சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: கோடைநகர்
703   ஆதிமுதன் நாளில்     704   சாலநெடு நாள்     705   ஏறு ஆனாலே     706   ஞால மெங்கும்     707   தோழமை கொண்டு     708   தோள் தப்பாமல்     709   வாசித்த நூல்    
703   கோடைநகர்   ஆதிமுதன் நாளில்  
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து
     ஆகமல மாகி நின்று ...... புவிமீதில்
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
     ஆளழக னாகி நின்று ...... விளையாடிப்
பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
     பூமிதனில் வேணு மென்று ...... பொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
     பூவடிகள் சேர அன்பு ...... தருவாயே
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
     தீரனரி நார ணன்றன் ...... மருகோனே.
தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
     தேடஅரி தான வன்றன் ...... முருகோனே
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
     கோமளிய நாதி தந்த ...... குமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
     கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.


ஆதிமுதன் நாளில் என்றன் தாயுடலி லேயி ருந்து
     ஆகமல மாகி நின்று.....புவிமீதில்
ஆசையுடனே பிறந்து நேசமுடனே வளர்ந்து
     ஆள் அழகனாகி நின்று.....விளையாடி
பூதலமெலாம் அலைந்து மாதருடனே கலந்து
     பூமிதனில் வேணுமென்று.....பொருள்தேடி
போகமதிலே உழன்று பாழ்நரகெய்தாமல் உன்றன்
     பூவடிகள் சேர அன்பு.....தருவாயே
சீதைகொடு போகும் அந்த ராவணனை மாள வென்ற
     தீரனரி நாரணன்றன்.....மருகோனே
தேவர் முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிர்மாவு நின்று
     தேட அரிதானவன்தன்.....முருகோனே
கோதை மலை வாழுகின்ற நாதரிட பாக நின்ற
     கோமளி அநாதி தந்த.....குமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
     கோடைநகர் வாழ வந்த.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=kbAE5HyBmrQ
https://www.youtube.com/watch?v=ynoLti8jCw8
Add (additional) Audio/Video Link

Back to Top

704   கோடைநகர்   சாலநெடு நாள்  
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து
     சாமளவ தாக வந்து ...... புவிமீதே
சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து
     தாரணியி லேத வழ்ந்து ...... விளையாடிப்
பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
     பாரதன மீத ணைந்து ...... பொருள்தேடிப்
பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று
     பாதமலர் சேர அன்பு ...... தருவாயே
ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
     ஆடரவு பூணர் தந்த ...... முருகோனே
ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற
     ஆதிமுதல் நார ணன்றன் ...... மருகோனே
கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
     கோவையமு தூற லுண்ட ...... குமரேசா
கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த
     கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.


சாலநெடு நாள்மடந்தை காயமதிலே யலைந்து
     சாம் அளவதாக வந்து.....புவிமீதே
சாதகமுமான பின்பு சீறியழுதே கிடந்து
     தாரணியிலே தவழ்ந்து.....விளையாடி
பாலனெனவே மொழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
     பாரதன மீதணைந்து.....பொருள்தேடிப்
பார்மிசையிலேயுழன்று பாழ்நரகெய்தாமல் ஒன்று(ம்)
     பாதமலர் சேர அன்பு.....தருவாயே
ஆலம் அமுதாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
     ஆடரவு பூணர் தந்த.....முருகோனே
ஆனைமடு வாயில் அன்று மூலமென ஓலமென்ற
     ஆதிமுதல் நார ணன்றன்.....மருகோனே
கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
     கோவையமுது ஊற லுண்ட.....குமரேசா
கூடிவரு சூர் அடங்க மாள வடிவேலெறிந்த
     கோடைநகர் வாழ வந்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

705   கோடைநகர்   ஏறு ஆனாலே  
தானா தானா தானா தானா
     தானா தானா ...... தனதானா

ஏறா னாலே நீறாய் மாயா
     வேளே வாசக் ...... கணையாலே
ஏயா வேயா மாயா வேயா
     லாமே ழோசைத் ...... தொளையாலே
மாறா யூறா யீறாய் மாலாய்
     வாடா மானைக் ...... கழியாதே
வாராய் பாராய் சேரா யானால்
     வாடா நீபத் ...... தொடைதாராய்
சீறா வீறா ஈரேழ் பார்சூழ்
     சீரார் தோகைக் ...... குமரேசா
தேவா சாவா மூவா நாதா
     தீரா கோடைப் ...... பதியோனே
வேறாய் மாறா யாறா மாசூர்
     வேர்போய் வீழப் ...... பொருதோனே
வேதா போதா வேலா பாலா
     வீரா வீரப் ...... பெருமாளே.


