வெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு வெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன் விரிசடைமேல் வெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள் ளென்பணிந்து வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே.
|
1
|
உடலைத் துறந்துல கேழுங் கடந்துல வாததுன்பக் கடலைக் கடந்துய்யப் போயிட லாகுங் கனகவண்ணப் படலைச் சடைப்பர வைத்திரைக் கங்கைப் பனிப்பிறைவெண் சுடலைப் பொடிக்கட வுட்கடி மைக்கட் டுணிநெஞ்சமே.
|
2
|
முன்னே யுரைத்தான் முகமனே யொக்குமிம் மூவுலகுக் கன்னையு மத்தனு மாவா யழல்வணா நீயலையோ உன்னை நினைந்தே கழியுமென் னாவி கழிந்ததற்பின் என்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை வேண்டியதே.
|
3
|
நின்னையெப் போது நினையவொட் டாய்நீ நினையப்புகில் பின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி உன்னையெப் போது மறந்திட் டுனக்கினி தாவிருக்கும் என்னையொப் பாருள ரோசொல்லு வாழி யிறையவனே.
|
4
|
முழுத்தழன் மேனித் தவளப் பொடியன் கனகக்குன்றத் தெழிற் 1 பெருஞ் சோதியை யெங்கள் பிரானை யிகழ்திர்கண்டீர் தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத் தொழுதபின்னைத் தொழப்படுந்தேவர்தம்மால் தொழுவிக்குந்தன் றொண்டரையே.
|
5
|
Go to top |
விண்ணகத் தான்மிக்க வேதத்து ளான்விரி நீருடுத்த மண்ணகத் தான்றிரு மாலகத் தான்மரு வற்கினிய பண்ணகத் தான்பத்தர் சித்தத்து ளான்பழ நாயடியேன் கண்ணகத் தான்மனத் தான்சென்னி யானெங்கறைக் கண்டனே.
|
6
|
பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய் இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் களேபரமும் கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய் வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.
|
7
|
வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும் தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும் மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண் டூனமொன் றில்லா வொருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே.
|
8
|
சிவனெனு நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான் அவனெனை யாட்கொண் டளித்திடு மாகி லவன்றனையான் பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால் இவனெனைப் பன்னா ளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே.
|
9
|
என்னையொப் பாருன்னை யெங்ஙனங் காண்ப ரிகலியுன்னை நின்னையொப் பார்நின்னைக் காணும் படித்தன்று நின்பெருமை பொன்னையொப் பாரித் தழலை வளாவிச்செம் மானஞ்செற்று மின்னையொப் பார மிளிருஞ் சடைக்கற்றை வேதியனே.
|
10
|
Go to top |