இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றும் சுடரொளியா யுள்விளங்கு சோதீ யென்றுந் தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றும் கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங் கலைமான் மறியேந்து கையா வென்றும் அடல்விடையாய் ஆரமுதே ஆதீ யென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே.
|
1
|
செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ் சிந்தித்தே னெஞ்சமே திண்ண மாகப் பொடியேறு திருமேனி யுடையா யென்றும் புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும் அடியேனை யாளாகக் கொண்டா யென்றும் அம்மானே ஆருரெம் மரசே யென்றும் கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங் கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.
|
2
|
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே.
|
3
|
புண்ணியமும் நன்னெறியும் ஆவ தெல்லாம் நெஞ்சமே யிதுகண்டாய் பொருந்தக் கேள்நீ நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா என்றும் நுந்தாத வொண்சுடரே யென்றும் நாளும் விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி எண்ணரிய திருநாம முடையா யென்றும் எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே.
|
4
|
இழைத்தநா ளெல்லை கடப்ப தென்றால் இரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்திப் பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா என்றும் அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய் அணியாரூர் இடங்கொண்ட அழகா என்றும் குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே குற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே.
|
5
|
Go to top |
நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாகச் சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றும் சிவலோக நெறிதந்த சிவனே யென்றும் பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப் புண்டரிகக் கண்ணானும் போற்றி யென்னத் தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந் திருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே.
|
6
|
பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில் சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம் உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும் உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும் புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும் பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே.
|
7
|
மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக வழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம் அதிபதியே ஆரமுதே ஆதீ யென்றும் அம்மானே ஆரூரெம் ஐயா வென்றும் துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச் சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக் கதிர்மதிசேர் சென்னியனே கால காலா கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.
|
8
|
பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா தேசத் தொளிவிளக்கே தேவ தேவே திருவாரூர்த் திருமூலட் டானா வென்றும் நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று ஏசற்று நின்றிமையோ ரேறே யென்றும் எம்பெருமா னென்றென்றே யேத்தா நில்லே.
|
9
|
புலன்கள்ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் புறம்புறமே திரியாதே போது நெஞ்சே சலங்கொள்சடை முடியுடைய தலைவா என்றும் தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும் இலங்கையர்கோன் சிரம்நெரித்த இறைவா என்றும் எழிலாரூ ரிடங்கொண்ட எந்தா யென்றும் நலங்கொளடி யென்தலைமேல் வைத்தா யென்றும் நாடோறும் நவின்றேத்தாய் நன்மை யாமே.
|
10
|
Go to top |
Other song(s) from this location: திருவாரூர்
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
2.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.101
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
|
4.102
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில்
Tune -
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
7.008
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.012
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்
(திருவாரூர் )
|
7.033
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி
(திருவாரூர் )
|
7.037
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.039
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவாரூர் )
|
7.047
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் )
|
7.051
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.059
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.073
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.083
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.095
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
8.139
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி
(திருவாரூர் )
|
9.018
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -
(திருவாரூர் )
|
11.007
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவாரூர் )
|