![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: சிதம்பரம்
449 கனகசபை மேவும் 450 கைத்தருண சோதி 451 இருவினையின் மதி 452 குகனே குருபரனே 453 வண்டையொத்து 454 கங்குலின் குழல் 455 கொந்தளம் புழு 456 மந்தரமென் குவடார் 457 வந்து வந்துவித்தூறி 458 கதித்துப் பொங்கலு 459 சிரித்துச் சங்கொளி 460 தத்தையென்று 461 தனத்தில் குங்குமத்தை 462 திருடிகள் இணக்கி 463 கொந்தரம் குழல் 464 தியங்கும் சஞ்சலம் 465 பருவம் பணை 466 மதவெம் கரி 467 முகசந்திர புருவம் 468 சந்திர வோலை 469 காய மாய வீடு 470 அவகுண விரகனை 471 கட்டி முண்டக 472 நஞ்சினைப் போலுமன 473 செம் கலச 474 கரிய மேகமெனும் 475 கூந்தலாழ விரிந்து 476 அத்தன் அன்னை 477 இருள் காட்டு 478 முல்லைமலர் போலும் 479 அடப்பக்கம் பிடித்து 480 அக்குப் பீளை 481 ஆரத்தோடு அணி 482 காதைக் காதி 483 கொள்ளை ஆசை 484 தாது மாமலர் 485 எலுப்புத் தோல் 486 நீல மாமுகில் 487 வாத பித்தமொடு 488 சுரும்பு உற்ற 489 இணங்கித் தட்பொடு 490 விடுங்கைக்கு ஒத்த 491 கொந்தள வோலைகள் ஆட 492 நகையா லெத்திகள் 493 எழுகடல் மணலை 494 தறுகணன் மறலி 495 இரசபா கொத்தமொழி 496 இருளும் ஓர்கதிரணு 497 காவி உடுத்தும் 498 கோதிக் கோதி 499 சகசம்பக் குடைசூழ் 500 சகுட முந்தும் 501 சாந்துடனே புழுகு 502 சுடரனைய திருமேனி 503 தத்தை மயில் 504 துத்தி பொற்றன 505 நாடா பிறப்பு 506 நாலு சதுரத்த பஞ்ச 507 நீலக் குழலார் 508 பனி போலத் துளி 509 மகரமொடுறு குழை 510 மச்ச மெச்சு 511 மதிய மண்குண 512 மருவு கடல்முகில் 513 மனமே உனக்குறுதி 514 முத்த மோகன 515 பரமகுரு நாத
449
சிதம்பரம் கனகசபை மேவும் தனதனன தான தனதனன தான
தனதனன தானத் ...... தனதானா
கனகசபை மேவு மெனதுகுரு நாத
கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண்
கனகநிற வேத னபயமிட மோது
கரகமல சோதிப் ...... பெருமாள்காண்
வினவுமடி யாரை மருவிவிளை யாடு
விரகுரச மோகப் ...... பெருமாள்காண்
விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர்
விமலசர சோதிப் ...... பெருமாள்காண்
சனகிமண வாளன் மருகனென வேத
சதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண்
சரணசிவ காமி யிரணகுல காரி
தருமுருக நாமப் ...... பெருமாள்காண்
இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ
டியல்பரவு காதற் ...... பெருமாள்காண்
இணையிலிப தோகை மதியின்மக ளோடு
மியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.
கனகசபை மேவும் எனதுகுரு நாத
கருணை முருகேசப்.....பெருமாள்காண்
கனகநிற வேதன் அபயமிட மோது
கரகமல சோதிப்.....பெருமாள்காண்
வினவு மடியாரை மருவி விளையாடு
விரகு ரச மோகப்.....பெருமாள்காண்
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர்
விமல சர சோதிப்.....பெருமாள்காண்
சனகி மணவாளன் மருகனென வேத
சதமகிழ் குமாரப்.....பெருமாள்காண்
சரணசிவ காமி இரணகுல காரி
தருமுருக நாமப்.....பெருமாள்காண்
இனிதுவன மேவும் அமிர்தகுற மாதொடு
இயல்பரவு காதற்.....பெருமாள்காண்
இணையில் இப தோகை மதியின் மகளோடு
இயல்புலியுர் வாழ்பொற்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=fR1bp8szLo4
https://www.youtube.com/watch?v=Ngf4flbrDq4
Add (additional) Audio/Video Link
450
சிதம்பரம் கைத்தருண சோதி தத்ததன தான தத்ததன தான
தத்ததன தான ...... தனதான
கைத்தருண சோதி யத்திமுக வேத
கற்பகச கோத்ரப் ...... பெருமாள்காண்
கற்புசிவ காமி நித்யகலி யாணி
கத்தர்குரு நாதப் ...... பெருமாள்காண்
வித்துருப ராம ருக்குமரு கான
வெற்றி யயில் பாணிப் ...... பெருமாள்காண்
வெற்புளக டாக முட்குதிர வீசு
வெற்றிமயில் வாகப் ...... பெருமாள்காண்
சித்ரமுக மாறு முத்துமணி மார்பு
திக்கினினி லாதப் ...... பெருமாள்காண்
தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு
சித்திரகு மாரப் ...... பெருமாள்காண்
சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
தொட்டகவி ராஜப் ...... பெருமாள்காண்
துப்புவளி யோடு மப்புலியுர் மேவு
சுத்தசிவ ஞானப் ...... பெருமாளே.
கைத்தருண சோதி அத்திமுக வேத
கற்பக சகோத்ரப்.....பெருமாள்காண்
கற்பு சிவகாமி நித்யகலியாணி
கத்தர்குரு நாதப்.....பெருமாள்காண்
வித்துருப ராமருக்கு மருகான
வெற்றி அயில் பாணிப்.....பெருமாள்காண்
வெற்புள கடாகம் உட்குதிர வீசு
வெற்றிமயில் வாகப்.....பெருமாள்காண்
சித்ரமுகம் ஆறு முத்துமணி மார்பு
திக்கினில் இலாதப்.....பெருமாள்காண்
தித்திமிதி தீதென ஒத்திவிளையாடு
சித்திரகுமாரப்.....பெருமாள்காண்
சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
தொட்ட கவி ராஜப்.....பெருமாள்காண்
துப்புவளி யோடும் அப்புலியுர் மேவு
சுத்தசிவ ஞானப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=yDzrq6NbANk
Add (additional) Audio/Video Link
451
சிதம்பரம் இருவினையின் மதி தனதனன தனன தந்தத் ...... தனதானா
தனதனன தனன தந்தத் ...... தனதானா
இருவினையின் மதிம யங்கித் ...... திரியாதே
எழுநரகி லுழலு நெஞ்சுற் ...... றலையாதே
பரமகுரு அருள்நி னைந்திட் ...... டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற் ...... கருள்வாயே
தெரிதமிழை யுதவு சங்கப் ...... புலவோனே
சிவனருளு முருக செம்பொற் ...... கழலோனே
கருணைநெறி புரியு மன்பர்க் ...... கெளியோனே
கனகசபை மருவு கந்தப் ...... பெருமாளே.
இருவினையின் மதிம யங்கி திரியாதே
எழுநரகில் உழலும் நெஞ்சுற்று.....அலையாதே
பரமகுரு அருள்நினைந்திட்டு உணர்வாலே
பரவுதரி சனையை என்று எற்கு.....அருள்வாயே
தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே
சிவனருளு முருக செம்பொற்.....கழலோனே
கருணைநெறி புரியும் அன்பர்க் கெளியோனே
கனகசபை மருவு கந்தப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=0_Xe-7KzEuM
https://www.youtube.com/watch?v=azQSxgAfYog
Add (additional) Audio/Video Link
452
சிதம்பரம் குகனே குருபரனே தனன தனதன தானன தந்தத்
தனன தனதன தானன தந்தத்
தனன தனதன தானன தந்தத் ...... தனதான
குகனெ குருபர னேயென நெஞ்சிற்
புகழ அருள்கொடு நாவினி லின்பக்
குமுளி சிவவமு தூறுக வுந்திப் ...... பசியாறிக்
கொடிய இருவினை மூலமும் வஞ்சக்
கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக்
குலைய நமசிவ யோமென கொஞ்சிக் ...... களிகூரப்
பகலு மிரவுமி லாவெளி யின்புக்
குறுகி யிணையிலி நாடக செம்பொற்
பரம கதியிது வாமென சிந்தித் ...... தழகாகப்
பவள மனதிரு மேனியு டன்பொற்
சரண அடியவ ரார்மன வம்பொற்
றருண சரண்மயி லேறியு னம்பொற் ...... கழல்தாராய்
தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத்
தடுடு டுடுடுடு டாடக டிங்குட் ...... டியல்தாளம்
தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
கரடி தமருகம் வீணைகள் பொங்கத்
தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக்
ககன மறைபட ஆடிய செம்புட்
பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக்
கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் ...... தொடும்வேலா
கயிலை மலைதனி லாடிய தந்தைக்
குருக மனமுன நாடியெ கொஞ்சிக்
கனக சபைதனில் மேவிய கந்தப் ...... பெருமாளே.
குகனே குருபரனே என நெஞ்சில்
புகழ அருள் கொடு நாவினில் இன்ப
குமுளி சிவ அமுது ஊறுக உந்திப்.....பசி ஆறி
கொடிய இரு வினை மூலமும் வஞ்ச
கலிகள் பிணி இவை வேரொடு சிந்திக்
குலைய நம சிவ ஓம் என கொஞ்சி.....களி கூர
பகலும் இரவும் இலா வெளி இன்பு
குறுகி இணை இலி நாடக செம் பொன்
பரம கதி இதுவாம் என சிந்தித்து.....அழகாக
பவளம் அன திரு மேனியுடன் பொன்
சரண அடியவரார் ம(ன்)ன அம் பொன்
தருண சரண் மயில் ஏறி உன் அம் பொன்.....கழல் தாராய்
தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத்
தடுடு டுடுடுடு டாடக டிங்குட்டு.....இயல்தாளம்
தபலை திமிலைகள் பூரிகை பம்பை
கரடி தமருகம் வீணைகள் பொங்க
தடி அழனம் உக மாருதம் சண்ட.....சமர் ஏறி
ககனம் மறை பட ஆடிய செம் புள்
பசிகள் தணிவுற சூரர்கள் மங்க
கடல்கள் எறி பட நாகமும் அஞ்ச.....தொடும் வேலா
கயிலை மலை தனில் ஆடிய தந்தைக்கு
உருக மனம் முனம் நாடியே கொஞ்சி
கனக சபைதனில் மேவிய கந்தப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=askR0i79FzY
Add (additional) Audio/Video Link
453
சிதம்பரம் வண்டையொத்து தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன ...... தந்ததான
வண்டையொத் துக்கயல் கண்சுழற் றுப்புரு
வஞ்சிலைக் குத்தொடு அம்பையொத் துத்தொடை
வண்டுசுற் றுக்குழல் கொண்டலொத் துக்கமு ...... கென்பக்ரீவம்
மந்தரத் தைக்கட பொங்கிபத் துப்பணை
கொம்பையொத் துத்தன முந்துகுப் பத்தெரு
வந்துஎத் திப்பொரு மங்கையர்க் கைப்பொரு ...... ளன்பினாலே
கொண்டழைத் துத்தழு வுங்கைதட் டிற்பொருள்
கொண்டுதெட் டிச்சர சம்புகழ்க் குக்குன
குங்குழற் கிப்படி நொந்துகெட் டுக்குடில் ...... மங்குறாமல்
கொண்டுசத் திக்கட லுண்டுகுப் பத்துனி
னன்பருக் குச்செயல் தொண்டுபட் டுக்கமழ்
குங்குமத் திற்சர ணம்பிடித் துக்கரை ...... யென்றுசேர்வேன்
அண்டமிட் டிக்குட டிண்டிமிட் டிக்குகு
டந்தகொட் டத்தகு டிங்குதொக் கத்தம
டஞ்சகட் டைக்குண கொம்புடக் கைக்கிட ...... லென்பதாளம்
அண்டமெட் டுத்திசை யும்பல்சர்ப் பத்திரள்
கொண்டல்பட் டுக்கிரி யும்பொடித் துப்புல
னஞ்சவித் துத்திர ளண்டமுட் டத்துகள் ...... வந்தசூரர்
கண்டமற் றுக்குட லென்புநெக் குத்தச
னங்கடித் துக்குடி லஞ்சிவப் பச்செநிர்
கண்தெறிக் கத்தலை பந்தடித் துக்கையி ...... லங்குவேலால்
கண்களிக் கக்கக னந்துளுக் கப்புக
ழிந்திரற் குப்பதம் வந்தளித் துக்கன
கம்பலத் திற்குற மங்கைபக் கத்துறை ...... தம்பிரானே.
வண்டை ஒத்துக் கயல் கண் சுழற்றுப் புருவம்
சிலைக்குத் தொடு அம்பை ஒத்துத் தொடை
வண்டு சுற்றுக் குழல் கொண்டல் ஒத்து கமுகு.....என்ப க்ரீவம்
மந்தரத்தைக் கட(ம்) பொங்கு இபத்துப் பணை
கொம்பை ஒத்துத் தனம் முந்து கு(கூ)ப்ப தெரு
வந்து எத்திப் பொரு மங்கையர்க் கைப் பொருள்.....அன்பினாலே
கொண்டு அழைத்துத் தழுவும் கை தட்டில் பொருள்
கொண்டு தெட்டிச் சரசம் புகழ்க்குக் குனகும்
குழற்கு இப்படி நொந்து கெட்டுக் குடில்.....மங்கு உறாமல்
கொண்டு சத்திக் கடல் உண்டு உகப்பத் துன்
நின் அன்பருக்குச் செயல் தொண்டு பட்டுக் கமழ்
குங்குமத்தில் சரணம் பிடித்துக் கரை.....என்று சேர்வேன்
அண்டம் மிட்டிக் குட டிண்டிமிட்டிக்கு
குடந்த கொட்டத் தகு டிங்கு தொக்கத் தமடம்
சகட்டைக் குண கொம்பு (இ)டக்கைக்கு இடல்.....என்ப தாளம்
அண்டம் எட்டுத் திசை உ(ம்)பல் சர்ப்பத் திரள்
கொண்டல் பட்டுக் கிரியும் பொடித்து புலன்
அஞ்சு அவித்துத் திரள் அண்டம் முட்டத் துகள்.....வந்த சூரர்
கண்டம் அற்றுக் குடல் என்பு நெக்குத் தசனம்
கடித்துக் குடிலம் சிவப்பச் செ(ந்)நீர்
கண் தெறிக்கத் தலை பந்து அடித்துக் கையில்.....இலங்கு வேலால்
கண் களிக்கக் ககனம் துளுக்கப் புகழ்
இந்திரற்குப் பதம் வந்து அளித்துக் கனக
அம்பலத்தில் குற மங்கை பக்கத்து உறை.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
454
சிதம்பரம் கங்குலின் குழல் தந்த தந்தனத் தான தந்தன
தந்த தந்தனத் தான தந்தன
தந்த தந்தனத் தான தந்தன ...... தந்ததான
கங்கு லின்குழற் கார்மு கஞ்சசி
மஞ்ச ளின்புயத் தார்ச ரம்பெறு
கண்கள் கொந்தளக் காது கொஞ்சுக ...... செம்பொனாரம்
கந்த ரந்தரித் தாடு கொங்கைக
ளும்ப லின்குவட் டாமெ னுங்கிரி
கந்த முஞ்சிறுத் தேம லும்பட ...... சம்பைபோல
அங்க மைந்திடைப் பாளி தங்கொடு
குந்தி யின்குறைக் கால்ம றைந்திட
அண்சி லம்பொலிப் பாட கஞ்சரி ...... கொஞ்சமேவும்
அஞ்சு கங்குயிற் பூவை யின்குரல்
அங்கை பொன்பறிக் கார பெண்களொ
டண்டி மண்டையர்க் கூழி யஞ்செய்வ ...... தென்றுபோமோ
சங்கு பொன்தவிற் காள முந்துரி
யங்கள் துந்துமிக் காட திர்ந்திட
சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட ...... அண்டகோசம்
சந்தி ரன்பதத் தோர்வ ணங்கிட
இந்தி ரன்குலத் தார்பொ ழிந்திட
தந்தி ரம்புயத் தார்பு கழ்ந்திட ...... வந்தசூரைச்
செங்கை யுஞ்சிரத் தோடு பங்கெழ
அந்த கன்புரத் தேற வஞ்சகர்
செஞ்ச ரந்தொடுத் தேந டம்புரி ...... கந்தவேளே
திங்க ளொண்முகக் காமர் கொண்டவன்
கொங்கை மென்குறப் பாவை யுங்கொடு
செம்பொ னம்பலத் தேசி றந்தருள் ...... தம்பிரானே.
கங்குலின் கார் குழல் முகம் சசி
மஞ்சளின் புயத்தார் சரம் பெறு
கண்கள் கொந்தளக் காதுகொஞ்சுக.....செம் பொன் ஆரம்
கந்தரம் தரித்து ஆடு கொங்கைகள்
உம்பலின் குவட்டு ஆம் எனும் கிரி
கந்தமும் சிறு தேமலும் பட.....சம்பை போல
அங்கு அமைந்து இடை பாளிதம் கொடு
குந்தியின் குறைக் கால் மறைந்திட
அண் சிலம்பு ஒலிப் பாடகம் சரி.....கொஞ்ச மேவும்
அஞ்சுகம் குயில் பூவையின் குரல்
அம் கை பொன் பறிக்கார பெண்கள் ஓடு
அண்டி மண்டையர்க்கு ஊழியம் செய்வது.....என்று போமோ
சங்கு பொன் தவில் காளமும்
துரியங்கள் துந்துமிக் காடு அதிர்ந்திட
சந்த செம் தமிழ்ப் பாணர் கொஞ்சிட.....அண்ட கோசம்
சந்திரன் பதத்தோர் வணங்கிட
இந்திரன் குலத்தார் பொழிந்திட
தந்திரம் புயத்தார் புகழ்ந்திட.....வந்த சூரை
செம் கையும் சிரத்தோடு பங்கு எழ
அந்தகன் புரத்து ஏற வஞ்சகர்
செம் சரம் தொடுத்தே நடம் புரி.....கந்தவேளே
திங்கள் ஒண் முகக் காமர் கொண்டவன்
கொங்கை மென் குறப் பாவையும் கொடு
செம் பொன் அம்பலத்தே சிறந்து அருள்.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
455
சிதம்பரம் கொந்தளம் புழு தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன ...... தனதான
கொந்த ளம்புழு கெந்த வண்பனி
ரம்ப சம்ப்ரம ணிந்த மந்தர
கொங்கை வெண்கரி கொம்பி ணங்கிய ...... மடமாதர்
கொந்த ணங்குழ லின்ப மஞ்சள
ணிந்து சண்பக வஞ்சி ளங்கொடி
கொஞ்சு பைங்கிளி யன்பெ னுங்குயில் ...... மயில்போலே
வந்து பஞ்சணை யின்ப முங்கொடு
கொங்கை யும்புய முந்த ழும்புற
மஞ்சு வொண்கலை யுங்கு லைந்தவ ...... மயல்மேலாய்
வஞ்சி னங்கள்தி ரண்டு கண்செவி
யுஞ்சு கங்கள்தி ரும்பி முன்செய்த
வஞ்சி னங்களு டன்கி டந்துட ...... லழிவேனோ
தந்த னந்தன தந்த னந்தன
திந்தி மிந்திமி திந்தி மிந்திமி
சங்கு வெண்கல கொம்பு துந்துமி ...... பலபேரி
சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணி
தங்கு டுண்டுடு டுண்டு டன்பல
சந்தி ரம்பறை பொங்கு வஞ்சகர் ...... களமீதே
சிந்த வெண்கழு கொங்கு பொங்கெழு
செம்பு ளங்கரு டன்ப ருந்துகள்
செங்க ளந்திகை யெங்கு மண்டிட ...... விடும்வேலா
திங்க ளிந்திர னும்ப ரந்தர
ரும்பு கழ்ந்துரு கும்ப ரன்சபை
செம்பொ னம்பல மங்கொ ளன்பர்கள் ...... பெருமாளே.
கொந்தளம் புழுகு கெந்த வண் ப(ன்)னிர்
ரம்ப சம்ப்ரம் அணிந்த மந்தர
கொங்கை வெண் கரி கொம்பு இணங்கிய.....மட மாதர்
கொந்து அண் அம் குழல் இன்ப மஞ்சள்
அணிந்து சண்பக வஞ்சி இளம் கொடி
கொஞ்சு பைங்கிளி அன்பு எனும் குயில்.....மயில் போலே
வந்து பஞ்சணை இன்பமும் கொடு
கொங்கையும் புயமும் தழும்பு உற
மஞ்சு ஒண் கலையும் குலைந்து அவ(ம்).....மயல் மேலாய்
வஞ்சினங்கள் திரண்டு கண் செவியும்
சுகங்கள் திரும்பி முன் செய்த
வஞ்சினங்களுடன் கிடந்து உடல்.....அழிவேனோ
தந்தனந்தன தந்தனந்தன
திந்திமிந்திமி திந்திமிந்திமி
சங்கு வெண்கல கெம்பு துந்துமி.....பல பேரி
சஞ்சலஞ் சல கொஞ்சு கிண்கிணி
தங்கு டுண்டுடு டுண்டுடன் பல
சந்திர அம்பறை பொங்கு வஞ்சகர்.....களம் மீதே
சிந்த வெண் கழுகு ஒ(ஓ)ங்கு பொங்கு எழு
செம் புள் அம் கருடன் பருந்துகள்
செம் களம் திகை எங்கும் அண்டிட.....விடும் வேலா
திங்கள் இந்திரன் உம்பர் அந்தரரும்
புகழ்ந்து உருகும் பரன் சபை
செம் பொன் அம்பலம் அம்கொள் அன்பர்கள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
456
சிதம்பரம் மந்தரமென் குவடார் தந்தன தந்தன தான தந்தன
தான தனந்தன தான தந்தன
தந்தன தந்தன தான தந்தன
தான தனந்தன தான தந்தன
தந்தன தந்தன தான தந்தன
தான தனந்தன தான தந்தன ...... தந்ததான
மந்தர மென்குவ டார்த னங்களி
லார மழுந்திட வேம ணம்பெறு
சந்தன குங்கும சேறு டன்பனி
நீர்கள் கலந்திடு வார்மு கஞ்சசி
மஞ்சுறை யுங்குழ லார்ச ரங்கயல்
வாள்வி ழிசெங்கழு நீர்த தும்பிய ...... கொந்தளோலை
வண்சுழ லுஞ்செவி யார்நு டங்கிடை
வாட நடம்புரி வார்ம ருந்திடு
விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்
மோக னவஞ்சியர் போல கம்பெற
வந்தவ ரெந்தவுர் நீர றிந்தவர்
போல இருந்ததெ னாம யங்கிட ...... இன்சொல்கூறிச்
சுந்தர வங்கண மாய்நெ ருங்கிநிர்
வாரு மெனும்படி யால கங்கொடு
பண்சர சங்கொள வேணு மென்றவர்
சேம வளந்துறு தேன ருந்திட
துன்றுபொ னங்கையின் மீது கண்டவ
ரோடு விழைந்துமெ கூடி யின்புறு ...... மங்கையோரால்
துன்பமு டங்கழி நோய்சி ரங்கொடு
சீபு ழுவுஞ்சல மோடி றங்கிய
புண்குட வன்கடி யோடி ளஞ்சனி
சூலை மிகுந்திட வேப றந்துடல்
துஞ்சிய மன்பதி யேபு குந்துய
ராழி விடும்படி சீர்ப தம்பெறு ...... விஞ்சைதாராய்
அந்தர துந்துமி யோடு டன்கண
நாதர் புகழ்ந்திட வேத விஞ்சைய
ரிந்திர சந்திரர் சூரி யன்கவி
வாணர் தவம்புலி யோர்ப தஞ்சலி
அம்புய னந்திரு மாலொ டிந்திரை
வாணி யணங்கவ ளோட ருந்தவர் ...... தங்கள்மாதர்
அம்பர ரம்பைய ரோடு டன்திகழ்
மாவு ரகன்புவி யோர்கள் மங்கையர்
அம்புவி மங்கைய ரோட ருந்ததி
மாதர் புகழ்ந்திட வேந டம்புரி
அம்புய செம்பதர் மாட கஞ்சிவ
காம சவுந்தரி யாள்ப யந்தருள் ...... கந்தவேளே
திந்திமி திந்திமி தோதி மிந்திமி
தீத திதிந்தித தீதி திந்திமி
தந்தன தந்தன னாத னந்தன
தான தனந்தன னாவெ னும்பறை
செந்தவில் சங்குட னேமு ழங்கசு
ரார்கள் சிரம்பொடி யாய்வி டுஞ்செயல் ...... கண்டவேலா
செந்தினை யின்புன மேர்கு றிஞ்சியில்
வாழு மிளங்கொடி யாள்ப தங்களில்
வந்துவ ணங்கிநி ணேமு கம்பெறு
தாள ழகங்கையின் வேலு டன்புவி
செம்பொனி னம்பல மேல கம்பிர
கார சமந்திர மீத மர்ந்தருள் ...... தம்பிரானே.
