சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: குன்றுதோறாடல்
303   அதிரும் கழல்     304   எழுதிகழ் புவன     305   தறையின் மானுடர்     306   வஞ்சக லோப மூடர்    
303   குன்றுதோறாடல்   அதிரும் கழல்  
தனனந் தனன தந்த ...... தனதான
     தனனந் தனன தந்த ...... தனதான

அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன்
     அபயம் புகுவ தென்று ...... நிலைகாண
இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி
     இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும்
     இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப்
     பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே.


அதிருங் கழல்ப ணிந்து உன்.....அடியேன் உன்
     அபயம் புகுவ தென்று.....நிலைகாண
இதயந் தனிலி ருந்து.....க்ருபையாகி
     இடர் சங்கைகள் கலங்க.....அருள்வாயே
எதிர் அங்கொருவர் இன்றி.....நடமாடும்
     இறைவன் தனது பங்கில்.....உமை பாலா
பதியெங்கிலுமிருந்து.....விளையாடிப்
     பலகுன்றிலும் அமர்ந்த.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=_M7w4WmXtnE
Add (additional) Audio/Video Link

Back to Top

304   குன்றுதோறாடல்   எழுதிகழ் புவன  
தனதன தனன தனதன தனன
     தனதன தனன ...... தனதான

எழுதிகழ் புவன நொடியள வதனி
     லியல்பெற மயிலில் ...... வருவோனே
இமையவர் பரவி யடிதொழ அவுணர்
     மடிவுற விடுவ ...... தொருவேலா
வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
     வழிபட மொழியு ...... முருகேசா
மலரடி பணியு மடமகள் பசலை
     மயல்கொடு தளர்வ ...... தழகோதான்
முழுகிய புனலி லினமணி தரள
     முறுகிடு பவள ...... மிகவாரி
முறையொடு குறவர் மடமகள் சொரியு
     முதுமலை யழக ...... குருநாதா
பழகிய வினைகள் பொடிபட அருளில்
     படிபவ ரிதய ...... முறுகோவே
பருவரை துணிய வொருகணை தெரிவ
     பலமலை யுடைய ...... பெருமாளே.


எழுதிகழ் புவன நொடியள வதனில்
     இயல்பெற மயிலில்.....வருவோனே
இமையவர் பரவி அடிதொழ அவுணர்
     மடிவுற விடுவது.....ஒருவேலா
வழுதியர் தமிழின் ஒருபொரு ளதனை
     வழிபட மொழியு.....முருகேசா
மலரடி பணியு மடமகள் பசலை
     மயல்கொடு தளர்வ(து).....அழகோதான்?
முழுகிய புனலில் இனமணி தரள
     முறுகிடு பவள.....மிகவாரி
முறையொடு குறவர் மடமகள் சொரியு
     முதுமலை அழக.....குருநாதா
பழகிய வினைகள் பொடிபட அருளில்
     படிபவர் இதய.....முறுகோவே
பருவரை துணிய ஒருகணை தெரிவ
     பலமலை உடைய.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=LRoYSdtKgAY
Add (additional) Audio/Video Link

Back to Top

305   குன்றுதோறாடல்   தறையின் மானுடர்  
தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன தந்ததான

