சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

8.103   மாணிக்க வாசகர்    திருவாசகம்

கோயில் (சிதம்பரம்)
இணைக்குறள் ஆசிரியப்பா
https://sivaya.org/thiruvaasagam/03 Thiruandapaguthi Thiruvasagam.mp3   Add audio link Add Audio
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் 5

சிறிய வாகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10

எறியது வளியிற்
கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும்
படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
காப்போற் காக்குங் கடவுள் காப்பவை
கரப்போன் கரப்பவை கருதாக் 15

கருத்துடைக் கடவுள் திருத்தகும்
அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்
வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையுங் கிழவோன் நாள்தொறும்
அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு 20

மதியின் தண்மை வைத்தோன் திண்திறல்
தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்
நீரின் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட 25

மண்ணின் திண்மை வைத்தோன் என்றென்று
எனைப்பல கோடி யெனைப் பல பிறவும்
அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன் அஃதான்று
முன்னோன் காண்க முழுதோன் காண்க
தன்னே ரில்லோன் தானே காண்க 30

ஏனத் தொல்லெயி றணிந்தோன் காண்க
கானப் புலியுரி அரையோன் காண்க
நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும்
ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்
இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க 35

அன்னதொன் றவ்வயின் அறிந்தோன் காண்க
பரமன் காண்க பழையோன் காண்க
பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க
அற்புதன் காண்க அநேகன் காண்க
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40

சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையிற் படுவோன் காண்க
ஒருவன் என்னும் ஒருவன் காண்க
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அணுத்தருந் தன்மைஇல் ஐயோன் காண்க 45

இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க
அரியதில் அரிய அரியோன் காண்க
மருவிஎப் பொருளும் வளர்ப்போன் காண்க
நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க
மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க 50

அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
கற்பமும் இறுதியுங் கண்டோன் காண்க
யாவரும் பெறவுறும் ஈசன் காண்க 55

தேவரும் அறியாச் சிவனே காண்க
பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானுங் கண்டேன் காண்க
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க 60

புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
சிவனென யானுந் தேறினன் காண்க
அவனெனை ஆட்கொண் டருளினன் காண்க
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க 65

பரமா னந்தப் பழங்கட லதுவே
கருமா முகிலின் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையி லேறித்
திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய
ஐம்புலப் பந்தனை வாளர விரிய 70

வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப
நீடெழில் தோன்றி வாலொளி மிளிர
எந்தம் பிறவியிற் கோபம் மிகுத்து
முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப்
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75

எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக்
கேதக் குட்டங் கையற வோங்கி
இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை
நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80

தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்
அவப்பெருந் தாபம் நீங்கா தசைந்தன
ஆயிடை வானப் பேரியாற் றகவயின்
பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச்
சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித்து 85

ஊழூழ் ஓங்கிய நங்கள்
இருவினை மாமரம் வேர்ப றித்தெழுந்து
உருவ அருள் நீர் ஓட்டா அருவரைச்
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90

மாப்புகைக் கறை சேர் வண்டுடைக் குளத்தின்
மீக்கொள மேன்மேன் மகிழ்தலின் நோக்கி
அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத்
தொண்ட உழவ ராரத் தந்த
அண்டத் தரும்பெறல் மேகன் வாழ்க 95

கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
அருந்தவர்க் கருளும் ஆதி வாழ்க
அச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க
சூழிருந் துன்பந் துடைப்போன் வாழ்க 100

எய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க
கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேரமைத் தோளி காதலன் வாழ்க
ஏதிலர்க் கேதிலெம் இறைவன் வாழ்க
காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க 105

நச்சர வாட்டிய நம்பன் போற்றி
பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்
நிற்பன நிறீஇச் 110

சொற்பதங் கடந்த தொல்லோன்
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன்
விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்
பூவின் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115

ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
இன்றெனக் கெளிவந் தருளி
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்
இன்றெனக் கெளிவந் திருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120

ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் 125

திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும்
முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும்
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும் 130

இத்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்
கத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்
முனிவற நோக்கி நனிவரக் கௌவி
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
வாணுதற் பெண்ணென ஒளித்தும் சேண்வயின் 135

ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த்
துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும்
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140

ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலின்
தாள்தளை யிடுமின்
சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்
பற்றுமின் என்றவர் பற்றுமுற் றொளித்தும் 145

தன்னே ரில்லோன் தானேயான தன்மை
என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி
அறைகூவி ஆட்கொண் டருளி
மறையோர் கோலங் காட்டி யருளலும்
உளையா அன்பென் புருக வோலமிட்டு 150

அலைகடல் திரையின் ஆர்த்தார்த் தோங்கித்
தலைதடு மாறா வீழ்ந்துபுரண் டலறிப்
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவும்
கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தின் 155

ஆற்றே னாக அவயவஞ் சுவைதரு
கோற்றேன் கொண்டு செய்தனன்
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்
வீழ்வித் தாங்கன்று
அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் 160

ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்
சொல்லுவ தறியேன் வாழி முறையோ
தரியேன் நாயேன் தான்எனைச் செய்தது
தெரியேன் ஆவா செத்தேன் அடியேற்கு 165

அருளிய தறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித்து
உவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப
வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும் 170

தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
குரம்பை தோறும் நாயுட லகத்தே
குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவ 175

துள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக்
கள்ளூ றாக்கை யமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை
என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற்
கருணை வான்தேன் கலக்க 180

அருளொடு பராவமு தாக்கினன்
பிரமன்மா லறியாப் பெற்றி யோனே.


1


சிறிய ஆகப் பெரியோன். தெரியின்
வேதியன் தொகையொடு மால் அவன் மிகுதியும்,
தோற்றமும், சிறப்பும், ஈற்றொடு புணரிய
மாப் பேர் ஊழியும், நீக்கமும், நிலையும்,
சூக்கமொடு, தூலத்து, சூறை மாருதத்து


2


எறியது வளியின் 2x
கொட்கப் பெயர்க்கும் குழகன்: முழுவதும்
படைப்போன் படைக்கும் பழையோன்; படைத்தவை
காப்போன் காக்கும் கடவுள்; காப்பவை
கரப்போன்; கரப்பவை கருதாக்


3


கருத்துடைக் கடவுள்; திருத்தகும்
அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும்
வீடு பேறு ஆய், நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையும் கிழவோன்; நாள்தொறும்
அருக்கனில் சோதி அமைத்தோன்; திருத்தகு


4


மதியில் தண்மை வைத்தோன்; திண் திறல்
தீயில் வெம்மை செய்தோன்; பொய் தீர்
வானில் கலப்பு வைத்தோன்; மேதகு
காலில் ஊக்கம் கண்டோன்; நிழல் திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன்; வெளிப்பட


5


Go to top
மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று,
எனைப் பல கோடி, எனைப் பல பிறவும்,
அனைத்துஅனைத்து, அவ்வயின் அடைத்தோன். அஃதான்று
முன்னோன் காண்க! முழுதோன் காண்க!
தன் நேர் இல்லோன் தானே காண்க!


6


ஏனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க!
கானப் புலி உரி அரையோன் காண்க!
நீற்றோன் காண்க! நினைதொறும், நினைதொறும்,
ஆற்றேன் காண்க! அந்தோ! கெடுவேன்!
இன் இசை வீணையில் இசைந்தோன் காண்க!


7


அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க!
பரமன் காண்க! பழையோன் காண்க!
பிரமன், மால், காணாப் பெரியோன் காண்க!
அற்புதன் காண்க! அநேகன் காண்க!
சொல் பதம் கடந்த தொல்லோன் காண்க!


8


சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க!
பத்தி வலையில் படுவோன் காண்க!
ஒருவன் என்னும் ஒருவன் காண்க!
விரி பொழில் முழுதாய் விரிந்தோன் காண்க!
அணுத் தரும் தன்மையில் ஐயோன் காண்க!


9


இணைப்பு அரும் பெருமை ஈசன் காண்க!
அரியதில் அரிய அரியோன் காண்க!
மருவி எப் பொருளும் வளர்ப்போன் காண்க!
நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க!
மேலொடு, கீழாய், விரிந்தோன் காண்க!


