தில்லை மூதூர் ஆடிய திருவடி பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி மண்ணும் விண்ணும் வானோ ருலகுந் துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5 என்னுடை யிருளை ஏறத் துரந்தும் அடியா ருள்ளத் தன்புமீ தூரக் குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும் மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும் 10
கல்லா டத்துக் கலந்தினி தருளி நல்லா ளோடு நயப்புற வெய்தியும் பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும் எஞ்சா தீண்டும் இன்னருள் விளைத்தும் கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15
விராவு கொங்கை நற்றடம் படிந்தும் கேவேட ராகிக் கெளிறது படுத்தும் மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும் மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்து உற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும் 20
நந்தம் பாடியில் நான்மறை யோனாய் அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும் வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும் நூறுநூ றாயிரம் இயல்பின தாகி ஏறுடை ஈசன்இப் புவனியை உய்யக் 25
கூறுடை மங்கையும் தானும்வந் தருளிக் குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும் வேலம் புத்தூர் விட்டே றருளிக் கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30
தற்பண மதனிற் சாந்தம் புத்தூர் விற்பொரு வேடற் கீந்த விளைவும் மொக்கணி யருளிய முழுத்தழல் மேனி சொக்க தாகக் காட்டிய தொன்மையும் அரியொடு பிரமற் களவறி யொண்ணான் 35
நரியைக் குதிரை யாக்கிய நன்மையும் ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி பாண்டி யன்தனக் குப்பரி மாவிற்று ஈண்டு கனகம் இசையப் பெறாஅது ஆண்டான் எங்கோன் அருள்வழி யிருப்பத் 40 தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் அந்தண னாகி ஆண்டுகொண் டருளி இந்திர ஞாலங் காட்டிய இயல்பும் மதுரைப் பெருநன் மாநக ரிருந்து குதிரைச் சேவக னாகிய கொள்கையும் 45 ஆங்கது தன்னில் அடியவட் காகப் பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும் உத்தர கோச மங்கையு ளிருந்து வித்தக வேடங் காட்டிய இயல்பும் பூவண மதனிற் பொலிந்திருந் தருளித் 50
தூவண மேனி காட்டிய தொன்மையும் வாத வூரினில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக் கருவார் சோதியிற் கரந்த கள்ளமும் 55
பூவல மதனிற் பொலிந்தினி தருளிப் பாவ நாச மாக்கிய பரிசும் தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும் விருந்தின னாகி வெண்கா டதனில் 60
குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும் பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்கு அட்டமா சித்தி அருளிய அதுவும் வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு காடது தன்னிற் கரந்த கள்ளமும் 65
மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு தக்கா னொருவ னாகிய தன்மையும் ஓரி யூரின் உகந்தினி தருளிப் பாரிரும் பாலக னாகிய பரிசும் பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70
தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் இடைமரு ததனில் ஈண்ட இருந்து 75
படிமப் பாதம் வைத்தஅப் பரிசும் ஏகம் பத்தின் இயல்பா யிருந்து பாகம் பெண்ணோ டாயின பரிசும் திருவாஞ் சியத்திற் சீர்பெற இருந்து மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80
சேவக னாகித் திண்சிலை யேந்திப் பாவகம் பலபல காட்டிய பரிசும் கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் ஐயா றதனிற் சைவ னாகியும் 85
துருத்தி தன்னில் அருத்தியோ டிருந்தும் திருப்பனை யூரில் விருப்ப னாகியும் கழுமல மதனிற் காட்சி கொடுத்தும் கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும் புறம்பய மதனில் அறம்பல அருளியும் 90
குற்றா லத்துக் குறியா யிருந்தும் அந்தமில் பெருமை அழலுருக் கரந்து சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண் டிந்திர ஞாலம் போலவந் தருளி எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத் 95
தானே யாகிய தயாபரன் எம்மிறை சந்திர தீபத்துச் சாத்திர னாகி அந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுள் சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும் மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100
அந்தமில் பெருமை அருளுடை அண்ணல் எந்தமை ஆண்ட பரிசது பகரின் ஆற்றல் அதுவுடை அழகமர் திருவுரு நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் ஊனந் தன்னை யொருங்குடன் அறுக்கும் 105
