| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: காசி
651 தாரணிக் கதி 652 மங்கைக் கணவனும் 653 வேழம் உண்ட
651
காசி தாரணிக் கதி தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன ...... தனதான
தார ணிக்கதி பாவி யாய்வெகு
சூது மெத்திய மூட னாய்மன
சாத னைக்கள வாணி யாயுறு ...... மதிமோக
தாப மிக்குள வீண னாய்பொரு
வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
தாமு யச்செயு மேது தேடிய ...... நினைவாகிப்
பூர ணச்சிவ ஞான காவிய
மோது தற்புணர் வான நேயர்கள்
பூசு மெய்த்திரு நீறி டாஇரு ...... வினையேனைப்
பூசி மெய்ப்பத மான சேவடி
காண வைத்தருள் ஞான மாகிய
போத கத்தினை யேயு மாறருள் ...... புரிவாயே
வார ணத்தினை யேக ராவுமு
னேவ ளைத்திடு போதுமேவிய
மாய வற்கித மாக வீறிய ...... மருகோனே
வாழு முப்புர வீற தானது
நீறெ ழப்புகை யாக வேசெய்த
மாம திப்பிறை வேணி யாரருள் ...... புதல்வோனே
கார ணக்குறி யான நீதிய
ரான வர்க்குமு னாக வேநெறி
காவி யச்சிவ நூலை யோதிய ...... கதிர்வேலா
கான கக்குற மாதை மேவிய
ஞான சொற்கும ராப ராபர
காசி யிற்பிர தாப மாயுறை ...... பெருமாளே.
தார ணிக்கதி பாவியாய் வெகு
சூது மெத்திய மூட னாய் மன
சாதனைக் களவாணியாய் உறு.....மதிமோக
தாப மிக்குள வீணனாய் பொரு
வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
தாமுயச்செயும் ஏது தேடிய.....நினைவாகி
பூரணச்சிவ ஞான காவியம்
ஓது தற்புணர்வான நேயர்கள்
பூசு மெய்த்திரு நீறி டாஇரு.....வினையேனை
பூசி மெய்ப்பதமான சேவடி
காண வைத்தருள் ஞான மாகிய
போத கத்தினையேயு மாறருள்.....புரிவாயே
வாரணத்தினையே கராவுமுனே
வளைத்திடு போதுமேவிய
மாயவற்கு இதமாக வீறிய.....மருகோனே
வாழு முப்புர வீற தானது
நீறெழப்புகையாக வேசெய்த
மாமதிப்பிறை வேணியார் அருள்.....புதல்வோனே
காரணக்குறி யான நீதியர்
ஆனவர்க்கு முனாகவே நெறி
காவியச்சிவ நூலை யோதிய.....கதிர்வேலா
கானகக்குற மாதை மேவிய
ஞான சொற்குமரா பராபர
காசியிற் பிரதாப மாயுறை.....பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=vVYjBpDyfUI
Add (additional) Audio/Video Link
652
காசி மங்கைக் கணவனும் தந்தத் தனதன தானன தானன
தந்தத் தனதன தானன தானன
தந்தத் தனதன தானன தானன ...... தனதான
மங்கைக் கணவனும் வாழ்சிவ ணாமயல்
பங்கப் படமிசை யேபனி போல்மதம்
வந்துட் பெருகிட வேவிதி யானவ ...... னருள்மேவி
வண்டுத் தடிகைபொ லாகியெ நாள்பல
பந்துப் பனைபழ மோடிள நீர்குட
மண்டிப் பலபல வாய்வினை கோலும ...... வழியாலே
திங்கட் பதுசெல வேதலை கீழுற
வந்துப் புவிதனி லேமத லாயென
சிந்தைக் குழவியெ னாவனை தாதையு ...... மருள்கூரச்
செம்பொற் றடமுலை பால்குடி நாள்பல
பண்புத் தவழ்நடை போய்வித மாய்பல
சிங்கிப் பெருவிழி யாரவ மாயதி ...... லழிவேனோ
அங்கைத் தரியென வேயொரு பாலக
னின்பக் கிருபைய தாயொரு தூண்மிசை
அம்பற் கொடுவரி யாயிரண் யாசுர ...... னுடல்பீறி
அண்டர்க் கருள்பெரு மான்முதி ராவணி
சங்குத் திகிரிக ரோனரி நாரவ
ரங்கத் திருவணை மேல்துயில் நாரணன் ...... மருகோனே
கங்கைச் சடைமுடி யோனிட மேவிய
தங்கப் பவளொளி பால்மதி போல்முக
கங்குற் றரிகுழ லாள்பர மேசுரி ...... யருள்பாலா
கந்துப் பரிமயில் வாகன மீதிரு
கொங்கைக் குறமக ளாசையொ டேமகிழ்
கங்கைப் பதிநதி காசியில் மேவிய ...... பெருமாளே.