10


Go to top
அந்தமும், ஆதியும், அகன்றோன் காண்க!
பந்தமும், வீடும், படைப்போன் காண்க!
நிற்பதும், செல்வதும், ஆனோன் காண்க!
கற்பமும், இறுதியும், கண்டோன் காண்க!
யாவரும் பெற உறும் ஈசன் காண்க!


11


தேவரும் அறியாச் சிவனே காண்க!
பெண், ஆண், அலி, எனும் பெற்றியன் காண்க!
கண்ணால் யானும் கண்டேன் காண்க!
அருள் நனி சுரக்கும் அமுதே காண்க!
கருணையின் பெருமை கண்டேன் காண்க!


12


புவனியில் சேவடி தீண்டினன் காண்க!
சிவன் என யானும் தேறினன் காண்க!
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க!
குவளைக் கண்ணி கூறன் காண்க!
அவளும், தானும், உடனே காண்க!


13


பரம ஆனந்தப் பழம் கடல் அதுவே
கரு மா முகிலின் தோன்றி,
திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி,
திருத்தகு மின் ஒளி திசை திசை விரிய,
ஐம் புலப் பந்தனை வாள் அரவு இரிய,


14


வெம் துயர்க் கோடை மாத் தலை கரப்ப,
நீடு எழில் தோன்றி, வாள் ஒளி மிளிர,
எம் தம் பிறவியில் கோபம் மிகுத்து,
முரசு எறிந்து, மாப் பெரும் கருணையின் முழங்கி,
பூப் புரை அஞ்சலி காந்தள் காட்ட,


15


Go to top
எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள,
செம் சுடர் வெள்ளம் திசை திசை தெவிட்ட, வரை உறக்
கேதக் குட்டம் கையற ஓங்கி,
இரு முச் சமயத்து ஒரு பேய்த்தேரினை,
நீர் நசை தரவரும், நெடும் கண், மான் கணம்


16


தவப் பெரு வாயிடைப் பருகி, தளர்வொடும்,
அவப் பெரும் தாபம் நீங்காது அசைந்தன;
ஆயிடை, வானப் பேர் யாற்று அகவயின்
பாய்ந்து எழுந்து, இன்பப் பெரும் சுழி கொழித்து,
சுழித்து, எம் பந்த மாக் கரை பொருது, அலைத்து, இடித்து,


17


ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்
இரு வினை மா மரம் வேர் பறித்து, எழுந்து
உருவ, அருள் நீர் ஓட்டா, அரு வரைச்
சந்தின் வான் சிறை கட்டி, மட்டு அவிழ்
வெறி மலர்க் குளவாய் கோலி, நிறை அகில்


18


மாப் புகைக் கரை சேர் வண்டு உடைக் குளத்தின்
மீக்கொள, மேல் மேல் மகிழ்தலின், நோக்கி,
அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு,
தொண்ட உழவர் ஆரத் தந்த
அண்டத்து அரும் பெறல் மேகன், வாழ்க!


19


கரும் பணக் கச்சைக் கடவுள், வாழ்க!
அரும் தவர்க்கு அருளும் ஆதி, வாழ்க!
அச்சம் தவிர்த்த சேவகன், வாழ்க!
நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன், வாழ்க!
சூழ் இரும் துன்பம் துடைப்போன், வாழ்க!


20


Go to top
எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன், வாழ்க!
கூர் இருள் கூத்தொடு குனிப்போன், வாழ்க!
பேர் அமைத் தோளி காதலன், வாழ்க!
ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன், வாழ்க!
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு, வாழ்க!


21


நச்சு அரவு ஆட்டிய நம்பன், போற்றி!
பிச்சு எமை ஏற்றிய பெரியோன், போற்றி!
நீற்றொடு தோற்ற வல்லோன், போற்றி நால் திசை
நடப்பன நடாஅய், கிடப்பன கிடாஅய்,
நிற்பன நிறீஇச்


22


சொல் பதம் கடந்த தொல்லோன்;
உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்;
கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன்;
விண் முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்;
பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும்


23


ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை;
இன்று எனக்கு எளிவந்து, அருளி,
அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள்;
இன்று எனக்கு எளிவந்து, இருந்தனன் போற்றி!
அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி!