மந்தரம் என் குவடு ஆர் தனங்களில்
ஆரம் அழுந்திடவே மணம் பெறு
சந்தன குங்கும சேறுடன் பனி
நீர்கள் கலந்திடுவார் முகம் சசி
மஞ்சு உறையும் குழலார் சரம் கயல்
வாள் விழி செம் கழு நீர் ததும்பிய.....கொந்தள ஓலை
வண் சுழலும் செவியார் நுடங்கு இடை
வாட நடம் புரிவார் மருந்திடு
விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில்
மோகன வஞ்சியர் போல் அகம் பெற
வந்தவர் எந்த உ(ஊ)ர் நீர் அறிந்தவர்
போல இருந்தது எனா மயங்கிட.....இன் சொல் கூறி
சுந்தர வங்கணமாய் நெருங்கி நி(நீ)ர்
வாரும் எனும் படி ஆல அகம் கொடு
பண் சரசம் கொள வேணும் என்று அவர்
சேம வளம் துறு தேன் அருந்திட
துன்று பொன் அங்கையின் மீது கண்டு
அவரோடு விழைந்துமே கூடி இன்புறு.....மங்கையோரால்
துன்பம் முடங்கு அழி நோய் சிரங்கொடு
சீ புழுவும் சலம் ஓடு இறங்கிய
புண் குடவன் கடியோடு இளம் ச(ன்)னி
சூலை மிகுந்திடவே பறந்து உடல்
துஞ்சிய மன் பதியே புகும் துயர்
ஆழி விடும்படி சீர் பதம் பெறு.....விஞ்சை தாராய்
அந்தர துந்துமியோடு உடன் கண
நாதர் புகழ்ந்திட வேத விஞ்சையர்
இந்திர சந்திரர் சூரியன் கவி
வாணர் தவம் புலியோர் பதஞ்சலி
அம்புயன் அம் திருமாலொடு இந்திரை
வாணி அணங்கு அவளோடு அரும் தவர்.....தங்கள் மாதர்
அம்பர ரம்பையரோடு உடன் திகழ்
மா உரகன் புவியோர்கள் மங்கையர்
அம் புவி மங்கையரோடு அருந்ததி
மாதர் புகழ்ந்திடவே நடம் புரி
அம் புய செம் பதர் மாடு அகம் சிவ
காம சவுந்தரியாள் பயந்து அருள்.....கந்த வேளே
திந்திமி திந்திமி தோதி மிந்திமி
தீத திதிந்தித தீதி திந்திமி
தந்தன தந்தன னாத னந்தன
தான தனந்தன னா எனும் பறை
செம் தவில் சங்குடனே முழங்க
அசுரார்கள் சிரம் பொடியாய் விடும் செயல்.....கண்ட வேலா
செம் தினையின் புனம் ஏர் குறிஞ்சியில்
வாழும் இளம் கொடியாள் பதங்களில்
வந்து வணங்கி நிணே முகம் பெறு
தாள் அழக அம்கையின் வேலுடன் புவி
செம் பொ(ன்)னின் அம்பலம் மேல் அகம் பிரகார
சமந்திர மீது அமர்ந்து அருள்.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
457
சிதம்பரம் வந்து வந்துவித்தூறி தந்த தந்தனத் தான தந்ததன
தந்த தந்தனத் தான தந்ததன
தந்த தந்தனத் தான தந்ததன் ...... தந்ததான
வந்து வந்துவித் தூறி யென்றனுடல்
வெந்து வெந்துவிட் டோட நொந்துயிரும்
வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி ...... வங்களாலே
மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது
சிந்தை சந்தொஷித் தாளு கொண்டருள
வந்து சிந்துரத் தேறி யண்டரொடு ...... தொண்டர்சூழ
எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ
சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க
னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர ...... மந்திமேவும்
எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி
சுந்த ரந்திருப் பாத பங்கயமும்
என்றன் முந்துறத் தோணி யுன்றனது ...... சிந்தைதாராய்
அந்த ரந்திகைத் தோட விஞ்சையர்கள்
சிந்தை மந்திரத் தோட கெந்தருவ
ரம்பு யன்சலித் தோட எண்டிசையை ...... யுண்டமாயோன்
அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென
வந்த வெஞ்சினர்க் காடெ ரிந்துவிழ
அங்கி யின்குணக் கோலை யுந்திவிடு ...... செங்கைவேலா
சிந்து ரம்பணைக் கோடு கொங்கைகுற
மங்கை யின்புறத் தோள ணைந்துருக
சிந்து ரந்தனைச் சீர்ம ணம்புணர்நல் ...... கந்தவேளே
சிந்தி முன்புரக் காடு மங்கநகை
கொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ்
செம்பொ னம்பலத் தாடு மம்பலவர் ...... தம்பிரானே.
வந்து வந்துவித்தூறி என்றனுடல்
வெந்து வெந்துவிட்டோட நொந்து உயிரும்
வஞ்சி னங்களிற் காடு கொண்ட.....வடிவங்களாலே
மங்கி மங்கிவிட் டேனை உன்றனது
சிந்தை சந்தொஷித் தாளு கொண்டருள
வந்து சிந்துரத் தேறி யண்டரொடு.....தொண்டர்சூழ
எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ
சந்தர் அண்டிசைத் தேவ ரம்பையர்
கனிந்து பந்தடித் தாடல் கொண்டுவர.....மந்திமேவும்
எண்கடம்பணித் தோளும் அம்பொன்முடி
சுந்தரந்திருப் பாத பங்கயமும்
என்றன் முந்துறத் தோணி உன்றனது.....சிந்தைதாராய்
அந்தரந் திகைத்தோட விஞ்சையர்கள்
சிந்தை மந்திரத்தோட கெந்தருவர்
அம்புயன் சலித்தோட எண்டிசையை.....யுண்டமாயோன்
அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென
வந்த வெஞ்சினர்க் காடெரிந்துவிழ
அங்கி யின்குணக் கோலை யுந்திவிடு.....செங்கைவேலா
சிந்துரம் பணைக் கோடு கொங்கைகுற
மங்கை இன்புற தோள ணைந்துருக
சிந்துரந்தனைச் சீர் மணம் புணர்நல்.....கந்தவேளே
சிந்தி முன்புரக் காடு மங்கநகை
கொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ்
செம்பொனம்பலத் தாடும் அம்பலவர்.....தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=OwcfnLKwj3U
Add (additional) Audio/Video Link
458
சிதம்பரம் கதித்துப் பொங்கலு தனத்தத்தம் தனத்தத்தத்
தனத்தத்தம் தனத்தத்தத்
தனத்தத்தம் தனத்தத்தத் ...... தனதான
கதித்துப்பொங் கலுக்கொத்துப்
பணைத்துக்கொம் பெனத்தெற்றிக்
கவித்துச்செம் பொனைத்துற்றுக் ...... குழலார்பின்
கழுத்தைப்பண் புறக்கட்டிச்
சிரித்துத்தொங் கலைப்பற்றிக்
கலைத்துச்செங் குணத்திற்பித் ...... திடுமாதர்
பதித்துத்தந் தனத்தொக்கப்
பிணித்துப்பண் புறக்கட்டிப்
பசப்பிப்பொன் தரப்பற்றிப் ...... பொருள்மாளப்
பறித்துப்பின் துரத்துச்சொற்
கபட்டுப்பெண் களுக்கிச்சைப்
பலித்துப்பின் கசுத்திப்பட் ...... டுழல்வேனோ
கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற்
கொதித்துச்சங் கரித்துப்பற்
கடித்துச்சென் றுழக்கித்துக் ...... கசுரோரைக்
கழித்துப்பண் டமர்க்குச்செப்
பதத்தைத்தந் தளித்துக்கைக்
கணிக்குச்சந் தரத்தைச்சுத் ...... தொளிர்வேலா
சிதைத்திட்டம் புரத்தைச்சொற்
கயத்தைச்சென் றுரித்துத்தற்
சினத்தக்கன் சிரத்தைத்தட் ...... சிவனார்தஞ்
செவிக்குச்செம் பொருட்கற்கப்
புகட்டிச்செம் பரத்திற்செய்த்
திருச்சிற்றம் பலச்சொக்கப் ...... பெருமாளே.
கதித்துப் பொங்கு அ(ல்)லுக்கு ஒத்துப்
பணைத்துக் கொம்பு எனத் தெற்றிக்
கவித்துச் செம் பொ(ன்)னைத் துற்றுக்.....குழலார் பின்
கழுத்தைப் பண்புறக் கட்டிச்
சிரித்துத் தொங்கலைப் பற்றிக்
கலைத்துச் செம் குணத்தில் பித்து.....இடு மாதர்
பதித்து தம் தனத்து ஒக்கப்
பிணித்துப் பண்புறக் கட்டிப்
பசப்பிப் பொன் தரப் பற்றிப்.....பொருள் மாளப்
பறித்துப் பின் துரத்துச் சொல்
கபட்டுப் பெண்களுக்கு இச்சைப்
பலித்துப் பின் கசுத்திப் பட்டு.....உழல்வேனோ
கதித்துக் கொண்டு எதிர்த்துப் பின்
கொதித்துச் சங்கரித்துப் பல்
கடித்துச் சென்று உழக்கித் துக்க.....அசுரோரைக்
கழித்து பண்டு அமர்க்குச் செம்
பதத்தைத் தந்து அளித்துக் கைக்கு
அணிக் குச்சம் தரத்து ஐச் சுத்த.....ஒளிர் வேலா
சிதைத்திட்டு அம்புரத்தைச் சொல்
கயத்தைச் சென்று உரித்துத் தன்
சினத் தக்கன் சிரத்தைத் தள்.....சிவனார்தம்
செவிக்குச் செம் பொருள் கற்கப்
புகட்டிச் செம் பரத்தில் செய்த்
திருச்சிற்றம்பலச் சொக்கப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
459
சிதம்பரம் சிரித்துச் சங்கொளி தனத்தத் தந்தன தானன தானன
தனத்தத் தந்தன தானன தானன
தனத்தத் தந்தன தானன தானன ...... தனதான
சிரித்துச் சங்கொளி யாமின லாமென
வுருக்கிக் கொங்கையி னாலுற மேல்விழு
செணத்திற் சம்பள மேபறி காரிகள் ...... சிலபேரைச்
சிமிட்டிக் கண்களி னாலுற வேமயல்
புகட்டிச் செந்துகி லால்வெளி யாயிடை
திருத்திப் பண்குழ லேய்முகி லோவிய ...... மயில்போலே
அருக்கிப் பண்புற வேகலை யால்முலை
மறைத்துச் செந்துவர் வாயமு தூறல்க
ளளித்துப் பொன்குயி லாமென வேகுரல் ...... மிடறோதை
அசைத்துக் கொந்தள வோலைக ளார்பணி
மினுக்கிச் சந்தன வாசனை சேறுட
னமைத்துப் பஞ்சணை மீதணை மாதர்க ...... ளுறவாமோ
இரைத்துப் பண்டம ராவதி வானவ
ரொளித்துக் கந்தசு வாமிப ராபர
மெனப்பட் டெண்கிரி ஏழ்கடல் தூள்பட ...... அசுரார்கள்
இறக்கச் சிங்கம தேர்பரி யானையொ
டுறுப்பிற் செங்கழு கோரிகள் கூளியொ
டிரத்தச் சங்கம தாடிட வேல்விடு ...... மயில்வீரா
சிரித்திட் டம்புர மேமத னாருட
லெரித்துக் கண்டக பாலியர் பாலுறை
திகழ்ப்பொற் சுந்தரி யாள்சிவ காமிநல் ...... கியசேயே
திருச்சித் தந்தனி லேகுற மானதை
யிருத்திக் கண்களி கூர்திக ழாடக
திருச்சிற் றம்பல மேவியு லாவிய ...... பெருமாளே.
சிரித்துச் சங்கு ஒளியாம் மி(ன்)னலாம் என
உருக்கிக் கொங்கையினால் உற மேல் விழு
செணத்தில் சம்பளமே பறி காரிகள்.....சில பேரைச்
சிமிட்டிக் கண்களினால் உறவே மயல்
புகட்டிச் செம் துகிலால் வெளியாய் இடை
திருத்திப் பண் குழல் ஏய் முகில் ஓவிய.....மயில் போலே
அருக்கி பண்பு உறவே கலையால் முலை
மறைத்துச் செம் துவர் வாய் அமுது ஊறல்கள்
அளித்துப் பொன் குயிலாம் எனவே குரல்.....மிடறு ஓதை
அசைத்து கொந்தள ஓலைகள் ஆர் பணி
மினுக்கிச் சந்தன வாசனை சேறுடன்
அமைத்துப் பஞ்சு அணை மீது அணை மாதர்கள்.....உறவாமோ
இரைத்துப் பண்டு அமராவதி வானவர்
ஒளித்துக் கந்த சுவாமி பராபரம்
எனப் பட்டு எண்கிரி ஏழ் கடல் தூள் பட.....அசுரார்கள்
இறக்க சிங்கம் தேர் பரி யானையொடு
உறுப்பில் செம் கழுகு ஒரிகள் கூளியொடு
இரத்தச் சங்கமது ஆடிட வேல் விடு.....மயில் வீரா
சிரித்திட்டு அம் புரமே மதனார் உடல்
எரித்துக் கண்ட கபாலியர் பால் உறை
திகழ் பொன் சுந்தரியாள் சிவகாமி.....நல்கிய சேயே
திருச் சித்தம் தனிலே குற மான் அதை
இருத்திக் கண் களி கூர் திகழ் ஆடக
திருச் சிற்றம்பலம் மேவி உலாவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
460
சிதம்பரம் தத்தையென்று தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன ...... தந்ததான
தத்தையென் றொப்பிடுந் தோகைநட் டங்கொளுவர்
பத்திரங் கட்கயங் காரியொப் புங்குழல்கள்
சச்சையங் கெச்சையுந் தாளவொத் தும்பதுமை ...... யென்பநீலச்
சக்கரம் பொற்குடம் பாலிருக் குந்தனமொ
டொற்றிநன் சித்திரம் போலஎத் தும்பறியர்
சக்களஞ் சக்கடஞ் சாதிதுக் கங்கொலையர் ...... சங்கமாதர்
சுத்திடும் பித்திடும் சூதுகற் குஞ்சதியர்
முற்பணங் கைக்கொடுந் தாருமிட் டங்கொளுவர்
சொக்கிடும் புக்கடன் சேருமட் டுந்தனகும் ...... விஞ்சையோர்பால்
தொக்கிடுங் கக்கலுஞ் சூலைபக் கம்பிளவை
விக்கலுந் துக்கமுஞ் சீதபித் தங்கள்கொடு
துப்படங் கிப்படுஞ் சோரனுக் கும்பதவி ...... யெந்தநாளோ
குத்திரங் கற்றசண் டாளர்சத் தங்குவடு
பொட்டெழுந் திட்டுநின் றாடஎட் டந்திகையர்
கொற்றமுங் கட்டியம் பாடநிர்த் தம்பவுரி ...... கொண்டவேலா
கொற்றர்பங் குற்றசிந் தாமணிச் செங்குமரி
பத்தரன் புற்றஎந் தாயெழிற் கொஞ்சுகிளி
கொட்புரந் தொக்கவெந் தாடவிட் டங்கிவிழி ...... மங்கைபாலா
சித்திரம் பொற்குறம் பாவைபக் கம்புணர
செட்டியென் றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரி
சிற்சிதம் பொற்புயஞ் சேரமுற் றும்புணரு ...... மெங்கள்கோவே
சிற்பரன் தற்பரன் சீர்திகழ்த் தென்புலியுர்
ருத்திரன் பத்திரஞ் சூலகர்த் தன்சபையில்
தித்தியென் றொத்திநின் றாடுசிற் றம்பலவர் ...... தம்பிரானே.
தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர்
பத்திரம் கண் கயல் காரி ஒப்பும் குழல்கள்
சச்சை அம் கெச்சையும் தாள ஒத்தும் பதுமை.....என்ப நீலச்
சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு
ஒற்றி நன் சித்திரம் போல எத்தும் பறியர்
சக் க(ள்)ளம் சக்கடம் சாதி துக்க கொலையர்.....சங்க மாதர்
சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர்
முன் பணம் கைக் கொடு உந்து ஆரும் இட்டம் கொளுவர்
சொக்கி இடும்புக் கடன் சேரு மட்டும் தனகும்.....விஞ்சையோர் பால்
தொக்கிடும் கக்கலும் சூலை பக்கம் பிளவை
விக்கலும் துக்கமும் சீத பித்தங்கள் கொடு
துப்பு அடங்கிப் படும் சோரனுக்கும் பதவி எந்த நாளோ
குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு
பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர்
கொற்றமும் கட்டியம் பாட நிர்த்தம் பவுரி.....கொண்ட வேலா
கொற்றர் பங்கு உற்ற சிந்தாமணிச் செம் குமரி
பத்தர் அன்புற்ற எம் தாய் எழில் கொஞ்சு கிளி
கொட்(கு) புரம் தொக்க வெந்து ஆடவிட்டு அங்கி விழி.....மங்கை பாலா
சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர
செட்டி என்று எத்தி வந்து ஆடி நிர்த்தங்கள் புரி
சில் சிதம் பொன் புயம் சேர முற்றும் புணரும்.....எங்கள் கோவே
சிற் பரன் தற்பரன் சீர் திகழ்த் தென் புலியூர்
ருத்திரன் பத்திர அம் சூல(ம்) கர்த்தன் சபையில்
தித்தி என்று ஒத்தி நின்று ஆடு சிற்றம்பலவர்.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
461
சிதம்பரம் தனத்தில் குங்குமத்தை தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந் ...... தனதான
தனத்திற்குங் குமத்தைச்சந்
தனத்தைக்கொண் டணைத்துச்சங்
கிலிக்கொத்தும் பிலுக்குப்பொன்
தனிற்கொத்துந் தரித்துச்சுந்
தரத்திற்பண் பழித்துக்கண்
சுழற்றிச்சண் பகப்புட்பங் ...... குழல்மேவித்
தரத்தைக்கொண் டசைத்துப்பொன்
தகைப்பட்டுந் தரித்துப்பின்
சிரித்துக்கொண் டழைத்துக்கொந்
தளத்தைத்தண் குலுக்கிச்சங்
கலப்புத்தன் கரத்துக்கொண்
டணைத்துச்சம் ப்ரமித்துக்கொண் ...... டுறவாடிப்
புனித்தப்பஞ் சணைக்கட்டிண்
படுத்துச்சந் தனப்பொட்டுங்
குலைத்துப்பின் புயத்தைக்கொண்
டணைத்துப்பின் சுகித்திட்டின்
புகட்டிப்பொன் சரக்கொத்துஞ்
சிதைப்பப்பொன் தரப்பற்றும் ...... பொதுமாதர்
புணர்ப்பித்தும் பிடித்துப்பொன்
கொடுத்துப்பின் பிதிர்ச்சித்தன்
திணிக்கட்டுஞ் சிதைத்துக்கண்
சிறுப்பப்புண் பிடித்தப்புண்
புடைத்துக்கண் பழுத்துக்கண்
டவர்க்குக்கண் புதைப்பச்சென் ...... றுழல்வேனோ
சினத்துக்கண் சிவப்பச்சங்
கொலிப்பத்திண் கவட்டுச்செங்
குவட்டைச்சென் றிடித்துச்செண்
டரைத்துக்கம் பிடிக்கப்பண்
சிரத்தைப்பந் தடித்துக்கொண்
டிறைத்துத்தெண் கடற்றிட்டுங் ...... கொளைபோகச்
செழித்துப்பொன் சுரர்ச்சுற்றங்
களித்துக்கொண் டளிப்புட்பஞ்
சிறக்கப்பண் சிரத்திற்கொண்
டிறைத்துச்செம் பதத்திற்கண்
திளைப்பத்தந் தலைத்தழ்த்தம்
புகழ்ச்செப்புஞ் சயத்துத்திண் ...... புயவேளே
பனித்துட்கங் கசற்குக்கண்
பரப்பித்தன் சினத்திற்றிண்
புரத்தைக்கண் டெரித்துப்பண்
கயத்தைப்பண் டுரித்துப்பன்
பகைத்தக்கன் தவத்தைச்சென்
றழித்துக்கொன் றடற்பித்தன் ...... தருவாழ்வே
படைத்துப்பொன் றுடைத்திட்பன்
தனைக்குட்டும் படுத்திப்பண்
கடிப்புட்பங் கலைச்சுற்றும்
பதத்தப்பண் புறச்சிற்றம்
பலத்திற்கண் களித்தப்பைம்
புனத்திற்செங் குறத்திப்பெண் ...... பெருமாளே.
தனத்தில் குங்குமத்தைச்
சந்தனத்தைக் கொண்டு அணைத்துச்
சங்கிலிக் கொத்தும் பிலுக்குப் பொன்
தனில் கொத்தும் தரித்துச்
சுந்தரத்தில் பண்பு அழித்து கண்
சுழற்றிச் சண்பகப் புட்பம்.....குழல் மேவித்
தரத்தைக் கொண்டு அசைத்துப் பொன்
தகைப் பட்டும் தரித்துப் பின்
சிரித்துக் கொண்டு அழைத்துக்
கொந்தளத்தைத் தண் குலுக்கி சங்கு
அலப்புத் தன் கரத்துக் கொண்டு
அணைத்துச் சம்ப்ரமித்துக் கொண்டு.....உறவாடிப்
புனித்தப் பஞ்சு அணைக் கண் திண்
படுத்துச் சந்தனப் பொட்டும்
குலைத்துப் பின் புயத்தைக் கொண்டு
அணைத்து பின் சுகித்திட்டு இன்பு
கட்டிப் பொன் சரக் கொத்தும்
சிதைப்பப் பொன் தரப்பற்றும்.....பொது மாதர்
புணர்ப் பித்தும் பிடித்துப் பொன்
கொடுத்துப் பின் பிதிர்ச் சித்தன்
திணிக் கட்டும் சிதைத்துக் கண்
சிறுப்பப் புண் பிடித்த அப்புண்
புடைத்துக் கண் பழுத்துக் கண்
டவர்க்குக் கண் புதைப்பச் சென்று.....உழல்வேனோ
சினத்துக் கண் சிவப்பச் சங்கு
ஒலிப்பத் திண் கவட்டுச் செம்
குவட்டைச் சென்று இடித்துச் செண்
தரைத் துக்கம் பிடிக்கப் பண்
சிரத்தைப் பந்தடித்துக் கொண்டு
இறைத்துத் தெண் கடல் திட்டும்.....கொ(ள்)ளை போக
செழித்துப் பொன் சுரர் சுற்றம்
களித்துக் கொண்டு அளிப் புட்பம்
சிறக்கப் பண் சிரத்தில் கொண்டு
இறைத்துச் செம் பதத்தில் கண்
திளைப்பத் தந்து தலைத் தழ்த்து அம்
புகழ்ச் செப்பும் சயத்துத் திண்.....புய வேளே
பனித்து உட்க அங்கசற்குக் கண்
பரப்பித் தன் சினத்தில் திண்
புரத்தைக் கண்டு எரித்துப் பண்
கயத்தைப் பண்டு உரித்துப்பன்
பகைத் தக்கன் தவத்தைச் சென்று
அழித்துக் கொன்ற அடல் பித்தன்.....தரு வாழ்வே
படைத் துப்பு ஒன்றுடைத் திட்பன்
தனைக் குட்டும் படுத்திப் பண்
கடிப் புட்பம் கலைச் சுற்றும்
பதத்த பண்புறச் சிற்றம்
பலத்தின் கண் களித்தப் பைம்
புனத்தில் செம் குறத்திப் பெண்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
462
சிதம்பரம் திருடிகள் இணக்கி தனதன தனத்தத் தந்த தந்தன
தனதன தனத்தத் தந்த தந்தன
தனதன தனத்தத் தந்த தந்தன ...... தனதான
திருடிக ளிணக்கிச் சம்ப ளம்பறி
நடுவிகள் மயக்கிச் சங்க முண்கிகள்
சிதடிகள் முலைக்கச் சும்பல் கண்டிகள் ...... சதிகாரர்
செவிடிகள் மதப்பட் டுங்கு குண்டிகள்
அசடிகள் பிணக்கிட் டும்பு றம்பிகள்
செழுமிக ளழைத்திச் சங்கொ ளுஞ்செயர் ...... வெகுமோகக்
குருடிகள் நகைத்திட் டம்பு லம்புக
ளுதடிகள் கணக்கிட் டும்பி ணங்கிகள்
குசலிகள் மருத்திட் டுங்கொ டுங்குணர் ...... விழியாலே
கொளுவிகள் மினுக்குச் சங்கி ரங்கிகள்
நடனமு நடித்திட் டொங்கு சண்டிகள்
குணமதில் முழுச்சுத் தசங்க்ய சங்கிக ...... ளுறவாமோ
இருடிய ரினத்துற் றும்ப தங்கொளு
மறையவ னிலத்தொக் குஞ்சு கம்பெறு
மிமையவ ரினக்கட் டுங்கு லைந்திட ...... வருசூரர்
இபமொடு வெதித்தச் சிங்க மும்பல
இரதமொ டெதத்திக் கும்பி ளந்திட
இவுளியி ரதத்துற் றங்க மங்கிட ...... விடும்வேலா
அரிகரி யுரித்திட் டங்க சன்புர
மெரிதர நகைத்துப் பங்க யன்சிர
மளவொடு மறுத்துப் பண்ட ணிந்தவ ...... ரருள்கோனே
அமரர்த மகட்கிட் டம்பு ரிந்துநல்
குறவர்த மகட்பக் கஞ்சி றந்துற
அழகிய திருச்சிற் றம்ப லம்புகு ...... பெருமாளே.
திருடிகள் இணக்கிச் சம்பளம் பறி
நடுவிகள் மயக்கிச் சங்க(ம்) உண்கிகள்
சிதடிகள் முலைக் கச்சு உம்பல் கண்டிகள்.....சதி காரர்
செவிடிகள் மதப்பட்டு உங்கு(ம்) குண்டிகள்
அசடிகள் பிணக்கிட்டும் புறம்பிகள்
செழுமிகள் அழைத்து இச்சம் கொ(ள்)ளும் செ(ய்)யர்.....வெகு மோகக்
குருடிகள் நகைத்து இட்டம் புலம்பு கள்
உதடிகள் கணக்கிட்டும் பிணங்கிகள்
குசலிகள் மருத்து இட்டும் கொடும் குணர்.....விழியாலே
கொளுவிகள் மினுக்குச் சங்கு இரங்கிகள்
நடனமு(ம்) நடித்திட்டு ஒங்கு சண்டிகள்
குணம் அதில் முழுச் சுத்த அசங்க்ய சங்கிகள்.....உறவு ஆமோ
இருடியர் இனத்து உற்று உம் பதம் கொ(ள்)ளும்
மறையவன் நிலத் தொக்கும் சுகம் பெறும்
இமையவர் இனக் கட்டும் குலைந்திட.....வரு சூரர்
இபமொடு வெதித்தச் சிங்கமும் பல
இரதமொடு எ(ந்)தத் திக்கும் பிளந்திட
இவுளி இரதத்து உற்று அங்க(ம்) மங்கிட.....விடும் வேலா
அரி கரி உரித்திட்டு அங்கசன் புரம்
எரிதர நகைத்துப் பங்கயன் சிரம்
அளவொடும் அறுத்துப் பண்டு அணிந்தவர்.....அருள் கோவே
அமரர் த(ம்) மகட்கு இட்டம் புரிந்து நல்
குறவர் த(ம்) மகள் பக்கம் சிறந்து உற
அழகிய திருச் சிற்றம்பலம் புகு.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
463
சிதம்பரம் கொந்தரம் குழல் தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன ...... தந்ததான
கொந்த ரங்குழ லிந்து வண்புரு
வங்கள் கண்கய லுஞ்ச ரங்கணை
கொண்ட ரம்பைய ரந்த முஞ்சசி ...... துண்டமாதர்
கொந்த ளங்கதி ரின்கு லங்களி
னுஞ்சு ழன்றிர சம்ப லங்கனி
கொண்ட நண்பித ழின்சு கங்குயி ...... லின்சொல்மேவுந்
தந்த வந்தர ளஞ்சி றந்தெழு
கந்த ரங்கமு கென்ப பைங்கழை
தண்பு யந்தளி ரின்கு டங்கைய ...... ரம்பொனாரந்
தந்தி யின்குவ டின்த னங்களி
ரண்டை யுங்குலை கொண்டு விண்டவர்
தங்க டம்படி யுங்க வண்டிய ...... சிந்தையாமோ
மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர்
தங்க டைந்தவ னஞ்சு மங்குலி
மந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெற ...... எந்தவாழ்வும்
வந்த ரம்பையெ ணும்ப கிர்ந்துந
டங்கொ ளுந்திரு மங்கை பங்கினன்
வண்டர் லங்கையு ளன்சி ரம்பொடி ...... கண்டமாயோன்
உந்தி யின்புவ னங்க ளெங்கும
டங்க வுண்டகு டங்கை யன்புக
ழொண்பு ரம்பொடி கண்ட எந்தையர் ...... பங்கின்மேவும்
உம்ப லின்கலை மங்கை சங்கரி
மைந்த னென்றய னும்பு கழ்ந்திட
வொண்ப ரந்திரு வம்ப லந்திகழ் ...... தம்பிரானே.
