சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: சிறுவை
724   அண்டர்பதி குடியேற     725   சீதள வாரிஜ     726   பிறவியான சடம்     727   வேல் இரண்டு    
724   சிறுவை   அண்டர்பதி குடியேற  
தந்ததன தனதான தந்ததன தனதான
     தந்ததன தனதான ...... தனதான

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
     அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
     ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
     மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
     மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
     புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
     பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
     தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
     தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.


அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
     அண்டர்மன மகிழ்மீற அருளாலே
அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர
     ஐங்கரனும் உமையாளு மகிழ்வாக
மண்டலமு முநிவோரும் எண்டிசையி லுளபேரு
     மஞ்சினனும் அயனாரும் எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
     மைந்து மயிலுடன் ஆடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா
     புந்திநிறை யறிவாள வுயர்தோளா
பொங்குகடலுடன் நாகம் விண்டு வரை யிகல்சாடு
     பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண் தரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
     தண்டமிழின் மிகுநேய முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
     தண்சிறுவை தனில்மேவு பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=VKGk2vWtF5Y
https://www.youtube.com/watch?v=t1KzVjhqzkQ
Add (additional) Audio/Video Link

Back to Top

725   சிறுவை   சீதள வாரிஜ  
தானன தானன தானான தானன
     தானன தானன தானான தானன
          தானன தானன தானான தானன ...... தனதான

சீதள வாரிஜ பாதாந மோநம
     நாரத கீதவி நோதாந மோநம
          சேவல மாமயில் ப்ரீதாந மோநம ...... மறைதேடுஞ்
சேகர மானப்ர தாபாந மோநம
     ஆகம சாரசொ ரூபாந மோநம
          தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப்
பாதக நீவுகு டாராந மோநம
     மாவசு ரேசக டோராந மோநம
          பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது
பார்வதி யாள்தரு பாலாந மோநம
     நாவல ஞானம னோலாந மோநம
          பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய்
போதக மாமுக னேரான சோதர
     நீறணி வேணியர் நேயாப்ர பாகர
          பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா
போதக மாமறை ஞானாத யாகர
     தேனவிழ் நீபந றாவாரு மார்பக
          பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா
மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
     மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
          மாநில மேழினு மேலான நாயக ...... வடிவேலா
வானவ ரூரினும் வீறாகி வீறள
     காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
          வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே.


சீதள வாரிஜ பாதா நமோநம
     நாரத கீத விநோதா நமோநம
     சேவல மாமயில் ப்ரீதா நமோநம மறைதேடுஞ்
சேகரமானப்ர தாபா நமோநம
     ஆகம சார சொரூபா நமோநம
     தேவர்கள் சேனை மகீபா நமோநம கதிதோயப்
பாதக நீவு குடாரா நமோநம
     மா அசுரேச கடோரா நமோநம
     பாரினிலே ஜய வீரா நமோநம மலைமாது
பார்வதியாள் தரு பாலா நமோநம
     நாவல ஞான மனஉலா நமோநம
     பாலகுமாரசுவாமீ நமோநம அருள்தாராய்
போதக மாமுக நேரான சோதர
     நீறணி வேணியர் நேயா ப்ரபாகர
     பூமகளார் மருகேசா மகோததி யிகல்சூரா
போதக மாமறை ஞானா தயாகர
     தேனவிழ் நீப நறாவாரு மார்பக
     பூரண மாமதி போலாறு மாமுக முருகேசா
மாதவர் தேவர்களோடே முராரியும்
     மாமலர் மீதுறை வேதாவுமே புகழ்
     மாநிலம் ஏழினு மேலான நாயக வடிவேலா
வானவ ரூரினும் வீறாகி வீறள
      அளகாபுரி வாழ்வினு மேலாகவே திரு
     வாழ் சிறுவாபுரி வாழ்வே சுராதிபர் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=3-KwbJ7QfqY
Add (additional) Audio/Video Link

Back to Top

726   சிறுவை   பிறவியான சடம்  
தனன தான தனன தந்த தனன தான தனன தந்த
     தனன தான தனன தந்த ...... தனதான

பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
     பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப்
பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி
     பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே
நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
     நளின பாத மெனது சிந்தை ...... யகலாதே
நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி
     நலன தாக அடிய னென்று ...... பெறுவேனோ
பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று
     பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப்
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
     புளக மேவ தமிழ்பு னைந்த ...... முருகோனே
சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்
     சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச்
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
     சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே.


