![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: கும்பகோணம்
863 இந்துகதிர் 864 தும்பி முகத்தானை 865 கெண்டை நேரொத்தவிழி 866 பஞ்சுசேர் நிர்த்த 867 மாலைதனில் வந்து 868 கறுத்த குஞ்சியும் 869 செனித்திடும் சலம்
863
கும்பகோணம் இந்துகதிர் தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்
தந்ததனத் தானதனத் ...... தனதான
இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட்
டின்பரசப் பாலமுதச் ...... சுவைமேவு
எண்குணமுற் றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற்
றெந்தைநடித் தாடுமணிச் ...... சபையூடே
கந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக்
கண்டுகளித் தேயமுதக் ...... கடல்மூழ்கிக்
கந்தமதித் தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக்
கண்டமதைக் காணஎனக் ...... கருள்வாயே
திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட்
டிந்தமெனக் காளமணித் ...... தவிலோசை
சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச்
செண்டுகுலைத் தாடுமணிக் ...... கதிர்வேலா
குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக்
கொண்டல்நிறத் தோன்மகளைத் ...... தரைமீதே
கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க்
கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே.
இந்துகதிர்ச் சேர் அருணப் பந்திநடுத் தூண் ஒளிபட்டு
இன்பரசப் பால் அமுதச்.....சுவைமேவு
எண்குணமுற்றோன் நடனச் சந்த்ரவொளிப் பீடகம் உற்று
எந்தை நடித தாடு மணிச்.....சபையூடே
கந்தம் எழுத்தோடு உறுசிற் கெந்தமணப் பூவிதழை
கண்டுகளித்தே யமுதக்.....கடல்மூழ்கி
கந்தமதித்து ஆயிரவெட்டு அண்டமதைக் கோல்புவனக்
கண்டமதைக் காணஎனக்.....கருள்வாயே
திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட்
டிந்தம் என காளமணித்.....தவிலோசை
சிந்தைதிகைத்து ஏழுகடற் பொங்க அரிச் சூர்மகுடச்
செண்டுகுலைத் தாடு மணிக்.....கதிர்வேலா
குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களப
கொண்டல் நிறத்தோன் மகளை.....தரைமீதே
கும்பிடகைத் தாளமெடுத்து அம்பொனுருப் பாவைபுகழ்
கும்பகொணத்து ஆறுமுகப்.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
864
கும்பகோணம் தும்பி முகத்தானை தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்
தந்ததனத் தானதனத் ...... தனதான
தும்பிமுகத் தானைபணைக் கொம்பதெனத் தாவிமயற்
றொந்தமெனப் பாயுமுலைக் ...... கனமாதர்
தும்பிமலர்ச் சோலைமுகிற் கங்குலிருட் காரினிறத்
தொங்கல்மயிற் சாயலெனக் ...... குழல்மேவிச்
செம்பொனுருக் கானமொழிச் சங்கினொளிக் காமநகைச்
செங்கயலைப் போலும்விழிக் ...... கணையாலே
சிந்தைதகர்த் தாளுமிதச் சந்த்ரமுகப் பாவையர்தித்
திந்திமனுற் றாடுமவர்க் ...... குழல்வேனோ
தம்பிவரச் சாதிதிருக் கொம்புவரக் கூடவனச்
சந்தமயிற் சாய்விலகிச் ...... சிறைபோகச்
சண்டர்முடித் தூள்கள்படச் சிந்தியரக் கோர்கள்விழத்
தங்கநிறத் தாள்சிறையைத் ...... தவிர்மாயோன்
கொம்புகுறிக் காளமடுத் திந்தமெனுற் றாடிநிரைக்
கொண்டுவளைத் தேமகிழச் ...... சுதனீண
கொஞ்சுசுகப் பாவையிணைக் கொங்கைதனிற் றாவிமகிழ்க்
கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே.
