சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: கதிர்காமம்
636   திருமகள் உலாவும்     637   அலகின் மாறு     638   உடுக்கத் துகில்     639   எதிரிலாத பத்தி     640   கடகட கருவிகள்     641   சமர முக வேல்     642   சரத்தே யுதித்தாய்     643   சரியையாளர்க்கும்     644   பாரவித முத்த     645   மரு அறா வெற்றி     646   மாதர் வசமாய்     647   முதிரு மாரவாரம்     648   வருபவர்கள் ஓலை     649   தொடுத்த வாள்    
636   கதிர்காமம்   திருமகள் உலாவும்  
தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதான

திருமகளு லாவு மிருபுயமு ராரி
     திருமருக நாமப் ...... பெருமாள்காண்
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
     தெரிதருகு மாரப் ...... பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
     மரகதம யூரப் ...... பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
     மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
     அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
     அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண்
இருவினையி லாத தருவினைவி டாத
     இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
     இருதனவி நோதப் ...... பெருமாளே.


திருமகள் உலாவும் இருபுய
     முராரி திருமருக நாமப்.....பெருமாள்காண்
செகதலமும் வானும் மிகுதிபெறு பாடல்
     தெரிதரு குமாரப்.....பெருமாள்காண்
மருவும் அடியார்கள் மனதில்விளையாடு
     மரகதமயூரப்.....பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
     மருவு கதிர்காமப்.....பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
     அமர்பொருத வீரப்.....பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
     அமலர்குரு நாதப்.....பெருமாள்காண்
இருவினையிலாத தருவினைவி டாத
     இமையவர் குலேசப்.....பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியின் அதிபார
     இருதனவிநோதப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=7KQzyyqnw2g
https://www.youtube.com/watch?v=Zq8gKGXHvQ8
Add (additional) Audio/Video Link

Back to Top

637   கதிர்காமம்   அலகின் மாறு  
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளி
     அடைவில் ஞாளி கோமாளி ...... அறமீயா
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர்
     அருளி லாத தோடோய ...... மருளாகிப்
பலக லாக ராமேரு மலைக ராச லாவீசு
     பருவ மேக மேதாரு ...... வெனயாதும்
பரிவு றாத மாபாதர் வரிசை பாடி யோயாத
     பரிசில் தேடி மாயாத ...... படிபாராய்
இலகு வேலை நீள்வாடை யெரிகொள் வேலை மாசூரி
     லெறியும் வேலை மாறாத ...... திறல்வீரா
இமய மாது பாகீர திநதி பால காசார
     லிறைவி கான மால்வேடர் ...... சுதைபாகா
கலக வாரி போல்மோதி வடவை யாறு சூழ்சீத
     கதிர காம மூதூரி ...... லிளையோனே
கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.


அலகின்மாறு மாறாத கலதி பூத வேதாளி
     அடைவு இல் ஞாளி கோமாளி.....அறம் ஈயா
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ் மாதர்
     அருள் இலாத தோள் தோய.....மருள் ஆகி
பல கலை ஆகார மேரு மலை கர அசலா வீசு
     பருவ மேகமே தாரு என.....யாதும்
பரிவு உறாத மா பாதர் வரிசை பாடி ஓயாத
     பரிசில் தேடி மாயாத.....படிபாராய்
இலகு வேலை நீள் வாடை எரி கொள் வேலை மா சூரில்
     எறியும் வேலை மாறாத.....திறல் வீரா
இமய மாது பாகீரதி நதி பால காசாரல்
     இறைவி கானம் மால் வேடர்.....சுதை பாகா
கலக வாரி போல் மோதி வட ஐ ஆறு சூழ் சீத
     கதிர காமம் மூது ஊரில்.....இளையோனே
கனக நாடு வீடு ஆய கடவுள் யானை வாழ்வான
     கருணை மேரு வேதேவர்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

638   கதிர்காமம்   உடுக்கத் துகில்  
தனத்தத் தனதான தானன
     தனத்தத் தனதான தானன
          தனத்தத் தனதான தானன ...... தனதான

