உயிரா வணமிருந் துற்று நோக்கி யுள்ளக் கிழியி னுருவெழுதி உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால் உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி அயிரா வணமேறா தானே றேறி அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட அயிரா வணமேயென் னம்மா னேநின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.
|
1
|
எழுது கொடியிடையார் ஏழை மென்றோள் இளையார்கள் நம்மை யிகழா முன்னம் பழுது படநினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி முடியால் உறவணங்கி முற்றம் பற்றி அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.
|
2
|
தேரூரார் மாவூரார் திங்க ளூரார் திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடிக் காரூரா நின்ற கழனிச் சாயற் கண்ணார்ந்த நெடுமாடங் கலந்து தோன்றும் ஓரூரா வுலகெலா மொப்பக் கூடி உமையாள் மணவாளா என்று வாழ்த்தி ஆரூரா ஆரூரா என்கின் றார்கள் அமரர்கள்தம் பெருமானே யெங்குற் றாயே.
|
3
|
கோவணமோ தோலோ உடை யாவது கொல்லேறோ வேழமோ ஊர்வது தான் பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான் பொருந்தாதார் வாழ்க்கை திருந் தாமையோ தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித் திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர் ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம் அறியேன்மற் றூராமா றாரூர் தானே.
|
4
|
ஏந்து மழுவாளர் இன்னம் பராஅர் எரிபவள வண்ணர் குடமூக் கிலார் வாய்ந்த வளைக்கையாள் பாக மாக வார்சடையார் வந்து வலஞ்சு ழியார் போந்தா ரடிகள் புறம்ப யத்தே புகலூர்க்கே போயினார் போரே ரேறி ஆய்ந்தே யிருப்பார்போ யாரூர் புக்கார் அண்ணலார் செய்கின்ற கண்மா யமே.
|
5
|
| Go to top |
கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால் வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால் மருவாகி நின்னடியே மறவே னம்மான் மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணம் திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய் செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே.
|
6
|
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.
|
7
|
ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா அவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப் பாடுவார் தும்புருவும் நார தாதி பரவுவார் அமரர்களும் அமரர் கோனும் தேடுவார் திருமாலும் நான்மு கனுந் தீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளும் கூடுமே நாயடியேன் செய்குற் றேவல் குறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே.
|
8
|
நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய் நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி ஓரூரும் ஒழியாமே யொற்றித் தெங்கும் உலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான் தேரூரும் நெடுவீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா தாரூரா ஆரூரா என்கின் றார்கள் அமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே.
|
9
|
நல்லூரே நன்றாக நட்ட மிட்டு நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப் பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே பலர்காணத் தலையாலங் காட்டி னூடே இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி யிராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு எல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.
|
10
|
| Go to top |
கருத்துத்திக் கதநாகங் கையி லேந்திக் கருவரைபோற் களியானை கதறக் கையால் உரித்தெடுத்துச் சிவந்ததன்தோல் பொருந்த மூடி உமையவளை யச்சுறுத்தும் ஒளிகொள் மேனித் திருத்துருத்தி திருப்பழனந் திருநெய்த் தானந் திருவையா றிடங்கொண்ட செல்வர் இந்நாள் அரிப்பெருத்த வெள்ளேற்றை அடரவேறி யப்பனார் இப்பருவ மாரூ ராரே.
|
11
|
Other song(s) from this location: திருவாரூர்
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
2.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.101
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
|
4.102
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில்
Tune -
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
7.008
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.012
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்
(திருவாரூர் )
|
7.033
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி
(திருவாரூர் )
|
7.037
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.039
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவாரூர் )
|
7.047
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் )
|
7.051
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.059
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.073
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.083
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.095
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
8.139
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி
(திருவாரூர் )
|
9.018
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -
(திருவாரூர் )
|
11.007
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவாரூர் )
|