![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=qlYtrb5igBg Add audio link
5.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருஇன்னம்பர் - திருக்குறுந்தொகை அருள்தரு கொந்தார்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு எழுத்தறிந்தவீசுவரர் திருவடிகள் போற்றி
என்னி லாரு மெனக்கினி யாரில்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன்
என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே.
1
மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கண்ணால்
கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ
தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி
எட்டு மூர்த்திய ரின்னம்ப ரீசனே.
2
கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன்
புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை
அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர்
எனலு மென்மனத் தின்னம்ப ரீசனே.
3
மழைக்கண் மாமயி லாலு மகிழ்ச்சியான்
அழைக்குந் தன்னடி யார்கள்த மன்பினைக்
குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கு மென்மனத் தின்னம்ப ரீசனே.
4
தென்ன வன்னெனை யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேர்வன பூழியான்
இன்னம் இன்புற்ற வின்னம்ப ரீசனே.
5
Go to top
விளக்கும் வேறு படப்பிற ருள்ளத்தில்
அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக்
குளக்கு மென்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கு மென்மனத் தின்னம்ப ரீசனே.
6
சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர்
கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள்
படைக்க ணால்பரு கப்படு வான்நமக்
கிடைக்க ணாய்நின்ற வின்னம்ப ரீசனே.
7
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதுங் கீழ்க்கணக் கின்னம்ப ரீசனே.
8
விரியுந் தண்ணிள வேனிலில் வெண்பிறை
புரியுங் காமனை வேவப் புருவமும்
திரியு மெல்லையில் மும்மதில் தீயெழுந்
தெரிய நோக்கிய வின்னம்ப ரீசனே.
9
சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும்
முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக்
கனிய வூன்றிய காரண மென்கொலோ
இனிய னாய்நின்ற வின்னம்ப ரீசனே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருஇன்னம்பர்
3.095
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர்
Tune - சாதாரி
(திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
4.072
திருநாவுக்கரசர்
தேவாரம்
விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர்
Tune - திருநேரிசை
(திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
4.100
திருநாவுக்கரசர்
தேவாரம்
மன்னும் மலைமகள் கையால் வருடின;
Tune - திருவிருத்தம்
(திருஇன்னம்பர் ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
5.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
என்னில் ஆரும் எனக்கு இனியார்
Tune - திருக்குறுந்தொகை
(திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
6.089
திருநாவுக்கரசர்
தேவாரம்
அல்லி மலர் நாற்றத்து உள்ளார்
Tune - திருத்தாண்டகம்
(திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000