கொந்தர் அம் குழல் இந்து வண்
புருவங்கள் கண் கயலும் சரம் கணை
கொண்டு அரம்பையர் அந்தமும் சசி.....துண்டம் மாதர்
கொந்தளம் கதிரின் குலங்களில்
உஞ்சு உழன்று இரசம் பலம் கனி
கொண்ட நண்பு இதழின் சுகம் குயிலின்.....சொல் மேவும்
தந்த(ம்) அம் தரளம் சிறந்து எழு
கந்தரம் கமுகு என்ப பைங் கழை
தண் புயம் தளிரின் குடங்கையர் அம்.....பொன் ஆரம்
தந்தியின் குவடின் தனங்கள்
இரண்டையும் குலை கொண்டு விண்டவர்
தம் கடம் படியும் கவண் தீய.....சிந்தையாமோ
மந்தரம் கடலும் சுழன்று அமிர்தம்
கடைந்தவன் அஞ்சு மங்குலி
மந்திரம் செல்வமும் சுகம் பெற.....எந்த வாழ்வும்
வந்த அரம்பையர் எணும் பகிர்ந்து
நடம் கொளும் திரு மங்கை பங்கினன்
வண்டர் லங்கை உளன் சிரம் பொடி.....கண்ட மாயோன்
உந்தியில் புவனங்கள் எங்கும்
அடங்க உண்ட குடங்கையன் புகழ்
ஒண் புரம் பொடி கண்ட எந்தையர்.....பங்கின் மேவும்
உம்பலின் கலை மங்கை சங்கரி
மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட
ஒண் பரம் திரு அம்பலம் திகழ்.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
464
சிதம்பரம் தியங்கும் சஞ்சலம் தனந்தந்தம் தனந்தந்தம்
தனந்தந்தம் தனந்தந்தம்
தனந்தந்தம் தனந்தந்தம் ...... தனதான
தியங்குஞ்சஞ் சலந்துன்பங்
கடந்தொந்தஞ் செறிந்தைந்திந்
த்ரியம்பந்தந் தருந்துன்பம் ...... படுமேழை
திதம்பண்பொன் றிலன்பண்டன்
தலன்குண்டன் சலன்கண்டன்
தெளிந்துன்றன் பழந்தொண்டென் ...... றுயர்வாகப்
புயங்கந்திங் களின்துண்டங்
குருந்தின்கொந் தயன்றன்கம்
பொருந்துங்கங் கலந்தஞ்செஞ் ...... சடைசூடி
புகழ்ந்துங்கண் டுகந்துங்கும்
பிடுஞ்செம்பொன் சிலம்பென்றும்
புலம்பும்பங் கயந்தந்தென் ...... குறைதீராய்
இயம்புஞ்சம் புகந்துன்றுஞ்
சுணங்கன்செம் பருந்தங்கங்
கிணங்குஞ்செந் தடங்கண்டுங் ...... களிகூர
இடும்பைங்கண் சிரங்கண்டம்
பதந்தந்தங் கரஞ்சந்தொன்
றெலும்புஞ்சிந் திடும்பங்கஞ் ...... செயும்வேலா
தயங்கும்பைஞ் சுரும்பெங்குந்
தனந்தந்தந் தனந்தந்தந்
தடந்தண்பங் கயங்கொஞ்சுஞ் ...... சிறுகூரா
தவங்கொண்டுஞ் செபங்கொண்டுஞ்
சிவங்கொண்டும் ப்ரியங்கொண்டுந்
தலந்துன்றம் பலந்தங்கும் ...... பெருமாளே.
தியங்கும் சஞ்சலம் துன்பம்
கடம் தொந்தம் செறிந்து ஐந்து
இந்த்ரியம் பந்தம் தரும் துன்பம்.....படும் ஏழை
திதம்பண்பு ஒன்று இலன் பண்டன்
தலன் குண்டன் சலன் கண்டன்
தெளிந்து உன்றன் பழம் தொண்டென்று.....உயர்வாக
புயங்கம் திங்களின் துண்டம்
குருந்தின் கொந்து அயன் தன் கம்
பொருந்தும் கம் கலந்த அம் செம்.....சடை சூடி
புகழ்ந்தும் கண்டு உகந்தும் கும்பிடும்
செம் பொன் சிலம்பு என்றும்
புலம்பும் பங்கயம் தந்து என்.....குறை தீராய்
இயம்பும் சம்புகம் துன்றும்
சுணங்கன் செம் பருந்து அங்கு அங்கு
இணங்கும் செம் தடம் கண்டும்.....களி கூர
இடும்பை கண் சிரம் கண்டம்
பதம் தம் தம் கரம் சந்து ஒன்று
எலும்பும் சிந்திடும் பங்கம்.....செ(ய்)யும் வேலா
தயங்கும் பைம் சுரும்பு எங்கும்
தனந்தந்தந் தனந்தந்தந்
தடம் தண் பங்கயம் கொஞ்சும்.....சிறுகூரா
தவம் கொண்டும் செபம் கொண்டும்
சிவம் கொண்டும் ப்ரியம் கொண்டும்
தலம் துன்று(ம்) அம்பலம் தங்கும்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
465
சிதம்பரம் பருவம் பணை தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
தனனந் தனத்த தந்த ...... தனதான
பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு
பவளம் பதித்த செம்பொ ...... னிறமார்பிற்
படருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்த
பலவிஞ் சையைப்பு லம்பி ...... யழகான
புருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந் துதித்த தென்று
புளகஞ் செலுத்தி ரண்டு ...... கயல்மேவும்
பொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர
பொடிகொண் டழிக்கும் வஞ்ச ...... ருறவாமோ
உருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்து
உறவும் பிடித்த ணங்கை ...... வனமீதே
ஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்து
ஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்த ...... மணிமார்பா
செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க
சிவமஞ் செழுத்தை முந்த ...... விடுவோனே
தினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சு
திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே.
பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு எனத் திரண்டு
பவளம் பதித்த செம் பொன்.....நிற மார்பில்
படரும் கனத்த கொங்கை மி(ன்)னல் கொந்தளித்து சிந்த
பல விஞ்சையைப் புலம்பி.....அழகான
புருவம் சுழற்றி இந்த்ரதநு வந்து உதித்தது என்று
புளகம் செலுத்து இரண்டு.....கயல் மேவும்
பொறிகள் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர
பொடி கொண்டு அழிக்கும் வஞ்சர்.....உறவாமோ
உருவம் தரித்து உகந்து கரமும் பிடித்து உவந்து
உறவும் பிடித்த அணங்கை.....வனம் மீதே
ஒளிர் கொம்பினைச் சவுந்தரிய உம்பலைக் கொணர்ந்து
ஒளிர் வஞ்சியைப் புணர்ந்த.....மணி மார்பா
செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க
சிவம் அஞ்செழுத்தை முந்த.....விடுவோனே
தினமும் களித்து செம் பொன் உலகம் துதித்து இறைஞ்சு
திரு அம்பலத்து அமர்ந்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
466
சிதம்பரம் மதவெம் கரி தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
தனனந் தனத்த தந்த ...... தனதான
மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டு
வளரும் தனத்த ணிந்த ...... மணியாரம்
வளைசெங் கையிற்சி றந்த வொளிகண் டுநித்தி லங்கு
வரருந் திகைத்தி ரங்க ...... வருமானார்
விதவிங் கிதப்ரி யங்கள் நகைகொஞ் சுதற்கு ணங்கள்
மிகைகண் டுறக்க லங்கி ...... மருளாதே
விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துனைப்பு கழ்ந்து
மிகவிஞ் சுபொற்ப தங்கள் ...... தருவாயே
நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த
நடநம் பருற்றி ருந்த ...... கயிலாய
நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம்
நவதுங் கரத்ந முந்து ...... திரடோளுஞ்
சிதையும் படிக்கொ ரம்பு தனைமுன் தொடுத்த கொண்டல்
திறல்செங் கணச்சு தன்றன் ...... மருகோனே
தினமுங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப ணிந்த
திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே.
மத வெம் கரிக்கு இரண்டு வலு கொம்பு எனத் திரண்டு
வளரும் தனத்து அணிந்த.....மணி ஆரம்
வளை செம் கையில் சிறந்த ஒளி கண்டு நி(நீ)த்து இலங்கு
வரரும் திகைத்து இரங்க.....வரும் மானார்
வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள்
மிகை கண்டு உறக் கலங்கி.....மருளாதே
வி(து)டு சங்கை அற்று உணர்ந்து வலம் வந்து உனைப் புகழ்ந்து
மிக விஞ்சு பொன் பதங்கள்.....தருவாயே
நதியும் திருக் கரந்தை மதியும் சடைக்கு அணிந்த
நடநம்பர் உற்று இருந்த.....கயிலாய
நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் சிரத்தொடு அங்கம்
நவ துங்க ரத்நம் உந்து.....திரள் தோளும்
சிதையும்படிக்கு ஒர் அம்பு தனை முன் தொடுத்த கொண்டல்
திறல் செம் கண் அச்சுதன் தன்.....மருகோனே
தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உறப் பணிந்த
திரு அம்பலத்து அமர்ந்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
467
சிதம்பரம் முகசந்திர புருவம் தனதந்தன தனதந்தன தனதந்தன தான
தனதந்தன தனதந்தன தனதந்தன தான
தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான
முகசந்திர புருவஞ்சிலை விழியுங்கயல் நீல
முகிலங்குழ லொளிர்தொங்கலொ டிசைவண்டுகள் பாட
மொழியுங்கிளி யிதழ்பங்கய நகைசங்கொளி காதிற் ...... குழையாட
முழவங்கர சமுகம்பரி மளகுங்கும வாச
முலையின்பர சகுடங்குவ டிணைகொண்டுநல் மார்பில்
முரணுஞ்சிறு பவளந்தர ளவடந்தொடை யாடக் ...... கொடிபோலத்
துகிரின்கொடி யொடியும்படி நடனந்தொடை வாழை
மறையும்படி துயல்சுந்தர சுகமங்கைய ரோடு
துதைபஞ்சணை மிசையங்கசன் ரதியின்பம தாகச் ...... செயல்மேவித்
தொடைசிந்திட மொழிகொஞ்சிட அளகஞ்சுழ லாட
விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண்டணை கீனும்
சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக் ...... கருள்வாயே
அகரந்திரு உயிர்பண்புற அரியென்பது மாகி
உறையுஞ்சுட ரொளியென்கணில் வளருஞ்சிவ காமி
அமுதம்பொழி பரையந்தரி உமைபங்கர னாருக் ...... கொருசேயே
அசுரன்சிர மிரதம்பரி சிலையுங்கெட கோடு
சரமும்பல படையும்பொடி கடலுங்கிரி சாய
அமர்கொண்டயில் விடுசெங்கர வொளிசெங்கதிர் போலத் ...... திகழ்வோனே
மகரங்கொடி நிலவின்குடை மதனன்திரு தாதை
மருகென்றணி விருதும்பல முரசங்கலை யோத
மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் ...... கதிர்வேலா
வடிவிந்திரன் மகள்சுந்தர மணமுங்கொடு மோக
சரசங்குற மகள்பங்கொடு வளர்தென்புலி யூரில்
மகிழும்புகழ் திருவம்பல மருவுங்கும ரேசப் ...... பெருமாளே.
முக(ம்) சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல
முகில் அம்குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட
மொழியும் கிளி இதழ் பங்கயம் நகை சங்கு ஒளி காதில்.....குழை ஆட
முழ அம் கர சமுகம் முழவ பரிமள குங்கும வாச
முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில்
முரணும் சிறு பவளம் தரள வடம் தொடை ஆட .....கொடி போலத்
துகிரின் கொடி ஒடியும்படி நடனம் தொடை வாழை
மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு
துதை பஞ்சு அணை மிசை அங்கசன் ரதி இன்பம் அதாகச்.....செயல் மேவி
தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட
விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும்
சுக சந்திர முகமும் பத அழகும் தமியேனுக்கு.....அருள்வாயே
அகர அம் திரு உயிர் பண்பு உற அரி என்பதும் ஆகி
உறையும் சுடர் ஒளி என் க(ண்)ணில் வளரும் சிவகாமி
அமுதம் பொழி பரை அந்தரி உமை பங்க அரனாருக்கு.....ஒரு சேயே
அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு
சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய
அமர் கொண்டு அயில் விடு செம் கர ஒளி செம் கதிர் போலத்.....திகழ்வோனே
மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை
மருகன் என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத
மறையன் தலை உடையும்படி நடனம் கொளு மாழைக்.....கதிர் வேலா
வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக
சரசம் குற மகள் பங்கொடு வளர் தென் புலியூரில்
மகிழும் புகழ் திரு அம்பலம் மருவும் குமரேசப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
468
சிதம்பரம் சந்திர வோலை தந்தன தானன தான தந்தன
தந்தன தானன தான தந்தன
தந்தன தானன தான தந்தன ...... தந்ததான
சந்திர வோலைகு லாவ கொங்கைகள்
மந்தர மாலந னீர்த தும்பநல்
சண்பக மாலைகு லாவி ளங்குழல் ...... மஞ்சுபோலத்
தண்கயல் வாளிக ணாரி ளம்பிறை
விண்புரு வாரிதழ் கோவை யின்கனி
தன்செய லார்நகை சோதி யின்கதிர் ...... சங்குமேவுங்
கந்தரர் தேமலு மார்ப ரம்பநல்
சந்தன சேறுட னார்க வின்பெறு
கஞ்சுக மாமிட றோதை கொஞ்சிய ...... ரம்பையாரைக்
கண்களி கூரவெ காசை கொண்டவர்
பஞ்சணை மீதுகு லாவி னுந்திரு
கண்களி ராறுமி ராறு திண்புய ...... முங்கொள்வேனே
இந்திர லோகமு ளாரி தம்பெற
சந்திர சூரியர் தேர்ந டந்திட
எண்கிரி சூரர்கு ழாமி றந்திட ...... கண்டவேலா
இந்திரை கேள்வர்பி தாம கன்கதி
ரிந்துச டாதரன் வாச வன்தொழு
தின்புற வேமனு நூல்வி ளம்பிய ...... கந்தவேளே
சிந்துர மால்குவ டார்த னஞ்சிறு
பெண்கள்சி காமணி மோக வஞ்சியர்
செந்தினை வாழ்வளி நாய கொண்குக ...... அன்பரோது
செந்தமிழ் ஞானத டாக மென்சிவ
கங்கைய ளாவும காசி தம்பர
திண்சபை மேவும னாச வுந்தர ...... தம்பிரானே.
சந்திர ஓலை குலாவ கொங்கைகள்
மந்தரம் ஆல நல் நீர் ததும்ப நல்
சண்பக மாலை குலாவு இளம் குழல்.....மஞ்சு போல
தண் கயல் வாளி க(ண்)ணார் இளம் பிறை
விண் புருவர் இதழ் கோவையின் கனி
தன் செயலார் நகை சோதியின் கதிர்.....சங்கு மேவும்
கந்தரர் தேமலு(ம்) மார் பரம்ப நல்
சந்தன சேறு உடன் ஆர் கவின் பெறு
கஞ்சுகமாம் மிடறு ஓதை கொஞ்சிய.....ரம்பையாரை
கண் களி கூர வெகு ஆசை கொண்டு அவர்
பஞ்சணை மீது குலாவினும் திரு
கண்கள் இராறும் இராறு திண் புயமும்.....கொள்வேனே
இந்திர லோகம் உளார் இதம் பெற
சந்திர சூரியர் தேர் நடந்திட
எண் கிரி சூரர் குழாம் இறந்திட.....கண்ட வேலா
இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர்
இந்து சடாதரன் வாசவன் தொழுது
இன்புறவே மனு நூல் விளம்பிய.....கந்த வேளே
சிந்துர(ம்) மால் குவடு ஆர் தனம் சிறு
பெண்கள் சிகா மணி மோக வஞ்சியர்
செம் தினை வாழ் வ(ள்)ளி நாயக ஒண் குக.....அன்பர் ஓது
செந்தமிழ் ஞான தடாகம் என் சிவ
கங்கை அளாவும் மகா சிதம்பர
திண் சபை மேவும் ம(ன்)னா சவுந்தர.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
469
சிதம்பரம் காய மாய வீடு தான தான தான தானன தான தந்த
தத்த தந்த தத்த தந்த ...... தந்ததான
காய மாய வீடு மீறிய கூடு நந்து
புற்பு தந்த னிற்கு ரம்பை ...... கொண்டுநாளுங்
காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி
யப்ர மந்த டித்த லைந்து ...... சிந்தைவேறாய்
வேயி லாய தோள மாமட வார்கள் பங்க
யத்து கொங்கை யுற்றி ணங்கி ...... நொந்திடாதே
வேத கீத போத மோனமெய் ஞான நந்த
முற்றி டின்ப முத்தி யொன்று ...... தந்திடாயோ
மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற
விக்ர மங்கொள் வெற்பி டந்த ...... செங்கைவேலா
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கை
யைப்பு ணர்ந்த வெற்ப கந்த ...... செந்தில்வேளே
ஆயும் வேத கீத மேழிசை பாட வஞ்செ
ழுத்த ழங்க முட்ட நின்று ...... துன்றுசோதீ
ஆதி நாத ராடு நாடக சாலை யம்ப
லச்சி தம்ப ரத்த மர்ந்த ...... தம்பிரானே.
காய மாய வீடு மீறிய கூடு நந்து
புற்புதந்தனில் குரம்பை.....கொண்டு நாளுங்
காசி லாசை தேடி வாழ்வினை நாடி இந்த்ரியப்ர
மந்த டித்த லைந்து.....சிந்தைவேறாய்
வேயிலாய தோள மா மடவார்கள்
பங்கயத்து கொங்கை யுற்றிணங்கி.....நொந்திடாதே
வேத கீத போத மோன மெய்ஞான நந்த
முற்றிடு இன்ப முத்தி யொன்று.....தந்திடாயோ
மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற
விக்ரமங்கொள் வெற்பு இடந்த.....செங்கைவேலா
வாகை வேடர் பேதை காதல வேழமங்கையைப்
புணர்ந்த வெற்ப கந்த.....செந்தில்வேளே
ஆயும் வேத கீதம் ஏழிசை பாட
அஞ்செழுத்தழங்க முட்ட நின்று.....துன்றுசோதீ
ஆதி நாதராடு நாடக சாலை
அம்பலச் சிதம்பரத் தமர்ந்த.....தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=KJxGcO5MIrk
Add (additional) Audio/Video Link
470
சிதம்பரம் அவகுண விரகனை தனதன தனதன தானான தானன
தனதன தனதன தானான தானன
தனதன தனதன தானான தானன ...... தந்ததான
அவகுண விரகனை வேதாள ரூபனை
அசடனை மசடனை ஆசார ஈனனை
அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம்
அடைசிய சவடனை மோடாதி மோடனை
அழிகரு வழிவரு வீணாதி வீணனை
அழுகலை யவிசலை ஆறான வூணனை ...... அன்பிலாத
கவடனை விகடனை நானாவி காரனை
வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
கலியனை அலியனை ஆதேச வாழ்வனை ...... வெம்பிவீழுங்
களியனை யறிவுரை பேணாத மாநுட
கசனியை யசனியை மாபாத னாகிய
கதியிலி தனையடி நாயேனை யாளுவ ...... தெந்தநாளோ
மவுலியி லழகிய பாதாள லோகனு
மரகத முழுகிய காகோத ராஜனு
மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட ...... னும்பர்சேரும்
மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்
மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென
மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர ...... மன்றுளாடும்
சிவசிவ ஹரஹர தேவா நமோநம
தெரிசன பரகதி யானாய் நமோநம
திசையினு மிசையினும் வாழ்வே நமோநம ...... செஞ்சொல்சேருந்
திருதரு கலவி மணாளா நமோநம
திரிபுர மெரிசெய்த கோவே நமோநம
ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ...... தம்பிரானே.
அவகுண விரகனை வேதாள ரூபனை
அசடனை மசடனை ஆசார ஈனனை
அகதியை மறவனை ஆதாளி வாயனை.....அஞ்சுபூதம்
அடைசிய சவடனை மோடாதி மோடனை
அழிகரு வழிவரு வீணாதி வீணனை
அழுகலை யவிசலை ஆறான வூணனை.....அன்பிலாத
கவடனை விகடனை நானாவி காரனை
வெகுளியை வெகுவித மூதேவி மூடிய கலியனை
அலியனை ஆதேச வாழ்வனை.....வெம்பிவீழுங்
களியனை அறிவுரை பேணாத மாநுட
கசனியை அசனியை மாபாதனாகிய
கதியிலி தனை அடி நாயேனைஆளுவது.....எந்தநாளோ
மவுலியில் அழகிய பாதாள லோகனு
மரகத முழுகிய காகோத ராஜனு
மநுநெறியுடன்வளர் சோணாடர் கோனுடன்.....உம்பர்சேரும்
மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்
மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென
மலைமகள் உமைதரு வாழ்வே மனோகர.....மன்றுளாடும்
சிவசிவ ஹரஹர தேவா நமோநம
தெரிசன பரகதி யானாய் நமோநம
திசையினும் இசையினும் வாழ்வே நமோநம.....செஞ்சொல்சேரும்
திருதரு கலவி மணாளா நமோநம
திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம
ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர்.....தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=gATaBYS7xLI
Add (additional) Audio/Video Link
471
சிதம்பரம் கட்டி முண்டக தத்த தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன ...... தனதான
கட்டி முண்டகர பாலி யங்கிதனை
முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி
கத்த மந்திரவ தான வெண்புரவி ...... மிசையேறிக்
கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர்
பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு
கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ ...... டசையாமற்
கட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு
தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர்
சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத ...... முறமேவித்
துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில்
வச்சி ரங்களென மேனி தங்கமுற
சுத்த கம்புகுத வேத விந்தையொடு ...... புகழ்வேனோ
எட்டி ரண்டுமறி யாத என்செவியி
லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென
எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு ...... முருகோனே
எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி
யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ
லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில் ...... விடுவோனே
செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட
சித்த முங்குளிர நாதி வண்பொருளை ...... நவில்வோனே
செட்டி யென்றுவன மேவி யின்பரச
சத்தி யின்செயலி னாளை யன்புருக
தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர் ...... பெருமாளே.
கட்டி முண்டக அரபாலி அங்கிதனை
முட்டி அண்டமொடு தாவி விந்து ஒலி
கத்த மந்திர அவதான வெண் புரவி.....மிசை ஏறி
கற்பக அம் தெருவில் வீதி கொண்டு சுடர்
பட்டி மண்டபம் ஊடாடி இந்துவொடு
கட்டி விந்து பிசகாமல் வெண் பொடி கொடு.....அசையாமல்
சுட்டு வெம் புரம் நீறு ஆக விஞ்சை கொடு
தத்துவங்கள் விழச் சாடி எண் குணவர்
சொர்க்கம் வந்து கையுள் ஆக எந்தை பதம்.....உற மேவி
துக்கம் வெந்து விழ ஞானம் உண்டு குடில்
வச்சிரங்கள் என மேனி தங்கம் உற
சுத்த அகம் புகுத வேத விந்தையொடு.....புகழ்வேனோ
எட்டு இரண்டும் அறியாத என் செவியில்
எட்டும் இரண்டும் இது ஆம் இலிங்கம் என
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு.....முருகோனே
எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி
எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல்
எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில்.....விடுவோனே
செட்டி என்று சிவகாமி தன் பதியில்
கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட(ம்)
சித்தமும் குளிர அநாதி வண் பொருளை.....நவில்வோனே
செட்டி என்று வனம் மேவி இன்பரசச்
சத்தியின் செயல் இ(ன்)னாளை அன்பு உருக
தெட்டி வந்து புலியூரில் மன்றுள் வளர்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=dVT-sfTpHxQ
Add (additional) Audio/Video Link
472
சிதம்பரம் நஞ்சினைப் போலுமன தந்தனத் தானதன தந்தனத் தானதன
தந்தனத் தானதன ...... தந்ததான
நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
நம்புதற் றீதெனநி ...... னைந்துநாயேன்
நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை
நங்களப் பாசரண ...... மென்றுகூறல்
உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல்
உன்சொலைத் தாழ்வுசெய்து ...... மிஞ்சுவாரார்
உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர்
உம்பருக் காவதினின் ...... வந்துதோணாய்
கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு
கண்களிப் பாகவிடு ...... செங்கையோனே
கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு
கஞ்சுகப் பான்மைபுனை ...... பொன்செய்தோளாய்
அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம்
அந்தரத் தேறவிடு ...... கந்தவேளே
அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை
அம்பலத் தாடுமவர் ...... தம்பிரானே.
நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
நம்புதல் தீதென.....நினைந்து நாயேன்
நண்பு உகப் பாதமதில் அன்புறத் தேடியுனை
நங்களப்பா சரண.....மென்றுகூறல்
உன்செவிக்கு ஏறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல்
உன்சொலைத் தாழ்வுசெய்து.....மிஞ்சுவாரார்
உன்றனக்கே பரமும் என்றனக்கு ஆர்துணைவர்
உம்பருக்கு ஆவதினின்.....வந்து தோணாய்
கஞ்சனைத் தாவி முடி முன்பு குட்டு ஏய மிகு
கண்களிப்பாக விடு.....செங்கையோனே
கண்கயற் பாவை குற மங்கை பொற்றோள் தழுவு
கஞ்சுகப் பான்மைபுனை.....பொன்செய்தோளாய்
அஞ்சவெற்பு ஏழு கடல் மங்க நிட்டூரர்குலம்
அந்தரத்து ஏறவிடு.....கந்தவேளே
அண்டமுற் பார்புகழும் எந்தை பொற்பூர் புலிசை
அம்பலத் தாடுமவர்.....தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=fmcnr3yJllE
Add (additional) Audio/Video Link
473
சிதம்பரம் செம் கலச தந்ததன ...... தனதான
தந்ததன ...... தனதான
செங்கலச ...... முலையார்பால்
சிந்தைபல ...... தடுமாறி
அங்கமிக ...... மெலியாதே
அன்புருக ...... அருள்வாயே
செங்கைபிடி ...... கொடியோனே
செஞ்சொல்தெரி ...... புலவோனே
மங்கையுமை ...... தருசேயே
மன்றுள்வளர் ...... பெருமாளே.
செம் கலச முலையார்பால்
சிந்தைபல.....தடுமாறி
அங்கம் மிக மெலியாதே
அன்பு உருக.....அருள்வாயே
செம் கை பிடி கொடியோனே
செம் சொல் தெரி.....புலவோனே
மங்கை உமை தரு சேயே
மன்றுள் வளர்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
474
சிதம்பரம் கரிய மேகமெனும் தனன தான தனந்தன தானன
தனன தான தனந்தன தானன
தனன தான தனந்தன தானன ...... தந்ததான
கரிய மேக மெனுங்குழ லார்பிறை
சிலைகொள் வாகு வெனும்புரு வார்விழி
கயல்கள் வாளி யெனுஞ்செய லார்மதி ...... துண்டமாதர்
கமுக க்ரீவர் புயங்கழை யார்தன
மலைக ளாஇ ணையுங்குவ டார்கர
கமல வாழை மனுந்தொடை யார்சர ...... சுங்கமாடை
வரிய பாளி தமுந்துடை யாரிடை
துடிகள் நூலி யலுங்கவி னாரல்குல்
மணமு லாவி யரம்பையி னார்பொருள் ...... சங்கமாதர்
மயில்கள் போல நடம்புரி வாரியல்
குணமி லாத வியன்செய லார்வலை
மசகி நாயெ னழிந்திட வோவுன ...... தன்புதாராய்
சரியி லாத சயம்பவி யார்முகி
லளக பார பொனின்சடை யாள்சிவை
சருவ லோக சவுந்தரி யாளருள் ...... கந்தவேளே
சதப ணாம குடம்பொடி யாய்விட
அவுணர் சேனை மடிந்திட வேயொரு
தழல்கொள் வேலை யெறிந்திடு சேவக ...... செம்பொன்வாகா
அரிய மேனி யிலங்கையி ராவணன்
முடிகள் வீழ சரந்தொடு மாயவன்
அகில மீரெ ழுமுண்டவன் மாமரு ...... கண்டரோதும்
அழகு சோபி தஅங்கொளு மானன
விபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளி
அருள்கொ டாடி சிதம்பர மேவிய ...... தம்பிரானே.
கரிய மேகம் எனும் குழலார் பிறை
சிலை கொள் வாகு எ(ன்)னும் புருவார் விழி
கயல்கள் வாளி எ(ன்)னும் செயலார் மதி.....துண்ட மாதர்
கமுக க்ரீவர் புயம் கழையார் தன
மலைகளா இணையும் குவடார் கர
கமல வாழை ம(ன்)னும் தொடையார் சர.....சுங்கமாடை
வரிய பாளிதம் உந்து உடையார் இடை
துடிகள் நூலியலும் கவின் ஆர் அல்குல்
மணம் உலாவிய ரம்பையினார் பொருள்.....சங்க மாதர்
மயில்கள் போல நடம் புரிவார் இயல்
குணம் இ(ல்)லாத வியன் செயலார் வலை
மசகி நாயென் அழிந்திடவோ உனது.....அன்பு தாராய்
சரி இ(ல்)லாத சயம்பவியார் முகில்
அளக பார பொ(ன்)னின் சடையாள் சிவை
சருவ லோக சவுந்தரியாள் அருள்.....கந்தவேளே
சத பணா மகுடம் பொடியாய் விட
அவுணர் சேனை மடிந்திடவே ஒரு
தழல் கொள் வேலை எறிந்திடு சேவக.....செம்பொன் வாகா
அரிய மேனி இலங்கை இராவணண்
முடிகள் வீழ சரம் தொடு மாயவன்
அகிலம் ஈரெழும் உண்டவன் மா மருக.....அண்டர் ஓதும்
அழகு சோபித அம் கொ(ள்)ளும் ஆனன
விபுதை மோகி குறிஞ்சியின் வாழ் வ(ள்)ளி
அருள் கொடு ஆடி சிதம்பர(ம்) மேவிய.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
475
சிதம்பரம் கூந்தலாழ விரிந்து தாந்த தானன தந்த தனந்தன
தாந்த தானன தந்த தனந்தன
தாந்த தானன தந்த தனந்தன ...... தந்ததான
கூந்த லாழவி ரிந்து சரிந்திட
காந்து மாலைகு லைந்து பளிங்கிட
கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட ...... கொங்கைதானுங்
கூண்க ளாமென பொங்கந லம்பெறு
காந்தள் மேனிம ருங்குது வண்டிட
கூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிர ...... சங்கள்பாயச்
சாந்து வேர்வின ழிந்து மணந்தப
வோங்க வாகில்க லந்து முகங்கொடு
தான்ப லாசுளை யின்சுவை கண்டித ...... ழுண்டுமோகந்
தாம்பு றாமயி லின்குரல் கொஞ்சிட
வாஞ்சை மாதரு டன்புள கங்கொடு
சார்ந்து நாயென ழிந்துவி ழுந்துடல் ...... மங்குவேனோ
தீந்த தோதக தந்தன திந்திமி
ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்குசூரைச்
சேண்சு லாமகு டம்பொடி தம்பட
வோங்க வேழ்கட லுஞ்சுவ றங்கையில்
சேந்த வேலது கொண்டு நடம்பயில் ...... கந்தவேளே
மாந்த ணாருவ னங்குயில் கொஞ்சிட
தேங்கு வாழைக ரும்புகள் விஞ்சிடு
வான்கு லாவுசி தம்பரம் வந்தமர் ...... செங்கைவேலா
மாண்ப்ர காசத னங்கிரி சுந்தர
மேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன்
வார்ந்த ரூபிகு றம்பெண் வணங்கிய ...... தம்பிரானே.
கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட
காந்து மாலை குலைந்து பளிங்கிட
கூர்ந்த வாள் விழி கெண்டை கலங்கிட.....கொங்கை தானும்
கூண்கள் ஆம் என பொங்க நலம் பெறு
காந்தள் மேனி மருங்கு துவண்டிட
கூர்ந்த ஆடை குலைந்து புரண்டு.....இரசங்கள் பாய
சாந்து வேர்வின் அழிந்து மணம் த(ப்)ப
ஓங்கு அவாவில் கலந்து முகம் கொடு
தான் பலா சுளையின் சுவை கண்டு.....இதழுண்டு
மோகம் தாம் புறா மயிலின் குரல் கொஞ்சிட
வாஞ்சை மாதருடன் புளகம் கொடு
சார்ந்து நாய் என அழிந்து விழுந்து உடல்.....மங்குவேனோ
தீந்த தோதக தந்தன திந்திமி
ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள்.....பொங்கு சூரைச்
சேண் சுலா மகுடம் பொடி தம்பட
ஓங்கு அவ்வேழ் கடலும் சுவற அம் கையில்
சேந்த வேலது கொண்டு நடம் பயில்.....கந்த வேளே
மாந் தண் ஆரு(ம்) வனம் குயில் கொஞ்சிட
தேங்கு வாழை கரும்புகள் விஞ்சிடு
வான் குலாவு சிதம்பரம் வந்து அமர்.....செங்கை வேலா
மாண் ப்ரகாச தனம் கிரி சுந்தரம்
ஏய்ந்த நாயகி சம்பை மருங்கு பொன்
வார்ந்த ரூபி குற பெண் வணங்கிய.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
476
சிதம்பரம் அத்தன் அன்னை தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
தத்த தன்ன தய்ய ...... தனதான
அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
அத்தை நண்ணு செல்வ ...... ருடனாகி
அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல
லற்று நின்னை வல்ல ...... படிபாடி
முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி
முத்த னென்ன வுள்ள ...... முணராதே
முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு
முட்ட னிங்ங னைவ ...... தொழியாதோ
தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு
தித்து மன்னு பிள்ளை ...... முருகோனே
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய
சித்ர வண்ண வல்லி ...... யலர்சூடும்
பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி
பத்தர் கன்னி புல்லு ...... மணிமார்பா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.
அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி
அத்தை நண்ணு செல்வர்.....உடனாகி
அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல்
அற்று நின்னை வல்ல.....படிபாடி
முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி
முத்தன் என்ன உள்ளம்.....உணராதே
முட்ட வெண்மை உள்ள பட்டன் எண்மை கொள்ளும்
முட்டன் இங்ஙன் நைவது.....ஒழியாதோ
தித்தி மன்னும் தில்லை நிர்த்தர் கண்ணின் உள்
உதித்து மன்னு பிள்ளை.....முருகோனே
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னும் கைய
சித்ர வண்ணவல்லி.....அலர் சூடும்
பத்தர் உண்மை சொல் உள் உற்ற செம்மல் வெள்
இபத்தர் கன்னி புல்லும்.....மணி மார்பா
பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள
பச்சை மஞ்ஞை வல்ல.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
477
சிதம்பரம் இருள் காட்டு தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய ...... தனதான
இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி
னுதல்காட்டி வெல்லு ...... மிருபாண
இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை
நகைகாட்டு வல்லி ...... யிடைமாதர்
மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல
இடுகாட்டி னெல்லை ...... நடவாத
வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல
வினை வாட்டி யல்லல் ...... செயலாமோ
தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்
மொழிகாட்டு தில்லை ...... யிளையோனே
தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
குறவாட்டி புல்லு ...... மணிமார்பா
அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ
அடல்காட்டு வல்ல ...... சுரர்கோபா
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.
இருள்காட்டு செவ் விததிகாட்டி வில்லின்
நுதல்காட்டி வெல்லும்.....இருபாண
இயல்காட்டு கொல் குவளைகாட்டி முல்லை
நகைகாட்டு வல்லி.....இடைமாதர்
மருள்காட்டி நல்குரவு காட்டும் இல்ல
இடுகாட்டின் எல்லை.....நடவாத
வழிகாட்டி நல்லறிவு காட்டி மெல்ல
வினை வாட்டி யல்லல்.....செயலாமோ
தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்
மொழிகாட்டு தில்லை.....யிளையோனே
தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
குறவாட்டி புல்லு.....மணிமார்பா
அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ
அடல்காட்டு வல்ல.....அசுரர்கோபா
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
478
சிதம்பரம் முல்லைமலர் போலும் தய்யதன தானனத் தானனந் தானதன
தய்யதன தானனத் தானனந் தானதன
தய்யதன தானனத் தானனந் தானதன ...... தனதான
முல்லைமலர் போலுமுத் தாயுதிர்ந் தானநகை
வள்ளைகொடி போலுநற் காதிலங் காடுகுழை
முல்லைமலர் மாலைசுற் றாடுகொந் தாருகுழ ...... லலைபோதம்
மொள்குசிலை வாணுதற் பார்வையம் பானகயல்
கிள்ளைகுர லாரிதழ்ப் பூவெனும் போதுமுக
முன்னல்கமு கார்களத் தோய்சுணங் காயமுலை ...... மலையானை
வல்லகுவ டாலிலைப் போலுசந் தானவயி
றுள்ளதுகில் நூலிடைக் காமபண் டாரஅல்குல்
வழ்ழைதொடை யார்மலர்க் காலணிந் தாடுபரி ...... புரவோசை
மல்லிசலி யாடபட் டாடைகொண் டாடமயல்
தள்ளுநடை யோடுசற் றேமொழிந் தாசைகொடு
வல்லவர்கள் போலபொற் சூறைகொண் டார்கள்மய ...... லுறவாமோ
அல்லல்வினை போகசத் தாதிவிண் டோடநய
வுள்ளமுற வாகவைத் தாளுமெந் தாதைமகி
ழள்ளமைய ஞானவித் தோதுகந் தாகுமர ...... முருகோனே
அன்னநடை யாள்குறப் பாவைபந் தாடுவிரல்
என்னுடைய தாய்வெண்முத் தார்கடம் பாடுகுழல்
அன்னைவலி சேர்தனக் கோடிரண் டானவளி ...... மணவாளா
செல்லுமுக ஏழ்கடற் பாழிவிண் டோடதிர
வல்லசுரர் சேனைபட் டேமடிந் தேகுருதி
செல்லதிசை யோடுவிட் டாடுசிங் காரமுக ...... வடிவேலா
தெள்ளுதமிழ் பாடியிட் டாசைகொண் டாடசசி
வல்லியொடு கூடிதிக் கோர்கள்கொண் டாடஇயல்
தில்லைநகர் கோபுரத் தேமகிழ்ந் தேகுலவு ...... பெருமாளே.
முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை
வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை
முல்லை மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல்.....அலை போது
அம் மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல்
கிள்ளை குரலார் இதழ்ப் பூ எனும் போது முகம்
முன்னல் கமுகார் களம் தோய் சுணங்காய முலை.....மலை யானை
வல்ல குவடு ஆலிலை போலும் சந்தான வயிறு
உள்ள துகில் நூல் இடைக் காம பண்டார அல்குல்
வழ்ழை தொடையார் மலர்க் கால் அணிந்து ஆடும்.....பரிபுர ஓசை
மல்லி சலியாட பட்டு ஆடை கொண்டாட மயல்
தள்ளு நடையோடு சற்றே மொழிந்து ஆசை கொ(ண்)டு
வல்லவர்கள் போல பொன் சூறை கொண்டார்கள் மயல்.....உறவாமோ
அல்லல் வினை போக அசத்து ஆதி விண்டு ஓட நய
உள்ளம் உறவாக வைத்து ஆளும் எம் தாதை மகிழ்
அள் அமைய ஞான வித்து ஓதும் கந்தா குமர.....முருகோனே
அன்ன நடையாள் குறப் பாவை பந்து ஆடு விரல்
என்னுடைய தாய் வெண் முத்தார் கடம்பு ஆடு குழல்
அன்னை வலி சேர் தனக் கோடு இரண்டு ஆன வ(ள்)ளி.....மணவாளா
செல்லும் உக ஏழ் கடல் பாழி விண்டோடி அதிர
வல்ல அசுரர் சேனை பட்டே மடிந்தே குருதி
செல்ல திசையோடு விட்டு ஆடு சிங்கார முக.....வடிவேலா
தெள்ளு தமிழ் பாடியிட்டு ஆசை கொண்டாட சசி
வல்லியோடு கூடி திக்கோர்கள் கொண்டாட இயல்
தில்லை நகர் கோபுரத்தே மகிழ்ந்தே குலவு(ம்).....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
479
சிதம்பரம் அடப்பக்கம் பிடித்து தனத்தத் தந்தனத்தத் தானன தானன
தனத்தத் தந்தனத்தத் தானன தானன
தனத்தத் தந்தனத்தத் தானன தானன ...... தனதான
அடப்பக் கம்பிடித்துத் தோளொடு தோள்பொர
வளைத்துச் செங்கரத்திற் சீரொடு பாவொடு
அணுக்கிச் செந்துணுக்கிற் கோவித ழூறல்க ...... ளதுகோதி
அணிப்பொற் பங்கயத்துப் பூண்முலை மேகலை
நெகிழ்த்துப் பஞ்சரித்துத் தாபண மேயென
அருட்டிக் கண்சிமிட்டிப் பேசிய மாதர்க ...... ளுறவோடே
படிச்சித் தங்களித்துத் தான்மிக மாயைகள்
படித்துப் பண்பயிற்றிக் காதல்கள் மேல்கொள
பசப்பிப் பின்பிணக்கைக் கூறிய வீணிக ...... ளவமாயப்
பரத்தைக் குண்டுணர்த்துத் தோதக பேதைகள்
பழிக்குட் சஞ்சரித்துப் போடிடு மூடனை
பரத்துற் றண்பதத்துப் போதக மீதென ...... அருள்தாராய்
தடக்கைத் தண்டெடுத்துச் சூரரை வீரரை
நொறுக்கிப் பொன்றவிட்டுத் தூளெழ நீறெழ
தகர்த்துப் பந்தடித்துச் சூடிய தோரண ...... கலைவீரா
தகட்டுப் பொன்சுவட்டுப் பூவணை மேடையில்
சமைப்பித் தங்கொருத்திக் கோதில மாமயில்
தனிப்பொற் பைம்புனத்திற் கோகில மாவளி ...... மணவாளா
திடத்திற் றிண்பொருப்பைத் தோள்கொடு சாடிய
அரக்கத் திண்குலத்தைச் சூறைகொள் வீரிய
திருப்பொற் பங்கயத்துக் கேசவர் மாயவர் ...... அறியாமல்
திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடிய
சமர்த்தர்ப் பொன்புவிக்குட் டேவர்க ணாயக
திருச்சிற் றம்பலத்துட் கோபுர மேவிய ...... பெருமாளே.
அடப் பக்கம் பிடித்துத் தோளொடு தோள் பொர
வளைத்துச் செங்கரத்தில் சீரொடு பாவொடு
அணுக்கி செந்துணுக்கில் கோ(ப) இதழ் ஊறல்கள்.....அது கோதி
அணிப் பொன் பங்கயத்துப் பூண் முலை மேகலை
நெகிழ்த்து பஞ்சரித்துத் தா பணமே என
அருட்டிக் கண் சிமிட்டிப் பேசிய மாதர்கள்.....உறவோடே
படிச் சித்தம் களித்துத் தான் மிக மாயைகள்
படித்துப் பண் பயிற்று இக்காதல்கள் மேல் கொள
பசப்பிப் பின் பிணைக்கைக் கூறிய வீணிகள்.....அவ மாயப்
பரத்தைக் குண்டு உணர்த்துத் தோதக பேதைகள்
பழிக்குள் சஞ்சரித்துப் போடு இடு மூடனை
பரத்து உற்று அண் பதத்துப் போதகம் ஈது என.....அருள்தாராய்
தடக்கைத் தண்டு எடுத்துச் சூரரை வீரரை
நொறுக்கிப் பொன்றவிட்டுத் தூள் எழ நீறு எழ
தகர்த்துப் பந்து அடித்துச் சூடிய தோரண.....கலை வீரா
தகட்டுப் பொன் சுவட்டுப் பூ அணை மேடையில்
சமைப்பித்து அங்கு ஒருத்திக் கோது இல மாமயில்
தனிப் பொற்பைம் புனத்தில் கோகில மா வ(ள்)ளி.....மணவாளா
திடத்தில் திண் பொருப்பைத் தோள் கொடு சாடிய
அரக்கத் திண் குலத்தைச் சூறை கொள் வீரிய
திருப் பொன் பங்கயத்துக் கேசவர் மாயவர்.....அறியாமல்
திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடிய
சமர்த்தர்ப் பொன் புவிக்குள் தேவர்கள் நாயக
திருச் சிற்றம்பலத்துள் கோபுர(ம்) மேவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
480
சிதம்பரம் அக்குப் பீளை தத்தத் தானன தானன தானன
தத்தத் தானன தானன தானன
தத்தத் தானன தானன தானன ...... தனதான
அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ
டுப்புக் காய்பனி நீர்மயிர் தோல்குடி
லப்புச் சீபுழு வோடடை யார்தசை ...... யுறமேவி
அத்திப் பால்பல நாடிகு ழாயள்வ
ழுப்புச் சார்வல மேவிளை யூளைகொ
ளச்சுத் தோல்குடி லாமதி லேபொறி ...... விரகாளர்
சுக்கத் தாழ்கட லேசுக மாமென
புக்கிட் டாசைபெ ணாசைம ணாசைகள்
தொக்குத் தீவினை யூழ்வினை காலமொ ...... டதனாலே
துக்கத் தேபர வாமல்ச தாசிவ
முத்திக் கேசுக மாகப ராபர
சொர்க்கப் பூமியி லேறிட வேபத ...... மருள்வாயே
தக்கத் தோகிட தாகிட தீகிட
செக்கச் சேகண தாகண தோகண
தத்தத் தானன டீகுட டாடுடு ...... வெனதாளந்
தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி
கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட
சத்திக் கேயிரை யாமென வேவிடு ...... கதிர்வேலா
திக்கத் தோகண தாவென வேபொரு
சொச்சத் தாதையர் தாமென வேதிரு
செக்கர்ப் பாதம தேபதி யாசுதி ...... யவைபாடச்
செப்பொற் பீலியு லாமயில் மாமிசை
பக்கத் தேகுற மாதொடு சீர்பெறு
தெற்குக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.
அக்குப் பீளை மூளா இளை மூளையொடுப்
புக்(குக்) காய் பனி நீர் மயிர் தோல் குடிலப்
பூச்சி புழுவோடு அடை ஆர் தசை.....உற மேவி
அத்திப் பால் பல நாடி குழாய் அள்
வழுப்புச் சார் வலமே விளை ஊளை கொள்
அச்சுத் தோல் குடிலாம் அதிலே பொறி.....விரகாளர்
சுக்கத்து ஆழ் கடலே சுகமாம் என
புக்கிட்டு ஆசை பெ(ண்)ணாசை ம(ண்)ணாசைகள்
தொக்குத் தீ வினை ஊழ் வினை காலமொடு.....அதனாலே
துக்கத்தே பரவாமல் சதாசிவ
முத்திக்கே சுகமாக பராபர
சொர்க்கப் பூமியில் ஏறிடவே பதம்.....அருள்வாயே
தக்கத் தோகிட தாகிட தீகிட
செக்கச் சேகண தாகண தோகண
தத்தத் தானன டீகுட டாடுடு.....என தாளம்
தத்தி சூரர் குழாமொடு தேர் பரி
கெட்டுக் கேவலமாய் கடல் மூழ்கிட
சத்திக்கே இரையாம் எனவே விடு.....கதிர் வேலா
திக்கத் தோகண தாவெனவே பொரு
சொச்சத் தாதையர் தாம் எனவே திரு
செக்கர்ப் பாதம் அதே பதியா சு(ரு)தி.....அவை பாட
செம் பொன் பீலி உலா மயில் மாமிசை
பக்கத்தே குற மாதொடு சீர் பெறு
தெற்குக் கோபுர வாசலில் மேவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
481
சிதம்பரம் ஆரத்தோடு அணி தானத் தானன தானன தானன
தானத் தானன தானன தானன
தானத் தானன தானன தானன ...... தனதான
ஆரத் தோடணி மார்பிணை யானைகள்
போருக் காமென மாமுலை யேகொடு
ஆயத் தூசினை மேவிய நூலிடை ...... மடமாதர்
ஆலைக் கோதினி லீரமி லாமன
நேசத் தோடுற வானவர் போலுவர்
ஆருக் கேபொரு ளாமென வேநினை ...... வதனாலே
காருக் கேநிக ராகிய வோதிய
மாழைத் தோடணி காதொடு மோதிய
காலத் தூதர்கை வேலெனு நீள்விழி ...... வலையாலே
காதற் சாகர மூழ்கிய காமுகர்
மேலிட் டேயெறி கீலிகள் நீலிகள்
காமத் தோடுற வாகையி லாவருள் ...... புரிவாயே
சூரர்க் கேயொரு கோளரி யாமென
நீலத் தோகைம யூரம தேறிய
தூளிக் கேகடல் தூரநி சாசரர் ...... களமீதே
சோரிக் கேவெகு ரூபம தாவடு
தானத் தானன தானன தானன
சூழிட் டேபல சோகுக ளாடவெ ...... பொரும்வேலா
வீரத் தால்வல ராவண னார்முடி
போகத் தானொரு வாளியை யேவிய
மேகத் தேநிக ராகிய மேனியன் ...... மருகோனே
வேதத் தோன்முத லாகிய தேவர்கள்
பூசித் தேதொழ வாழ்புலி யூரினில்
மேலைக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.
ஆரத்தோடு அணி மார்பு இணை யானைகள்
போருக்கு ஆம் என மா முலையே கொடு
ஆயத் தூசினை மேவிய நூல் இடை.....மட மாதர்
ஆலைக் கோதினில் ஈரம் இலா மன
நேசத்தோடு உறவானவர் போலுவர்
ஆருக்கே பொருளாம் எனவே நினைவு.....அதனாலே
காருக்கே நிகராகிய ஓதிய
மாழைத் தோடு அணி காதொடு மோதிய
காலத் தூதர் கை வேல் எனு நீள் விழி.....வலையாலே
காதல் சாகர மூழ்கிய காமுகர்
மேலிட்டே எறி கீலிகள் நீலிகள்
காமத்தோடு உறவாகை இலா அருள்.....புரிவாயே
சூரர்க்கே ஒரு கோளரியாம் என
நீலத் தோகை மயூரம் அது ஏறிய
தூளிக்கே கடல் தூர நிசாசரர்.....கள(ம்) மீதே
சோரிக்கே வெகு ரூபமதா(ய்) அடு
தானத் தானன தானன தானன
சூழிட்டே பல சோகுகள் ஆடவெ.....பொரும் வேலா
வீரத்தால் வல ராவணனார் முடி
போகத் தான் ஒரு வாளியை ஏவிய
மேகத்தே நிகராகிய மேனியன்.....மருகோனே
வேதத்தோன் முதலாகிய தேவர்கள்
பூசித்தே தொழ வாழ் புலி ஊரினில்
மேலைக் கோபுர வாசலில் மேவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
482
சிதம்பரம் காதைக் காதி தானத் தான தத்த தானத் தான தத்த
தானத் தான தத்த ...... தனதான
காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற
காமப் பூச லிட்டு ...... மதியாதே
காரொத் தேய்நி றத்த வோதிக் காவ னத்தி
னீழற் கேத ருக்கி ...... விளையாடிச்
சேதித் தேக ருத்தை நேருற் றேபெ ருத்த
சேலொத் தேவ ருத்தும் ...... விழிமானார்
தேமற் பார வெற்பில் மூழ்கித் தாப மிக்க
தீமைக் காவி தப்ப ...... நெறிதாராய்
மாதைக் காத லித்து வேடக் கான கத்து
வாசத் தாள்சி வப்ப ...... வருவோனே
வாரிக் கேயொ ளித்த மாயச் சூரை வெட்டி
மாளப் போர்தொ லைத்த ...... வடிவேலா
வீதித் தேர்ந டத்து தூளத் தால ருக்கன்
வீரத் தேர்ம றைத்த ...... புலியூர்வாழ்
மேலைக் கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்க
வேதத் தோர்து தித்த ...... பெருமாளே.
காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி அற்ற
காமப் பூசல் இட்டு.....மதியாதே
கார் ஒத்த ஏய் நிறத்த ஓதிக் காவனத்தின்
நீழற்கே தருக்கி.....விளையாடி
சேதித்தே கருத்தை நேர் உற்றே பெருத்த
சேல் ஒத்தே வருத்தும்.....விழி மானார்
தேமல் பார வெற்பில் மூழ்கித் தாபம் மிக்க
தீமைக்கு ஆவி தப்ப.....நெறி தாராய்
மாதைக் காதலித்து வேடக் கானகத்து
வாசத் தாள் சிவப்ப.....வருவோனே
வாரிக்கே ஒளித்த மாயச் சூரை வெட்டி
மாளப் போர் தொலைத்த.....வடிவேலா
வீதித் தேர் நடத்து தூள் அத்தால் அருக்கன்
வீரத் தேர் மறைத்த.....புலியூர் வாழ்
மேலைக் கோபுரத்து மேவிக் கேள்வி மிக்க
வேதத்தோர் துதித்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
483
சிதம்பரம் கொள்ளை ஆசை தய்ய தானத் தானன தானன
தய்ய தானத் தானன தானன
தய்ய தானத் தானன தானன ...... தனதான
கொள்ளை யாசைக் காரிகள் பாதக
வல்ல மாயக் காரிகள் சூறைகள்
கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் ...... விழியாலே
கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்
வெல்லு மோகக் காரிகள் சூதுசொல்
கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு ...... மவர்போலே
உள்ள நோவைத் தேயுற வாடியர்
அல்லை நேரொப் பாமன தோஷிகள்
உள்வி ரோதக் காரிகள் மாயையி ...... லுழல்நாயேன்
உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு
கையு நீபத் தார்முக மாறுமுன்
உள்ள ஞானப் போதமு நீதர ...... வருவாயே
கள்ள மாயத் தாருகன் மாமுடி
துள்ள நீலத் தோகையின் மீதொரு
கையின் வேல்தொட் டேவிய சேவக ...... முருகோனே
கல்லி லேபொற் றாள்பட வேயது
நல்ல ரூபத் தேவர கானிடை
கெளவை தீரப் போகுமி ராகவன் ...... மருகோனே
தெள்ளி யேமுற் றீரமு னோதிய
சொல்வ ழாமற் றானொரு வானுறு
செல்வி மார்பிற் பூஷண மாயணை ...... மணவாளா
தெள்ளு மேனற் சூழ்புன மேவிய
வள்ளி வேளைக் காரம னோகர
தில்லை மேலைக் கோபுர மேவிய ...... பெருமாளே.
கொள்ளை ஆசைக் காரிகள் பாதக
வல்ல மாயக் காரிகள் சூறைகள்
கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள்.....விழியாலே
கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்
வெல்லும் மோகக் காரிகள் சூது சொல்
கொவ்வை வாய் நிட்டூரிகள் மேல் விழும்.....அவர் போலே
உள்ள நோ(வ) வைத்து உறவாடியர்
அல்லை நேர் ஒப்பா(ம்) மன தோஷிகள்
உள் விரோதக் காரிகள் மாயையில்.....உழல் நாயேன்
உய்யவே பொன் தோள்களும் ஆறு இரு
கையும் நீபத் தார் முகம் ஆறும் முன்
உள்ள ஞானப் போதமும் நீ தர.....வருவாயே
கள்ள மாயத் தாருகன் மா முடி
துள்ள நீலத் தோகையின் மீது ஒரு
கையில் வேல் தொட்டு ஏவிய சேவக.....முருகோனே
கல்லிலே பொன் தாள் படவே அது
நல்ல ரூபத்தே வர கான் இடை
கெளவை தீரப் போகும் இராகவன்.....மருகோனே
தெள்ளி ஏமுற்று ஈரம் முன் ஓதிய
சொல் வழாமல் தான் ஒரு வான் உறு
செல்வி மார்பில் பூஷணமாய் அணை.....மணவாளா
தெள்ளும் ஏனல் சூழ் புன(ம்) மேவிய
வள்ளி வேளைக்கார மனோகர
தில்லை மேலைக் கோபுரம் மேவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
484
சிதம்பரம் தாது மாமலர் தான தானன தனனா தானன
தான தானன தனனா தானன
தான தானன தனனா தானன ...... தனதான
தாது மாமலர் முடியா லேபத
றாத நூபுர அடியா லேகர
தாள மாகிய நொடியா லேமடி ...... பிடியாலே
சாடை பேசிய வகையா லேமிகு
வாடை பூசிய நகையா லேபல
தாறு மாறுசொல் மிகையா லேயன ...... நடையாலே
மோதி மீறிய முலையா லேமுலை
மீதி லேறிய கலையா லேவெகு
மோடி நாணய விலையா லேமயல் ...... தருமானார்
மோக வாரிதி தனிலே நாடொறு
மூழ்கு வேனுன தடியா ராகிய
மோன ஞானிக ளுடனே சேரவு ...... மருள்வாயே
காத லாயருள் புரிவாய் நான்மறை
மூல மேயென வுடனே மாகரி
காண நேர்வரு திருமால் நாரணன் ...... மருகோனே
காதல் மாதவர் வலமே சூழ்சபை
நாத னார்தம திடமே வாழ்சிவ
காம நாயகி தருபா லாபுலி ...... சையில்வாழ்வே
வேத நூன்முறை வழுவா மேதினம்
வேள்வி யாலெழில் புனைமூ வாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை ...... புரிகோவே
வீறு சேர்வரை யரசாய் மேவிய
மேரு மால்வரை யெனநீள் கோபுர
மேலை வாயிலின் மயில்மீ தேறிய ...... பெருமாளே.
தாது மா மலர் முடியாலே பதறாத
நூபுர அடியாலே கர
தாளமாகிய நொடியாலே மடி.....பிடியாலே
சாடை பேசிய வகையாலே மிகு
வாடை பூசிய நகையாலே பல
தாறுமாறு சொல் மிகையாலே அ(ன்)ன.....நடையாலே
மோதி மீறிய முலையாலே முலை
மீதில் ஏறிய கலையாலே வெகு
மோடி நாணய(ம்) விலையாலே மயல்.....தரு(ம்) மானார்
மோக வாரிதி தனிலே நாள் தொறு(ம்)
மூழ்குவேன் உனது அடியார் ஆகிய
மோன ஞானிகளுடனே சேரவும்.....அருள்வாயே
காதலாய் அருள் புரிவாய் நான் மறை
மூலமே என உடனே மா கரி
காண நேர் வரு திருமால் நாரணன்.....மருகோனே
காதல் மாதவர் வலமே சூழ் சபை
நாதனார் தமது இடமே வாழ்
சிவகாம நாயகி தரு பாலா புலிசையில்.....வாழ்வே
வேத நூன் முறை வழுவாமே தினம்
வேள்வியால் எழில் புனை மூவாயிர(ம்)
மேன்மை வேதியர் மிகவே பூசனை.....புரிகோவே
வீறு சேர் வரை அரசாய் மேவிய
மேரு மால் வரை என நீள் கோபுர
மேலை வாயிலின் மயில் மீது ஏறிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
485
சிதம்பரம் எலுப்புத் தோல் தனத்தத் தானன தானன தானன
தனத்தத் தானன தானன தானன
தனத்தத் தானன தானன தானன ...... தந்ததான
எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை
இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள்
இரத்தச் சாகர நீர்மல மேவிய ...... கும்பியோடை
இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி
உளைப்புச் சூலையொ டேவலு வாகிய
இரைப்புக் கேவல மூலவி யாதியொ ...... டண்டவாதங்
குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ
டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை
குருட்டுக் கால்முட மூமையு ளூடறு ...... கண்டமாலை
குடிப்புக் கூனமி தேசத மாமென
எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு
னிடத்துத் தாள்பெற ஞானச தாசிவ ...... அன்புதாராய்
கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமி
ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்
கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட ...... கண்டவேலா
கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ
யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி
கிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகி ...... பங்கின்மேவும்
வலித்துத் தோள்மலை ராவண னானவன்
எடுத்தப் போதுடல் கீழ்விழ வேசெய்து
மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅர ...... சம்புபாலா
மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை
அணைத்துச் சீர்புலி யூர்பர மாகிய
வடக்குக் கோபுர வாசலில் மேவிய ...... தம்பிரானே.
எலுப்புத் தோல் மயிர் நாடி குழாம் மிடை
இறுக்குச் சீ புழுவோடு அடை மூளைகள்
இரத்தச் சாகர நீர் மலம் மேவிய.....கும்பி ஓடை
இளைப்புச் சோகைகள் வாதம் விலா வலி
உளைப்புச் சூலையொடே வலுவாகிய
இரைப்பு கேவல மூல வியாதியொடு.....அண்ட வாதம்
குலைப்புக் காய் கனல் நீரிழிவு ஈளையொடு
அளைப்பு காது அடை கூனல் விசூசிகை
குருட்டுக் கால்முடம் ஊமை உள் ஊடு அறு.....கண்டமாலை
குடிப் புக்கு ஊனம் இதே சதமாம் என
எடுத்து பாழ் வினையால் உழல் நாயேன்
உன் இடத்துத் தாள் பெற ஞான சதாசிவ.....அன்பு தாராய்
கெலிக்கப் போர் பொரு சூரர் குழாம் உமிழ்
இரத்தச் சேறு எழ தேர் பரி யாளிகள்
கெடுத்திட்டே கடல் சூர் கிரி தூள்பட.....கண்ட வேலா
கிளர் பொன் தோளி சராசரம் மேவி எய்
அசைத்துப் பூசைகொள் ஆயி பராபரி
கிழப் பொன் காளை மேல் ஏறும் நாயகி.....பங்கின் மேவும்
வலித்துத் தோள் மலை ராவணன் ஆனவன்
எடுத்தப் போது உடல் கீழ் விழவே செய்து
மகிழ்ப் பொன் பாத சிவாய நமோ அர.....சம்பு பாலா
மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை
அணைத்து சீர் புலியூர் பரமாகிய
வடக்குக் கோபுர வாசலில் மேவிய.....தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=NveVGyPqbiI
Add (additional) Audio/Video Link
486
சிதம்பரம் நீல மாமுகில் தான தானன தான தானன
தான தானன தான தானன
தான தானன தான தானன ...... தனதான
நீல மாமுகில் போலும் வார்குழ
லார்கள் மாலைகு லாவ வேல்கணை
நீள வாள்விழி பார்வை காதிரு ...... குழையாட
நீடு மார்பணி யாட வோடிய
கோடு போலிணை யாட நூலிடை
நேச பாளித சோலை மாமயி ...... லெனவேகிக்
காலி னூபுர வோசை கோவென
ஆடி மால்கொடு நாணி யேவியர்
காய மோடணு பாகு பால்மொழி ...... விலைமாதர்
காத லாயவ ரோடு பாழ்வினை
மூழ்கி யேழ்நர காழு மூடனை
காரிர் பாருமை யாசி வாபத ...... மருள்வாயே
கோல மாமயி லேறி வார்குழை
யாட வேல்கொடு வீர வார் கழல்
கோடி கோடிடி யோசை போல்மிக ...... மெருதூளாய்க்
கோடு கோவென ஆழி பாடுகள்
தீவு தாடசு ரார்கு ழாமொடு
கூள மாகவி ணோர்கள் வாழ்வுற ...... விடும்வேலா
நாலு வேதமு டாடு வேதனை
யீண கேசவ னார்ச கோதரி
நாதர் பாகம்வி டாள்சி காமணி ...... உமைபாலா
ஞான பூமிய தான பேர்புலி
யூரில் வாழ்தெய்வ யானை மானொடு
நாலு கோபுர வாசல் மேவிய ...... பெருமாளே.
நீல மா முகில் போலும் வார் குழலார்கள்
மாலை குலாவ வேல் கணை
நீள வாள் விழி பார்வை காது(ம்) இரு.....குழை ஆட
நீடு மார்பு அணி ஆட ஓடிய
கோடு போல் இணை ஆட நூல் இடை
நேச பாளித(ம்) சோலை மா மயில்.....என ஏகிக்
காலில் நூபுர ஓசை கோ என
ஆடி மால் கொடு நாணியே வியர்
காயமோடு பாகு அ(ண்)ணு பால் மொழி.....விலைமாதர்
காதலாய் அவரோடு பாழ் வினை
மூழ்கி ஏழ் நரகு ஆழு(ம்) மூடனை
காரிர் பாரும் ஐயா சிவா பதம்.....அருள்வாயே
கோல மா மயில் ஏறி வார் குழை
ஆட வேல் கொடு வீர வார் கழல்
கோடி கோடி இடி ஓசை போல் மிக.....மெரு தூளாய்
கோடு கோ என ஆழி பாடுகள்
தீவு தாடு அசுரார் குழாம் ஒடு
கூளமாக வி(ண்)ணோர்கள் வாழ்வு உற.....விடும் வேலா
நாலு வேதம் உடாடு வேதனை
ஈண கேசவனார் சகோதரி
நாதர் பாகம் விடாள் சிகா மணி.....உமை பாலா
ஞான பூமியதான பேர் புலியூரில்
வாழ் தெய்வ யானை மானொடு
நாலு கோபுர வாசல் மேவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
487
சிதம்பரம் வாத பித்தமொடு தான தத்ததன தான தத்ததன
தான தத்ததன தான தத்ததன
தான தத்ததன தான தத்ததன ...... தந்ததான
வாத பித்தமொடு சூலை விப்புருதி
யேறு கற்படுவ னீளை பொக்கிருமல்
மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ ...... டந்திமாலை
மாச டைக்குருடு காத டைப்பு செவி
டூமை கெட்டவலி மூல முற்றுதரு
மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ...... ளுண்டகாயம்
வேத வித்துபரி கோல முற்றுவிளை
யாடு வித்தகட லோட மொய்த்தபல
வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் ...... சிங்கியாலே
வீடு கட்டிமய லாசை பட்டுவிழ
வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற
வீட ளித்துமயி லாடு சுத்தவெளி ...... சிந்தியாதோ
ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி
நீறு பட்டலற சூர வெற்பவுண
ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக ...... ழங்கிவேலா
ஓந மச்சிவய சாமி சுத்தஅடி
யார்க ளுக்குமுப காரி பச்சையுமை
ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் ...... தந்தசேயே
ஆதி கற்பகவி நாய கர்க்குபிற
கான பொற்சரவ ணாப ரப்பிரம
னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய ...... றிந்தகோவே
ஆசை பெற்றகுற மாதை நித்தவன
மேவி சுத்தமண மாடி நற்புலியு
ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் ...... தம்பிரானே.
வாதம் பித்தமோடு சூலை விப்புருதி
ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல்
மாலை புற்று எழுதல் ஊசல் பற்ச(ன்)னி ஓடு.....அந்தி மாலை
மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு
ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு
மாலை உற்ற தொ(ண்)ணூறு ஆறு தத்துவர்கள்.....உண்ட காயம்
வேத வித்து பரிகோலம் உற்று விளை
யாடுவித்த கடல் ஓடம் மொய்த்த பல
வேடம் இட்டு பொருள் ஆசை பற்றி உழல்.....சிங்கியாலே
வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ
ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற
வீடு அளித்து மயில் ஆடு சுத்த வெளி.....சிந்தியாதோ
ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி
நீறு பட்டு அலற சூர(ன்) வெற்பு அவுண
ரோடு பட்டு விழ வேலை விட்ட புகழ்.....அங்கி வேலா
ஓம் நமச்சிவய சாமி சுத்த அடி
யார்களுக்கும் உபகாரி பச்சை உமை
ஓர் புறத்து அருள் சிகா மணி கடவுள்.....தந்த சேயே
ஆதி கற்பக விநாயகற்கு பிற
கான பொன் சரவணா பர பிரமன்
ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை.....அறிந்த கோவே
ஆசை பெற்ற குற மாதை நித்த(ம்) வனம்
மேவி சுத்த மணம் ஆடி நல் புலியூர்
ஆடகப் படிக கோபுரத்தின் மகிழ்.....தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=3MCh7K3FUt8
Add (additional) Audio/Video Link
488
சிதம்பரம் சுரும்பு உற்ற தனந்தத்த தனதான தனந்தத்த தனதான
தனந்தத்த தனதான ...... தனதான
சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவ
துரந்துற்ற குளிர்வாடை ...... யதனாலுந்
துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படியால
தொடர்ந்துற்று வருமாதர் ...... வசையாலும்
அரும்புற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலு
மடைந்திட்ட விடைமேவு ...... மணியாலும்
அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி
அசைந்துற்ற மதுமாலை ...... தரவேணும்
கருங்கொற்ற மதவேழ முனிந்துற்ற கலைமேவி
கரந்துள்ள மடமானி ...... னுடனேசார்
கரும்புற்ற வயல்சூழ பெரும்பற்ற புலியூரில்
களம்பற்றி நடமாடு ...... மரன்வாழ்வே
இருந்துற்று மலர்பேணி யிடும்பத்தர் துயர்தீர
இதம்பெற்ற மயிலேறி ...... வருகோவே
இனந்துற்ற வருசூர னுருண்டிட்டு விழவேல்கொ
டெறிந்திட்டு விளையாடு ...... பெருமாளே.
சுரும்பு உற்ற பொழில் தோறும் விரும்பு உற்ற குயில் கூவ
துரந்து உற்ற குளிர் வாடை.....அதனாலும்
துலங்கு உற்ற மரு வாளி விரைந்து உற்ற படி ஆல
தொடர்ந்து உற்று வரு மாதர்.....வசையாலும்
அரும்பு உற்ற மலர் மேவு செழும் கொற்ற அணையாலும்
அடைந்திட்ட விடை மேவு.....மணியாலும்
அழிந்து உற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி
அசைந்து உற்ற மது மாலை.....தர வேணும்
கரும் கொற்ற மத வேழம் முனிந்து உற்ற க(கா)லை
மேவி கரந்து உள்ள மட மானின்.....உடனே சார்
கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில்
களம் பற்றி நடமாடும்.....அரன் வாழ்வே
இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர
இதம் பெற்ற மயில் ஏறி.....வரு கோவே
இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ வேல் கொ(ண்)டு
எறிந்திட்டு விளையாடு(ம்).....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
489
சிதம்பரம் இணங்கித் தட்பொடு தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான
இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள்
மணந்திட் டுச்சுக மாய்விளை யாடிகள்
இளஞ்சொற் செப்பிகள் சாதனை வீணிகள் ...... கடிதாகும்
இடும்பைப் பற்றிய தாமென மேயினர்
பெருஞ்சொற் பித்தளை தானும்வை யாதவர்
இரும்பிற் பற்றிய கூர்விழி மாதர்கள் ...... எவரேனும்
பணஞ்சுற் றிக்கொளு பாயவு தாரிகள்
மணங்கட் டுக்குழல் வாசனை வீசிகள்
பலஞ்செப் பித்தர மீளழை யாதவர் ...... அவரோடே
பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர
கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன
பதம்பற் றிப்புக ழானது கூறிட ...... அருள்வாயே
வணங்கச் சித்தமி லாதஇ ராவணன்
சிரம்பத் துக்கெட வாளிக டாவியெ
மலங்கப் பொக்கரை யீடழி மாதவன் ...... மருகோனே
மதம்பட் டுப்பொரு சூரபன் மாதியர்
குலங்கொட் டத்திகல் கூறிய மோடரை
வளைந்திட் டுக்கள மீதினி லேகொல ...... விடும்வேலா
பிணம்பற் றிக்கழு கோடுபல் கூளிகள்
பிடுங்கிக் கொத்திட வேயம ராடியெ
பிளந்திட் டுப்பல மாமயி லேறிய ...... முருகோனே
பிரிந்திட் டுப்பரி வாகிய ஞானிகள்
சிலம்பத் தக்கழல் சேரவெ நாடிடு
பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே.
இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள்
மணந்திட்டுச் சுகமாய் விளையாடிகள்
இளம் சொல் செப்பிகள் சாதனை வீணிகள்.....கடிது ஆகும்
இடும்பைப் பற்றிய தாம் என மேயினர்
பெரும் சொல் பித்தளை தானும் வையாதவர்
இரும்பில் பற்றிய கூர் விழி மாதர்கள்.....எவரேனும்
பணம் சுற்றிக் கொள் உபாய உதாரிகள்
மணம் கட்டுக் குழல் வாசனை வீசிகள்
பலம் செப்பித் தர மீள அழையாதவர்.....அவரோடே
பதம் துய்த்துக் கொடு தீமைய மா நரகு
அடைந்திட்டுச் சவமாகி விடாது உன(து)
பதம் பற்றிப் புகழானது கூறிட.....அருள்வாயே
வணங்கச் சித்தம் இலாத இராவணன்
சிரம் பத்துக் கெட வாளி கடாவியெ
மலங்கப் பொக்கரை ஈடு அழி மாதவன்.....மருகோனே
மதம் பட்டுப் பொரு சூரபன்ம(ன்) ஆதியோர்
குலம் கொட்டத்து இகல் கூறிய மோடரை
வளைந்திட்டுக் களம் மீதினிலே கொ(ல்)ல.....விடும் வேலா
பிணம் பற்றிக் கழுகோடு பல் கூளிகள்
பிடுங்கிக் கொத்திடவே அமர் ஆடியெ
பிளந்திட்டுப் பல மா மயில் ஏறிய.....முருகோனே
பிரிந்திட்டுப் பரிவாகிய ஞானிகள்
சிலம்பு அத்தக் கழல் சேரவெ நாடிடு
பெரும் பற்றப் புலியூர் தனில் மேவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
490
சிதம்பரம் விடுங்கைக்கு ஒத்த தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான
விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட
மடங்கிக் கைச்சிறை யானஅ நேகமும்
விழுங்கப் பட்டற வேயற லோதியர் ...... விழியாலே
விரும்பத் தக்கன போகமு மோகமும்
விளம்பத் தக்கன ஞானமு மானமும்
வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர் ...... விடுநாளில்
இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல்
கிடந்திட் டுத்தம ரானவர் கோவென
இடங்கட் டிச்சுடு காடுபு காமுன ...... மனதாலே
இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்
இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்
இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர ...... இசைவாயே
கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்
நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய
குரங்கைச் செற்றும கோததி தூளெழ ...... நிருதேசன்
குலங்கட் பட்டநி சாசரர் கோவென
இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய
குமண்டைக் குத்திர ராவண னார்முடி ...... அடியோடே
பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி
ப்ரியங் கொட் டக்கநன் மாமரு காஇயல்
ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென ...... விருதூதும்
ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி
ப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவ
பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே.
விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம்
அடங்கிக் கைச் சிறையான அநேகமும்
விழுங்கப்பட்டு அறவே அறல் ஓதியர்.....விழியாலே
விரும்பத் தக்கன போகமும் மோகமும்
விளம்பத் தக்கன ஞானமும் மானமும்
வெறும் சுத்த சலமாய் வெளியாய் உயிர்.....விடும் நாளில்
இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல்
கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என
இடம் கட்டி சுடு காடு புகா முனம்.....மனதாலே
இறந்திட்டுப் பெறவே கதியாயினும்
இருந்திட்டுப் பெறவே மதியாயினும்
இரண்டில் தக்கது ஒரு ஊதியம் நீ தர.....இசைவாயே
கொடுங்கைப் பட்ட மராமரம் ஏழுடன்
நடுங்க சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய
குரங்கைச் செற்று மகா உததி தூள் எழ.....நிருதேசன்
குலம் கண் பட்ட நிசாசரர் கோ என
இலங்கைக்குள் தழலோன் எழ நீடிய
குமண்டைக் குத்திர ராவணனார் முடி.....அடியோடே
பிடுங்க தொட்ட சர அதிபனார் அதி
ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா இயல்
ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என.....விருது ஊதும்
ப்ரசண்டச் சொல் சிவ வேத சிகாமணி
ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ
பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=ozNnqd9uAYo
Add (additional) Audio/Video Link
491
சிதம்பரம் கொந்தள வோலைகள் ஆட தந்தன தானன தானத்தம்
தந்தன தானன தானத்தம்
தந்தன தானன தானத்தம் ...... தனதான
கொந்தள வோலைக ளாடப்பண்
சங்கொளி போல்நகை வீசித்தண்
கொங்கைகள் மார்பினி லாடக்கொண் ...... டையென்மேகம்
கொங்கெழு தோள்வளை யாடக்கண்
செங்கயல் வாளிகள் போலப்பண்
கொஞ்சிய கோகில மாகப்பொன் ...... பறிகாரர்
தந்திர மாமென வேகிப்பொன்
தொங்கலொ டாரமு மாடச்செந்
தம்பல வாயொடு பேசிக்கொண் ...... டுறவாடிச்
சம்பள மீதென வோதிப்பின்
பஞ்சணை மேல்மய லாடச்சஞ்
சங்கையில் மூளியர் பால்வைக்குஞ் ...... செயல்தீராய்
அந்தக னாருயிர் போகப்பொன்
திண்புர மோடெரி பாயப்பண்
டங்கச னாருடல் வேகக்கண் ...... டழல்மேவி
அண்டர்க ளோடட லார்தக்கன்
சந்திர சூரியர் வீழச்சென்
றம்பல மீதினி லாடத்தன் ...... குருநாதா
சிந்துர மோடரி தேர்வர்க்கம்
பொங்கமொ டேழ்கடல் சூர்பத்மன்
சிந்திட வேல்விடு வாகைத்திண் ...... புயவேளே
செங்குற மாதுமி னாளைக்கண்
டிங்கித மாயுற வாடிப்பண்
செந்தமிழ் மால்புலி யூர்நத்தும் ...... பெருமாளே.
