண ருடற்கெட வசியி லழுத்திவி
ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ
டழகு திருத்தணி மலையில் நடித்தருள் ...... பெருமாளே.
குருவி எனப் பல கழுகு நரித் திரள்
அரிய வனத்து இடை மிருகம் எனப் புழு
குறவை எனக் கரி மரமும் எனத் திரி.....உறவு ஆகா
குமரி கலித் துறை முழுகி மனத்துயர்
கொடுமை எனப் பிணி கலகமிட திரி
குலையன் எனப் புலை கலியன் எனப் பலர்.....நகையாமல்
மருவு புயத்து இடை பணிகள் அ(ண்)ணப் பல
கரி பரி சுற்றிட கலைகள் தரித்து ஒரு
மதனசரக்கு என கனக பலக்குடன்.....அது தேடேன்
வரிய பதத்தினின் அருவி இருப்பிடம்
அமையும் எனக்கு இடம் உனது பதச் சரண்
மருவு திருப்புகழ் அருள எனக்கு இனி.....அருள்வாயே
விருது தனத்தன தனன தனத்தன
விதமி திமித்திமி திமித திமித்திமி
விகிர்த டடுட்டுடு ரிரிரி எனக் குகு என.....வெகு தாளம்
வெருவ முகிழ்த்து இசை உரகன் முடித் தலை
நெறு நெறு என திசை அதிர அடைத்திட
மிகுதி கெடப் பொரு அசுரர் தெறித்திட.....விடும் வேலா
அரிய திரிப்புரம் எரிய விழித்தவன்
அயனை முடித் தலை உரியும் மழுக் கையன்
அகிலம் அனைத்தையும் உயிரும் அளித்தவன்.....அருள்சேயே
அமணர் உடல் கெட வசியில் அழுத்தி
விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு
அழகு திருத்தணி மலையில் நடித்து அருள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
264
திருத்தணிகை குலைத்து மயிர் தனத்த தனத் தனத்த தனத்
தனத்த தனத் தனத்த தனத்
தனத்த தனத் தனத்த தனத் ...... தனதான
குலைத்து மயிர்க் கலைத்து வளைக்
கழுத்து மணித் தனப்பு ரளக்
குவித்த விழிக் கயற்சு ழலப் ...... பிறைபோலக்
குனித்த நுதற் புரட்டி நகைத்
துருக்கி மயற் கொளுத்தி யிணைக்
குழைச்செ வியிற் றழைப்ப பொறித் ...... தனபாரப்
பொலித்து மதத் தரித்த கரிக்
குவட்டு முலைப் பளப்ப ளெனப்
புனைத்த துகிற் பிடித்த இடைப் ...... பொதுமாதர்
புயத்தில் வளைப் பிலுக்கில் நடைக்
குலுக்கி லறப் பசப்பி மயற்
புகட்டி தவத் தழிப்ப வருக் ...... குறவாமோ
தலத்த நுவைக் குனித்தொ ருமுப்
புரத்தை விழக் கொளுத்தி மழுத்
தரித்து புலிக் கரித்து கிலைப் ...... பரமாகத்
தரித்து தவச் சுரர்க்கண் முதற்
பிழைக்க மிடற் றடக்கு விடச்
சடைக்க டவுட் சிறக்க பொருட் ...... பகர்வோனே
சிலுத்த சுரர்க் கெலித்து மிகக்
கொளுத்தி மறைத் துதிக்க அதிற்
செழிக்க அருட் கொடுத்த மணிக் ...... கதிர்வேலா
தினைப்பு னமிற் குறத்தி மகட்
டனத்தின் மயற் குளித்து மகிழ்த்
திருத்த ணியிற் றரித்த புகழ்ப் ...... பெருமாளே.
குலைத்து மயிர்க் கலைத்து வளைக்
கழுத்து மணித் தனப்புரளக்
குவித்த விழிக் கயற்சுழல.....பிறைபோலக்
குனித்த நுதற் புரட்டி நகைத்
துருக்கி மயற் கொளுத்தி இணைக்
குழைச்செவியில் தழைப்ப பொறித்.....தனபாரப்
பொலித்து மதத் தரித்த கரிக்
குவட்டு முலைப் பளப்பளெனப்
புனைத்த துகிற் பிடித்த இடைப்.....பொதுமாதர்
புயத்தில் வளைப் பிலுக்கில் நடைக்
குலுக்கில் அறப் பசப்பி மயற்
புகட்டி தவத்து அழிப்பவருக்கு.....உறவாமோ
தலத்த நுவைக் குனித்தொரு
முப்புரத்தை விழக் கொளுத்தி மழுத்
தரித்து புலிக் கரித்துகிலைப்.....பரமாகத்
தரித்து தவச் சுரர்க்கண் முதற்
பிழைக்க மிடற்றடக்கு விடச்
சடைக்கடவுட் சிறக்க பொருள்.....பகர்வோனே
சிலுத்த சுரர்க் கெலித்து மிகக்
கொளுத்தி மறைத் துதிக்க அதிற்
செழிக்க அருட் கொடுத்த மணிக்.....கதிர்வேலா
தினைப்பு னமிற் குறத்தி மகள்
தனத்தின் மயற் குளித்து மகிழ்த்
திருத்தணியில் தரித்த புகழ்ப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
265
திருத்தணிகை குவளைக் கணை தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்
குடையிட் டகுறைப் ...... பிறையாலே
குறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக்
குயிலுக் குமினித் ...... தளராதே
இவளைத் துவளக் கலவிக் குநயத்
திறுகத் தழுவிப் ...... புயமீதெ
இணையற் றழகிற் புனையக் கருணைக்
கினிமைத் தொடையைத் ...... தரவேணும்
கவளக் கரடக் கரியெட் டலறக்
கனகக் கிரியைப் ...... பொரும்வேலா
கருதிச் செயலைப் புயனுக் குருகிக்
கலவிக் கணயத் ...... தெழுமார்பா
பவளத் தரளத் திரளக் குவைவெற்
பவையொப் புவயற் ...... புறமீதே
பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப்
பதியிற் குமரப் ...... பெருமாளே.
குவளைக் கணை தொட்ட அவனுக்கு முடிக்
குடை இட்ட குறைப்.....பிறையாலே
குறுகு உற்ற அலர்த் தெரிவைக்கு மொழிக்
குயிலுக்கும் இனித்.....தளராதே
இவளைத் துவளக் கலவிக்கு நயத்து
இறுகத் தழுவிப்.....புயம் மீதே
இணை அற்ற அழகில் புனையக் கருணைக்கு
இனிமைத் தொடையைத்.....தர வேணும்
கவளக் கரடக் கரி எட்டு அலறக்
கனகக் கிரியைப்.....பொரும் வேலா
கருதிச் செயலைப் புயனுக்கு உருகிக்
கலவிக்கு அணய அத்து.....எழு மார்பா
பவளத் தரளத் திரளக் குவை வெற்பு
அவை ஒப்பு வயல்.....புறம் மீதே
பணிலத் திரள் மொய்த்த திருத்தணிகைப்
பதியில் குமரப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
266
திருத்தணிகை கூந்தல் அவிழ்த்து தாந்தன தத்தன தத்தன தத்தன
தாந்தன தத்தன தத்தன தத்தன
தாந்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான
கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள்
பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள்
கோம்புப டைத்தமொ ழிச்சொல்ப ரத்தையர் ...... புயமீதே
கோங்குப டைத்தத னத்தைய ழுத்திகள்
வாஞ்சையு றத்தழு விச்சிலு கிட்டவர்
கூன்பிறை யொத்தந கக்குறி வைப்பவர் ...... பலநாளும்
ஈந்தபொ ருட்பெற இச்சையு ரைப்பவ
ராந்துணை யற்றழு கைக்குர லிட்டவ
ரீங்கிசை யுற்றவ லக்குண மட்டைகள் ...... பொருள்தீரில்
ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர்
பாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிட
ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிட ...... லருள்வாயே
காந்தள்ம லர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு
வேந்துகு ரக்கர ணத்தொடு மட்டிடு
காண்டிப அச்சுத னுத்தம சற்குணன் ...... மருகோனே
காங்கிசை மிக்கம றக்கொடி வெற்றியில்
வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய
கான்கனி முற்கியல் கற்பக மைக்கரி ...... யிளையோனே
தேந்தினை வித்தின ருற்றிட வெற்றிலை
வேங்கைம ரத்தெழி லைக்கொடு நிற்பவ
தேன்சொலி யைப்புண ரப்புன முற்றுறை ...... குவைவானந்
தீண்டுக ழைத்திர ளுற்றது துற்றிடு
வேங்கைத னிற்குவ ளைச்சுனை சுற்றலர்
சேர்ந்ததி ருத்தணி கைப்பதி வெற்புறை ...... பெருமாளே.
கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள்
பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள்
கோம்பு படைத்த மொழிச் சொல் பரத்தையர்.....புயம் மீதே
கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள்
வாஞ்சை உறத் தழுவிச் சிலுகு இட்டவர்
கூன் பிறை ஒத்த நகக் குறி வைப்பவர்.....பல நாளும்
ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர்
ஆம் துணை அற்ற அழுகைக் குரல் இட்டவர்
ஈங்கிசை உற்ற அவலக் குண மட்டைகள்.....பொருள் தீரில்
ஏங்கி இடக்கடையில் த(ள்)ளி வைப்பவர்
பாங்கு அகலக் கருணைக் கழல் பெற்றிட
ஈந்திலை எப்படி நற் கதி புக்கிடல்.....அருள்வாயே
காந்தள் மலர்த் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு
வேந்து குரக்கு அரணத்தொடு மட்டிடு
காண்டிப அச்சுதன் உத்தம சற்குணன்.....மருகோனே
காங்கிசை மிக்க மறக் கொடி வெற்றியில்
வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய
கான் க(ன்)னி முற்கு இயல் கற்பக மைக் கரி.....இளையோனே
தேம் தினை வித்தினர் உற்றிட வெற்று இலை
வேங்கை மரத்து எழிலைக் கொடு நிற்பவ
தேன் சொ(ல்)லியைப் புணரப் புனம் உற்று உறை.....குவை வானம்
தீண்டு கழைத் திரள் உற்றது துற்றிடு
வேங்கை தனில் குவளைச் சுனை சுற்று அலர்
சேர்ந்த திருத்தணிகைப் பதி வெற்பு உறை.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
267
திருத்தணிகை கூர்வேல் பழித்த தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன ...... தனதான
கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை
கோடா லழைத்துமல ...... ரணைமீதே
கோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துகணை
கோல்போல் சுழற்றியிடை ...... யுடைநாணக்
கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிரு
காதோ லையிற்றுவிழ ...... விளையாடுங்
காமா மயர்க்கியர்க ளூடே களித்துநம
கானூ ருறைக்கலக ...... மொழியாதோ
வீரா ணம்வெற்றிமுர சோடே தவிற்றிமிலை
வேதா கமத்தொலிகள் ...... கடல்போல
வீறாய் முழக்கவரு சூரா ரிறக்கவிடும்
வேலா திருத்தணியி ...... லுறைவோனே
மாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில்
மாபோ தகத்தையருள் ...... குருநாதா
மாலோ னளித்தவளி யார்மால் களிப்பவெகு
மாலோ டணைத்துமகிழ் ...... பெருமாளே.
