எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண் ஏழ்கடலும் ஏழுலகும் ஆயி னான்காண் வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண் வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட அம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண் அனலாடி யானஞ்சு மாடி னான்காண் செம்பொன்செய் மணிமாடத் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
|
1
|
அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும் ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண் கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித் தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் செல்லுந் தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்தும் திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
|
2
|
நீரேறு சடைமுடியெம் நிமலன் தான்காண் நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தான்காண் வாரேறு வனமுலையாள் பாகத் தான்காண் வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண் காரேறு முகிலனைய கண்டத் தான்காண் கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண் சீரேறு மணிமாடத் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
|
3
|
கானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண் கற்பகங்காண் காலனையன் றுதைசெய் தான்காண் ஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண் உத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண் ஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண் ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண் தேனேறு மலர்ச்சோலைத் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
|
4
|
பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண் பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண் மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண் வானவரு மறியாத நெறிதந் தான்காண் நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர் சிறப்போடு பூசிக்கும் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
|
5
|
Go to top |
சங்கரன்காண் சக்கரம்மாற் கருள்செய் தான்காண் தருணேந்து சேகரன்காண் தலைவன் தான்காண் அங்கமலத் தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை அறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண் எங்கள்பெரு மான்காண்என் னிடர்கள் போக அருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ் செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
|
6
|
நன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண் நான்மறையோ டாறங்க மாயி னான்காண் மின்திகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண் வெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண் துன்றுபொழிற் கச்சியே கம்பன் தான்காண் சோற்றுத் துறையான்காண் சோலை சூழ்ந்த தென்றலார் மணங்கமழுந் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
|
7
|
பொன்நலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண் புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண் மின்நலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண் வேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண் கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண் கோலமா நீறணிந்த மேனி யான்காண் செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
|
8
|
விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண் வேலைவிட முண்டிருண்ட கண்டத் தான்காண் மண்டலத்தில் ஒளிவளர விளங்கி னான்காண் வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண் புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப் புத்தேளுங் காண்பரிய புராணன் தான்காண் தெண்டிரைநீர் வயல்புடைசூழ் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
|
9
|
செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண் தென்னானைக் காவன்காண் தீயில் வீழ மருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண் வஞ்சகர்பா லணுகாத மைந்தன் தான்காண் அருவரையை யெடுத்தவன்தன் சிரங்கள் பத்தும் ஐந்நான்கு தோளுநெரிந் தலற அன்று திருவிரலால் அடர்த்தவன்காண் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
|
10
|
Go to top |
Other song(s) from this location: திருவாரூர்
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
2.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.101
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
|
4.102
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில்
Tune -
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
7.008
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.012
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்
(திருவாரூர் )
|
7.033
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி
(திருவாரூர் )
|
7.037
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.039
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவாரூர் )
|
7.047
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் )
|
7.051
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.059
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.073
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.083
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.095
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
8.139
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி
(திருவாரூர் )
|
9.018
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -
(திருவாரூர் )
|
11.007
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவாரூர் )
|