சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: சப்தஸ்தானம்
886   மரு உலாவிடும்    
886   சப்தஸ்தானம்   மரு உலாவிடும்  
தனன தானன தான தனத்தன
     தனன தானன தான தனத்தன
          தனன தானன தான தனத்தன ...... தனதான

மருவு லாவிடு மோதி குலைப்பவர்
     சமர வேலெனு நீடு விழிச்சியர்
          மனதி லேகப டூரு பரத்தைய ...... ரதிகேள்வர்
மதன னோடுறழ் பூச லிடைச்சியர்
     இளைஞ ராருயிர் வாழு முலைச்சியர்
          மதுர மாமொழி பேசு குணத்தியர் ...... தெருமீதே
சருவி யாரையும் வாவெ னழைப்பவர்
     பொருளி லேவெகு ஆசை பரப்பிகள்
          சகல தோதக மாயை படிப்பரை ...... யணுகாதே
சலச மேவிய பாத நினைத்துமுன்
     அருணை நாடதி லோது திருப்புகழ்
          தணிய வோகையி லோத எனக்கருள் ...... புரிவாயே
அரிய கானக மேவு குறத்திதன்
     இதணி லேசில நாளு மனத்துடன்
          அடவி தோறுமெ வாழி யல்பத்தினி ...... மணவாளா
அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட
     உழவர் சாகர மோடி யொளித்திட
          அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட ...... நினைவோனே
திருவின் மாமர மார்ப ழனப்பதி
     அயிலு சோறவை யாளு துறைப்பதி
          திசையி னான்மறை தேடி யமுற்குடி ...... விதியாதிச்
சிரமு மாநிலம் வீழ்த ருமெய்ப்பதி
     பதும நாயகன் வாழ்ப திநெய்ப்பதி
          திருவை யாறுட னேழு திருப்பதி ...... பெருமாளே.


மரு உலாவிடும் ஓதி குலைப்பவர்
சமர வேல் எனு(ம்) நீடு விழிச்சியர்
மனதிலே கபடு ஊரு பரத்தையர்
ரதி கேள்வர் மதனனோடு உறழ் பூசல் இடைச்சியர்
இளைஞர் ஆருயிர் வாழும் முலைச்சியர்
மதுர மா மொழி பேசு(ம்) குணத்தியர்
தெரு மீதே சருவி யாரையும் வா என அழைப்பவர்
பொருளிலே வெகு ஆசை பரப்பிகள்
சகல தோதக மாயை படிப்பரை அணுகாதே
சலசம் மேவிய பாத(ம்) நினைத்து முன் அருணை நாடு
அதில் ஓது திருப்புகழ்
தணிய ஓகையில் ஓத எனக்கு அருள் புரிவாயே
அரிய கானகம் மேவும் குறத்தி தன் இதணிலே சில நாளு(ம்)
மனத்துடன் அடவி தோறுமெ வாழ் இயல் பத்தினி
மணவாளா
அசுரர் வீடுகள் நூறு பொடிப் பட உழவர் சாகரம் ஓடி
ஒளித்திட அமரர் நாடு பொன் மாரி மிகுந்திட
நினைவோனே
திருவின் மா மரம் ஆர் பழனப் பதி அயிலும் சோறவை
ஆளு(ம்) துறைப் பதி
திசையில் நான் மறை தேடிய முன் குடி
விதி ஆதிச் சிரமும் மா நிலம் வீழ் தரு மெய்ப்பதி
பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி திருவையாறுடன் ஏழு
திருப்பதி பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000