சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: தனிச்சயம்
954   இலைச்சுருட் கொடு     955   உரைத்த சம்ப்ரம    
954   தனிச்சயம்   இலைச்சுருட் கொடு  
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
     தனத்தனத் தனத்தனத் ...... தனதான

இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத் திமட்டைகட்
     கிதத்தபுட் குரற்கள்விட் ...... டநுராகம்
எழுப்பிமைக் கயற்கணைக் கழுத்தைமுத் தமிட்டணைத்
     தெடுத்திதழ்க் கடித்துரத் ...... திடைதாவி
அலைச்சலுற் றிலச்சையற் றரைப்பைதொட் டுழைத்துழைத்
     தலக்கணுற் றுயிர்க்களைத் ...... திடவேதான்
அறத்தவித் திளைத்துறத் தனத்தினிற் புணர்ச்சிபட்
     டயர்க்குமிப் பிறப்பினித் ...... தவிராதோ
கொலைச்செருக் கரக்கரைக் கலக்குமிக் ககுக்குடக்
     கொடித்திருக் கரத்தபொற் ...... பதிபாடுங்
குறித்தநற் றிருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்துவக்
     குருத்துவத் தெனைப்பணித் ...... தருள்வோனே
தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத்
     தமிழ்த்ரயத் தகத்தியற் ...... கறிவோதுஞ்
சமர்த்தரிற் சமர்த்தபச் சிமத்திசைக் குளுத்தமத்
     தனிச்சயத் தினிற்பிளைப் ...... பெருமாளே.


இலைச் சுருள் கொடுத்து அணைத்தலத்து இருத்தி மட்டைகட்கு
     இதத்த புள் குரல்கள் விட்டு.....அநுராகம்
எழுப்பி மைக் கயல் கணை கழுத்தை முத்தம் இட்டு அணைத்து
     எடுத்து இதழ்க் கடித்து உரத்து.....இடை தாவி
அலைச்சல் உற்று இலச்சை அற்று அரைப் பை தொட்டு உழைத்து உழைத்து
     அலக்கண் உற்று உயிர்க் களைத்.....திடவே தான்
அறத் தவித்து இளைத்து உறத் தனத்தினில் புணர்ச்சி பட்டு
     அயர்க்கும் இப் பிறப்பு இனித்.....தவிராதோ
கொலைச் செருக்கு அரக்கரைக் கலக்கும் மிக்க குக்குடக்
     கொடித் திருக் கரத்த பொன்.....பதி பாடும்
குறித்த நல் திருப்புகழ் ப்ரபுத்துவக் கவித்துவக்
     குருத்துவத்து எனைப் பணித்து.....அருள்வோனே
தலைச் சுமைச் சடைச் சிவற்கு இலக்கணத்து இலக்கியத்
     தமிழ் த்ரயத்து அகத்தியற்கு.....அறிவு ஓதும்
சமர்த்தரில் சமர்த்த பச்சிமத் திசைக்கு உள உத்தமத்
     தனிச்சயத்தினில் பி(ள்)ளைப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

955   தனிச்சயம்   உரைத்த சம்ப்ரம  
தனத்த தந்தன தனதன தந்தத்
     தனத்த தந்தன தனதன தந்தத்
          தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான

உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்
     கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத்
          தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட் ...... குருடாகி
உரத்த வெண்பலு நழுவிம தங்கெட்
     டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட்
          டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித் ...... தமுமேல்கொண்
டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப்
     பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற்
          றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித் ...... தனைவோரும்
அசுத்த னென்றிட வுணர்வது குன்றித்
     துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக்
          கவத்தை வந்துயி ரலமரு மன்றைக் ...... கருள்வாயே
திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்
     டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்
          டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் ...... டிகுதீதோ
திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்
     டிடக்கை துந்துமி முரசு முழங்கச்
          செருக்க ளந்தனில் நிருதர் தயங்கச் ...... சிலபேய்கள்
தரித்து மண்டையி லுதிர மருந்தத்
     திரட்ப ருந்துகள் குடர்கள் பிடுங்கத்
          தருக்கு சம்புகள் நிணமது சிந்தப் ...... பொரும்வேலா
தடச்சி கண்டியில் வயலியி லன்பைப்
     படைத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற்
          றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப் ...... பெருமாளே.


உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி
     கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து
        ஒலித்திடும் செவி செவிடு உற ஒள்.....கண் குருடாகி
உரத்த வெண் ப(ல்)லும் நழுவி மதம் கெட்டு
     இரைத்து கிண் கிண் என இருமல் எழுந்திட்டு
        உளைப்புடன் தலை கிறு கிறு எனும்.....பித்தமும் மேல் கொண்டு
அரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி
     பழுத்து உளம் செயல் வசனம் வரம்பு அற்று
        அடுத்த பெண்டிரும் எதிர் வர நிந்தித்து.....அனைவோரும்
அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி
     துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு
        அவத்தை வந்து உயிர் அலமரும் அன்றைக்கு.....அருள்வாயே
திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்
     டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்
        டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட்.....டிகுதீதோ
திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்டு
     இடக்கை துந்துமி முரசு முழங்க
        செருக் களந்தனில் நிருதர் தயங்க.....சில பேய்கள்
தரித்து மண்டையில் உதிரம் அருந்த
     திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க
        தருக்கு சம்புகள் நிணம் அது சிந்த.....பொரும் வேலா
தடம் சிகண்டியில் வயலியில் அன்பைப்
     படைத்த நெஞ்சினில் இயல் செறி கொங்கில்
        தனிச்சயம் தனில் இனிது உறை கந்தப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=99lLQRAA09Q
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000