|
882
காவளூர் மானை நேர்விழி |
தான தானன தத்தன தந்தன தான தானன தத்தன தந்தன தான தானன தத்தன தந்தன ...... தனதான |
மானை நேர்விழி யொத்தம டந்தையர் பாலை நேர்மொழி யொத்துவி ளம்பியர் வாச மாமலர் கட்டும ரம்பைய ...... ரிருதோளும் மார்பு மீதினு முத்துவ டம்புரள் காம பூரண பொற்கட கம்பொர வாரி நீலவ ளைக்கைபு லம்பிட ...... அநுராகம் ஆன நேரில்வி தத்திர யங்களும் நாண மாறம யக்கியி யம்பவும் ஆடை சோரநெ கிழ்த்தியி ரங்கவும் ...... உறவாடி ஆர வாரந யத்தகு ணங்களில் வேளி னூல்களை கற்றவி ளம்பவும் ஆகு மோகவி பத்துமொ ழிந்துனை ...... யடைவேனோ சான கீதுய ரத்தில ருஞ்சிறை போன போதுதொ குத்தசி னங்களில் தாப சோபமொ ழிப்பஇ லங்கையு ...... மழிவாகத் தாரை மானொரு சுக்கிரி பன்பெற வாலி வாகுத லத்தில்வி ழுந்திட சாத வாளிதொ டுத்தமு குந்தனன் ...... மருகோனே கான வேடர்சி றுக்குடி லம்புன மீதில் வாழித ணத்திலு றைந்திடு காவல் கூருகு றத்திபு ணர்ந்திடு ...... மணிமார்பா காவு லாவிய பொற்கமு கின்திரள் பாளை வீசம லர்த்தட முஞ்செறி காவ ளூர்தனில் முத்தமி ழுந்தெரி ...... பெருமாளே.
|
மானை நேர் விழி ஒத்த மடந்தையர் பாலை நேர் மொழி ஒத்து விளம்பியர் வாச மா மலர் கட்டும் அரம்பையர்.....இரு தோளும் மார்பு மீதினு(ம்) முத்து வடம் புரள் காம பூரண பொன் கடகம் பொர வாரி நீல வளைக் கை புலம்பிட.....அநுராகம் ஆன நேரில் விதத் திரயங்களும் நாண(ம்) மாற மயக்கி இயம்பவும் ஆடை சோர நெகிழ்த்து இரங்கவும்.....உறவாடி ஆரவார நயத்த குணங்களில் வேளி(ன்) நூல்களை கற்ற விளம்பவும் ஆகு(ம்) மோக விபத்தும் ஒழிந்து உனை.....அடைவேனோ சானகீ துயரத்தில் அரும் சிறை போன போது தொகுத்த சினங்களில் தாப சோபம் ஒழிப்ப இலங்கையும்.....அழிவாக தாரை மான் ஒரு சுக்கிரபன் பெற வாலி வாகு தலத்தில் விழுந்திட சாத வாளி தொடுத்த முகுந்தனன்.....மருகோனே கான வேடர் சிறு குடில் அம் புன(ம்) மீதில் வாழ் இதணத்தில் உறைந்திடு காவல் கூரும் குறத்தி புணர்ந்திடும்.....மணிமார்பா கா உலாவிய பொன் கமுகின் திரள் பாளை வீச மலர்த் தடமும் செறி காவளூர் தனில் முத்தமிழும் தெரி.....பெருமாளே. |
Add (additional) Audio/Video Link
|