| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: கருவூர்
923 மதியால் வித்தகன் 924 இளநிர்க் குவட்டு 925 தசையாகிய 926 நித்தப் பிணிகொடு 927 முட்ட மருட்டி 928 சஞ்சல சரித 929 முகிலள கஞ்சரி
923
கருவூர் மதியால் வித்தகன் தனதானத் தனதான தனதானத் ...... தனதான
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.
மதியால் வித்தகனாகி மனதால்.....உத்தமனாகி
பதிவாகிச் சிவஞான பரயோகத்து.....அருள்வாயே
நிதியே நித்தியமே யென் நினைவே நற்.....பொருளாயோய்
கதியே சொற் பரவேளே கருவூரிற்.....பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Y2GweDJQW1I
Add (additional) Audio/Video Link
924
கருவூர் இளநிர்க் குவட்டு தனனத் தனத்ததன தனனத் தனத்ததன
தனனத் தனத்ததன ...... தனதான
இளநிர்க் குவட்டுமுலை யமுதத் தடத்தைகனி
யிரதக் குடத்தையெணு ...... மரபோடே
இருகைக் கடைத்துஇடை துவளக் குழற்சரிய
இதழ்சர்க் கரைப்பழமொ ...... டுறழூறல்
முளரிப் புவொத்தமுக முகம்வைத் தருத்திநல
முதிரத் துவற்பஅல்குல் ...... மிசைமூழ்கி
மொழிதத் தையொப்பகடை விழிகட் சிவப்பமளி
முழுகிச் சுகிக்கும்வினை ...... யறஆளாய்
நளினப் பதக்கழலு மொளிர்செச் சைபொற்புயமெ
னயனத் திலுற்றுநட ...... மிடும்வேலா
நரனுக் கமைத்தகொடி யிரதச் சுதக்களவ
னறைபுட் பநற்றுளவன் ...... மருகோனே
களபத் தனத்திசுக சரசக் குறத்திமுக
கமலப் புயத்துவளி ...... மணவாளா
கடலைக் குவட்டவுணை யிரணப் படுத்தியுயர்
கருவைப் பதிக்குளுறை ...... பெருமாளே.
இள நீர்க் குவட்டு முலை அமுதத் தடத்தை கனி
இரதக் குடத்தை எ(ண்)ணு(ம்).....மரபோடே
இரு கைக்கு அடைத்து இடை துவளக் குழல் சரிய
இதழ் சர்க்கரைப் பழமொடு.....உறழ உ(ஊ)றல்
முளரிப்பு ஒத்த முக(ம்) முகம் வைத்து அருத்தி நலம்
முதிரத்து அற்ப அல்குல்.....மிசை மூழ்கி
மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி
முழுகிச் சுகிக்கும் வினை.....அற ஆளாய்
நளினப் பதக் கழலும் ஒளிர் செச்சை பொன் புயம் என்
நயனத்தில் உற்று நடமிடும்.....வேலா
நரனுக்கு அமைத்த கொடி இரதச் சுதக் களவன்
நறை புட்ப நல் துளவன்.....மருகோனே
களபத் தனத்தி சுக சரசக் குறத்தி முகம்
கமல அ(ம்)ப் புயத்து வ(ள்)ளி.....மணவாளா
கடலைக் குவட்டு அவுணை இரணப் படுத்தி உயர்
கருவைப் பதிக்குள் உறை.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
925
கருவூர் தசையாகிய தனனா தனனத் தனனா தனனத்
தனனா தனனத் ...... தனதான
தசையா கியகற் றையினால் முடியத்
தலைகா லளவொப் ...... பனையாயே
தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்
றவிரா வுடலத் ...... தினைநாயேன்
பசுபா சமும்விட் டறிவா லறியப்
படுபூ ரணநிட் ...... களமான
பதிபா வனையுற் றநுபூ தியிலப்
படியே யடைவித் ...... தருள்வாயே
அசலே சுரர்புத் திரனே குணதிக்
கருணோ தயமுத் ...... தமிழோனே
அகிலா கமவித் தகனே துகளற்
றவர்வாழ் வயலித் ...... திருநாடா
கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்
கமலா லயன்மைத் ...... துனவேளே
கருணா கரசற் குருவே குடகிற்
கருவூ ரழகப் ...... பெருமாளே.
