சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: குன்றக்குடி
623   அழகு எறிந்த     624   ககுபநிலை குலைய     625   கடினதட கும்ப     626   நேசா சாரா     627   பிறர் புகழ் இன்சொல்     628   தவள மதியம்     629   நாமேவு குயிலாலும்    
623   குன்றக்குடி   அழகு எறிந்த  
தனன தந்த தந்த தனன தந்த தந்த
     தனன தந்த தந்த ...... தனதான

அழகெ றிந்த சந்த்ர முகவ டங்க லந்த
     அமுத புஞ்ச இன்சொல் ...... மொழியாலே
அடிது வண்ட தண்டை கலிலெ னுஞ்சி லம்பொ
     டணிச தங்கை கொஞ்சு ...... நடையாலே
சுழியெ றிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்து
     தொடுமி ரண்டு கண்க ...... ளதனாலே
துணைநெ ருங்கு கொங்கை மருவு கின்ற பெண்கள்
     துயரை யென்றொ ழிந்து ...... விடுவேனோ
எழுது கும்ப கன்பி னிளைய தம்பி நம்பி
     யெதிர டைந்தி றைஞ்சல் ...... புரிபோதே
இதம கிழ்ந்தி லங்கை யசுர ரந்த ரங்க
     மொழிய வென்ற கொண்டல் ...... மருகோனே
மழுவு கந்த செங்கை அரனு கந்தி றைஞ்ச
     மநுவி யம்பி நின்ற ...... குருநாதா
வளமி குந்த குன்ற நகர்பு ரந்து துங்க
     மலைவி ளங்க வந்த ...... பெருமாளே.


அழகு எறிந்த சந்த்ர முக வடம் கலந்த
     அமுத புஞ்ச இன்சொல்.....மொழியாலே
அடி துவண்ட தண்டை கலில் எனும் சிலம்பொடு
     அணி சதங்கை கொஞ்சு.....நடையாலே
சுழி எறிந்து நெஞ்சு சுழல நஞ்சு அணைந்து
     தொடும் இரண்டு கண்கள்.....அதனாலே
துணை நெருங்கு கொங்கை மருவுகின்ற பெண்கள்
     துயரை என்று ஒழிந்து.....விடுவேனோ
எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி
     எதிர் அடைந்து இறைஞ்சல்.....புரி போதே
இதம் மகிழ்ந்து இலங்கை அசுரர் அந்தரங்கம்
     மொழிய வென்ற கொண்டல்.....மருகோனே
மழு உகந்த செம் கை அரன் உகந்து இறைஞ்ச
     மநு இயம்பி நின்ற.....குருநாதா
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க
     மலை விளங்க வந்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

624   குன்றக்குடி   ககுபநிலை குலைய  
தனதனன தனதனன தனதனன தனதனன
தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன
     தனதனன தனதனன தனதனன தனதனன
     தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன
          தனதனன தனதனன தனதனன தனதனன
          தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன ...... தனதானா