கூர் வேல் பழித்த விழியாலே மருட்டி முலை
கோடால் அழைத்து மலர்.....அணை மீதே
கோபா இதழ்ப் பருக மார்போடு அணைத்து க(ண்)ணை
கோல் போல் சுழற்றி இடை.....உடை நாணக்
கார் போல் குழல் சரியவே வாய் அதட்டி இரு
காதோலை இற்று விழ.....விளையாடும்
காமா மயக்கியர்கள் ஊடே களித்து நம(ன்)
கான் ஊர் உறைக் கலகம்.....ஒழியாதோ
வீராணம் வெற்றி முரசோடே தவில் திமிலை
வேத ஆகமத்து ஒலிகள்.....கடல் போல
வீறாய் முழக்க வரு(ம்) சூரார் இறக்க விடும்
வேலா திருத்தணியில்.....உறைவோனே
மாரோன் இறக்க நகை தாதா திரு செவியில்
மா போதகத்தை அருள்.....குரு நாதா
மாலோன் அளித்த வ(ள்)ளியார் மால் களிப்ப வெகு
மாலோடு அணைத்து மகிழ்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
268
திருத்தணிகை கொந்துவார் குரவடி தந்து தானன தனதன தனதன
தந்து தானன தனதன தனதன
தந்து தானன தனதன தனதன ...... தனதான
கொந்து வார்குர வடியினு மடியவர்
சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல
கொண்ட வேதநன் முடியினு மருவிய ...... குருநாதா
கொங்கி லேர்தரு பழநியி லறுமுக
செந்தில் காவல தணிகையி லிணையிலி
கொந்து காவென மொழிதர வருசம ...... யவிரோத
தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்
சந்தி யாதது தனதென வருமொரு
சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து ...... விரைநீபச்
சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய
கிண்கி ணீமுக விதபத யுகமலர்
தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே
சிந்து வாரமு மிதழியு மிளநவ
சந்த்ர ரேகையு மரவமு மணிதரு
செஞ்ச டாதரர் திருமக வெனவரு ...... முருகோனே
செண்ப காடவி யினுமித ணினுமுயர்
சந்த னாடவி யினுமுறை குறமகள்
செம்பொ னூபுர கமலமும் வளையணி ...... புதுவேயும்
இந்து வாண்முக வனசமு ம்ருகமத
குங்கு மாசல யுகளமு மதுரித
இந்த ளாம்ருத வசனமு முறுவலு ...... மபிராம
இந்த்ர கோபமு மரகத வடிவமு
மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய ...... பெருமாளே.
கொந்துவார் குரவடியினும் அடியவர்
சிந்தை வாரிஜ நடுவினும் நெறிபல
கொண்ட வேதநன் முடியினும் மருவிய.....குருநாதா
கொங்கி லேர்தரு பழநியில் அறுமுக
செந்தில் காவல தணிகையி லிணையிலி
கொந்து காவென மொழிதர வரு.....சமயவிரோத
தந்த்ரவாதிகள் பெறவரியது பிறர்
சந்தியாதது தனதென வருமொரு
சம்ப்ர தாயமும் இதுவென வுரைசெய்து.....விரைநீப
சஞ்சரீகரிகரம் முரல் தமனிய
கிண்கிணீமுக இதபத யுகமலர்
தந்த பேரருள் கனவிலு நனவிலு.....மறவேனே
சிந்து ஆரமும் இதழிய இளநவ
சந்த்ர ரேகையும் அரவமும் அணிதரு
செஞ் சடாதரர் திருமக வெனவரு.....முருகோனே
செண்பக அடவியினும் இதணினும் உயர்
சந்தனஅடவியினும் உறை குறமகள்
செம்பொன் நூபுர கமலமும் வளையணி.....புது வேயும்
இந்து வாண்முக வனசமும் ம்ருகமத
குங்கு மாசல யுகளமும் மதுரித
இந்தள அம்ருத வசனமும் முறுவலும்.....அபிராம
இந்த்ர கோபமும் மரகத வடிவமும்
இந்த்ர சாபமும் இருகுழை யொடுபொரும்
இந்த்ர நீலமும் மடலிடை யெழுதிய.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=EUQa_O0VhU8
Add (additional) Audio/Video Link
269
திருத்தணிகை சினத்தவர் முடிக்கும் தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் ...... தனதான
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும்.....சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென்று.....அறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும்.....பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புகழ் உரைக்குஞ்.....செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந்தன.....பேரி
தடுட்டுடு டுடுட்டுண் டென துடி முழக்கும்
தளத்துட னடக்கும்.....கொடுசூரர்
சினத்தையும் உடற்சங் கரித்தம லைமுற்றும்
சிரித்தெரி கொளுத்தும்.....கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்து எண்
திருத்தணி யிருக்கும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Wp9531hk6vM
https://www.youtube.com/watch?v=SiyeBX6FaO0
https://www.youtube.com/watch?v=ZAqUg2gH1ok
Add (additional) Audio/Video Link
270
திருத்தணிகை சினத் திலத் தினை தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன ...... தனதான
சினத்தி லத்தினை சிறுமண லளவுடல்
செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்
செனித்த தெத்தனை திரள்கய லெனபல ...... வதுபோதா
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை
செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு
செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ ...... தளவேதோ
மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி
கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்
வதைத்த தெத்தனை யளவிலை விதிகர ...... மொழியாமல்
வகுத்த தெத்தனை மசகனை முருடனை
மடைக்கு லத்தனை மதியழி விரகனை
மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் ...... புரிவாயே
தனத்த னத்தன தனதன தனதன
திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
தகுத்த குத்தகு தகுதகு தகுதகு ...... தகுதீதோ
தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி
தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
தமித்த மத்தள தமருக விருதொலி ...... கடல்போலச்
சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய
திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை
தெறித்தி டக்கழு நரிதின நிணமிசை ...... பொரும்வேலா
செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ
முநிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி
திருத்த ணிப்பதி மருவிய குறமகள் ...... பெருமாளே.
சி(ன்)னத் திலத் தினை சிறுமணல் அளவுடல்
செறித்த(து) எத்தனை சிலைகட லினிலுயிர்
செனித்த தெத்தனை திரள்கய லெனபல.....அதுபோதா
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை
செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு
செடத்தில் எத்தனை நமனுயிர் பறிகொள்வது.....அளவேதோ
மனத்தி லெத்தனை நினை கவடுகள் குடி
கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்
வதைத்த தெத்தனை அளவிலை விதிகரம்.....ஒழியாமல்
வகுத்த தெத்தனை மசகனை முருடனை
மடைக்குலத்தனை மதியழி விரகனை
மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள்.....புரிவாயே
தனத்த னத்தன தனதன தனதன
திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
தகுத்த குத்தகு தகுதகு தகுதகு ...... தகுதீதோ
தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி
தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
தமித்த மத்தள தமருக விருதொலி.....கடல்போல
சினத்தமர்க்கள செருதிகழ் குருதிய
திமிழ்த்திட கரி யசுரர்கள் பரி சிலை
தெறித்திட கழு நரிதின நிணமிசை.....பொரும்வேலா
செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ
முநிக்கணத்தவர் மதுமலர் கொடுபணி
திருத்தணிப்பதி மருவிய குறமகள்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=vTumuZ_cWfw
Add (additional) Audio/Video Link
271
திருத்தணிகை சொரியும் முகிலை தனன தனனத் தனன தனனத்
தனன தனனத் ...... தனதான
சொரியு முகிலைப் பதும நிதியைச்
சுரபி தருவைச் ...... சமமாகச்
சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்
சுமட ரருகுற் ...... றியல்வாணர்
தெரியு மருமைப் பழைய மொழியைத்
திருடி நெருடிக் ...... கவிபாடித்
திரியு மருள்விட் டுனது குவளைச்
சிகரி பகரப் ...... பெறுவேனோ
கரிய புருவச் சிலையும் வளையக்
கடையில் விடமெத் ...... தியநீலக்
கடிய கணைபட் டுருவ வெருவிக்
கலைகள் பலபட் ...... டனகானிற்
குரிய குமரிக் கபய மெனநெக்
குபய சரணத் ...... தினில்வீழா
உழையின் மகளைத் தழுவ மயலுற்
றுருகு முருகப் ...... பெருமாளே.
சொரியும் முகிலைப் பதும நிதியைச்
சுரபி தருவைச்.....சமமாகச்
சொ(ல்)லியும் மனம் எள் (அத்)தனையும் நெகிழ்வு இல்
சுமடர் அருகு உற்று.....இயல் வாணர்
தெரியும் அருமைப் பழைய மொழியைத்
திருடி நெருடிக்.....கவி பாடி
திரியு மருள் விட்டு உனது குவளைச்
சிகரி பகரப்.....பெறுவேனோ
கரிய புருவச் சிலையும் வளைய
கடையில் விடம் மெத்திய.....நீலக்
கடிய கணை பட்டு உருவ வெருவிக்
கலைகள் பல பட்டன.....கானிற்கு
உரிய குமரிக்கு அபயம் என நெக்கு
உபய சரணத்.....தினில் வீழா
உழையின் மகளைத் தழுவ மயல் உற்று
உருகு(ம்) முருகப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
272
திருத்தணிகை தாக்கு அமருக்கு தாத்தன தத்தன தானன தானன
தாத்தன தத்தன தானன தானன
தாத்தன தத்தன தானன தானன ...... தனதான
தாக்கம ருக்கொரு சாரையை வேறொரு
சாக்ஷிய றப்பசி யாறியை நீறிடு
சாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு ...... தவமூழ்குந்
தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்
போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்
சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரை ...... தடுமாறிப்
போக்கிட மற்றவ்ரு தாவனை ஞானிகள்
போற்றுத லற்றது ரோகியை மாமருள்
பூத்தம லத்ரய பூரியை நேரிய ...... புலையேனைப்
போக்கிவி டக்கட னோஅடி யாரொடு
போய்ப்பெறு கைக்கிலை யோகதி யானது
போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள் ...... புரிவாயே
மூக்கறை மட்டைம காபல காரணி
சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி
மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி ...... முழுமோடி
மூத்தவ ரக்கனி ராவண னோடியல்
பேற்றிவி டக்கம லாலய சீதையை
மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு ...... முகிலேபோய்
மாக்கன சித்திர கோபுர நீள்படை
வீட்டிலி ருத்திய நாளவன் வேரற
மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் ...... மருகோனே
வாச்சிய மத்தள பேரிகை போல்மறை
வாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனை
வாய்த்ததி ருத்தணி மாமலை மேவிய ...... பெருமாளே.
தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறொரு
சாக்ஷியற பசி யாறியை நீறிடு
சாஸ்த்ர வழிக்கு அதி தூரனை வேர்விழு.....தவமூழ்கும்
தாற்பர்யம் அற்று உழல் பாவியை நாவலர்
போல் பரிவுற்று உனையே கருதாது இகல்
சாற்று தமிழ்க்குரை ஞாளியை நாள்வரை.....தடுமாறி
போக்கிடமற்ற வ்ருதாவனை ஞானிகள்
போற்றுதல் அற்ற துரோகியை மாமருள்
பூத்த மலத்ரய பூரியை நேரிய.....புலையேனை
போக்கிவி டக் கடனோ கதியானது அடியாரொடு
போய் பெறுகைக்கு இலையோ கதியானது
போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயிலா அருள்.....புரிவாயே
மூக்கறை மட்டை மகாபல காரணி
சூர்ப்பநகைப் படு மூளி உதாசனி
மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி.....முழுமோடி
மூத்த அரக்கன் இராவணனோடு இயல்
பேற்றிவிட கமலாலய சீதையை
மோட்டன் வளைத்து ஒரு தேர்மிசையே கொடு.....முகிலேபோய்
மாக்கன சித்திர கோபுர நீள்படை
வீட்டில் இருத்திய நாள் அவன் வேரற
மார்க்க முடித்த விலாளிகள் நாயகன்.....மருகோனே
வாச்சிய மத்தள பேரிகை போல் மறை
வாழ்த்த மலர்க்கழு நீர்தரு நீள்சுனை
வாய்த்த திருத்தணி மாமலை மேவிய.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=SEbCnEfCkYk
Add (additional) Audio/Video Link
273
திருத்தணிகை திருட்டு நாரிகள் தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான
திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்
வறட்டு மோடியி னித்தந டிப்பவர்
சிறக்க மேனியு லுக்கிம டக்குகண் ...... வலையாலே
திகைத்து ளாவிக ரைத்தும னத்தினில்
இதத்தை யோடவி டுத்தும யக்கிடு
சிமிட்டு காமவி தத்திலு முட்பட ...... அலைவேனோ
தரித்து நீறுபி தற்றிடு பித்தனு
மிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு
சமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு ...... முருகோனே
சமப்ர வீணம தித்திடு புத்தியில்
இரக்க மாய்வரு தற்பர சிற்பர
சகத்ர யோகவி தக்ஷண தெக்ஷிண ...... குருநாதா
வெருட்டு சூரனை வெட்டிர ணப்பெலி
களத்தி லேகழு துக்கிரை யிட்டிடர்
விடுத்த கூளிகள் தித்திகு தித்தென ...... விளையாட
விதித்த வீரச மர்க்கள ரத்தமு
மிரற்றி யோடவெ குப்ரள யத்தினில்
விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய ...... மறவோனே
பெருக்க மோடுச ரித்திடு மச்சமு
முளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடு
பிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர் ...... கழுநீரின்
பிணித்த போதுவெ டித்துர சத்துளி
கொடுக்கு மோடைமி குத்ததி ருத்தணி
பிறக்க மேவுற அத்தல முற்றுறை ...... பெருமாளே.
திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்
வறட்டு மோடியில் நித்த(ம்) நடிப்பவர்
சிறக்க மேனி உலுக்கி மடக்கு(ம்) கண்.....வலையாலே
திகைத்து உள் ஆவி கரைத்து மனத்தினில்
இதத்தை ஓட விடுத்து மயக்கிடு(ம்)
சிமிட்டு காம விதத்திலும் உட்பட.....அலைவேனோ
தரித்து நீறு பிதற்றிடு(ம்) பித்தனும்
இதத்து மா குடிலைப் பொருள் சொற்றிடு
சமர்த்த பால எனப் புகழ் பெற்றிடு.....முருகோனே
சமப்ரவீண மதித்திடு புத்தியில்
இரக்கமாய் வரு தற்பர சித் பர
சகத்ர யோக விதக்ஷண தெக்ஷிண.....குருநாதா
வெருட்டு சூரனை வெட்டி ரணப் பெலி
களத்திலே கழுதுக்கு இரை இட்டு இடர்
விடுத்த கூளிகள் தித்திகு தித்தென.....விளையாட
விதித்த வீர சமர்க்கள ரத்தமும்
இரற்றி ஓட வெகு ப்ரளயத்தினில்
விலக்கி வேல் செருகிட்டு உயிர் மொக்கிய.....மறவோனே
பெருக்கமோடு சரித்திடு மச்சமும்
உளத்தின் மா மகிழ் பெற்றிட வற்றிடு
பிளப்பு வாயிடை முப்பொழுதத்தும் ஒர்.....கழு நீரின்
பிணித்த போது வெடித்து ரசத் துளி
கொடுக்கும் ஓடை மிகுத்த திருத்தணி
பிறக்க மேவுற அத்தலம் உற்று உறை.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
274
திருத்தணிகை துப் பார் அப்பு தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் ...... தனதான
துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்
துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்
இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே
எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்
தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே
தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா
அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே
அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.
துப் பார் அப்பு ஆடல்தீ மொய்க்கால்
சொல் பா வெளி முக்.....குணமோகம்
துற்றாய பீறல் தோலிட்டே
சுற்றா மதனப்.....பிணிதோயும்
இப் பாவக் காயத்து ஆசைப்பாடு
எற்றே உலகிற்.....பிறவாதே
எத்தார் வித்தாரத்தே கிட்டா
எட்டா அருளைத்.....தரவேணும்
தப்பாமற் பாடிச் சேவிப்பார்
தத்தாம் வினையைக்.....களைவோனே
தற்கு ஆழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத்.....தனிவேலா
அப் பாகைப் பாலைப் போல் சொல்
காவற் பாவை தனத்.....தணைவோனே
அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப்.....பெருமாளே
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=-F1W42FtQvs
Add (additional) Audio/Video Link
275
திருத்தணிகை தொக்கறாக் குடில் தத்தனாத் தனன தத்தனாத் தனன
தத்தனாத் தனன ...... தனதான
தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக
துக்கமாற் கடமு ...... மலமாயை
துற்றகாற் பதலை சொற்படாக் குதலை
துப்பிலாப் பலச ...... மயநூலைக்
கைக் கொளாக் கதறு கைக்கொளாக் கையவ
லப்புலாற் றசைகு ...... ருதியாலே
கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல
சட்டவாக் கழிவ ...... தொருநாளே
அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
அர்ச்சியாத் தொழுமு ...... நிவனாய
அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல்
வெற்பபார்ப் பதிந ...... திகுமாரா
இக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுத
வத்தினோர்க் குதவு ...... மிளையோனே
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய ...... பெருமாளே.
தொக்கறாக் குடில் அசுத்தமேற்ற சுக
துக்கமாற் கடம்மு.....மலமாயை
துற்றகாற் பதலை சொற்படாக் குதலை
துப்பிலாப் பல.....சமயநூலை
கைக் கொளாக் கதறு கைக்கொள் ஆக்கை
அவலப் புலாற் றசை.....குருதியாலே
கட்டுகூட்டு அருவருப்பு வேட்டுழல
சட்டவாக்கு அழிவது.....ஒருநாளே
அக்கு அராப் பொடியின் மெய்க்கு இடாக் குரவர்
அர்ச்சியாத் தொழு.....முநிவனாய
அப்ப போர்ப் பனிரு வெற்ப பூத் தணியல்
வெற்ப பார்ப்பதி நதி.....குமாரா
இக்கண் நோக்குறில் நிருத்த நோக்குறு
தவத்தினோர்க்கு உதவும்.....இளையோனே
எத்திடார்க்கு அரிய முத்தபாத் தமிழ்கொடு
எத்தினார்க்கு எளிய.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Nqji7QPyB2k
Add (additional) Audio/Video Link
276
திருத்தணிகை தொடத்துளக்கிகள் தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன ...... தனதான
தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள்
குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்
சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள் ...... முழுமோசந்
துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்
முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள்
துமித்த மித்திரர் விலைமுலை யினவலை ...... புகுதாமல்
அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள்
தரித்த வித்ரும நிறமென வரவுட
னழைத்து சக்கிர கிரிவளை படிகொடு ...... விளையாடி
அவத்தை தத்துவ மழிபட இருளறை
விலக்கு வித்தொரு சுடரொளி பரவந
லருட்பு கட்டியு னடியிணை யருளுவ ...... தொருநாளே
படைத்த னைத்தையும் வினையுற நடனொடு
துடைத்த பத்தினி மரகத சொருபியொர்
பரத்தி னுச்சியி னடநவி லுமையரு ...... ளிளையோனே
பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர்
தொடுத்த சக்கிர வளைகர மழகியர்
படிக்க டத்தையும் வயிறடை நெடியவர் ...... மருகோனே
திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட
கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில்
திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு ...... மயில்வீரா
தினைப்பு னத்திரு தனகிரி குமரிநல்
குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ்
திருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறு ...... பெருமாளே.
தொடத் துளக்கிகள் அ(ப்)பகட நினைவிகள்
குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்
சுதைச் சிறுக்கிகள் குசலிகள் இசலிகள்.....முழு மோசம்
துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்
முழுப் புரட்டிகள் நழுவிகள் மழுவிகள்
துமித்த மித்திரர் விலை முலை இன வலை.....புகுதாமல்
அடைத்தவர்க்கு இயல் சரசிகள் விரசிகள்
தரித்த வித்ரும நிறம் என வர உடன்
அழைத்து சக்கிர கிரி வளை படி கொடு.....விளையாடி
அவத்தை தத்துவம் அழிபட இருளறை
விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ
ந(ல்)ல அருள் புகட்டி உன் அடி இணை அருளுவது.....ஒரு நாளே
படைத்து அனைத்தையும் வினை உற நடனோடு
துடைத்த பத்தினி மரகத சொருபி ஓர்
பரத்தின் உச்சியில் நடம் நவில் உமை அருள்.....இளையோனே
பகைத்த அரக்கர்கள் யமன் உலகு உற அமர்
தொடுத்த சக்கிர வளை கரம் அழகியர்
படிக் கடத்தையும் வயிறு அடை நெடியவர்.....மருகோனே
கடல் திடுக்கிட அசுரர்கள் முறிபட
கொளுத் திசைக் கிரி பொடிபட சுடர் அயில்
திருத்தி விட்டு ஒரு நொடியினில் வலம் வரு.....மயில் வீரா
தினைப் புனத்து இரு தன கிரி குமரி நல்
குறத்தி முத்தொடு சசி மகளொடு புகழ்
திருத்தணிப் பதி மலை மிசை நிலை பெறு(ம்).....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
277
திருத்தணிகை நிலையாத சமுத்திர தனதான தனத்தன தான தனதான தனத்தன தான
தனதான தனத்தன தான ...... தனதான
நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி
நிசமான தெனப்பல பேசி ...... யதனூடே
நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி
நினைவால்நி னடித்தொழில் பேணி ...... துதியாமல்
தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி
சலமான பயித்திய மாகி ...... தடுமாறித்
தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி
தலைமீதில் பிழைத்திட வேநி ...... னருள்தாராய்
கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத
கவினாரு புயத்திலு லாவி ...... விளையாடிக்
களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை
கடனாகு மிதுக்கன மாகு ...... முருகோனே
பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
பவரோக வயித்திய நாத ...... பெருமாளே.
நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி
நிசமானதெனப் பல பேசி....அதனூடே
நெடுநாளும் உழைப்புளதாகி பெரியோர்களிடைக் கரவாகி
நினைவால்நி னடித்தொழில் பேணி.....துதியாமல்
தலையான வுடற்பிணி யூறி பவநோயின் அலைப்பல வேகி
சலமான பயித்திய மாகி.....தடுமாறித்
தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்து உனையோதி
தலைமீதில் பிழைத்திடவே.....நினருள்தாராய்
கலியாண சுபுத்திரனாக குறமாது தனக்கு விநோத
கவினாரு புயத்தில் உலாவி.....விளையாடி
களிகூரும் உனைத்துணை தேடும் அடியேனை சுகப்பட வேவை
கடனாகும் இதுக்கன மாகு.....முருகோனே
பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்து உடன் வாழ.....அருள்வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
பவரோக வயித்திய நாத.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=zzOZjA-Q_8g
Add (additional) Audio/Video Link
278
திருத்தணிகை நினைத்தது எத்தனை தனத்த தத்தனத் ...... தனதான
தனத்த தத்தனத் ...... தனதான
நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்
நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற்
கனத்த தத்துவமுற் ...... றழியாமற்
கதித்த நித்தியசித் ...... தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே
மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே
செனித்த புத்திரரிற் ...... சிறியோனே
திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.
நினைத்தது எத்தனையில் தவறாமல்
நிலைத்த புத்திதனைப்.....பிரியாமல்
கனத்த தத்துவம் உற்றழியாமல்
கதித்த நித்தியசித்.....தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக்கு எளியோனே
மதித்த முத்தமிழில்.....பெரியோனே
செனித்த புத்திரரிற் சிறியோனே
திருத்தணிப்பதியிற்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=0zw9nTKXVxo
https://www.youtube.com/watch?v=XavwwIVUH1E
Add (additional) Audio/Video Link
279
திருத்தணிகை பகல் இராவினும் தனன தானனம் தனன தானனம்
தனன தானனம் ...... தனதான
பகலி ராவினுங் கருவி யாலனம்
பருகி யாவிகொண் ...... டுடல்பேணிப்
பழைய வேதமும் புதிய நூல்களும்
பலபு ராணமுஞ் ...... சிலவோதி
அகல நீளமென் றளவு கூறரும்
பொருளி லேயமைந் ...... தடைவோரை
அசடர் மூகரென் றவல மேமொழிந்
தறிவி லேனழிந் ...... திடலாமோ
சகல லோகமும் புகல நாடொறுஞ்
சறுகி லாதசெங் ...... கழுநீருந்
தளவு நீபமும் புனையு மார்பதென்
தணிகை மேவுசெங் ...... கதிர்வேலா
சிகர பூதரந் தகர நான்முகன்
சிறுகு வாசவன் ...... சிறைமீளத்
திமிர சாகரங் கதற மாமரஞ்
சிதற வேல்விடும் ...... பெருமாளே.
பகலி ராவினுங் கருவியால் அ(ன்)னம்
பருகி யாவிகொண்டு.....உடல்பேணி
பழைய வேதமும் புதிய நூல்களும்
பல புராணமுஞ்.....சிலவோதி
அகல நீளமென்று அளவு கூறரும்
பொருளிலே அமைந்து.....அடைவோரை
அசடர் மூகரென்று அவலமே மொழிந்து
அறிவிலேன் அழிந்.....திடலாமோ
சகல லோகமும் புகல நாடொறும்
சறுகிலாத செங்.....கழுநீரும்
தளவு நீபமும் புனையு மார்ப தென்
தணிகை மேவு செங்.....கதிர்வேலா
சிகர பூதரந் தகர நான்முகன்
சிறுகு வாசவன்.....சிறைமீள
திமிர சாகரங் கதற மாமரஞ்
சிதற வேல்விடும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=dSU6jG-cHW0
Add (additional) Audio/Video Link
280
திருத்தணிகை பருத்தபற் சிரத்தினை தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்
பரித்தவப் பதத்தினைப் ...... பரிவோடே
படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்
பசிக்குடற் கடத்தினைப் ...... பயமேவும்
பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்
பிணித்தமுக் குறத்தொடைப் ...... புலனாலும்
பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
குறிக்கருத் தெனக்களித் ...... தருள்வாயே
கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்
கழித்தமெய்ப் பதத்தில்வைத் ...... திடுவீரா
கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்
கதித்தநற் றிருப்புயத் ...... தணைவோனே
செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச்
சிரித்தெரித் தநித்தர்பொற் ...... குமரேசா
சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்
சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே.
பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினை
பரித்தவப் பதத்தினை.....பரிவோடே
படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினை
பசிக்குடற் கடத்தினைப்.....பயமேவும்
பெருத்தபித் துருத்தனை கிருத்திமத் துருத்தியை
பிணித்தமுக் குறத்தொடு ஐப்.....புலனாலும்
பிணித்தவிப் பிணிப்பையை பொறுத்து அமிழ்ப் பிறப்பறக்
குறிக்கருத்து எனக்களித்.....தருள்வாயே
கருத்திலுற் றுரைத்தபத்தரை தொறுத் திருக்கரைக்
கழித்த மெய்ப் பதத்தில்வைத்.....திடுவீரா
கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியை
கதித்தநற் றிருப்புயத்.....தணைவோனே
செருத்தெறுத் தெதிர்த்த முப் புரத்து உரத்தரக்கரை
சிரித்தெரித்த நித்தர்பொற்.....குமரேசா
சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசை
சிறப்புடைத் திருத்தணிப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=eCKPMG3A8_Y
Add (additional) Audio/Video Link
281
திருத்தணிகை பழமை செப்பிய தனன தத்தன தத்தன தத்தன
தனன தத்தன தத்தன தத்தன
தனன தத்தன தத்தன தத்தன ...... தனதான
பழமை செப்பிய ழைத்தித மித்துடன்
முறைம சக்கிய ணைத்துந கக்குறி
படஅ ழுத்திமு கத்தைமு கத்துற ...... வுறவாடிப்
பதறி யெச்சிலை யிட்டும ருத்திடு
விரவு குத்திர வித்தைவி ளைப்பவர்
பலவி தத்திலு மற்பரெ னச்சொலு ...... மடமாதர்
அழிதொ ழிற்குவி ருப்பொடு நத்திய
அசட னைப்பழி யுற்றஅ வத்தனை
அடைவு கெட்டபு ரட்டனை முட்டனை ...... அடியேனை
அகில சத்தியு மெட்டுறு சித்தியு
மெளிதெ னப்பெரு வெட்டவெ ளிப்படு
மருண பொற்பத முற்றிட வைப்பது ...... மொருநாளே
குழிவி ழிப்பெரு நெட்டல கைத்திரள்
கரண மிட்டுந டித்தமி தப்படு
குலிலி யிட்டக ளத்திலெ திர்த்திடு ...... மொருசூரன்
குருதி கக்கிய திர்த்துவி ழப்பொரு
நிசிச ரப்படை பொட்டெழ விக்ரம
குலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித ...... மயில்வீரா
தழையு டுத்தகு றத்திப தத்துணை
வருடி வட்டமு கத்தில தக்குறி
தடவி வெற்றிக தித்தமு லைக்குவ ...... டதன்மீதே
தரள பொற்பணி கச்சுவி சித்திரு
குழைதி ருத்திய ருத்திமி குத்திடு
தணிம லைச்சிக ரத்திடை யுற்றருள் ...... பெருமாளே.
பழமை செப்பி அழைத்து இத மித்துடன்
முறை மசக்கி அணைத்து நகக் குறி
பட அழுத்தி முகத்தை முகத்து.....உறவாடி
பதறி எச்சிலை இட்டு மருத்து இடு
விரவு குத்திர வித்தை விளைப்பவர்
பல விதத்திலும் அற்பர் எனச் சொல்லும்.....மட மாதர்
அழி தொழிற்கு விருப்பொடு நத்திய
அசடனைப் பழி உற்ற அவத்தனை
அடைவு கெட்ட புரட்டனை முட்டனை.....அடியேனை
அகில சத்தியும் எட்டுறு சித்தியும்
எளிது எனப் பெரு வெட்ட வெளிப்படும்
அருண பொன் பதம் உற்றிட வைப்பதும்.....ஒரு நாளே
குழி விழிப் பெரு நெட்டு அலகைத் திரள்
கரணம் இட்டு நடித்து அமிதப்படு
குலிலி இட்ட களத்தில் எதிர்த்திடும்.....ஒரு சூரன்
குருதி கக்கி அதிர்த்து விழப் பொரு
நிசிசரப் படை பொட்டு எழ விக்ரம
குலிச சத்தியை விட்டு அருள் கெர்ச்சித.....மயில் வீரா
தழை உடுத்த குறத்தி பதத் துணை
வருடி வட்ட முக(த்து) திலதக் குறி
தடவி வெற்றி கதித்த முலைக் குவடு.....அதன் மீதே
தரள பொன் பணி கச்சு விசித்து இரு
குழை திருத்தி அருத்தி மிகுத்திடு
தணி மலைச் சிகரத்திடை உற்று அருள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
282
திருத்தணிகை புருவ நெறித்து தனதன தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் ...... தனதான
புருவநெ றித்துக் குறுவெயர் வுற்றுப்
புளகித வட்டத் ...... தனமானார்
பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப்
புரளும சட்டுப் ...... புலையேனைக்
கருவிழி யுற்றுக் குருமொழி யற்றுக்
கதிதனை விட்டிட் ...... டிடுதீயக்
கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக்
கழல்கள்து திக்கக் ...... கருதாதோ
செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத்
திரைகட லுட்கப் ...... பொரும்வேலா
தினைவன முற்றுக் குறவர் மடப்பைக்
கொடிதன வெற்பைப் ...... புணர்மார்பா
பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப்
பெரிகைமு ழக்கப் ...... புவிமீதே
ப்ரபலமுள் சுத்தத் தணிமலை யுற்றுப்
ப்ரியமிகு சொக்கப் ...... பெருமாளே.