தசையாகிய கற்றையினால் முடிய
தலைகால் அளவு.....ஒப்பனையாயே
தடுமாறுதல் சற்று ஒருநாள் உலகில்
தவிரா உடலத்தினை.....நாயேன்
பசுபாசமும் விட்டு அறிவால் அறிய
படுபூ ரண.....நிட்களமான
பதிபாவனை உற்று அநுபூ தியில்
அப்படியே அடைவித்து.....அருள்வாயே
அசலேசுரர் புத்திரனே குணதிக்கு
அருணோதய முத்.....தமிழோனே
அகில ஆகம வித்தகனே துகளற்
றவர்வாழ் வயலித்.....திருநாடா
கசிவார் இதயத்து அமிர்தே மதுபக்
கமலா லயன்மைத்.....துனவேளே
கருணாகர சற்குருவே குடகிற்
கருவூர் அழகப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=UOJvLo9Mgo8
Add (additional) Audio/Video Link
926
கருவூர் நித்தப் பிணிகொடு தத்தத் தனதன தானன தானன
தத்தத் தனதன தானன தானன
தத்தத் தனதன தானன தானன ...... தனதான
நித்தப் பிணிகொடு மேவிய காயமி
தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு
நிற்பொற் ககனமொ டாமிவை பூதக ...... லவைமேவி
நிற்கப் படுமுல காளவு மாகரி
டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு
நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு ...... மடவாண்மை
எத்தித் திரியுமி தேதுபொ யாதென
வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ
டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி ...... லுழல்வேனை
எத்திற் கொடுநின தாரடி யாரொடு
முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு
திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற ...... இனிதாள்வாய்
தத்தத் தனதன தானன தானன
தித்தித் திமிதிமி தீதக தோதக
டத்தக் குடகுகு தாகுட தீகுட ...... வெனபேரிச்
சத்தத் தொலிதிகை தாவிட வானவர்
திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட
சர்ப்பச் சதமுடி நாணிட வேலதை ...... யெறிவோனே
வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல
சத்திக் கிடமருள் தாதகி வேணியர்
வெற்புப் புரமது நீறெழ காணிய ...... ரருள்பாலா
வெற்புத் தடமுலை யாள்வளி நாயகி
சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள
வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய ...... பெருமாளே.
நித்த(ம்) பிணி கொடு மேவிய காயம் இது
அப்புப் பிருதிவி வாயுவு(ம்) தேயுவு(ம்)
நில் பொன் ககனம் ஒடு ஆம் இவை பூத.....கலவை மேவி
நிற்கப்படும் உலகு ஆளவும் மாகர்
இடத்தைக் கொளவுமே நாடிடும் ஓடிடு(ம்)
நெட்டுப் பணி கலை பூண் இடு நான் எனும்.....மட ஆண்மை
எத்தித் திரியும் இது ஏது பொ(ய்)யாது என
உற்றுத் தெளிவு உணராது மெய் ஞானமொடு
இச்சைப் பட அறியாது பொய் மாயையில்.....உழல்வேனை
எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும்
உய்த்திட்டு உனது அருளால் உயர் ஞான அமுது
இட்டுத் திருவடியாம் உயர் வாழ்வு உற.....இனிது ஆள்வாய்
தத்தத் தனதன தானன தானன
தித்தித் திமிதிமி தீதக தோதக
டத்தக் குடகுகு தாகுட தீகுட ...... என பேரி
சத்தத்து ஒலி திகை தாவிட வானவர்
திக்குக் கெட வரு(ம்) சூரர்கள் தூள்பட
சர்ப்பச் சத முடி நாணிட வேல் அதை.....எறிவோனே
வெற்றிப் பொடி அணி மேனியர் கோகுல
சத்திக்கு இடம் அருள் தாதகி வேணியர்
வெற்புப் புரம் அது நீறு எழ காணியர்.....அருள் பாலா
வெற்புத் தட முலையாள் வ(ள்)ளி நாயகி