ககுபநிலை குலையவிகல் மிகுபகடின் வலியுடைய
தந்தத்தி னைத்தடிவ தொந்தத்தி ரத்தையுள
     அகிலமறை புகழ்பரமர் ஞெகிழிகல கலகலெனும்
     அம்பொற்ப தத்தர்தநு வம்பொற்பொ ருப்படர்வ
          களபபரி மளமெழுகும் எழிலில்முழு குவமுளரி
          யஞ்சப்பு டைத்தெழுவ வஞ்சக்க ருத்துமத ...... னபிஷேகங்
கடிவபடு கொலையிடுவ கொடியமுக படமணிவ
இன்பச்சு டர்க்கனக கும்பத்த ரச்செருவ
     பிருதில்புள கிதசுகமு மிருதுளமும் வளரிளைஞர்
     புந்திக்கி டர்த்தருவ பந்தித்த கச்சடர்வ
          கயல்மகர நிகரமிக வியன்மருவு நதியில்முதிர்
          சங்கிப்பி முத்தணிவ பொங்கிக்க னத்தொளிர்வ ...... முலைமாதர்
வகுளமலர் குவளையிதழ் தருமணமு மிருகமத
மொன்றிக்க றுத்துமுகில் வென்றிட்டு நெய்த்தகுழல்
     அசையருசி யமுர்தக்ருத வசியமொழி மயில்குயிலெ
     னும்புட்கு ரற்பகர வம்புற்ற மற்புரிய
          வருமறலி யரணமொடு முடுகுசமர் விழியிணைகள்
          கன்றிச்சி வக்கமகிழ் நன்றிச்ச மத்துநக ...... நுதிரேகை
வகைவகைமெ யுறவளைகள் கழலவிடை துவளவிதழ்
உண்டுட்ப்ர மிக்கநசை கொண்டுற்ற ணைத்தவதி
     செறிகலவி வலையிலென தறிவுடைய கலைபடுதல்
     உந்திப்பி றப்பறநி னைந்திட்ட முற்றுனடி
          வயலிநகர் முருகசெரு முயல்பனிரு கரகுமர
          துன்றட்ட சிட்டகுண குன்றக்கு டிக்கதிப ...... அருளாதோ
தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு
தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு
     சகணசக சகசகண செகணசெக செகசெகெண
     சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண
          தனனதன தனதனன தெனனதென தெனதெனன
          தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன ...... தனனானா
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு
     டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி
     டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
          தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி
          தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி ...... யெனதாளந்
தொகுதிவெகு முரசுகர டிகைடமரு முழவுதவில்
தம்பட்ட மத்தளமி னம்பட்ட டக்கைபறை
     பதலைபல திமிலைமுத லதிரவுதிர் பெரியதலை
     மண்டைத்தி ரட்பருகு சண்டைத்தி ரட்கழுகு
          துடர்நிபிட கருடனடர் தரகரட மொகுமொகென
          வந்துற்றி டக்குடர்நி ணந்துற்றி சைத்ததிர ...... முதுபேய்கள்
சுனகனரி நெறுநெறென வினிதினிது தினவினைசெய்
வெங்குக்கு டத்தகொடி துங்குக்கு குக்குகென
     வடனமிடு திசைபரவி நடனமிட வடலிரவி
     திங்கட்ப்ர பைக்கதிர்கள் மங்கப்ர சித்தகுல
          துரககஜ ரதகடக முரணரண நிருதர்விறல்
          மிண்டைக்கு லைத்தமர்செய் தண்டர்க்கு ரத்தையருள் ...... பெருமாளே.


ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய
     தந்தத்தினைத் தடிவ தொந்தத் திரத்தை உள
       அகில மறை புகழ் பரமர் ஞெகிழி கலகல் எனும்
         அம் பொன் பதத்தர் தநு அம் பொன் பொருப்பு அடர்வ
           களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி
            அஞ்சப் புடைத்து எழு வஞ்சக் கருத்து மதன்.....அபிஷேகம்
கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ
     இன்பச் சுடர் கனக கும்பத் தரச் செருவ
      பிருதில் புளகித சுகமு(ம்) மிருதுளமும் வளர் இளைஞர்
      புந்திக்கு இடர் தருவ பந்தித்த கச்சு அடர்வ
      கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர்
        சங்கு இப்பி முத்து அணிவ பொங்கிக் கனத்து ஒளிர்வ.....முலை மாதர்
வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம்
      ஒன்றிக் கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல்
      அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில்
      எனும் புட் குரல் பகர வம்பு உற்ற மல் புரிய
      வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள்
        கன்றிச் சிவக்க மகிழ் நன்றிச் சமத்து நக.....நுதி ரேகை
வகை வகை மெய் உற வளைகள் கழல இடை துவள இதழ்
      உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி
      செறி கலவி வலையில் எனது அறிவுடைய கலை படுதல்
      உந்திப் பிறப்பு அற நினைந்திட்டு இட்டம் உற்று உன் அடி
      வயலி நகர் முருக செரு உயல் ப(ன்)னிரு கர குமர
        துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப.....அருளாதோ
தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு
     தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு
            சகணசக சகசகண செகணசெக செகசெகெண
           சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண
                 தனனதன தனதனன தெனனதென தெனதெனன
                   தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன ...... தனனானா
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
     தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு
            டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி
            டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
                 தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி
                   தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி ...... என தாளம்
தொகுதி வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில்
     தம்பட்ட(ம்) மத்தளம் இனம் பட்ட டக்கை பறை
      பதலை பல திமிலை முதல் அதிர உதிர் பெரிய தலை
      மண்டைத் திரள் பருகு சண்டைத் திரள் கழுகு
      துடர் நிபிட கருடன் அடர்தர கரட(ம்) மொகு மொகு என
        வந்து உற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர.....முது பேய்கள்
சுனகன் நரி நெறு நெறு என இனிது இனிது தி(ன்)ன வினை செய்
     வெம் குக்குடத்த கொடி துங்குக் குகுக்குகு என
      வடு அ(ன்)னம் இடு திசை பரவி நடனம் இட
      அடல் இரவி திங்கள் ப்ரபைக் கதிர்கள் மங்க ப்ரசித்த குல
      துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல்
        மிண்டைக் குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