உடுக்கத் துகில்வேணு நீள்பசி
     யவிக்கக் கனபானம் வேணுநல்
          ஒளிக்குப் புனலாடை வேணுமெய் ...... யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
     இருக்கச் சிறுநாரி வேணுமொர்
          படுக்கத் தனிவீடு வேணுமிவ் ...... வகையாவுங்
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
     மயக்கக் கடலாடி நீடிய
          கிளைக்குப் பரிபால னாயுயி ...... ரவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமு
     மழைத்துத் தரவேணு மூழ்பவ
          கிரிக்குட் சுழல்வேனை யாளுவ ...... தொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
     வடக்குச் சிலதூதர் நாடுக
          குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
     யினித்தெற் கொருதூது போவது
          குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
     அரக்கர்க் கிளையாத தீரனு
          மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென்
றருட்பொற் றிருவாழி மோதிர
     மளித்துற் றவர்மேல் மனோகர
          மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே.


உடுக்கத் துகில் வேணும் நீள்பசி
     யவிக்கக் கனபானம் வேணும் நல்
        ஒளிக்குப் புனலாடை வேணும் மெய்யுறு.....நோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணும் உள்
     இருக்கச் சிறுநாரி வேணும் ஒர்
        படுக்க யொர் தனிவீடு வேணும் இவ்.....வகையாவுங்
கிடைத்து க்ருஹவாசியாகி
     அம்மயக்க கடல் ஆடி நீடிய
        கிளைக்குப் பரிபாலனாய் உயிர்.....அவமேபோம்
க்ருபைச்சித்தமு ஞான போதமும்
     அழைத்துத் தரவேணும் ஊழ்பவ
        கிரிக்குட் சுழல்வேனை ஆளுவது.....ஒருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
     வடக்குச் சிலதூதர் நாடுக
        குணக்குச் சிலதூதர் தேடுக.....வென மேவி
குறிப்பிற் குறிகாணு மாருதி
     இனித் தெற்கொரு தூது போவது
        குறிப்பிற் குறிபோன போதிலும்.....வரலாமோ
அடிக் குத்திரகாரராகிய
     அரக்கர்க்கு இளையாத தீரனும்
        அலைக்கு அப்புறமேவி மாதுறு.....வனமேசென்று
அருட்பொற் றிருவாழி மோதிர
     மளித்து உற்றவர்மேல் மனோகரம்
        அளித்து கதிர்காம மேவிய.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=q2vzRtZqqro
Add (additional) Audio/Video Link

Back to Top

639   கதிர்காமம்   எதிரிலாத பத்தி  
தனன தான தத்த ...... தனதான
     தனன தான தத்த ...... தனதான

எதிரி லாத பத்தி ...... தனைமேவி
     இனிய தாள்நி னைப்பை ...... யிருபோதும்
இதய வாரி திக்கு ...... ளுறவாகி
     எனது ளேசி றக்க ...... அருள்வாயே
கதிர காம வெற்பி ...... லுறைவோனே
     கனக மேரு வொத்த ...... புயவீரா
மதுர வாணி யுற்ற ...... கழலோனே
     வழுதி கூனி மிர்த்த ...... பெருமாளே.


எதிரிலாத பத்தி தனைமேவி
     இனிய தாள்நினைப்பை.....இருபோதும்
இதய வாரிதிக்குள் உறவாகி
     எனதுளே சிறக்க.....அருள்வாயே
கதிர காம வெற்பில் உறைவோனே
     கனக மேரு வொத்த.....புயவீரா
மதுர வாணி யுற்ற கழலோனே
     வழுதி கூன் நிமிர்த்த.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Vzz0BYfj7yE
Add (additional) Audio/Video Link

Back to Top

640   கதிர்காமம்   கடகட கருவிகள்  
தனதன தனதன தனதன தனதன
     தானத் தனந்தந் ...... தனதான

கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்
     காமத் தரங்கம் ...... மலைவீரா
கனகத நககுலி புணரித குணகுக
     காமத் தனஞ்சம் ...... புயனோட
வடசிக ரகிரித விடுபட நடமிடு
     மாவிற் புகுங்கந் ...... தவழாது
வழிவழி தமரென வழிபடு கிலனென
     வாவிக் கினம்பொன் ...... றிடுமோதான்
அடவியி ருடியபி நவகும ரியடிமை
     யாயப் புனஞ்சென் ...... றயர்வோனே
அயிலவ சமுடன ததிதிரி தருகவி
     யாளப் புயங்கொண் ...... டருள்வோனே
இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
     ஏழைக் கிடங்கண் ...... டவர்வாழ்வே
இதமொழி பகரினு மதமொழி பகரினு
     மேழைக் கிரங்கும் ...... பெருமாளே.