சித்தத்து அமர் குமரா எமை ஆள் கொள
வெற்றிப் புகழ் கருவூர் தனில் மேவிய.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
927
கருவூர் முட்ட மருட்டி தத்தன தத்த தனதன, தத்தன தத்த தனதன
தத்தன தத்த தனதனத் ...... தனதான
முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணியலென
மொட்பைவி ளைத்து முறையளித் ...... திடுமாதர்
முத்தமி ரத்ந மரகதம் வைத்தவி சித்ர முகபட
மொச்சிய பச்சை யகில்மணத் ...... தனபாரம்
கட்டிய ணைத்து நகநுதி பட்டக ழுத்தி லிறுகிய
கைத்தல மெய்த்து வசனமற் ...... றுயிர்சோருங்
கட்டமு யக்கி னநுபவம் விட்டவி டற்கு நியமித
கற்பனை பக்ஷ முடனளித் ...... தருளாதோ
வெட்டிய கட்க முனைகொடு வட்டகு ணத்து ரணமுக
விக்ரம வுக்ர வெகுவிதப் ...... படைவீரா
வெற்றியை யுற்ற குறவர்கள் பெற்றகொ டிக்கு மிகமகிழ்
வித்தக சித்த வயலியிற் ...... குமரேசா
கிட்டிய பற்கொ டசுரர்கள் மட்டற வுட்க வடலொடு
கித்திந டக்கு மலகைசுற் ...... றியவேலா
கெட்டவ ருற்ற துணையென நட்டருள் சிட்ட பசுபதி
கெர்ப்பபு ரத்தி லறுமுகப் ...... பெருமாளே.
முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக் கண் இயல் என
மொட்பை விளைத்து முறை அளித்திடு.....மாதர்
முத்தம் இரத்ந மரகதம் வைத்த விசித்ர முகபட(ம்)
மொச்சிய பச்சை அகில் மணத்.....தன பாரம்
கட்டி அணைத்து நகநுதி பட்ட கழுத்தில் இறுகிய
கைத் தலம் எய்த்து வசனம் அற்று.....உயிர் சோரும்
கட்ட(ம்) முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு நியமித
கற்பனை பக்ஷமுடன் அளித்து.....அருளாதோ
வெட்டிய கட்கம் முனை கொ(ண்)டு அட்ட குணத்து ரணமுக
விக்ரம உக்ர வெகு விதப்.....படை வீரா
வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ்
வித்தக சித்த வயலியில்.....குமரேசா
கிட்டிய பல் கொ(ண்)டு அசுரர்கள் மட்டு அற உட்க அடலோடு
கித்தி நடக்கும் அலகை சுற்றிய.....வேலா
கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி
கெர்ப்ப புரத்தில் அறு முகப்.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
928
கருவூர் சஞ்சல சரித தந்தன தனன தனதாத்தன
தந்தன தனன தனதாத்தன
தந்தன தனன தனதாத்தன ...... தனதான
சஞ்சல சரித பரநாட்டர்கள்
மந்திரி குமரர் படையாட்சிகள்
சங்கட மகிபர் தொழஆக்கினை ...... முடிசூடித்
தண்டிகை களிறு பரிமேற்றனி
வெண்குடை நிழலி லுலவாக்கன
சம்ப்ரம விபவ சவுபாக்கிய ...... முடையோராய்க்
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு
பஞ்சணை மிசையி லிசையாத்திரள்
கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய ...... மியல்கீதங்
கொங்கணி மகளிர் பெருநாட்டிய
நன்றென மனது மகிழ்பார்த்திபர்
கொண்டய னெழுதும் யமகோட்டியை ...... யுணராரே
பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர்
வென்றிட சகுனி கவறாற்பொருள்
பங்குடை யவனி பதிதோற்றிட ...... அயலேபோய்ப்
பண்டையில் விதியை நினையாப்பனி
ரண்டுடை வருஷ முறையாப்பல
பண்புடன் மறைவின் முறையாற்றிரு ...... வருளாலே
வஞ்சனை நழுவி நிரைமீட்சியில்
முந்துத முடைய மனைவாழ்க்கையின்
வந்தபி னுரிமை யதுகேட்டிட ...... இசையாநாள்
மண்கொள விசையன் விடுதேர்ப்பரி
யுந்தினன் மருக வயலூர்க்குக
வஞ்சியி லமரர் சிறைமீட்டருள் ...... பெருமாளே.
