பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப் போக மும்திரு வும்புணர்ப் பானைப் பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப் பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை இன்ன தன்மையன் என்றறி வொண்ணா எம்மா னைஎளி வந்தபி ரானை அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி ஆரூ ரானை மறக்கலு மாமே
|
1
|
கட்ட மும்பிணி யுங்களை வானைக் காலற் சீறிய காலுடை யானை விட்ட வேட்கைவெந் நோய்களை வானை விரவி னால்விடு தற்கரி யானைப் பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை வாரா மேதவி ரப்பணிப் பானை அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை ஆரூ ரானை மறக்கலு மாமே
|
2
|
கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக் கலைக்கெ லாம்பொரு ளாய்உடன் கூடிப் பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப் பகலுங் கங்குலு மாகிநின் றானை ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை யுணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை ஆர்க்கின் றகட லைமலை தன்னை ஆரூ ரானை மறக்கலு மாமே
|
3
|
செத்த போதினில் முன்னின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம் வைத்த சிந்தையுண் டேமன முண்டே மதியுண் டேவிதி யின்பய னுண்டே முத்தன் எங்கள்பி ரானென்று வானோர் தொழநின் றதிமில் ஏறுடை யானை அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை ஆரூ ரானை மறக்கலு மாமே
|
4
|
செறிவுண் டேல்மனத் தால்தெளி வுண்டேல் தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல் மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல் வாணாள் மேற்செல்லும் வஞ்சனை யுண்டேல் பொறிவண் டியாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றை பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை அறிவுண் டேஉட லத்துயி ருண்டே ஆரூ ரானை மறக்கலு மாமே
|
5
|
Go to top |
பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று பொருளுஞ் சுற்றமும் போகமு மாகி மெள்ள நின்றவர் செய்வன வெல்லாம் வாரா மேதவிர்க் கும்விதி யானை வள்ளல் எந்தமக் கேதுணை யென்று நாணா ளும்அம ரர்தொழு தேத்தும் அள்ள லங்கழ னிப்பழ னத்தணி ஆரூ ரானை மறக்கலு மாமே
|
6
|
கரியா னைஉரி கொண்டகை யானைக் கண்ணின் மேல்ஒரு கண்ணுடை யானை வரியா னைவருத் தம்களை வானை மறையா னைக்குறை மாமதி சூடற் குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம் ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க் கரியா னைஅடி யேற்கெளி யானை ஆரூ ரானை மறக்கலு மாமே
|
7
|
வாளா நின்று தொழும்அடி யார்கள் வானா ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும் நாணா ளும்மல ரிட்டுவ ணங்கார் நம்மையாள் கின்ற தன்மையை ஓரார் கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன் கிளைக்கெ லாந்துணை யாமெனக் கருதி ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன் ஆரூ ரானை மறக்கலு மாமே
|
8
|
விடக்கை யேபெருக் கிப்பல நாளும் வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக் கடக்கிலேன்நெறி காணவு மாட்டேன் கண்கு ழிந்திரப் பார்கையில் ஒன்றும் இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச் டையா னைஉமை யாளையோர் பாகத் தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை ஆரூ ரானை மறக்கலு மாமே
|
9
|
ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட உச்சிப் போதனை நச்சர வார்த்த பட்டி யைப்பக லையிருள் தன்னைப் பாவிப் பார்மனத் தூறும்அத் தேனைக் கட்டி யைக்கரும் பின்தெளி தன்னைக் காத லாற்கடற் சூர்தடிந் திட்ட செட்டி அப்பனைப் பட்டனைச் செல்வ ஆரூ ரானை மறக்கலு மாமே
|
10
|
Go to top |
ஓரூர் என்றுல கங்களுக் கெல்லாம் உரைக்க லாம்பொரு ளாய்உடன் கூடிக் காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை முடியன் காரிகை காரண மாக ஆரூ ரைம்மறத் தற்கரி யானை அம்மான் றன்திருப் பேர்கொண்ட தொண்டன் ஆரூ ரன்னடி நாயுரை வல்லார் அமர லோகத் திருப்பவர் தாமே
|
11
|
Other song(s) from this location: திருவாரூர்
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
2.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.101
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
|
4.102
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில்
Tune -
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
7.008
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.012
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்
(திருவாரூர் )
|
7.033
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி
(திருவாரூர் )
|
7.037
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.039
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவாரூர் )
|
7.047
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் )
|
7.051
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.059
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.073
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.083
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.095
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
8.139
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி
(திருவாரூர் )
|
9.018
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -
(திருவாரூர் )
|
11.007
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவாரூர் )
|