தும்பி முகத்து ஆனை பணைக் கொம்பு அது எனத் தாவி
மயல் தொந்தம் எனப் பாயு(ம்) முலைகுடி.....கன மாதர்
தும்பி மலர்ச் சோலை முகில் கங்குல் இருள் காரின் நிறத்
தொங்கல் மயில் சாயல் எனக்.....குழல் மேவி
செம் பொன் உருக்கான மொழிச் சங்கின் ஒளிக் காம நகைச்
செம் கயலைப் போலும் விழிக்.....கணையாலே
சிந்தை தகர்த்து ஆளும் இதச் சந்த்ர முகப் பாவையர்
தித்திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு.....உழல்வேனோ
தம்பி வரச் சாதி திருக் கொம்பு வரக் கூட வனச்
சந்த மயில் சாய் விலகிச்.....சிறை போக
சண்டர் முடித் தூள்கள் படச் சிந்தி அரக்கோர்கள் விழத்
தங்க நிறத்தாள் சிறையைத்.....தவிர் மாயோன்
கொம்பு குறிக் காளம் மடுத் திந்தம் என உற்று ஆடி நிரைக்
கொண்டு வளைத்தே மகிழ்.....அச்சுதன் ஈண
கொஞ்சு சுகப் பாவை இணைக் கொங்கை தனில் தாவி மகிழ்
கும்பகொணத்து ஆறுமுகப்.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
865
கும்பகோணம் கெண்டை நேரொத்தவிழி தந்தனா தத்ததன தந்தனா தத்ததன
தந்தனா தத்ததன ...... தனதான
கெண்டைநே ரொத்தவிழி மங்கைமோ கக்கலவை
கெந்தவா சப்புழுகு ...... மணநாறுங்
கிம்புரீ சக்களப கொங்கையா னைச்சிறிது
கிஞ்சுகா ணப்பெருகி ...... யடியேனும்
மண்டிமோ சக்கலவி கொண்டுகா மித்துருகி
வண்டனா கப்புவியி ...... லுழலாமல்
வந்துஞா னப்பொருளி லொன்றுபோ தித்துனது
மஞ்சுதா ளைத்தினமு ...... மருள்வாயே
அண்டர்வா ழப்பிரபை சண்டமே ருக்கிரியி
ளைந்துவீ ழப்பொருத ...... கதிர்வேலா
அஞ்சுவா யிற்பரனை நெஞ்சிலூ றித்தவசி
னன்புளா ரைச்சிறையி ...... டசுரோரைக்
கொண்டுபோய் வைத்தகழு நெஞ்சிலே றக்கழுகு
கொந்தியா டத்தலையை ...... யரிவோனே
கொண்டல்சூ ழக்கழனி சங்குலா விப்பரவு
கும்பகோ ணத்திலுறை ...... பெருமாளே.
கெண்டை நேர் ஒத்த விழி மங்கை மோகக் கலவை
கெந்த வாசப் புழுகு.....மண(ம்) நாறும்
கிம்புரி ஈசக் களப(ம்) கொங்கை யானைச் சிறிது
கிஞ்சு காணப் பெருகி.....அடியேனும்
மண்டி மோசக் கலவி கொண்டு காமித்து உருகி
வண்டன் ஆகப் புவியில்.....உழலாமல்
வந்து ஞானப் பொருளில் ஒன்று போதித்து உனது
மஞ்சு தாளைத் தினமும்.....அருள்வாயே
அண்டர் வாழப் பிரபை சண்ட மேருக் கிரி
இளைந்து வீழப் பொருத.....கதிர்வேலா
அஞ்சு வாயில் பரனை நெஞ்சில் ஊறித் தவசில்
அன்பு உளாரைச் சிறையி(ட்)ட.....அசுரோரைக்
கொண்டு போய் வைத்த கழு நெஞ்சில் ஏறக் கழுகு
கொந்தி ஆடத் தலையை.....அரிவோனே
கொண்டல் சூழ் அக்கழனி சங்கு உலாவிப் பரவு
கும்பகோணத்தில் உறை.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
866
கும்பகோணம் பஞ்சுசேர் நிர்த்த தந்தனா தத்தத் ...... தனதான
பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர்
பங்கமார் தொக்கிற் ...... படியாமற்
செஞ்சொல்சேர் சித்ரத் ...... தமிழாலுன்
செம்பொனார் வத்தைப் ...... பெறுவேனோ
பஞ்சபா ணத்தற் ...... பொருதேவர்
பங்கில்வாழ் சத்திக் ...... குமரேசா
குஞ்சரீ வெற்புத் ...... தனநேயா
கும்பகோ ணத்திற் ...... பெருமாளே.