625   குன்றக்குடி   கடினதட கும்ப  
தனதனன தந்த தானன தனதனன தந்த தானன
     தனதனன தந்த தானன ...... தனதான

கடினதட கும்ப நேரென வளருமிரு கொங்கை மேல்விழு
     கலவிதரு கின்ற மாதரொ ...... டுறவாடிக்
கனவளக பந்தி யாகிய நிழல்தனிலி ருந்து தேனுமிழ்
     கனியிதழை மென்று தாடனை ...... செயலாலே
துடியிடைநு டங்க வாள்விழி குழைபொரநி ரம்ப மூடிய
     துகில்நெகிழ வண்டு கோகில ...... மயில்காடை
தொனியெழவி ழைந்து கூரிய கொடுநகமி சைந்து தோள்மிசை
     துயிலவச இன்ப மேவுத ...... லொழிவேனோ
இடிமுரச றைந்து பூசல்செய் அசுரர்கள்மு றிந்து தூளெழ
     எழுகடல்ப யந்து கோவென ...... அதிகோப
எமபடரு மென்செய் வோமென நடுநடுந டுங்க வேல்விடு
     இரணமுக சண்ட மாருத ...... மயிலோனே
வடிவுடைய அம்பி காபதி கணபதிசி றந்து வாழ்தட
     வயலிநகர் குன்ற மாநக ...... ருறைவோனே
வகைவகைபு கழ்ந்து வாசவன் அரிபிரமர் சந்த்ர சூரியர்
     வழிபடுதல் கண்டு வாழ்வருள் ...... பெருமாளே.


கடின தட கும்ப நேர் என வளரும் இரு கொங்கை மேல் விழு
     கலவி தருகின்ற மாதரொடு.....உறவாடி
கன அளக பந்தியாகிய நிழல் தனில் இருந்து தேன் உமிழ்
     கனி இதழை மென்று தாடனை.....செயலாலே
துடி இடை நுடங்க வாள் விழி குழை பொர நிரம்ப மூடிய
     துகில் நெகிழ வண்டு கோகில(ம்).....மயில் காடை
தொனி எழ விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை
     துயில (அ)வச இன்ப மேவுதல்.....ஒழிவேனோ
இடி முரசு அறைந்து பூசல் செய் அசுரர்கள் முறிந்து தூள் எழ
     எழு கடல் பயந்து கோ என.....அதி கோப
எம படரும் என் செய்வோம் என நடு நடு நடுங்க வேல் விடு
     இரண முக சண்ட மாருத.....மயிலோனே
வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ் தட
     வயலி நகர் குன்ற மா நகர்.....உறைவோனே
வகை வகை புகழ்ந்து வாசவன் அரி பிரமர் சந்த்ர சூரியர்
     வழிபடுதல் கண்டு வாழ்வு அருள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

626   குன்றக்குடி   நேசா சாரா  
தானா தானா தந்தன தத்தன
     தானா தானா தந்தன தத்தன
          தானா தானா தந்தன தத்தன ...... தனதான