24


ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி!
ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய,
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்:
மரகதக் குவாஅல், மா மணிப் பிறக்கம்,
மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ,


25


Go to top
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்;
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்;
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த, உறைப்பவர்க்கு ஒளித்தும்;
மறைத் திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்;


26


இத் தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு,
அத் தந்திரத்தில், அவ்வயின், ஒளித்தும்;
முனிவு அற நோக்கி, நனி வரக் கௌவி,
ஆண் எனத் தோன்றி, அலி எனப் பெயர்ந்து,
வாள் நுதல் பெண் என ஒளித்தும்; சேண் வயின்,


27


ஐம் புலன் செல விடுத்து, அரு வரைதொறும் போய்,
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை
அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்;
ஒன்று உண்டு, இல்லை, என்ற அறிவு ஒளித்தும்;
பண்டே பயில்தொறும், இன்றே பயில்தொறும்,


28


ஒளிக்கும் சோரனைக் கண்டனம்;
ஆர்மின்! ஆர்மின்! நாள் மலர்ப் பிணையலில்
தாள் தளை இடுமின்!
சுற்றுமின்! சூழ்மின்! தொடர்மின்! விடேன்மின்!
பற்றுமின்!' என்றவர் பற்று முற்று ஒளித்தும்;


29


தன் நேர் இல்லோன் தானே ஆன தன்மை
என் நேர் அனையார் கேட்க வந்து இயம்பி,
அறை கூவி, ஆட்கொண்டருளி,
மறையோர் கோலம் காட்டி அருளலும்;
உலையா அன்பு என்பு உருக, ஓலம் இட்டு,


30


Go to top
அலை கடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கி,
தலை தடுமாறா வீழ்ந்து, புரண்டு அலறி,
பித்தரின் மயங்கி, மத்தரின் மதித்து,
நாட்டவர் மருளவும், கேட்டவர் வியப்பவும்,
கடக் களிறு ஏற்றாத் தடப் பெரு மதத்தின்


31


ஆற்றேன் ஆக, அவயவம் சுவைதரு
கோல் தேன் கொண்டு செய்தனன்;
ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின்
வீழ்வித்தாங்கு, அன்று,
அருள் பெரும் தீயின் அடியோம் அடிக் குடில்


32


ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்;
தடக் கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்:
சொல்லுவது அறியேன்; வாழி! முறையோ?
தரியேன் நாயேன்; தான் எனைச் செய்தது
தெரியேன்; ஆ! ஆ! செத்தேன்; அடியேற்கு


33


அருளியது அறியேன்; பருகியும் ஆரேன்;
விழுங்கியும் ஒல்லகில்லேன்:
செழும், தண் பால் கடல் திரை புரைவித்து,
உவாக் கடல் நள்ளும் நீர் உள் அகம் ததும்ப,
வாக்கு இறந்து, அமுதம், மயிர்க்கால்தோறும்,


34


தேக்கிடச் செய்தனன்; கொடியேன் ஊன் தழை
குரம்பைதோறும், நாய் உடல் அகத்தே
குரம்பு கொண்டு, இன் தேன் பாய்த்தினன்; நிரம்பிய
அற்புதமான அமுத தாரைகள்,
எற்புத் துளைதொறும், ஏற்றினன்; உருகுவது


35


Go to top
உள்ளம் கொண்டு ஓர் உருச் செய்தாங்கு, எனக்கு
அள்ளூறு ஆக்கை அமைத்தனன்; ஒள்ளிய
கன்னல் கனி தேர் களிறு என, கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன்; என்னில்
கருணை வான்தேன் கலக்க


36


அருளொது பரவமு தாக்கினன்
பிரமன்மால் அரியாப் பெற்றியோனே. (182)
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!


