| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: திருக்கழுக்குன்றம்
541 அகத்தினைக் கொண்டு 542 எழுகு நிறை நாபி 543 ஓல மிட்ட சுரும்பு 544 வேத வெற்பிலே
541
திருக்கழுக்குன்றம் அகத்தினைக் கொண்டு தனத்த தத்தம் தத்தன தானன
தனத்த தத்தம் தத்தன தானன
தனத்த தத்தம் தத்தன தானன ...... தனதான
அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில
தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின்
அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு ...... கணையாலே
அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர்
நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ
அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ ...... சிலநாள்போய்
இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன்
மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட
லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை ...... முதிர்வாயே
எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன்
மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன
திருக்கு நற்றொண் டர்க்கிணை யாகவு ...... னருள்தாராய்
புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி
படச்சி ரித்தண் முப்புர நீறுசெய்
புகைக்க னற்கண் பெற்றவர் காதலி ...... யருள்பாலா
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர
சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை
புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன் ...... மருகோனே
திகழ்க்க டப்பம் புட்பம தார்புய
மறைத்து ருக்கொண் டற்புத மாகிய
தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை ...... யணைசீலா
செகத்தி லுச்சம் பெற்றம ராவதி
யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி
திருக்க ழுக்குன் றத்தினில் மேவிய ...... பெருமாளே.
அகத்தினைக் கொண்டு இப்புவி மேல் சில
தினத்து மற்று ஒன்று உற்று அறியாது பின்
அவத்துள் வைக்கும் சித்தசனார் அடு.....கணையாலே
அசுத்த மைக் கண் கொட்பு உறு பாவையர்
நகைத்து உரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ
அலக்க(ண்)ணில் சென்றுத் தடுமாறியெ.....சில நாள் போய்
இகத்தை மெய்க் கொண்டு இப்புவி பாலர் பொன்
மயக்கில் உற்று அம் பற்றை விடாது
உடலில் இளைப்பு இரைப்பும் பித்தமுமாய் நரை.....முதிர்வா(கி)யே
எமக் கயிற்றின் சிக்கி நி(ல்)லா முன் உன்
மலர்ப் பதத்தின் பத்தி விடா மனது
இருக்கு(ம்) நல் தொண்டர்க்கு இணையாக உன்.....அருள் தாராய்
புகழ்ச் சிலைக் கந்தர்ப்பனுமே பொடி
படச் சிரித்து அண் முப்புர(ம்) நீறு செய்
புகைக் கனல் கண் பெற்றவர் காதலி.....அருள் பாலா
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு
அனைத்து(ம்) முற்றும் செற்றிடவே பகை
புகட்டி வைக்கும் சக்கிர பாணி தன்.....மருகோனே
திகழ்க் கடப்பம் புட்பமது ஆர் புய(ம்)
மறைத்து உருக் கொண்ட அற்புதமாகிய
தினைப் புனத்து இன்புற்று உறை பாவையை.....அணை சீலா
செகத்தில் உச்சம் பெற்ற அமராவதி
அதற்கும் ஒப்ப என்று அழகே செறி
திருக் கழுக் குன்றத்தினில் மேவிய.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
542
திருக்கழுக்குன்றம் எழுகு நிறை நாபி தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான
எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
யிலகுமரன் மூவர் ...... முதலானோர்
இறைவியெனு மாதி பரைமுலையி னூறி
யெழுமமிர்த நாறு ...... கனிவாயா
புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
புநிதனென ஏடு ...... தமிழாலே
புனலிலெதி ரேற சமணர்கழு வேற
பொருதகவி வீர ...... குருநாதா
மழுவுழைக பால டமரகத்ரி சூல
மணிகரவி நோத ...... ரருள்பாலா
மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
வளமைபெற வேசெய் ...... முருகோனே
கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு
கதிருலவு வாசல் ...... நிறைவானோர்
கடலொலிய தான மறைதமிழ்க ளோது
கதலிவன மேவு ...... பெருமாளே.
