பொடியிலங்குந் திருமேனி யாளர் புலியதளினர் அடியிலங்குங் கழலார்க்க ஆடும் மடிகள்ளிடம் இடியிலங்குங் குரலோதம் மல்கவ் வெறிவார்திரைக் கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே.
|
1
|
மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள் அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ் வடிகள்ளிடம் புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே.
|
2
|
கூர்விளங்குந் திரிசூல வேலர்குழைக் காதினர் மார்விலங்கும் புரிநூலு கந்தமண வாளனூர் நேர்விலங்கல் லனதிரை கள்மோதந் நெடுந்தாரைவாய்க் கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே.
|
3
|
குற்றமில்லார் குறைபாடு செய்வார் பழிதீர்ப்பவர் பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்த பெருமானிடம் மற்றுநல்லார் மனத்தா லினியார் மறைகலையெலாங் கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே.
|
4
|
விருதிலங்குஞ் சரிதைத் தொழிலார் விரிசடையினார் எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக் கிடமாவது பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப் பிழைகேட்டலாற் கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே.
|
5
|
Go to top |
தோடிலங்குங் குழைக்காதர் தேவர்சுரும் பார்மலர்ப் பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க் கிடமாவது கோடிலங்கும் பெரும்பொழில் கள்மல்கப் பெருஞ்செந்நெலின் காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே.
|
6
|
மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித் தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம் இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலாற் கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே.
|
7
|
முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன் அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ் வடர்த்தாங்கவன் தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க் கிடமாவது கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே.
|
8
|
பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகடனை மேவினானும் வியந்தேத்த நீண்டா ரழலாய்நிறைந் தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ் வொருவர்க்கிடங் காவியங்கண் மடமங்கையர் சேர்கடற் காழியே.
|
9
|
உடைநவின் றாருடைவிட் டுழல்வார் இருந்தவத்தார் முடைநவின் றம்மொழி யொழித்துகந்தம் முதல்வன்னிடம் மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதரக் கடைநவின்றந் நெடுமாடம் ஓங்குங்கடற் காழியே.
|
10
|
Go to top |
கருகுமுந்நீர் திரையோத மாருங் கடற்காழியுள் உரகமாருஞ் சடையடி கள்தம்பா லுணர்ந்துறுதலாற் பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ் விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே.
|
11
|
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|