தறையின் மானுட ராசையி னால்மட
     லெழுது மாலருள் மாதர்கள் தோதக
          சரசர் மாமல ரோதியி னாலிரு ...... கொங்கையாலுந்
தளர்மி னேரிடை யாலுடை யால்நடை
     யழகி னால்மொழி யால்விழி யால்மருள்
          சவலை நாயடி யேன்மிக வாடிம ...... யங்கலாமோ
பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக
     ளணுகொ ணாவகை நீடுமி ராசிய
          பவன பூரக வேகிக மாகிய ...... விந்துநாதம்
பகரொ ணாதது சேரவொ ணாதது
     நினையொ ணாதது வானத யாபர
          பதிய தானச மாதிம னோலயம் ...... வந்துதாராய்
சிறைவி டாதநி சாசரர் சேனைகள்
     மடிய நீலக லாபம தேறிய
          திறல்வி நோதச மேளத யாபர ...... அம்புராசித்
திரைகள் போலலை மோதிய சீதள
     குடக காவிரி நீளலை சூடிய
          திரிசி ராமலை மேலுறை வீரகு ...... றிஞ்சிவாழும்
மறவர் நாயக ஆதிவி நாயக
     ரிளைய நாயக காவிரி நாயக
          வடிவி னாயக ஆனைத னாயக ......எங்கள்மானின்
மகிழு நாயக தேவர்கள் நாயக
     கவுரி நாயக னார்குரு நாயக
          வடிவ தாமலை யாவையு மேவிய ...... தம்பிரானே.


தறையின் மானுடர் ஆசையினால் மடல்
     எழுது(ம்) மால்அருள் மாதர்கள் தோதக
        சரசர் மா மலர் ஓதியினால் இரு.....கொங்கையாலும்
தளர் மின் நேர் இடையால் உடையால் நடை
     அழகினால் மொழியால் விழியால் மருள்
        சவலை நாய் அடியேன் மிக வாடி.....மயங்கலாமோ
பறவையான மெய் ஞானிகள் மோனிகள்
     அணுக ஒணா வகை நீடும் இராசிய(ம்)
        பவன பூரக(ம்) ஏகிகமாகிய.....விந்து நாதம்
பகர ஒணாதது சேர ஒணாதது
     நினை ஒணாததுவான தயாபர
        பதியது ஆன சமாதி மனோலயம்.....வந்து தாராய்
சிறை விடாத நிசாசரர் சேனைகள்
     மடிய நீல கலாபம் அது ஏறிய
        திறல் விநோத சமேள தயாபர.....அம்புராசி
திரைகள் போல் அலை மோதிய சீதள
     குடக காவிரி நீள் அலை சூடிய
        திரிசிரா மலை மேல் உறை வீர.....குறிஞ்சி வாழும்
மறவர் நாயக ஆதி விநாயகர்
     இளைய நாயக காவிரி நாயக
        வடிவின் நாயக ஆனை தன் நாயக.....எங்கள் மானின்
மகிழு(ம்) நாயக தேவர்கள் நாயக
     கவுரி நாயகனார் குரு நாயக
        வடிவதாம் மலை யாவையு(ம்) மேவிய.....தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=bVYUabkkw-M
Add (additional) Audio/Video Link

Back to Top

306   குன்றுதோறாடல்   வஞ்சக லோப மூடர்  
தந்தன தான தான தந்தன தான தான
     தந்தன தான தான ...... தனதான

வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
     மஞ்சரி கோவை தூது ...... பலபாவின்
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
     வந்தியர் போல வீணி ...... லழியாதே
செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை
     திண்டிறல் வேல்ம யூர ...... முகமாறும்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
     செங்கனி வாயி லோர்சொ ...... லருள்வாயே
பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு
     பஞ்சற வாது கூறு ...... சமண்மூகர்
பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது
     பண்டித ஞான நீறு ...... தருவோனே
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
     குன்றவர் சாதி கூடி ...... வெறியாடிக்
கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
     குன்றுதோ றாடல் மேவு ...... பெருமாளே.


வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
     மஞ்சரி கோவை தூது.....பலபாவின்
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
     வந்தியர் போலவீணி.....லழியாதே
செஞ்சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை
     திண்டிறல் வேல்மயூர.....முகமாறும்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
     செங்கனி வாயிலோர் சொல்.....அருள்வாயே
பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு
     பஞ்சற வாது கூறு.....சமண்மூகர்
பண்பறு பீலி யோடு வெங்கழு வேற ஓது
     பண்டித ஞான நீறு.....தருவோனே
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
     குன்றவர் சாதி கூடி.....வெறியாடி
கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
     குன்றுதோ றாடல் மேவு.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=8GCaXIaKQ6E
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000