![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=w9O2L8OtDVo Add audio link
5.080
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருஅன்பில் ஆலந்துறை - திருக்குறுந்தொகை அருள்தரு சவுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்திவாகீசர் திருவடிகள் போற்றி
வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை
நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை
ஆனஞ் சாடியை யன்பிலா லந்துறைக்
கோன்எஞ் செல்வனைக் கூறிட கிற்றியே.
1
கார ணத்தர் கருத்தர் கபாலியார்
வார ணத்துரி போர்த்த மணாளனார்
ஆர ணப்பொரு ளன்பிலா லந்துறை
நார ணற்கரி யானொரு நம்பியே.
2
அன்பின் ஆனஞ்ச மைந்துட னாடிய
என்பின் ஆனை யுரித்துக் களைந்தவன்
அன்பி லானையம் மானையள் ளூறிய
அன்பி னால்நினைந் தாரறிந் தார்களே.
3
சங்கை யுள்ளதுஞ் சாவது மெய்யுமை
பங்க னாரடி பாவியேன் நானுய்ய
அங்க ணனெந்தை யன்பிலா லந்துறைச்
செங்க ணாரடிச் சேரவும் வல்லனே.
4
கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர்
மிக்க ரக்கர் புரமெரி செய்தவர்
அக்க ரையின ரன்பிலா லந்துறை
நக்கு ருவரும் நம்மை யறிவரே.
5
Go to top
வெள்ள முள்ள விரிசடை நந்தியைக்
கள்ள முள்ள மனத்தவர் காண்கிலார்
அள்ள லார்வய லன்பிலா லந்துறை
உள்ள வாறறி யார்சில ரூமரே.
6
பிறவி மாயப் பிணக்கி லழுந்தினும்
உறவெ லாஞ்சிந்தித் துன்னி உகவாதே
அறவ னெம்பிரா னன்பிலா லந்துறை
மறவா தேதொழு தேத்தி வணங்குமே.
7
நுணங்கு நூலயன் மாலு மிருவரும்
பிணங்கி யெங்குந் திரிந்தெய்த்துங் காண்கிலா
அணங்க னெம்பிரா னன்பிலா லந்துறை
வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே.
8
பொய்யெ லாமுரைக் குஞ்சமண் சாக்கியக்
கையன் மாருரை கேளா தெழுமினோ
ஐய னெம்பிரா னன்பிலா லந்துறை
மெய்யன் சேவடி யேத்துவார் மெய்யரே.
9
இலங்கை வேந்த னிருபது தோளிற்று
மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்
அலங்க லெம்பிரா னன்பிலா லந்துறை
வலங்கொள் வாரைவா னோர்வலங் கொள்வரே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருஅன்பில் ஆலந்துறை
1.033
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கணை நீடு எரி, மால்,
Tune - தக்கராகம்
(திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)
5.080
திருநாவுக்கரசர்
தேவாரம்
வானம் சேர் மதி சூடிய
Tune - திருக்குறுந்தொகை
(திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000