சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: எட்டிகுடி
831   உரமுற் றிரு     832   ஓங்கும் ஐம்புல     833   கடல் ஒத்த விடம்     834   மைக்குழல் ஒத்த    
831   எட்டிகுடி   உரமுற் றிரு  
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

உரமுற் றிருசெப் பெனவட் டமுமொத்
     திளகிப் புளகித் ...... திடமாயே
உடைசுற் றுமிடைச் சுமையொக் கஅடுத்
     தமிதக் கெறுவத் ...... துடன்வீறு
தரமொத் துபயக் களபத் தளமிக்
     கவனத் தருணத் ...... தனமீதே
சருவிச் சருவித் தழுவித் தழுவித்
     தவமற் கவிடுத் ...... துழல்வேனோ
அரிபுத் திரசித் தசஅக் கடவுட்
     கருமைத் திருமைத் ...... துனவேளே
அடல்குக் குடநற் கொடிகட் டியனர்த்
     தசுரப் படையைப் ...... பொருவோனே
பரிவுற் றவருக் கருள்வைத் தருள்வித்
     தகமுத் தமிழைப் ...... பகர்வோனே
பழனத் தொளிர்முத் தணியெட் டிகுடிப்
     பதியிற் குமரப் ...... பெருமாளே.


உரம் உற்று இரு செப்பு என வட்டமும் ஒத்து
     இளகிப் புளகித்.....திடமாயே
உடை சுற்றும் இடைச் சுமை ஒக்க அடுத்து
     அமிதக் கெறுவத்துடன்.....வீறு
தரம் ஒத்து உபயக் களபத் தள(ம்) மிக்க
     வனத் தருணத்.....தனம் மீதே
சருவிச் சருவித் தழுவித் தழுவித்
     தவம் அற்க விடுத்து.....உழல்வேனோ
அரி புத்திர சித்தசன் அக் கடவுட்கு
     அருமைத் திரு.....மைத்துன வேளே
அடல் குக்குட நல் கொடி கட்டி அனர்த்த
     அசுரப் படையைப்.....பொருவோனே
பரிவுற்றவருக்கு அருள் வைத்து அருள் வித்
     தக முத்தமிழைப்.....பகர்வோனே
பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடிப்
     பதியில் குமரப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

832   எட்டிகுடி   ஓங்கும் ஐம்புல  
தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான
     தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான

ஓங்கு மைம்புல னோட நினைத்தின் ...... பயர்வேனை
     ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் ...... தனையாள்வாய்
வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் ...... புகடாவி
     வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் ...... குமரேசா
மூங்கி லம்புய வாச மணக்குஞ் ...... சரிமானு
     மூண்ட பைங்குற மாது மணக்குந் ...... திருமார்பா
காங்கை யங்கறு பாசில் மனத்தன் ...... பர்கள்வாழ்வே
     காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் ...... பெருமாளே.


ஓங்கும் ஐம்புலன் ஓட நினைத்து.....இன்பயர்வேனை
     ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்து.....எந்தனையாள்வாய்
வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம்புகள்.....தாவி
     வாங்கி நின்றன ஏவில் உகைக்கும்.....குமரேசா
மூங்கில் அம் புய வாசமணக்.....குஞ்சரிமானும்
     மூண்ட பைங்குற மாது மணக்குந்.....திருமார்பா
காங்கை யங்கறு பாசில் மனத்து.....அன்பர்கள்வாழ்வே
     காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Oa5BmTLlFCM
Add (additional) Audio/Video Link

Back to Top

833   எட்டிகுடி   கடல் ஒத்த விடம்  
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
     தனதத்த தனதத்த ...... தனதானா

கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த
     கயலொத்த மலரொத்த ...... விழிமானார்
கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு
     கதிர்முத்து முலைதைக்க ...... அகலாதே
மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று
     மிடிபட்டு மடிபட்டு ...... மனமாழ்கி
மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை
     மிகநட்பொ டருள்தற்கு ...... வருவாயே
தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
     தலைபத்து டையதுட்ட ...... னுயிர்போகச்
சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி
     தருசக்ர தரனுக்கு ...... மருகோனே
திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த
     சிவனுக்கு விழியொத்த ...... புதல்வோனே
செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற
     திகழெட்டி குடியுற்ற ...... பெருமாளே.


கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த
     கயல் ஒத்த மலர் ஒத்த.....விழி மானார்
கன செப்பு நளினத்து முகை வெற்பை நிகர் செப்பு
     கதிர் முத்து முலை தைக்க.....அகலாதே
மிடல் உற்ற கலவிக்குள் உள(ம்) நச்சி வளம் அற்று
     மிடி பட்டு மடி பட்டு.....மன(ம்) மாழ்கி
மெலிவு உற்ற தமியற்கு உ(ன்)னிரு பத்ம சரணத்தை
     மிக நட்பொடு அருள்தற்கு.....வருவாயே
தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற
     தலை பத்துடைய துட்டன்.....உயிர் போக
சலசத்து மயில் உற்ற சிறை விட்டு வரு வெற்றி
     தரு சக்ரதரனுக்கு.....மருகோனே
திடம் உற்ற கனகப் பொதுவில் நட்புடன் நடித்த
     சிவனுக்கு விழி ஒத்த.....புதல்வோனே
செழு நத்து உமிழு(ம்) முத்து வயலுக்குள் நிறை பெற்ற
     திகழ் எட்டிகுடி உற்ற.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

834   எட்டிகுடி   மைக்குழல் ஒத்த  
தத்தன தத்தன தானா தானா
     தத்தன தத்தன தானா தானா
          தத்தன தத்தன தானா தானா ...... தனதான

மைக்குழ லொத்தவை நீலோ மாலோ
     அக்கணி ணைக்கிணை சேலோ வேலோ
          மற்றவர் சொற்றெளி பாலோ பாகோ ...... வடிதேனோ
வத்திர மெய்ச்சசி தானோ நாணா
     குத்துமு லைக்கிள நீரோ மேரோ
          வைப்பதி டைக்கிணை நூலோ மேலோ ...... வெனமாதர்
தக்கவு றுப்பினுள் மாலே மேலாய்
     லச்சைய றப்புணர் வாதே காதே
          சைச்சையெ னத்திரி நாயே னோயா ...... தலையாதே
தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்
     தற்சமை யத்தக லாவே னாதா
          தத்தும யிற்பரி மீதே நீதான் ...... வருவாயே
முக்கணர் மெச்சிய பாலா சீலா
     சித்தசன் மைத்துன வேளே தோளார்
          மொய்த்தம ணத்தது ழாயோன் மாயோன் ...... மருகோனே
முத்தமிழ் வித்வவி நோதா கீதா
     மற்றவ ரொப்பில ரூபா தீபா
          முத்திகொ டுத்தடி யார்மேல் மாமால் ...... முருகோனே
இக்குநி ரைத்தவி ராலுார் சேலூர்
     செய்ப்பழ நிப்பதி யூரா வாரூர்
          மிக்கவி டைக்கழி வேளூர் தாரூர் ...... வயலூரா
எச்சுரு திக்குளு நீயே தாயே
     சுத்தவி றற்றிறல் வீரா தீரா
          எட்டிகு டிப்பதி வேலா மேலோர் ...... பெருமாளே.


மைக் குழல் ஒத்தவை நீலோ மாலோ
     அக் கண் இணைக்கு இணை சேலோ வேலோ
        மற்று அவர் சொல் தெளி பாலோ பாகோ.....வடி தேனோ
வத்திரம் மெய்ச் சசி தானோ நாணா
     குத்து முலைக்கு இள நீரோ மேரோ
        இடைக்கு இணை வைப்பது நூலோ மேலோ.....என மாதர்
தக்க உறுப்பினுள் மாலே மேலாய்
     லச்சை அற புணர் வாது ஏகாதே
        சைச் சை எனத் திரி நாயேன் ஓயாது.....அலையாதே
தற்பொறி வைத்து அருள் பாராய் தாராய்
     தற்சமையத்த கலா வேல் நாதா
        தத்து மயில் பரி மீதே நீ தான்.....வருவாயே
முக்க(ண்)ணர் மெச்சிய பாலா சீலா
     சித்தசன் மைத்துன வேளே தோள் ஆர்
        மொய்த்த மணத்த துழாயோன் மாயோன்.....மருகனே
முத்தமிழ் வித்வ விநோதா கீதா
     மற்றவர் ஒப்பு இல ரூபா தீபா
        முத்தி கொடுத்து அடியார் மேல் மா மால்.....முருகோனே
இக்கு நிரைத்த விராலூர் சேல் ஊர்
     செய்ப் பழநிப்பதி ஊரா வாரூர்
        மிக்க விடைக்கழி வேளூர் தார் ஊர்.....வயலூரா
எச் சுருதிக்கு(ள்)ளும் நீயே தாயே
     சுத்த விறல் திறல் வீரா தீரா
        எட்டிகுடிப் பதி வேலா மேலோர்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top


This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group