கடகட கருவிகள் தபவகிர் அதிர் கதிர்
     காம தரங்கம்.....அலைவீரா
கனகத நககுலி புணர் இத குண குக
     காம அத்தன் அஞ்ச.....அம்புயன் ஓட
வடசிகர கிரி தவிடுபட நடமிடு
     மாவிற் புகுங்கந்த.....வழாது
வழிவழி தமரென வழிபடுகிலன் என்
     அவா விக்கினம் பொன்.....றிடுமோதான்
அடவியிருடி அபிநவ குமரியடிமையாய
     புனஞ்சென்று.....அயர்வோனே
அவசமுடன் அ ததி திரிதரு கவியாள
     அயில் புயங்கொண்டு.....அருள்வோனே
இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
     ஏழைக்கு இடங்கண்டவர்.....வாழ்வே
இதமொழி பகரினு மதமொழி பகரினும்
     ஏழைக்கு இரங்கும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=KLu-cv2Fias
Add (additional) Audio/Video Link

Back to Top

641   கதிர்காமம்   சமர முக வேல்  
தனதனன தானத்த தனதனன தானத்த
     தனதனன தானத்த ...... தனதான தானனா

சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட
     தனமசைய வீதிக்குள் ...... மயில்போலு லாவியே
சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்ரு பாசுத்தர்
     தமையுணர ராகத்தின் ...... வசமாக மேவியே
உமதடியு னாருக்கு மனுமரண மாயைக்கு
     முரியவர்ம காதத்தை ...... யெனுமாய மாதரார்
ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு
     முனதருள்க்ரு பாசித்த ...... மருள்கூர வேணுமே
இமகிரிகு மாரத்தி யநுபவைப ராசத்தி
     யெழுதரிய காயத்ரி ...... யுமையாள்கு மாரனே
எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து
     இதணருகு சேவிக்கு ...... முருகாவி சாகனே
அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு
     மதிகவித சாமர்த்ய ...... கவிராஜ ராஜனே
அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த
     அரியகதிர் காமத்தி ...... லுரியாபி ராமனே.


சமர முக வேல் ஒத்த விழி புரள வார் இட்ட
தனம் அசைய வீதிக்குள்.....மயில் போல் உலாவியே
சரியை க்ரியை யோகத்தின் வழி வரு க்ருபா சுத்தர்
தமை உணர ராகத்தின்.....வசமாக மேவியே
உமது அடி உ(ன்)னாருக்கும் அனுமரண மாயைக்கும்
உரியவர் மகா தத்தை.....எனு(ம்) மாய மாதரார்
ஒளிர் அமளி பீடத்தில் அமடு படுவேனுக்கும்
உனது அருள் க்ருபா சித்தம்.....அருள் கூர வேணுமே
இம கிரி குமாரத்தி அநுபவை பராசத்தி
எழுத அரிய காயத்ரி.....உமையாள் குமாரனே
எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து
இதண் அருகு சேவிக்கும்.....முருகா விசாகனே
அமரர் சிறை மீள்விக்க அமர் செய்து ப்ரதாபிக்கும்
அதிக வித சாமர்த்ய.....கவி ராஜராஜனே
அழுது உலகை வாழ்வித்த கவுணிய குல ஆதித்த
அரிய கதிர் காமத்தில்.....உரிய அபிராமனே.
Add (additional) Audio/Video Link

Back to Top

642   கதிர்காமம்   சரத்தே யுதித்தாய்  
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
     தனத்தா தனத்தா ...... தனதான

சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
     சமர்த்தா யெதிர்த்தே ...... வருசூரைச்
சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய்
     தகர்த்தா யுடற்றா ...... னிருகூறாச்
சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
     செகுத்தாய் பலத்தார் ...... விருதாகச்
சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய்
     திருத்தா மரைத்தா ...... ளருள்வாயே
புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
     பொரத்தா னெதிர்த்தே ...... வருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
     பொரித்தார் நுதற்பார் ...... வையிலேபின்
கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
     கருத்தார் மருத்தூர் ...... மதனாரைக்
கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே
     கதிர்க்காம முற்றார் ...... முருகோனே.