நேசா சாரா டம்பர மட்டைகள்
     பேசா தேயே சுங்கள மட்டைகள்
          நீசா ளோடே யும்பழ கிக்கவர் ...... பொருளாலே
நீயே நானே யென்றொரு சத்தியம்
     வாய்கூ சாதோ துங்க படத்திகள்
          நேரா லேதா னின்றுபி லுக்கிகள் ...... எவர்மேலும்
ஆசா பாசா தொந்தரை யிட்டவர்
     மேல்வீழ் வார்பால் சண்டிகள் கட்டழ
          காயே மீதோ லெங்கு மினுக்கிகள் ...... வெகுமோகம்
ஆகா தாவே சந்தரு திப்பொழு
     தோகோ வாவா வென்று பகட்டிக
          ளாகா மோகா வம்பிகள் கிட்டிலு ...... முறவாமோ
பேசா தேபோய் நின்றுமி யிற்றுயிர்
     வாயா வாவா வென்று குடித்தருள்
          பேரா லேநீள் கஞ்சன் விடுத்தெதிர் ...... வருதூது
பேழ்வாய் வேதா ளம்பக டைப்பகு
     வாய்நீள் மானா ளுஞ்சர ளத்தொடு
          பேயானாள் போர் வென்றெதி ரிட்டவன் ...... மருகோனே
மாசூ டாடா டும்பகை யைப்பகை
     சூரா ளோடே வன்செரு வைச்செறு
          மாசூ ராபா ரெங்கும ருட்பொலி ...... முருகோனே
வானா டேழ்நா டும்புகழ் பெற்றிடு
     தேனா றேசூழ் துங்க மலைப்பதி
          மாயூ ராவாழ் குன்றை தழைத்தருள் ...... பெருமாளே.


நேச(ம்) ஆசார(ம்) ஆடம்பர(ம்) மட்டைகள்
     பேசாதே ஏசும் க(ள்)ள மட்டைகள்
        நீசாளோடேயும் பழகிக் கவர்.....பொருளாலே
நீயே நானே என்று ஒரு சத்தியம்
     வாய் கூசாது ஓதும் கபடத்திகள்
        நேராலே தான் நின்று பிலுக்கிகள்.....எவர் மேலும்
ஆசா பாசா தொந்தரை இட்டவர்
     மேல் வீழ்வார் பால் சண்டிகள் கட்டழகு
        ஆயே மீ தோலெங்கு(ம்) மினுக்கிகள்.....வெகு மோகம்
ஆகாது ஆவேசம் தருது இப்பொழுது
     ஓகோ வா வா என்று பகட்டிகள்
        ஆகா(த) மோகா வம்பிகள் கிட்டிலும்.....உறவு ஆமோ
பேசாதே போய் நின்று உறியில் தயிர்
     வாயா வாவா என்று குடித்து அருள்
        பேராலே நீள் கஞ்சன் விடுத்த எதிர்.....வரு தூது
பேழ் வாய் வேதாளம் பகடு ஐப் பகு
     வாய் நீள் மானாளும் சரளத்தோடு
        பேய் ஆ(னா)ள் போர் வென்று எதிரிட்டவன்.....மருகோனே
மாசு ஊடாடும் பகையைப் பகை
     சூராளோடே வன் செருவைச் செறு மா சூரா
        பார் எங்கும் அருள் பொலி.....முருகோனே
வான் நாடு ஏழ் நாடும் புகழ் பெற்றிடு
     தேன் ஆறே சூழ் துங்க மலைப் பதி மாயூரா
        வாழ் குன்றை தழைத்து அருள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

627   குன்றக்குடி   பிறர் புகழ் இன்சொல்  
தனதன தந்தத் தனதன தந்தத்
     தனதன தந்தத் ...... தனதான

பிறர்புக ழின்சொற் பயிலுமி ளந்தைப்
     பருவம தன்கைச் ...... சிலையாலே
பிறவித ருஞ்சிக் கதுபெரு கும்பொய்ப்
     பெருவழி சென்றக் ...... குணமேவிச்
சிறுமைபொ ருந்திப் பெருமைமு டங்கிச்
     செயலும ழிந்தற் ...... பமதான
தெரிவையர் தங்கட் கயலைவி ரும்பிச்
     சிலசில பங்கப் ...... படலாமோ
கெறுவித வஞ்சக் கபடமொ டெண்டிக்
     கிலுமெதிர் சண்டைக் ...... கெழுசூரன்
கிளையுடன் மங்கத் தலைமுடி சிந்தக்
     கிழிபட துன்றிப் ...... பொருதோனே
குறுமுநி யின்பப் பொருள்பெற அன்றுற்
     பனமநு வுஞ்சொற் ...... குருநாதா
குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக்
     குடிவளர் கந்தப் ...... பெருமாளே.