எழுகு நிறை நாபி அரி பிரமர் சோதி
யிலகுமரன் மூவர்.....முதலானோர்
இறைவியெனு மாதி பரை முலையினூறி
எழும் அமிர்த நாறு.....கனிவாயா
புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
புநிதனென ஏடு.....தமிழாலே
புனலிலெதிர் ஏற சமணர் கழுவேற
பொருதகவி வீர.....குருநாதா
மழு உழை கபால டமரக த்ரிசூலம்
அணிகர விநோதர்.....அருள்பாலா
மலரயனை நீடு சிறைசெய்து அவன் வேலை
வளமைபெறவே செய்.....முருகோனே
கழுகுதொழு வேதகிரி சிகரி வீறு
கதிருலவு வாசல்.....நிறைவானோர்
கடலொலிய தான மறைதமிழ்க ளோது
கதலிவனம் மேவு.....பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=uu4m6hJMoCM
Add (additional) Audio/Video Link
543
திருக்கழுக்குன்றம் ஓல மிட்ட சுரும்பு தான தத்த தனந்த தனா தனாதன
தான தத்த தனந்த தனா தனாதன
தான தத்த தனந்த தனா தனாதன ...... தனனதான
ஓல மிட்ட சுரும்பு தனா தனாவென
வேசி ரத்தில் விழுங்கை பளீர் பளீரென
வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென ...... விரகலீலை
ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவென
வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென
ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென ...... அமுதமாரன்
ஆல யத்து ளிருந்து குபீர் குபீரென
வேகு திக்க வுடம்பு விரீர் விரீரென
ஆர முத்த மணிந்து அளா வளாவென ...... மருவுமாதர்
ஆசை யிற்கை கலந்து சுமா சுமாபவ
சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம்
ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவென ...... வகைவராதோ
மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலென
மேலெ ழுச்சி தரும்பல் வெளேல் வெளேலென
வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலென ...... எதிர்கொள்சூரன்
மார்பு மொக்க நெரிந்து கரீல் கரீலென
பேய்கு திக்க நிணங்கள் குழூ குழூவென
வாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோவென ...... உதிரமாறாய்
வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீலென
மாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலென
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென ...... விசைகள்கூற
வேலெ டுத்து நடந்த திவா கராசல
வேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ்
வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ ...... குமரவேளே.
ஓலம் இட்ட சுரும்பு தனா தனா எனவே
சிரத்தில் விழும் கை பளீர் பளீர் என
ஓசை பெற்ற சிலம்பு கலீர் கலீர் என.....விரக லீலை
ஓர் மிடற்றில் எழும் புள் குகூ குகூ என
வேர்வை மெத்த எழுந்து சலா சலா என
ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீர் என.....அமுதமாரன்
ஆலயத்துள் இருந்து குபீர் குபீர் எனவே
குதிக்க உடம்பு விரீர் விரீர் என
ஆர முத்தம் அணிந்து அளா அளா என.....மருவு மாதர்
ஆசையில் கை கலந்து சுமா சுமா பவ
சாகரத்தில் அழுந்தி எழா எழாது உளம்
ஆறு எழுத்தை நினைந்து குகா குகா என.....வகை வராதோ
மாலை இட்ட சிரங்கள் செவேல் செவேல் என
வேல் எழுச்சி தரும் பல் வெளேல் வெளேல் என
வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேல் என.....எதிர் கொள் சூரன்
மார்பும் ஒக்க நெரிந்து கரீல் கரீல் என
பேய் குதிக்க நிணங்கள் குழூ குழூ என
வாய் புதைத்து விழுந்து ஐயோ ஐயோ என.....உதிரம் ஆறாய்
வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீல் என
மாலை வெற்பும் இடிந்து திடீல் திடீல் என
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயா என.....இசைகள் கூற
வேல் எடுத்து நடந்த திவாகரா அசல
வேடுவப் பெண் மணந்த புய அசலா தமிழ்
வேத வெற்பில் அமர்ந்த க்ருபாகரா சிவ.....குமர வேளே. Add (additional) Audio/Video Link
544
திருக்கழுக்குன்றம் வேத வெற்பிலே தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான
தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ...... புயநேய
ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி ...... புகல்வாயே
காது முக்ர வீர பத்ர காளி வெட்க ...... மகுடாமா
காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ...... யிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்த ...... முநிநாண
ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ...... பெருமாளே.
வேத வெற்பிலே புனத்தில் மேவி நிற்கும் அபிராம
வேடுவச்சி பாத பத்ம மீது செச்சை.....முடிதோய
ஆதரித்து வேளை புக்க ஆறிரட்டி புயநேய
ஆதரத்தோடு ஆதரிக்க ஆன புத்தி.....புகல்வாயே
காதும் உக்ர வீர பத்ர காளி வெட்க மகுடம்
ஆகாச முட்ட வீசி விட்ட காலர் பத்தி.....இமையோரை
ஓது வித்த நாதர் கற்க ஓது வித்த முநிநாண
ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓது வித்த.....பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=fjiKJPP0ah0
https://www.youtube.com/watch?v=P-UJ18Nu8oU
Add (additional) Audio/Video Link