கொந்தள ஓலைகள் ஆடப் பண்
சங்கு ஒளி போல் நகை வீசித் தண்
கொங்கைகள் மார்பினில் ஆட கொண்டை.....என் மேகம்
கொங்கு எழு தோள் வளை ஆடக் கண்
செம் கயல் வாளிகள் போல பண்
கொஞ்சிய கோகிலமாகப் பொன்.....பறிகாரர்
தந்திரமாம் என ஏகி பொன்
தொங்கலொடு ஆரமும் ஆடச் செம்
தம்பல வாயொடு பேசிக் கொண்டு.....உறவாடி
சம்பளம் ஈது என ஓதிப் பின்
பஞ்சணை மேல் மயல் ஆடு அச்சம்
சங்கை இல் மூளியர் பால் வைக்கும்.....செயல் தீராய்
அந்தகன் ஆருயிர் போகப் பொன்
திண் புரமோடு எரி பாயப் பண்டு
அங்கசனார் உடல் வேகக் கண்.....தழல் மேவி
அண்டர்களோடு அடல் ஆர் தக்கன்
சந்திர சூரியர் வீழச் சென்று
அம்பல மீதினில் ஆடு அத்தன்.....குருநாதா
சிந்துரமோடு அரி தேர் வர்க்கம்
பொங்கமொடு ஏழ் கடல் சூர் பத்மன்
சிந்திட வேல் விடு வாகைத் திண்.....புய வேளே
செம் குற மாது மி(ன்)னாளைக் கண்டு
இங்கிதமாய் உறவாடிப் பண்
செந்தமிழ் மால் புலியூர் நத்தும்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
492
சிதம்பரம் நகையா லெத்திகள் தனனா தத்தன தானத்தம்
தனனா தத்தன தானத்தம்
தனனா தத்தன தானத்தம் ...... தனதான
நகையா லெத்திகள் வாயிற்றம்
பலமோ டெத்திகள் நாணற்றின்
நயனா லெத்திகள் நாறற்புண் ...... தொடைமாதர்
நடையா லெத்திக ளாரக்கொங்
கையினா லெத்திகள் மோகத்தின்
நவிலா லெத்திகள் தோகைப்பைங் ...... குழல்மேகச்
சிகையா லெத்திக ளாசைச்சங்
கடியா லெத்திகள் பாடிப்பண்
திறனா லெத்திகள் பாரத்திண் ...... தெருவூடே
சிலர்கூ டிக்கொடு ஆடிக்கொண்
டுழல்வா ருக்குழல் நாயெற்குன்
செயலா லற்புத ஞானத்திண் ...... கழல்தாராய்
பகையா ருட்கிட வேலைக்கொண்
டுவரா ழிக்கிரி நாகத்தின்
படமோ டிற்றிட சூரைச்சங் ...... கரிசூரா
பணநா கத்திடை சேர்முத்தின்
சிவகா மிககொரு பாகத்தன்
பரிவால் சத்துப தேசிக்குங் ...... குரவோனே
சுகஞா னக்கடல் மூழ்கத்தந்
தடியே னுக்கருள் பாலிக்குஞ்
சுடர்பா தக்குக னேமுத்தின் ...... கழல்வீரா
சுகரே சத்தன பாரச்செங்
குறமா தைக்கள வால்நித்தஞ்
சுகமூழ் கிப்புலி யூர்நத்தும் ...... பெருமாளே.
நகையால் எத்திகள் வாயில்
தம்பலமோடு எத்திகள் நாண் அற்று
இன்நயனால் எத்திகள் நாறல் புண்.....தொடை மாதர்
நடையால் எத்திகள் ஆரக் கொங்
கையினால் எத்திகள் மோகத்தின்
நவிலால் எத்திகள் தோகைப் பைம்.....குழல் மேகச்
சிகையால் எத்திகள் ஆசைச்
சங்கடியால் எத்திகள் பாடிப் பண்
திறனால் எத்திகள் பாரத் திண்.....தெரு ஊடே
சிலர் கூடிக் கொ(ண்)டு ஆடிக் கொண்டு
உழல்வாருக்கு உழல் நாயெற்கு உன்
செயலால் அற்புத ஞானத் திண்.....கழல் தாராய்
பகையார் உட்கிட வேலைக் கொண்டு
உவர் ஆழிக் கிரி நாகத்தின்
படமோடு இற்றிட சூரைச்.....சங்கரி சூரா
பண நாகத்து இடை சேர் முத்தின்
சிவகாமிக்கு ஒரு பாகத்தன்
பரிவால் சத்து உபதேசிக்கும்.....குரவோனே
சுக ஞானக் கடல் மூழ்கத் தந்து
அடியேனுக்கு அருள் பாலிக்கும்
சுடர் பாதக் குகனே முத்தின்.....கழல் வீரா
சுக ரேசத் தன பாரச் செம்
குற மாதைக் களவால் நித்தம்
சுகம் மூழ்கிப் புலியூர் நத்தும்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
493
சிதம்பரம் எழுகடல் மணலை தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தனதான
எழுகடல் மணலை அளவிடி னதிக
மெனதிடர் பிறவி ...... அவதாரம்
இனியுன தபய மெனதுயி ருடலு
மினியுடல் விடுக ...... முடியாது
கழுகொடு நரியு மெரிபுவி மறலி
கமலனு மிகவு ...... மயர்வானார்
கடனுன தபய மடிமையு னடிமை
கடுகியு னடிகள் ...... தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவி
விமலிமு னருளு ...... முருகோனே
விரிதல மெரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில் ...... வருவோனே
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
யிரைகொளும் அயிலை ...... யுடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியு
ரினில்நட மருவு ...... பெருமாளே.
எழுகடல் மணலை அளவிடி னதிகம்
எனதிடர் பிறவி.....அவதாரம்
இனியுன தபய மெனதுயி ருடலும்
இனியுடல் விடுக.....முடியாது
கழுகொடு நரியு மெரிபுவி
மறலி கமலனு மிகவும்.....அயர்வானார்
கடனுன தபயம் அடிமையு னடிமை
கடுகியு னடிகள்.....தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவி
விமலிமு னருளும்.....முருகோனே
விரிதல மெரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில்.....வருவோனே
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
யிரைகொளும் அயிலை.....யுடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியு
ரினில் நட மருவு.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=gH5HkRFl7pY
Add (additional) Audio/Video Link
494
சிதம்பரம் தறுகணன் மறலி தனதன தனன தனதன தனன
தனதன தனனாத் ...... தனதான
தறுகணன் மறலி முறுகிய கயிறு
தலைகொடு விசிறீக் ...... கொடுபோகுஞ்
சளமது தவிர அளவிடு சுருதி
தலைகொடு பலசாத் ...... திரமோதி
அறுவகை சமய முறைமுறை சருவி
யலைபடு தலைமூச் ...... சினையாகும்
அருவரு வொழிய வடிவுள பொருளை
அலம்வர அடியேற் ...... கருள்வாயே
நறுமல ரிறைவி யரிதிரு மருக
நகமுத வியபார்ப் ...... பதிவாழ்வே
நதிமதி யிதழி பணியணி கடவுள்
நடமிடு புலியூர்க் ...... குமரேசா
கறுவிய நிருதர் எறிதிரை பரவு
கடலிடை பொடியாப் ...... பொருதோனே
கழலிணை பணியு மவருடன் முனிவு
கனவிலு மறியாப் ...... பெருமாளே.
தறுகணன் மறலி முறுகிய கயிறு
தலைகொடு விசிறீ.....கொடுபோகுஞ்
சளமது தவிர அளவிடு சுருதி
தலைகொடு பலசாத்.....திரமோதி
அறுவகை சமய முறைமுறை சருவி
அலைபடு தலைமூச்.....சினையாகும்
அருவரு வொழிய வடிவுள பொருளை
அலம்வர அடியேற்கு.....அருள்வாயே
நறுமல ரிறைவி யரிதிரு மருக
நகமுதவிய பார்ப்பதி.....வாழ்வே
நதிமதி யிதழி பணியணி கடவுள்
நடமிடு புலியூர்க்.....குமரேசா
கறுவிய நிருதர் எறிதிரை பரவு
கடலிடை பொடியாப்.....பொருதோனே
கழலிணை பணியு மவருடன் முனிவு
கனவிலு மறியாப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=grglQ5QNFI0
Add (additional) Audio/Video Link
495
சிதம்பரம் இரசபா கொத்தமொழி தனதனா தத்ததன தனதனா தத்ததன
தனதனா தத்ததன தானனந் தனன
தனதனா தத்ததன தனதனா தத்ததன
தனதனா தத்ததன தானனந் தனன
தனதனா தத்ததன தனதனா தத்ததன
தனதனா தத்ததன தானனந் தனன ...... தந்ததான
இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகை
யிணையிலா சத்திவிழி யார்பசும் பொனிரர்
எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்க
ளெழுதொணா தப்பிறையி னாரரும் புருவர்
எழுதுதோ டிட்டசெவி பவளநீ லக்கொடிக
ளிகலியா டப்படிக மோடடும் பொனுரு ...... திங்கள்மேவும்
இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தஎழி
லிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி
யிணைசொல்க்ரீ வத்தரள வினவொள்தா லப்பனையி
னியல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடி
யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட
ரிகலியா ரத்தொடையு மாருமின் பரச ...... தங்கமார்பின்
வரிகள்தா பித்தமுலை யிசையஆ லிற்றளிரின்
வயிறுநா பிக்கமல மாமெனுஞ் சுழிய
மடுவுரோ மக்கொடியென் அளிகள்சூழ் வுற்றநிரை
மருவுநூ லொத்தஇடை யாரசம் பையல்குல்
மணமெலா முற்றநறை கமலபோ துத்தொடையென்
வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடை ...... ரம்பைமாதர்
மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகு
மதனபா ணத்தினுடன் மேவிமஞ் சமிசை
வதனம்வேர் வுற்றவிர முலைகள்பூ ரிக்கமிடர்
மயில்புறா தத்தைகுயில் போலிலங் கமளி
வசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ்
வசமெலாம் விட்டுமற வேறுசிந் தனையை ...... தந்துஆள்வாய்
முரசுபே ரித்திமிலை துடிகள்பூ ரித்தவில்கள்
முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளை
முகடுபேர் வுற்றவொலி யிடிகள்போ லொத்தமறை
முதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர்
முடிகளோ டெற்றியரி யிரதமா னைப்பிணமொ
டிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசை ...... யெங்குமோட
முடுகிவேல் விட்டுவட குவடுவாய் விட்டமரர்
முநிவரா டிப்புகழ வேதவிஞ் சையர்கள்
முழவுவீ ணைக்கினரி யமுர்தகீ தத்தொனிகள்
முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள்
முலைகள்பா ரிக்கவுட னடனமா டிற்றுவர
முடிபதா கைப்பொலிய வேநடங் குலவு ...... கந்தவேளே
அரசுமா கற்பகமொ டகில்பலா இர்ப்பைமகி
ழழகுவே யத்திகமு கோடரம் பையுடன்
அளவிமே கத்திலொளிர் வனமொடா டக்குயில்க
ளளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரிய
அமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்க
ளடையுமே ரக்கனக நாடெனும் புலியுர் ...... சந்தவேலா
அழகுமோ கக்குமரி விபுதையே னற்புனவி
யளிகுலா வுற்றகுழல் சேர்கடம் புதொடை
அரசிவே தச்சொருபி கமலபா தக்கரவி
யரியவே டச்சிறுமி யாளணைந் தபுகழ்
அருணரூ பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொ
டணைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந் துபுணர் ...... தம்பிரானே.
இரச பாகு ஒத்த மொழி அமுர்த மாணிக்க நகை
இணையிலா சத்தி விழியார் பசும் பொன் நீரார்
எழிலி நேர் ஒத்த இருள் அளக பாரச் செயல்கள்
எழுத ஒணாதப் பிறையினார் அரும் புருவர்
எழுது தோடிட்ட செவி பவள நீலக் கொடிகள்
இகலி ஆடப் படிகமோடு அடும் பொன் உரு.....திங்கள் மேவும்
இலவு தாவித்த இதழ் குமிழை நேர் ஒத்த எழில்
இலகு நாசிக் கமுகு மால சங்கின் ஒளி
இணை சொல் க்ரீவத் தரள இன ஒள் தாலப் பனையின்
இயல் கலா புத்தகம் ஒடு ஏர் சிறந்த அடி
இணை இலா ஆனைக் குவடு எனா ஒளி நிலா துத்தி படர்
இகலி ஆரத் தொடையும் ஆரும் இன்ப ரச.....தங்க மார்பில்
வரிகள் தாபித்த முலை இசைய ஆலின் தளிரின்
வயிறு நாபிக் கமலம் ஆம் எனும் சுழிய
மடு உரோமக் கொடி என் அளிகள் சூழ்வுற்ற நிரை
மருவு நூல் ஒத்த இடை ஆர சம்பை அல்குல்
மணம் எலாம் உற்ற நறை கமல போதுத் தொடை என்
வளமை ஆர்புக் கதலி சேரு செம் பொன் உடை.....ரம்பை மாதர்
மயல் அதால் இற்று அடியென் அவர்கள் பால் உற்று வெகு
மதன பாணத்தினுடன் மேவி மஞ்ச மிசை
வதனம் வேர்வுற்று அவிர முலைகள் பூரிக்க மிடர்
மயில் புறா தத்தை குயில் போல் இலங்க அமளி
வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ்
வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை.....தந்து ஆள்வாய்
முரசு பேரித் திமிலை துடிகள் பூரித் தவில்கள்
முருடு காளப் பறைகள் தாரை கொம்பு வளை
முகடு பேர் உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை
முதுவர் பாடிக் குமுறவே இறந்த அசுரர்
முடிகளோடு எற்றி அரி இரதம் யானைப் பிணம் ஒடு
இவுளி வேலைக் குருதி நீர் மிதந்து திசை.....எங்கும் ஓட
முடுகி வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர்
முநிவர் ஆடிப் புகழ வேத விஞ்சையர்கள்
முழுவு வீணைக் கி(ன்)னரி அமுர்த கீதத் தொனிகள்
முறையதாகப் பறைய ஓதி ரம்பையர்கள்
முலைகள் பாரிக்க உடன் நடனம் ஆடிற்று வர
முடி பதாகைப் பொலியவே நடம் குலவு.....கந்த வேளே
அரசு மா கற்பகம் ஒடு அகில் பலா இர்ப்பை மகிழ்
அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பை உடன்
அளவி மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட குயில்கள்
அளிகள் தோகைக் கிளிகள் கோ என பெரிய
அமுர்த வாவிக் கழனி வயலில் வாளைக் கயல்கள்
அடையும் ஏர் அக் கனக நாடெனும் புலியுர்.....சந்த வேலா
அழகு மோகக் குமரி விபுதை ஏனல் புனவி
அளி குலா உற்ற குழல் சேர் படம்பு தொடை
அரசி வேதச் சொருபி கமல பாதக் கரவி
அரிய வேடச் சிறுமியாள் அணைந்த புகழ்
அருண ரூபப் பதம் ஒடு இவுளி தோகைச் செயல் கொடு
அணை தெய்வானைத் தனமுமே மகிழ்ந்து புணர்.....தம்பிரானே
Add (additional) Audio/Video Link
496
சிதம்பரம் இருளும் ஓர்கதிரணு தனன தானன தனன தானன
தனன தானன ...... தனதான
இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ
னிடம தேறியெ ...... னிருநோயும்
எரிய வேமல மொழிய வேசுட
ரிலகு மூலக ...... வொளிமேவி
அருவி பாயஇ னமுத மூறவுன்
அருளெ லாமென ...... தளவாக
அருளி யேசிவ மகிழ வேபெற
அருளி யேயிணை ...... யடிதாராய்
பரம தேசிகர் குருவி லாதவர்
பரவை வான்மதி ...... தவழ்வேணிப்
பவள மேனியர் எனது தாதையர்
பரம ராசியர் ...... அருள்பாலா
மருவி நாயெனை யடிமை யாமென
மகிழ்மெய் ஞானமு ...... மருள்வோனே
மறைகு லாவிய புலியுர் வாழ்குற
மகள்மெ லாசைகொள் ...... பெருமாளே.
இருளும் ஓர்கதிரணு கொணாத
பொனிடம தேறி என்.....இருநோயும்
எரியவே மல மொழியவே
சுடரிலகு மூலக.....வொளிமேவி
அருவி பாயஇ னமுத மூற உன்
அருளெலாம் எனது.....அளவாக
அருளியே சிவ மகிழவேபெற
அருளி யேயிணை.....யடிதாராய்
பரம தேசிகர் குருவிலாதவர்
பரவை வான்மதி.....தவழ்வேணி
பவள மேனியர் எனது தாதையர்
பரம ராசியர்.....அருள்பாலா
மருவி நாயெனை யடிமை யாமென
மகிழ்மெய் ஞானமும்.....அருள்வோனே
மறைகுலாவிய புலியுர் வாழ்
குற மகள்மெ லாசைகொள்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=w67xhxrMmss
Add (additional) Audio/Video Link
497
சிதம்பரம் காவி உடுத்தும் தான தனத்தம் தான தனத்தம்
தான தனத்தம் ...... தனதான
காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்
காடுகள் புக்குந் ...... தடுமாறிக்
காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங்
காசினி முற்றுந் ...... திரியாதே
சீவ னொடுக்கம் பூத வொடுக்கம்
தேற வுதிக்கும் ...... பரஞான
தீப விளக்கங் காண எனக்குன்
சீதள பத்மந் ...... தருவாயே
பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
பாழ்பட வுக்ரந் ...... தருவீரா
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
பாடலை மெச்சுங் ...... கதிர்வேலா
தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ்
சோலை சிறக்கும் ...... புலியூரா
சூரர் மிகக்கொண் டாட நடிக்குந்
தோகை நடத்தும் ...... பெருமாளே.
காவி யுடுத்தும் தாழ்சடை வைத்தும்
காடுகள் புக்கும்.....தடுமாறி
காய்கனி துய்த்தும் காயம் ஒறுத்தும்
காசினி முற்றும்.....திரியாதே
சீவன் ஒடுக்கம் பூத வொடுக்கம்
தேற உதிக்கும்.....பரஞான
தீப விளக்கம் காண எனக்குன்
சீதள பத்மம்.....தருவாயே
பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
பாழ்பட உக்ரம்.....தருவீரா
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
பாடலை மெச்சும்.....கதிர்வேலா
தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்கும்
சோலை சிறக்கும்.....புலியூரா
சூரர் மிகக்கொண்டாட நடிக்கும்
தோகை நடத்தும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=WC1l3W5dxu4
Add (additional) Audio/Video Link
498
சிதம்பரம் கோதிக் கோதி தானத் தானத் தாந்தன தானன
தானத் தானத் தாந்தன தானன
தானத் தானத் தாந்தன தானன ...... தனதான
கோதிக் கோதிக் கூந்தலி லேமலர்
பாவித் தாகச் சாந்தணி வார்முலை
கோடுத் தானைத் தேன்துவர் வாய்மொழி ...... குயில்போலக்
கூவிக் கூவிக் காண்டிசை போலவெ
நாணிக் கூனிப் பாய்ந்திடு வார்சிலர்
கூடித் தேறிச் சூழ்ந்திடு வார்பொருள் ...... வருமோவென்
றோதித் தோளிற் பூந்துகி லால்முலை
மூடிச் சூதிற் றூங்கமி லார்தெரு
வோடித் தேடிச் சோம்பிடு வார்சில ...... விலைமாதர்
ஓருச் சேரச் சேர்ந்திடு வார்கலி
சூளைக் காரச் சாங்கமி லார்சில
வோரைச் சாகத் தீம்பிடு வார்செய ...... லுறவாமோ
வேதத் தோனைக் காந்தள்கை யால்தலை
மேல்குட் டாடிப் பாந்தள் சதாமுடி
வீரிட் டாடக் காய்ந்தசு ரார்கள்மெல் ...... விடும்வேலா
வேளைச் சீறித் தூங்கலொ டேவய
மாவைத் தோலைச் சேர்ந்தணி வாரிட
மீதுற் றாள்பொற் சாம்பவி மாதுமை ...... தருசேயே
நாதத் தோசைக் காண்டுணை யேசுடர்
மூலத் தோனைத் தூண்டிட வேயுயிர்
நாடிக் காலிற் சேர்ந்திட வேயருள் ...... சுரமானை
ஞானப் பால்முத் தேன்சுரு பாள்வளி
மாதைக் கானிற் சேர்ந்தணை வாய்சிவ
ஞானப் பூமித் தேன்புலி யூர்மகிழ் ...... பெருமாளே.
கோதிக் கோதிக் கூந்தலிலே மலர்
பாவித்து ஆக(ம்) சாந்து அணிவார் முலை
கோடுத் தானை தேன் துவர் வாய் மொழி.....குயில் போலக்
கூவிக் கூவிக் காண்டு இசை போலவெ
நாணி கூனி பாய்ந்திடுவார் சிலர்
கூடித் தேறிச் சூழ்ந்திடுவார் பொருள்.....வருமோ என்று
ஓதித் தோளில் பூந்துகிலால் முலை
மூடிச் சூதில் தூங்கம் இலார் தெரு
ஓடித் தேடிச் சோம்பிடுவார் சில.....விலைமாதர்
ஓருச் சேரச் சேர்ந்திடுவார் கலி
சூளைக்காரச் சாங்கமிலார் சில
வோரைச் சாகத் தீம்பிடுவார் செயல்.....உறவாமோ
வேதத்தோனைக் காந்தள் கையால் தலை
மேல் குட்டு ஆடிப் பாந்தள் சதா முடி
வீரிட்டு ஆடக் காய்ந்து அசுரார்கள் மெல்.....விடும் வேலா
வேளைச் சீறித் தூங்கலொடே
வயமாவைத் தோலைச் சேர்ந்து அணிவார் இட
மீது உற்றாள் பொன் சாம்பவி மாது உமை.....தருசேயே
நாதத்து ஓசைக் காண் துணையே சுடர்
மூலத்தோனைத் தூண்டிடவே உயிர்
நாடிக் காலில் சேர்ந்திடவே அருள்.....சுர மானை
ஞானப் பால் முத்தேன் சுருபாள் வ(ள்)ளி
மாதைக் கானில் சேர்ந்து அணைவாய் சிவ
ஞானப் பூமி தேன் புலியூர் மகிழ்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
499
சிதம்பரம் சகசம்பக் குடைசூழ் தனதந்தத் தனனா தனதன
தனதந்தத் தனனா தனதன
தனதந்தத் தனனா தனதன ...... தனதான
சகசம்பக் குடைசூழ் சிவிகைமெல்
மதவின்பத் துடனே பலபணி
தனிதம்பட் டுடையோ டிகல்முர ...... சொலிவீணை
தவளந்தப் புடனே கிடுகிடு
நடைதம்பட் டமிடோல் பலவொலி
சதளம்பொற் றடிகா ரருமிவை ...... புடைசூழ
வெகுகும்பத் துடனே பலபடை
கரகஞ்சுற் றிடவே வரஇசை
வெகுசம்பத் துடனே யழகுட ...... னிதமேவும்
விருமஞ்சித் திரமா மிதுநொடி
மறையும்பொய்ப் பவுஷோ டுழல்வது
விடவும்பர்க் கரிதா மிணையடி ...... தருவாயே
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுர்தஞ்செச் செகசே செககண ...... எனபேரித்
திமிர்தங்கற் குவடோ டெழுகட
லொலிகொண்டற் றுருவோ டலறிட
திரள்சண்டத் தவுணோர் பொடிபட ...... விடும்வேலா
அகரம்பச் சுருவோ டொளியுறை
படிகம்பொற் செயலா ளரனரி
அயனண்டர்க் கரியா ளுமையருள் ...... முருகோனே
அமுர்தம்பொற் குவடோ டிணைமுலை
மதிதுண்டப் புகழ்மான் மகளொடும்
அருள்செம்பொற் புலியூர் மருவிய ...... பெருமாளே.
சக சம்பக் குடை சூழ் சிவிகை மெல்
மத இன்பத்துடனே பல பணி
தனிதம் பட்டு உடையோடு இகல் முரசு.....ஒலி வீணை
தவளம் தப்பு உடனே கிடுகிடு
நடை தம்பட்டம் இடோல் பல ஒலி
சதளம் பொன் தடிகாரரும் இவை.....புடை சூழ
வெகு கும்பத்துடனே பல படை
கரகம் சுற்றிடவே வர இசை
வெகு சம்பத்துடனே அழகுடன்.....நிதம் மேவும்
விருமம் சித்திரமாம் இது நொடி
மறையும் பொய்ப் பவுஷோடு உழல்வது
விட உம்பர்க்கு அரிதாம் இணை அடி.....தருவாயே
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுர்தஞ்செச் செகசே செககண ...... என பேரி
திமிர்தம் கல் குவடோடு எழு கடல்
ஒலி கொண்டு அற்று உருவோடு அலறிட
திரள் சண்டத்து அவுணோர் பொடிபட.....விடும் வேலா
அகரம் பச் (சை) உருவோடு ஒளி உறை
படிகம் பொன் செயலாள் அரன் அரி
அயன் அண்டர்க்கும் அரியாள் உமை அருள்.....முருகோனே
அமுர்தம் பொன் குவடோடு இணை முலை
மதி துண்டம் புகழ் மான் மகளொடும்
அருள் செம் பொன் புலியூர் மருவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
500
சிதம்பரம் சகுட முந்தும் தனனதந்தம் தனனதந்தம்
தனனதந்தம் தானந்தம்
தனனதந்தம் தனனதந்தம்
தனனதந்தம் தானந்தம்
தனனதந்தம் தனனதந்தம்
தனனதந்தம் தானந்தம் ...... தனதான
சகுடமுந்துங் கடலடைந்துங்
குளமகிழ்ந்துந் தோய்சங்கங்
கமுகடைந்தண் டமுதகண்டந்
தரளகந்தந் தேர்கஞ்சஞ்
சரமெனுங்கண் குமிழதுண்டம்
புருவெனுஞ்செஞ் சாபம்பொன் ...... திகழ்மாதர்
சலசகெந்தம் புழுகுடன்சண்
பகமணங்கொண் டேய்ரண்டந்
தனகனம்பொன் கிரிவணங்கும்
பொறிபடுஞ்செம் பேர்வந்தண்
சலனசம்பொன் றிடைபணங்கின்
கடிதடங்கொண் டாரம்பொன் ...... தொடர்பார்வை
புகலல்கண்டஞ் சரிகரம்பொன்
சரணபந்தந் தோதிந்தம்
புரமுடன்கிண் கிணிசிலம்பும்
பொலியலம்புந் தாள்ரங்கம்
புணர்வணைந்தண் டுவரொடுந்தொண்
டிடர்கிடந்துண் டேர்கொஞ்சுங் ...... கடைநாயேன்
புகழடைந்துன் கழல்பணிந்தொண்
பொடியணிந்தங் காநந்தம்
புனல்படிந்துண் டவசமிஞ்சுந்
தவசர்சந்தம் போலுந்திண்
புவனிகண்டின் றடிவணங்குஞ்
செயல்கொளஞ்செஞ் சீர்செம்பொன் ...... கழல்தாராய்
திகுடதிந்திந் தகுடதந்தந்
திகுடதிந்திந் தோதிந்தம்
டகுடடண்டண் டிகுடடிண்டிண்
டகுடடண்டண் டோடிண்டிண்
டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண்
டிமுடடிண்டென் றேசங்கம் ...... பலபேரி
செககணஞ்சஞ் சலிகைபஞ்சம்
பறைமுழங்கும் போரண்டஞ்
சிலையிடிந்துங் கடல்வடிந்தும்
பொடிபறந்துண் டோர்சங்கஞ்
சிரமுடைந்தண் டவுணரங்கம்
பிணமலைந்தன் றாடுஞ்செங் ...... கதிர்வேலா
அகிலஅண்டஞ் சுழலஎங்கும்
பவுரிகொண்டங் காடுங்கொன்
புகழ்விளங்குங் கவுரிபங்கன்
குருவெனுஞ்சிங் காரங்கொண்
டறுமுகம்பொன் சதிதுலங்குந்
திருபதங்கந் தாஎன்றென் ...... றமரோர்பால்
அலர்பொழிந்தங் கரமுகிழ்ந்தொண்
சரணமுங்கொண் டோதந்தம்
புனைகுறம்பெண் சிறுமியங்கம்
புணர்செயங்கொண் டேயம்பொன்
அமைவிளங்கும் புலிசரம்பொன்
திருநடங்கொண் டார்கந்தம் ...... பெருமாளே.