ஏறு ஆனாலே நீறு ஆய் மாயா
     வேளே(வு) வாசக்.....கணையாலே
ஏயாய் ஏயாய் மாயா வேயால்
     ஆம் ஏழு ஓசைத்.....தொளையாலே
மாறாய் ஊறாய் ஈறாய் மாலாய்
     வாடா மானைக்.....கழியாதே
வாராய் பாராய் சேரா யானால்
     வாடா நீபத் தொடை.....தாராய்
சீறா வீறா ஈரேழ் பார் சூழ்
     சீரார் தோகைக்.....குமரேசா
தேவா சாவா மூவா நாதா
     தீரா கோடைப்.....பதியோனே
வேறாய் மாறாய் ஆறாம் மா சூர்
     வேர் போய் வீழப்.....பொருதோனே
வேதா போதா வேலா பாலா
     வீரா வீரப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

706   கோடைநகர்   ஞால மெங்கும்  
தான தந்த தனத்த தத்த ...... தனதானா
ஞால மெங்கும் வளைத்த ரற்று ...... கடலாலே
நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் ...... வசையாலே
ஆலமுந்து மதித்த ழற்கும் ...... அழியாதே
ஆறி ரண்டு புயத்த ணைக்க ...... வருவாயே
கோல மொன்று குறத்தி யைத்த ...... ழுவுமார்பா
கோடை யம்பதி யுற்று நிற்கு ...... மயில்வீரா
கால னஞ்ச வரைத்தொ ளைத்த ...... முதல்வானோர்
கால்வி லங்கு களைத்த றித்த ...... பெருமாளே.


ஞாலமெங்கும் வளைத்து அரற்று.....கடலாலே
     நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும்.....வசையாலே
ஆலம் உந்து மதித் தழற்கும்.....அழியாதே
     ஆறிரண்டு புயத்தணைக்க.....வருவாயே
கோலம் ஒன்று குறத்தியைத்.....தழுவுமார்பா
     கோடையம்பதி யுற்று நிற்கு.....மயில்வீரா
காலனஞ்ச வரைத்தொளைத்த.....முதல் வானோர்
     கால்வி லங்குகளைத் தறித்த.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=ZE9YiGpflcc
Add (additional) Audio/Video Link

Back to Top

707   கோடைநகர்   தோழமை கொண்டு  
தானன தந்தன தந்த தந்தன
     தானன தந்தன தந்த தந்தன
          தானன தந்தன தந்த தந்தன ...... தனதான

தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்
     ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்
          சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் ...... பெரியோரைத்
தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்
     ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்
          சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் ...... தொலையாமல்
வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள்
     நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள்
          மானவ கந்தைமி குந்த குண்டர்கள் ...... வலையாலே
மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்
     தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்
          வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி ...... விழுவாரே
ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும்
     வாலியு மம்பர மும்ப ரம்பரை
          ராவண னுஞ்சது ரங்க லங்கையு ...... மடைவேமுன்
ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ
     சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற
          ராம சரந்தொடு புங்க வன்திரு ...... மருகோனே
கோழி சிலம்பந லம்ப யின்றக
     லாப நடஞ்செய மஞ்சு தங்கிய
          கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல ...... வயலூரா
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
     வேல னெனும்பெய ரன்பு டன்புகழ்
          கோடை யெனும்பதி வந்த இந்திரர் ...... பெருமாளே.


தோழமை கொண்டுசலஞ்செய் குண்டர்கள்
ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்
சூழ்விரதங்கள் கடிந்த குண்டர்கள்.....பெரியோரைத்
தூஷண நிந்தைபகர்ந்த குண்டர்கள்
     ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்
        சூளுற வென்பதொழிந்த குண்டர்கள்.....தொலையாமல்
வாழநினைந்து வருந்து குண்டர்கள்
     நீதியறங்கள்சிதைந்த குண்டர்கள்
        மானவகந்தைமிகுந்த குண்டர்கள்.....வலையாலே
மாயையில் நின்றுவருந்து குண்டர்கள்
     தேவர்கள் சொங்கள்கவர்ந்த குண்டர்கள்
        வாதை நமன்றன்வருந்திடுங்குழி.....விழுவாரே
ஏழு மரங்களும் வன்குரங்கெனும்
     வாலியும் அம்பரமும் பரம்பரை
        ராவணனுஞ்சதுரங்க லங்கையும்.....அடைவேமுன்
ஈடழியும்பட சந்த்ரனுஞ் சிவ
     சூரிய னுஞ்சுரரும் பதம்பெற
        ராம சரந்தொடு புங்கவன்திரு.....மருகோனே
கோழி சிலம்ப நலம்ப யின்ற
     கலாப நடஞ்செய மஞ்சு தங்கிய
        கோபுர மெங்கும்விளங்கு மங்கல.....வயலூரா
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
     வேல னெனும்பெய ரன்புடன் புகழ்
        கோடை யெனும்பதி வந்த இந்திரர்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=sALiGdwEljw
Add (additional) Audio/Video Link

