![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: திருக்கடவூர்
785 ஏட்டின் விதிப்படி 786 சூலம் என ஓடு
785
திருக்கடவூர் ஏட்டின் விதிப்படி தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன ...... தனதான
ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுர
வீட்டி லடைத்திசை வேகசை மூணதி
லேற்றி யடித்திட வேகட லோடம ...... தெனவேகி
ஏற்கு மெனப்பொரு ளாசைபெ ணாசைகொ
ளாத்து வெனத்திரி யாபரி யாதவ
மேற்றி யிருப்பிட மேயறி யாமலு ...... முடல்பேணிப்
பூட்டு சரப்பளி யேமத னாமென
ஆட்டி யசைத்திய லேதிரி நாளையில்
பூத்த மலக்குகை யோபொதி சோறென ...... கழுகாகம்
போற்றி நமக்கிரை யாமென வேகொள
நாட்டி லொடுக்கென வேவிழு போதினில்
பூட்டு பணிப்பத மாமயி லாவருள் ...... புரிவாயே
வீட்டி லடைத்தெரி யேயிடு பாதக
னாட்டை விடுத்திட வேபல சூதினில்
வீழ்த்த விதிப்படி யேகுரு காவலர் ...... வனமேபோய்
வேற்றுமை யுற்றுரு வோடியல் நாளது
பார்த்து முடித்திட வேயொரு பாரத
மேற்புனை வித்தம காவிர மாயவன் ...... மருகோனே
கோட்டை யழித்தசு ரார்பதி கோவென
மூட்டி யெரித்தப ராபர சேகர
கோத்த மணிக்கதி ரேநிக ராகிய ...... வடிவேலா
கூற்று மரித்திட வேயுதை பார்வதி
யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள்
கோட்டு முலைக்கதி பாகட வூருறை ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
786
திருக்கடவூர் சூலம் என ஓடு தானதன தான தத்த தானதன தான தத்த
தானதன தான தத்த ...... தனதான
சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி
தூ யவொளி காண முத்தி ...... விதமாகச்
சூழுமிருள் பாவ கத்தை வீழ அழ லூடெ ரித்து
சோதிமணி பீட மிட்ட ...... மடமேவி
மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின்
மேவியரு ணாச லத்தி ...... னுடன்மூழ்கி
வேலுமயில் வாக னப்ர காசமதி லேத ரித்து
வீடுமது வேசி றக்க ...... அருள்தாராய்
ஓலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு
மூடுருவ வேல்தொ டுத்த ...... மயில்வீரா
ஓதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து
ளோமெனுப தேச வித்தொ ...... டணைவோனே
காலனொடு மேதி மட்க வூழிபுவி மேல்கி டத்து
காலனிட மேவு சத்தி ...... யருள்பாலா
காலமுதல் வாழ்பு விக்க தாரநகர் கோபு ரத்துள்
கானமயில் மேல்த ரித்த ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=7fBY67HVhLA
Add (additional) Audio/Video Link
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:04 +0000