புருவம் நெறித்துக் குறு வெயர்வு உற்றுப்
புளகித வட்டத்.....தன மானார்
பொரு விழியில் பட்டவரொடு கட்டிப்
புரளும் அசட்டுப்.....புலையேனை
கரு வழி உற்றுக் குரு மொழி அற்றுக்
கதி தனை விட்டிட்டிடு.....தீயக்
கயவனை வெற்றிப் புகழ் திகழ் பத்மக்
கழல்கள் துதிக்கக்.....கருதாதோ
செரு(ம்) அசுரப் பொய்க் குலம் அது கெட்டுத்
திரை கடல் உட்கப்.....பொரும் வேலா
தினை வனம் உற்றுக் குறவர் மடப்பைங்
கொடி தன வெற்பைப்.....புணர் மார்பா
பெருகிய நித்தச் சிறு பறை கொட்டிப்
பெரிகை முழக்கப்.....புவி மீதே
ப்ரபலம் உள் சுத்தத் தணி மலை உற்று
ப்ரியம் மிகு சொக்கப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
283
திருத்தணிகை பூசலிட்டு தானனத் தத்த தத்த தானனத் தத்த தத்த
தானனத் தத்த தத்த ...... தனதான
பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்த
போர்விடத் தைக்கெ டுத்து ...... வடிகூர்வாள்
போலமுட் டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொ ளைத்து
போகமிக் கப்ப ரிக்கும் ...... விழியார்மேல்
ஆசைவைத் துக்க லக்க மோகமுற் றுத்து யர்க்கு
ளாகிமெத் தக்க ளைத்து ...... ளழியாமே
ஆரணத் துக்க ணத்து னாண்மலர்ப் பொற்ப தத்தை
யான்வழுத் திச்சு கிக்க ...... அருள்வாயே
வாசமுற் றுத்த ழைத்த தாளிணைப் பத்த ரத்த
மாதர்கட் கட்சி றைக்கு ...... ளழியாமே
வாழ்வுறப் புக்கி ரத்ன ரேகையொக் கச்சி றக்கு
மாமயிற் பொற்க ழுத்தில் ...... வரும்வீரா
வீசுமுத் துத்தெ றிக்க வோலைபுக் குற்றி ருக்கும்
வீறுடைப் பொற்கு றத்தி ...... கணவோனே
வேலெடுத் துக்க ரத்தி னீலவெற் பிற்ற ழைத்த
வேளெனச் சொற்க ருத்தர் ...... பெருமாளே.
பூசல் இட்டுச் சரத்தை நேர் கழித்துப் பெருத்த
போர் விடத்தைக் கெடுத்து.....வடி கூர் வாள்
போல முட்டி குழைக்குள் ஓடி வெட்டித் தொளைத்து
போக(ம்) மிக்கப் பரிக்கும்.....விழியார் மேல்
ஆசை வைத்துக் கலக்க மோகம் உற்றுத் துயர்க்குள்
ஆகி மெத்தக் களைத்து உள்.....அழியாமே
ஆரணத்துக் கண் நத்து நாண் மலர்ப் பொன் பதத்தை
யான் வழுத்திச் சுகிக்க.....அருள்வாயே
வாசம் உற்றுத் தழைத்த தாள் இணைப் பத்தர் அத்த
மாதர்கள் கண் சிறைக்குள்.....அழியாமே
வாழ்வு உறப் புக்கி ரத்ன ரேகை ஒக்கச் சிறக்கும்
மா மயில் பொன் கழுத்தில்.....வரும் வீரா
வீசும் முத்துத் தெறிக்க ஓலை புக்கு உற்று இருக்கும்
வீறு உடைப் பொன் குறத்தி.....கணவோனே
வேல் எடுத்துக் கரத்தில் நீல வெற்பில் தழைத்த
வேள் எனச் சொல் கருத்தர்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
284
திருத்தணிகை பெருக்க உபாயம் தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான
பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம்
ப்ரபுத்தன பாரங் ...... களிலேசம்
ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும்
ப்ரியக்கட லூடுந் ...... தணியாத
கருக்கட லூடுங் கதற்றும நேகங்
கலைக்கட லூடுஞ் ...... சுழலாதே
கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும்
கழற்புணை நீதந் ...... தருள்வாயே
தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ்
சதுர்த்தச லோகங் ...... களும்வாழச்
சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ்
சளப்பட மாவுந் ...... தனிவீழத்
திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ்
செருக்கு மயூரந் ...... தனில்வாழ்வே
சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.
பெருக்க உபாயம் கருத்து உடையோர் தம்
ப்ரபுத் தன பாரங்.....களிலே
சம்ப்ரமத்துட(ன்) நாளும் ப்ரமித்து இருள் கூரும்
ப்ரியக் கடல் ஊடும்.....தணியாத
கருக்கடல் ஊடும் கதற்றும் அநேகம்
கலைக் கடல் ஊடும்.....சுழலாதே
கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும்
கழல் புணை நீ தந்து.....அருள்வாயே
தருக்கிய வேதன் சிறைப் பட நாளும்
சதுர்த் தச லோகங்களும்.....வாழச்
சமுத்திரம் ஏழும் குலக் கிரி ஏழும்
சளப்பட மாவும்.....தனி வீழ
திருக் கையில் வேல் ஒன்று எடுத்து அமர் ஆடும்
செருக்கு மயூரம்.....தனில் வாழ்வே
சிறப்பொடு ஞானத் தமிழ் த்ரய(ம்) நீடும்
திருத்தணி மேவும்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
285
திருத்தணிகை பொரியப் பொரிய தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்
துகளிற் புதையத் ...... தனமீதே
புரளப் புரளக் கறுவித் தறுகட்
பொருவிற் சுறவக் ...... கொடிவேள்தோள்
தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச்
செயலற் றனள்கற் ...... பழியாதே
செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்
தெரிவைக் குணர்வைத் ...... தரவேணும்
சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச்
சுரருக் குரிமைப் ...... புரிவோனே
சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச்
சுருதிப் பொருளைப் ...... பகர்வோனே
தரிகெட் டசுரப் படைகெட் டொழியத்
தனிநெட் டயிலைத் ...... தொடும்வீரா
தவளப் பணிலத் தரளப் பழனத்
தணிகைக் குமரப் ...... பெருமாளே.
பொரியப் பொரியப் பொலி முத்து வடத்
துகளில் புதை அத்.....தனம் மீதே
புரளப் புரளக் கறுவித் தறு கண்
பொரு வில் சுறவக்.....கொடி வேள் தோள்
தெரி வைக்கு(ம்) அரிவைப் பரவைக்கு உருகிச்
செயல் அற்றனள் கற்பு.....அழியாதே
செறி உற்று அணையில் துயில் உற்று அருமைத்
தெரிவைக்கு உணர்வைத்.....தர வேணும்
சொரி கற்பக நல் பதியைத் தொழு கைச்
சுரருக்கு உரிமைப்.....புரிவோனே
சுடர் பொன் கயிலைக் கடவுட்கு இசையச்
சுருதிப் பொருளைப்.....பகர்வோனே
தரி கெட்டு அசுரப் படை கெட்டு ஒழியத்
தனி நெட்டு அயிலைத்.....தொடும் வீரா
தவளப் பணிலத் தரளப் பழனத்
தணிகைக் குமரப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
286
திருத்தணிகை பொருவிக் கந்தொடு தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத்
தனனத் தந்ததனத் ...... தனதான
பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப்
புதுமைப் புண்டரிகக் ...... கணையாலே
புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற்
பொழியத் தென்றல்துரக் ...... குதலாலே
தெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத்
திரியத் திங்களுதிப் ...... பதனாலே
செயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த்
தெரிவைக் குன்குரவைத் ...... தரவேணும்
அருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித்
தருமைக் குன்றவருக் ...... கெளியோனே
அசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித்
தயில்கைக் கொண்டதிறற் ...... குமரேசா
தருவைக் கும்பதியிற் றிருவைச் சென்றணுகித்
தழுவிக் கொண்டபுயத் ...... திருமார்பா
தரளச் சங்குவயற் றிரளிற் றங்குதிருத்
தணிகைச் செங்கழநிப் ...... பெருமாளே.
பொரு விக் கந்தொடு அடர்ச் செரு இக்கன் தொடும் இப்
புதுமைப் புண்டரிகக்.....கணையாலே
புளகக் கொங்கை இடத்து இளகக் கொங்கை அனல்
பொழியத் தென்றல் துரக்.....குதலாலே
தெருவில் பெண்கள் மிகக் கறுவிச் சண்டை இடத்
திரியத் திங்கள்.....உதிப்பதனாலே
செயல் அற்று இங்கு அணையில் துயில் அற்று அஞ்சி அயர்த்(த)
தெரிவைக்கு உன் குரவைத்.....தர வேணும்
அருவிக் குன்று அடையப் பரவிச் செம் தினைவித்த
அருமைக் குன்றவருக்கு.....எளியோனே
அசுரர்க்கு அங்கு அயல் பட்டு அமரர்க்கு அண்டம் அளித்து
அயில் கைக் கொண்ட திறல்.....குமரேசா
தரு வைக்கும் பதியில் திருவைச் சென்று அணுகித்
தழுவிக் கொண்ட புயத்.....திரு மார்பா
தரளச் சங்கு வயல் திரளில் தங்கு
திருத்தணிகைச் செம் கழநிப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
287
திருத்தணிகை பொற்குடம் ஒத்த தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன ...... தானா
பொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர்
கைப்பொருள் புக்கிட ...... வேதான்
புட்குரல் விச்சைபி தற்றுமொ ழிச்சியர்
பொட்டணி நெற்றிய ...... ரானோர்
அற்பவி டைக்கலை சுற்றிநெ கிழ்ப்பவர்
அற்பர மட்டைகள் ...... பால்சென்
றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை
அற்றிட வைத்தருள் ...... வாயே
கொக்கரை சச்சரி மத்தளி யொத்துவி
டக்கைமு ழக்கொலி ...... யாலக்
கொக்கிற கக்கர மத்தம ணிக்கருள்
குத்தத ணிக்கும ...... ரேசா
சர்க்கரை முப்பழ மொத்தமொ ழிச்சிகு
றத்தித னக்கிரி ...... மேலே
தைக்கும னத்தச மர்த்தஅ ரக்கர்த
லைக்குலை கொத்திய ...... வேளே.
பொன் குடம் ஒத்த குயத்தை அசைப்பவர்
கைப் பொருள் புக்கிடவே.....தான்
புள் குரல் விச்சை பிதற்றும் மொழிச்சியர்
பொட்டு அணி நெற்றியர்.....ஆனோர்
அற்ப இடைக்கலை சுற்றி நெகிழ்ப்பவர்
அற்பர் அ(ம்) மட்டைகள்.....பால் சென்று
அக் கண் வலைக்குள் அகப்படு புத்தியை
அற்றிட வைத்து.....அருள்வாயே
கொக்கரை சச்சரி மத்தளி ஒத்து
இடக்கை முழக்கு ஒலி.....ஆல
கொக்கு இறகு அக்கு அர மத்தம் அணிக்கு அருள்
குத்த(ம்) தணிக்.....குமரேசா
சர்க்கரை முப்பழம் ஒத்த மொழிச்சி
குறத்தி தனக் கிரி.....மேலே
தைக்கும் மனத்த சமர்த்த அரக்கர்
தலைக் குலை கொத்திய.....வேளே.