Back to Top

708   கோடைநகர்   தோள் தப்பாமல்  
தானத் தானத் தானத் தானத்
     தானத் தானத் ...... தனதான

தோடப் பாமற் றோய்தப் பாணிச்
     சூழ்துற் றார்துற் ...... றழுவாருந்
தூரப் போகக் கோரப் பாரச்
     சூலப் பாசச் ...... சமனாரும்
பாடைக் கூடத் தீயிற் றேறிப்
     பாழ்பட் டேபட் ...... டழியாதே
பாசத் தேனைத் தேசுற் றார்பொற்
     பாதத் தேவைத் ...... தருள்வாயே
ஆடற் சூர்கெட் டோடத் தோயத்
     தாரச் சீறிப் ...... பொரும்வேலா
ஆனைச் சேனைக் கானிற் றேனுக்
     காரத் தாரைத் ...... தரும்வீரா
கூடற் பாடிக் கோவைப் பாவைக்
     கூடப் பாடித் ...... திரிவோனே
கோலச் சாலிச் சோலைச் சீலக்
     கோடைத் தேவப் ...... பெருமாளே.


தோள் தப்பாமல் தோய்தப் பாணி
     சூழ்(ந்)து உற்றார் துற்று.....அழுவாரும்
தூரப் போக கோரப் பாரச்
     சூலப் பாசச்.....சமன் ஆரும்
பாடைக் கூடத் தீயில் தேறி
     பாழ் பட்டே பட்டு.....அழியாதே
பாசத்தேனைத் தேசு உற்றார் பொன்
     பாதத்தே வைத்து.....அருள்வாயே
ஆடல் சூர் கெட்டு ஓடத் தோயத்து
     ஆரச் சீறிப்.....பொரும் வேலா
ஆனைச் சேனைக் கானில் தேனுக்கு
     ஆரம் தாரைத் தரும் வீரா
கூடற்பாடிக் கோவைப் பாவைக்
     கூடப் பாடித் திரிவோனே
கோலச் சாலிச் சோலைச் சீலக்
     கோடைத் தேவப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

709   கோடைநகர்   வாசித்த நூல்  
தானத்த தான தந்த தானத்த தான தந்த
     தானத்த தான தந்த ...... தனதான

வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து
     வாய்மைப்ர காச மென்று ...... நிலையாக
மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற
     வாயுப்பி ராண னொன்று ...... மடைமாறி
யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து
     ரோமத்து வார மெங்கு ...... முயிர்போக
யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு
     லோகத்தில் மாய்வ தென்று ...... மொழியாதோ
வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச
     மேலிட்ட சூர்த டிந்த ...... கதிர்வேலா
வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி
     வேடிச்சி காலி லன்று ...... விழுவோனே
கூசிப்பு காவொ துங்க மாமற்றி காத ரிந்த
     கூளப்பு ராரி தந்த ...... சிறியோனே
கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்ட
     கோடைக்குள் வாழ வந்த ...... பெருமாளே.


வாசித்த நூல் மதங்கள் பேசிக் கொடாத விந்து வாய்மை
ப்ரகாசம் என்று நிலையாக
மாசிக் கபால மன்றில் நாசிக்குள் ஓடுகின்ற வாயுப் பிராணன்
ஒன்று மடைமாறி
யோசித்து அயர் உடம்பை நேசித்து உறாது அலைந்து
ரோமத் துவாரம் எங்கும் உயிர் போக
யோகச் சமாதி கொண்டு மோகப் பசாசு மண்டு லோகத்தில்
மாய்வது என்றும் ஒழியாதோ
வீசு அப் பயோதி துஞ்ச வேதக் குலாலன் அஞ்ச மேலிட்ட
சூர் தடிந்த கதிர்வேலா
வீர ப்ரதாப பஞ்ச பாணத்தினால் மயங்கி வேடிச்சி காலில்
அன்று விழுவோனே
கூசிப் புகா ஒதுங்க மாமன் திகாது அரிந்த கூளப் புராரி
தந்த சிறியோனே
கோழிப் பதாகை கொண்ட கோலக் குமார கண்ட
கோடைக்குள் வாழ வந்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000