திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத் தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறல் குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப் பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப் பருப்பதத்தில் அருங்கலத்தைப் பாவந் தீர்க்கும் அருமணியை ஆரூரி லம்மான் தன்னை அறியா தடிநாயே னயர்த்த வாறே.
|
1
|
பொன்னேபோல் திருமேனி யுடையான் தன்னைப் பொங்குவெண் ணூலானைப் புனிதன் தன்னை மின்னானை மின்னிடையாள் பாகன் தன்னை வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் தன்னைத் தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத் தத்துவனை யுத்தமனைத் தழல்போல் மேனி அன்னானை ஆரூரி லம்மான் தன்னை அறியா தடிநாயே னயர்த்த வாறே.
|
2
|
ஏற்றானை ஏழுலகு மானான் தன்னை யேழ்கடலு மேழ்மலையு மானான் தன்னைக் கூற்றானைக் கூற்ற முதைத்தான் தன்னைக் கொடுமழுவாள் கொண்டதோர் கையான் தன்னைக் காற்றானைத் தீயானை நீரு மாகிக் கடிகமழும் புன்சடைமேற் கங்கை வெள்ள ஆற்றானை ஆரூரி லம்மான் தன்னை அறியா தடிநாயே னயர்த்த வாறே.
|
3
|
முந்திய வல்வினைகள் தீர்ப்பான் தன்னை மூவாத மேனிமுக் கண்ணி னானைச் சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச் சங்கரனைச் சங்கக் குழையான் தன்னை மந்திரமும் மறைப்பொருளு மானான் தன்னை மறுமையும் இம்மையு மானான் தன்னை அந்திரனை ஆரூரி லம்மான் தன்னை அறியா தடிநாயே னயர்த்த வாறே.
|
4
|
பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப் பித்தனாய்ப் பத்தர் மனத்தி னுள்ளே உறநெறியாய் ஓமமாய் ஈமக் காட்டில் ஓரிபல விடநட்ட மாடி னானைத் துறநெறியாய்த் தூபமாய்த் தோற்ற மாகி நாற்றமாய் நன்மலர்மே லுறையா நின்ற அறநெறியை ஆரூரி லம்மான் தன்னை அறியா தடிநாயே னயர்த்த வாறே.
|
5
|
Go to top |
பழகியவல் வினைகள் பாற்று வானைப் பசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்கும் குழகனைக் கோளரவொன் றாட்டு வானைக் கொடுகொட்டி கொண்டதோர் கையான் தன்னை விழவனை வீரட்டம் மேவி னானை விண்ணவர்க ளேத்தி விரும்பு வானை அழகனை ஆரூரி லம்மான் தன்னை அறியா தடிநாயே னயர்த்த வாறே.
|
6
|
சூளா மணிசேர் முடியான் தன்னைச் சுண்ணவெண் ணீறணிந்த சோதி யானைக் கோள்வா யரவ மசைத்தான் தன்னைக் கொல்புலித்தோ லாடைக் குழகன் தன்னை நாள்வாயும் பத்தர் மனத்து ளானை நம்பனை நக்கனை முக்க ணானை ஆள்வானை ஆரூரில் அம்மான் தன்னை அறியா தடிநாயே னயர்த்த வாறே.
|
7
|
முத்தினை மணிதன்னை மாணிக் கத்தைத் மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக் கொத்தினை வயிரத்தைக் கொல்லே றூர்ந்து கோளரவொன் றாட்டுங் குழகன் தன்னைப் பத்தனைப் பத்தர் மனத்து ளானைப் பரிதிபோல் திருமேனி யுடையான் தன்னை அத்தனை ஆரூரில் அம்மான் தன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.
|
8
|
பையா டரவங்கை யேந்தி னானைப் பரிதிபோல் திருமேனிப் பால்நீற் றானை நெய்யாடு திருமேனி நிமலன் தன்னை நெற்றிமேல் மற்றொருகண் நிறைவித் தானைச் செய்யானைச் செழும்பவளத் திரளொப் பானைச் செஞ்சடைமேல் வெண்டிங்கள் சேர்த்தி னானை ஐயாறு மேயானை ஆரூ ரானை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.
|
9
|
சீரார் முடிபத் துடையான் தன்னைத் தேசழியத் திருவிரலாற் சிதைய நூக்கிப் பேரார் பெருமை கொடுத்தான் தன்னைப் பெண்ணிரண்டும் ஆணுமாய் நின்றான் தன்னைப் போரார் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண்ணீ றணிந்தான் தன்னை ஆரானை ஆரூரி லம்மான் தன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.
|
10
|
Go to top |
Other song(s) from this location: திருவாரூர்
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
2.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.101
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
|
4.102
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில்
Tune -
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
7.008
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.012
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்
(திருவாரூர் )
|
7.033
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி
(திருவாரூர் )
|
7.037
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.039
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவாரூர் )
|
7.047
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் )
|
7.051
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.059
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.073
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.083
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.095
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
8.139
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி
(திருவாரூர் )
|
9.018
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -
(திருவாரூர் )
|
11.007
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவாரூர் )
|