பிறர் புகழ் இன் சொல் பயிலும் இளந்தைப்
     பருவ மதன் கைச்.....சிலையாலே
பிறவி தரும் சிக்கு அது பெருகும் பொய்ப்
     பெரு வழி சென்று அக்.....குணம் மேவி
சிறுமை பொருந்திப் பெருமை முடங்கிச்
     செயலும் அழிந்து அற்பம்.....அது ஆன
தெரிவையர் தங்கள் கயலை விரும்பிச்
     சிலசில பங்கப்.....படலாமோ
கெறு வித வஞ்சக் கபடமொடு எண்
     திக்கிலும் எதிர் சண்டைக்கு.....எழு சூரன்
கிளையுடன் மங்கத் தலை முடி சிந்தக்
     கிழி பட துன்றிப்.....பொருதோனே
குறு முநி இன்பப் பொருள் பெற அன்று
     உற்பன மநுவும் சொல்.....குரு நாதா
குலகிரி துங்கக் கிரி உயர் குன்றக்குடி
     வளர் கந்தப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

628   குன்றக்குடி   தவள மதியம்  
தனன தனன தனத்தந் ...... தனதான
தவள மதிய மெறிக்குந் ...... தணலாலே
சரச மதனன் விடுக்குங் ...... கணையாலே
கவன மிகவு முரைக்குங் ...... குயிலாலே
கருதி மிகவு மயக்கம் ...... படவோநான்
பவள நிகரு மிதழ்ப்பைங் ...... குறமானின்
பரிய வரையை நிகர்க்குந் ...... தனமேவுந்
திவளு மணிகள் கிடக்குந் ...... திருமார்பா
திகழு மயிலின் மலைக்கண் ...... பெருமாளே.


தவள(ம்) மதியம் எறிக்கும் தணலாலே
     சரச மதனன் விடுக்கும்.....கணையாலே
கவன(ம்) மிகவும் உரைக்கும் குயிலாலே
     கருதி மிகவு(ம்) மயக்கம்.....படவோ நான்
பவள(ம்) நிகரும் இதழ்ப் பைங் குறமானின்
     பரிய வரையை நிகர்க்கும்.....தனம் மேவும்
திவளு(ம்) மணிகள் கிடக்கும் திருமார்பா
     திகழு(ம்) மயிலின் மலை கண்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

629   குன்றக்குடி   நாமேவு குயிலாலும்  
தானான தனதான தானான தனதான
     தானான தனதான ...... தனதான

நாமேவு குயிலாலு மாமார னயிலாலு
     நாடோறு மதிகாயும் ...... வெயிலாலும்
நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு
     நாடாசை தருமோக ...... வலையூடே
ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி
     லேவாரும் விழிமாதர் ...... துயரூடே
ஏகாம லழியாத மேலான பதமீதி
     லேகீயு னுடன்மேவ ...... அருள்தாராய்
தாமோக முடனூறு பால்தேடி யுரலூடு
     தானேறி விளையாடு ...... மொருபோதில்
தாயாக வருசோதை காணாது களவாடு
     தாமோத ரன்முராரி ...... மருகோனே
மாமாது வனமாது கார்மேவு சிலைமாது
     மாலாகி விளையாடு ...... புயவீரா
வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழ
     மாயூர கிரிமேவு ...... பெருமாளே.


நா மேவு குயிலாலும் மா மாரன் அயிலாலு(ம்)
     நாள் தோறும் மதி காயும்.....வெயிலாலும்
நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும்
     நாடு ஆசை தரு மோக.....வலை ஊடே
ஏமாறி முழு நாளும் மாலாகி விருதாவிலே
     வாரும் விழி மாதர்.....துயர் ஊடே
ஏகாமல் அழியாத மேலான பதம் மீதில்
     ஏகீ உ(ன்)னுடன் மேவ.....அருள்தாராய்
தாம் மோகமுடன் ஊறு பால் தேடி உரலோடு
     தான் ஏறி விளையாடும்.....ஒரு போதில்
தாயாக வரு (ய)சோதை காணாது களவாடு
     தாமோதரன் முராரி.....மருகோனே
மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது
     மாலாகி விளையாடும்.....புய வீரா
வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும்
     மாயூர கிரி மேவும்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Wed, 24 Jun 2026 06:31:58 +0000