ஆனந் தம்மே ஆறா அருளியும் மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன் நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் அழுக்கடை யாமல் ஆண்டுகொண் டருள்பவன் கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும் 110
மூல மாகிய மும்மலம் அறுக்குந் தூய மேனிச் சுடர்விடு சோதி காதல னாகிக் கழுநீர் மாலை ஏலுடைத் தாக எழில்பெற அணிந்தும் அரியொடு பிரமற் களவறி யாதவன் 115
பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும் மீண்டு வாரா வழியருள் புரிபவன் பாண்டி நாடே பழம்பதி யாகவும் பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன் உத்தர கோச மங்கையூ ராகவும் 120
ஆதி மூர்த்திகட் கருள்புரிந் தருளிய தேவ தேவன் திருப்பெய ராகவும் இருள்கடிந் தருளிய இன்ப வூர்தி அருளிய பெருமை அருண்மலை யாகவும் எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் 125
அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி நாயி னேனை நலமலி தில்லையுள் கோல மார்தரு பொதுவினில் வருகென ஏல என்னை யீங்கொழித் தருளி அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130
ஒன்ற வொன்ற உடன்கலந் தருளியும் எய்தவந் திலாதார் எரியிற் பாயவும் மாலது வாகி மயக்க மெய்தியும் பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியும் கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி 135
நாத நாத என்றழு தரற்றிப் பாத மெய்தினர் பாத மெய்தவும் பதஞ்சலிக் கருளிய பரமநா டகஎன்று இதஞ்சலிப் பெய்தநின் றேங்கினர் ஏங்கவும் எழில்பெறும் இமயத் தியல்புடை யம்பொன் 140
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில் கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் 145
ஒலிதரு கயிலை உயர்கிழ வோனே.
|
1
|
என்னுடை இருளை ஏறத் துரந்தும்,
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும்,
மன்னும் மா மலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்;
|
2
|
கல்லாடத்துக் கலந்து, இனிது அருளி,
நல்லாளோடு நயப்புறவு எய்தியும்;
பஞ்சப்பள்ளியில் பால்மொழி தன்னொடும்,
எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்;
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
|
3
|
விராவு கொங்கை நல் தடம் படிந்தும்;
கேவேடர் ஆகி, கெளிறு அது படுத்தும்;
மா வேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்;
மற்று, அவை தம்மை மயேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களால் பணித்தருளியும்;
|
4
|
நந்தம்பாடியில் நான்மறையோன் ஆய்,
அந்தம் இல் ஆரியன் ஆய், அமர்ந்தருளியும்;
வேறு வேறு உருவும், வேறு வேறு இயற்கையும்,
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி,
ஏறு உடை ஈசன், இப் புவனியை உய்ய,
|
5
|
Go to top |
கூறு உடை மங்கையும் தானும் வந்தருளி,
குதிரையைக் கொண்டு, குடநாடு அதன்மிசை,
சதிர்பட, சாத்து ஆய், தான் எழுந்தருளியும்;
வேலம்புத்தூர் விட்டேறு அருளி,
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்;
|
6
|
தர்ப்பணம் அதனில் சாந்தம்புத்தூர்
வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும்;
மொக்கணி அருளிய முழுத் தழல் மேனி
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்;
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்
|
7
|
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்;
ஆண்டுகொண்டு அருள அழகு உறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரிமா விற்று,
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது,
ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்ப,
|
8
|
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்;
அந்தணன் ஆகி, ஆண்டுகொண்டு அருளி,
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்;
மதுரைப் பெரு நல் மா நகர் இருந்து,
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்;
|
9
|
ஆங்கு, அது தன்னில், அடியவட்கு ஆக,
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்;
உத்தரகோசமங்கையுள் இருந்து,
வித்தக வேடம் காட்டிய இயல்பும்;
பூவணம் அதனில் பொலிந்து, இனிது அருளி,
|
10
|
Go to top |
தூ வண மேனி காட்டிய தொன்மையும்;
வாதவூரினில் வந்து, இனிது அருளி,
பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும்;
திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகி,
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும்;
|
11
|
பூவலம் அதனில் பொலிந்து, இனிது அருளி,
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்;
தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்து,
நல் நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்;
விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில்,
|
12
|
குருந்தின் கீழ், அன்று, இருந்த கொள்கையும்;
பட்டமங்கையில் பாங்காய் இருந்து, அங்கு
அட்ட மா சித்தி அருளிய அதுவும்;
வேடுவன் ஆகி, வேண்டு உருக் கொண்டு,
காடு அது தன்னில், கரந்த கள்ளமும்;
|
13
|
மெய்க்காட்டிட்டு, வேண்டு உருக் கொண்டு,
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்;
ஓரியூரில் உகந்து, இனிது அருளி,
பார் இரும் பாலகன் ஆகிய பரிசும்;
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்;
|
14
|
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும்;
தேன் அமர் சோலைத் திருவாரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்;
இடைமருது அதனில் ஈண்ட இருந்து,
|
15
|
Go to top |
படிமப் பாதம் வைத்த அப் பரிசும்;
ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து,
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்;
திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து,
மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்;
|
16
|
சேவகன் ஆகி, திண் சிலை ஏந்தி,
பாவகம் பல பல காட்டிய பரிசும்;
கடம்பூர் தன்னில் இடம் பெற இருந்தும்;
ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்;
ஐயாறு அதனில் சைவன் ஆகியும்;
|
17
|
துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்;
திருப்பனையூரில் விருப்பன் ஆகியும்;
கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்;
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்;
புறம்பயம் அதனில் அறம் பல அருளியும்;
|
18
|
குற்றாலத்துக் குறியாய் இருந்தும்;
அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்து,
சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு,
இந்திர ஞாலம் போல வந்தருளி,
எவெவர் தன்மையும் தன்வயின் படுத்து,
|
19
|
தானே ஆகிய தயாபரன், எம் இறை,
சந்திரதீபத்து, சாத்திரன் ஆகி,
அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்தருளியும்;
மந்திர மா மலை மகேந்திர வெற்பன்,
|
20
|
Go to top |
அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்,
எம்தமை ஆண்ட பரிசுஅது பகரின்
ஆற்றல் அது உடை, அழகு அமர் திரு உரு,
நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும்;
ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும்
|
21
|
ஆனந்தம்மே, ஆறா அருளியும்;
மாதில் கூறு உடை மாப் பெரும் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்;
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டருள்பவன்
கழுக்கடை தன்னைக் கைக்கொண்டருளியும்;
|
22
|
மூலம் ஆகிய மும் மலம் அறுக்கும்,
தூய மேனி, சுடர்விடு சோதி
காதலன் ஆகி, கழுநீர் மாலை
ஏல் உடைத்து ஆக, எழில் பெற, அணிந்தும்;
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்
|
23
|
பரிமாவின்மிசைப் பயின்ற வண்ணமும்;
மீண்டு வாரா வழி அருள் புரிபவன்
பாண்டி நாடே பழம் பதி ஆகவும்,
பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன்
உத்தரகோசமங்கை ஊர் ஆகவும்,
|
24
|
ஆதிமூர்த்திகட்கு அருள்புரிந்தருளிய
தேவ தேவன் திருப் பெயர் ஆகவும்,
இருள் கடிந்தருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள் மலை ஆகவும்,
எப் பெரும் தன்மையும், எவெவர் திறனும்,
|
25
|
Go to top |
அப் பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி;
நாயினேனை நலம் மலி தில்லையுள்,
கோலம் ஆர்தரு பொதுவினில், வருக' என,
ஏல, என்னை ஈங்கு ஒழித்தருளி;
அன்று உடன் சென்ற அருள் பெறும் அடியவர்
|
26
|
ஒன்ற ஒன்ற, உடன் கலந்தருளியும்;
எய்த வந்திலாதார் எரியில் பாயவும்,
மால் அது ஆகி, மயக்கம் எய்தியும்,
பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும்,
கால் விசைத்து ஓடி, கடல் புக மண்டி,
|
27
|
நாத! நாத!' என்று அழுது அரற்றி,
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்;
பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக' என்று
இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும்;
எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன்
|
28
|
பொலிதரு புலியூர்ப் பொதுவினில், நடம் நவில்
கனிதரு செவ் வாய் உமையொடு, காளிக்கு,
அருளிய திருமுகத்து, அழகு உறு சிறு நகை,
இறைவன், ஈண்டிய அடியவரோடும்,
பொலிதரு புலியூர்ப் புக்கு, இனிது அருளினன்
ஒலிதரு கைலை உயர் கிழவோனே. (145)
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!