பஞ்சுசேர் நிர்த்தப்.....பதமாதர்
பங்கமார் தொக்கிற்.....படியாமல்
செஞ்சொல்சேர் சித்ரத்.....தமிழால்
உன்செம்பொன் ஆர்வத்தைப்.....பெறுவேனோ
பஞ்சபாணத்தற்.....பொருதேவர்
பங்கில்வாழ் சத்திக்.....குமரேசா
குஞ்சரீ வெற்புத்.....தனநேயா
கும்பகோ ணத்திற்.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
867
கும்பகோணம் மாலைதனில் வந்து தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த ...... தனதான
மாலைதனில் வந்து வீதிதனில் நின்று
வாசமலர் சிந்து ...... குழல்கோதி
வாரிருத னங்கள் பூணொடுகு லுங்க
மால்பெருகி நின்ற ...... மடவாரைச்
சாலைவழி வந்து போமவர்க ணின்று
தாழ்குழல்கள் கண்டு ...... தடுமாறித்
தாகமயல் கொண்டு மாலிருள ழுந்தி
சாலமிக நொந்து ...... தவியாமற்
காலையிலெ ழுந்து னாமமெமொ ழுந்தி
காதலுமை மைந்த ...... எனவோதிக்
காலமுமு ணர்ந்து ஞானவெளி கண்கள்
காண அரு ளென்று ...... பெறுவேனோ
கோலமுட னன்று சூர்படையின் முன்பு
கோபமுட னின்ற ...... குமரேசா
கோதையிரு பங்கின் மேவவளர் கும்ப
கோணநகர் வந்த ...... பெருமாளே.
மாலை தனில் வந்து வீதி தனில் நின்று
வாச மலர் சிந்து.....குழல் கோதி
வார் இரு தனங்கள் பூணொடு குலுங்க
மால் பெருகி நின்ற.....மடவாரை
சாலை வழி வந்து போம் அவர்கள் நின்று
தாழ் குழல்கள் கண்டு.....தடுமாறித்
தாக மயல் கொண்டு மால் இருள் அழுந்தி
சால மிக நொந்து.....தவியாமல்
காலையில் எழுந்து உன் நாமமெ மொழிந்து
காதல் உமை மைந்த.....என ஓதி
காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள்
காண அருள் என்று.....பெறுவேனோ
கோலமுடன் அன்று சூர் படையின் முன்பு
கோபமுடன் நின்ற.....குமரேசா
கோதை இரு பங்கின் மேவ வளர் கும்ப
கோண நகர் வந்த.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
868
கும்பகோணம் கறுத்த குஞ்சியும் தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான
கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத்
துருத்த வெண்பலு மடைய விழுந்துட்
கருத்து டன்திகழ் மதியு மருண்டுச் ...... சுருள்நோயாற்
கலக்க முண்டல மலமுற வெண்டிப்
பழுத்தெ ழும்பிய முதுகு முடங்கக்
கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக் ...... கொழுமேனி
அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப்
பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித்
தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச் ...... சடமாகி
அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப்
பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட்
டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற் ...... றிடுவேனோ
புறத்த லம்பொடி படமிக வுங்கட்
டறப்பெ ருங்கடல் வயிறு குழம்பப்
புகட்ட ரங்கிய விரக துரங்கத் ...... திறல்வீரா
பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட்
டரக்கர் வன்றலை நெரிய நெருங்கிப்
புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப் ...... பொரும்வேலா
சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச்
சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத்
தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக் ...... கிரிமேவிச்
செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப்
பரிச்சு மந்திடு குமர கடம்பத்
திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் ...... பெருமாளே.