மங்கைக் கணவனும் வாழ் சிவணா மயல்
பங்கப்பட மிசையே பனி போல் மதம்
வந்து உள் பெருகிடவே விதியானவன்.....அருள் மேவி
வண்டுத் தடிகை பொ(போ)ல் ஆகியே நாள் பல
பந்துப் பனை பழமோடு இள நீர் குடம்
மண்டிப் பல பலவாய் வினை கோலும்.....அவ்வழியாலே
திங்கள் ப(த்)து செலவே தலை கீழ் உற
வந்துப் புவி தனிலே மதலாய் என
சிந்தைக் குழவி எனா அ(ன்)னை தாதையும்.....அருள் கூர
செம் பொன் தட முலை பால் குடி நாள் பல
பண்புத் தவழ் நடை போய் விதமாய் பல
சிங்கிப் பெரு விழியார் அவமாய் அதில்.....அழிவேனோ
அம் கைத்து அரி எனவே ஒரு பாலகனின்
இன்பக் கிருபையதாய் ஒரு தூண் மிசை
அம் பல் கொ(ண்)டு அரியாய் இரண்ய அசுரன்.....உடல் பீறி
அண்டர்க்கு அருள் பெருமான் முதிரா அணி
சங்குத் திகிரிகரோன் அரி நார
அரங்கத்து இரு அணை மேல் துயில் நாரணன்.....மருகோனே
கங்கைச் சடை முடியோன் இடம் மேவிய
தங்கப் பவள ஒளி பால் மதி போல் முக
கங்குல் தரி குழலாள் பரமேசுரி.....அருள் பாலா
கந்துப் பரி மயில் வாகன மீது இரு
கொங்கைக் குற மகள் ஆசையொடே மகிழ்
கங்கைப் பதி நதி காசியில் மேவிய.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
653
காசி வேழம் உண்ட தான தந்தன தானன ...... தனதான
தான தந்தன தானன ...... தனதான
வேழ முண்ட விளாகனி ...... யதுபோல
மேனி கொண்டு வியாபக ...... மயலூறி
நாளு மிண்டர்கள் போல்மிக ...... அயர்வாகி
நானு நைந்து விடாதருள் ...... புரிவாயே
மாள அன்றம ணீசர்கள் ...... கழுவேற
வாதில் வென்ற சிகாமணி ...... மயில்வீரா
காள கண்ட னுமாபதி ...... தருபாலா
காசி கங்கையில் மேவிய ...... பெருமாளே.
வேழ முண்ட விளாகனி யதுபோல
மேனி கொண்டு வியாபக.....மயலூறி
நாளு மிண்டர்கள் போல்மிக அயர்வாகி
நானு நைந்து விடாதருள்.....புரிவாயே
மாள அன்று அமணீசர்கள் கழுவேற
வாதில் வென்ற சிகாமணி.....மயில்வீரா
காள கண்ட னுமாபதி தருபாலா
காசி கங்கையில் மேவிய.....பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=na7s5GUY1Pk
Add (additional) Audio/Video Link