Add (additional) Audio/Video Link
288
திருத்தணிகை பொற் பதத்தினை தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த
தத்த தத்த தத்த தத்த ...... தனதான
பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்
பொற்பு ரைத்து நெக்கு ருக்க ...... அறியாதே
புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க
புத்தி யிற்க லக்க மற்று ...... நினையாதே
முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி
முற்க டைத்த வித்து நித்த ...... முழல்வேனை
முட்ட விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்து
முத்தி சற்றெ னக்க ளிப்ப ...... தொருநாளே
வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த
வித்த கத்தர் பெற்ற கொற்ற ...... மயில்வீரா
வித்தை தத்வ முத்த மிழ்ச்சொ லத்த சத்தம் வித்த ரிக்கு
மெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பி ...... லுறைவோனே
கற்ப கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற
கற்பு ரத்தி ருத்த னத்தி ...... லணைவோனே
கைத்த ரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைத்த
கைத்தொ ழுத்த றித்து விட்ட ...... பெருமாளே.
பொற்பதத்தி னைத் துதித்து நற்பதத்திலுற்ற பத்தர்
பொற்பு உரைத்து நெக்கு உருக்க.....அறியாதே
புத்தகப் பிதற்றை விட்டு வித்தகத்து உனைத்துதிக்க
புத்தியிற்கலக்க மற்று.....நினையாதே
முற்படத்தலத்துதித்து பிற்படைத்த கிர்த்ய முற்றி
முற்கடைத் தவித்து நித்தம்.....உழல்வேனை
முட்ட இக் கடைப்பிறப்பி னுட் கிடப்பதைத் தவிர்த்து
முத்தி சற்று எனக்களிப்பது.....ஒருநாளே
வெற்பளித்த தற்பரைக்கு இடப்புறத்தை யுற்றளித்த
வித்தக அத்தர் பெற்ற கொற்ற.....மயில்வீரா
வித்தை தத்வ முத்தமிழ்ச்சொல் அத்த சத்தம் வித்தரிக்கு
மெய்த்திருத்தணிப்பொருப்பில்.....உறைவோனே
கற்பகப்புனக்குறத்தி கச்சடர்த்த சித்ர முற்ற
கற்புரத் திருத்தனத்தில்.....அணைவோனே
கைத்து அரக்கர் கொத்து கச்சினத்து வஜ்ரனுக்கு அமைத்த
கைத்தொ ழுத்த றித்து விட்ட.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=p03ckWbZ9sw
Add (additional) Audio/Video Link
289
திருத்தணிகை மருக்குல மேவும் தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான
மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண்
மதிப்பிள வாகும் ...... நுதலார்தம்
மயக்கினி லேநண் புறப்படு வேனுன்
மலர்க்கழல் பாடுந் ...... திறநாடாத்
தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன்
சமத்தறி யாவன் ...... பிலிமூகன்
தலத்தினி லேவந் துறப்பணி யாதன்
தனக்கினி யார்தஞ் ...... சபைதாராய்
குருக்குல ராஜன் தனக்கொரு தூதன்
குறட்பெல மாயன் ...... நவநீதங்
குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன்
குணத்ரய நாதன் ...... மருகோனே
திருக்குள நாளும் பலத்திசை மூசும்
சிறப்பது றாஎண் ...... டிசையோடும்
திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகுந்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.
மருக் குல(ம்) மேவும் குழல் கனி வாய் வெண்
மதிப் பிளவு ஆகும்.....நுதலார் தம்
மயக்கினிலே நண்பு உறப் படுவேன் உன்
மலர்க் கழல் பாடும்.....திற(ன்) நாடாத்
தருக்கன் உதாரம் துணுக்கு இலி லோபன்
சமத்து அறியா அன்பு.....இலி மூகன்
தலத்தினிலே வந்து உறப் பணியாத(வ)ன்
தனக்கு இனியார் தம்.....சபை தாராய்
குருக் குல ராஜன் தனக்கு ஒரு தூதன்
குறள் பெல மாயன்.....நவ நீதம்
குறித்து அயில் நேயன் திருப் பயில் மார்பன்
குண த்ரய நாதன்.....மருகோனே
திருக் குள(ம்) நாளும் பலத் திசை மூசும்
சிறப்பு அது உறா எண் திசையோடும்
திரைக்கடல் சூழும் புவிக்கு உயிராகும்
திருத்தணி மேவும் ...... பெருமாளே
Add (additional) Audio/Video Link
290
திருத்தணிகை மலை முலைச்சியர் தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன ...... தனதான
மலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர்
மதிமு கத்திய ...... ரழகான
மயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர்
மனது ருக்கிக ...... ளணைமீதே
கலைநெ கிழ்த்தியே உறவ ணைத்திடு
கலவி யிற்றுவள் ...... பிணிதீராக்
கசட னைக்குண அசட னைப்புகல்
கதியில் வைப்பது ...... மொருநாளே
குலகி ரிக்குல முருவ விட்டமர்
குலவு சித்திர ...... முனைவேலா
குறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர்
குமர சற்குண ...... மயில்வீரா
தலம திற்புக லமர ருற்றிடர்
தனைய கற்றிய ...... அருளாளா
தருநி ரைத்தெழு பொழில்மி குத்திடு
தணிம லைக்குயர் ...... பெருமாளே.
மலை முலைச்சியர் கயல் விழிச்சியர்
மதி முகத்தியர்.....அழகான
மயில் நடைச்சியர் குயில் மொழிச்சியர்
மனது உருக்கிகள்.....அணை மீதே
கலை நெகிழ்த்தியே உறவு அணைத்திடு
கலவியில் துவள்.....பிணி தீரா
கசடனைக் குண அசடனைப் புகல்
கதியில் வைப்பதும்.....ஒரு நாளே
குல கிரிக் குலம் உருவ விட்டவர்
குலவு சித்திர.....முனை வேலா
குறவர் பெற்றிடு சிறுமியைப் புணர்
குமர சற்குண.....மயில் வீரா
தலம் அதில் புகல் அமரர் உற்ற இடர்
தனை அகற்றிய.....அருளாளா
தரு நிரைத்து எழு பொழில் மிகுத்திடு
தணி மலைக்கு உயர்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
291
திருத்தணிகை முகத்தை மினுக்கி தனத்தன தத்தன தனதன தனதன
தனத்தன தத்தன தனதன தனதன
தனத்தன தத்தன தனதன தனதன ...... தனதான
முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள்
விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள்
மொழிக்குள்ம யக்கிகள் வகைதனில் நகைதனில் ...... விதமாக
முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி
புழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர்
முயக்கம டுத்துழி தருமடி யவனிடர் ...... ஒழிவாக
மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவண
புயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிக
விசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும் ...... வடிவேலும்
வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற
திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி
விதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு ...... ளருளாயோ
புகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபட
நகைத்தவ ருக்கிட முறைபவள் வலைமகள்
பொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவ ...... ளபிராமி
பொதுற்றுதி மித்திமி நடமிடு பகிரதி
எழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை
பொருட்பய னுக்குரை யடுகிய சமைபவள் ...... அமுதாகச்
செகத்தைய கட்டிடு நெடியவர் கடையவள்
அறத்தைவ ளர்த்திடு பரசிவை குலவதி
திறத்தமி ழைத்தரு பழையவ ளருளிய ...... சிறியோனே
செருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுள
கரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணி
திருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய ...... பெருமாளே.
முகத்தை மினுக்கிகள் அசடிகள் கபடிகள்
விழித்து மருட்டிகள் கெருவிகள் திருடிகள்
மொழிக்குள் மயக்கிகள் வகை தனில் நகை தனில்.....விதமாக
முழித்து மயல் கொ(ள்)ளும் அறிவிலி நெறியிலி
புழுக் குடலைப் பொருள் என மிக எ(ண்)ணியவர்
முயக்கம் அடுத்து உழிதரும் அடியவன் இடர்.....ஒழிவாக
மிகுத்த அழகைப் பெறும் அறுமுக சரவண
புயத்து இளகிக் கமழ் நறை மலர் தொடை மிக
விசைக் கொடுமைப் பெறு மரகத கலபியும்.....வடிவேலும்
வெளிப்பட எனக்கு இனி இரவொடு பகல் அற
திருப்பதியப் புகழ் அமுது இயல் கவி சொ(ல்)லி
விதித் தன் எழுத்து இனை தர வரும் ஒரு பொருள்.....அருளாயோ
புகைத்த அழலைக் கொ(ண்)டு திரி புரம் எரி பட
நகைத்தவருக்கு இடம் உறைபவள் வலை மகள்
பொருப்பில் இமக் கிரி பதி பெறும் இமையவள்.....அபிராமி
பொது உற்று திமித்திமி நடம் இடு(ம்) பகிரதி
எழுத்து அறி ருத்திரி பகவதி கவுரி கை
பொருள் பயனுக்கு உரை அடுகிய சமைபவள்.....அமுதாக
செகத்தை அகட்டு இடு நெடியவர் கடையவள்
அறத்தை வளர்த்திடு பர சிவை குலவதி
திறத் தமிழைத் தரு பழையவள் அருளிய.....சிறியோனே
செருக்கும் அரக்கர்கள் பொடி பட வடிவுள
கரத்தில் அயில் கொடு பொருது இமையவர் பணி
திருத்தணி பொன் பதி தனில் மயில் நடவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
292
திருத்தணிகை முகிலும் இரவியும் தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
முகிலு மிரவியு முழுகதிர் தரளமு
முடுகு சிலைகொடு கணைவிடு மதனனு
முடிய வொருபொரு ளுதவிய புதல்வனு ...... மெனநாடி
முதிய கனனென தெய்வதரு நிகரென
முதலை மடுவினி லதவிய புயலென
முகமு மறுமுக முடையவ னிவனென ...... வறியோரைச்
சகல பதவியு முடையவ ரிவரென
தனிய தநுவல விஜயவ னிவனென
தபனன் வலம்வரு கிரிதனை நிகரென ...... இசைபாடிச்
சயில பகலவ ரிடைதொறு நடைசெயு
மிரவு தவிரவெ யிருபத மடையவெ
சவித அடியவர் தவமதில் வரவருள் ...... புரிவாயே
அகில புவனமு மடைவினி லுதவிய
இமய கிரிமயில் குலவரை தநுவென
அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த ...... அபிராமி
அமரு மிடனன லெனுமொரு வடிவுடை
யவனி லுரையவன் முதுதமி ழுடையவ
னரியொ டயனுல கரியவ னடநவில் ...... சிவன்வாழ்வே
திகிரி நிசிசரர் தடமுடி பொடிபட
திரைக ளெறிகடல் சுவறிட களமிசை
திரடு குறடுகள் புரள்வெகு குருதிகள் ...... பெருகாறாச்
சிகர கிரிநெரி படபடை பொருதருள்
திமிர தினகர குருபர இளமயில்
சிவணி வருமொரு தணிகையில் நிலைதிகழ் ...... பெருமாளே.
