| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: ஆறு திருப்பதி
307 அலைகடல் நிகராகிய 308 ஈனமிகுத்துள பிறவி
307
ஆறு திருப்பதி அலைகடல் நிகராகிய தனதன தனதானன தனதன தனதானன
தனதன தனதானன ...... தனதான
அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்
அபகட மகபாவிகள் ...... விரகாலே
அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள்
அசடரொ டுறவாடிகள் ...... அநியாயக்
கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்
கருதிடு கொடியாருட ...... னினிதாகக்
கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை
கழலிணை பெறவேயினி ...... யருள்வாயே
அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகிய
அறுமுக வடிவேஅருள் ...... குருநாதா
அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற
அதிரிடும் வடிவேல்விடு ...... மதிசூரா
தலையய னறியாவொரு சிவகுரு பரனேயென
தரணியி லடியார்கண ...... நினைவாகா
சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய
தடமயில் தனிலேறிய ...... பெருமாளே.
அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள்
அபகடம் மக(கா) பாவிகள் விரகாலே
அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள்
அசடரொடு உறவாடிகள் அநியாயக்
கலை பகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடி கேடிகள்
கருதிடு கொடியாருடன் இனிதாகக்
கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை
கழல் இணை பெறவே இனி அருள்வாயே
அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய
அறுமுக வடிவே அருள் குரு நாதா
அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற
அதிரிடும் வடிவேல் விடும் அதி சூரா
தலை அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில்
அடியார் கண(ம்) நினை வாகா
சகலமும் முதலாகிய அறுபதி நிலைமேவிய
தட மயில் தனில் ஏறிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link
308
ஆறு திருப்பதி ஈனமிகுத்துள பிறவி தானதனத் தனதனன ...... தனதான
தானதனத் தனதனன ...... தனதான
ஈனமிகுத் துளபிறவி ...... யணுகாதே
யானுமுனக் கடிமையென ...... வகையாக
ஞானஅருட் டனையருளி ...... வினைதீர
நாணமகற் றியகருணை ...... புரிவாயே
தானதவத் தினின்மிகுதி ...... பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ ...... முருகோனே
ஆனதிருப் பதிகமரு ...... ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் ...... பெருமாளே.
ஈனமிகுத்துள பிறவி யணுகாதே
யானுமுனக்கு அடிமையென வகையாக
ஞானஅருள் தனையருளி வினைதீர
நாணம் அகற்றிய கருணை புரிவாயே
தானதவத்தினின்மிகுதி பெறுவோனே
சாரதியுத்தமி துணைவ முருகோனே
ஆனதிருப் பதிகம் அருள் இளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=D-7jDqx0wL4
Add (additional) Audio/Video Link