சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.028   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருக்கடவூர் வீரட்டம் - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு அபிராமியம்மை உடனுறை அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=07d-sVIMhb4   Add audio link Add Audio

பொடியார் மேனியனே புரி
நூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வள
ரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

1

பிறையா ருஞ்சடையாய் பிர
மன்தலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறை
யின்பொரு ளானவனே
கறையா ரும்மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

2

அன்றா லின்னிழற்கீழ் அறம்
நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்
தாய்மறை யோனுக்குமான்
கன்றா ருங்கரவா கட
வூர்த்திரு வீரட்டத்துள்
என்றா தைபெருமான் எனக்
கார்துணை நீயலதே.

3

போரா ருங்கரியின் னுரி
போர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒரு
பாக மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டானத்
தாரா வென்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

4

மையார் கண்டத்தினாய் மத
மாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருட் புகுந்
தாய் இன்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

5
Go to top

மண்ணீர் தீவெளிகால் வரு
பூதங்க ளாகிமற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் பிற
வாவுரு வானவனே
கண்ணா ருண்மணியே கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே
எனக் கார்துணை நீயலதே.

6

எரியார் புன்சடைமேல் இள
நாக மணிந்தவனே
நரியா ருஞ்சுடலை நகு
வெண்டலை கொண்டவனே
கரியா ரீருரியாய் கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

7

வேறா உன்னடியேன் விளங்
குங்குழைக் காதுடையாய்
தேறேன் உன்னையல்லாற் சிவ
னேஎன் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கட
வூர்த்திரு வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக்
கார்துணை நீயலதே.

8

அயனோ டன்றரியும் மடி
யும்முடி காண்பரிய
பயனே யெம்பரனே பர
மாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கட
வூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

9

காரா ரும்பொழில்சூழ் கட
வூர்த்திரு வீரட்டத்துள்
ஏரா ரும்மிறையைத் துணை
யாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்னடியான் அடித்
தொண்ட னுரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர
லோகத் திருப்பாரே.

10
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கடவூர் வீரட்டம்
3.008   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சடை உடையானும், நெய் ஆடலானும்,
Tune - காந்தாரபஞ்சமம்   (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
4.031   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொள்ளத்த காயம் ஆய பொருளினை,
Tune - சாளரபாணி   (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
4.107   திருநாவுக்கரசர்   தேவாரம்   மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த
Tune - திருவிருத்தம்   (திருக்கடவூர் வீரட்டம் பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
5.037   திருநாவுக்கரசர்   தேவாரம்   மலைக் கொள் ஆனை மயக்கிய
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கடவூர் வீரட்டம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
7.028   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொடி ஆர் மேனியனே! புரி
Tune - நட்டராகம்   (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000