சஞ்சல சரித பர நாட்டர்கள்
மந்திரி குமரர் படை ஆட்சிகள்
சங்கட மகிபர் தொழு ஆக்கினை.....முடிசூடி
தண்டிகை களிறு பரி மேல் தனி
வெண் குடை நிழலில் உலவா கன
சம்ப்ரம விபவ சவுபாக்கியம்.....உடையோராய்
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு
பஞ்சணை மிசையில் இசையாதிரள்
கொம்புகள் குழல்கள் வெகு வாத்தியம்.....இயல் கீதம்
கொங்கு அணி மகளிர் பெரு நாட்டிய(ம்)
நன்று என மனது மகிழ் பார்த்திபர்
கொண்டு அயன் எழுதும் யம கோட்டியை.....உணராரே
பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர்
வென்றிட சகுனி கவறால் பொருள்
பங்கு உடை அவனி பதி தோற்றிட.....அயலே போய்ப்
பண்டையில் விதியை நினையாப் பனி
ரண்டுடை வருஷ முறையாப் பல
பண்புடன் மறைவின் முறையால் திரு.....வருளாலே
வஞ்சனை நழுவி நிரை மீட்சியில்
முந்து த(ம்) முடைய மனை வாழ்க்கையில்
வந்த பின் உரிமை அது கேட்டிட.....இசையா நாள்
மண் கொள விசையன் விடு தேர்ப் பரி
உந்தினன் மருக வயலூரக் குக
வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள்.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
929
கருவூர் முகிலள கஞ்சரி தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன
தனதன தந்தன தாத்தன ...... தனதான
முகிலள கஞ்சரி யாக்குழை யிகல்வன கண்சிவ வாச்சிவ
முறுவல்மு கங்குறு வேர்ப்பெழ ...... வநுபோக
முலைபுள கஞ்செய வார்த்தையு நிலையழி யும்படி கூப்பிட
முகுளித பங்கய மாக்கர ...... நுதல்சேரத்
துயரொழு குஞ்செல பாத்திர மெலியமி குந்துத ராக்கினி
துவளமு யங்கிவி டாய்த்தரி ...... வையர்தோளின்
துவயலி நின்றன வ்யாத்தமும் வயலியல் வஞ்சியில் மேற்பயில்
சொருபமு நெஞ்சிலி ராப்பகல் ...... மறவேனே
சகலம யம்பர மேச்சுரன் மகபதி யுய்ந்திட வாய்த்தருள்
சரவண சம்பவ தீர்க்கஷண் ...... முகமாகிச்
சருவுக்ர வுஞ்சசி லோச்சய முருவவெ றிந்தகை வேற்கொடு
சமரமு கந்தனில் நாட்டிய ...... மயிலேறி
அகிலமு மஞ்சிய வாக்ரம விகடப யங்கர ராக்கத
அசுரர கங்கெட வார்த்திடு ...... கொடிகூவ
அமரர டங்கலு மாட்கொள அமரர்த லங்குடி யேற்றிட
அமரரை யுஞ்சிறை மீட்டருள் ...... பெருமாளே.
முகில் அளகம் சரியாக் குழை இகல்வன கண் சிவவாச் சிவ(ம்)
முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ.....அநுபோக
முலை புளகம் செய வார்த்தையு(ம்) நிலை அழியும்படி கூப்பிட
முகுளித பங்கயமாக் கர(ம்).....நுதல் சேர
துயர் ஒழுகும் செல பாத்திர(ம்) மெலிய மிகுத்து உதர அக்கினி
துவள முயங்கி விடாய்த்து.....அரிவையர் தோளின்
துவயலி நின் தன வ்யாத்தமும் வயல் இயல் வஞ்சியில் மேல் பயில்
சொருபமு(ம்) நெஞ்சில் இராப் பகல்.....மறவேனே
சகல மயம் பரமேச்சுரன் மகபதி உய்ந்திட வாய்த்து அருள்
சரவண சம்பவ தீர்க்க.....ஷண்முகமாகி
சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்த கை வேல் கொடு
சமர முகம் தனில் நாட்டிய.....மயில் ஏறி
அகிலமும் அஞ்சிய ஆக்ரம விகட பயங்கர ராக்கத
அசுரர் அகம் கெட ஆர்த்திடு.....கொடி கூவ
அமரர் அடங்கலும் ஆட் கொள அமரர் தலம் குடி ஏற்றிட
அமரரையும் சிறை மீட்டு அருள்.....பெருமாளே. Add (additional) Audio/Video Link