சரத்தே யுதித்தாய் உரத்தே குதித்தே
     மர்த்தாய் எதிர்த்தே.....வருசூரை
சரிப்போன மட்டே விடுத்தாய்
     அடுத்தாய் தகர்த்தாய் உடற்றான்.....இருகூறா
சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய்
     செகுத்தாய் பலத்தார்.....விருதாகச்
சிறைச்சேவல் பெற்றாய் வலக்காரம் உற்றாய்
     திருத்தா மரைத்தாள்.....அருள்வாயே
புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
     பொரத்தான் எதிர்த்தே.....வருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தார் எரித்தார்
     பொரித்தார் நுதற்.....பார்வையிலே பின்
கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
     கருத்தார் மருத்தூர்.....மதனாரை
கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே
     கதிர்க்காம முற்றார்.....முருகோனே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=zjyaHn_glCI
Add (additional) Audio/Video Link

Back to Top

643   கதிர்காமம்   சரியையாளர்க்கும்  
தனதனா தத்தனத் தனதனா தத்தனத்
     தனதனா தத்தனத் ...... தனதான

சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
     சகலயோ கர்க்குமெட் ...... டரிதாய
சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்
     டருபரா சத்தியிற் ...... பரமான
துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்
     சுடர்வியா பித்தநற் ...... பதிநீடு
துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற்
     சுகசொரூ பத்தையுற் ...... றடைவேனோ
புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்
     புருஷவீ ரத்துவிக் ...... ரமசூரன்
புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்
     புகழையோ தற்கெனக் ...... கருள்வோனே
கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக்
     கனிகள்பீ றிப்புசித் ...... தமராடிக்
கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்
     கதிரகா மக்கிரிப் ...... பெருமாளே.


சரியையாளர்க்கும் அக் கிரியையாளர்க்கும் நல்
     சகல யோகர்க்கும் எட்ட.....அரிதாய
சமய பேதத்தினுக்கு அணுக ஒணா மெய்ப் பொருள்
     தரு பரா சத்தியின்.....பரமான
துரிய மேல் அற்புதப் பரம ஞானத் தனிச்
     சுடர் வியாபித்த நல்.....பதி நீடு
துகள் இல் சாயுச்சியக் கதியை ஈறு அற்ற சொல்
     சுக சொரூபத்தை உற்று அடைவேனோ
புரிசை சூழ் செய்ப்பதிக்கு உரிய சாமர்த்ய சத்
     புருஷ வீரத்து விக்ரம.....சூரன்
புரள வேல் தொட்ட கைக் குமர மேன்மைத் திருப்
     புகழை ஓதற்கு எனக்கு.....அருள்வோனே
கரிய ஊகத் திரள் பலவின் மீதில் சுளைக்
     கனிகள் பீறிப் புசித்து.....அமர் ஆடி
கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில்
     கதிர காமக் கிரிப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=jwyOkcRaW0M
Add (additional) Audio/Video Link

Back to Top

644   கதிர்காமம்   பாரவித முத்த  
தானதன தத்தத்த தானதன தத்தத்த
     தானதன தத்தத்த ...... தனதான

பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப
     யோதர நெருக்குற்ற ...... இடையாலே
பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்ப
     பாணவிழி யிற்பொத்தி ...... விடுமாதர்
காரணிகு ழற்கற்றை மேல்மகர மொப்பித்த
     காதில்முக வட்டத்தி ...... லதிமோக
காமுகன கப்பட்ட வாசையைம றப்பித்த
     கால்களைம றக்கைக்கும் ...... வருமோதான்
தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெ
     சாசிரனை மர்த்தித்த ...... அரிமாயன்
சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்நத்ரி
     கோணசயி லத்துக்ர ...... கதிர்காம
வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு
     மேகலையி டைக்கொத்தி ...... னிருதாளின்
வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை
     வேல்களில கப்பட்ட ...... பெருமாளே.


