சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: கழுகுமலை
632   குதலை மொழியினார்     633   முலையை மறைத்து     634   கோங்க முகை    
632   கழுகுமலை   குதலை மொழியினார்  
தனன தனதனா தனத்த தானன
     தனன தனதனா தனத்த தானன
          தனன தனதனா தனத்த தானன ...... தனதான

குதலை மொழியினார் நிதிக்கொள் வாரணி
     முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல்
          கொடிது கொடிததால் வருத்த மாயுறு ...... துயராலே
மதலை மறுகிவா லிபத்தி லேவெகு
     பதகர் கொடியவா ளிடத்தி லேமிக
          வறுமை புகல்வதே யெனக்கு மோஇனி ...... முடியாதே
முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல்
     மடிய அயிலையே விடுத்த வாகரு
          முகிலை யனையதா நிறத்த மால்திரு ...... மருகோனே
கதலி கமுகுசூழ் வயற்கு ளேயளி
     யிசையை முரலமா வறத்தில் மீறிய
          கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.


குதலை மொழியினார் நிதிக் கொள்வார் அணி
     முலையை விலை செய்வார் தமக்கு மா மயல்
        கொடிது கொடிது அதால் வருத்தமாய் உறு.....துயராலே
மதலை மறுகி வாலிபத்திலே வெகு
     பதகர் கொடியவாள் இடத்திலே மிக
        வறுமை புகல்வதே எனக்குமோ இனி.....முடியாதே
முதல வரி வி(ல்)லோடு எதிர்த்த சூர் உடல்
     மடிய அயிலையே விடுத்தவா கரு
        முகிலை அனையதா நிறத்த மால் திரு.....மருகோனே
கதலி கமுகு சூழ் வயற்குளே அளி
     இசையை முரல மா அறத்தில் மீறிய
        கழுகு மலை மகா நகர்க்குள் மேவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

633   கழுகுமலை   முலையை மறைத்து  
தனதன தத்தத் தனத்த தானன
     தனதன தத்தத் தனத்த தானன
          தனதன தத்தத் தனத்த தானன ...... தனதான

முலையை மறைத்துத் திறப்ப ராடையை
     நெகிழ வுடுத்துப் படுப்பர் வாயிதழ்
          முறைமுறை முத்திக் கொடுப்பர் பூமல ...... ரணைமீதே
அலைகுலை யக்கொட் டணைப்ப ராடவர்
     மனவலி யைத்தட் டழிப்பர் மால்பெரி
          தவர்பொரு ளைக்கைப் பறிப்பர் வேசைக ...... ளுறவாமோ
தலைமுடி பத்துத் தெறித்து ராவண
     னுடல்தொளை பட்டுத் துடிக்க வேயொரு
          தநுவைவ ளைத்துத் தொடுத்த வாளியன் ...... மருகோனே
கலைமதி யப்புத் தரித்த வேணிய
     ருதவிய வெற்றித் திருக்கை வேலவ
          கழுகும லைக்குட் சிறக்க மேவிய ...... பெருமாளே.


முலையை மறைத்துத் திறப்பர் ஆடையை
     நெகிழ உடுத்துப் படுப்பர் வாயிதழ்
        முறை முறை முத்திக் கொடுப்பர் பூ மலர்.....அணைமீதே
அலை குலையக் கொ(ட்)டு அணைப்பர் ஆடவர்
     மன வலியைத் தட்டு அழிப்பர் மால் பெரிது
        அவர் பொருளைக் கைப் பறிப்பர் வேசிகள்.....உறவாமோ
தலை முடி பத்துத் தெறித்து ராவணன்
     உடல் தொளை பட்டுத் துடிக்கவே ஒரு
        தநுவை வளைத்துத் தொடுத்த வாளியன்.....மருகோனே
கலை மதி அப்புத் தரித்த வேணியர்
     உதவிய வெற்றித் திருக் கை வேலவ
        கழுகு மலைக்குள் சிறக்க மேவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

634   கழுகுமலை   கோங்க முகை  
தாந்த தனன தனன தாந்த தனன தனன
     தாந்த தனன தனனந் ...... தனதான

கோங்க முகையு மெலிய வீங்கு புளக களப
     மேந்து குவடு குழையும் ...... படிகாதல்
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவு மினிய
     தேங்கு கலவி யமுதுண் ...... டியல்மாதர்
வாங்கு பகழி விழியை மோந்து பகலு மிரவும்
     வாய்ந்த துயிலை மிகவுந் ...... தணியாத
வாஞ்சை யுடைய அடிமை நீண்ட பிறவி யலையை
     நீந்தி அமல அடிவந் ...... தடைவேனோ
ஓங்க லனைய பெரிய சோங்கு தகர மகர
     மோங்கு ததியின் முழுகும் ...... பொருசூரும்
ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில்
     ஊர்ந்து மயில துலவுந் ...... தனிவேலா
வேங்கை யடவி மறவர் ஏங்க வனிதை யுருக
     வேங்கை வடிவு மருவுங் ...... குமரேசா
வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை
     வேண்டு மளவி லுதவும் ...... பெருமாளே.


கோங்க முகையு(ம்) மெலிய வீங்கு புளக களபம்
     ஏந்து(ம்) குவடு குழையும்.....படி காதல்
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவும் இனிய
     தேங்கு கலவி அமுது உண்டு.....இயல் மாதர்
வாங்கு பகழி விழியை மோந்து பகலும் இரவும்
     வாய்ந்த துயிலை மிகவும்.....தணியாத
வாஞ்சை உடைய அடிமை நீண்ட பிறவி அலையை
     நீந்தி அமல அடி வந்து.....அடைவேனோ
ஓங்கல் அனைய பெரிய சோங்கு தகர் அ(ம்) மகரம்
     ஓங்கு உததியின் முழுகும்.....பொரு சூரும்
ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில்
     ஊர்ந்து மயில் அது உலவும்.....தனி வேலா
வேங்கை அடவி மறவர் ஏங்க வனிதை உருக
     வேங்கை வடிவு மருவும்.....குமரேசா
வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை
     வேண்டும் அளவில் உதவும்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000