சகுடம் உந்தும் கடல் அடைந்து உங்கு
உ(ள்)ள மகிழ்ந்தும் தோய் சங்கம்
கமுகு அடைந்து அண்டு அமுது கண்டம்
தரள கந்தம் தேர் கஞ்சம்
சரம் எனும் கண் குமிழ துண்டம்
புரு எனும் செம் சாபம் பொன்.....திகழ் மாதர்
சலச கெந்தம் புழுகு உடன் சண்பக
மணம் கொண்டு ஏய் (இ)ரண்டு அம்
தன கனம் பொன் கிரி வணங்கும்
பொறி படும் செம் பேர் வந்து அண்
சலன சம்பை ஒன்று இடை பணங்கின்
கடி தடம் கொண்டார் அம் பொன்.....தொடர் பார்வை
புகலல் கண்டு அம் சரி கரம் பொன்
சரண பந்தம் தோதிந்தம்
புரம் உடன் கிண்கிணி சிலம்பும்
பொலி அலம்பும் தாள் ரங்கம்
புணர்வு அணைந்து அண்டுவர் ஒடும் தொண்டு
இடர் கிடந்துண்டு ஏர் கொஞ்சும்.....கடை நாயேன்
புகழ் அடைந்து உன் கழல் பணிந்து ஒண்
பொடி அணிந்து அங்கு ஆநந்தம்
புனல் படிந்துண்டு அவச(ம்) மிஞ்சும்
தவசர் சந்தம் போலும் திண்
புவனி கண்டு இன்று அடி வணங்கும்
செயல் கொள அம் செம் சீர் செம் பொன்.....கழல் தாராய்
திகுட திந்திந் தகுட தந்தந்
திகுட திந்திந் தோதிந்தம்
டகுட டண்டண் டிகுட டிண்டிண்
டகுட டண்டண் டோடிண்டிண்
டிமுட டிண்டிண் டுமுட டுண்டுண்
டிமுட டிண்டு என்றே சங்கம்.....பல பேரி
செக கணம் சஞ்ச(ல்)லிகை பஞ்சம்
பறை முழங்கும் போர் அண்டம்
சிலை இடிந்தும் கடல் வடிந்தும்
பொடி பறந்து உண்டோர் சங்கம்
சிரம் உடைந்து அண்டு அவுணர் அங்கம்
பிணம் அலைந்து அன்று ஆடும் செம்.....கதிர் வேலா
அகில அண்டம் சுழல எங்கும்
பவுரி கொண்டு அங்கு ஆடும் கொ(கோ)ன்
புகழ் விளங்கும் கவுரி பங்கன்
குரு எனும் சிங்காரம் கொண்டு
அறு முகம் பொன் சதி துலங்கும்
திரு பதம் கந்தா என்று என்று.....அமரோர் பால்
அலர் பொழிந்து அம் கரம் முகிழ்ந்து ஒண்
சரணமும் கொண்டு ஓத அந்தம்
புனை குறம் பெண் சிறுமி அங்கம்
புணர் செயம் கொண்டே அம் பொன்
அமை விளங்கும் புலிசரம் பொன்
திரு நடம் கொண்டார் கந்த அம்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
501
சிதம்பரம் சாந்துடனே புழுகு தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன ...... தனதான
சாந்துட னேபுழுகு தோய்ந்தழ கார்குழலை
மோந்துப யோதரம ...... தணையாகச்
சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்தநு ராகசுக
காந்தமொ டூசியென ...... மடவார்பால்
கூர்ந்தக்ரு பாமனது போந்துன தாள்குறுகி
ஓர்ந்துண ராவுணர்வி ...... லடிநாயேன்
கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணை
பூண்டுற வாடுதின ...... முளதோதான்
பாந்தளின் மீதினிதி னோங்குக ணேதுயில்கொள்
நீண்டிடு மாலொடய ...... னறியாது
பாம்புரு வானமுநி வாம்புலி யானபதன்
ஏய்ந்தெதிர் காணநட ...... மிடுபாதர்
பூந்துணர் பாதிமதி வேய்ந்தச டாமகுட
மாங்கன காபுரியி ...... லமர்வாழ்வே
பூங்கமு கார்வுசெறி யூங்கந காபுரிசை
சூழ்ம்புலி யூரிலுறை ...... பெருமாளே.
சாந்துடனே புழுகு தோய்ந்து அழகு ஆர் குழலை
மோந்து பயோதரம் அது.....அணையாக
சாய்ந்து ப்ரதாபமுடன் வாழ்ந்து அநுராக சுக
காந்தமொடு ஊசி என மடவார் பால்
கூர்ந்த க்ருபா மனது போந்து உன தாள் குறுகி
ஓர்ந்து உணரா உணர்வு இல்.....அடி நாயேன்
கூம்பு அவிழ் கோகநக பூம் பத கோது இல் இணை
பூண்டு உறவாடு தினம்.....உளதோ தான்
பாந்தளின் மீது இனிதின் ஓங்கு க(ண்)ணே துயில்கொள்
நீண்டிடும் மாலொடு அயன்.....அறியாது
பாம்பு உருவான முநி வா(வு)ம் புலியான பதன்
ஏய்ந்து எதிர் காண நடம்.....இடும் பாதர்
பூந்து உணர் பாதி மதி வேய்ந்த சடா மகுடமாம்
கனகா புரியில்.....அமர் வாழ்வே
பூங்கமுகு ஆர்வு செறி(யூ)யும் கநகா புரிசை
சூழு(ழ்)ம் புலியூரில் உறை.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
502
சிதம்பரம் சுடரனைய திருமேனி தனதனன தனதான தனதனன தனதான
தனதனன தனதான ...... தனதான
சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான
சொருபகிரி யிடமேவு ...... முகமாறும்
சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய
துகிரிதழின் மொழிவேத ...... மணம்வீச
அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட
அயில்கரமொ டெழில்தோகை ...... மயிலேறி
அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை
அதிசயமெ னருள்பாட ...... வரவேணும்
விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோட
மிடறடைய விடம்வாரி ...... யருள்நாதன்
மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்
மிகமகிழ அநுபூதி ...... யருள்வோனே
இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி
னிணையிளநிர் முலைமார்பி ...... னணைமார்பா
இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி
யிருடியர்கள் புகழ்ஞான ...... பெருமாளே.
சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான
சொருபகிரி யிடமேவு.....முகமாறும்
சுரர் தெரியல் அளிபாட மழலைகதி நறைபாய
துகிர் இதழின் மொழிவேத.....மணம்வீச
அடர்பவள வொளிபாய அரிய பரிபுரம் ஆட
அயில்கரமொடு எழில் தோகை.....மயிலேறி
அடியனிரு வினைநீறு பட அமரர் இது பூரை
அதிசயமென அருள்பாட.....வரவேணும்
விடைபரவி அயன்மாலொடு அமரர் முநி கணமோட
மிடறடைய விடம்வாரி.....யருள்நாதன்
மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்
மிகமகிழ அநுபூதி.....யருள்வோனே
இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதின்
இணையிளநிர் முலைமார்பின்.....அணைமார்பா
இனிய முது புலிபாதனுடன் அரவு சதகோடி
யிருடியர்கள் புகழ்ஞான.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=FiZeMpeJ-PQ
Add (additional) Audio/Video Link
503
சிதம்பரம் தத்தை மயில் தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான
தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகை
யிட்டுமுட னாணிமுலை மீதுதுகில் மூடியவர்
சற்றவிடம் வீடுமினி வாருமென வோடிமடி ...... பிடிபோல
தைச்சரச மோடுறவெ யாடியக மேகொடுபொ
யெத்தியணை மீதிலிது காலமெனிர் போவதென
தட்டுபுழு கோடுபனி நீர்பலச வாதையவ ...... ருடல்பூசி
வைத்துமுக மோடிரச வாயிதழி னூறல்பெரு
கக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதற
வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி ...... யுடைசோர
மச்சவிழி பூசலிட வாய்புலியு லாசமுட
னொப்பியிரு வோருமயல் மூழ்கியபின் ஆபரணம்
வைத்தடகு தேடுபொருள் சூறைகொளு வார்கலவி ...... செயலாமோ
சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுக
நித்தியகல் யாணியெனை யீணமலை மாதுசிவை
தற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமை ...... யருள்பாலா
சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபட
ரத்நமயி லேறிவிளை யாடியசு ராரைவிழ
சத்தியினை யேவிஅம ரோர்கள்சிறை மீளநட ...... மிடுவோனே
துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகு
சித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியை
சுத்தஅணை யூடுவட மாமுலைவி டாதகர ...... மணிமார்பா
சுத்தவம காதவசி காமணியெ னோதுமவர்
சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுக
சுப்ரமணி யாபுலியுர் மேவியுறை தேவர்புகழ் ...... பெருமாளே.
தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை
இட்டும் உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர்
சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி.....பிடி போல
தைச் சரசமோடு உறவெ ஆடி அகமே கொடு போய்
எத்தி அணை மீதில் இது காலம் என் நி(நீ)ர் போவது என
தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர்.....உடல் பூசி
வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக
குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற
வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி.....உடை சோர
மச்ச விழி பூசலிட வாய் பு(ல்)லி உ(ல்)லாசமுடன்
ஒப்பி இருவோரு(ம்) மயல் மூழ்கிய பின் ஆபரணம்
வைத்து அடகு தேடு பொருள் சூறை கொளுவார் கலவி.....செயலாமோ
சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக
நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை
தற் பரனொடு ஆடும் அபிராமி சிவகாமி உமை.....அருள் பாலா
சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட
ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ
சத்தியினை ஏவி அமரோர்கள் சிறை மீள நடம்.....இடுவோனே
துத்தி தனபார வெகு மோக சுக வாரி மிகு
சித்ர முக ரூபி எனது ஆயி வ(ள்)ளி நாயகியை
சுத்த அணையூடு வட மா முலை விடாத கர.....மணி மார்பா
சுத்த மகா தவ சிகாமணி என ஓதும் அவர்
சித்தம் அதிலே குடியதா(ய்) உறையும் ஆறு முக
சுப்ரமணியா புலியூர் மேவி உறை தேவர் புகழ்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
504
சிதம்பரம் துத்தி பொற்றன தத்த தத்தன தான தானன
தத்த தத்தன தான தானன
தத்த தத்தன தான தானன ...... தனதான
துத்தி பொற்றன மேரு வாமென
வொத்தி பத்திரள் வாகு வாயவிர்
துப்பு முத்தொடு மார்பி னாடிட ...... மயில்போலே
சுக்கை மைக்குழ லாட நூலிடை
பட்டு விட்டவிர் காம னாரல்குல்
சுற்று வித்துறு வாழை சேர்தொடை ...... விலைமாதர்
தத்தை பட்குர லோசை நூபுர
மொத்த நட்டமொ டாடி மார்முலை
சற்ற சைத்துகு லாவும் வேசிய ...... ரவரோடே
தர்க்க மிட்டுற வாடி யீளைநொய்
கக்கல் விக்கல்கொ ளூளை நாயென
சிச்சி சிச்சியெ னால்வர் கூறிட ...... வுழல்வேனோ
தித்தி மித்திமி தீத தோதக
தத்த னத்தன தான தீதிமி
திக்கு முக்கிட மூரி பேரிகை ...... தவில்போடச்
சித்ர வித்தைய ராட வானவர்
பொற்பு விட்டிடு சேசெ சேயென
செக்கு விட்டசு ரோர்கள் தூள்பட ...... விடும்வேலா
செத்தி டச்சம னார்க டாபட
அற்று தைத்தசு வாமி யாரிட
சித்தி ரச்சிவ காமி யாரருள் ...... முருகோனே
தெற்க ரக்கர்கள் தீவு நீறிட
விட்ட அச்சுத ரீன மானொடு
சித்தி ரப்புலி யூரில் மேவிய ...... பெருமாளே.
துத்தி பொன் தனம் மேருவாம் என
ஒத்து இபத் திரள் வாகுவாய் அவிர்
துப்பு முத்தோடு மார்பின் ஆடிட.....மயில் போலே
சுக்கை மைக் குழல் ஆட நூல் இடை
பட்டுவிட்டு அவிர் காமனார் அல்குல்
சுற்றுவித்து உறு வாழை சேர் தொடை.....விலை மாதர்
தத்தை புட் குரல் ஓசை நூபுரம்
ஒத்த நட்டமொடு ஆடி மார் முலை
சற்று அசைத்து குலாவும் வேசியர்.....அவரோடே
தர்க்கம் இட்டு உறவாடி ஈளை நோய்
கக்கல் விக்கல் கொள் ஊளை நாய் என
சிச்சி சிச்சி என நால்வர் கூறிட.....உழல்வேனோ
தித்தி மித்திமி தீத தோதக
தத்த னத்தன தான தீதிமி
திக்கு முக்கிட மூரி பேரிகை.....தவில் போட
சித்ர வித்தையர் ஆட வானவர்
பொன் பூ இட்டு இ(ட்)டு சே செ சே என
செக்குவிட்டு அசுரோர்கள் தூள்பட.....விடும் வேலா
அச்சமனார் செத்திட கடா பட
அற்று உதைத்த சுவாமியார் இட
சித்திரச் சிவகாமியார் அருள்.....முருகோனே
தெற்கு அரக்கர்கள் தீவு நீறு இட
விட்ட அச்சுதர் ஈன மானோடு
சித்திரப் புலியூரில் மேவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
505
சிதம்பரம் நாடா பிறப்பு தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன ...... தனதான
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
நாயே னரற்றுமொழி ...... வினையாயின்
நாதா திருச்சபையி னேறாது சித்தமென
நாலா வகைக்குமுன ...... தருள்பேசி
வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர
வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும்
சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி
தோலா சனத்தியுமை ...... யருள்பாலா
தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த
தோழா கடப்பமல ...... ரணிவோனே
ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு
மேராள் குறத்திதிரு ...... மணவாளா
ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே.
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
நாயேன் அரற்றுமொழி.....வினையாயின்
நாதா திருச்சபையி னேறாது சித்தமென
நாலா வகைக்கும் உனது.....அருள்பேசி
வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
வாய்பாறி நிற்குமெனை.....அருள்கூர
வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
வாரேன் எனக்கு எதிர் முன்.....வரவேணும்
சூடா மணிப்பிரபை ரூபா கனத்த அரி
தோல் ஆசனத்தி உமை.....அருள்பாலா
தூயா துதித்தவர்கள் நேயா எமக்கமிர்த
தோழா கடப்பமலர்.....அணிவோனே
ஏடார் குழற்சுருபி ஞான ஆதனத்தி மிகு
மேராள் குறத்தி திரு.....மணவாளா
ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
ஈடேற வைத்தபுகழ்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=emIj1B2sh9E
Add (additional) Audio/Video Link
506
சிதம்பரம் நாலு சதுரத்த பஞ்ச தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன
தானதன தத்த தந்தன ...... தந்ததான
நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை
நாடியின டத்தி மந்திர ...... பந்தியாலே
நாரண புரத்தி லிந்துவி னூடுற இணக்கி நன்சுடர்
நாறிசை நடத்தி மண்டல ...... சந்தியாறிற்
கோலமு முதிப்ப கண்டுள நாலினை மறித்தி தம்பெறு
கோவென முழக்கு சங்கொலி ...... விந்துநாதங்
கூடிய முகப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொரு
கோடிநட னப்ப தஞ்சபை ...... யென்றுசேர்வேன்
ஆலமல ருற்ற சம்பவி வேரிலி குலக்கொ ழுந்திலி
ஆரணர் தலைக்க லங்கொளி ...... செம்பொன்வாசி
ஆணவ மயக்க முங்கலி காமிய மகற்றி யென்றனை
ஆளுமை பரத்தி சுந்தரி ...... தந்தசேயே
வேலதை யெடுத்து மிந்திரர் மால்விதி பிழைக்க வஞ்சகர்
வீடெரி கொளுத்தி யெண்கட ...... லுண்டவேலா
வேதசது ரத்தர் தென்புலி யூருறை யொருத்தி பங்கினர்
வீறுநட னர்க்கி சைந்தருள் ...... தம்பிரானே.
நாலு சதுரத்த பஞ்ச அறை மூல கமலத்தில் அங்கியை
நாடியில் நடத்தி மந்திர.....பந்தியாலே
நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர்
நாற இசை நடத்தி மண்டல.....சந்தி ஆறில்
கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்து இதம் பெறு
கோ என முழுக்கு சங்கு ஒலி.....விந்து நாதம்
கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு
ஒரு கோடி நடனப் பத அம் சபை.....என்று சேர்வேன்
ஆலம் மலருற்ற சம்பவி வேரிலி குலக் கொழுந்திலி
ஆரணர் தலைக் கலம் கொளி.....செம் பொன் வாசி
ஆணவ மயக்கமும் க(ல்)லி காமியம் அகற்றி என்றனை
ஆள் உமை பரத்தி சுந்தரி.....தந்த சேயே
வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர்
வீடு எரி கொளுத்தி எண் கடல்.....உண்ட வேலா
வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர்
வீறு நடனர்க்கு இசைந்து அருள்.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
507
சிதம்பரம் நீலக் குழலார் தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
தானத்தன தானத்தன ...... தனதான
நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை யார்தைப்பிறை
நீளச்சசி யார்பொட்டணி ...... நுதல்மாதர்
நீலக்கய லார்பத்திர வேலொப்பிடு வார்நற்கணி
நேமித்தெழு தாசித்திர ...... வடிவார்தோள்
ஆலைக்கழை யார்துத்திகொ ளாரக்குவ டார்கட்டளை
யாகத்தமி யேனித்தமு ...... முழல்வேனோ
ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர
மாகக்கொள வேமுத்தியை ...... யருள்வாயே
மாலைக்குழ லாளற்புத வேதச்சொரு பாளக்கினி
மார்பிற்பிர காசக்கிரி ...... தனபார
வாசக்குயி லாள்நற்சிவ காமச்செய லாள்பத்தினி
மாணிக்கமி னாள்நிஷ்கள ...... உமைபாகர்
சூலக்கையி னாரக்கினி மேனிப்பர னாருக்கொரு
சோதிப்பொருள் கேள்விக்கிடு ...... முருகோனே
சோதிப்பிர காசச்செய லாள்முத்தமிழ் மானைப்புணர்
சோதிப்புலி யூர்நத்திய ...... பெருமாளே.
நீலக் குழலார் முத்து அணி வாய் சர்க்கரையார் தைப்பிறை
நீளச் சசியார் பொட்டு அணி.....நுதல் மாதர்
நீலக் கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் நற் கணி
நேமித்து எழுதா சித்திர.....வடிவார் தோள்
ஆலைக் கழையார் துத்தி கொள் ஆரக் குவடார் கட்டளை
யாகத் தமியேன் நித்தமும்.....உழல்வேனோ
ஆசைப்பதம் மேல் புத்தி மெய் ஞானத்துடனே பத்திரமாகக்
கொளவே முத்தியை.....அருள்வாயே
மாலைக் குழலாள் அற்புத வேதச் சொருபாள் அக்கினி
மார்பில் பிரகாசக் கிரி.....தனபார
வாசக் குயிலாள் நல் சிவகாமச் செயலாள் பத்தினி
மாணிக்க மி(ன்)னாள் நிஷ்கள.....உமை பாகர்
சூலக் கையினார் அக்கினி மேனிப் பரனாருக்கு ஒரு
சோதிப் பொருள் கேள்விக்கு இடு.....முருகோனே
சோதிப் பிரகாசச் செயலாள் முத்தமிழ் மானைப் புணர்
சோதிப் புலியூர் நத்திய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
508
சிதம்பரம் பனி போலத் துளி தனனா தத்தன தனனா தத்தன
தனனா தத்தன ...... தனதான
பனிபோ லத்துளி சலவா யுட்கரு
பதின்மா தத்திடை ...... தலைகீழாய்ப்
படிமே விட்டுடல் தவழ்வார் தத்தடி
பயில்வா ருத்தியில் ...... சிலநாள்போய்த்
தனமா தர்க்குழி விழுவார் தத்துவர்
சதிகா ரச்சமன் ...... வருநாளிற்
றறியா ரிற்சடம் விடுவா ரிப்படி
தளர்மா யத்துய ...... ரொழியாதோ
வினைமா யக்கிரி பொடியா கக்கடல்
விகடா ருக்கிட ...... விடும்வேலா
விதியோ னைச்சது முடிநால் பொட்டெழ
மிகவே குட்டிய ...... குருநாதா
நினைவோர் சித்தமொ டகலா மற்புகு
நிழலாள் பத்தினி ...... மணவாளா
நிதியா மிப்புவி புலியூ ருக்கொரு
நிறைவே பத்தர்கள் ...... பெருமாளே.
பனி போலத் துளி சல வாயுள் கரு
பதின் மாதத்து இடை.....தலை கீழாய்ப்
படி மேவிட்டு உடல் தவழ்வார் தத்து அடி
பயில்வார் உத்தியில்.....சில நாள் போய்
தன மாதர்க் குழி விழுவார் தத்துவர்
சதி காரச் சமன்.....வரு நாளில்
தறியார் இல் சடம் விடுவார் இப்படி
தளர் மாயத் துயர்.....ஒழியாதோ
வினை மாயக் கிரி பொடியாகக் கடல்
விகடார் உக்கிட.....விடும் வேலா
விதியோனைச் சது முடி நால் பொட்டு எழ
மிகவே குட்டிய.....குருநாதா
நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு
நிழலாள் பத்தினி.....மணவாளா
நிதியாம் இப்புவி புலியூருக்கு ஒரு
நிறைவே பத்தர்கள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
509
சிதம்பரம் மகரமொடுறு குழை தனதன தனதன தான தாத்தன
தனதன தனதன தான தாத்தன
தனதன தனதன தான தாத்தன ...... தனதான
மகரமொ டுறுகுழை யோலை காட்டியு
மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும்
வரவர வரஇத ழூற லூட்டியும் ...... வலைவீசும்
மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில்
வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில்
வளமையி லிளமையில் மாடை வேட்கையில் ...... மறுகாதே
இகலிய பிரமக பால பாத்திர
மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற
மிதழியை யழகிய வேணி யார்த்ததும் ...... விருதாக
எழில்பட மழுவுடன் மானு மேற்றது
மிசைபட இசைதரு ஆதி தோற்றமு
மிவையிவை யெனவுப தேச மேற்றுவ ...... தொருநாளே
ஜகதல மதிலருள் ஞான வாட்கொடு
தலைபறி யமணர்ச மூக மாற்றிய
தவமுனி சகமுளர் பாடு பாட்டென ...... மறைபாடி
தரிகிட தரிகிட தாகு டாத்திரி
கிடதரி கிடதரி தாவெ னாச்சில
சபதமொ டெழுவன தாள வாச்சிய ...... முடனேநீள்
அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல
அலகைக ளடைவுட னாடு மாட்டமு
மரனவ னுடனெழு காளி கூட்டமு ...... மகலாதே
அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு
மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு
மரிதென முறைமுறை யாடல் காட்டிய ...... பெருமாளே.
