சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத் தன்னருள் தந்தஎம் தலைவனை மலையின் மாதினை மதித்தங்கொர் பால்கொண்ட மணியை வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக் காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
|
1
|
மற்றொரு துணைஇனி மறுமைக்குங் காணேன் வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன் சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன் துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை முத்தியும் ஞானமும் வானவ ரறியா முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக் கற்பனை கற்பித்த கடவுளை யடியேன் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
|
2
|
திருத்தினை நகருறை சேந்தனப் பன்னென் செய்வினை யறுத்திடுஞ் செம்பொனை அம்பொன் ஒருத்தனை யல்லதிங் காரையு முணரேன் உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால் விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன் கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
|
3
|
மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன் பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப் பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார் குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன் கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
|
4
|
குண்டலங் குழைதிகழ் காதனே யென்றுங் கொடுமழு வாட்படைக் குழகனே யென்றும் வண்டலம் பும்மலர்க் கொன்றைய னென்றும் வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப் பசுபதி பதிவின விப்பல நாளுங் கண்டலங் கழிக்கரை யோதம்வந் துலவுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
|
5
|
Go to top |
வரும்பெரு வல்வினை யென்றிருந் தெண்ணி வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன் விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே அரும்பினை அலரினை அமுதினைத் தேனை ஐயனை அறவன்என் பிறவிவேர் அறுக்குங் கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
|
6
|
அயலவர் பரவவும் அடியவர் தொழவும் அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன் முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப் புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை மின்னின துருவினை என்னிடைப் பொருளைக் கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
|
7
|
நினைதரு பாவங்கள் நாசங்க ளாக நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை மனைதரு மலைமகள் கணவனை வானோர் மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப் புனைதரு புகழினை எங்கள தொளியை இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக் கனைதரு கருங்கட லோதம்வந் துலவுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
|
8
|
மறையிடைத் துணிந்தவர் மனையிடை யிருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையுள் மாயத் துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த துன்மை யெனுந்தக வின்மையை யோரேன் பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப் பேரரு ளாளனைக் காரிருள் போன்ற கறையணி மிடறுடை யடிகளை அடியேன் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
|
9
|
செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும் விரவிய சடைமுடி யடிகளை நினைந்திட் டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால் அறிவரி தவன்றிரு வடியிணை யிரண்டுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன் சடையன்றன் காதலன் பாடிய பத்துந் தொழுமல ரெடுத்தகை அடியவர் தம்மைத் துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே
|
10
|
Go to top |
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|