பாரவித முத்தப் படீர புளகப் பொன்
     பயோதர நெருக்கு உற்ற.....இடையாலே
பாகு அளவு தித்தித்த கீத மொழியில் புட்ப
     பாண விழியில் பொத்தி.....விடு(ம்) மாதர்
கார் அணி குழல் கற்றை மேல் மகரம் ஒப்பித்த
     காதில் முக வட்டத்தில்.....அதி மோக
காமுகன் அகப்பட்ட ஆசையை மறப்பித்த
     கால்களை மறக்கைக்கும்.....வருமோ தான்
தேரில் ரவி உட்கிப் புகா முது புரத்தில்
     தெசாசிரனை மர்த்தித்த.....அரி மாயன்
சீர் மருக அத்யுக்ர யானை படும் ரத்ந த்ரி
     கோண சயிலத்து உக்ர.....கதிர்காம
வீர புன வெற்பில் கலாபி எனச் சிக்கு
     மேகலை இடைக் கொத்தில்.....இரு தாளின்
வேரி மழையில் பச்சை வேயில் அருணக் கற்றை
     வேல்களில் அகப்பட்ட.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

645   கதிர்காமம்   மரு அறா வெற்றி  
தனதனா தத்த தனதனா தத்த
     தனதனா தத்த ...... தனதான

மருவறா வெற்றி மலர்தொடா விற்கை
     வலிசெயா நிற்கு ...... மதனாலும்
மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட
     மதிசுடா நிற்கு ...... மதனாலும்
இருகணால் முத்த முதிரயா மத்தி
     னிரவினால் நித்த ...... மெலியாதே
இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
     மிவளைவாழ் விக்க ...... வரவேணும்
கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி
     கலவிகூர் சித்ர ...... மணிமார்பா
கனகமா ணிக்க வடிவனே மிக்க
     கதிரகா மத்தி ...... லுறைவோனே
முருகனே பத்த ரருகனே முத்தி
     முதல்வனே பச்சை ...... மயில்வீரா
முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு
     முறியவேல் தொட்ட ...... பெருமாளே.


மரு அறா வெற்றி மலர் தொடா வில் கை
     வலி செயா நிற்கு(ம்).....மதனாலும்
மதில்கள் தாவுற்ற கலை படா வட்ட
     மதி சுடா நிற்கும்.....அதனாலும்
இரு க(ண்)ணால் முத்தம் உதிர யாமத்தின்
     இரவினால் நித்தம்.....மெலியாதே
இடர் உறா மெத்த மயல் கொ(ள்)ளா நிற்கும்
     இவளை வாழ்விக்க.....வர வேணும்
கரிகள் சேர் வெற்பில் அரிய வேடிச்சி
     கலவி கூர் சித்ர.....மணிமார்பா
கனக மாணிக்க வடிவனே மிக்க
     கதிரகாமத்தில்.....உறைவோனே
முருகனே பத்தர் அருகனே முத்தி
     முதல்வனே பச்சை.....மயில்வீரா
முடுகி மேலிட்ட கொடிய சூர் கெட்டு
     முறிய வேல் தொட்ட.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

646   கதிர்காமம்   மாதர் வசமாய்  
தானதன தானத் ...... தனதான
மாதர்வச மாயுற் ...... றுழல்வாரும்
மாதவமெ ணாமற் ...... றிரிவாரும்
தீதகல வோதிப் ...... பணியாரும்
தீநரக மீதிற் ...... றிகழ்வாரே
நாதவொளி யேநற் ...... குணசீலா
நாரியிரு வோரைப் ...... புணர்வேலா
சோதிசிவ ஞானக் ...... குமரேசா
தோமில் கதிர்காமப் ...... பெருமாளே.


