பொருங்கைமத கரியுரிவைப் போர்வை யானைப் பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக் கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக் காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை இருங்கனக மதிலாரூர் மூலட் டானத் தெழுந்தருளி யிருந்தானை யிமையோ ரேத்தும் அருந்தவனை அரநெறியி லப்பன் தன்னை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
|
1
|
கற்பகமும் இருசுடரு மாயி னானைக் காளத்தி கயிலாய மலையு ளானை விற்பயிலும் மதனழிய விழித்தான் தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான் தன்னைப் பொற்பமரும் பொழிலாரூர் மூலட் டானம் பொருந்தியஎம் பெருமானைப் பொருந்தார் சிந்தை அற்புதனை அரநெறியி லப்பன் தன்னை யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
|
2
|
பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப் பாசூரும் பரங்குன்றும் மேயான் தன்னை வேதியனைத் தன்னடியார்க் கெளியான் தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் போதியலும் பொழிலாரூர் மூலட் டானம் புற்றிடங்கொண் டிருந்தானைப் போற்றுவார்கள் ஆதியனை அரநெறியில் அப்பன் தன்னை யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
|
3
|
நந்திபணி கொண்டருளும் நம்பன் தன்னை நாகேச் சரமிடமா நண்ணி னானைச் சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந் தத்துவனைச் சக்கரம்மாற் கீந்தான் தன்னை இந்துநுழை பொழிலாரூர் மூலட் டானம் இடங்கொண்ட பெருமானை யிமையோர் போற்றும் அந்தணனை அரநெறியில் அப்பன் தன்னை யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
|
4
|
சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற் றானைச் சோதிலிங்கத் தூங்கானை மாடத் தானை விடக்கிடுகா டிடமாக வுடையான் தன்னை மிக்கரண மெரியூட்ட வல்லான் தன்னை மடற்குலவு பொழிலாரூர் மூலட் டானம் மன்னியவெம் பெருமானை மதியார் வேள்வி அடர்த்தவனை அரநெறியில் அப்பன் தன்னை யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
|
5
|
Go to top |
தாயவனை யெவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத் தகுதில்லை நடம்பயிலும் தலைவன் தன்னை மாயவனும் மலரவனும் வானோ ரேத்த மறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் தன்னை மேயவனைப் பொழிலாரூர் மூலட் டானம் விரும்பியவெம் பெருமானை யெல்லாம் முன்னே ஆயவனை அரநெறியில் அப்பன் தன்னை யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
|
6
|
பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானைப் புகலூரும் புறம்பயமும் மேயான் தன்னை மருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை மறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னி னானை இருளியல்நற் பொழிலாரூர் மூலட் டானத் தினிதமரும் பெருமானை யிமையோ ரேத்த அருளியனை அரநெறியி லப்பன் தன்னை யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
|
7
|
காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக் காரோணங் கழிப்பாலை மேயான் தன்னைப் பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் தன்னைப் பணியுகந்த அடியார்கட் கினியான் தன்னைச் சேலுகளும் வயலாரூர் மூலட் டானஞ் சேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்ற ஆலவனை அரநெறியி லப்பன் தன்னை யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
|
8
|
ஒப்பொருவ ரில்லாத ஒருவன் தன்னை ஓத்தூரும் உறையூரும் மேவி னானை வைப்பவனை மாணிக்கச் சோதி யானை மாருதமுந் தீவெளிநீர் மண்ணா னானைப் பொ இப்பாடல் கிடைக்கவில்லை.
|
9
|
பகலவன்தன் பல்லுகுத்த படிறன் தன்னைப் பராய்த் துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானை இகலவனை இராவணனை யிடர்செய் தானை யேத்தாதார் மனத்தகத்துள் இருளா னானைப் புகழ்நிலவு பொழிலாரூர் மூலட் டானம் பொருந்தியவெம் பெருமானைப் போற்றார் சிந்தை அகலவனை அரநெறியி லப்பன் தன்னை யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
|
10
|
Go to top |
Other song(s) from this location: திருவாரூர்
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
2.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.101
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
|
4.102
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில்
Tune -
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
7.008
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.012
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்
(திருவாரூர் )
|
7.033
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி
(திருவாரூர் )
|
7.037
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.039
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவாரூர் )
|
7.047
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் )
|
7.051
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.059
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.073
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.083
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.095
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
8.139
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி
(திருவாரூர் )
|
9.018
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -
(திருவாரூர் )
|
11.007
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவாரூர் )
|