|
1306
க்ஷேத்திரக் கோவை கும்பகோணம் |
தந்த தானன தானான தந்தன தந்த தானன தானான தந்தன தந்த தானன தானான தந்தன ...... தனதான |
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு கொன்றை வேணியர் மாயூர மம்பெறு ...... சிவகாசி கொந்து லாவிய ராமே சுரந்தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர் பரங்கிரி ...... தனில்வாழ்வே செம்பு கேசுர மாடானை யின்புறு செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி தென்றன் மாகிரி நாடாள வந்தவ ...... செகநாதஞ் செஞ்சொ லேரக மாவா வினன்குடி குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல் செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் ...... வருதேவே கம்பை மாவடி மீதேய சுந்தர கம்பு லாவிய காவேரி சங்கமு கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர ...... வயலூரா கந்த மேவிய போரூர் நடம்புரி தென்சி வாயமு மேயா யகம்படு கண்டி யூர்வரு சாமீக டம்பணி ...... மணிமார்பா எம்பி ரானொடு வாதாடு மங்கையர் உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு ...... துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு நன்குற மங்கை மானையு மாலாய்ம ணந்துல கெங்கு மேவிய தேவால யந்தொறு ...... பெருமாளே.
|
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு கொன்றை வேணியர் மாயூரம் அம்பெறு.....சிவகாசி கொந்து உலாவிய ராமேசுரம் தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர் பரங்கிரி.....தனில்வாழ்வே செம்பு கேசுரம் ஆடானை இன்புறு செந்தில் ஏடகம் வாழ்சோலை யங்கிரி தென்றன் மாகிரி நாடாள வந்தவ.....செகநாத செஞ்சொல் ஏரக மாவாவினன்குடி குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சை நல் செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில்.....வருதேவே கம்பை மாவடி மீதேய சுந்தர கம்பு உலாவிய காவேரி சங்கமுகம் சிராமலை வாழ்தேவ தந்திர.....வயலூரா கந்த மேவிய போரூர் நடம்புரி தென்சிவாயமு மேயாய் அகம்படு கண்டி யூர்வரு சாமீ க டம்பணி.....மணிமார்பா எம்பிரானொடு வாதாடு மங்கையர் உம்பர் வாணி பொன் நீள்மால் சவுந்தரி எந்த நாள்தொறும் ஏர்பாக நின்று உறு.....துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு நன்குற மங்கை மானையு மாலாய்மணந்து உலகெங்கு மேவிய தேவாலயந்தொறு.....பெருமாளே. |
| Audio/Video Link(s) |
|
https://www.youtube.com/watch?v=QjJmbEAqnaI
|
Add (additional) Audio/Video Link
|