ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ஓருருவே மூவுருவ மான நாளோ கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ மான்மறிகை யேந்தியோர் மாதோர் பாகந் திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்டநாளே.
|
1
|
மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ வானவரை வலியமுத மூட்டி யந்நாள் நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ சிலையான்முப் புரமெரித்த முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
|
2
|
பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும் நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான் வேடனாய் வில்வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
|
3
|
ஓங்கி உயர்ந்தெழுந்து நின்ற நாளோ ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த தக்கன்தன் பெருவேள்வி தகர்த்த நாளோ நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு நில்லாயெம் பெருமானே யென்றங்கேத்தி வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ வளராரூர் கோயிலாக் கொண்ட நாளே.
|
4
|
பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே பணிவார்கட் கங்கங்கே பற்றா னானே நீலமா மணிகண்டத் தெண்டோ ளானே நெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ் சீலமே சிவலோக நெறியே யாகுஞ் சீர்மையே கூர்மையே குணமே நல்ல கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ குளிராரூர் கோயிலாக் கொண்ட நாளே.
|
5
|
Go to top |
திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச் சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ மறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து மாமுனிவர்க் கருள்செய்தங் கிருந்த நாளோ பிறங்கியசீர்ப் பிரமன்தன் தலைகை யேந்திப் பிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ அறம்பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
|
6
|
நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே யாகிக் கலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனைக் கற்பித் தன்று வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய்மடுத்து வானோ ருய்யச் சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ தண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
|
7
|
பாதத்தால் முயலகனைப் பாது காத்துப் பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங் கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப் பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும் வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
|
8
|
புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும் பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டும் கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங் கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும் நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும் நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டும் திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
|
9
|
ஈசனா யுலகேழும் மலையு மாகி இராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
|
10
|
Go to top |
Other song(s) from this location: திருவாரூர்
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
2.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.101
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
|
4.102
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில்
Tune -
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
7.008
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.012
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்
(திருவாரூர் )
|
7.033
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி
(திருவாரூர் )
|
7.037
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.039
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவாரூர் )
|
7.047
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் )
|
7.051
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.059
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.073
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.083
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.095
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
8.139
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி
(திருவாரூர் )
|
9.018
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -
(திருவாரூர் )
|
11.007
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவாரூர் )
|