|
29
|
Other song(s) from this location: கோயில் (சிதம்பரம்)
1.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
3.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
Tune - காந்தாரபஞ்சமம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.022
திருநாவுக்கரசர்
தேவாரம்
செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
Tune - காந்தாரம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.023
திருநாவுக்கரசர்
தேவாரம்
பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!
Tune - கொல்லி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.080
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாளை உடைக் கமுகு ஓங்கி,
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.081
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரு நட்ட கண்டனை, அண்டத்
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
Tune - பழந்தக்கராகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
Tune - திருக்குறுந்தொகை
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அரியானை, அந்தணர் தம் சிந்தை
Tune - பெரியதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
மங்குல் மதி தவழும் மாட
Tune - புக்கதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
7.090
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
8.102
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.103
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.104
மாணிக்க வாசகர்
திருவாசகம்
போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
Tune - தென் நாடு உடைய சிவனே, போற்றி!
(கோயில் (சிதம்பரம்) )
|
8.109
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.110
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.111
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.112
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.113
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பூவல்லி - இணையார் திருவடி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.114
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருஉந்தியார் - வளைந்தது வில்லு
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.115
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.116
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
Tune - தாலாட்டு பாடல்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.117
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.118
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குயிற்பத்து - கீத மினிய குயிலே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.119
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
Tune - ஏரார் இளங்கிளியே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.121
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.122
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
Tune - அக்ஷரமணமாலை
(கோயில் (சிதம்பரம்) )
|
8.131
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.135
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.140
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.145
மாணிக்க வாசகர்
திருவாசகம்
யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.146
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.149
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.151
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத
Tune - முல்லைத் தீம்பாணி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.201
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
முதல் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.202
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.203
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.204
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
நான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.205
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஐந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.206
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஆறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.207
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஏழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.208
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
எட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.209
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஒன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.210
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.211
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.212
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பன்னிரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.213
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதின்மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.214
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினென்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.215
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.216
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினாறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.217
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினேழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.218
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினெட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.219
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தொன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.220
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.221
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.222
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.223
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திமூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.224
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திநான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.225
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.001
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.002
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.003
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.004
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.008
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.019
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.020
கண்டராதித்தர்
திருவிசைப்பா
கண்டராதித்தர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.021
வேணாட்டடிகள்
திருவிசைப்பா
வேணாட்டடிகள் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.022
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.023
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.024
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.025
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.026
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.027
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.028
சேதிராயர்
திருவிசைப்பா
சேதிராயர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.029
சேந்தனார்
திருப்பல்லாண்டு
சேந்தனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.006
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
பொன்வண்ணத்தந்தாதி
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.026
பட்டினத்துப் பிள்ளையார்
கோயில் நான்மணிமாலை
கோயில் நான்மணிமாலை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.032
நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|