முகிலும் இரவியும் முழு கதிர் தரளமு(ம்)
முடுகு சிலை கொடு கணை விடு மதனனு(ம்)
முடிய ஒரு பொருள் உதவிய புதல்வனும்.....என நாடி
முதிய க(ர்)னன் என தெய்வ தரு நிகர் என
முதலை மடுவினில் அதவிய புயல் என
முகமும் அறுமுகமும் உடையவன் இவன் என.....வறியோரைச்
சகல பதவியும் உடையவர் இவர் என
தனிய தநு வ(ல்)ல விஜயவன் இவன் என
தபனன் வலம் வரு கிரி தனை நிகர் என.....இசை பாடி
சயில(ம்) பகலவர் இடை தொறு நடை செ(ய்)யும்
இரவு தவிரவெ இரு பதம் அடையவெ
சவித அடியவர் தவம் அதில் வர அருள்.....புரிவாயே
அகில புவனமும் அடைவினில் உதவிய
இமய கிரி மயில் குல வரை தநு என
அதிகை வரு புர நொடியினில் எரி செய்த.....அபிராமி
அமரும் இடன் அனல் எனும் ஒரு வடிவுடை
அவன் இல் உரையவன் முது தமிழ் உடையவன்
அரி ஒடு அயன் உலகு அரியவன் நட நவில்.....சிவன் வாழ்வே
திகிரி நிசிசரர் தடம் முடி பொடி பட
திரைகள் எறி கடல் சுவறிட களம் மிசை
திரடு குறடுகள் புரள் வெகு குருதிகள்.....பெருகி ஆறா(க)
சிகர கிரி நெரி பட படை பொருது அருள்
திமிர தினகர குருபர இள மயில்
சிவணி வரும் ஒரு தணிகையில் நிலை திகழ்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
293
திருத்தணிகை முடித்த குழலினர் தனத்த தனதன தனத்த தனதன
தனத்த தனதன ...... தனதான
முடித்த குழலினர் வடித்த மொழியினர்
முகத்தி லிலகிய ...... விழியாலும்
முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும்
இளைத்த இடையினு ...... மயலாகிப்
படுத்த அணைதனி லணைத்த அவரொடு
படிக்கு ளநுதின ...... முழலாதே
பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன
பதத்து மலரிணை ...... யருள்வாயே
துடித்து தசமுகன் முடித்த லைகள்விழ
தொடுத்த சரம்விடு ...... ரகுராமன்
துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு
துலக்க அரிதிரு ...... மருகோனே
தடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படு
தழைத்த கதலிக ...... ளவைசாயத்
தருக்கு மெழிலுறு திருத்த ணிகையினில்
தழைத்த சரவண ...... பெருமாளே.
முடித்த குழலினர் வடித்த மொழியினர்
முகத்தில் இலகிய.....விழியாலும்
முலைக் கிரிகள் மிசை அசைத்த துகிலினும்
இளைத்த இடையினும்.....மயலாகி
படுத்த அணை தனில் அணைத்த அவரொடு
படிக்குள் அநுதினம்.....உழலாதே
பருத்த மயில் மிசை நினைத்த பொழுது உன
பதத்து மலர் இணை.....அருள்வாயே
துடித்து தச முகன் முடித் தலைகள் விழ
தொடுத்த சரம் விடு.....ரகுராமன்
துகைத்து இவ்வுலகை ஒர் அடிக்குள் அளவிடு
துலக்க அரி திரு.....மருகோனே
தடத்துள் உறை கயல் வயற்குள் எதிர் படு
தழைத்த கதலிகள்.....அவை சாய
தருக்கும் எழில் உறு திருத்தணிகையினில்
தழைத்த சரவண.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
294
திருத்தணிகை முத்துத் தெறிக்க தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன
தத்தத் தனத்ததன ...... தனதான
முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்
முட்டத்தொ டுத்த ...... மலராலே
முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியென
முற்பட்டெ றிக்கு ......நிலவாலே
எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணி
இப்பொற்கொ டிச்சி ...... தளராதே
எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியில்
இற்றைத்தி னத்தில் ...... வரவேணும்
மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகர
வெற்பைத்தொ ளைத்த ...... கதிர்வேலா
மெச்சிக்கு றத்திதன மிச்சித் தணைத்துருகி
மிக்குப்ப ணைத்த ...... மணிமார்பா
மத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர்
சித்தத்தில் வைத்த ...... கழலோனே
வட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரை
வெட்டித்து ணித்த ...... பெருமாளே.
முத்துத்தெறிக்க வளர் இக்குச் சிலைக்கைமதன்
முட்டத்தொ டுத்த.....மலராலே
முத்தத்திருச்சலதி முற்றத்து உதித் தியென
முற்பட்டெறிக்கு.....நிலவாலே
எத் தத்தையர்க்கும் இதமிக்குப் பெருக்கம் அணி
இப்பொற் கொடிச்சி.....தளராதே
எத்திக்கும் உற்றபுகழ் வெற்றித் திருத்தணியில்
இற்றைத் தினத்தில்.....வரவேணும்
மெத்தச் சினத்துவட திக்குக் குலச்சிகர
வெற்பை தொளைத்த.....கதிர்வேலா
மெச்சிக் குறத்திதனம் இச்சித்து அணைத்துருகி
மிக்குப் பணைத்த.....மணிமார்பா
மத்தப்ர மத்தர் அணி மத்தச் சடைப்பரமர்
சித்தத்தில் வைத்த.....கழலோனே
வட்டத்திரைக்கடலில் மட்டித்து எதிர்த்தவரை
வெட்டித் துணித்த.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=-NWs8s0tqog
Add (additional) Audio/Video Link
295
திருத்தணிகை முலைபுளகம் எழ தனதனன தனதந்த தனதனன தனதந்த
தனதனன தனதந்த ...... தனதான
முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்ச
முகிலளக மகில்பொங்க ...... அமுதான
மொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்ட
முகம்வெயர்வு பெறமன்ற ...... லணையூடே
கலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்று
படவுருகி யிதயங்கள் ...... ப்ரியமேகூர்
கலவிகரை யழியின்ப அலையிலலை படுகின்ற
கவலைகெட நினதன்பு ...... பெறுவேனோ
அலையெறியு மெழில்சண்ட உததிவயி றழல்மண்ட
அதிரவெடி படஅண்ட ...... மிமையோர்கள்
அபயமென நடுகின்ற அசுரர்பட அடியுண்டு
அவர்கள்முனை கெடநின்று ...... பொரும்வேலா
தலைமதிய நதிதும்பை யிளவறுகு கமழ்கொன்றை
சடைமுடியி லணிகின்ற ...... பெருமானார்
தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற
தணிமலையி லுறைகின்ற ...... பெருமாளே.
முலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச
முகில் அளகம் அகில் பொங்க.....அமுதான
மொழி பதற அருமந்த விழி குவிய மதி கொண்ட
முகம் வெயர்வு பெற மன்றல்.....அணை ஊடே
கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்று
பட உருகி இதயங்கள்.....ப்ரியமே கூர்
கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற
கவலை கெட நினது அன்பு.....பெறுவேனோ
அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட
அதிர வெடி பட அண்டம்.....இமையோர்கள்
அபயம் என நடு நின்ற அசுரர் அடி உண்டு
அவர்கள் முனை கெட நின்று.....பொரும் வேலா
தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை
சடை முடியில் அணிகின்ற.....பெருமானார்
தரு குமர விட ஐந்து தலை அரவு தொழுகின்ற
தணி மலையில் உறைகின்ற.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
296
திருத்தணிகை மொகுமொகு என தனதனன தனதனன தத்தத்த தத்ததன
தனதனன தனதனன தத்தத்த தத்ததன
தனதனன தனதனன தத்தத்த தத்ததன ...... தனதான
மொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடைய
முளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழை
முகிலனைய குழல்சரிய வொக்கக்க னத்துவள ...... ரதிபார
முலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணி
முறுவலிள நிலவுதர மெத்தத்த வித்தசில
மொழிபதற விடைதுவள வட்டச்சி லைப்புருவ ...... இணைகோட
அகில்மிருக மதசலிலம் விட்டுப்ப ணித்தமல
ரமளிபட வொளிவிரவு ரத்நப்ர பைக்குழையொ
டமர்பொருத நெடியவிழி செக்கச்சி வக்கமர ...... மதநீதி
அடல்வடிவு நலமிதனில் மட்கச்செ ருக்கியுள
முருகநரை பெருகவுட லொக்கப்ப ழுத்துவிழு
மளவிலொரு பரமவொளி யிற்புக்கி ருக்கவெனை ...... நினையாதோ
செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத
கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத
டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட ...... டிடிதீதோ
திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட
திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி
செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ...... ததிதீதோ
தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட
குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத
தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி ...... யெனவேநீள்
சதிமுழவு பலவுமிரு பக்கத்தி சைப்பமுது
சமையபயி ரவியிதய முட்கிப்ர மிக்கவுயர்
தணிகைமலை தனின்மயிலி னிர்த்தத்தி னிற்கவல ...... பெருமாளே.
மொகுமொகு என நறை கொள் மலர் வற்கத்தில் அ(ன்)புடைய
முளரி மயில் அனையவர்கள் நெய்த்துக் கறுத்து மழை
முகில் அனைய குழல் சரிய ஒக்கக் கனத்து வளர்.....அதிபார
முலை புளகம் எழ வளைகள் சத்திக்க முத்த மணி
முறுவல் இள நிலவு தர மெத்தத் தவித்த சில
மொழி பதற இடை துவள வட்டச் சிலை புருவ.....இணை கோட
அகில் மிருக மத சலிலம் விட்டுப் பணித்த மலர்
அமளி பட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு
அமர் பொருத நெடி விழி செக்கச் சிவக்க அமர.....மத(ம்) நீதி
அடல் வடிவு நலம் இதனில் மட்கச் செருக்கி உ(ள்)ளம்
உருக நரை பெருக உடல் ஒக்கப் பழுத்து விழும்
அளவில் ஒரு பரம வெளியில் புக்கு இருக்க எனை.....நினையாதோ
செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத
கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத
டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட ...... டிடிதீதோ
திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட
திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி
செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ...... ததிதீதோ
தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட
குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத
தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி ...... யெனவேநீள்
சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது
சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர்
தணிகை மலை தனில் மயிலில் நிர்த்தத்தனில் நிற்க வல்ல.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
297
திருத்தணிகை வங்கம் பெறு தந்தந் தனதன தந்தந் தனதன
தந்தந் தனதன ...... தனதான
வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை
வந்துந் தியதிரு ...... மதனாலே
வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற
வஞ்சம் பதும்விடு ...... மதனாலே
பங்கம் படுமென தங்கந் தனிலுதி
பண்பொன் றியவொரு ...... கொடியான
பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்
பொன்றுந் தனிமையை ...... நினையாயோ
தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்
சென்றொன் றியபொழி ...... லதனூடே
தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி
நின்றுந் திகழ்வொடு ...... மயிலாடப்
பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைகள்
என்றும் புகழ்பெற ...... மலரீனும்
பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி
யென்றுஞ் செயவல ...... பெருமாளே.
வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை
வந்து உந்தி அதிரும்.....அதனாலே
வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழலுற
அஞசுசஅம்பதும்விடு.....மதனாலே
பங்கம் படுமெனது அங்கந் தனில் உதி
பண்பொன்றிய ஒரு.....கொடியான
பஞ்சொன்றிய மயில் நெஞ்சொன்றியெ அழல்
பொன்றுந் தனிமையை.....நினையாயோ
தெங்கந் திரளுடன் எங்குங் கதலிகள்
சென்றொன்றியபொழில்.....அதனூடே
தெந்தெந் தெனதென என்று அண்டுற அளி
நின்றும் திகழ்வொடு.....மயிலாட
பொங்குஞ் சுனைகளில் எங்குங் குவளைகள்
என்றும் புகழ்பெற.....மலரீனும்
பொன் தென் தணிகையில் நின்றங்கு எழுபுவி
யென்றுஞ் செயவல.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
298
திருத்தணிகை வட்ட வாள் தன தத்தனாத் தனன தத்தனாத் தனன
தத்தனாத் தனன ...... தனதான
வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை
மக்கள்தாய்க் கிழவி ...... பதிநாடு
வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்
மற்றகூட் டமறி ...... வயலாக
முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை
முட்டர்பூட் டியெனை ...... யழையாமுன்
முத்திவீட் டணுக முத்தராக் கசுரு
திக்குராக் கொளிரு ...... கழல்தாராய்
பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ
பத்தின்வாட் பிடியின் ...... மணவாளா
பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப
திச்சிதோட் புணர்த ...... ணியில்வேளே
எட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரி
யெட்டுமாக் குலைய ...... எறிவேலா
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய ...... பெருமாளே.
வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை
மக்கள் தாய்க் கிழவி.....பதி நாடு
வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள்
மற்ற கூட்டம் அறிவு.....அயலாக
முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை
முட்டர் பூட்டி எனை.....அழையா முன்
முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி(க்குள்)
குராக்குள் ஒளிர் இரு.....கழல் தாராய்
பட்ட(ம்) நால் பெரும் மருப்பினால் கர
இபத்தின் வாள் பிடியின்.....மணவாளா
பச்சை வேய்ப் பணவை கொச்சை வேட்டுவர்
பதிச்சி தோள் புணர்.....தணியில் வேளே
எட்டு(ம்) நால் கர ஒருத்தல் மாத் திகிரி
எட்டும் மாக் குலைய.....எறி வேலா
எத்திடார்க்கு அரிய முத்த பாத் தமிழ் கொண்டு
எத்தினார்க்கு எளிய.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=5O3v2z4w1NE
Add (additional) Audio/Video Link
299
திருத்தணிகை வரிக் கலையின் தனத்ததன தனதான தனத்ததன தனதான
தனத்ததன தனதான ...... தனதான
வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை
மயக்கியிடு மடவார்கள் ...... மயலாலே
மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி
வயிற்றிலெரி மிகமூள ...... அதனாலே
ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி
ஒருத்தர்தமை மிகநாடி ...... யவரோடே
உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட
உயர்ச்சிபெறு குணசீல ...... மருள்வாயே
விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை
மிகுத்தபல முடனோத ...... மகிழ்வோனே
வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள
விளைத்ததொரு தமிழ்பாடு ...... புலவோனே
செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது
திருக்கையினில் வடிவேலை ...... யுடையோனே
திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான
திருத்தணிகை மலைமேவு ...... பெருமாளே.
வரிக்கலையி னிகரான விழிக்கடையில் இளைஞோரை
மயக்கிடு மடவார்கள்.....மயலாலே
மதிக்குளறி யுளகாசும் அவர்க்கு உதவி மிடியாகி
வயிற்றிலெரி மிகமூள.....அதனாலே
ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரொடு பகையாகி
ஒருத்தர்தமை மிகநாடி.....அவரோடே
உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட
உயர்ச்சிபெறு குணசீலம்.....அருள்வாயே
விரித்து அருண கிரிநாதன் உரைத்த தமிழெனு மாலை
மிகுத்தபல முடனோத.....மகிழ்வோனே
வெடித்து அமணர் கழுவேற ஒருத்தி கணவனும் மீள
விளைத்ததொரு தமிழ்பாடு.....புலவோனே
செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது
வடிவேலை திருக்கையினில்.....உடையோனே
திருக்குலவும் ஒருநீல மலர்ச்சுனையில் அழகான
திருத்தணிகை மலைமேவு.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=fx8WkAriif8
Add (additional) Audio/Video Link
300
திருத்தணிகை வார் உற்று எழும் தானத்தன தானன தந்தன
தானத்தன தானன தந்தன
தானத்தன தானன தந்தன ...... தனதான
வாருற்றெழு பூண்முலை வஞ்சியர்
காருற்றெழு நீள்குழல் மஞ்சியர்
வாலக்குயில் போல்மொழி கொஞ்சியர் ...... தெருமீதே
மாணுற்றெதிர் மோகன விஞ்சையர்
சேலுற்றெழு நேர்விழி விஞ்சியர்
வாகக்குழை யாமப ரஞ்சியர் ...... மயலாலே
சீருற்றெழு ஞானமு டன்கல்வி
நேரற்றவர் மால்கொடு மங்கியெ
சேருற்றறி வானத ழிந்துயி ...... ரிழவாமுன்
சேவற்கொடி யோடுசி கண்டியின்
மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய
தேசுக்கதிர் கோடியெ னும்பத ...... மருள்வாயே
போருற்றிடு சூரர்சி ரங்களை
வீரத்தொடு பாரில ரிந்தெழு
பூதக்கொடி சோரிய ருந்திட ...... விடும்வேலா
பூகக்குலை யேவிழ மென்கயல்
தாவக்குலை வாழைக ளுஞ்செறி
போகச்செநெ லேயுதி ருஞ்செய்க ...... ளவைகோடி
சாரற்கிரி தோறுமெ ழும்பொழில்
தூரத்தொழு வார்வினை சிந்திடு
தாதுற்றெழு கோபுர மண்டப ...... மவைசூழுந்
தார்மெத்திய தோரண மென்தெரு
தேர்சுற்றிய வார்பதி அண்டர்கள்
தாமெச்சிய நீள்தணி யம்பதி ...... பெருமாளே.
வார் உற்று எழும் பூண் முலை வஞ்சியர்
கார் உற்று எழும் நீள் குழல் மஞ்சியர்
வாலக் குயில் போல் மொழி கொஞ்சியர்.....தெரு மீதே
மாண் உற்று எதிர் மோகன விஞ்சையர்
சேல் உற்று எழு நேர் விழி விஞ்சியர்
வாகக் குழையாம் அபரஞ்சியர்.....மயலாலே
சீர் உற்று எழு(ம்) ஞானமுடன் கல்வி
நேர் அற்றவர் மால் கொ(ண்)டு மங்கியே
சேர் உற்ற அறிவானது அழிந்து உயிர்.....இழவா முன்
சேவல் கொடியோடு சிகண்டியின்
மீது உற்று அறிஞோர் புகழ் பொங்கிய
தேசுக் கதிர் கோடி எனும் பதம்.....அருள்வாயே
போர் உற்றிடு சூரர் சிரங்களை
வீரத்தோடு பாரில் அரிந்து எழு
பூதக் கொடி சோரி அருந்திட.....விடும் வேலா
பூகக் குலையே விழ மென் கயல்
தாவக் குலை வாழைகளும் செறி
போகச் செ(ந்) நெ(ல்)லே உதிரும் செய்கள்.....அவை கோடி
சாரல் கிரி தோறும் எழும் பொழில்
தூரத் தொழுவார் வினை சிந்திடு
தாது உற்று எழு கோபுர மண்டபம்.....அவை சூழும்
தார் மெத்திய தோரண மென் தெரு
தேர் சுற்றிய வார் பதி அண்டர்கள்
தாம் மெச்சிய நீள் தணி அம் பதி.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
301
திருத்தணிகை வினைக்கு இனமாகும் தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான
வினைக்கின மாகுத் தனத்தினர் வேளம்
பினுக்கெதி ராகும் ...... விழிமாதர்
மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்
சமத்திடை போய்வந் ...... துயர்மூழ்கிக்
கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்
கருக்குழி தோறுங் ...... கவிழாதே
கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்
கழற்புக ழோதுங் ...... கலைதாராய்
புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்
சியைப்புணர் வாகம் ...... புயவேளே
பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
பொருக்கெழ வானும் ...... புகைமூளச்
சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்
திறக்கம ராடுந் ...... திறல்வேலா
திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.
வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள்
அம்பினுக்கு எதிர் ஆகும்.....விழி மாதர்
மிகப் பல மானம் தனில் புகுதா வெம்
சமத்திடை போய் வெம்.....துயர் மூழ்கி
கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும்
கருக் குழி தோறும்.....கவிழாதே
கலைப் புலவோர் பண் படைத்திட ஓதும்
கழல் புகழ் ஓதும்.....கலை தாராய்
புனத்து இடை போய் வெம் சிலை குறவோர்
வஞ்சியைப் புணர் வாகம்.....புய வேளே
பொருப்பு இரு கூறும் பட கடல் தானும்
பொருக்கு எழ வானும்.....புகை மூள
சினத்தோடு சூரன் கனத்(த) தி(ண்)ணி(ய) மார்பம்
திறக்க அமர் ஆடும்.....திறல் வேலா
திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும்
திருத்தணி மேவும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=QDe6QupRUag
Add (additional) Audio/Video Link
302
திருத்தணிகை வெற்றி செயவுற்ற தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்த தனதான
வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்
விட்டகணை பட்ட ...... விசையாலே
வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி
ரித்தொளிப ரப்பு ...... மதியாலே
பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை
பட்டதிகி ரிக்கு ...... மழியாதே
பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்
பச்சைமயி லுற்று ...... வரவேணும்
நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி
னைக்குமன மொத்த ...... கழல்வீரா
நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
நித்தமிறு கத்த ...... ழுவுமார்பா
எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில்
எப்பொழுது நிற்கு ...... முருகோனே
எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர்
இட்டசிறை விட்ட ...... பெருமாளே.
வெற்றி செயவுற்ற கழை விற்குதை வளைத்து மதன்
விட்டகணை பட்ட.....விசையாலே
வெட்டவெளியில் தெருவில் வட்டபணையில் கனல்
விரித்தொளி பரப்பு.....மதியாலே
பற்றி வசை கற்றபல தத்தையர் தமக்கும் இசை
பட்ட திகிரிக்கும்.....அழியாதே
பத்தியை யெனக்கருளி முத்தியை யளித்து வளர்
பச்சை மயிலுற்று.....வரவேணும்
நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடும் உத்தமர்
நினைக்கு மனமொத்த.....கழல்வீரா
நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
நித்தம் இறுகத்.....தழுவு மார்பா
எற்றியதிருச்சலதி சுற்றிய திருத்தணியில்
எப்பொழுது நிற்கு.....முருகோனே
எட்டு அசலம் எட்ட நிலமுட்டமுடி நெட்டு அசுரர்
இட்டசிறை விட்ட.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=T0d1oP8bKSY
Add (additional) Audio/Video Link