அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி நின்றும் போந்துவந் தின்னம்பர்த் தங்கி னோமையும் இன்ன தென்றிலர் ஈச னாரெழு நெஞ்சமே கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர் தாந்தொழும் பொங்கு மால்விடை ஏறி செல்வப் புறம்ப யந்தொழப் போதுமே.
|
1
|
பதியுஞ் சுற்றமும் பெற்ற மக்களும் பண்டை யாரலர் பெண்டிரும் நிதியில் இம்மனை வாழும் வாழ்க்கையும் நினைப்பொ ழிமட நெஞ்சமே மதியஞ்சேர்சடைக் கங்கை யானிடம் மகிழும் மல்லிகை செண்பகம் புதிய பூமலர்ந் தெல்லி நாறும் புறம்ப யந்தொழப் போதுமே.
|
2
|
புறந்தி ரைந்து நரம்பெழுந்து நரைத்து நீஉரை யாற்றளர்ந் தறம்பு ரிந்துநி னைப்ப தாண்மை யரிது காணிஃ தறிதியேல் திறம்பி யாதெழு நெஞ்ச மேசிறு காலை நாமுறு வாணியம் புறம்ப யத்துறை பூத நாதன் புறம்ப யந்தொழப் போதுமே.
|
3
|
குற்றொ ருவ்வரைக் கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவெலாம் செற்றொ ருவ்வரைச் செய்த தீமைகள் இம்மை யேவருந்திண்ணமே மற்றொ ருவ்வரைப் பற்றி லேன்மற வாதெ ழுமட நெஞ்சமே புற்ற ரவ்வுடைப் பெற்ற மேறி புறம்ப யந்தொழப் போதுமே.
|
4
|
கள்ளி நீசெய்த தீமை யுள்ளன பாவ மும்பறை யும்படி தெள்ளி தாஎழு நெஞ்ச மேசெங்கண் சேவு டைச்சிவ லோகனூர் துள்ளி வெள்ளிள வாளை பாய்வயல் தோன்று தாமரைப் பூக்கள்மேல் புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும் புறம்ப யந்தொழப் போதுமே.
|
5
|
Go to top |
படையெ லாம்பக டாரஆளிலும் பௌவஞ் சூழ்ந்தர சாளிலும் கடையெ லாம்பிணைத் தேரை வால்கவ லாதெ ழுமட நெஞ்சமே மடையெ லாங்கழு நீர்ம லர்ந்து மருங்கெ லாங்கரும் பாடத்தேன் புடையெ லாமணம் நாறு சோலைப் புறம்ப யந்தொழப் போதுமே.
|
6
|
முன்னைச் செய்வினை இம்மை யில்வந்து மூடு மாதலின் முன்னமே என்னை நீதியக் காதெ ழும்மட நெஞ்ச மேஎந்தை தந்தையூர் அன்னச் சேவலோ டூடிப் பேடைகள் கூடிச் சேரு மணிபொழில் புன்னைக் கன்னி களக்கரும்பு புறம்ப யம்தொழப் போதுமே.
|
7
|
மலமெ லாமறும் இம்மை யேமறு மைக்கும் வல்வினை சார்கிலா சலமெ லாமொழி நெஞ்ச மேஎங்கள் சங்க ரன்வந்து தங்குமூர் கலமெ லாங்கடல் மண்டு காவிரி நங்கை யாடிய கங்கைநீர் புலமெ லாமண்டிப் பொன்வி ளைக்கும் புறம்ப யந்தொழப் போதுமே.
|
8
|
பண்ட ரீயன செய்த தீமையும் பாவ மும்பறை யும்படி கண்ட ரீயன கேட்டி யேற்கவ லாதெ ழுமட நெஞ்சமே தொண்ட ரீயன பாடித் துள்ளிநின் றாடி வானவர் தாந்தொழும் புண்ட ரீகம லரும் பொய்கைப் புறம்ப யந்தொழப் போதுமே.
|
9
|
துஞ்சி யும்பிறந் துஞ்சி றந்துந் துயக்க றாத மயக்கிவை அஞ்சி யூரன் திருப்பு றம்பயத் தப்ப னைத்தமிழ்ச் சீரினால் நெஞ்சி னாலே புறம்ப யந்தொழு துய்து மென்று நினைத்தன வஞ்சி யாதுரை செய்ய வல்லவர் வல்ல வானுல காள்வரே.
|
10
|
Go to top |