கறுத்த குஞ்சியும் வெளிறி
எழும் கொத்து உருத்த வெண் ப(ல்)லும் டைய விழுந்து
உள் கருத்துடன் திகழ்மதியும் மருண்டு.....சுருள் நோயால்
கலக்கமுண்டு அலம் அலம் உற வெண்டி
பழுத்து எழும்பிய முதுகு முடங்க
கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க.....கொழு மேனி
அறத் திரங்கி ஒர் தடி கை நடுங்கப்
பிடித்து இடும்பு உறு மனைவியும் நிந்தித்து
அடுத்த மைந்தரும் வசைகள் விளம்ப.....சடமாகி
அழுக்கு அடைந்து இடர்ப் படும் உடல் பங்கப்
பிறப்பு எனும் கடல் அழியல் ஒழிந்திட்டு
அடுத்திரும் திருவடி தனை என்று.....உற்றிடுவேனோ
புறத் தலம் பொடி பட மிகவும் கட்டு
அற பெரும் கடல் வயிறு குழம்ப
ப ுகட்டு அரங்கிய விரக துரங்கத்.....திறல் வீரா
பொருப்பு உரம் படர் கிழி பட வென்று
அட்டு அரக்கர் வன் தலை நெரிய நெருங்கி
புதைக் குறும் தசை குருதிகள் பொங்கப்.....பொரும் வேலா
சிறுத்த தண்டைய மதலையொர் அஞ்ச
சினத்து மிஞ்சு அரி திரி தரு குன்ற
தினைப்புனம் திகழ் குறமகள் கொங்கை.....கிரி மேவி
செருக்கு நெஞ்சு உடை முருக
சிகண்டி பரி சுமந்திடு குமர கடம்ப
திருக்குடந்தையில் உறைதரு கந்தப்.....பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=npmTjkLQHew
Add (additional) Audio/Video Link
869
கும்பகோணம் செனித்திடும் சலம் தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன ...... தனதான
செனித்தி டுஞ்சல சாழலு மூழலும்
விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய
செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு ...... முடலூடே
தெளித்தி டும்பல சாதியும் வாதியும்
இரைத்தி டுங்குல மேசில கால்படர்
சினத்தி டும்பவ நோயென வேயிதை ...... யனைவோருங்
கனைத்தி டுங்கலி காலமி தோவென
வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென
கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு ...... முடல்பேணிக்
கடுக்க னுஞ்சில பூடண மாடைகள்
இருக்கி டுங்கலை யேபல வாசைகள்
கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு ...... மருள்வாயே
தனத்த னந்தன தானன தானன
திமித்தி திந்திமி தீதக தோதக
தகுத்து துந்துமி தாரைவி ராணமொ ...... டடல்பேரி
சமர்த்த மொன்றிய தானவர் சேனையை
வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக
சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள் ...... புரிவோனே
தினைப்பு னந்தனி லேமய லாலொரு
மயிற்ப தந்தனி லேசர ணானென
திருப்பு யந்தரு மோகன மானினை ...... யணைவோனே
சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகிய
தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர
திருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
செனித்திடும் சலம் சாழலும் ஊழலும்
விளைத்திடும் குடல் பீறியும் மீறிய
செருக்கொடும் சதை பீளையும் ஈளையும்.....உடலூடே
தெளித்திடும் பல சாதியும் வாதியும்
இரைத்திடும் குலமே சில கால் படர்
சினத்திடும் பவ நோயெனவே இதை.....அனைவோரும்
கனைத்திடும் கலி காலம் இதோ என
எடுத்திடும் சுடு காடு புகா என
கவிழ்த்திடும் சடமோ பொடியாய் விடும்.....உடல் பேணி
கடுக்கனும் சில பூடணம் ஆடைகள்
இருக்கிடும் கலையே பல ஆசைகள்
கழித்திடும் சிவ யோகமும் ஞானமும்.....அருள்வாயே
தனத்த னந்தன தானன தானன
திமித்தி திந்திமி தீதக தோதக
தகுத்து துந்துமி தாரை விராணமொடு.....அடல் பேரி
சமர்த்தம் ஒன்றிய தானவர் சேனையை
வளைத்து வெம் சினம் வேல் விடு சேவக
சமத்து உணர்ந்திடு மா தவர் பால் அருள்.....புரிவோனே
தினைப் புனம் தனிலே மயலால் ஒரு
மயில் பதம் தனிலே சரண் நான் என
திருப் புயம் தரு மோகன மானினை.....அணைவோனே
சிவக் கொழும் சுடரே பரனாகிய
தவத்தில் வந்தருள் பால க்ருபாகர
திருக் குடந்தையில் வாழ் முருகா சுரர்.....பெருமாளே. Add (additional) Audio/Video Link