மாதர்வசமாயுற்று உழல்வாரும்
     மாதவம் எ(ண்)ணாமல்.....திரிவாரும்
தீதகல ஓதிப் பணியாரும்
     தீநரக மீதில்.....திகழ்வாரே
நாதவொளியே நற் குணசீலா
     நாரியிருவோரைப்.....புணர்வேலா
சோதிசிவ ஞானக் குமரேசா
     தோமில் கதிர்காமப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Iu6XgG1RPJs
Add (additional) Audio/Video Link

Back to Top

647   கதிர்காமம்   முதிரு மாரவாரம்  
தனன தான தான தத்த தனன தான தான தத்த
     தனன தான தான தத்த ...... தனதான

முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி
     முனியு மார வார முற்ற ...... கடலாலே
முடிவி லாத தோர்வ டக்கி லெரியு மால மார்பி டத்து
     முழுகி யேறி மேலெ றிக்கு ...... நிலவாலே
வெதிரி லாயர் வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும்
     வினைவி டாத தாய ருக்கு ...... மழியாதே
விளையு மோக போக முற்றி அளவி லாத காதல் பெற்ற
     விகட மாதை நீய ணைக்க ...... வரவேணும்
கதிர காம மாந கர்க்கு ளெதிரி லாத வேல்த ரித்த
     கடவு ளேக லாப சித்ர ...... மயில்வீரா
கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி
     ககன மேவு வாளொ ருத்தி ...... மணவாளா
அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க
     அரிய ஞான வாச கத்தை ...... யருள்வோனே
அகில லோக மீது சுற்றி யசுரர் லோக நீறெ ழுப்பி
     அமரர் லோகம் வாழ வைத்த ...... பெருமாளே.


முதிரு(ம்) மாரவாரம் நட்பொடு இலகும் ஆர் அவ் ஆரம் எற்றி
     முனியும் ஆரவாரம் உற்ற.....கடலாலே
முடிவு இ(ல்)லாதது ஓர் வடக்கில் எரியும் ஆலம் ஆர்பு இடத்து
     முழுகி ஏறி மேல் எறிக்கு(ம்).....நிலவாலே
வெதிரில் ஆயர் வாயில் வைத்து மதுர ராகம் நீடு இசைக்கும்
     வினை விடாத தாயருக்கும்.....அழியாதே
விளையு(ம்) மோக போக(ம்) முற்றி அளவிலாத காதல் பெற்ற
     விகட மாதை நீ அணைக்க.....வர வேணும்
கதிரகாம மா நகர்க்குள் எதிர் இலாத வேல் தரித்த
     கடவுளே கலாப சித்ர.....மயில் வீரா
கயல் உலாம் விலோசனத்தி களபம் ஆர் பயோதரத்தி
     ககனம் மேவுவாள் ஒருத்தி.....மணவாளா
அதிர வீசி ஆடும் வெற்றி விடையில் ஏறும் ஈசர் கற்க
     அரிய ஞான வாசகத்தை.....அருள்வோனே
அகில லோகம் மீது சுற்றி அசுரர் லோகம் நீறு எழுப்பி
     அமரர் லோகம் வாழ வைத்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

648   கதிர்காமம்   வருபவர்கள் ஓலை  
தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று
     மடிபிடிய தாக நின்று ...... தொடர்போது
மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று
     வசைகளுட னேதொ டர்ந்து ...... அடைவார்கள்
கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து
     கரியபுன லேசொ ரிந்து ...... விடவேதான்
கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு
     கடுகிவர வேணு மெந்தன் ...... முனமேதான்
பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன்
     பழநிதனி லேயி ருந்த ...... குமரேசா
பதிகள் பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
     பதமடியர் காண வந்த ...... கதிர்காமா
அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
     யணிவர் சடை யாளர் தந்த ...... முருகோனே
அரகரசி வாய சம்பு குருபரகு மார நம்பு
     மடியர்தமை யாள வந்த ...... பெருமாளே.


வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதரென்று
     மடிபிடிய தாக நின்று.....தொடர்போது
மயலதுபொலாத வம்பன் விரகுடையனாகு மென்று
     வசைகளுடனே தொடர்ந்து.....அடைவார்கள்
கருவியதனாலெ றிந்து சதைகள்தனையே யரிந்து
     கரியபுனலே சொரிந்து.....விடவேதான்
கழுமுனையி லேயி ரென்று விடுமெனும் அ(வ்) வேளை கண்டு
     கடுகிவர வேணு மெந்தன்.....முனமேதான்
பரகிரியுலாவு செந்தி மலையினுடனே இடும்பன்
     பழநிதனிலேயிருந்த.....குமரேசா
பதிகள் பல வாயிரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
     பதமடியர் காண வந்த.....கதிர்காமா
அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
     அணிவர் சடையாளர் தந்த.....முருகோனே
அரகரசிவாய சம்பு குருபரகு மார நம்பு
     மடியர்தமை யாள வந்த.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=86P5FidH1vE
Add (additional) Audio/Video Link

Back to Top

649   கதிர்காமம்   தொடுத்த வாள்  
தனத்த தானன தனத்த தானன
     தனத்த தானன தனத்த தானன
          தனத்த தானன தனத்த தானன ...... தனதான

தொடுத்த வாளென விழித்து மார்முலை
     யசைத்து மேகலை மறைத்து மூடிகள்
          துடித்து நேர்கலை நெகிழ்த்து மாவியல் ...... கொளுமாதர்
சுகித்த ஹாவென நகைத்து மேல்விழ
     முடித்த வார்குழல் விரித்து மேவிதழ்
          துவர்த்த வாய்சுரு ளடக்கி மால்கொடு ...... வழியேபோய்ப்
படுத்த பாயலி லணைத்து மாமுலை
     பிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ்
          கடித்து நாணம தழித்த பாவிகள் ...... வலையாலே
பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசை
     வெளுத்து வாய்களு மலத்தி னாயென
          பசித்து தாகமு மெடுத்தி டாவுயி ...... ருழல்வேனோ
வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை
     விடுத்து யாகமும் நடத்தி யேயொரு
          மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் ...... மருகோனே
விதித்து ஞாலம தளித்த வேதனை
     யதிர்த்து வோர்முடி கரத்து லாயனல்
          விழித்து காமனை யெரித்த தாதையர் ...... குருநாதா
அடுத்த ஆயிர விடப்ப ணாமுடி
     நடுக்க மாமலை பிளக்க வேகவ
          டரக்கர் மாமுடி பதைக்க வேபொரு ...... மயில்வீரா
அறத்தில் வாழுமை சிறக்க வேயறு
     முகத்தி னோடணி குறத்தி யானையொ
          டருக்கொ ணாமலை தருக்கு லாவிய ...... பெருமாளே.


தொடுத்த வாள் என விழித்து மார் முலை
     அசைத்து மேகலை மறைத்து மூடிகள்
        துடித்து நேர் கலை நெகிழ்த்து மா இயல்.....கொ(ள்)ளு மாதர்
சுகித்த ஹா என நகைத்து மேல் விழ
     முடித்த வார் குழல் விரித்துமே இதழ்
        துவர்த்த வாய் சுருள் அடக்கி மால் கொ(ண்)டு.....வழியே போய்
படுத்த பாயலில் அணைத்து மா முலை
     பிடித்து மார்பொடும் அழுத்தி வாய் இதழ்
        கடித்து நாணம் அது அழித்த பாவிகள்.....வலையாலே
பலித்து நோய் பிணி கிடத்து பாய் மிசை
     வெளுத்து வாய்களும் மல(ம்) தின்(னும்) நாய் என
        பசித்து தாகமும் எடுத்திடா உயிர்.....உழல்வேனோ
வெடுத்த தாடகை சினத்தை ஓர் கணை
     விடுத்து யாகமும் நடத்தியே ஒரு
        மிகுத்த வார் சிலை முறித்த மாயவன்.....மருகோனே
விதித்து ஞாலம் அது அளித்த வேதனை
     அதிர்த்து ஓர் முடி கரத்து உலா அனல்
        விழித்து காமனை எரித்த தாதையர்.....குருநாதா
அடுத்த ஆயிர விடப் பணா முடி
     நடுக்க மா மலை பிளக்கவே கவடு
        அரக்கர் மா முடி பதைக்கவே பொரு.....மயில் வீரா
அறத்தில் வாழ் உமை சிறக்கவே அறு
     முகத்தினோடு அணி குறத்தி யானையோடு
        அருக்கொணா மலை தருக்கு உலாவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000