37



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: கோயில் (சிதம்பரம்)
1.080   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
Tune - குறிஞ்சி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
3.001   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
Tune - காந்தாரபஞ்சமம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.022   திருநாவுக்கரசர்   தேவாரம்   செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
Tune - காந்தாரம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.023   திருநாவுக்கரசர்   தேவாரம்   பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!
Tune - கொல்லி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.080   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாளை உடைக் கமுகு ஓங்கி,
Tune - திருவிருத்தம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.081   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரு நட்ட கண்டனை, அண்டத்
Tune - திருவிருத்தம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
5.001   திருநாவுக்கரசர்   தேவாரம்   அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
Tune - பழந்தக்கராகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
5.002   திருநாவுக்கரசர்   தேவாரம்   பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
Tune - திருக்குறுந்தொகை   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
6.001   திருநாவுக்கரசர்   தேவாரம்   அரியானை, அந்தணர் தம் சிந்தை
Tune - பெரியதிருத்தாண்டகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
6.002   திருநாவுக்கரசர்   தேவாரம்   மங்குல் மதி தவழும் மாட
Tune - புக்கதிருத்தாண்டகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
7.090   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
Tune - குறிஞ்சி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
8.102   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.103   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.104   மாணிக்க வாசகர்    திருவாசகம்   போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
Tune - தென் நாடு உடைய சிவனே, போற்றி!   (கோயில் (சிதம்பரம்) )
8.109   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி   (கோயில் (சிதம்பரம்) )
8.110   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.111   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.112   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.113   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பூவல்லி - இணையார் திருவடி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.114   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருஉந்தியார் - வளைந்தது வில்லு
Tune - அயிகிரி நந்தினி   (கோயில் (சிதம்பரம்) )
8.115   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.116   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
Tune - தாலாட்டு பாடல்   (கோயில் (சிதம்பரம்) )
8.117   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி   (கோயில் (சிதம்பரம்) )
8.118   மாணிக்க வாசகர்    திருவாசகம்   குயிற்பத்து - கீத மினிய குயிலே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )
8.119   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
Tune - ஏரார் இளங்கிளியே   (கோயில் (சிதம்பரம்) )
8.121   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )
8.122   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
Tune - அக்ஷரமணமாலை   (கோயில் (சிதம்பரம்) )
8.131   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.135   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.140   மாணிக்க வாசகர்    திருவாசகம்   குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
Tune - அயிகிரி நந்தினி   (கோயில் (சிதம்பரம்) )
8.145   மாணிக்க வாசகர்    திருவாசகம்   யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )
8.146   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.149   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.151   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத
Tune - முல்லைத் தீம்பாணி   (கோயில் (சிதம்பரம்) )
8.201   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   முதல் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.202   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இரண்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.203   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   மூன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.204   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   நான்காம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.205   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   ஐந்தாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.206   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   ஆறாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.207   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   ஏழாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.208   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   எட்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.209   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   ஒன்பதாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.210   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பத்தாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.211   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினொன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.212   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பன்னிரண்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.213   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதின்மூன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.214   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினென்காம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.215   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினைந்தாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.216   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினாறாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.217   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினேழாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.218   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினெட்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.219   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பத்தொன்பதாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.220   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபதாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.221   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்தொன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.222   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்திரண்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.223   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்திமூன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.224   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்திநான்காம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.225   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்தைந்தாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.001   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா   திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.002   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா   திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.003   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா   திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.004   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா   திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.008   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.019   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா   பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.020   கண்டராதித்தர்   திருவிசைப்பா   கண்டராதித்தர் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.021   வேணாட்டடிகள்   திருவிசைப்பா   வேணாட்டடிகள் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.022   திருவாலியமுதனார்   திருவிசைப்பா   திருவாலியமுதனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.023   திருவாலியமுதனார்   திருவிசைப்பா   திருவாலியமுதனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.024   திருவாலியமுதனார்   திருவிசைப்பா   திருவாலியமுதனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.025   திருவாலியமுதனார்   திருவிசைப்பா   திருவாலியமுதனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.026   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா   புருடோத்தம நம்பி - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.027   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா   புருடோத்தம நம்பி - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.028   சேதிராயர்   திருவிசைப்பா   சேதிராயர் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.029   சேந்தனார்   திருப்பல்லாண்டு   சேந்தனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
11.006   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி   பொன்வண்ணத்தந்தாதி
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
11.026   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை   கோயில் நான்மணிமாலை
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
11.032   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 8.103