![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=0Tjzc5wDpvw Add audio link
5.023
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருநின்றியூர் - திருக்குறுந்தொகை அருள்தரு உலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு மகாலட்சுமியீசுவரர் திருவடிகள் போற்றி
கொடுங்கண் வெண்தலை கொண்டு குறைவிலைப்
படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்
நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர்க்
கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தரே.
1
வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளை
நீதி யேகொளற் பாலது நின்றியூர்
வேத மோதி விளங்குவெண் தோட்டராய்க்
காதில் வெண்குழை வைத்தவெங் கள்வரே.
2
புற்றி னாரர வம்புலித் தோல்மிசைச்
சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர்
நெற்றிக் கண்ணுடை யாரமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே.
3
பறையி னோசையும் பாடலி னோசையும்
மறையி னோசையும் மல்கி யயலெலாம்
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்
உறையு மீசனை யுள்குமென் னுள்ளமே.
4
சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள்
இனைய னென்றென்று மேசுவ தென்கொலோ
நினையுந் தண்வயல் சூழ்திரு நின்றியூர்ப்
பனையின் ஈருரி போர்த்த பரமரே.
5
Go to top
உரைப்பக் கேண்மின்நும் உச்சியு ளான்றனை
நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர்
உரைப்பொற் கற்றைய ராரிவ ரோவெனில்
திரைத்துப் பாடித் திரிதருஞ் செல்வரே.
6
கன்றி யூர்முகில் போலுங் கருங்களிறு
இன்றி ஏறல னாலிது என்கொலோ
நின்றி யூர்பதி யாக நிலாயவன்
வென்றி யேறுடை யெங்கள் விகிர்தனே.
7
நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர்
கொலைவி லாலெயி லெய்த கொடியவன்
நிலையி னார்வயல் சூழ்திரு நின்றியூர்
உரையி னால்தொழு வார்வினை யோயுமே.
8
அஞ்சி யாகிலு மன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதி லெய்திமை யோர்தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.
9
எளிய னாமொழி யாவிலங் கைக்கிறை
களியி னாற்கயி லாய மெடுத்தவன்
நெளிய வூன்றவல் லானமர் நின்றியூர்
அளியி னாற்றொழு வார்வினை யல்குமே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருநின்றியூர்
1.018
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,
Tune - நட்டபாடை
(திருநின்றியூர் இலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
5.023
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொடுங் கண் வெண்தலை கொண்டு,
Tune - திருக்குறுந்தொகை
(திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
7.019
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை
Tune - நட்டராகம்
(திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
7.065
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
திருவும், வண்மையும், திண் திறல்
Tune - தக்கேசி
(திருநின்றியூர் இலட்சுமிவரதர் உலகநாயகியம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000