பிறவியான சடமிறங்கி
வழியிலாத துறைசெறிந்து
பிணிகளான துயருழன்று தடுமாறி
பெருகு தீய வினையி னொந்து
கதிகடோறும் அலைபொருந்தி
பிடிபடாத ஜனன நம்பி யழியாதே
நறைவிழாத மலர்முகந்த
அரிய மோன வழிதிறந்த
நளின பாத மெனது சிந்தை யகலாதே
நரர் சுராதிபரும்வணங்கும்
இனிய சேவை தனைவி ரும்பி
நலனதாக அடிய னென்று பெறுவேனோ
பொறிவழாத முநிவர்
தங்கள் நெறிவழாத பிலனு ழன்று
பொருநிசாசரனைநினைந்து வினைநாடி
பொருவிலாமல் அருள்புரிந்து
மயிலினேறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ்புனைந்த முருகோனே
சிறுவராகி யிருவர்
அந்த கரிபதாதி கொடுபொருஞ்சொல்
சிலையிராமனுடனெதிர்ந்து சமராடி
செயமதான நகர் அமர்ந்த
அளகை போல வளமிகுந்த சிறுவை மேவி
வரமி குந்த பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=k2ffKGs-t6I
Add (additional) Audio/Video Link

Back to Top

727   சிறுவை   வேல் இரண்டு  
தான தந்தன தானன தானன
     தான தந்தன தானன தானன
          தான தந்தன தானன தானன ...... தனதான

வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்
     காத லின்பொருள் மேவின பாதகர்
          வீணில் விண்டுள நாடிய ரூமைகள் ...... விலைகூறி
வேளை யென்பதி லாவசை பேசியர்
     வேசி யென்பவ ராமிசை மோகிகள்
          மீது நெஞ்சழி யாசையி லேயுழல் ...... சிறியேனும்
மால யன்பர னாரிமை யோர்முனி
     வோர் புரந்தர னாதிய ரேதொழ
          மாத வம்பெறு தாளிணை யேதின ...... மறவாதே
வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி
     யேவி ரும்பி வினாவுட னேதொழ
          வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் ...... களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளி
     நாட கம்பயில் நாரணி பூரணி
          நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... யுமைகாளி
நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ
     காம சுந்தரி யேதரு பாலக
          நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக ...... முருகேச
ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற
     மாநி லங்களெ லாநிலை யேதரு
          ஆய னந்திரு வூரக மால்திரு ...... மருகோனே
ஆட கம்பயில் கோபுர மாமதி
     லால யம்பல வீதியு மேநிறை
          வான தென்சிறு வாபுரி மேவிய ...... பெருமாளே.


வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள்
   காதலின் பொருள் மேவின பாதகர்
   வீணில் விண்டு உ(ள்)ள நாடியர் ஊமைகள் விலை கூறி
வேளை என்பது இ(ல்)லா வசை பேசியர்
   வேசி என்பவராம் இசை மோகிகள்
   மீது நெஞ்சு அழி ஆசையிலே உழல் சிறியேனும்
மால் அயன் பரனார் இமையோர் முனி
    வோர் புரந்தரன் ஆதியரே தொழ
    மா தவம் பெறு தாள் இணையே தினம் மறவாதே
வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே
   விரும்பி வினாவுடனே தொழ
   வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளி
    நாடகம் பயில் நாரணி பூரணி
   நீடு பஞ்சவி சூலினி மாலினி உமை காளி
நேயர் பங்கு எழு மாதவியாள் சிவ
   காம சுந்தரியே தரு பாலக
   நீர் பொரும் சடையார் அருள் தேசிக முருகேச
ஆலில் நின்று உலகோர் நிலையே பெற
   மா நிலங்கள் எல்லா நிலையே தரு
   ஆயன் நம் திருவூரகம் மால் திரு மருகோனே
ஆடகம் பயில் கோபுர மா மதில்
   ஆலயம் பல வீதியுமே நிறை
   வான தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000