மகரமொடு உறு குழை ஓலை காட்டியு(ம்)
மழை தவழ் வனை குழல் மாலை காட்டியும்
வரவர வர இதழ் ஊறல் ஊட்டியும்.....வலை வீசும்
மகர விழி மகளிர் பாடல் வார்த்தையில்
வழி வழி ஒழுகும் உபாய வாழ்க்கையில்
வளமையில் இளமையில் மாடை வேட்கையில்.....மறுகாதே
இகலிய பிரம கபால பாத்திரம்
எழில் பட இடு திரு நீறு சேர்த்திறம்
இதழியை அழகிய வேணி ஆர்த்ததும்.....விருதாக
எழில் பட மழுவுடன் மானும் ஏற்றதும்
இசை பட இசை தரு ஆதி தோற்றமும்
இவை இவை என உபதேசம் ஏற்றுவது.....ஒரு நாளே
ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொ(ண்)டு
தலை பறி அமணர் சமூகம் மாற்றிய
தவ முனி சகம் உளர் பாடு பாட்டு என.....மறை பாடி
தரிகிட தரிகிட தாகு டாத்திரி
கிடதரி கிடதரி தாவெ னாச்சில
சபதமொடு எழுவன தாள் வாச்சியமுடனே.....நீள்
அகு குகுகுகு என ஆளி வாய்ப் பல
அலகைகள் அடைவுடன் ஆடும் ஆட்டமும்
அரன் அவனுடன் எழு காளி கூட்டமும்.....அகலாதே
அரி துயில் சயன வியாள மூர்த்தனு(ம்)
மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும்
அரிது என முறை முறை ஆடல் காட்டிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
510
சிதம்பரம் மச்ச மெச்சு தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த
தத்த தத்த தாத்த ...... தனதான
மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம்
வைச்சி றைச்ச பாத்ர ...... மநுபோகம்
மட்க விட்ட சேக்கை உட்பு ழுத்த வாழ்க்கை
மட்டு லப்ப தார்த்த ...... மிடிபாறை
எய்ச்சி ளைச்ச பேய்க்கு மெய்ச்சி ளைச்ச நாய்க்கு
மெய்ச்சி ளைச்ச ஈக்கு ...... மிரையாகும்
இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி
இப்படிக்கு மோக்ஷ ...... மருள்வாயே
பொய்ச்சி னத்தை மாற்றி மெய்ச்சி னத்தை யேற்றி
பொற்ப தத்து ளாக்கு ...... புலியூரா
பொக்க ணத்து நீற்றை யிட்டொ ருத்த னார்க்கு
புத்தி மெத்த காட்டு ...... புனவேடன்
பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்கு
பைச்சி லைக்கு மாட்கொ ...... ளரன்வாழ்வே
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்த மீட்ட
பத்த ருக்கு வாய்த்த ...... பெருமாளே.
மச்சம் மெச்சு(ம்) சூத்ரம் ரத்த பித்த மூத்(தி)ரம்
வைச்சு இறைச்ச பாத்திரம்.....அநுபோகம்
மட்க விட்ட சேக்கை உள் புழுத்த வாழ்க்கை
மண் குல பதார்த்தம்.....இடி பாறை
எய்ச்சு இளைச்ச பேய்க்கும் மெய்ச்சு இளைச்ச நாய்க்கும்
மெய்ச்சு இளைச்ச ஈக்கும்.....இரையாகும்
இக் கடத்தை நீக்கி அக் கடத்துள் ஆக்கி
இப்படிக்கு மோக்ஷம்.....அருள்வாயே
பொய்ச் சி(ன்)னத்தை மாற்றி மெய்ச் சி(ன்)னத்தை ஏற்றி
பொன் பதத்துள் ஆக்கு(ம்).....புலியூரா
பொக்கணத்து நீற்றை இட்டு ஒருத்தனார்க்கு
புத்தி மெத்த காட்டு(ம்).....புன வேடன்
பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் வீக்கு
பைச் சிலைக்கும் ஆட்கொள்.....அரன் வாழ்வே
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட
பத்தருக்கு வாய்த்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
511
சிதம்பரம் மதிய மண்குண தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன ...... தந்ததான
மதிய மண்குண மஞ்சு நால்முக
நகர முன்கலை கங்கை நால்குண
மகர முன்சிக ரங்கி மூணிடை ...... தங்குகோண
மதன முன்தரி சண்ட மாருத
மிருகு ணம்பெறி லஞ்செ லோர்தெரு
வகர மிஞ்சிய கன்ப டாகமொ ...... ரொன்றுசேருங்
கதிர டங்கிய அண்ட கோளகை
யகர நின்றிடும் ரண்டு கால்மிசை
ககன மின்சுழி ரண்டு கால்பரி ...... கந்துபாயுங்
கருணை யிந்திரி யங்கள் சோதிய
அருண சந்திர மண்ட லீகரர்
கதிகொள் யந்திர விந்து நாதமொ ...... டென்றுசேர்வேன்
அதிர பம்பைகள் டங்கு டாடிக
முதிர அண்டமொ டைந்து பேரிகை
டகுட டண்டட தொந்த தோதக ...... என்றுதாளம்
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோ
டிதவி தம்பெறு சிந்து பாடிட
அமரர் துந்துமி சங்கு தாரைகள் ...... பொங்கவூடு
உதிர மண்டல மெங்கு மாயொளி
யெழகு மண்டியெ ழுந்து சூரரை
உயர்ந ரம்பொடெ லும்பு மாமுடி ...... சிந்திவீழ
உறுசி னங்கொடெ திர்ந்த சேவக
மழைபு குந்துய ரண்டம் வாழ்வுற
வுரக னும்புலி கண்ட வூர்மகிழ் ...... தம்பிரானே.
மதியம் மண் குணம் அஞ்சு நால் முக(ம்)
நகர(ம்) முன்கலை ந கங்கை நால் குண(ம்)
மகரம் ம முன் சிகர(ம்) அங்கி மூணிடை.....தங்கு கோண(ம்)
மதனம் முன் தரி சண்ட மாருதம்
இரு குணம் பொறில் அஞ்சு எல் ஓர் தெரு
வகரம் வா மிஞ்சி அகன் படா கம் ஒர்.....ஒன்று சேரும்
கதிர் அடங்கிய அண்ட கோளகை
யகர(ம்) நின்றிடும் ய (இ)ரண்டு கால் மிசை
ககன(ம்) மின் சுழி (இ)ரண்டு கால் பரி.....கந்து பாயும்
கருணை இந்திரியங்கள் சோதிய
அருண சந்திர மண்டலீகரர்
கதி கொள் யந்திர விந்து நாதமொடு.....என்று சேர்வேன்
அதிர பம்பைகள் டங்கு டாடிக
முதிர அண்டமொடு ஐந்து பேரிகை
டகுட டண்டட தொந்ததோதக.....என்று தாளம்
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரொடு
இத விதம் பெறு சிந்து பாடிட
அமரர் துந்துமி சங்கு தாரைகள்.....பொங்க ஊடு
உதிர மண்டலம் எங்குமாய் ஒளி
எழ குமண்டி எழுந்து சூரரை
உயர் நரம்பொடு எலும்பு மா முடி.....சிந்தி வீழ
உறு சினம் கொண்டு எதிர்த்த சேவக
மழை புகுந்து உயர் அண்டம் வாழ்வுற
உரகனும் புலி கண்ட ஊர் மகிழ்.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
512
சிதம்பரம் மருவு கடல்முகில் தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன
தத்தத் தத்தன தத்தத் தத்தன
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன
தத்தத் தத்தன தத்தத் தத்தன
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன
தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தனதான.
மருவு கடல்முகி லனைய குழல்மதி
வதன நுதல்சிலை பிறைய தெணும்விழி
மச்சப் பொற்கணை முக்குப் பொற்குமி
ழொப்பக் கத்தரி யொத்திட் டச்செவி
குமுத மலரித ழமுத மொழிநிரை
தரள மெனுநகை மிடறு கமுகென
வைத்துப் பொற்புய பச்சைத் தட்டையொ
டொப்பிட் டுக்கம லக்கைப் பொற்றுகிர்
வகைய விரலொடு கிளிகள் முகநக
மெனவு மிகலிய குவடு மிணையென
வட்டத் துத்திமு கிழ்ப்பச் சக்கிரம்
வைத்தப் பொற்குட மொத்திட் டுத்திகழ் ...... முலைமேவும்
வடமு நிரைநிரை தரள பவளமொ
டசைய பழுமர இலைவ யிறுமயி
ரற்பத் திக்கிணை பொற்புத் தொப்புளும்
அப்புக் குட்சுழி யொத்துப் பொற்கொடி
மதன னுருதுடி யிடையு மினலென
அரிய கடிதட மமிர்த கழைரச
மட்டுப் பொற்கம லத்திற் சக்கிரி
துத்திப் பைக்கொரு மித்துப் பட்டுடை
மருவு தொடையிணை கதலி பரடுகொள்
கணையு முழவென கமட மெழுதிய
வட்டப் புத்தக மொத்துப் பொற்சர
ணத்திற் பிற்புற மெத்துத் தத்தைகள் ...... மயில்போலே
தெருவில் முலைவிலை யுரைசெய் தவரவர்
மயல்கொ டணைவர மருள்செய் தொழில்கொடு
தெட்டிப் பற்பல சொக்கிட் டுப்பொருள்
பற்றிக் கட்டில ணைக்கொப் பிப்புணர்
திலத மழிபட விழிகள் சுழலிட
மலர்க ளணைகுழ லிடைகொள் துகில்பட
தித்தித் துப்பிதழ் வைத்துக் கைக்கொடு
கட்டிக் குத்துமு லைக்குட் கைப்பட
திரையி லமுதென கழையில் ரசமென
பலவில் சுளையென வுருக வுயர்மயல்
சிக்குப் பட்டுடல் கெட்டுச் சித்தமும்
வெட்கித் துக்கமு முற்றுக் கொக்கென ...... நரைமேவிச்
செவியொ டொளிர்விழி மறைய மலசல
மொழுக பலவுரை குழற தடிகொடு
தெத்திப் பித்தமு முற்றித் தற்செய
லற்றுச் சிச்சியெ னத்துக் கப்பட
சிலர்கள் முதுவுடல் வினவு பொழுதினி
லுவரி நிறமுடை நமனு முயிர்கொள
செப்பற் றுப்பிண மொப்பித் துப்பெய
ரிட்டுப் பொற்பறை கொட்டச் செப்பிடு
செனன மிதுவென அழுது முகமிசை
அறைய அணைபவ ரெடென சுடலையில்
சிற்றிக் குக்கிரை யிட்டிட் டிப்படி
நித்தத் துக்கமெ டுத்திட் டுச்சட ...... முழல்வேனோ
குருவி னுருவென அருள்செய் துறையினில்
குதிரை கொளவரு நிறைத வசிதலை
கொற்றப் பொற்பதம் வைத்திட் டற்புத
மெற்றிப் பொற்பொரு ளிட்டுக் கைக்கொளு
முதல்வ ரிளகலை மதிய மடைசடை
அருண வுழைமழு மருவு திருபுயர்
கொட்டத் துப்புரர் கெட்டுப் பொட்டெழ
விட்டத் திக்கணை நக்கர்க் கற்புத
குமர னெனவிரு தொலியு முரசொடு
வளையு மெழுகட லதிர முழவொடு
கொட்டத் துட்டரை வெட்டித் தட்கட
லொப்பத் திக்கும டுத்துத் தத்திட ...... அமர்மேவிக்
குருகு கொடிசிலை குடைகள் மிடைபட
மலைகள் பொடிபட வுடுக ளுதிரிட
கொத்திச் சக்கிரி பற்றப் பொற்பரி
எட்டுத் திக்குமெ டுத்திட் டுக்குரல்
குமர குருபர குமர குருபர
குமர குருபர எனவொ தமரர்கள்
கொட்பப் புட்பமி றைத்துப் பொற்சர
ணத்திற் கைச்சிரம் வைத்துக் குப்பிட
குலவு நரிசிறை கழுகு கொடிபல
கருட னடமிட குருதி பருகிட
கொற்றப் பத்திர மிட்டுப் பொற்கக
னத்தைச் சித்தமி ரக்ஷித் துக்கொளு ...... மயில்வீரா
சிரமொ டிரணிய னுடல்கி ழியவொரு
பொழுதி னுகிர்கொடு அரியெ னடமிடு
சிற்பர்த் திட்பதம் வைத்துச் சக்கிர
வர்த்திக் குச்சிறை யிட்டுச் சுக்கிரன்
அரிய விழிகெட இருப தமுமுல
கடைய நெடியவர் திருவு மழகியர்
தெற்குத் திக்கில ரக்கர்க் குச்சின
முற்றுப் பொற்றசர் தற்குப் புத்திர
செயமு மனவலி சிலைகை கொடுகர
மிருப துடைகிரி சிரமொர் பதும்விழ
திக்கெட் டைக்கக னத்தர்க் குக்கொடு
பச்சைப் பொற்புய லுக்குச் சித்திர ...... மருகோனே
திலத மதிமுக அழகி மரகத
வடிவி பரிபுர நடனி மலர்பத
சித்தர்க் குக்குறி வைத்திட் டத்தன
முத்தப் பொற்கிரி யொத்தச் சித்திர
சிவைகொள் திருசர சுவதி வெகுவித
சொருபி முதுவிய கிழவி யியல்கொடு
செட்டிக் குச்சுக முற்றத் தத்துவ
சித்திற் சிற்பதம் வைத்தக் கற்புறு
திரையி லமுதென மொழிசெய் கவுரியி
னரிய மகனென புகழ்பு லிநகரில்
செப்புப் பொற்றன முற்றப் பொற்குற
தத்தைக் குப்புள கித்திட் டொப்பிய ...... பெருமாளே.
மருவு கடல் முகில் அனைய குழல் மதி
வதன(ம்) நுதல் சிலை பிறை அது எ(ண்)ணும் விழி
மச்ச(ம்) பொன் கணை முக்குப் பொன் குமிழ்
ஒப்பக் கத்தரி ஒத்திட்டச் செவி
குமுத மலர் இதழ் அமுத மொழி நிரை
தரளம் எனும் நகை மிடறு கமுகு என
வைத்துப் பொன் புய(ம்) பச்சைத் தட்டையொடு
ஒப்பிட்டுக் கமலக் கைப் பொன் துகிர்
வகைய விரலொடு கிளிகள் முக நகம்
எனவும் இகலிய குவடும் இணை என
வட்டத் துத்தி முகிழ்ப்பச் சக்கிரம்
வைத்தப் பொன் குடம் ஒத்திட்டுத் திகழ்.....முலை மேவும்
வடமு(ம்) நிரை நிரை தரளம் பவளம் ஒடு
அசைய பழு மர இலை வயிறு மயிர்
அற்பத்திக்கு இணை பொற்புத் தொப்புளும்
அப்புக்குள் சுழி ஒத்துப் பொன் கொடி
மதனன் உரு துடி இடையும் மி(ன்)னல் என
அரிய கடி தடம் அமிர்த கழை ரசம்
மட்டுப் பொன் கமலத்தில் சக்கிரி
துத்திப் பைக்கு ஒருமித்து பட்டு உடை
மருவு தொடை இணை கதலி பரடு கொள்
கணையும் முழவு என கமடம் எழுதிய
வட்டப் புத்தகம் ஒத்துப் பொன்
சரணத்தில் பின் புறம் மெத்துத் தத்தைகள்.....மயில் போலே
தெருவில் முலை விலை உரை செய்து அவரவர்
மயல் கொண்டு அணைவர மருள்செய் தொழில் கொ(ண்)டு
தெட்டிப் பற்பல சொக்கு இட்டுப் பொருள்
பற்றிக் கட்டில் அணைக்க ஒப்பிப் புணர்
திலதம் அழிபட விழிகள் சுழலிட
மலர்கள் அணை குழல் இடை கொள் துகில் பட
தித்தித் துப்பு இதழ் வைத்துக் கை கொ(ண்)டு
கட்டிக் குத்து முலைக்குள் கைப் பட
திரையில் அமுது என கழையில் ரசம் என
பலவில் சுளை என உருக உயர் மயல்
சிக்குப் பட்டு உடல் கெட்டுச் சித்தமும்
வெட்கித் துக்கமும் உற்று கொக்கு .....நரை மேவிச்
செவியொடு ஒளிர் விழி மறைய மல சலம்
ஒழுக பல உரை குழற தடி கொ(ண்)டு
தெத்திப் பித்தமும் முற்றித் தன் செயல்
அற்றுச் சிச்சிஎனத் துக்கப்பட
சிலர்கள் முது உடல் வினவு பொழுதினில்
உவரி நிறம் உடை நமனும் உயிர் கொள
செப்பு அற்றுப் பிணம் ஒப்பித்துப் பெயர்
இட்டு பொன் பறை கொட்டச் செப்பிடு
செனனம் இது என அழுது முகம் மிசை
அறைய அணைபவர் எடு என சுடலையில்
சில் திக்குக்கு இரை இட்டிட்டு இப்படி
நித்தத் துக்கம் எடுத்திட்டுச் சடம்.....உழல்வேனோ
குருவின் உரு என அருள் செய் துறையினில்
குதிரை கொள வரு நிறை தவசி தலை
கொற்றப் பொன் பதம் வைத்திட்டு அற்புதம்
எற்றிப் பொன் பொருள் இட்டுக் கைகொ(ள்)ளும்
முதல்வர் இள கலை மதியம் அடை சடை
அருண உழை மழு மருவு திரு புயர்
கொட்டத்துப் புரர் கெட்டுப் பொட்டு எழ
விட்டத் திக்கு அணை நக்கர்க்கு அற்புத
குமரன் என விருது ஒலியும் முரசொடு
வளையும் எழு கடல் அதிர முழவொடு
கொட்டத் துட்டரை வெட்டித் தண் கடல்
ஒப்பத் திக்கும் மடுத்துத் தத்திட.....அமர் மேவி
குருகு கொடி சிலை குடைகள் மிடைபட
மலைகள் பொடிபட உடுகள் உதிரிட
கொத்திச் சக்கிரி பற்றப் பொன் பரி
எட்டுத் திக்கும் எடுத்திட்டுக் குரல்
குமர குருபர குமர குருபர
குமர குருபர என ஒது அமரர்கள்
கொட்பப் புட்பம் இறைத்துப் பொன்
சரணத்தில் கைச் சிரம் வைத்துக் குப்பிட
குலவு நரி சிறை கழுகு கொடி பல
கருடன் நடமிட குருதி பருகிட
கொற்றப் பத்திரம் இட்டுப் பொன்
ககனத்தைச் சித்தம் இரக்ஷித்துக் கொ(ள்)ளும்.....மயில் வீரா
சிரமொடு இரணியன் உடல் கிழிய ஒரு
பொழுதில் உகிர் கொ(ண்)டு அரி எல் நடமிடு
சிற்பர் திண் பதம் வைத்துச் சக்கிர
வர்த்திக்குச் சிறை இட்டுச் சுக்கிரன்
அரிய விழி கெட இரு பதமும் உலகு
அடைய நெடியவர் திருவும் அழகியர்
தெற்குத் திக்கில் அரக்கர்க்குச் சினம்
உற்றுப் பொன் தசர்தற்குப் புத்திர
செயமும் மன வலி சிலை கை கொ(ண்)டு கரம்
இரு பது உடை கிரி சிரம் ஒர் ப(த்)தும் விழ
திக்கு எட்டைக் ககனத்தர்க்குக் கொடு
பச்சைப் பொன் புயலுக்குச் சித்திர.....மருகோனே
திலத மதி முக அழகி மரகத
வடிவி பரிபுர நடனி மலர் பத
சித்தர்க்குக் குறி வைத்திட்டத் தனம்
முத்தப் பொன் கிரி ஒத்தச் சித்திர
சிவை கொள் திரு சரசுவதி வெகு வித
சொருபி முதுவிய கிழவி இயல் கொடு
செட்டிக்குச் சுகம் உற்றத் தத்துவ
சித்தில் சில் பதம் வைத்தக் கற்புறு
திரையில் அமுது என மொழி செய் கவுரியின்
அரிய மகன் என புகழ் புலி நகரில்
செப்புப் பொன் தனம் உற்றப் பொன் குற
தத்தைக்குப் புளகித்திட்டு ஒப்பிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
513
சிதம்பரம் மனமே உனக்குறுதி தனனா தனத்ததன தனனா தனத்ததன
தனனா தனத்ததன ...... தனதானா
மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில்
வருவா யுரைத்தமொழி ...... தவறாதே
மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு
மனமாயை யற்றசுக ...... மதிபாலன்
நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல
நிலைவே ரறுக்கவல ...... பிரகாசன்
நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம
நிழலாளி யைத்தொழுது ...... வருவாயே
இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரிய
இளையோ ளொரொப்புமிலி ...... நிருவாணி
எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை
யிதழ்வேணி யப்பனுடை ...... குருநாதா
முனவோர் துதித்து மலர் மழைபோ லிறைத்துவர
முதுசூ ரரைத்தலை கொள் ...... முருகோனே
மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு
முருகா தமிழ்ப்புலியுர் ...... பெருமாளே.
மனமே உனக்கு உறுதி புகல்வேன் எனக்கு அருகில்
வருவாய் உரைத்தமொழி.....தவறாதே
மயில் வாகனக்கடவுள் அடியார் தமக்கரசு
மனமாயை யற்ற சுக.....மதிபாலன்
நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு மல
நிலை வேர் அறுக்கவல.....பிரகாசன்
நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம
நிழல் ஆளியைத் தொழுது.....வருவாயே
இனம் ஓது ஒருத்தி ருபி நலம் ஏர் மறைக்கு அரிய
இளையோள் ஒர் ஒப்புமிலி.....நிருவாணி
எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை
இதழ்வேணியப்பனுடை.....குருநாதா
முனவோர் துதித்து மலர் மழைபோல் இறைத்துவர
முது சூரரைத் தலை கொள்.....முருகோனே
மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்கு உருகு
முருகா தமிழ்ப்புலியுர்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=jPCy4v9if0E
Add (additional) Audio/Video Link
514
சிதம்பரம் முத்த மோகன தத்த தானன தத்தன தானன
தத்த தானன தத்தன தானன
தத்த தானன தத்தன தானன ...... தனதான
முத்த மோகன தத்தையி னார்குர
லொத்த வாயித சர்க்கரை யார்நகை
முத்து வாரணி பொற்குவ டார்முலை ...... விலைமாதர்
மொக்கை போகசெ குத்திடு வார்பொருள்
பற்றி வேறும ழைத்திடு வார்சிலர்
முச்ச லீலிகை சொக்கிடு வாரிடர் ...... கலிசூழச்
சித்தி லாடஅ ழைத்திடு வார்கவ
டுற்ற மாதர்வ லைப்புகு நாயெனை
சித்தி ஞானம்வெ ளிப்பட வேசுடர் ...... மடமீதே
சித்தெ லாமொரு மித்துன தாறினம்
வைத்து நாயென ருட்பெற வேபொருள்
செப்பி யாறுமு கப்பரி வோடுணர் ...... வருள்வாயே
தத்த னானத னத்தன தானெனு
டுக்கை பேரிமு ழக்கிட வேகடல்
சத்த தீவுத யித்தியர் மாளிட ...... விடும்வேலா
சத்தி லோகப ரப்பர மேசுர
நிர்த்த மாடுக ழற்கரு ணாகர
தற்ப ராபர நித்தனொர் பாலுறை ...... யுமைபாலா
துத்தி மார்முலை முத்தணி மோகன
பொற்ப்ர காசமு ளக்குற மான்மகள்
துப்பு வாயிதழ் வைத்தணை சோதிபொன் ...... மணிமார்பா
சுட்டி நீலஇ ரத்தின மாமயி
லுற்று மேவிய ருட்புலி யூர்வளர்
சுத்த னேசசி பெற்றபெ ணாயகி ...... பெருமாளே.
முத்த(ம்) மோகன(ம்) தத்தையினார் குரல்
ஒத்த வாய் இத சர்க்கரையார் நகை
முத்து வார் அணி பொன் குவடு ஆர் முலை.....விலைமாதர்
மொக்கை போக செகுத்திடுவார் பொருள்
பற்றி வேறும் அழைத்திடுவார் சிலர்
முச் சலீலிகை சொக்கிடுவார் இடர்.....கலி சூழச்
சித்தில் ஆட அழைத்திடுவார் கவடு
உற்ற மாதர் வலைப் புகு நாயெனை
சித்தி ஞானம் வெளிப்படவே சுடர்.....மட(ம்) மீதே
சித்தி எ(ல்)லாம் ஒருமித்து உனது ஆறு இனம்
வைத்து நாயென் அருள் பெறவே பொருள்
செப்பி ஆறுமுகப் பரிவோடு உணர்வு.....அருள்வாயே
தத்த னானத னத்தன தா எனு(ம்)
உடுக்கை பேரி முழக்கிடவே கடல்
சத்த தீவு தயித்தியர் மாளிட.....விடும் வேலா
சத்தி லோக பரப் பரமேசுர
நிர்த்தம் ஆடு கழல் கருணாகர
தற்பரா பர நித்தன ஒர் பால் உறை.....உமை பாலா
துத்தி மார் முலை முத்து அணி மோகன
பொன் ப்ரகாசம் உளக் குற மான் மகள்
துப்பு வாய் இதழ் வைத்து அணை சோதி பொன்.....மணி மார்பா
சுட்டி நீல இரத்தின மா மயில்
உற்று மேவிய அருள் புலியூர் வளர்
சுத்தனே சசி பெற்ற பெண் நாயகி.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
515
சிதம்பரம் பரமகுரு நாத தனதனன தான தனதனன தான
தனதனன தானத் ...... தனதானா
பரமகுரு நாத கருணையுப தேச
பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண்
பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை
பகருமதி காரப் ...... பெருமாள்காண்
திருவளரு நீதி தினமனொக ராதி
செகபதியை யாளப் ...... பெருமாள்காண்
செகதலமும் வானு மருவையவை பூத
தெரிசனைசி வாயப் ...... பெருமாள்காண்
ஒருபொருள தாகி அருவிடையை யூரு
முமைதன்மண வாளப் ...... பெருமாள்காண்
உகமுடிவு கால மிறுதிகளி லாத
உறுதியநு பூதிப் ...... பெருமாள்காண்
கருவுதனி லூறு மருவினைகள் மாய
கலவிபுகு தாமெய்ப் ...... பெருமாள்காண்
கனகசபை மேவி அனவரத மாடு
கடவுள்செக சோதிப் ...... பெருமாளே.
பரமகுரு நாத கருணையுப தேச
பதவிதரு ஞானப்.....பெருமாள்காண்
பகலிரவிலாத ஒளிவெளியில் மேன்மை
பகரும் அதிகாரப்.....பெருமாள்காண்
திருவளரு நீதி தின மனொகர ஆதி
செகபதியை யாளப்.....பெருமாள்காண்
செகதலமும் வானு மருவு ஐ அவை பூத
தெரிசனை சிவாயப்.....பெருமாள்காண்
ஒருபொருள் அதாகி அருவிடையை யூரும்
உமை தன் மணவாளப்.....பெருமாள்காண்
உகமுடிவு காலம் இறுதிகளிலாத
உறுதி அநுபூதிப்.....பெருமாள்காண்
கருவுதனில் ஊறும் அருவினைகள் மாய
கலவிபுகு தாமெய்ப்.....பெருமாள்காண்
கனகசபை மேவி அனவரதம் ஆடு
கடவுள்செக சோதிப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Fzt9w8WYtSU
Add (additional) Audio/Video Link
This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000